SHIRDI LIVE DARSHAN

Tuesday, 5 June 2012

திங்களூர் - கயிலாயநாதர் (சந்திரன்)


Thingalur  Koil (Near Kumbakonam)
தலமும் இருப்பிடமும்: 

திருவையாற்றுக்கு கிழக்கே 2 கிலோ மீட்டர் தூரம் திருப்பழனத்திற்கு வடக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ளது. திங்களூர் சிறிய கிராமம் தான்.




[Image1] 

தலவிருட்சம்:
வாழை, வில்வம்



தலப்பெயர்கள்:
திங்கள்-சந்திரன் வழிப்பட்டு அருள் பெற்ற காரணத்தால் திங்களூர் எனப்பெயர் பெற்றது.

மூர்த்திகள்:
இறைவன்:கயிலாயநாதர்
இறைவி:பெரியநாயகி

தீர்த்தங்கள் :
 
தலப்பெருமை:
சென்ற உயிரை மீட்ட பெருமை இத்தலத்திற்குச் சேரும் அப்பூதியடிகள் குமாரன் மூத்த திருநாவுக்கரசு அரவு தீண்டி இறந்தவனை திருநாவுக்கரசுப் பெருமான் ஒன்றுகொலாம பதிகம் பாடி எழச் செய்த திருக்கோயில் இக்கோயிலே.
தலபுராண பாடல்:
எங்கள் குறைகளெலாந் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் புரிவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடந் தீர்க்கும் சதுரா போற்றி
Chandiran - Thingalur (kumbakonam)
தலச்சிறப்பு:
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் இங்கு வாழ்ந்தவர்.திருநாவுக்கரசு சுவாமிகள் பால் மிக்க அன்பு பூண்டு தன் புதல்வர்களுக்கும்,தண்ணீர்ப்பந்தல் முதலியவைகளும் அவர் பெயரையே சூட்டினார்.திருநாவுக்கரசர் அவ்வழிவரும் போது அதைக் கண்ணுற்று அப்பூதி அடிகளின் இல்லத்தில் உணவருந்த சம்மதித்தார்.அவ்வமயம் மூத்த மகன் திருநாவுக்கரசு பாம்பு கடித்து இறந்து விட்டான். கேள்வியுற்ற நாயனார் பதிகம் பாடி உயிர் பிழைக்கச் செய்தார்.இன்றும் திங்களூரில் யாரையும் விஷம் தீண்டிவதில்லை.தீண்டினாலும் விஷமேறி மரிப்பதில்லை.அப்பர் அப்பூதி அடிகள் அவர் மனைவி,இருமகன்கள் சிலைகள் கோயிலினுள் உள்ளன.
Chandiran
மக்கள் அதிக அளவில் சந்திர தோஷ பரிகாரத்திற்காக இங்கு வழிபடுகின்றனர்.சந்திரன் தோற்றுவித்த சந்திதி எதிரிலுள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும்.திங்கட்கிழமை சோம வார பெளர்ணமி காலங்களில் வழிப்படுவது சிறப்பாகும்.
இங்குள்ள சந்திர பகவானை திங்கள் கிழமை பெளர்ணமி தினத்தன்று வழிப்படுவது விஷேசம்.ஜாதக ரீதியாக சந்திர தோஷம்,சந்திரப்பார்வை,சந்திர நீச்சம்,சந்திர குளிகை ஆகியவற்றுக்கு சந்திர புஷ்பகரணி தீர்த்தத்தில் நீராடி கைலாச நாதரைத் தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு குஷ்டம்,சித்தப் பிரம்மை நீங்கும்.
ஆண்டுதோறும் பங்குனி உத்திர நச்சத்திரம்,பெளர்ணமி,அதற்கு முதல் நாள்,பின் மறு நாள் ஆகிய மூன்று தினங்களிலும் காலையில் சூரியன் வழிபடும் விதமாக ஸ்ரீ கைலாச நாதர் மீது ஒளிக்கதிர்கள் படரும் இதே போன்று இந்த மூன்று தினங்களிலும் மாலையில் சந்திரன் வழிபடும் விதமாக சந்திரனுடைய கதிர்கள் படருதல் இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.
இக்கோயிலில் ஆகம விதிப்படி சந்திரன் உள்பட அனைத்துக் கிரங்களும் சூரியனைப் பார்ப்பதுபோல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.


காலை 6 மணிமுதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர் - 613 204 தஞ்சாவூர் மாவட்டம்.


திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


No comments:

Post a Comment