SHIRDI LIVE DARSHAN

Sunday 29 January 2012

மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி


மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி



நான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன்இதுசம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றிவந்திருக்கிறேன்ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.
பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக... என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் இப்போது நான் என்ன செய்ய...?பல வருடங்களாக பயிற்சி செய்திருக்கிறேன். இப்போது அவநம்பிக்கையோடு இருக்கிறேன்.

இது ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் ஒருவர் கேட்ட கேள்வி.
அடிப்படையில் ஜே.கே. எந்தவிதமான மத சடங்குகளைப்பின்பற்றாதவர். கேள்விகள் மூலமே உண்மையை அடைவதைப் பற்றி பேசியவர். அவர் பேச்சு ஒன்றும் ஃபார்முலா (Formula) அல்ல அப்படியே பின்பற்றி நீங்கள் அதை அடையலாம் என்று நினைக்க என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தவர். இவ்வளவு ஏன் மருந்துக்கு கூட புராணங்களிலிருந்து உதாரணம் சொல்லாதவர். ஏன் எனில் சொல்ல ஆரம்பித்தவுடன் மனம் அது சம்பந்தமாக இது வரை சேகரித்து வைத்த விஷயங்களுக்குப் பரவி அது ஒரு வட்டத்தை உருவாக்கி அதனுள்ளேயே சுற்றிக் கொண்டு வர ஆரம்பிக்கும்.

சரியான தியானம் என்பதற்கு சுத்திகரிக்கப் பட்ட மனம்’ வேண்டும். அதற்கு காலியான மனம் அன்றி புதுப்பித்தல் என்பது சாத்தியமில்லை. காலியான மனம் இல்லாமல் ‘தொடர்ந்து கொண்டே’ இருக்கிற மனம் என்பது அழிவு. மனம் சும்மாவே ஏதாவது எடுத்து வைத்து மேய்ந்து கொண்டிருக்கும். எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மனம்அல்லது ஒவ்வொன்றாலும் பாதிக்கப்பட்ட மனம் அயற்சி அடைகிறது.

நினைவிருக்கட்டும். மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.) எது எதெல்லாம் உங்கள் மனசை பாதிக்கிறது என்பதை அறிவது முக்கியம்.

இப்போது கொஞ்சம் படிப்படியாக ஆராய்ச்சி செய்யலாம். மனசைபாதிக்கிறது என்கிறோம். அப்படியானால் மனம் ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
அது எதனால் ஆனது.? - பலவிதமான எண்ணங்களால் ஆனது.
அந்த எண்ணங்கள் எப்படிப்பட்டவை? – முரண்பாடுகள் கொண்ட எண்ணங்கள்.

எந்த ஒன்றை எடுத்துக் கொண்டாலும் சரி-தவறுஇப்படி-இல்லை அப்படிவரும்-வராதுஇதுவா இல்லை அதுவா – என்று பெரும்பாலும் இரட்டையாக எண்ணங்கள் இருந்தாலும் உண்மையில் இரட்டை மட்டுமல்ல அவைகள் பலவையாக இருக்கின்றன.

நினைவிருக்கட்டும். உங்கள் மனத்தை ஆராய்ச்சி செய்யும் போது இதுதான் சரி இதுதான் தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களானால் அங்கே மேற்கொண்டு எதுவுமே இல்லை. அப்படி முடிவுக்கு வரவே முடியாது. சரி தவறு என்பது எப்போதுமே நாம் எதையாரை அல்லது எந்த குழுவை அல்லது எந்த கொள்கையை சார்ந்து இருக்கிறோம் என்ற அடிப்படையிலேயே முடிவு செய்கிறோம்.

இல்லை சார்! நான் அப்படி அல்ல...நியாயம்னா நியாயம்னு சொல்வேன் இல்லைன்னா இல்லை என்றால்... அந்த நியாயம் என்று சொல்வதும் ஒரு கொள்கையில் அடிப்படையில்தானே. ஏற்கனவே உங்களுக்கு கற்பிக்கப்பட்டவைகளின் அடிப்படையில் தானே!
இப்போது மறுபடி ஆராய்ச்சிக்கு வருவோம்.

இப்படி வேறு வேறு முரண்பாடான எண்ணங்களை ஒரு பொட்டலமாக கட்டி வைத்தால் அதுதான் உங்கள் மனம். இந்த முரண்பாடான எண்ணங்களில்- தேவையின் அடிப்படையில் அல்லது ஆசையின் அடிப்படையில்– எனக்கு இது வேண்டும். அது வேண்டாம் என்று தேர்ந்து எடுப்பதை மனதை குவித்தல்’ (Concentration) என்கிறோம். அதாவது ஒன்று அல்லது ஒரு சில எண்ணங்களை தேர்வு செய்து கொண்டு-ஆசையின் அடிப்படையில் அதன்மீது ஆற்றலைக் குவித்தல் நடக்கிறது. இந்த மனம்குவித்தல் ஒரு வகையான கட்டுப்பாடே! அதாவது discipline தான். காலையில் எழுந்திரு! பூஜை பண்ணு. மந்திரம் ஜெபி. விழுந்து கும்பிடுபோன்ற டிசிப்ளின் தான். மனம் குவித்தல் (Concentration) என்பது தியானம்ஆகாது.

நீங்கள் ஒன்றை தேர்ந்து எடுக்கிறீர்கள் என்றால் மற்றவைகளை நிராகரிக்கிறீர்கள் என்றே ஆகிறது. அப்போதே அங்கே (எங்கே உங்கள்மனத்தில்தான்) ஒரு எதிர்ப்பு உண்டாகிறது. A disciplined mind அதாவதுகட்டுப்பாடுள்ள மனம் என்பது சுதந்திரமான மனமாகாது. ஒன்றை தேர்ந்து எடுத்திருக்கிறீர்கள். அதன்படி நடக்கிறீர்கள். இது ஒரு வகைபழக்கப்படுத்தல். அதனால் தேர்ந்து எடுக்காத மற்ற எண்ணங்கள் தொந்திரவு செய்ய ஆரம்பிக்க -நீங்கள் சுதந்திரமானவராக இல்லை. உங்கள் கொள்கைக்கு அடிமை. பழக்கப்படுத்தப்பட்ட எண்ணங்களுக்குஅடிமை.
மனிதர்களுக்கு அடிமையாயிருப்பது மட்டுமல்ல கொள்கைகளுக்கு அடிமையாய் இருப்பவனும் சுதந்திரமானவன் இல்லை. அப்படி இருப்பவனால் தியானம் என்பதை புரிந்துகொள்ளவே இயலாது.

ஆக...மனம் என்பது ஒரு பொட்டலம். எண்ணங்களால் ஆன பொட்டலம். அதை அவிழ்க்கிற இயல்புத்தன்மை Spontaneity வேண்டும். அப்போதுஎன்ன நடக்கிறது எனில் இறுக்கமான தன்மை போய் இயல்புத்தன்மை (Spontaneity) வருகிறது. இந்த பொட்டலத்தை பிரிக்கிற நிலையில்,அதாவது மனம் தன் எண்ணங்களால் கட்டுப்பட்டு இறுக்கமாய் இருக்கிற நிலையில் இருந்து தளர்ந்து விடுபடுகையில் - மனம் தன் ஆழ்மனதின் அடுக்குகளில் இருந்து எல்லாவகையான தன் இயல்புக்கு மாறான இந்த சமூகத்தின் சட்ட திட்டத்துக்கு மாறான அதுவரை சேர்த்து வைத்திருந்த எல்லாவற்றையும் வெளியேற்றும்.

-அது என்ன 'இயல்புக்கு மாறான சமூகத்துக்கு எதிரான' என்றால்இயல்புக்கு உட்பட்ட. சமூகத்துக்கு ஏதுவான எல்லாவற்றையும் தினசரி வாழ்வில் நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். வெளிப்படுத்தாத எண்ணங்கள் இந்த 'காலிசெய்தலின்போது வரும்'.அவை நீங்களே அறியாத எண்ணங்களாக இருக்கும்.

அதனால்தான் சொல்வார்கள். தியானம் செய்தால் வெளியே வருவது சாக்கடைதான். இதுநாள் வரை அவை உள்ளே இருந்தது.
அது சாக்கடை என்று நாம் அழைப்பதே’ இந்த சமூகத்தின் சட்ட திட்டங்களின் அடிப்படையில்தான். மனசுக்கு சட்டதிட்டங்களே கிடையாது. அது எல்லாவற்றைப் பற்றியும் சிந்திக்கும்.

சாதுவான எண்ணங்கள் மட்டுமல்லகுரூரமான எண்ணங்களும் கூட அங்கே ஆழ்மனதில் உண்டு. அமைதியானவை மட்டுமல்ல வக்கிரமானவைகளும் உண்டு. ஆழ்மனதில் ஆணோ பெண்ணோ ஒரு விலங்குதான்.

ஜியாக்ரபிக் சேனலில் வந்த ஒரு சிங்ங்களைப் பற்றிய ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. ஒரு ஆண் சிங்கம் மூன்று பெண்சிங்ங்கள். அவைகளுக்குப் பிறந்த ஐந்து குட்டிச் சிங்ங்கள். எல்லா விலங்குகளும் குட்டிகளில் மிக அழகானவை. வேட்டை என்றால் என்ன என்றே அறியாத பருவம். ஒடி விளையாடிக் கொண்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் வேறு ஒரு ஆண்சிங்கம் அங்கே வந்துவிட்டது. இப்போது யார் ராஜா என்று சண்டை ஆரம்பித்துவிட்டது. உக்கிரமான போர். ஸ்லோமோஷனில் பிடரி மயிர் பறக்க பறக்க சண்டை. கடைசியில் அப்பா சிங்கம் தோற்றுவிட்டது. இப்போது வந்த சிங்கத்துக்கு மற்ற பெண்சிங்ங்களிடம் சண்டை. இந்த நாலும் சேர்ந்தாலும் வந்தவனை ஜெயிக்க முடியவில்லை. தோற்றதும் நடந்தது தான் க்ளைமாக்ஸ். புதிய ஆண்சிங்கம் அந்த ஐந்து குட்டிகளையும் ஒவ்வொன்றாக துரத்தி துரத்தி கடித்து குதறி கிழித்துப் போட்டது. இந்த நாலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

இப்படிப்பட்ட கோபம்/ஆற்றல்/சக்தி/வெறி மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அவனும் விலங்குதான்அந்த வெறி வெளியே வர மனம் தன்னிடமுள்ள ஏதாவது காரணத்தை கருவியாக எடுத்துக் கொள்ள பயன்படுத்தும். ஏதாவது...அது மிகச் சிறிய காரணமேயில்லாத காரணமாக இருக்கும். அப்படி ஏதும் நேராமல் அதை தடுத்து வைத்திருப்பது. புத்தி.

புத்தி என்பது மனதின் ஒரு பகுதியே.
இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்... இவை எல்லாமே பிறந்ததிலிருந்து கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம்.மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது.

புத்தியை 'பயிற்றுவிக்கப்பட்ட மனம்என்று சொன்னால் சரிதானே! பயிற்றுவிக்கப்படாததை 'மனம்என்றே அழைக்கிறோம்.
அப்படியானால் தியானத்திற்கு புத்தி தேவையில்லையா?

பகுதி 2-மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி



இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்... இவை எல்லாமே பிறந்ததிலிருந்து கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம். இப்படிக் கற்றுக் கொண்ட பகுதி அப்படி இல்லாத பகுதியை கட்டுப்படுத்துகிறது. கற்றுக் கொண்டதை புத்தி என்றும் அந்த மற்றதை மனமென்றும் சொல்கிறோம்.மொத்தத்தில் இரண்டும் ஒன்று தான். ஒன்று பயிற்றுவிக்கப்பட்டது. மற்றது Raw வானது.

புத்தியை 'பயிற்றுவிக்கப்பட்ட மனம்என்று சொன்னால் சரிதானே! பயிற்றுவிக்கப்படாததை 'மனம்என்றே அழைக்கிறோம்.

தியானம் என்பது புத்தியை உபயோகித்து மனதை அப்படி போ..இப்படி போ என்று சொல்வதற்கு அல்ல. புத்தியே தெரிந்ததின் தொகுப்பு என்பதனால்,பழக்கத்தில் வருவதனால்- புத்தி சொல்படி தேர்வு செய்தல்தியானம் அல்ல.

வெறுமனே மனத்தைமனம் எனும் பொட்டலத்தைஎண்ணங்களின் குவியலை வேடிக்கை பார்த்தல்.
மனம் தன் எண்ணங்களால் மீண்டும் மீண்டும் வேறு வேறு வட்டங்கள் அதுவாகவே உருவாக்கி உருவாக்கி அதன் உள்ளேயே சிக்கிக் கொண்டு வந்து கொண்டிருக்கும்.

அதனால் தான் ஜே.கே. சொன்னது discipline-கட்டுப்பாடு என்பது அது எவ்வளவு நல்லது என்றாலும் அது எவ்வளவு புனிதமானது என்றாலும் அது வட்டமே! எவ்வளவு புனிதமானது என்றாலும் அது மீள முடியாதஒரு வட்டமே’. இதில் நல்லது கெட்டது என்பதை விட வட்டம் என்பது இருக்கிறது’ என்பதை நீ அறிவாயாஉன் மனம் எதனால்ஆனது என்பதை வேடிக்கை பார்த்திருக்கிறாயா?

ஒரு திருடன்,கொள்ளைக்காரன் மனம் திருந்தி தன் எண்ணங்கள் மாறி (நிஜமான) துறவறம் பூண்டான் எனில்நல்ல விஷயம்தான். ஆனால் இப்போதும் அது ஒரு வட்டம்தான். எண்ணங்களின் லேபிள் மாறியிருக்கிறது. வட்டத்தின் கலர் மாறி இருக்கிறது.

மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.) அறியும் போதே நீங்கள் விடுபடுகிறீர்கள்.
ங்கள் உடலுக்கு நோய் எனில்
1.டாக்டரிடம் போகிறீர்கள். அவர் என்ன என்று கண்டுபிடிக்கிறார்
2.மருந்து சாப்பிடுகிறீர்கள்
ஆக இரண்டு Step தேவையாயிருக்கிறது. ஆனால் மன வேதனை,மனக்கலக்கம் என்றவுடன்
1.அது என்ன என்று கண்டுபிடிக்கிறீர்கள்.

அவ்வளவே...ஒரு Step மட்டுமே. ஆனால் மனம் அவ்வளவு சுலபமாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது. ஏன் எனில் you choose. நீங்கள் தேர்ந்து எடுக்கிறீர்கள். அதுவே மனது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தடையாய் இருக்கிறது. மனம் பல அடுக்குகளால் ஆனது. அதனை அறிய அது தன்னை விடுபடுத்திக் கொள்ள 'தேர்ந்து எடுக்காத தன்மை'வேண்டும். ஆறாய் பெருகி வந்து கொண்டிருக்கிற எண்ணங்களைதேர்ந்து எடுக்காது கவனிக்கிற தன்மை வேண்டும்.

அப்ப நல்லது கெட்டது பார்க்க வேண்டாமா எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா என்றால் நீங்கள் இன்னும் எண்ணங்களை பார்க்கவில்லை என்று அர்த்தம். அல்லது அப்படி பார்ப்பதற்கு மனம் இப்போதே தடை போட ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.

மனக்கட்டுப்பாடு ஏன் தியானத்திற்கு பலன் இல்லை எனில் மனம் எதற்கும் சரி செய்து கொண்டு ஒரு புது வட்டத்தை உருவாக்கிக் கொள்கிற தன்மை கொண்டது. இப்படி இப்படி தியானம் செய் என்றதும்நாலைந்து நாளில் மனம் அதற்கு ஏற்றார் போல தன்னை சரி செய்து கொண்டு இன்னொரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டுவிடும். இப்போதும் அதே கதைதான். பழைய குருடி ஆனால் புது வட்டம்.

ஒன்றை மறுபடி மறுபடி செய்தீர்கள் என்றால் அது அந்த வட்டத்தை பலமாக்கிக் கொண்டுவிடும். தன் பயணத்தை தொடரும். என்ன பயணம் எனில் மீண்டும் தடத்தில் போவதுதான் வேறு ஒன்றுமில்லை
சரி தடத்தில் போகவேண்டாம் என்று நீங்கள் முடிவு எடுத்தீர்கள் எனில் கொஞ்சநேரம் கழித்து கவனித்தால் மனம் அந்த தடத்தின் எதிர்திசையில் போகும். இதுவும் தடமே.

மனக் கட்டுப்பாடு இல்லாத - எதுவேண்டுமானாலும் செய்கிற மனம் - என்றால் அது இதற்கு மாறானது / எதிரானது மட்டுமே தவிர ஆனால் அதுவும் ஒரு தடமே. அதுவும் ஒரு pattern தான். அது இன்னொரு வட்டம்.
மாற்று திசையிலேயே போக ஆரம்பித்தால் அப்புறம் இரண்டு தடங்கள் உருவாகியிருக்கும். 

இது இல்லை எனில் அது. இது தனிமனிதனுக்குள் வளர்ந்து வளர்ந்து அது அவன் உருவாக்கின சமூகத்தினுள்ளும் இரட்டைத் தன்மையை கொண்டுவந்தது.

"ஆக ஒன்று தெரிகிறது. தியானம் என்பதை 'செய்யமுடியாது. அது வெறுமனே கவனிக்கப்படவேண்டியது. அதுதான் முதல் Step. அதுவே கடைசியும் கூட."

எண்ணங்கள் கேவலமோநல்லதோகெட்டதோபுனிதமோவக்கிரமோ,அபத்தமோகொடூரமோ முதலில் அவை எண்ணங்கள். எண்ணங்களே!எண்ணங்கள் மட்டுமே! லேபிள் வேண்டாம். அப்படிப்பட்ட எண்ணங்கள் வரக்கூடாது என்று தடுக்காதீர்கள். அது நோய்.
ஆனால் வருவதையெல்லாம் செயல்படுத்தினால் சமூகம் பாதிக்கும்.
அவை வெறும் எண்ணங்கள் என்ற நிலையில் நல்லது கெட்டது என்கிற லேபிள் ஒட்டாமல்,நல்லது கெட்டது என்ற முடிவுக்கு வராமல் மனதில் வரும் எல்லா எண்ணங்களையும் கவனிக்க இயலுமா...பாருங்களேன். முப்பது விநாடிகள் பார்க்க முடியுமா உங்களால்வெறும் முப்பது விநாடிகள். அதற்குமேலும்?

பார்க்கும் போது பழையனவைகள், நீங்கள் அறியாத ‘நீங்கள்’ , நீங்கள் அறியாத உங்கள் எண்ணங்கள் வெளியே வர ஆரம்பிக்கும்.

நாம் ஒரு பழக்கமான வாழ்க்கைக்கு நம்மை வாழ விட்டுக் கொடுத்து விட்டோம். அதில் இருந்து விடுபட்டு ‘கவனிக்க’ ஆரம்பிக்கும்போது ஆழ்மனதில் இருப்பவை விடுபட்டு வெளியே வர ஆரம்பிக்கும். இதுவே ஜே.கே சொல்கிற ‘Self-reveleation”. சுயம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளல். அதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நடைமுறை வாழ்வில் பழக்கத்திலேயே எதையும் செய்யாத தன்மை வேண்டும். 

ஒரு pattern வட்டத்தில் சிக்கிக் கொள்ளாத தன்மை வேண்டும். அப்போது நீங்கள் அறியாத உங்கள் மற்றொரு பகுதியான மனம் (அதை ஆழ்மனம் என்கிறோம்) வெளிப்பட ஆரம்பிக்கும்.

ங்களை அறியாமல் செய்கிற ‘செயல்களை’ ‘தேர்ந்து எடுக்காத’ மனசுடன் பார்க்க ஆரம்பிக்கும் போது ஆழ்மனம் அந்த செயல்கள் மூலம் வெளிப்படுகிறது. சரி விருப்பத்தோடு செய்தால் என்ன ஆகும்? விருப்பம் என்றவுடம் அங்கே விரும்பாதது என்று ஒன்றும் இருக்கிறது. இந்த இரண்டின் உரசல் ஆரம்பிக்கிறது. அப்போது அடக்கிவைக்கப் பட்டுள்ளவைகள் வராது.
இதைத்தான் நாம் 'அவன் ‘body language” பார்த்தியா' என்கிறோம். ‘body language” ஆழ்மனத்தின் வெளிப்பாடே! அவனது வெளிமனம் என்னதான் நினைத்தாலும் உடல் வேறுவிதமாக காட்டுகிறது. அதுசரி. அவன் ‘body language” இருக்கட்டும். உங்களது ‘body language” நீங்கள் கவனித்தது உண்டா? அதைத்தான் ஜே.கே சொல்வது.

மனக்கட்டுப்பாடு என்பது முக்கியமே அல்ல. உங்கள் மனம் எதனால் ஆனது. எந்த எந்த எண்ணங்களால் ஆனது என்பதை அறிவது முக்கியம். (The control of the mind is not important; what is important is to find out the interests of the mind.)

நீங் கள் அறியாதது உங்கள் மனம். இதை நம்புவது கடினம். ஆனால் நீங்கள் நம்பக் கூடாது. ஏனெனில் நம்பினால் அதற்கு அப்புறம் அங்கே ஏதும் தொடர்வதற்கு இல்லை. நீங்கள் நம்ப ஆரம்பிக்கும்போதே ‘இது சரி’ என்று தேர்ந்து எடுக்க ஆரம்பிக்கிறீர்கள். அப்போது ஆழ்மனம் அடைபட்டுவிடும். No Self reveleation. சுயம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாது.

அப்படி என்றால் ஆழ்மனதில் என்ன எண்ணங்கள் வந்தாலும் அதை நான் செயலில் காட்டவா என்றால் இந்தச் சமூகம் தாங்காது. உங்கள் ஒருவரையே தாங்க முடியாது எனில் எல்லோரையும் எப்படி தாங்குவது. அதனால் தான் சமூகம் ஒரு pattern- வட்டத்தை உருவாக்கி நீங்கள் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. உண்மையில் மதம் என்கிற நிறுவனம் ஒரு தடத்தில் போவதே...அதுவும் ஒரு pattern ல் போவதே. ஆனால் தனி மனிதன் எண்ணங்களை வகைப்படுத்தாமல் கவனிக்க ஆரம்பித்துவிட்டான் எனில் அவனுக்கு மதம் என்னும் நிறுவனம் தேவைப்படாது.

மனம் எப்படி எப்படி எல்லாம் தன் எண்ணங்களை நீட்டித்து கொண்டே போகிறது என்பதை எதையும் ‘தேர்ந்து எடுக்காமல்’ கூர்ந்து கவனிப்பது மட்டுமே இங்கு பேசப்படுகிறது. (Choiceless awareness).

இப்படி கவனிப்பது எதற்காக? நாளை எனக்கு ஞானம் கிடைக்க, சித்திகள் கிடைக்க என்று ஆரம்பித்து விட்டால் அங்கே ‘தேர்ந்து எடுத்தல் தொடங்கிவிட்டது என்றே அர்த்தம். மறுபடியும் வட்டம்.
இப்படி தேர்ந்து எடுக்காமல் கவனித்தால்....எண்ணங்களை சேகரித்து வைப்பது என்பதே இல்லாமல் போகிறது. நீங்கள்தான் தேர்ந்து எடுக்காமல் கவனிக்கிறீர்களே! ஆக கவனித்தல் என்பது - இனி ஏதும் சேகரிக்காமல் இருப்பது என்பதே.

அது சரி...மேலே மஞ்சள் கலரில் ‘நீங்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் ‘இதுவரை சேகரித்த எண்ணங்களின் பொட்டலம் தானே.

இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின் ஒரு புது தோற்றமே.

நீங்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள். அதில் உங்கள் ego வும் இருக்கிறது. ஏனெனில் நான் புதிய சிந்தனைகள் வருவது இல்லை என்றவுடன் நீங்கள் சிந்திக்கவேயில்லை என்றல்லவா கூறுகிறேன். அதனால் உங்கள் ego தூண்டப்பட்டு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
ஒப்புக் கொள்ளாதது நல்லதுதான்.. ஒப்புக் கொண்டுவிட்டால் நம்பிக்கை வந்துவிட்டது என்று அர்ததம் அப்போது அதற்கு மேல் தியானம் கிடையாது.



பகுதி 3-மனக்கட்டுப்பாடு தியானத்திற்கு உதவாது-ஜே.கிருஷ்ணமூர்த்தி



இனிவரும் புது எண்ணங்களை சேகரிக்காமல் இருப்பது என்பதில் ஒரு கேலிக்கூத்து இருக்கிறது. எண்ணங்களில் புதுசு என்பதே இல்லை. அது தொடர்ச்சியாகவே இயங்கும் தன்மை கொண்டது. அதனால் அவை பழசின் பாதையிலேயே வருகிற எண்ணங்களாக இருக்கும். ஆக வருவது எல்லாமே பழையவைகளின் ஒரு புது தோற்றமே. வெகு அபூர்வமாகவே, வெகு வெகு அபூர்வமாகவே மனம் தன் தடத்தை விட்டு நிச்சலனமாக இருந்து பின்னர் வேறு தடத்தில் இருக்கும்போது இந்த வாழ்வில் புது சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. 

மற்றபடி பழைய கள் புதிய மொந்தையில்தான். நீங்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டீர்கள். அதில் உங்கள் ego வும் இருக்கிறது. ஏனெனில் நான் புதிய சிந்தனைகள் வருவது இல்லை என்றவுடன் நீங்கள் சிந்திக்கவேயில்லை என்றல்லவா கூறுகிறேன். அதனால் உங்கள் ego தூண்டப்பட்டு நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. 

ஒப்புக் கொள்ளாதது நல்லதுதான்.. ஒப்புக் கொண்டுவிட்டால் நம்பிக்கை வந்துவிட்டது என்று அர்ததம் அப்போது அதற்கு மேல் தியானம் கிடையாது. 

நீங்கள் உங்கள் மனதை பிரித்துப் பார்த்து அதன் மூலம் பழையவைகளை அறியலாம்.அதற்கு இனி வருகிற எண்ணங்களே உதவும். ஏனெனில் அவைகள் பழையவைகளின் சாயலிலேயே வரும்.

ஒரு ராஜா கச்சேரிக்குப் போனார். மிகப் பிரபலமான நல்ல வித்வானின் கச்சேரி. நல்ல கூட்டம். எல்லாரும் தலையை ஆட்டி ஆட்டி, தொடையில் தட்டி, சபாஷ் போட்டு கேட்டார்கள். கச்சேரி முடியப் போகும் தருவாயில் ராஜா ஒருத்தனை கூப்பிட்டு இவ்வளவு நேரம் பாடியும் கொஞ்சம் கூட களைப்படையாமல் அவர் இருக்காரு. நான் அப்பவேயிருந்து கவனிச்சேன். அவரு ஏதோ அடிக்கடி எடுத்து வாயில போட்டுக்கறாரே அது என்னன்னு கேட்டு நமக்கும் வாங்கி வை என்றார்.

ராஜாவின் மனநிலை உணவில் இருந்தது .அதைத்தான் கவனித்திருக்கிறார். நாமும் அப்படித்தான். நம் ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதன்படி அதன் பாதையில் அதன் தடத்தில் மட்டுமே வருகிற எண்ணங்கள் நமக்கு வருகின்றன. ஆக புதிய எண்ணங்கள் பழைய சாயலிலேயே வருகின்றன.அதே தடத்தில் புதிதாக (!) வருகிற எண்ணங்களை கவனித்தால் அது ஆழ்மனதை புரிந்து கொண்டதாக ஆகிவிடாதா? .

ஏன் இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவானேன் என்றால் ங்கள்ஆழ்மனதை உங்களால் நேரடியாக அறியவே முடியாது. மறைமுகமாகவே அறியமுடியும்.

மறுபடியும் படியுங்கள்.

ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதன்படி அதன் பாதையில் அதன் தடத்தில் மட்டுமே ‘புதிதாக (!) வருகிற எண்ணங்கள்’ நமக்கு வருகின்றன. ஆக புதிய எண்ணங்கள் பழைய சாயலிலேயே வருகின்றன அதே தடத்தில் வருகிற எண்ணங்களை கவனித்தால் அது ஆழ்மனதை (ஏற்கனவே இருக்கிற எண்ணங்களின் தொகுப்பை) புரிந்து கொண்டதாக ஆகிவிடாதா?

சேகரிப்பவன் கவனமாக, ‘தேர்ந்து எடுக்காத தன்மையோடு' கூர்மையாக, வந்துகொண்டிருக்கிற எண்ணங்களை கவனிக்கும்போது நீங்கள் அறிந்த உங்கள் மேல் மனம், நீங்கள் அறியாத உங்கள் ஆழ்மனம் - அதன் அடுக்குகள் எல்லாம் விடுபட்டு வெளிவர ஆரம்பிக்கின்றன்.

எண்ணங்கள் எண்ணங்களே. அவை மேல்மன எண்ணங்களாக இருந்தால் என்ன? ஆழ்மன எண்ணங்களாக இருந்தால் என்ன?
ஜியாக்ரபிக் சானலில் ஒரு ஆவணப்படம். காட்டு எறும்புகளைப் பற்றியது. லட்சக் கணக்கில் ஊர்ந்து செல்லுகிறது. தடத்திலேயே. திடீரென்று கடும் மழை. காட்டாறு உருவாகி பெருக்கெடுத்து ஓட, இந்த எறும்புகள் சட்டென்று ஒன்றை ஒன்றை ஈர்த்துக் கொள்ள ஒரு எறும்புப் பந்து உருவாகிவிட, அந்த பந்து தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடுகிறது. எண்ணங்கள் ஆழ்மனதில் இப்படித்தான் கட்டி தட்டிப் போய் இறுகிப் போய் இருக்கின்றன. அப்படி இருப்பதனால் அதை மனம் (ஆழ்'மனம்') என்கிறோம்.

தேர்ந்து எடுக்காத தன்மை வேண்டும். ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது ‘தேர்ந்து எடுப்பதில்லை’. ஆகவே ஆழ்மனம் விடுபட்டு (எதனிடமிருந்து என்றால் தன் கட்டுகளிலிருந்தே விடுபட்டு) கனவுகளாக வருகின்றன.

கனவுகளில் லாஜிக் இருந்ததே கிடையாது. அது அப்படித்தான். ஆழ்மனதில் லாஜிக் என்பதே கிடையாது. வெறும் எண்ணங்களே. அங்கே சமூக கட்டுப்பாடுகளே கிடையாது. தனிமனிதனாக நீங்கள் உங்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்த மாதிரி...அவை எட்டுதிசைகளிலும் ஒடுகிறமாதிரி இயங்கும்...நீங்கள் தேர்ந்து எடுக்கும் போது ஆழ்மனம் அடைபட்டுவிடுகிறது.

அப்படியானால் கனவின்போது தியானம் நடக்கிறதா என்று கேட்டால் அப்போது ‘கவனிப்பு (பிரக்ஞை)’ இல்லை. தியானத்திற்கு ‘தேர்ந்து எடுக்காத தன்மை வேண்டும். எண்ணங்களை கூர்ந்து கவனிக்கிற தன்மையும் வேண்டுமே! (Choiceless Awareness).

Choiceless – தேர்ந்து எடுக்காத தன்மை
Awareness – கவனித்தல் குறிக்கோள் இல்லாமல்.(பிரக்ஞை)
இந்த சுத்திகரிக்கப் பட்ட மனம் தேவையாய் இருக்கிறது தியானத்திற்கு. காலியான மனம் தேவை.

எனக்கு காலியான மனம் தேவை என்று பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால் போச்சு. அது தப்பாட்டம். ஏனெனில் ஒரு குறிக்கோளுடன் ஆரம்பிக்கிறீர்கள். ஆழ்மனம் விடுபட இயலாது. இது சரி, இது தவறு, இது அப்படி, இது இப்படி,இது வேண்டும்,இது வேண்டாம் என்று ஆரம்பிக்கிற மனம் -பிரித்துப் பார்க்கிற மனம்- அதையே பிடிப்பாகக் கொண்டுவிட Self reveleation நடப்பதில்லை. விடுபடுதல் நடக்காது.

மனதின் மேல் மட்டத்திலும் மட்டுமல்ல ஆழ்மனதிலும் தேர்ந்து எடுக்காமை நடக்க வேண்டும். மேல் மனம் கரைய கரைய ஆழ்மனமும் விடுபடுகிறது. அப்போது மேல் மனம் ஆழ்மனம் என்ற பாகுபாடே தேவைப்படாது. அது நம் தகவல் தொடர்புக்காக நாம் பிரித்து வைத்துக் கொண்டது. கட்டி தட்டிப் போனது ஆழ்மனம், அலைந்து கொண்டே இருப்பது மேல்மனம் என்று நாம் பிரித்து வைத்துக் கொண்டோம். (ஆழ்மனமே மேல் மனதின் அலைச்சலுக்கு ஒரு காரணம் என்றாலும்)

இப்படியான எண்ணங்களை கவனித்தல் நடக்கும்போது நாம்கடந்தகாலத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறோம். இதில் நாம் என்று நான் மஞ்சள் கலரில் எழுதியிருப்பதே கடந்தகால எண்ணங்களின் பொட்டலம் தானே. ஆக கடந்தகாலமே அதிலிருந்து விடுபடுகிறது. கடந்தகாலமே தன்னிலிருந்து விடுபடுகிறது.

குழப்பமாயிருக்கிறதா? அது நல்லதுதான்.

அது சரி. ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசையை அடக்கு என்றெல்லாம் புத்தர் சொன்னார். துறவிகள் எல்லாம் சொன்னார்களே என்றால் ஆசை என்று வந்தவுடன் 'தேர்ந்து எடுக்கிறீர்கள்'. எனக்கு அது வேண்டும் என்று. அப்போது 'எது வேண்டாம்' என்ற எண்ணமும் வருகிறது.

இந்த இரட்டைத் தன்மை எண்ணங்களின் பிறவிக் குணம். இரட்டை இரட்டையாகவே வரும். தேர்ந்து எடுக்க ஆரம்பித்ததுமே மனம் (இதுவரை சேகரிக்கப்பட்ட எண்ணங்களின் பொட்டலம்) தேர்ந்து எடுக்கப்பட்ட தடத்தில் அதாவது ஆசையின் பாதையில் pattern ல் போக ஆரம்பிக்கிறது. அதனால் சொன்னார்கள் ஆசையே துன்பத்திற்கு காரணம்.

ஆசை மட்டுமல்ல ஒரு முடிவு எடுத்து தீர்மானமாக நடை போடுவதும் ஆழ்மனம் (இறுகி கட்டி தட்டிப் போன எண்ணங்களால் ஆனது) தன்னிலிருந்து விடுபட தடையாய் இருக்கும். Will power என்பது ஒரு வகை ஆசையே!
ஆக இந்த விடுபடல் இல்லாமல் தியானம் என்பதோ ஜே.கே சொல்கிற ‘உண்மையை அறிதல்’ என்பதோ சாத்தியமேயில்லை.

சரி, முயற்சியின் மூலம் இதை அடையலாமா என்றால் முயற்சி என்றதும் எந்த திசையில் போவது என்ற கேள்வி வருகிறது. அப்போதே நீங்கள் தேர்ந்து எடுக்க ஆரம்பிக்கிறீர்கள். அப்போதே மனம் தன்னை விடுவித்துக் கொள்ள தடை ஏற்பட்டுவிடுகிறது.

மனதில் எல்லா அடுக்குகளும் ஒருவிதமான அமைதியில் இருக்க (அது புயலுக்குப் பின் சட்டென்று ஏற்படுகிற ஒரு வித அமைதி. இது உதாரணம்தான் ) அதுவே உண்மையை கண்டறிய ஏதுவான சூழ்நிலை (மனதில் ஏற்படுகிற சூழ்நிலை என்பதை வெளிச்சூழ்நிலை என்று பொருள் கொள்ள வேண்டாம்).

அது சரி மனம் என்பதே எண்ணங்களால் ஆன பொட்டலம் என்னும் போது எண்ணங்கள் விடுபட்டால் அப்போது மனம் என்ன ஆகும். அது இல்லாமலே ஆகும். ஏனெனில் அது எப்போதும் இருந்ததில்லை.(மேலே சொன்ன உதாரணத்தில் எறும்புப் பந்திலிருந்து எறும்புகள் விடுபடும்போது. அதன்பின் பந்து என்று ஒன்று கிடையவே கிடையாது. அதற்கு முன்பும் கிடையாது. எறும்புகள் மட்டுமே இருந்தன)

எண்ணங்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது தலைக்குள். அவற்றின் போக்குவரத்தை நாம் மனம் என்று அழைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மனம் அல்லாத நிலையை புத்தர் நிர்வாணம் என்றார். ஆடைகள் இல்லாதது உடல் நிர்வாணம் எனில் எண்ணங்கள் இல்லாதது இந்த நிர்வாணம். எண்ணங்கள் எப்படி இல்லாது போகும் எனில் ...கேள்வியை மாற்றிக் கேளுங்களேன்.

எண்ணங்கள் எப்படி இருக்கின்றன. என்று? குறிக்கோள் இருக்கும்போது
குறிக்கோள் எப்படி வருகிறது? ஆசை இருக்கும்போது.
ஆசையை ஒழிக்கலாமா? ஆக ஆசையை ஒழிப்பதை ஒரு குறிக்கோளாக ஆக்கிக் கொண்டு விட்டீர்கள்...பிறகு எப்படி?
ஆசையை ஒழிக்க, சம்மணம் போட்டு உட்கார்ந்து, உடலை வளைத்து உடற்பயிற்சி செய்து, மூக்கை பிடித்து பயிற்சி செய்து..- .இதெல்லாம் எண்ணங்களை ‘தேர்ந்து எடுக்காமல்’ கவனிக்கும் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லவே!

தேர்ந்து எடுக்காமல் எண்ணங்களை கவனித்தல் என்பது மனதை சுத்திகரித்தல்.மறுபடி ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம்.

ஐயாநான் பலவருடங்களாக தியானம் செய்துகொண்டு வருகிறேன்இதுசம்பந்தமான புத்தகங்கள் நிறைய படித்து ஒரு சில நியமங்களை பின்பற்றிவந்திருக்கிறேன்ஒரு ஆசிரமத்துக்கு சென்று பல மணி நேரங்கள் தியானம் பயின்றிருக்கிறேன்.

பார்த்தீர்களா நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கிறேன் ஆன்மீக வாழ்விற்காக என்ற மனப்பான்மை எல்லாம் என்னிடம் இல்லை. எவ்வளவு சந்தோஷங்களை இழந்திருக்கிறேன் என்று கண்ணீரோடு உருகுகிற மனம் என்னிடம் இல்லை. இவ்வளவு வருடங்களுக்கு அப்புறம் என் மனம் என் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் தியானம் செய்வதில் ‘பெரு மகிழ்ச்சி’ எல்லாம் ஒன்றும் எனக்கு புலப்படவேயில்லை. சுயமாக நான் எனக்கு விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் என்னை கொஞ்சம் கடுமையானவனாகவே ஆக்கியிருக்கிறது.

இப்போது எனக்கு அவநம்பிக்கை வருகிறது. கடவுள் என்று கற்பிக்கப்பட்டவை மீது கடுமையான அவநம்பிக்கை வருகிறது. இவ்வளவு நாள் அப்படி நம்பிக்கை இருக்கிற சமூகத்தில்தான் வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் நான் என்ன செய்ய...?

இதற்கான அவரின் பதிலையே இந்தக் கட்டுரையாக நான் இங்கு தந்துள்ளேன். இதை இன்னொரு உதாரணம் மூலம் பார்க்கலாம்.

இன்னொருவர் வேலைக்கு போய் சம்பாதித்து கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று அவர்களை வளர்த்து ஒரு வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வந்து நிற்கிறார். எனக்கு எண்ணங்களால் தொல்லை என்கிறார். அவரும் இப்படியே இருக்கிறார். இவரும் இப்படியே இருக்கிறார். அவர் இருப்பது ஒரு வட்டம். இவர் இருப்பது இன்னொரு வட்டம்.

எண்ணங்கள் எண்ணங்களே! அவை நல்லவைகளாய் இருந்தாலும், கேவலமானவைகளாக இருந்தாலும் கொடூரமானவைகளாக இருந்தாலும், புனிதமானவைகளாக இருந்தாலும்,சொகுசு வாழ்க்கையில் உதித்தாலும்,கஷ்டப்படுகிற வாழ்க்கையில் உதித்தாலும்.

நீங்கள் எந்த வட்டத்தில் இருந்தால் என்ன?. வட்டத்தில் இருக்கிறீர்கள்.
உடனே அப்ப சமூகத்தில் நான் எப்படி வேணுமானாலும் இருக்கலாமா என்றால் இந்தக் கட்டுரை முதலில் இருந்து படிக்கப்பட வேண்டும் என்று பொருள்.

(ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 'Commentaries on Living-I என்ற நூலின் ஒருகட்டுரையின் அடிப்படையில்...)


No comments:

Post a Comment