என் குருநாதர் சாய் பாபா உபாசகர்( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது
பைரவரை வழிபடும் முறை :
நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் / பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு
நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் / பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து ,துர்மரணம், ஜாதக தோஷங்கள் , மாந்திரீக பாதிப்புகள் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல் கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை
இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு
போட கூடாது
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் . அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஒரே சக்திதான் .
இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் .
தகவல் : என் குருநாதர் சாய் பாபா உபாசகர்
( முக்காலமும் அறிந்தவர் )
என் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com
ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்
என் குருநாதர் சாய்பாபா உபாசகர் சொன்ன பரிகார தகவல் இது
(என் வாழ்கையில் இதுவரை எல்லாமே என் குருநாதர் வாக்கு படியே நடந்து கொண்டிருக்கிறது )
எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள்
எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறுபவர்கள் ,
பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்ய
முடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் , வசதி இல்லாதவர்கள்
ஒரே மாத்திரையில் எல்லா வியாதியும் குணமடைய வேண்டும் என
எதிர்பார்ப்போமே , அதே போல எந்த பிரச்னையாக இருந்தாலும்
ஒரே வழிபாட்டில் தீர்வை எதிர்பார்ப்பவர்கள்
இந்த பைரவ வழிபாட்டினை செய்யலாம்
1) வழிபாட்டை ஆரம்பிக்கும் முன் விநாயக பெருமானை வணங்கி ( எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க ) ஒரு சிதறு தேங்காய் உடைத்து விளக்கு ஏற்றி பிறகு பைரவ வழிபாட்டை ஆரம்பிக்கலாம்
தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி வணங்கி விட்டு பிறகு உள்ளே செல்லவும்
விநாயகர் இல்லையென்றால் ஆன்மிகமே இல்லை , எந்த வழிபாடும் முழுமையடையாது ( எவ்வளவு சிறப்பாக நாம் செய்தாலும் )
2) தினமும் பைரவருக்கு ஒரு (சாதாரண) விளக்கு போட வேண்டும் அவ்வளவு தான்
3) தினமும் முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் 7 சாதாரண விளக்கு போட வேண்டும் , அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் உத்தமம் . மத்த நாளிலும் ஏற்றலாம்
4) வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அவர்கள் சார்பாக ( அவர்களுக்காக ) அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் இந்த வழிபாட்டினை செய்யலாம்
விஷயம் இவ்வளவுதான் தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு சின்ன விளக்கு ஏற்றி விட்டு பின் உள்ளே இருக்கும் பைரவருக்கு ஒரு விளக்கு ஏற்றனும்
பைரவரே கால சக்கரத்திற்கு அதிபதி , அனைத்து கோள்களையும் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் ( இயக்கத்திற்குள் ) வைத்திருப்பவர் ,
ஞாயிறு - சூரியன் கோளையும் ,திங்கள் - சந்திரன் கோளையும் , செவ்வாய் - செவ்வாய் கோளையும் , புதன் - புதன் கோளையும் , வியாழன் - குரு கோளையும் , வெள்ளி - சுக்கிரன் கோளையும் , சனி - சனி கோளையும் கிழமைகளை ஆதிக்கம் செய்கின்றன
எனவே 7 நாட்களும் ஒவ்வொரு கோளுக்கு உகந்த நாட்கள்
( ராகு , கேது கோள்கள் கிடையாது , அதனால் தினமும் ராகு காலம் , எம கண்டம் என அவற்றிக்கென நேரம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது )
அனைத்து கிரகங்களையும் வணங்குவதற்கு பதில் அவற்றை இயக்கம் பைரவரை வணக்குவதன் மூலம் அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்கும் .
ஆகையால் தினமும் விளக்கு போட முடியாதவர்கள் ( தவிர்க்க முடியாத காரணத்தினால் ), வாரத்திற்கு ( 7 நாட்களுக்குள் ஒருமுறை ) ஒரு நாள் 7 விளக்கு போட்டு வர வேண்டும்
விளக்கு போட ஆரம்பிச்சதுல இருந்து 2 வது தேய்பிறை
அஷ்டமிக்குள்ள நிறைய நன்மை ஏற்பட்டிருக்கும் அதுவும்
வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் , நம்மை சார்ந்த எல்லாருக்கும்
தெரியும் .
நாம் வேண்டுவது , பட்டியலிடுவது எதுவுமே நடக்காது , நமக்கு எதெல்லாம் அத்தியாவசிய தேவையோ அதுதான் ஒவ்வொன்றாக கிடைத்து கிட்டே இருக்கும் ( இத்தனை நாள் எல்லாம் கணக்கு கிடையாது , ஆனா கண்டிப்பா கிடைக்கும்/ நடக்கும் )
நாம செய்து கொண்டிருக்கிற தவறை நமக்கு உணர்த்தி , நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைப்பதற்க்காக ,ஆரம்பத்துல கொஞ்ச நாள் சோதனை ங்கற பேர் ல ரொம்ப படுத்தி எடுத்துருவார். என்ன நடந்தாலும் பொறுமையாக விடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்ட செய்வதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது.
கெட்ட விஷயங்கள், கஷ்டங்கள் - துன்பங்கள் எல்லாமே நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும் , நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக கண்டிப்பா நடக்க ஆரம்பிக்கும் . நாம் எந்த நிலையில் இப்போ இருந்தாலும் , முன்னேற்றத்த நோக்கி போக ஆரம்பிப்போம். அதற்க்கு சில சிக்கல்களும் , அதை தீர்க்கும் வழி முறைகளையும் அவரே கொடுப்பார் , இதுதான் இந்த வழிபாட்டோட முதல் அறிகுறி . இந்த மாற்றம் வெளிப்படையாகவே நமக்கு தெரியும் .
இந்த வழிபாட்டோட பலனுக்கான அறிகுறி
உங்களுக்குள்ளான ,உங்களுக்கே தெரியாத உங்களுக்கு அத்தியாவசிய தேவையான ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) உங்களுக்குள்ள இருந்து வெளிபடும்
அந்த ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) தான் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் உங்களுக்கு கொடுக்கும் .
அதற்காக உங்களுக்கு அளவுக்கதிகமான விரக்தியும் , தேவைபட்டால் பெரிய அவமானத்தையோ அல்லது சிக்கலையோ கொடுப்பார் . அதை தீர்க்கும் வழிமுறையையும் அவரே வெளிகாட்டுவார் கண்டிப்பா உயிருக்கு எந்த பிரச்னையும் வராது . முன்பை விட ரொம்ப தெளிவாகவும் , பக்குவ பட்ட மன நிலையையும் அடைந்து இருப்பீர்கள் .
உதாரணத்துக்கு சொல்லனும்னா நமக்கு வேண்டியவர்கள் நமக்கு நீச்சல் கத்து கொடுக்கும் போது நம்மை கிணத்துல தள்ளி விட்டு கூடவே இருந்து நீச்சல் கத்து கொடுப்பாங்க, நம்மள உள்ள முழுக விடாமலும் பார்த்துக் கொள்வார்களே அது போலதான் இருக்கும் பைரவர் ஸ்டைல் .
உங்களால தப்பி தவறி கூட தவறான வழியிலோ , குறுக்கு வழியிலோ போக முடியாது .
இது தான் வாழ்க்கை , இப்படிதான் வாழணும் ன்னு தீர்க்கமாக ஒரு நல்ல முடிவு எடுக்க வைப்பார் , ஆறு மாசத்துக்கு ஒரு முறை அல்லது வருசத்துக்கு ஒரு முறை வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி கூட்டிட்டு போவார்
சுருக்கமாக சொல்லனும்னா நம்ம வாழ்க்கையை பைரவர் கையில் எடுத்து கொள்வார் , அவரே நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் , பைரவரே குருவாக இருந்து வழி நடத்த ஆரம்பிப்பார் . சூட்சம வடிவில் எப்போதும் கூடவே இருப்பார் , குருவாகவும் ( சூட்சம வடிவில்) இருப்பார் , இதை உணர கொஞ்ச காலம் ஆகும் , நிச்சயமாக இந்த வழிபாட்டை பின்பற்றும் அனைவராலும் இதை உணர முடியும்.
நம்முடைய கர்ம வினை நம்மை பைரவரை வழிபட (நிறைவான வாழ்க்கை வாழ ) அனுமதிக்கவே அனுமதிக்காது , நிறைய தடைகளை ஏற்படுத்தும் , சோம்பேறிதனத்த உண்டு பண்ணும் , நாமே எதாவது காரணம் சொல்லிக்கிட்டு கொஞ்சநாளில் அப்படியே விட்டு விடுவோம் . இந்த மாதிரி தடைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அலட்சியபடுத்தி விட்டு நாம்தான் விடா முயற்சியாக தொடர்ந்து வழிபாட்டை செய்து வர வேண்டும் . ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் , அப்பறம் சரியாகிவிடும் .
( இது நிறைய பேரோட அனுபவம் ).
ஆரம்பத்துல என் குருநாதர் இந்த தகவல சொல்லும்போது இதோட வலிமை தெரியாமல் ரொம்ப சர்வ சாதரணமாக நினைத்தேன் ,செய்துகொண்டே இருக்கும் போதுதான் வலிமையை உணர முடிகிறது .
ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் வரை விடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வாருங்கள் . அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்து வாருங்கள் .
தினமும் பசிக்கு சாப்பிடுவோமே அதை போல ஒரு அத்தியாவசிய தேவையாக இந்த வழிபாட்டை வாழ்க்கைக்கு மாற்றி கொள்ளுங்கள் வாழ்க்கைல ஒரு பிடிப்பு ஏற்படும் , வாழ்கையை உணர ஆரம்பிப்போம் நிறைய நல்ல ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கும் இதற்க்கு கொஞ்ச காலம் தேவைபடும்
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் , எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் விளக்கு போடலாம் .
காசியில் இருக்கும் பைரவரில் இருந்து நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சின்ன கோவில்களில் இருக்கிற பைரவர் வரைக்கும் எல்லா பைரவருக்கும் ஒரே சக்திதான்
நிபந்தனை :
ஆரம்பிக்கற நாள் வளர்பிறை நவமி , தேய்பிறை நவமி , பிரதமை திதி ஆக இருக்க கூடாது
அன்றைய தினம் உங்களுக்கோ , உங்க குடும்ப உருப்பினர்கள் நட்சத்திரத்திறத்திற்கு சந்திராஷ்டமாக இருக்க கூடாது
மிகவும் பொருத்தமான நாள் தேய்பிறை அஷ்டமி
ரொம்ப முக்கியமான விசயமே இதுதான் ,வழிபாட்டுல அலட்சியம் கூடாது , ஏன்னா அலட்சியதிற்கு நான் தண்டனை அனுபவிச்சி இருக்கேன் , ரொம்பவே கடுமையாக இருக்கும் .
திறந்து இருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போடணும் .விளக்கு போடும் பொது பைரவர் சிலை மூடி இருக்க கூடாது
(எந்த கோவிலும் , அந்த கடவுள் சிலை மூடியிருக்கும் போதோ / திரையிட்டு மூடி இருக்கும் போதோ / எதாவது தடுப்பு வைத்து மறைத்திருந்தாலோ / கோவில் கதவு சாத்தி இருந்தாலோ - வழிபடுவும் கூடாது , விளக்கு போடவும் கூடாது ,அப்படி செய்வதால் எந்தவித பலனும் இருக்காது -ன்னு குருநாதர் சொல்லியிருக்கார் )
அசைவமும் சாப்பிட்டுக்கிட்டு வழிபாட்டையும் தொடர்வது , தண்ணீர் தொட்டியில் ஒரு பக்கம் தண்ணீரை சேமித்துகிட்டும் , மறுபக்கம் தொட்டியின் அடைப்பை திறந்து வைத்திருப்பதை போன்றது இந்த அசைவம் சாப்பிடும் பழக்கம் , கடைசி வரை தண்ணீரை எப்படி சேமிக்க முடியாதோ அது போலதான் இதுவும் ( இது எல்லா வழிபாட்டுக்கும் பொருந்தும் )
கண்டிப்பா அசைவம் கூடாது . அசைவத்தோட தொடர்பு இருக்கும்வரை எந்த வழிபாட்டுலயும் பலன் இருக்காது , பைரவரே நிறுத்த வைப்பார்
பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு),சனிக்கு கிரக அந்தஸ்து கொடுத்தவர்
தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும்
- ஓம் சாய் ராம்
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய 3 வருட பைரவர் வழிபாட்டோட அனுபவம்
3 வருஷம் கழித்து மீண்டும் இந்த பதிவை மாற்றம் செய்து எழுதிகிறேன்
நான் உணர்ந்த பைரவ வழிபாட்டோட ரகசியம்
டவுன் ல ஒரு சிவன் கோவில் இருக்கு , அங்க
பைரவர் இருக்கார் , வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மன் கோவில் இருக்கு
அங்கயும் பைரவருக்கு ஒரு தனி சன்னதி ( ஒரு சின்ன அறை )
3 வருஷமா டவுன் ல இருக்கற பைரவருக்கு விளக்கு ஏத்திகிட்டு வர்றேன்
வருசத்துக்கு ஒரு முறை அல்லது ரெண்டு தடவை ன்னு ஒரு மாசத்துக்கு தொடர்ச்சியா வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பைரவருக்கு சன்னதிக்கு உள்ளே விளக்கு ஏத்துவேன் , அப்புறம் எதாவது தடை வரும் மறுபடியும் 7 / 8 மாசத்துக்கு அந்த கோவிலுக்கு போக மாட்டேன் மறுபடியும் திடீர்ன்னு தோணும் அந்த கோவிலுக்கு போய் ஒரு மாசத்துக்கு மட்டும் விளக்கு ஏத்துவேன் அப்புறம் எதாவது தடை வரும் அப்படியே விட்ருவேன்
இப்படியே தொடர்ந்தப்போ தான் ஒரு விசயத்தை உணர ஆரம்பிச்சேன்
நான் வீட்டுக்கு பக்கத்துக்கு ல தனி சன்னதி ல இருக்கற பைரவருக்கு உள்ளே விளக்கு ஏத்துகிற காலத்துல மட்டும்தான் வாழ்க்கைல மிக பெரிய முனேற்றமும் , நல்ல ( positive ) எண்னங்களும் ,சிந்தனைகளும், செயல்களிலும் பெரிய அளவில நல்ல மாற்றம் ஏற்பட்டது , இதெல்லாம் ரொம்ப ரொம்ப குறுகிய காலத்துல ஏற்பட்டது
டவுன் ல இருக்கற கோவிலுக்கு 3 வருசமா தினமும் காலைலயும் , இரவு நடை சாத்திரதுக்கு முன்னாடியும் போய் விளக்கு ஏத்துவேன் ,இந்த 3 வருசத்துல பெருசா எந்த தடையும் வந்தது இல்லை
ஆனா வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பைரவர் சன்னதி க்கு தொடர்ந்து ஒரு மாசத்துக்கு மேல போக முடியலை எதாவது தடை வந்துகிட்டே இருக்கு
ரெண்டு பைரவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
டவுன் ல இருக்கற பைரவர் சிலை சுவற்றிலே அப்படியே ஒட்டி வச்ச மாதிரி வெட்ட வெளியில் இருப்பார்
வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பைரவர் தனி சன்னதியில் (அறையில்) இருப்பார் இங்க நான் உள்ளே ஏத்தற விளக்கு வெளிச்சமும் அதன் பிரகாசமும் இந்த பைரவரின் அறைக்குள் மட்டுமே இருக்கும்
இதுதான் ரகசியமாக இருக்கும் ன்னு எனக்கு மனசுக்கு பட்டது
அதனால்தான் இந்த விசயத்தை எழுதிகிறேன் 3 வருஷமா விளக்கு போட்டதுல கிடைச்ச மிக பெரிய அனுபவம் அல்லது தெய்வ ரகசியம் இந்த விஷயம்
இந்த ரகசியத்தை முழுமையா அனுபவிச்சதால இந்த பதிவை 3 வருஷம் கழிச்சு திரும்பவும் எழுதுகிறேன்
இப்படி ஒரு கோவில் எல்லா ஊர்லயும் கண்டிப்பா இருக்கும் , குறைந்த பட்சம் ஒரு 3 கிலோமீட்டர் தூரத்துக்குள்ளவே இப்படி ஒரு கோவில் இருக்கும் .
ஒரு முக்கியமான விஷயம் உள்ளே விளக்கு ஏற்றும் போது கண்டிப்பாக எண்ணை படும் எவ்வளவுதான் கவனாமாக செய்தாலும் எண்ணை ஆகும் , அதை சுத்தம் செய்யற வேலை அந்த கோவில் அர்ச்சகர் / பூசாரியின் வேலை
நாம எண்ணையை சிந்தி அதை அவங்க சுத்தம் பண்றது அவங்களுக்கு கண்டிப்பா சலிப்பாகதான் இருக்கும் , அதனால மாசம் ஒரு முறை 50 ரூபா சுத்தம் செய்ய கொடுக்கலாம் ங்கறது என்னோடுடைய கருத்து .
இந்த காரணத்தினால் எனக்கு ஒரு 1 மாசம் விளக்கு ஏத்த முடியாம போய்டுச்சு
இந்த முறையில் விளக்கு ஏற்றி பாருங்கள் கண்டிப்பாக உங்களால் பைரவரை நேரில் பார்க்க முடியாத குறை ஒன்றை தவிர அவரை முழுமையாக உங்களால் உணர முடியும் கொஞ்ச நாளிலே . அப்படி நீங்கள் உணர்ந்த பிறகு உங்கள நண்பர்களுக்கு. தெரிந்தவர்களுக்கு / யாரெல்லாம் மீள முடியாத துன்பத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த ரகசியத்தை சொல்லி அவர்கள் வாழ்விலும் விளக்கு ஏற்ற வேண்டுகிறேன்
விஷயம் இவ்வளவுதான் தினமும் வெளியில் இருக்கும் விநாயகருக்கு ஒரு சின்ன விளக்கு ஏற்றி விட்டு பின் உள்ளே இருக்கும் பைரவருக்கு ஒரு விளக்கு ஏற்றனும்.
முயற்சி செய்து பாருங்கள் பைரவரின் அற்புதத்தை உணரலாம் இது என் அனுபவம்
__________________________________________________
1) இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan
http://copiedpost.blogspot.ca/2012/12/live-dharshan.html
2) இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan--- Part 2
http://copiedpost.blogspot.in/2013/03/live-dharshan-part-2.html
பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்
http://copiedpost.blogspot.in/2014/10/blog-post.html
குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com
ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்
குருநாதர் திருவடி சரணம்
ஓம் சாய் ராம்
http://copiedpost.blogspot.in/2012/12/live-dharshan.html
ennudaiya rasi thanusu naan enna seiyavendum
ReplyDeleteசனி கிழமை மட்டும் பைரவருக்கு
Delete( 64 பைரவரில் எந்த பைரவருக்கு வேண்டுமானலும் )
7 விளக்கு 7 1/2 வருசத்துக்கு போட்டு வரவும் .
எந்த துன்பமோ , தீமையோ வரவே வராது
nan theipirai asthami viratham four month follow panren.panja theepam yetri sakkarai pongal kovilil kudukiren. enaku family la pilli Soniyam problem iruku so nan ithaiyum follow pannalama vellai poomani vilaku podalama illai 7 vilaku Saturday podalama ethu best nan evalo risk eduthum po da Thayar reply please
Deletenan theipirai asthami viratham four month follow panren.panja theepam yetri sakkarai pongal kovilil kudukiren. enaku family la pilli Soniyam problem iruku so nan ithaiyum follow pannalama vellai poomani vilaku podalama illai 7 vilaku Saturday podalama ethu best nan evalo risk eduthum po da Thayar reply please
Deleteஜெய் சாய்ராம்... இதைப் படித்து தான் நான் இந்த வழிபாட்டை ஆரம்பித்தேன். இந்த வழிபாடு எனக்கு மிகவும் பயனளிக்கிறது. நன்றி.... எல்லோரும் இதை செய்து பயன் அடையவேண்டுகிறேன்.
ReplyDeleteநன்றி , இந்த பதிவின் நோக்கம் . எனக்கு கிடைத்த பைரவர் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் .
Deleteஓம் சாய் ராம் . குருவருள் துணை . என் குருநாதருக்கு நன்றி
ennuduya rasi mesam,bharani natchathiram ,vaalkayil virakthi nilayil ullane pls naan enna seyya vendum en vaalvu sirakka, nalla peyar velayilum,kudumbathilum eduthu munnera vendum pls uthavidungal en kadaisi muyarchi
ReplyDeleteவணக்கம் , இந்த பைரவர் வழிபாட்டினை எத்தனை தடைகள் வந்தாலும் விடாமல் குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு செய்து பாருங்கள் , உங்களுடைய பிரச்னைகளும் , தேவைகளும் தானாக நிறைவேறும் , ஒருவருடம் வரை இந்த வழிபாட்டின் பலனை எதிர்பார்க்க வேண்டாம் . விநாயகரை வணக்கி வழிபாட்டினை ஆரம்பிக்க வேண்டும் இது மிகவும் முக்கியமானது .
Deleteஒரு வருடத்திற்கு பிறகு எனக்கு பதில் அனுப்பவும் , ஜாதகத்தினை பார்த்து குழம்பி கொள்ள வேண்டாம் , பைரவரை வணங்குவோருக்கு ஜாதகத்தின் கெடு பலன்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிடும் ,
இந்த வழிபாடு என் குருநாதர் சாய்பாபா உபாசகர் ( சாய்பாபாவே ) அருளிய வழிபாடு
இதை சித்து வாருங்கள் .நிச்சயம் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் .
வாழ்த்துக்கள் . ஓம் சாய் ராம் .
thanks.but Saibaba vae namma kastangala nivarthi seyya maattara?pls. thelivu illatha enakku thelivu paduthavum.sairam endru sonnalae annaithum vilagividu endru padithirukkirane.naan kudmbamai kulanthai peru petru santhosamaaga vaala aasirvathikkavum.kulappamum mana vedhanayum nirainthullathu.pls
Deletethanks. sairam edru sonnalae nam kastangal anaithum vilagividum endru nambi irunthanae.naan valibadu seeya aarambikarane.enakkaga neengalum pray pannavum.en parents ennala perumayadaya vendum.udal nalam theri,vaalkai amainthu, kulanthai kidikka arul puriya aasirvathiyungal.sairam
Deleterasi mesam,natchatiram bharani,save my life pls.naan lifela munnera enna seyya vendum sothanaiykal maara vendum
ReplyDeleteEnnudai peyar Sundar naan migavum kadan thollayal thunbam pattu kondu irukiren ithilirunthu meela naan enna seya vendum
ReplyDeleteப்ளீஸ் இந்த வழிபாட்டை ஒரு வருஷத்துக்கு நம்பிக்கையோட செய்து பாருங்க , நிச்சயம் உங்க கஷ்டம் முழுமையா தீரும் , அல்லது அப்படி தீர வழி கிடைக்கும் , ஓம் சாய் ராம்
Deleteநன்றிங்க ஐயா.
ReplyDeleteநான் அரச பணியில் இருந்து பணி நீக்கம் ெபெற்ற மாற்றுதிறனாலி வழக்கு நிலுவையிலல் உள்ளது நான் என்ன செய்வது
ReplyDeletesaibabatrichy@gmail.com
Deleteங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்
I am married but no child for us 3 years gone. What I HV to do.
ReplyDeleteplease send mail to this email id " saibabatrichy@gmail.com "
Deleteஐயா கோவில் பக்கத்தில் இல்லாதவர்கள் வீட்டில் கால பைரவர் படத்தை வைத்து விளக்கு போடலாமா ? விளக்கம் வேண்டும் ஐயா
ReplyDeleteகோவிலில் விளக்கு ஏற்றுவது தான் சரியனானது
Deleteநன்றி
ReplyDeleteVery thanks sir
ReplyDeleteவணக்கம் சார் ,
ReplyDeleteபைரவரிடம் ஈர்ப்பு ஏற்பட்டு வணங்க ஆரம்பித்த பிறகு தான் உங்களுடைய அனுபவத்தை படிக்க நேர்ந்தது .
அவரை சந்திக்க விரும்புகிறேன் .
தயவுசெய்து உதவி செய்யுங்கள்.