SHIRDI LIVE DARSHAN

Wednesday, 13 June 2012

ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOuT469-u9goUREs9skg_j5f-CkmqMxzK-J19ECt-FmqGIPE_GT8pHmh6K2FXAxsrINBOsM42s0BB2kN59t74LT-N36HdRNoJRlar9kioEZ0jt33bM01QUoguyLOQXjtCdwQqg_pn06-JB/s320/agasthiyar+nama+jabam.jpg 
 
 
 
கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு  கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!
இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது? ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.
ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;
இதுவரை யாரெல்லாம் ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதினார்களோ அவர்களில் பலருக்கு சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஆசி கிடைத்திருக்கிறது.
பலரது அதிகாலைக் கனவில் அகத்தியர் வந்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர்,90 நாட்களுக்கு தினமும் நூற்று எட்டுமுறை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்;91 ஆம் நாளில் அவர் பணிபுரியும் நிறுவனத்தில்,அவரை ஒப்பந்தப்பணியிலிருந்து நிரந்தரப்பணியாளராக நியமனம் செய்துவிட்டனர்;இந்த  நியமனம் அந்த நிறுவனத்தின் விதிகளையும் மீறி நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அந்த கிறிஸ்தவ அன்பருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தந்திருக்கிறது!!
தினமும் நூற்றி எட்டு முறை வீதம் காலையும் மாலையும் எழுதி வந்த ஒருவருக்கு அவ்வாறு எழுதிய 18 வது நாளிலேயே அவருடைய 27 வித கோரிக்கைகளை அகத்தியர் நிறைவேற்றி வைத்துவிட்டார்.
இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.
 
 
15.12.2012 (கார்த்திகை மாதத்தின் 
கடைசி நாள்)
 
வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது  குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா?
 
 
அனுப்ப வேண்டிய முகவரி:
 
கி.முரளிதரன்,
டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
3,முதல் தளம்,
பாரதி பூங்கா வீதி 2,
சாய்பாபா காலனி,
கோயம்புத்தூர் 11.    

PROPER ADDRESS:=
In English:
Mr.K.MURALIDARAN,
TOTAL OIL INDIA P LTD,
3,First Floor,
Bharathi Park Cross Road-2,
Saibaba Colony,
COIMBATORE-11.
 
ஓம் அகத்தீசாய நமஹ
 

7 comments:

  1. hi, i am saikesan, i sent the manthra thoguppu through a courier service. but they told Mr. Muralitharan is not in that address you given. so if I want to resnd the manthram to which address I have to send? please inform me.

    ReplyDelete
  2. Mr.K.MURALIDARAN,
    TOTAL OIL INDIA P LTD,
    3,Bharathi Park Cross Road-2
    ,Saibaba Colony,
    COIMBATORE-11

    ReplyDelete
    Replies
    1. ஓம் அகத்தீசாய நமஹ

      some how I am writing it as
      ஓம் அகத்தீசாய நம: "ha" i have written as ":"
      Is it ok to continue or we need to write as specified

      please reply venkatlic66@yahoo.co.in
      venkat

      Delete
  3. ஓம் அகத்தீசாய நமஹ
    can we write as
    ஓம் அகத்தீசாய நம:
    pls reply
    venkatlic66@yahoo.co.in
    venkat

    ReplyDelete
    Replies
    1. ஓம் அகத்தீசாய நமஹ என்பது தமிழ் வழக்கம்

      ஓம் அகத்தீசாய நம: என்பது சம்ஸ்கிருத வழக்கம்

      இரண்டுமே சரியானது

      இரண்டில் எதாவது ஒரு முறையில் மட்டுமே எழுது அனுப்பவும்

      அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் , தமிழ் முறையிலேயே எழுதி அனுப்புவோமே !

      Delete
  4. வணக்கம் ஐயா ஓம் அகத்தீசாய நமஹ எனும் மந்திரத்தை ஊடகங்களில் தேதும் போது உங்கள் பதிப்பினை கண்டேன். அதன் வாயிலாக இன்னமும் இந்த 108 முறை அகதிசர் போற்றி எழுதும் திருப்பணி நடைபெறுகிறதா? மலேசிய நாட்டைச் சேர்ந்த நான் முருகன் பத்தியில் என்னை இணைத்து கொண்டு அதை என் சுற்றத்தார்களுக்கும் எடுத்து இயம்பும் பெரும் பணியில் ஈடுபட்டு உள்ளேன். ஆகையால் நானும் என்னைத் தொடந்து என் உடன்பிறவா சகோதரர்களும் இதில் தீவிரம் காட்ட என்னுகிறோம்.எதில் நீங்கள் எங்களுக்கு ஒரு தெளிவு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். ஓம் அகத்தீசாய நமஹ.நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அந்த திருப்பணி 2012லேயே நிறைவு பெற்றுவிட்டது

      ஆனால் அகத்தியர் நாம ஜெபம் எழுதுவது அவ்வளவு புனிதமான ஒன்று

      விருப்பம் இருந்தால் தினமும் ஒரு நோட் ல்

      ஓம் அகத்தீசாய நமக என்று 108 முறை எழுத்து பூஜை அறையில் வைத்து வழிபட்டு வாருங்கள் அற்புதமான பலன்களை உணரலாம்

      இது என்னுடைய நாம ஜெப அனுபவம்

      ஓம் அகத்தீசாய நமக

      Delete