|
|
நவக்கிரஹ போற்றி
ஓம் சூரியனே போற்றி
ஓம் சூழ் ஒளியே போற்றி
ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
ஓம் பார்வை கொடுப்போனே போற்றி
ஓம் கோள்களின் தலைவனே போற்றி
ஓம் கோதுமை விரும்பியே போற்றி
ஓம் உயிர்க்கு ஆதாரமே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஜோதிப் பிழம்பே போற்றி
ஓம் செந்நிற மேனியனே போற்றி
ஓம் நடுவில் இருப்பவனே போற்றி
ஓம் நல்மயில் வாகனனே போற்றி
ஓம் தேரில் வருபவனே போற்றி
ஓம் தூய்மைப்படுத்துபவனே போற்றி
ஓம் சந்திரனே போற்றி
ஓம் சமுத்திர நாயகனே போற்றி
ஓம் இனிமையே போற்றி
ஓம் வெண்மையே போற்றி
ஓம் குளுமையே போற்றி
ஓம் கடலில் உதிப்பவனே போற்றி
ஓம் நரிவாகனனே போற்றி
ஓம் நட்சத்திர வாகனனே போற்றி
ஓம் தென்கீழ் திசையோனே போற்றி
ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
ஓம் பெண்ணுரு ஆனவனே போற்றி
ஓம் பயற்றில் மகிழ்பவனே போற்றி
ஓம் அங்காரகனே போற்றி
ஓம் அரத்த மேனியனே போற்றி
ஓம் தென்திசையிருப்போனே போற்றி
ஓம் துவரைப்பிரியனே போற்றி
ஓம் க்ஷத்திரியனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் குஜனே போற்றி
ஓம் குறைதீர்ப்பவனே போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் அல்லல் அறுப்போனே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
ஓம் புதனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் பச்சை நிறத்தானே போற்றி
ஓம் பற்றறுப்பவனே போற்றி
ஓம் பயற்றில் அரியவனே போற்றி
ஓம் பொன்னினும் அரியவனே போற்றி
ஓம் குதிரையில் வருபவனே போற்றி
ஓம் வடகீழ்த்திசையோனே போற்றி
ஓம் சுகமளிப்பவனே போற்றி
ஓம் சுபகிரஹமே போற்றி
ஓம் வியாழக்கிரஹமே போற்றி
ஓம் வடபுறத்திருப்போனே போற்றி
ஓம் பிருஹஸ்பதியே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சத்தியவடிவே போற்றி
ஓம் பிரம்மகுலத்தோனே போற்றி
ஓம் மஞ்சள் நிறத்தானே போற்றி
ஓம் மெய்யுணர்த்துபவனே போற்றி
ஓம் கலைநாயகனே போற்றி
ஓம் கடலை ஏற்பவனே போற்றி
ஓம் வேழவாகனனே போற்றி
ஓம் வானோர்மந்திரியே போற்றி
ஓம் சுக்கிரனே போற்றி
ஓம் சுபகிரஹமே போற்றி
ஓம் கிழக்கேயிருப்பவனே போற்றி
ஓம் கருடவாகனனே போற்றி
ஓம் பொன்பொருளளிப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மழைபொழிபவனே போற்றி
ஓம் மொச்சை ஏற்பவனே போற்றி
ஓம் வெண்ணிறமேனியனே போற்றி
ஓம் இறவாமையளிப்பவனே போற்றி
ஓம் சனிபகவானே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் நீலவர்ணனே போற்றி
ஓம் நள்ளாற்று நாயகனே போற்றி
ஓம் அருள் நாயகனே போற்றி
ஓம் ஆயுள் கொடுப்பவனே போற்றி
ஓம் கருமை விரும்பியே போற்றி
ஓம் காகம் ஏறியவனே போற்றி
ஓம் மேற்புறத்திருப்பவனே போற்றி
ஓம் மந்தகதியானே போற்றி
ஓம் எள்பிரியனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் தன்னிகரற்றவனே போற்றி
ஓம் தளைகளுடைப்பவனே போற்றி
ஓம் ராகுவே போற்றி
ஓம் ரட்சிப்பவனே போற்றி
ஓம் சிரமிழந்தவனே போற்றி
ஓம் சிவனருள் பெற்றவனே போற்றி
ஓம் எச்சரிக்கை செய்பவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் பாதி உடலோனே போற்றி
ஓம் உளுந்து விரும்புபவனே போற்றி
ஓம் தென்மேற்கமர்ந்தவனே போற்றி
ஓம் ஆடேறிவருபவனே போற்றி
ஓம் கேதுவே போற்றி
ஓம் கேடறச்செய்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் சிம்மவாஹனனே போற்றி
ஓம் திங்களின் பகையே போற்றி
ஓம் தோஷம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சுக்ரமித்ரனே போற்றி
ஓம் சூல் காப்பவனே போற்றி
ஓம் அலி உருவானவனே போற்றி
ஓம் அரவத்தலையோனே போற்றி
ஓம் வடமேற்கிருப்பவனே போற்றி
ஓம் கொள்விரும்பியே போற்றி
ஓம் நவக்கிரஹ நாயகர்களே போற்றி
ஓம் சூரியனாதி தேவர்கள் போற்றி
நவக்கிரஹ போற்றி - 1
ஓம் ஓங்கார சூக்கும உடலாய் போற்றி
ஓம் ஓரா ழித்தேர் ஊர்ந்தாய் போற்றி
ஓம் ஏழென் குதிரை ஏவினை போற்றி
ஓம் ஓர்முகம் எண்கர முடையாய் போற்றி
ஓம் இருதோட் கமலம் ஏந்தினாய் போற்றி
ஓம் பொற்பட் டுடையில் பொழிவாய் போற்றி
ஓம் வியாவி ருதிஏழ் விளங்குவாய் போற்றி
ஓம் பன்னிரு முனிதுதிப் பாஸ்கரா போற்றி
ஓம் மழைபனி பருவம் மாற்றுவாய் போற்றி
ஓம் மூலாக் கினியில் முகிழ்த்தாய் போற்றி
ஓம் வீதிமூன் றிராசிபன் னிரண்டாய் போற்றி
ஓம் சூரியா வீரியா சுகமருள் வாய் போற்றி
ஓம் சங்கரன் முடிதவழ் சந்திரா போற்றி
ஓம் திருமகள் சோதரா திவ்யா போற்றி
ஓம் சவுக்க வடிவில் இருந்தாய் போற்றி
ஓம் முத்துவி மான வாகனா போற்றி
ஓம் சக்கரம் மூன்றுடைத் தேராய் போற்றி
ஓம் குருந்த மலர்நிறக் குதிரையாய் போற்றி
ஓம் கலைவளர் மதியே கருணையே போற்றி
ஓம் தேவர் பிழிந்துணும் அமுதே போற்றி
ஓம் சக்தியை நடுங்கொள் மண்டலா போற்றி
ஓம் வஞ்சம் மோகினிக் குரைத்தாய் போற்றி
ஓம் நிலப்பயிர் தழைக்கும் நிலவே போற்றி
ஓம் இருகண் பார்வைச் சுகமருள்வாய் போற்றி
ஓம் பூதேவி குமரா பௌமா போற்றி
ஓம் செந்நிற உருவாய் செவ்வாய் போற்றி
ஓம் அன்ன வாகனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் முக்கோ ணவடிவ இருக்கையாய் போற்றி
ஓம் எண்பரித் தேர்மிசை இயல்வாய் போற்றி
ஓம் தவத்தால் உயர்பாதம் அடைந்தாய் போற்றி
ஓம் தட்சன் யாகம் தடுத்தாய் போற்றி
ஓம் யோக நெருப்புடை யுடலாய் போற்றி
ஓம் மங்களம் தரூஉம் மங்கலா போற்றி
ஓம் அருங்கலை வல்லாய் ஆரல் போற்றி
ஓம் தைர்யம் வலிமை தருவாய் போற்றி
ஓம் அங்கா ரகனே அருள்வாய் போற்றி
ஓம் புதனெனும் தாரை புத்திரா போற்றி
ஓம் பசுமை மேனி கொண்டோய் போற்றி
ஓம் அம்பின் வடிவில் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்காந் தள்மலர் விரும்பினாய் போற்றி
ஓம் குதிரை வாகனங் கொண்டோய் போற்றி
ஓம் நால்பரித் தேர்மிசை அமர்ந்தாய் போற்றி
ஓம் தவத்தால் கோளென உயர்ந்தாய் போற்றி
ஓம் அசுவ யாகம் ஆற்றினாய் போற்றி
ஓம் இளையை மணந்த எழிலே போற்றி
ஓம் சிவனால் சாபம் நீங்கினாய் போற்றி
ஓம் இருக்கு வேதத் திருந்தாய் போற்றி
ஓம் ஞானமுங் கல்வியும் நல்குவாய் போற்றி
ஓம் வானவர் குருவே வியாழ போற்றி
ஓம் பொன்னிற மேனிப் புத்தேள் போற்றி
ஓம் நீண்ட சவுக்கம் நின்றாய் போற்றி
ஓம் களிற்று வாகன முடையாய் போற்றி
ஓம் பொற்பரித்தேரில் பொலிந்தாய் போற்றி
ஓம் சர்ப்ப யாகம் தவிர்த்தாய் போற்றி
ஓம் இந்திரன் ஆள இயம்பினாய் போற்றி
ஓம் வச்சிரப் படைவலி தடுத்தாய் போற்றி
ஓம் அசுரரை சபிக்கச் சூழ்ந்தாய் போற்றி
ஓம் சேர்ந்தார்க் கின்பம் சேர்ப்பாய் போற்றி
ஓம் கிரக தோஷம் களைவாய் போற்றி
ஓம் கோடிநன் மைதரு குருவே போற்றி
ஓம் பிருகுபுத் திரனே சுக்கிரா போற்றி
ஓம் வெள்ளி நிறத்தில் விளங்குவாய் போற்றி
ஓம் ஐங்கோ ணாசனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெண்டா மரைமலர் கொண்டோய் போற்றி
ஓம் கருவடா கனத்தில் ஒளிர்வாய் போற்றி
ஓம் பதின்பரித் தேர்மிசை வருவாய் போற்றி
ஓம் சிவனால் ஒளிநிறம் பெற்றோய் போற்றி
ஓம் கசனை உயிர்த்த கருணையே போற்றி
ஓம் தண்டன் நாடுகா டாக்கினாய் போற்றி
ஓம் அசுரர்க் கபஜெயம் தந்தாய் போற்றி
ஓம் பகீர தன்னிடர் தீர்த்தாய் போற்றி
ஓம் மிருதஞ் சீவினி மந்திரா போற்றி
ஓம் சூரிய பாலா சுபமருள் போற்றி
ஓம் அஞ்சன வண்ணா சனியே போற்றி
ஓம் வில்வடி வாசனம் விளங்கினாய் போற்றி
ஓம் காக்கை வாகனக் கடவுளே போற்றி
ஓம் கருங்கு வளைமல ருகந்தாய் போற்றி
ஓம் எள்ளும் வன்னியும் ஏற்றாய் போற்றி
ஓம் மேற்றிசை நின்ற மேலோய் போற்றி
ஓம் நளனைச் சோதித் தாண்டாய் போற்றி
ஓம் தேவரும் பார்வையில் தீய்த்தாய் போற்றி
ஓம் பற்றற் றாரையும் பற்றுவாய் போற்றி
ஓம் கலியென் றொருபெய ருடையாய் போற்றி
ஓம் தொழுதேன் சனியே தொடாதே போற்றி
ஓம் சிம்மிகை மைந்தா இராகுவே போற்றி
ஓம் கொடிவடி வமர்ந்த கோளே போற்றி
ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி
ஓம் தென்மேற் றிசையில் திகழ்வாய் போற்றி
ஓம் மந்தா ரைமலர் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் உளுந்தும் அருகும் உகந்தாய் போற்றி
ஓம் கரும்பாம் புருவம் கண்டாய் போற்றி
ஓம் நாலிரு குதிரைத் தேராய் போற்றி
ஓம் தேவர் அமுதம் உண்டோய் போற்றி
ஓம் ஓருடல் இருகோ ளானாய் போற்றி
ஓம் தவமேம் பட்ட தலையே போற்றி
ஓம் இராஜபோ கம்தரு இராகுவே போற்றி
ஓம் இராகுவி னுடலே கேதுவே போற்றி
ஓம் சிவனால் தலையுயிர் பெற்றாய் போற்றி
ஓம் செம்பாம் புருவை வேண்டினாய் போற்றி
ஓம் முச்சில் வடிவில் முகிழ்ந்தாய் போற்றி
ஓம் செவ்வல் லிமலர் சேர்த்தாய் போற்றி
ஓம் கொள்ளும் தர்ப்பையும் கொண்டாய் போற்றி
ஓம் அரிவா கனத்தில் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆறு குதிரைத் தேராய் போற்றி
ஓம் வடமேற் றிசையில் நின்றாய் போற்றி
ஓம் நீதி நெறிசேர் கேதுவே போற்றி
ஓம் தவத்தால் கோள்நிலை பெற்றாய் போற்றி
ஓம் ஞானமும் மோட்சமும் நல்குவாய் போற்றி
சூரியன் போற்றி
ஓம் அதிதி புத்ரனே போற்றி
ஓம் அளத்தற்கரியனே போற்றி
ஓம் அறுகுப்பிரியனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி
ஓம் ஆன்மாவே போற்றி
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
ஓம் இருள்நீக்கியே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உவமைப் பொருளே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் என்பானவனே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரித் தேரனே போற்றி
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓராழித்தேரனே போற்றி
ஓம் ஓய்விலானே போற்றி
ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி
ஓம் கதிரவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
ஓம் கர்ணன் தந்தையே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கண்ணில் காவலே போற்றி
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
ஓம் காசியபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்பவனே போற்றி
ஓம் காலைமாலைக் கனிவோனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் குந்திக்கருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமைப் பிரியனே போற்றி
ஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலக் காவலே போற்றி
ஓம் சனித் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சித் தேவனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சிம்மராசியதிபதியே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
ஓம் சுயம்பிரகாசனே போற்றி
ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி
ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
ஓம் செந்நிறக் குடையனே போற்றி
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சோழர் மூதாதையே போற்றி
ஓம் சௌரத் தலைவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் நடுவிருப்போனே போற்றி
ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி
ஓம் நலமேயளிப்பவனே போற்றி
ஓம் நளாயினிக்கருளியவனே போற்றி
ஓம் நான்முனித் தந்தையே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நீதித் தேவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பகற் காரணனே போற்றி
ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி
ஓம் பரஞ்சோதியே போற்றி
ஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றி
ஓம் பாலைநிலத் தேவனே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மயூரகவிக்கருளியவனே போற்றி
ஓம் முதல் கிரகமே போற்றி
ஓம் முக்கோணக் கோலனே போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி
ஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் விடியச் செய்பவனே போற்றி
ஓம் வலிவலத்தருள்பவனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சூரியநாராயணனே போற்றி
சந்திரன் போற்றி
ஓம் அம்புலியே போற்றி
ஓம் அமுத கலையனே போற்றி
ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி
ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி
ஓம் அபய கரத்தனே போற்றி
ஓம் அமைதி உருவனே போற்றி
ஓம் அன்பனே போற்றி
ஓம் அஸ்த நாதனே போற்றி
ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி
ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆத்திரேய குலனே போற்றி
ஓம் இனிப்புப் பிரியனே போற்றி
ஓம் இரண்டாம் கிரகனே போற்றி
ஓம் இனியவனே போற்றி
ஓம் இணையிலானே போற்றி
ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி
ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி
ஓம் இரு கரனே போற்றி
ஓம் இரவு நாயகனே போற்றி
ஓம் ஈய உலோகனே போற்றி
ஓம் ஈரெண் கலையனே போற்றி
ஓம் ஈர்ப்பவனே போற்றி
ஓம் ஈசன் அணியே போற்றி
ஓம் உவகிப்பவனே போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் எழில்முகனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஒணத்ததிபதியே போற்றி
ஓம் ஒளடதீசனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கலா நிதியே போற்றி
ஓம் காதற் தேவனே போற்றி
ஓம் குறு வடிவனே போற்றி
ஓம் குமுதப் பிரியனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் கௌரி குண்டத்தருள்பவனே போற்றி
ஓம் கௌரி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் சந்திரனே போற்றி
ஓம் சஞ்சீவியே போற்றி
ஓம் சதுரப் பீடனே போற்றி
ஓம் சதுரக் கோலனே போற்றி
ஓம் சமீப கிரகனே போற்றி
ஓம் சமுத்திர நாயகனே போற்றி
ஓம் சாமப் பிரியனே போற்றி
ஓம் சாந்தராயணவிரதப் பிரியனே போற்றி
ஓம் சிவபக்தனே போற்றி
ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சித்ராங்கதனுக்கருளியவனே போற்றி
ஓம் தண்ணிலவே போற்றி
ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தட்சன் மருகனே போற்றி
ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி
ஓம் தாரைப் பிரியனே போற்றி
ஓம் திருமகள் சோதரனே போற்றி
ஓம் திங்களூர்த் தேவனே போற்றி
ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திருஉருவனே போற்றி
ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி
ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி
ஓம் தென்கீழ் திசையனே போற்றி
ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி
ஓம் தூவெண்மையனே போற்றி
ஓம் தொழும் பிறையே போற்றி
ஓம் நரி வாகனனே போற்றி
ஓம் நக்ஷத்ர நாயகனே போற்றி
ஓம் நெல் தானியனே போற்றி
ஓம் நீர் அதிதேவதையனே போற்றி
ஓம் பயறு விரும்பியே போற்றி
ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி
ஓம் பத்துபரித் தேரனே போற்றி
ஓம் பரிவாரத் தேவனே போற்றி
ஓம் பல்பெயரனே போற்றி
ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி
ஓம் பாண்டவர் தலைவனே போற்றி
ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் புதன் தந்தையே போற்றி
ஓம் போற்றாரிலானே போற்றி
ஓம் பெண் கிரகமே போற்றி
ஓம் பெருமையனே போற்றி
ஓம் மதியே போற்றி
ஓம் மனமே போற்றி
ஓம் மன்மதன் குடையே போற்றி
ஓம் மகிழ்விப்பவனே போற்றி
ஓம் மாத்ரு காரகனே போற்றி
ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி
ஓம் முத்துப் பிரியனே போற்றி
ஓம் முருக்கு சமித்தனே போற்றி
ஓம் முத்து விமானனே போற்றி
ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி
ஓம் மூலிகை நாதனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் ரோகிணித் தலைவனே போற்றி
ஓம் ரோகமழிப்பவனே போற்றி
ஓம் வைசியனே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் விண்ணோர் திலகமே போற்றி
ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி
ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி
ஓம் வெண்குடையனே போற்றி
ஓம் வெள்அலரிப் பிரியனே போற்றி
ஓம் வெண் திங்களே போற்றி
செவ்வாய் போற்றி
ஓம் அங்காரகனே போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் அருளும் நாதனே போற்றி
ஓம் அபய கரத்தனே போற்றி
ஓம் அவிட்ட நாதனே போற்றி
ஓம் அல்லலறுப்பவனே போற்றி
ஓம் அண்டினோர்க் காவலே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆடு வாகனனே போற்றி
ஓம் ஆற்றல் மிக்கவனே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாண்டாள்பவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கருங்காலி சமித்தனே போற்றி
ஓம் கதி அருள்பவனே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் குஜனே போற்றி
ஓம் குருமித்ரனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவனே போற்றி
ஓம் சங்குக் கழுத்தனே போற்றி
ஓம் சசி மித்ரனே போற்றி
ஓம் சண்பகப் பிரியனே போற்றி
ஓம் சகோதர காரகனே போற்றி
ஓம் சக்தி ஆயுதனே போற்றி
ஓம் சாமகானப் பிரியனே போற்றி
ஓம் சித்திரை அதிபதியே போற்றி
ஓம் சிகப்புக் குடையனே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் செம்மீனே போற்றி
ஓம் செந்நீர் முத்தனே போற்றி
ஓம் செங்கண்ணனே போற்றி
ஓம் செவ்வாடையனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் செம்பு உலோகனே போற்றி
ஓம் செம்மாலை அணியனே போற்றி
ஓம் செவ்வாய் நாதனே போற்றி
ஓம் தனிச் சன்னதியுளானே போற்றி
ஓம் தவத்தாலுயர்ந்தவனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தனமளிப்பவனே போற்றி
ஓம் திருக்கோலனே போற்றி
ஓம் திருச்சிறுகுடியில் அருள்பவனே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தீன ரக்ஷகனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் துட்டர்ப் பகையே போற்றி
ஓம் துவரை விரும்பியே போற்றி
ஓம் துவர்ப்புச் சுவையனே போற்றி
ஓம் தென் திசையனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தெய்வத் தேரனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நிலமகட் சேயே போற்றி
ஓம் நிலமாளச் செய்பவனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நெற்றிக்கண் தோன்றலே போற்றி
ஓம் பராக்கிரமனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பலமளிப்பவனே போற்றி
ஓம் பவழப் பிரியனே போற்றி
ஓம் பழனியிலருள்பவனே போற்றி
ஓம் பரத்வாஜர் சீடனே போற்றி
ஓம் பரனருள் பெற்றவனே போற்றி
ஓம் பார்கவனே போற்றி
ஓம் பிருத்வி பாலனே போற்றி
ஓம் பின்னும் செல்வோனே போற்றி
ஓம் பூமி அதிதேவதையனே போற்றி
ஓம் புரூரவசுக்கருளியவனே போற்றி
ஓம் பௌமனே போற்றி
ஓம் பொற்றேரனே போற்றி
ஓம் மங்களனே போற்றி
ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
ஓம் மருந்தாவோனே போற்றி
ஓம் மகரத்தில் உச்சனே போற்றி
ஓம் மாவீரனே போற்றி
ஓம் மிருகசீர்ஷ நாதனே போற்றி
ஓம் முக்கோண மண்டலனே போற்றி
ஓம் முருகனருள் பெற்றவனே போற்றி
ஓம் முடி தரித்தவனே போற்றி
ஓம் மூன்றாமவனே போற்றி
ஓம் மென்னகையனே போற்றி
ஓம் மேன்மையளிப்பவனே போற்றி
ஓம் மேதையே போற்றி
ஓம் மேலோனே போற்றி
ஓம் மேஷக் கொடியோனே போற்றி
ஓம் மேஷராசி அதிபதியே போற்றி
ஓம் ரவி மித்ரனே போற்றி
ஓம் ரோக நாசகனே போற்றி
ஓம் வரத ஹஸ்தனே போற்றி
ஓம் வரமருள்பவனே போற்றி
ஓம் வியர்வைத் தோன்றலே போற்றி
ஓம் விருச்சிகராசி அதிபதியே போற்றி
ஓம் வீரனாக்குபவனே போற்றி
ஓம் வீரபத்திரனம்சமே போற்றி
ஓம் வேல் ஆயுதனே போற்றி
ஓம் வெற்றி அளிப்பவனே போற்றி
ஓம் வைத்தியனே போற்றி
ஓம் வைத்தீஸ்வரனாலயத் தருள்பவனே போற்றி
ஓம் க்ஷத்திரியனே போற்றி
ஓம் க்ஷமிப்பவனே போற்றி
ஓம் ÷க்ஷத்ரபாலன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் செவ்வாய்த் தேவனே போற்றி
புதன் போற்றி
ஓம் அழகனே போற்றி
ஓம் அருளாகரனே போற்றி
ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
ஓம் அந்தணர்க் காவலே போற்றி
ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழகுருவே போற்றி
ஓம் அம்பு பீடனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் ஆனந்தனே போற்றி
ஓம் ஆயில்ய நாதனே போற்றி
ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இளை நாதனே போற்றி
ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
ஓம் இசைஞானமருள்பவனே போற்றி
ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
ஓம் உயர்ந்தவனே போற்றி
ஓம் உகந்தவனே போற்றி
ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
ஓம் உடலிற் தோலானவனே போற்றி
ஓம் கலைவாணனே போற்றி
ஓம் கல்வியருள்பவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் கவியரசே போற்றி
ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
ஓம் கிரஹபதியே போற்றி
ஓம் கிரகபீடாஹரனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
ஓம் குஜன் பகைவனே போற்றி
ஓம் குதிரை வாகனனே போற்றி
ஓம் கேடயதாரியே போற்றி
ஓம் கேட்டை நாதனே போற்றி
ஓம் சசி சுதனே போற்றி
ஓம் சந்திர குலனே போற்றி
ஓம் சத்வ குணனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தயாகரனே போற்றி
ஓம் தனிக்கோயிலானே போற்றி
ஓம் தாரை மகனே போற்றி
ஓம் தரித்ர நாசகனே போற்றி
ஓம் திருவுருவனே போற்றி
ஓம் திருவெண்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் துதிக்கப்படுபவனே போற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனே போற்றி
ஓம் தேவனே போற்றி
ஓம் தேரேறி வருபவனே போற்றி
ஓம் நக்ஷத்ரேசனே போற்றி
ஓம் நல்லுரு அருள்பவனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நாயுருவி சமித்தனே போற்றி
ஓம் நான்காமவனே போற்றி
ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் பயிர்க் காவலனே போற்றி
ஓம் பசும்பயறு விரும்பியே போற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமே போற்றி
ஓம் பதினேழாண்டாள்பவனே போற்றி
ஓம் பித்தளை உலோகனே போற்றி
ஓம் பின்னகர்வுடையோனே போற்றி
ஓம் பிரமனருள் பெற்றவனே போற்றி
ஓம் புராணத் தேவனே போற்றி
ஓம் புலவர் பிரானே போற்றி
ஓம் புலமையளிப்பவனே போற்றி
ஓம் பூங்கழலடியனே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் புரூரவன் தந்தையே போற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
ஓம் பொன்னணியனே போற்றி
ஓம் பொற்கொடியோனே போற்றி
ஓம் பொன்மேனியனே போற்றி
ஓம் பொன்னாடையனே போற்றி
ஓம் போகமளிப்பவனே போற்றி
ஓம் மணிமுடியனே போற்றி
ஓம் மரகதப் பிரியனே போற்றி
ஓம் மனோகரனே போற்றி
ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனே போற்றி
ஓம் மதுரையில் பூசித்தவனே போற்றி
ஓம் ரவி மித்ரனே போற்றி
ஓம் ரவிக்கருகிருப்பவனே போற்றி
ஓம் ரேவதிக் கதிபதியே போற்றி
ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வல்லபிரானே போற்றி
ஓம் வாட்கரனே போற்றி
ஓம் வடகீழ் திசையனே போற்றி
ஓம் வாக்கானவனே போற்றி
ஓம் வாழ்வளிப்பவனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் விஷ்ணுரூபனே போற்றி
ஓம் விஷ்ணு அதிதேவதையனே போற்றி
ஓம் வைஸ்யனே போற்றி
ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனே போற்றி
ஓம் ஜம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் புத பகவானே போற்றி
வியாழன் (குரு) போற்றி
ஓம் அன்ன வாகனனே போற்றி
ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி
ஓம் அபய கரத்தனே போற்றி
ஓம் அரசு சமித்தனே போற்றி
ஓம் அயன் அதிதேவதையனே போற்றி
ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி
ஓம் அறிவனே போற்றி
ஓம் அறிவுக்கதிபதியே போற்றி
ஓம் அறக் காவலே போற்றி
ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி
ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி
ஓம் உதித்தியன் சோதரனே போற்றி
ஓம் உபகிரகமுடையவனே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் எளியோர்க் காவலே போற்றி
ஓம் ஐந்தாமவனே போற்றி
ஓம் ஏடேந்தியவனே போற்றி
ஓம் கருணை உருவே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் கடலை விரும்பியே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கசன் தந்தையே போற்றி
ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி
ஓம் கடகராசி அதிபதியே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காக்கும் தேவனே போற்றி
ஓம் கிரகாதீசனே போற்றி
ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் குணசீலனே போற்றி
ஓம் குரு பகவானே போற்றி
ஓம் சதுர பீடனே போற்றி
ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி
ஓம் சான்றோனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிறுமையழிப்பவனே போற்றி
ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி
ஓம் கராச்சாரியனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் செல்வமளிப்பவனே போற்றி
ஓம் செந்தூரில் உய்ந்தவனே போற்றி
ஓம் தங்கத் தேரனே போற்றி
ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி
ஓம் தாரை மணாளனே போற்றி
ஓம் த்ரிலோகேசனே போற்றி
ஓம் திட்டைத் தேவனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெளிவிப்பவனே போற்றி
ஓம் தேவ குருவே போற்றி
ஓம் தேவரமைச்சனே போற்றி
ஓம் தேவர்குலக் காவலனே போற்றி
ஓம் நற்குணனே போற்றி
ஓம் நல்லாசானே போற்றி
ஓம் நற்குரலோனே போற்றி
ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி
ஓம் நலமேயருள்பவனே போற்றி
ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி
ஓம் நாற்கோணப் பீடனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நீதிகாரகனே போற்றி
ஓம் நீதிநூல் தந்தவனே போற்றி
ஓம் நேசனே போற்றி
ஓம் நெடியோனே போற்றி
ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி
ஓம் பாடியில் அருள்பவனே போற்றி
ஓம் பிரஹஸ்பதியே போற்றி
ஓம் பிரமன் பெயரனே போற்றி
ஓம் பீதாம்பரனே போற்றி
ஓம் புத்ர காரகனே போற்றி
ஓம் புனர்வசு நாதனே போற்றி
ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி
ஓம் பூரட்டாதிபதியே போற்றி
ஓம் பொற்குடையனே போற்றி
ஓம் பொன்னாடையனே போற்றி
ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி
ஓம் பொன்னிற த்வஜனே போற்றி
ஓம் மணம் அருள்பவனே போற்றி
ஓம் மகவளிப்பவனே போற்றி
ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி
ஓம் மமதை மணாளனே போற்றி
ஓம் முல்லைப் பிரியனே போற்றி
ஓம் மீனராசி அதிபதியே போற்றி
ஓம் யானை வாகனனே போற்றி
ஓம் யோகசித்தி சோதரனே போற்றி
ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் வடதிசையனே போற்றி
ஓம் வடநோக்கனே போற்றி
ஓம் வள்ளலே போற்றி
ஓம் வல்லவனே போற்றி
ஓம் வச்சிராயுதனே போற்றி
ஓம் வாகீசனே போற்றி
ஓம் விசாக நாதனே போற்றி
ஓம் வேதியனே போற்றி
ஓம் வேகச் சுழலோனே போற்றி
ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் வியாழனே போற்றி
சுக்கிரன் போற்றி
ஓம் அசுர குருவே போற்றி
ஓம் அரியசக்தி வாய்த்தவனே போற்றி
ஓம் அழகனே போற்றி
ஓம் அரங்கத்தருள்பவனே போற்றி
ஓம் அந்தணனே போற்றி
ஓம் அத்தி சமித்தனே போற்றி
ஓம் அவுணரமைச்சனே போற்றி
ஓம் அந்தகனுக்குக்குதவியனே போற்றி
ஓம் ஆறாம் கிரகனே போற்றி
ஓம் ஆச்சாரியனே போற்றி
ஓம் இருகரனே போற்றி
ஓம் இந்திரியமானவனே போற்றி
ஓம் இல்லறக் காவலே போற்றி
ஓம் இரு பிறையுளானே போற்றி
ஓம் ஈர்க்கும் மீனே போற்றி
ஓம் உல்லாசனே போற்றி
ஓம் உற்றோர்க் காவலே போற்றி
ஓம் ஒரு கண்ணனே போற்றி
ஓம் ஒளி மிக்கவனே போற்றி
ஓம் கசன் குருவே போற்றி
ஓம் கசனால் மீண்டவனே போற்றி
ஓம் கலை நாயகனே போற்றி
ஓம் கலை வளர்ப்போனே போற்றி
ஓம் கருடவாகனனே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் களத்ர காரகனே போற்றி
ஓம் கயமுகன் தந்தையே போற்றி
ஓம் காவியனே போற்றி
ஓம் கனகம் ஈவோனே போற்றி
ஓம் கீழ் திசையனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிரகாதிபனே போற்றி
ஓம் சடை முடியனே போற்றி
ஓம் சயந்தி நாதனே போற்றி
ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி
ஓம் சந்திரன் ஆகானே போற்றி
ஓம் சத்ரு நாசகனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவனுதரத்திருந்தவனே போற்றி
ஓம் சுக்கிரனே போற்றி
ஓம் சுக்கிரன் ஆனவனே போற்றி
ஓம் சுக்கிர நீதிஅருளியவனே போற்றி
ஓம் சுரர்ப் பகைவனே போற்றி
ஓம் சுக்கிராச்சாரியனே போற்றி
ஓம் செழிப்பிப்பவனே போற்றி
ஓம் தவயோகனே போற்றி
ஓம் ததீசியை உயிர்ப்பித்தவனே போற்றி
ஓம் திங்கள் பகையே போற்றி
ஓம் திருவெள்ளியங்குடித் தேவனே போற்றி
ஓம் துலாராசி அதிபதியே போற்றி
ஓம் திருநாவலூரில் அருள்பவனே போற்றி
ஓம் தேவயானி தந்தையே போற்றி
ஓம் தூமகேதுக்கருளியவனே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நாடளிப்பவனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நீண்ட தசாகாலனே போற்றி
ஓம் நுண்கலைத் தேவனே போற்றி
ஓம் நெடியவனே போற்றி
ஓம் பரணி நாதனே போற்றி
ஓம் பல்பிறவி எடுத்தவனே போற்றி
ஓம் பத்துபரித் தேரனே போற்றி
ஓம் பஞ்சகோணப் பீடனே போற்றி
ஓம் பிரகாசிப்பவனே போற்றி
ஓம் பிருகு குமாரனே போற்றி
ஓம் பின்னும் சுழல்வோனே போற்றி
ஓம் பிள்ளை நான்குடையவனே போற்றி
ஓம் புதன் மித்ரனே போற்றி
ஓம் புகழளிப்பவனே போற்றி
ஓம் புதனருகிலிருப்பவனே போற்றி
ஓம் பூமியன்ன கோளே போற்றி
ஓம் பூரத்ததிபதியே போற்றி
ஓம் பூராட நாதனே போற்றி
ஓம் பெண்பால் கிரகமே போற்றி
ஓம் பேராற்றலானே போற்றி
ஓம் மழைக் கோளே போற்றி
ஓம் மலடு நீக்கியே போற்றி
ஓம் மரவுரி ஆடையனே போற்றி
ஓம் மாமேதையே போற்றி
ஓம் மாண்டு மீண்டவனே போற்றி
ஓம் மாய்ந்தவரை மீட்பவனே போற்றி
ஓம் மாபலியின் குருவே போற்றி
ஓம் மாலோடிணைந்தருள்பவனே போற்றி
ஓம் மீனத்திலுச்சனே போற்றி
ஓம் மிருத்யு நாசகனே போற்றி
ஓம் மோகனனே போற்றி
ஓம் மொச்சைப் பிரியனே போற்றி
ஓம் யயதி மாமனே போற்றி
ஓம் யமபயமழிப்பவனே போற்றி
ஓம் ரவிப் பகைவனே போற்றி
ஓம் ரிஷபராசி அதிபதியே போற்றி
ஓம் வண்டானவனே போற்றி
ஓம் வரத ஹஸ்தனே போற்றி
ஓம் வள்ளி அதிதேவதையனே போற்றி
ஓம் வாமனரை உணர்ந்தவனே போற்றி
ஓம் விடிவெள்ளியே போற்றி
ஓம் விபுதை ப் பிரியனே போற்றி
ஓம் வெண்ணிறனே போற்றி
ஓம் வெள்ளி உலோகனே போற்றி
ஓம் வெண் குடையனே போற்றி
ஓம் வெள்ளாடையனே போற்றி
ஓம் வெண் கொடியனே போற்றி
ஓம் வெள்ளித் தேரனே போற்றி
ஓம் வெண்டாமரைப் பிரியனே போற்றி
ஓம் வைரம் விரும்பியே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் வெள்ளி நாயகனே போற்றி
சனி பகவான் போற்றி
ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி
ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
ஓம் உபகிரகமுளானே போற்றி
ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கரு மெய்யனே போற்றி
ஓம் கலி புருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலானே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி
ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி
ஓம் சுடரோன் சேயே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி
ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி
ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்மபீடனே போற்றி
ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
ஓம் பிரபலனே போற்றி
ஓம் பீடிப்பவனே போற்றி
ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன்மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி
ஓம் மதிப்பகையே போற்றி
ஓம் மநு சோதரனே போற்றி
ஓம் முடவனே போற்றி
ஓம் முதுமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி
ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி
ராகு போற்றி
ஓம் அமரமுகனே போற்றி
ஓம் அரவ மேனியனே போற்றி
ஓம் அமுதுண்டவனே போற்றி
ஓம் அதிசய வடிவனே போற்றி
ஓம் அசுர குலனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் அதமனே போற்றி
ஓம் அமுதகடிகன் தந்தையே போற்றி
ஓம் அஞ்சுதகு தோற்றனே போற்றி
ஓம் அண்டினோர்க்கெளியனே போற்றி
ஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றி
ஓம் அரசாள அருள்பவனே போற்றி
ஓம் அறுகு சமித்தனே போற்றி
ஓம் ஆழியாலறுபட்டவனே போற்றி
ஓம் ஆடு வாகனனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இரண்டானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உடலிழந்தவனே போற்றி
ஓம் உளுந்து விரும்பியே போற்றி
ஓம் ஊறு களைபவனே போற்றி
ஓம் எட்டாம் கிரகனே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏடேந்தியவனே போற்றி
ஓம் ஏவல் குலைப்பவனே போற்றி
ஓம் கரு மேனியனே போற்றி
ஓம் கருநாக ராஜனே போற்றி
ஓம் கருக்கல் உலோகனே போற்றி
ஓம் கரியபாம் புடலோனே போற்றி
ஓம் கருங்குடையனே போற்றி
ஓம் கரிய உடையனே போற்றி
ஓம் கட்காயுதனே போற்றி
ஓம் கத்தி ஏந்தியவனே போற்றி
ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருநிறக் கொடியோனே போற்றி
ஓம் கருணைவிழியனே போற்றி
ஓம் கருமலர்ப்பிரியனே போற்றி
ஓம் கால ரூபனே போற்றி
ஓம் கிரஹ ராஜனே போற்றி
ஓம் கிரஹ பீடாஹரனே போற்றி
ஓம் கிரகண காரணனே போற்றி
ஓம் கேதுவின் பாதியே போற்றி
ஓம் கேதுக்கருகிருப்பவனே போற்றி
ஓம் கேடகாயுதனே போற்றி
ஓம் கோர ரூபனே போற்றி
ஓம் கோமேதகப் பிரியனே போற்றி
ஓம் சதய நாதனே போற்றி
ஓம் சனிக்கு உற்றவனே போற்றி
ஓம் சந்திரன் பகைவனே போற்றி
ஓம் சார்ந்து பலனளிப்பவனே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிம்ஹிகை புதல்வனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சிம்மாசனத்திருப்பவனே போற்றி
ஓம் சுக்ரன் நண்பனே போற்றி
ஓம் சூரியனுக்காகானே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூரியனை மறைப்பவனே போற்றி
ஓம் செங்கண்ணனே போற்றி
ஓம் செவ்வாய் விரதமேற்பவனே போற்றி
ஓம் தனி வீடிலானே போற்றி
ஓம் தவத்தாற் சிறந்தவனே போற்றி
ஓம் தமோகுணனே போற்றி
ஓம் தானவ மந்திரியே போற்றி
ஓம் திருவாதிரை நாதனே போற்றி
ஓம் தீவினையழிப்பவனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தென்மேற்கிருப்பவனே போற்றி
ஓம் தேரேறி வருபவனே போற்றி
ஓம் தேவனாய் நடித்தவனே போற்றி
ஓம் நாகம் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் நாற்கரனே போற்றி
ஓம் நிழற்கோளே போற்றி
ஓம் நெடிய உருவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பக்தருக்கருள்பவனே போற்றி
ஓம் பலமளிப்பவனே போற்றி
ஓம் பசு அதிதேவதையனே போற்றி
ஓம் பரனருள் பெற்றவனே போற்றி
ஓம் புராணனே போற்றி
ஓம் புளிப்பு சுவையனே போற்றி
ஓம் பெண்பால் கிரகமே போற்றி
ஓம் பைடீனஸ கோத்ரனே போற்றி
ஓம் மந்தாரைப் பிரியனே போற்றி
ஓம் மாலருள் வாய்த்தவனே போற்றி
ஓம் மஹாபாலனே போற்றி
ஓம் மாறிச் சுற்றுபவனே போற்றி
ஓம் முடிதரித்தவனே போற்றி
ஓம் முருகனை மகிழ்விப்பவனே போற்றி
ஓம் முறப் பீடனே போற்றி
ஓம் மூவாறாண்டாள்பவனே போற்றி
ஓம் மேருஇடம் வருபவனே போற்றி
ஓம் மோகினியாலடிப்பவனே போற்றி
ஓம் ரவிமதியை பீடிப்பவனே போற்றி
ஓம் ராகு காலனே போற்றி
ஓம் ருத்திரப் பிரியனே போற்றி
ஓம் வல்லவனே போற்றி
ஓம் வடுவுடை தேகனே போற்றி
ஓம் வரத ஹஸ்தனே போற்றி
ஓம் வரமளிப்பவனே போற்றி
ஓம் வாயுத்தலத் தருள்பவனே போற்றி
ஓம் விப்பிரசித்தி மகனே போற்றி
ஓம் விடபயம் தீர்ப்பவளே போற்றி
ஓம் வெள்ளித் தேரனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் ராகு தேவனே போற்றி
கேது போற்றி
ஓம் அரவத்தலையனே போற்றி
ஓம் அமர உடலோனே போற்றி
ஓம் அசுர குலனே போற்றி
ஓம் அமரன் ஆனவனே போற்றி
ஓம் அசுர நாயகனே போற்றி
ஓம் அமுது நாடியவனே போற்றி
ஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் அரவத் தலைவனே போற்றி
ஓம் அர்த்த சரீரனே போற்றி
ஓம் அபயகரனே போற்றி
ஓம் அசுவதி அதிபதியே போற்றி
ஓம் அந்தர்வேதி நாடனே போற்றி
ஓம் அன்பர்க் காவலனே போற்றி
ஓம் அறுபரித் தேரனே போற்றி
ஓம் ஆற்றல் மிக்கோனே போற்றி
ஓம் இரு கூறானவனே போற்றி
ஓம் இடமாய் வருபவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
ஓம் எண் பிள்ளையுடையவனே போற்றி
ஓம் ஏழ்மையகற்றுபவனே போற்றி
ஓம் ஏழாண்டாள்பவனே போற்றி
ஓம் ஒன்பதாம் கிரகமே போற்றி
ஓம் கடையனே போற்றி
ஓம் கடைசி கிரகமே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கார் வண்ணனே போற்றி
ஓம் காளத்தியில் அருள்பவனே போற்றி
ஓம் காலனானவனே போற்றி
ஓம் கிரகண காரணனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் குஜனை ஒத்து அருள்பவனே போற்றி
ஓம் கொடி ஆசனனே போற்றி
ஓம் கொள் விரும்பியே போற்றி
ஓம் கோபியே போற்றி
ஓம் கோள் ஆனவனே போற்றி
ஓம் சனித் தோழனே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சாயா கிரகமே போற்றி
ஓம் சிம்ஹிகை சேயே போற்றி
ஓம் சிரமிழந்தவனே போற்றி
ஓம் சிங்கவாகனனே போற்றி
ஓம் சித்ரகுப்தனதி தேவதையனே போற்றி
ஓம் செதில் முகனே போற்றி
ஓம் செங்கண்ணனே போற்றி
ஓம் செவ்வண கிரகமே போற்றி
ஓம் செவ்வல்லிப் பிரியனே போற்றி
ஓம் சுக்ரன் தோழனே போற்றி
ஓம் சூரியப் பகையே போற்றி
ஓம் ஞானகாரகனே போற்றி
ஓம் ஞானியர்க் கணியே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தத்துவஞானியே போற்றி
ஓம் தனி கிருஹமிலானே போற்றி
ஓம் துருக்கல் உலோகனே போற்றி
ஓம் துறவாசையளிப்பவனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தோஷ நிவாகரனே போற்றி
ஓம் நரம்புக்கதிபதியே போற்றி
ஓம் நற்றேரனே போற்றி
ஓம் நெடியவனே போற்றி
ஓம் நிறைதனமளிப்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் பல்வண்ண ஆடையனே போற்றி
ஓம் பன்னிறக் கொடியனே போற்றி
ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
ஓம் பற்றறச் செய்பவனே போற்றி
ஓம் பல்வணக் குடையனே போற்றி
ஓம் பன்மலர்ப் பிரியனே போற்றி
ஓம் பிரமன் அதிதேவதையனே போற்றி
ஓம் பீடையளிப்பவனே போற்றி
ஓம் புளிப்புச் சுவையனே போற்றி
ஓம் பூமியில் வளர்ந்தவனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெருமையனே போற்றி
ஓம் மதிக்கெதிரியே போற்றி
ஓம் மகத்துக் கதிபதியே போற்றி
ஓம் மலையத்து விழுந்தவனே போற்றி
ஓம் மஹாகேதுவே போற்றி
ஓம் மானுடல் பீடனே போற்றி
ஓம் மாலருள் பெற்றவனே போற்றி
ஓம் மினியிடம் வளர்ந்தவனே போற்றி
ஓம் மோகினி தடிந்தவனே போற்றி
ஓம் முருகன் சேவகனே போற்றி
ஓம் முக்தியருள்பவனே போற்றி
ஓம் முடியணியனே போற்றி
ஓம் முக்கோணக்கோலனே போற்றி
ஓம் மும்மல நாசகனே போற்றி
ஓம் மூலத்ததிபதியே போற்றி
ஓம் மெய்ஞானியே போற்றி
ஓம் மெய்நாட்டமளிப்பவனே போற்றி
ஓம் ராகு சமீபனே போற்றி
ஓம் ராகுவின் பாதியே போற்றி
ஓம் வடமேற்கிருப்பவனே போற்றி
ஓம் வண்ணசந்தனப் பிரியனே போற்றி
ஓம் வந்தனைக்குரியவனே போற்றி
ஓம் வாயு திசையனே போற்றி
ஓம் விஷ்ணு பக்தனே போற்றி
ஓம் விப்பிரசித்தி மகனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் வினோதனே போற்றி
ஓம் வியாதி தீர்ப்பவனே போற்றி
ஓம் வைடூர்யப் பிரியனே போற்றி
ஓம் தும் பீஜ மந்திரனே போற்றி
ஓம் கேது பகவானே போற்றி
நவக்கிரக வணக்கம்
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சூரிய பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சூரிய பகவான்
சீரருள் மிகச் சுரந்து செகத்துயிர் அனைத்துங் காக்கப்
பேரருள் பிதாவு மாகிப் பெருந்துன்ப இருளை யோட்டிக்
காரருள் சுகத்தை நல்கக் கதிர்களா யிரம்ப ரப்பும்
பாரருள் பிரிதிப் புத்தேள் பதமலர் சென்னி வைப்பாம்.
திங்கள் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சந்திர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சந்திர பகவான்
செழித்திடச் செல்வம் நல்கிச் செகத்துள் உயிர்கட் கெல்லாம்
வழித்திடும் பிதாவு மாகி வல்லிருள் தன்ன யோட்டித்
தழைத்திட அமுதமாகத் தக்கதோர் கதிர் பரப்பிப்
பொழிந்திடுஞ் சோமநாதன் பொற்பதம் தலைக்கொள்வோமே.
செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அங்காரக பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
அங்காரக பகவான்
வெற்றியும் வீரம் ஆண்மை விதரணம் பராக்கிர மங்கள
சுற்றமாம் தீரம் நல்கிச் சோதரன் தானும் ஆகிப்
பற்றிய பூமி யின்பம் பரன்பிரு தான்னியம் ஓங்கி
எற்றிசைப் புகழும் சேயின் இருபதம் தலைக்கொள்வோமே.
புதன் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் புத பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
புத பகவான்
இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும் புத்தி யுக்தி
வணக்கமாம் கல்வி மேன்மை வருந்தனம் மகிழ்ச்சி புண்யம்
துணக்கமாம் பந்துவாகித் துலங்கிடச் சுகங்கள் நல்கும்
கணக்கனாம் எந்தை பாதம் கழலடி சென்னி வைப்பாம்.
வியாழக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
வியாழ பகவான்
பெருநிறை செல்வம் மேன்னை பெற்றிடுஞ் சுகங்கல்யாணம்
வருநிறை மரபு நீடி வாய்க்குஞ் சந்ததி தழைக்கத்
தருநிறை ஆடை ரத்னந்தான் பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள் குரைகழல்! தலைக்கொள்வோமே.
வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சுக்ர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சுக்கிர பகவான்
திரைகடல் சூழம் பூமி சேர்த்திடும் உயிர்கட் கெல்லாம்
நிறைதரும் யோக போகம் நீடிய மனைவி இன்பம்
தரைபுகழ் வாகனங்கள் தக்கதோர் சுகத்தை நல்கும்
மறைமொழி புகரின் பொற்றாள் மலரடி தலைக்கொள்வோமே.
சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சனி பகவான்
கோரிய உலகத்தின்கண் குலவிய உயிர்கட்கெல்லாம்
மீறிடச் சுகமளித்து மெய்த்தளர் பிணியை நீக்கிச்
சீறிய துன்பந்தீர்ந்து சிறக்கத் தீர்க்காயுள் நல்கும்
காரியின் கமல பாதக் கடிமலர் தலைக்கொள்வோமே.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ராகு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
ராகு பகவான்
பணியென உருவம் ஆகிப் பட்சமாய் அமுதம் உண்டு
தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோக போகம்
துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்
மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
கேது பகவான்
மாதுமை பாகன் சொற்ற வரத்தினால் அமுத பானக்
கேதுவும் உடையனாகி எவ்வுயிர்களுந் தழைக்கக்
கோதிலா ஞானம் மோட்சம் குருபக்தி அருளும் நல்கும்
கேதுவாம் பகவன் பாதம் கிளர்முடி மிசைக்கொள்வோமே.
நவக்கிரகங்களை வழிபட
சூரியன்
காசினி இருளை நீக்கும் கதிரொளி யாகி எங்கும்
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசியே ழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட் சிப்பாய் செங்கதி ரவனே போற்றி.
சந்திரன்
அலைகடல் அமுதங் தன்னோ டன்றுவந் துதித்து மிக்க
கலைவளர் திங்க ளாகிக் கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பாகன் செஞ்சடைப் பிறையாய் மேரு
மலைவல மாக வந்த மதியமே போற்றி போற்றி.
செவ்வாய்
வசனம்நல் தைரி யந்தான் மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவர வர்க்கு நீள்நிலம் தன்னில் நல்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி.
புதன்
மதனநூல் முதலா உள்ள மறைகளும் கல்வி ஞானம்
விதமுடன் அவர வர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பவிசு பாக்கி யங்கள் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.
பிரகஸ்பதி
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
சுக்கிரன்
மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.
சனி
முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமை அல்லால்வே றுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.
ராகு
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈய
ஏகிநீ நடுவி ருக்க எழில்சிரம் அற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப் பாயே.
கேது
மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈயும்
போது நீ நடுவிருக்கப் புகழ்சிரம் அற்றுப் பின்னர்
ஓதுறும் அரச நாகத் துயர்சிரம் ஐந்து பெற்ற
கேதுவே போற்றி போற்றி கீர்த்தியாய் ரட்சிப் பாயே. |
|
No comments:
Post a Comment