ஸ்ரீநரசிம்ம காயத்ரி
ஓம் வஜ்ர நகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி
தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்
எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படி கால் தொடங்கி,
வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு
வோணத் திரு விழாவில்
அந்தியம் போதிலரியுரு வாகி
அரியை யழித்தவனை,
பந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத்
தாண்டென்று பாடுதுமே
திருப்பல்லாண்டு 6.
பூதமைத் தொடு வேள் வியைந்து
புலன்களைந்து பொறிகளால்,
ஏதமொன்று மிலாத வண்மையி
னார்கள் வாழ் திருக் கோட்டியூர்,
நாதனை நரசிங்கனை நவின்
றேத்துவார் களுழக்கிய,
பாத தூளி படுதலாலிவ்
வுலகம் பாக்கியம் செய்ததே.
பெரியாழ்வார் திருமொழி 4.4.6.
பள்ளியி லோதி வந்த தன் சிறுவன்
வாயிலோ ராயிர நாமம்.
ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்
கொன்று மோர் பொறுப்பிலனாகி,
பிள்ளையாச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப்
பிளையெயிற் றனல் விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே.
பெரிய திருமொழி 2.3.8.
- துயர வேளையில், ஆபத்துக் காலங்களில், சங்கடமான சந்தர்ப்பங்களில் உடனடியாக தாமதமின்றி நம்பெருமானின் சகாயத்தைப் பெற, ஸ்ரீ நரசிம்ம விசயமாக ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யமான பாசுரங்களை, மேல் சொன்னவைகளை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்!
No comments:
Post a Comment