SHIRDI LIVE DARSHAN

Sunday 29 January 2012

தியானமும் மன அலைச்சுழல் வேகமும்..


தியானமும் மன அலைச்சுழல் வேகமும்..



தியானம் செய்தால் என்னென்னமோ நடக்கும் என்கிறார்கள். நமக்கோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. , புரியாத மாதிரியும் இருக்கு. தியானம் செய்தா நம் உடலுக்கும், மனசுக்கும் என்ன நன்மை அப்படின்னு கேள்வி வரும்போது இந்த மனசு இருக்கிறதே அது எதையும் நம்ப மாட்டீங்குது :))


அறிவியல்பூர்வமா ஏதேனும் ஆதாரம் சொல்லு, நம்புறேன் அப்படிங்கிது..

கண்ணுக்குத்தெரியும் உடல், கண்ணுக்குத் தெரியாத மனம், அறிவு இவற்றை எது இணைக்கிறது அப்படின்னு பார்த்தோம்னா எந்த சந்தேகம் வேண்டியதில்லை மூளைதான் அது.:))

மனதில் ஏற்படும் மாற்றங்கள் தியானத்தாலும் வந்திருக்கலாம், வேறு காரணங்களினாலும் வந்திருக்கலாம். சாட்சி இல்லை. நிரூபிக்க முடியாது. வேண்டுமானால் நீயும் அனுபவித்துப்பார் என்றுதான் சொல்ல முடியும்.

முறையாக தியானம் செய்தால் மூளையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா, அப்படி ஏற்பட்டால் அறிவியல் மூலம் நிரூபிக்க முடியும் அல்லவா..இது குறித்த அலசல் இது..

மூளையைப்பற்றி பொதுவாக ஆராய்ச்சிகள் பல நடந்திருந்தாலும் குறிப்பாக 1932 ல் பிரிட்டனைச் சேர்ந்த எட்கர் ஆல்ட்ரின் மூளையின மின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதை அளந்து காட்டியதற்காக நோபல்பரிசு பெற்றார்.

மூளையினின்று வெளிப்படும் மின்சக்தி அலைகளின் சுழற்சியை அளக்க இயலும்.. (Electroen - cephalograph). இதனை மூளையின் செயல்மின் சுழற்சி அலைகள்’ என சொல்கிறோம். தனது செயல்களின் தன்மை அல்லது தீவிரத்திற்கேற்ப நான்குவிதமான மின் சுழற்சி அலைகள் மூளையினின்று வெளிப்படுத்துகின்றன. 


ஆழ்ந்த தூக்கத்தில் மூளை ஒரு நொடிக்கு .5 இலிருந்து நான்குவரை மின் ஆற்றல் அலைகளை வெளிப்படுத்துகிறது. இது டெல்டா அலைகள் (Delta waves) அலைகள் என அழைக்கப்படுகின்றது.


ஆழ்ந்து தூங்க ஆரம்பிக்கும்போது நான்கு முதல் எட்டு வரை மின்சக்தி அலைகள் வெளிப்படுகின்றன. இது தீட்டா (Theta waves) என அழைக்கப்படுகின்றன.

உடலையும், மனதையும் தளரச் செய்யும்போது மூளையின் மின் அலை அளவுகள் ஏழு முதல் பதினாலு வரை இருக்கும். இதை ஆல்ஃபா அலைகள் (Alpha waves ) என அழைக்கிறோம் எட்டுமுதல் பதின்மூன்று வரையிலான அலை அளவில் இடது மூளையும் வலது மூளையும் சிறப்பான முறையில் இணைந்து பணியாற்றுகின்றன. அருளியலும், பொருளியலும் நன்கு இணைந்து சம அளவில் இருக்கும். எண்பதுகோடி எண்ணங்களை நினைந்து எண்ணும் மனம் அமைதியுறும். பிரபஞ்ச ஆற்றல் எனும் கணினியுடன் நமது மூளையும் மனமும் தொடர்பு கொள்ள இயலும். தியான வாழ்க்கை அமையும். வாடும் பயிரைக்கண்டபோதெல்லாம் வாடும் மனநிலையை உணரமுடியும். வசையிலாது, இசைபாடும் வாழ்வு மிளிரும். படைப்பாக்கம் ஆல்ஃபா நிலையிலேயே சிறப்பாக நடைபெறும். ஆழ்மனத்தொடர்வு கிடைக்கும்.

விழித்திருக்கும் நேரமெல்லாம், நாம் உலகியல் நடப்புகளை மேற்கொள்ளும்போது நமது மூளையின் மின் அலைகள் ஒரு நொடிக்கு பதின்மூன்றிலிருந்து முப்பது வரை இருக்கும். இதனை பீட்டா அலைகள் (Beta waves) என அழைக்கிறோம்.
பதின்மூன்றிலிருந்து முப்பது வரை இயல்பாக மனிதர் வாழும் வாழ்க்கை 


அதேசமயம் முப்பதுக்கு மேல் மூளையின் அலைகள் போனால் அவ்ர்கள் வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாக இருக்கும். மன அமைதி இன்றி புலன்வழி சென்று, ஆசையினால் தன்னிலை அழிந்து, உடல், மன நோய்கள் மிகும். அன்பின்றி, பண்பின்றி, சுயநலம் மிகுந்து, அறவழி நாட்டமில்லாது மறவழி சென்று, தனக்காகவே உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது என்கிற சீழ்பிடித்த எண்னம் தோன்றி, ஈயினும் இழிந்து, நாயினும் கடையனாகி வாழும் வாழ்க்கையாக இருக்கும்.

எனவேதான் மூலையின் அலைகளை நாம்  
எட்டுமுதல் பதின்மூன்று வரை எல்லா நேரமும் இருத்தி வைத்து தவ வாழ்க்கை வாழ முற்படவேண்டும். தவ வாழ்க்கை எனில் வீடுவிட்டு காடுபோய், காய்கனி, இலை புசித்து வாழும் வாழ்க்கை அல்ல. இல்லறத்தை நல்லறமாக வாழும் வாழ்க்கை. புலன்வழி செல்லா வாழ்க்கை. நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டிய வாழ்க்கை. தன்னைத்தான் உணர்ந்து வாழ்தலும், உள்ளுணர்வின் வழி வாழ்தலும் எளிதாகும். 



Brain is commmonly working in a five different frequency bands and they are
Delta waves  .5 - 4 Hz
Theta waves  4-8Hz
Alpha waves  8-13Hz 
Beta waves  13-30 Hz
Gamma waves  30-100 Hz

Brain generates the delta waves when it is in unconsious mode or in a sleep mode, when it is in a subconsicous mode it is in  the theta mode and also when it turns into active mode it sends alpha waves and during focusing some things it sends beta waves and when it is in a confusing state it sends the gamma waves.



மூளையில் இந்த அலைச்சுழல் இருக்கும் போது என்னென்ன மனதிலும், வாழ்விலும் மாற்றங்கள் வரும் என்பதை அறிந்து கொண்டீர்கள் அல்லவா !!

No comments:

Post a Comment