குழப்பத்திலிருந்து விடுபடுங்கள்
சிருஷ்டியின் நோக்கம் என்ன?
சிருஷ்டியின் நோக்கத்தை கண்டறிவதிலேயே உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் உள்ளதா?
சிருஷ்டி என்ற சொல்லுக்கு நீங்கள் என்ன பொருள், அர்த்தம் அளிக்கிறீர்கள் நம்முடைய வாழ்வின் பொருள் என்ன? நோக்கம் என்ன? நீங்கள் ஏன் வாழ்கிறீர்கள். பள்ளிக்கு சென்று படித்து தேர்வில் தேர்ச்சி பெறுகிறீர்கள்.?
பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் உள்ள உறவு மற்றும் கணவன், மனைவிக்கு இடையில் உள்ள உறவு- இவற்றின் பொருள், நோக்கம் என்ன? என்ற கேள்வியை நீங்கள் கேட்கும் போது இங்கு கூறியவைகளை தான் குறிப்பிடுகிறீர்களா?இவை போன்ற கேள்விகளை நீங்கள் எப்போது கேட்கிறீர்கள்? உங்களுக்குள் அதாவது உங்கள் உள்ளத்தில் உண்மைகளை தெளிவாக காண முடியாத போது நீங்கள் குழப்பத்தூதில் இருக்கும் போது, துன்பப்படும் போது, உங்கள் உள்ளத்தில் இருள் சூழ்ந்திருக்கும் போது. இந்த கேள்விக்கான தீர்வை உங்களால் காணமுடியாத போது, நீங்கள் இது போன்ற கேள்வியை கேட்கிறீர்கள். வாழ்வின் சிருஷ்டியின் நோக்கத்தை பொருளை அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்.
வாழ்வின் பொருள், நோக்கம் என்ன என்பதை உங்களுக்கு விளக்கி கூறுதவற்கு இங்கு பலர் இருக்கிறார்களக். வாழ்வின் சிருஷ்டியின் நோக்கத்தை பற்றி புனித நூல்கள் கூறுவதை உங்களுக்கு அவர்கள் சொல்வார்கள். புத்தி நுட்பமுள்ள, சாமர்த்தியமுள்ள மனிதர்கள் வாழ்விற்கும், சிருஷ்டிக்கும் பல விதமான அர்த்தங்களையும், நோக்கங்களையும் கண்டு பிடித்துக்கொண்டே இருப்பார்கள். அரசியல் குழுக்களுக்கும், கட்சிகளும் ஒரு வித நோக்கத்தை கொண்டுள்ளன.; மத அமைப்புகள் மற்றொரு நோக்கத்தை கொண்டிருக்கிறது. நீங்களே குழப்பத்தில் இருக்கும் போது உங்கள் மனம் குழம்பி இருக்கும் போது வாழ்வின் பொருளை, நோக்கத்தை எவ்வாளு நீங்கள் கண்டறீவீர்கள்.? நிச்சயமாக நீங்கள் குழப்பத்தில் இருகக்கும் வரையில் உங்கள் கேள்விக்கு நீங்கள் பெறும் விடையும் தெளிவில்லாத குழப்பமான பதிலாகத்தான் இருக்கும்.
உங்கள் மனம் அமைதி இல்லாமல் கலக்கத்திலும், குழப்பத்திலும் சிக்கியிருந்தால், உங்கள் கேள்விக்கு நீங்கள் குழப்பம், கக்கம், அச்சம் என்ற திரையின் மூலமாகவே பதிலை பெறுவீர்கள். ஆகவே உங்கள் கேள்விக்கு நீங்கள் பெறும் பதில் தெளிவானஜ பதிலாக இருக்க முடியாது. ஆகவே வாழ்வின் பொருள் என்ன, நோக்கம் என்ன? என்ற கேள்வி கேட்பதை காட்டிலும், உங்களுக்குள், உங்கள் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்குவதே முக்கியமான செயலாகும். மனதில் இருக்கும் குழப்பத்தை தீர்க்காமல் வாழ்வின் சிருஷ்டியின் பொருள் என்ன, நோக்கம் என்ன? என்று கேள்வி கேட்பது ஒரு பார்வையற்றவர் ஒளி என்றால் என்ன? என்று கேட்பதை போன்றதாகும்.
ஒளியின் தன்மையை பார்வையற்ற ஒருவருக்கு நான் விளக்கி கூறுவதை அவருடைய கருத்திற்கு ஏற்றவாறு புரிந்து கொள்வார். ஆனால்அவர் கண்ணில் ஒளிவந்த பிறகு,. அவருக்கு பார்வை வந்த தருணத்தூதிலிருந்த அவர் ஒளி என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பவே மாட்டார். ஏனென்றால் எங்கும் ஒளி நிறைந்திருக்கிறது. அவர் ஒளியை காண்கிறார். அதே போல் உங்கள் மனதிற்குள் இருக்கும் குழப்பத்தை உங்களால் தீர்க்க முடிந்தால் வாழ்வின் வாழ்ந்த பொருளை, நோக்கத்தை நீங்கள் தெளிவாக காண்பீர்கள். வாழ்வின் பொருள் என்ன, நோக்கம் என்ன என்று எவரையும் நீங்கள் கேட்க வேண்டி இருக்காது. வாழ்வின் நோக்கத்தை நீங்கள் எங்கும் தேட வேண்டி இருக்காது.
குழப்பத்திலிருந்து விடுபட குழப்பத்தை ஏற்படுத்தும் மூலக்காரணத்தை நீங்கள் காண வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். மனக்குழப்பத்தின் மூலகாரணத்தை நாம் அறிவோம். சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற உந்துதல், ஏதோ ஒன்றாக ஆக வேண்டும் என்ற பேரவா, வெற்றி அடைய ஆசை, மற்றவரை போல் இருக்க நினைப்பது போன்றவைகளால் தன்னை பெரிதாக்கி கொள்ளும் நான் என்ற உணர்வில் தான் குழப்பத்தின் மூல காரணம் வேரூன்றி இருக்கிறது. பொறாமை, பேராசை, அச்சம் போன்றவை இதன் விளைவாகும். உங்கள் மனதில் குழப்பம் இருக்கும் வரையில் நீங்கள் உங்களுக்கு வெளியில் வாழ்வின் பொருள் என்ன? என்ற கேள்விக்கான விடையை தேடுகிறீர்கள். ஆனால், உங்கள் மனதில் குழப்பம் நீங்கியவுடைன் வாழ்வின் பொருளை, ஆழ்ந்த அர்த்தத்தை நீங்கள் அறிவீர்கள்.
-தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment