SHIRDI LIVE DARSHAN

Sunday, 29 January 2012

ஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம்


 மகிமை
 • துர்வாசர் அருளியது.
 • பார்வதியினால் பரமசிவனை மணக்க முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
 • காயத்ரி மந்த்ரத்திற்கு இணையானது. (காயத்ரி மந்த்ரம் 24 அட்சரங்களால் ஆனது. ஸ்வயம்வரபர்வதி மந்த்ரம் 48 அட்சரங்களால் ஆனது.)
 • அணைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம்.
 • மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.
ஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம் (To see in English, click here)
"ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி ஸகல  ஸ்தாவர  ஜங்கமஷ்ய முக ஹ்ருதயம் மம வசமாகர்ஷ ஆகர்ஷாய நமஹ: "
(தினமும் 1008 முறை 108 நாட்கள் விடாமல் பாராயணம் செய்துவந்தால், திருமண தடைகள் அனைத்தும் நீங்கி, விருப்பம்போல் வாழ்க்கை  துணை  கண்டிப்பாக  கிடைக்கும்)  
(பயம் இல்லாமல், தைரியமாக நீங்களே பாராயணம் செய்யலாம். மந்த்ரம் தப்பாக உச்சரித்து விட்டால், தெய்வ குற்றம் வருமோ, அல்லது தீங்கு நேருமோ என்ற பயம் தேவையே இல்லை. கடவுள் அன்னையை போன்றவர். குழந்தை பூ, பூ என்று அழுதாலும், அன்னை உணவை கொடுப்பாளே அன்றி, பூ பறித்து வந்து கொடுக்கமாட்டாள். கடவுளும் அன்னைக்கு ஒப்பானவர். கனிவானவர். எனவே நீங்கள் தவறாக உச்சரித்தாலும், உங்களுக்கு தேவையானதை உணர்ந்து, நிறைவாகவே செய்வார். (உதாரணம்: வால்மீகி மரா, மரா என்றே ஜபித்தார். ஆனாலும், அதை ராம, ராம என்றே கடவுளால் கொள்ளப்பட்டு, ஞானம் அருளி, ராமாயணமும் படைத்தார். இங்கு குலமோ, கோத்ரமோ, ஞானமோ, அறிவோ அடிப்படை இல்லை. வெறும் பக்தியும், நம்பிக்கையுமே இறை வழிபாட்டில் முக்கியம்)
குழந்தை பசித்தால் அழும். அழுத குழந்தைக்கே உணவு கிடைக்கும். ஏனெனில் தாய்க்கு நினைவூட்ட வேண்டியது குழந்தையின் கடமை. அதே போல், இந்த ஸ்வயம்வர பார்வதி மந்த்ரமும் தேவிக்கான ஒரு நினைவூட்டலே. கண்டிப்பாக அம்பாள் வேண்டுவோருக்கு அருளுவார்.  (உங்களால் முடியாவிட்டால், MATRIHELP உதவியை எப்போதும் நாடலாம்)
செய்முறை (ஜெபிக்கும் முறை)
 • சங்கல்பம: சங்கல்பம் என்பது கடவுளுக்கு முன் எடுக்கும் சத்தியம். தங்களது பெயர், கோத்ரம், நக்ஷத்ரம் மற்ற விவரங்களை கூறி, (கடவுளுக்கு தமிழும் தெரியும். எனவே நீங்கள் கண்டிப்பாக தமிழிலும் சங்கல்பம் எடுக்கலாம்.) 1008 முறை ஸ்வயம்வரபர்வதி மந்த்ரம் 108 நாட்களுக்கு விடாமல் செய்வேன் என்று கூறவும்.
 • நேரம: சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.
 • தினசரி தேவை: பூ, தீபம், ஊதுபத்தி, கற்பூரம், நைவேத்யம், பழம், தாம்பூலம். (சராசரி செலவு சுமார் ரூ. 15 மட்டும் ஆகும்) 
 • பூரண பக்தி: ஜெபிக்கும்போது கடவுளை மட்டுமே நினைத்தல் வேண்டும். தினசரி வேலை மற்றும் கவலைகளை சற்றே ஒதுக்கி ஜபம் செய்தல் வேண்டும். (வாழும் வரை கவலைப்பட நேரம் அதிகம் உள்ளது. எனவே, இந்த 108 நாட்களுக்கு தினமும் 2 மணி நேரம் கடவுளுக்கு மட்டும் ஒதுக்கலாமே.)
ஆலோசனை (அ) எச்சரிக்கை: (சங்கல்பம் எடுக்கும் முன்னர், ஒன்றிரண்டு நாட்களுக்கு, சங்கல்பம் இல்லாமல் சாதாரணமாக 1008 முறை ஜபம் செய்து பாருங்கள். ஏனெனில், ஜபம் இரண்டு மணி நேரம் ஆகும். உங்களால் முடியும் என்றால் மட்டும் சங்கல்பம் எடுத்து 108 நாட்கள் ஜெபியுங்கள். இல்லையேல், கவலை வேண்டாம். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
ஏன் உங்களுக்காக நாங்கள் செய்யவேண்டும்?
 1. ஸ்வயம்வர பார்வதி ஹோமம் ரூ. 30000 க்கும் மேலாகும். அனைவராலும் முடியாது. எனவே 100008 முறை ஸ்வயம்வர பார்வதி மூல மந்த்ரம் அதற்கு ஈடானது.
 2. பலர் 10008 முறை ஜபிப்பதற்கே ரூ. 5000 முதல் ரூ. 10000 வரை வசூலிக்கிறார்கள்.
 3. ஜபம் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும். நகரத்தில் வசிக்கும் பலரால் இரண்டு மணி நேரம் காலையில் ஒதுக்க இயலாது.
 4. பூஜை செலவை பகிர்ந்து கொண்டால், செலவு பெருமளவு குறையும். பகிர்ந்து கொள்ள பலரை ஒன்று சேர்க்க வேண்டும். அதை நாங்கள் செய்கிறோம்.

விவரம்பொதுவான சங்கல்பத்துடன்குறிப்புகுறிபிட்டவருக்காக சங்கல்பத்துடன்குறிப்பு
வெள்ளி மோதிரம் (அ) டாலர் செலவுRs.225வெள்ளி டாலர் மட்டும்Rs.225வெள்ளி மோதிரம் அல்லது டாலர். மோதிரம் எனில் மோதிர அளவு கொடுக்க வேண்டும்.
பூஜை பொருட்கள் (பூ, பழம், நைவேத்யம்)Rs.540செலவை பகிர்ந்து ஒருவருக்கு ரூ. 5 வீதம் 108 நாட்களுக்குRs.1620ஒரு நாளைக்கு ரூ. 15 வீதம் 108 நாட்களுக்கு
தட்சிணைRs.135ஒரு நாளைக்கு ரூ.1.25 வீதம் 108 நாளைக்குRs.135ஒரு நாளைக்கு ரூ.1.25 வீதம் 108 நாளைக்கு
தபால் செலவுRs.30பதிவு தபாலில் அனுப்பRs.30பதிவு தபாலில் அனுப்ப
மொத்தம்Rs.930ஒரு நபருக்கான ஜப செலவுRs.2010ஒரு நபருக்கான ஜப செலவு
ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் தங்களது பெயர், கோத்ரம், நக்ஷத்திரம் மற்றும் ஜாதகத்தினை செலவுடன் சேர்த்து எங்களுக்கு அனுப்பலாம்.
கே. ஸ்ரீவத்சன், MATRIHELP, 1-1/A, மந்த்ராலயா காம்ப்ளெக்ஸ், அண்ணா நகர், ராகவேந்திரபுரம், (ராகவேந்திரா வளைவு அருகில்), ஸ்ரீரங்கம், திருச்சி - 620006. ( 9360460340.ringoflife@ymail.com
K.Srivathsan, MATRIHELP, 1/1-A, Mantralaya Complex, Anna Nagar, Raghavendra Puram, Near Raghavendra Arch, Srirangam, Trichy – 620006. 9360460340. ringoflife@ymail.com
குறிப்பு: நமது சாஸ்திரபடி சங்கல்பம் எடுத்தே எதையும் செய்யவேண்டும். எனவே      மோதிரம் செய்து, சங்கல்பம் எடுத்து பின்பே ஜபம் செய்வதால், குறைந்தது 120 நாட்கள் ஆகும்.
திருமணம் மட்டுமின்றி, தம்பதி ஒற்றுமை, குழந்தை பாக்கியதிற்கும்  ஸ்வயம்வரபர்வதி மூல மந்த்ரம் சிறப்பான பலன் அளிக்கும்.
பிராமணர் அல்லாதோருக்கு மட்டும்:
தாழ்மையான வேண்டுகோள்: இதை படிப்போர் அனைவரும், (நம்பிக்கை இல்லை என்றாலும்) தயவு செய்து ஸ்வயம்வரபார்வதி ஒரு முறை முயன்று பாருங்கள். நாங்களும் உதவுகிறோம்.
ஜபிக்க இயலாவிட்டாலும், (அனைவரும்) தயவு செய்து தங்களின் ஜாதகத்தினை (இரண்டு) எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஒன்று பூஜையில் வைக்கவும் மற்றொன்று உங்களுக்கு ஏற்ற வரன் வந்தால் தெரியப்படுத்தவும். உடனே அனுப்பி வையுங்களேன். எங்களால் முடிந்தவரை உதவுகிறோம். மேலும் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இங்குள்ள விவரங்களை தெரியப்படுத்தலாமே.

No comments:

Post a comment