தருகின்றவரை வணங்குவதினால் பல பலன்கள் ஏற்படும் என்பது பெரும்பாலோரது நம்பிக்கை. அவர் மயானத்தில் வசிப்பவராம் , பூதங்களின் அதிபதியாம். சிவபுராணம் மற்றும் லிங்க புராணத்தில் அவரைப் பற்றிய செய்திகள் நிறையவே உள்ளன.
கால பைரவர் அவதரித்த கதை

அதைக் கேட்ட மகாவிஷ்ணு கோபம் அடைந்தார் . இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விவாதம் முடிவிற்கு வராமல் அவர்கள் நான்கு வேதங்களையும் அழைத்து அவற்றின் கருத்தைக் கேட்டனர் . அந்த வேத அதிபதிகளும் சற்றும் தயங்காமல் எவர் தன்னை வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு உடனே சென்று அருள் பாளிக்கின்றரோ , எவர் மிக சக்தி வாய்ந்தவர் என மக்களால் கருதப்படுகின்றாரோ, எவர் உலகனைத்தையும் ஆட்டுவித்தபடி அமர்ந்திருக்கின்றாரோ அவரே உத்தமமானவர் என்பதினால் , அந்த அனைத்தையும் பெற்றுள்ள சிவபெருமானே அனைவரையும் விட உத்தமமானவர்' எனக் கூறினர் .
அதைக்கேட்ட பிரும்மா இன்னும் அதிக ஆத்திரம் அடைந்து சிவபெருமானுடைய உருவத்தைக் குறித்து கண்டபடி பேசலானார் . ' யார் அந்த சிவன் , உடலெங்கும் சாம்பல் பூசிக் கொண்டு, சடைமுடியுடன் , மயான சாமியர்கள் போல தூசி படிந்த உடலுடன் இருந்து கொண்டு. கழுத்து நிறைய மாலைகளுக்குப் பதில் பாம்புகளை தொங்க விட்டுக்கொண்டு ஒரு மாட் டின் மீது அமர்ந்து கொண்டு சுற்றித் திரிகின்றாரே அவரா என்னை விட மேன்மையானவர் ?' என மேலும் மேலும் ஏசிக் கொண்டே இருக்கையில் கைலாயத்தில் இருந்த சிவன் காதுகளில் அவை அனைத்தும் விழுந்தன.
கொதித்துப் போனார் சிவனார் . விஷ்ணு மற்றும் பிற கடவுட்களும் தேவதைகளும் பிரும்மா
அவ்வளவுதான் அந்த குழந்தை உடனடியாக ஒரு பயங்கரமான உருவம் கொண்டவராக மாறி அவர் எதிரில் நிற்க மீண்டும் பிரும்மா கூறினார் , 'ஏ மனிதா, இப்படிப்பட்ட பயங்கரமான முகத்துடன் வந்து நிற்கும் உன்னை காலத்தைக் காக்கும் மனிதனாக நியமித்து உன் பெயரை காலபைரவர் என மாற்றுகின்றேன். நீ மக்களுடைய பாபங்களை ஏற்றுக் கொண்டு, தீயவர்களை அழிப்பாய். இறந்தவர்கள் மோட்சம் அடையச் செல்லும் காசி நகரத்திற்கு நீ சென்று காசிராஜனாக இருந்து கொண்டிருந்து சித்திரகுப்தன் கூட கணக்கெடுக்க முடியாமல் உள்ள பாபங்களைக் போக்கிடுவாய்' என ஆசிர்வதித்தார் .
அதுவரை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்த பயங்கர உருவில் இருந்த சிவனார் துள்ளி எழுந்தார் , பிரும்மாவின் ஐந்து தலைகளில் தன்னை ஏசிய ஒரு தலையை நகத்தினால் கீறி துண்டித்து எடுத்து தன் கைகளில் ஏந்தினார் . தன் சுய உருவைக் காட்டி, ' ஓபிரும்மனே உன்னுடைய எந்த தலை என்னை நிந்தித்து பாபத்தைப் பெற்றதோ அந்த தலையை பைரவர் அழித்து விட்டார்' எனக் கூற அப்பொழுதுதான் பிரும்மா மற்றும் அனைவருக்கும் புரிந்தது வந்துள்ளவர் சிவபெருமானே. அவரே தன் ஒரு ரூபமாக பைரவரை தோற்றுவித்துள்ளார் .
ஆலயங்களில் கால பைரவர்
பைரவரும் கபால ஓட் டையும் , பிரும்மாவின் தலையையும் எடுத்துக் கொண்டு மூவுலகமும் சுற்றிய வண்ணம் பிட்சை எடுத்தார் . கடைசியாக அவர் காசியில் நுழைந்ததும் அவர் கையில் இருந்த கபாலம் கீழே விழுந்து உடைய, அவரைத் துரத்திக் கொண்டு சென்ற பெண்ணும் மறைந்து போனாள். இந்த நிகழ்சிதான் காசிக்குச் சென்றால் கபால மோட்சம் கிடைக்கும் என்ற பழமொழி தோன்றக் காரணமாக அமைந்தது. அதன்படிதான் இறந்தவர்களின் சுற்றத்தினர் காசிக்குச் சென்று சிரார்தம் செய்து இறந்தவருக்கு மோட்சம் கிடைக்க காசியை பாதுகாக்கும் காவலராக தன்னை நியமித்துக் கொண்டு உள்ள பைரவரின் அருளைப் பெற்று வருகின்றனர் .
கால பைரவர் பெருமை
குருநாதர் சாய் பாபா உபாசகர் அருளிய பைரவ பரிகார முறை
பைரவரை வழிபாடும் முறை :
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
திறந்திருக்கும்
பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை
இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு
போட கூடாது
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்
இதை செய்ய முடியாதவர்கள் தினமும் விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அணைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு)
தகவல் : என் குருநாதர் - சாய் பாபா உபாசகர்
முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan
http://copiedpost.blogspot.ca/2012/12/live-dharshan.html
No comments:
Post a Comment