ஆன்மா அழிவதில்லை!
""மனிதன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவை இழப்பானெனில் அவனுக்கு வரும் பயன் என்ன?'' என்கிறது கிறிஸ்துவர்களின் வேத நூலான பைபிள். மாட மாளிகையிலும், கூட கோபுரத்திலும் ஆடம்பர வாழ்க்கை வாழும் மனிதனும் தன் வாழ்வுக்குப் பின் சொந்தமெனக் கொண்டாடப்போவது இறுதி மூச்சு அடங்கிய பின் இளைப்பாறக் கிடைக்கும் அந்த ஆறடி நிலம்தானே?
எனவே, இவ்வுலகில் நாம் வாழ்க்கையில் தரும காரியங்களாலும், நற்செயல்களாலும் புண்ணிய பேற்றினைச் சம்பாதித்து, மறுவுலகில் இறைவனோடு என்றென்றும் வாழும் தகுதியினைப் பெற வேண்டும்.
உடலானது மண்ணோடு மண்ணாக மக்கிப் போயினும், அழியாத ஆன்மா இறைவனோடு ஒன்றிணையும் இயல்பை உடையது. ஆண்டவரின் இல்லத்தில் மகிழ்வோடு வாழும் பேறு பெற்ற இந்த ஆன்மாக்களிடம் நாம் இறைஞ்சும்போது, நம் வேண்டுதல்களை இறைவன் கண்டிப்பாகக் கருணையுடன் கண்ணோக்குவார். இந்த நம்பிக்கையினால்தான் இறந்தோரை அடக்கம் செய்யும் கல்லறையை, தோட்டத்தைப் பராமரிப்பதுபோல் கிறிஸ்துவர்கள் பராமரித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் (கல்லறைத் திருநாள்) நம்மை விட்டுப் பிரிந்து சென்ற இறந்தோரை நினைவு கூருகின்றனர். இறந்துபோன உறவினர்களையும் நண்பர்களையும் நினைவில் இருத்தி, அவர்களின் கல்லறையைச் சுத்தம் செய்து மெழுகுவர்த்தி பொருத்தி, பக்தியோடு வேண்டுதல் செய்கின்றனர். ஒவ்வொரு கல்லறையின் தலைமாட்டிலும் காணப்படும் சிலுவைக் கல் மீது இறந்தோரின் பெயர், பிறப்பு, இறப்பு, பொருத்தமான பைபிள் வசனங்கள் ஆகியன பொறிக்கப்பட்டிருக்கும்.
கல்லறைத் திருநாள் அன்று மட்டும் என்று இல்லாமல், உற்றார்-உறவினரின் இறந்த தினத்தன்றும், முக்கியமாக வீட்டில் கொண்டாடப்படும் விசேஷ தினங்களன்றும் பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் சர்ச் தவிர கல்லறைக்கும் சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.
தறி கெட்டு ஓடும் எண்ணங்களை ஒரு கட்டுக்குள் நிலை நிறுத்தி, தேவையற்ற ஆசைகளுக்கு ஒரு கடிவாளம் இட்டு -விண்ணுலகை நோக்கிய பயணத்திற்கான சரியான பாதையில் நம்மைச் செலுத்துவதற்கு, மறுவுலக வாழ்வைப் பற்றிய சிந்தனைகளும், இறந்தோரைப் பற்றிய நினைவுகளும் பெரிதும் உதவுகின்றன. எனவே நேரிய வாழ்க்கை வாழ்வோம்; அழியாத ஆன்மாவுக்கு மரியாதை செலுத்துவோம்! விண்ணுலக வாழ்வில் இறைவனோடு ஒன்றிக்கும் பாக்கியம் பெறுவோம்.

No comments:
Post a Comment