ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம

அகஸ்தியர் காயத்திரி மந்திரம்
ஞானம் உண்டாக
ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

ஓம் அகத்தீசாய நமஹ
--------------------------------------------------------------------------------------------
அகத்தியர் தரிசன அருள் பெற!
சித்தர்
பக்தன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த அகத்தியர் தரிசன அருள்
விதியை கீழே தருகிறேன். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற
எண்ணத்தில், எல்லோரும் அருள் பெறுங்கள்.
அகத்தியரின் பாதார விந்தங்களை பணிந்து கொண்டு செப்புகிறேன்.
வீட்டில்
அகத்தியருக்காக ஒரு அறையை தேர்ந்தெடுத்து.அதை கழுவி அதில் மங்சள் நீரை
தெளிக்க வேண்டும். அந்த அறையில் அசைவம் கொண்டு செல்லலாகாது.. பூசை செய்பவர்
அசைவம் அலையலாகாது. 45 நாள் அகத்தியர் தரிசனம் காண மந்திரத்தை உச்சரிக்க
வேண்டும். அகத்தியரின் படத்தின் முன் பத்மாசனத்தில் அமர்ந்து கீழ் காணும்
மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஓம் பசு பதிபஷராஜ
நிரதிசய சித்ருப ஞானமூர்த்தாய
தீர்க்க நே த்ராய
கணகம் கங்கெங் லங் லீங் லங் லாலீலம்
ஆவ் பாவ் ஆம் ஊம் பார்க்கவ்விய ஜோதிமய வரப்பிரசன்ன
பாத தரிஸ்யே அகத்தியர் சரணாய நமஸ்து.
இவ்வாறு108
தடவை கூற வேண்டும். ”மனதில் தீய எண்ணத்தை விலக்கி 45 நாளும் மனதார
ஜெபிப்பவர் 45ம் நாள் அகத்தியரை தரிசிக்கலாம். தரிசிப்பவர் முதலில் அவரின்
காலில் விழுந்நு ஆசிர்வாதம் பெறவேண்டும். பின்னர் தேவையான வரத்தை
கேட்கவேண்டும்.அதன் பின்னால் அவர் நம் காதில் ஒரு மூல மந்திரத்தை
சொல்லுவார். அதை யாரிடமும் கூறக்கூடாது.அதை ஜெபித்து நாமும் ஞானகுரு
ஆகலாம்.
From : http://siththanarul.blogspot.in/2012/12/blog-post.html
No comments:
Post a Comment