SHIRDI LIVE DARSHAN

Showing posts with label தமிழ்நாடு அரசு வேலைகள். Show all posts
Showing posts with label தமிழ்நாடு அரசு வேலைகள். Show all posts

Thursday, 3 January 2013

அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு

அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு
http://www.festivalsofindia.in/img/SaiBaba.jpg
குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம்

என் நண்பர் ஒருத்தர் குருநாதரை சந்திருக்கிறார் , அவர் TNPSC பரீட்சைக்கு 4 வருசமாக கடுமையா முயற்சி செய்தார்  வேலை கிடைக்கல

நண்பர் TNPSC MARK LIST - அ  வச்சிகிட்டு இன்னும் ஒரு question க்கு answer  சரியாய போட்டிருந்த பாஸ் பண்ணியிருப்பேன் லாம்  சொல்லுவார்

குருநாதரை சந்தித்தபோது அவர் சொன்ன விஷயம்

அரசாங்க வேலைக்கு போகணும்னா அதுக்கு ஜாதகத்துல சூரியன் பலமா இருக்கனும் , அப்படி பலம் இல்லாதவர்கள் முயற்சி செய்யறதாக இருந்தால் சூரியனை வழிபட வேண்டும்

குருநாதர் அருளிய  சூரிய வழிபாடு :

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/38/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.JPG/800px-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.JPG

ஒவ்வொரு ஞாயிற்று கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் ( 6 am  to  7 am ) வீட்டு மாடியில ( மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும் )

ஒரு விளக்கு போட்டு சூரியனை   நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும் .

 விளக்கு போடும் பொது கூடவே நைவேத்தியமாக கல்கண்டு ,மற்றும் எதாவது ஸ்வீட் நைவேத்தியமாக வைக்க வேண்டும் . (கடவுளுக்கு நிவேதனமாக  படைத்த எதையும் வீணாக்க கூடாது . அதை நாமே சாப்பிட வேண்டும் )

அப்போது சூரிய காயத்ரி அல்லது   சூரியனுக்குரிய ஸ்லோகம்  அல்லது  ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லலாம்

இந்த வழிபாட்ட செய்ய அதிக பட்சம் 20 நிமிடம் போதும்

இந்த வழிபாட்ட செஞ்ச  கண்டிப்பா அரசு  வேலை கிடைக்கும் னு குருநாதர் சொன்னார்

இப்போ நண்பர் VAO , TNPSC  GROUP 4 னு  ரெண்டு தேர்விலயும் பாஸ் பண்ணிட்டார் . GROUP 4 ல appointment order வாங்கிட்டார்

ஆனா நண்பர் 4 வருஷமா கடுமையாக TNPSC க்கு படிச்சார் , அந்த விசயத்த மறுக்க முடியாது ,

இந்த வழிபாடு  நண்பருக்கு   இருந்த அத்தனை தடைகளையும்  விலக்கி வச்சியிருக்கு .



மேலும் இந்த வழிபாட்டை செய்ய தகுந்தவர்கள்

( யார் வேண்டுமானாலும் செய்யலாம் )

1) ஜாதகத்துல சூரிய திசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால் , நீச கிரகத்தோட சேர்ந்து இருந்தால் , பகையாக இருந்தால், மறைந்து இருந்தால்

2) அதிகாரமிக்க பதவியில இருப்பவர்க்கள் , அதற்க்கு முயற்சி செய்பவர்கள்

3)  ஆளுமை திறன் வேண்டுவோர் ( அடிமை படுத்தல் அல்ல )

4) தந்தை மகன் உறவு சரியில்லதவர்கள் ( யாரேனும் ஒருத்தர் இந்த வழிபாடு செய்யலாம் )

5) அரசு வேலைக்கு முயற்சி செய்வோர் , அரசு சம்பந்த பட்ட விசயங்களில் இறங்குவோர்

6 ) கண் பார்வை குறைபாடு உடையவர்கள்

அரசு வேலைக்கு கடுமையாக  முயற்சி செய்யும்,  வழிபாட்டில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் இந்த வழிபாட்டினை செய்து பார்க்கலாம் .





ஷீரடி சாய் பாபா வோட

அருள்வாக்கு 



முக்காலமும் அறிந்த என் குருநாதர் சாய் பாபா 

உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை 

சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்

saibabatrichy@gmail.com

 ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்


என் குருநாதரை பற்றி அறிந்து 

 

கொள்ள கீழே உள்ள லிங்க் ல் 

 

தொடரவும் 


 

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் 

http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_9026.html


பைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்

 http://copiedpost.blogspot.in/2014/05/blog-post_6.html

 

பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்

http://copiedpost.blogspot.in/2014/10/blog-post.html


ஓம் சாய் ராம்
------------------------------------------------------------------------------------------------------------

அரசு வேலை,நல்ல வேலை கிடைக்க , government  jobs , வேலை கிடைக்க 

Wednesday, 1 February 2012

நல்ல வேலை கிடைக்க -ஸ்ரீ மயிலாப்பூர் ஆதிகேசவபெருமாள்


நல்ல வேலை கிடைக்க -ஸ்ரீ மயிலாப்பூர் ஆதிகேசவபெருமாள்



மயிலாப்பூர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வரும் ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு அருகிலேயே உள்ளது ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். இங்கே ஸ்வாமியின் திருநாமம் –  ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்; தாயாரின் திருநாமம் ஸ்ரீ மயூரவல்லித் தாயார்.
முன்னொரு காலத்தில் மயிலாப்பூர் – மயூரபுரி என்றும், அருகில் உள்ள திருவல்லிக்கேணி – துளசிவனமாக, பிருந்தாரண்ய ஷேத்திரமாகவும் இருந்ததாம்.
இந்தத் தலத்தில் உள்ள கைரவணி தீர்த்தக் குளத்தில், பங்குனி உத்திர நன்னாளில், ஆம்பல் மலராகத் தோன்றிய மகாலட்சுமித் தாயார், பிறகு முனிவரின் மகளாக அவதரித்து, பேயாழ்வாருக்கு அருள் புரிந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். எனவே, மயூரபுரியில் அவதரித்ததால், ஸ்ரீ மயூரவல்லித் தாயார் எனத் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர்.
இங்கு தாயார் மிகவும் விசேஷம். உத்ஸவ மூர்த்தியாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் அழகு ததும்பக் காட்சி தருகிறார். இன்னொரு சிறப்பு… தாயாருக்கு, இங்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமைதோறும் காலையில் ஸ்ரீசுக்த ஹோமமும், மாலையில் வில்வார்ச்சனையும் சிறப்புற நடைபெறுகிறது.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர், நல்ல நிறுவனத்தில் உத்தியோகம் கிடைக்கவேண்டுமே எனக் காத்திருப்போர், வெளிநாட்டில் வேலை பார்ப்பதையே லட்சியமாகக் கொண்டிருப்பவர்கள்… இங்கே இந்த ஆலயத்துக்கு வந்து, ஸ்ரீ மயூரவல்லித் தாயாரை மனதார வேண்டிக் கொண்டு, ஆலயத்தில் இரண்டு மணிகளை கட்டிச் செல்கின்றனர்.
இதையடுத்து, தாயாருக்குத் தொடர்ந்து 48 நாட்கள் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் வந்து நெய் தீபம் ஏற்றி 12 முறை பிராகாரத்தை வலம் வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலையில் தாயாருக்கு வில்வார்ச்சனை செய்து, சந்நதியில் தரும் பாயசப் பிரசாதத்தைப் பருகி, பிரார்த்தித்துக் கொள்ள… நினைத்தது நடக்கும்; நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்; தொழில் விருத்தியாகும் என்பது ஐதீகம்.
இங்கு வந்து வழிபட்ட எண்ணற்ற பக்தர்கள், வெளிநாட்டில் வேலை கிடைத்து வளமோடு வாழ்ந்து வருகின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய அன்பர்கள், ஸ்ரீ மயூரவல்லித் தாயாருக்குத் திருமஞ்சனம் செய்து, புடவை சார்த்தி தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.
தங்களின் மகன் அல்லது மகளுக்கு, படிப்புக்கேற்ற நல்ல சம்பளத்தைத் தரும் வேலை கிடைத்ததும், தாயார் வீதியுலா மற்றும் ஊஞ்சல் உத்ஸவம் என நேர்த்திக்கடன் செலுத்தும் பெற்றோரும் உண்டு!

Sunday, 29 January 2012

Tamil nadu Government Jobs

தமிழ்நாட்டு அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான இணைய தள முகவரி

தமிழ்நாடு அரசு வேலைகள் 

http://www.tn.nic.in/