SHIRDI LIVE DARSHAN

Monday, 30 January 2012

ஆஞ்சநேயர் கவசம்


ஆஞ்சநேயர் கவசம்
  ஆஞ்சநேயர் கவசம்
  பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரங்கள்

   


  கிழக்கு முகம்-ஹனுமார்

  (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

  ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

  தெற்கு முகம்-நரஸிம்மர்

  (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

  ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

  மேற்கு முகம்-கருடர்

  (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

  ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.

  வடக்கு முகம்- வராஹர்

  (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

  ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

  மேல்முகம்-ஹயக்ரீவர்

  (இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
  ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.

  நினைத்த காரியம் இனிதே நிறைவேற

  ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா.

  இதை பூஜையில் 108 முறை கூறவும்.

  சகல கலைகளில் தேர்ச்சி, நினைவாற்றலுக்கு

  ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரனாத் பவேத் இதை தினமும் 11 முறை கூறவும்.

  நவக்கிரகங்களின் தோஷம் நீங்க

  ஓம் வருணோ வாயுகதிமான்வாயு கௌபேர ஈஸ்வர ரவிச்சந்திர குஜஸ் ஸெளம்யோ குருக் காவ்யோ சனைச்வர: ராகு கேதுர், மருத்தோதா தாதா ஹர்தா ஸமீரஜா:

  இதை தினமும் காலையில் 11 முறை கூறவும்.

  எதிரிகளால் ஏற்படும் துன்பம் நீங்க

  ஓம் ஜகத்ராதோ ஜகந்நாதோ ஜகதீசோ ஜனேஸ்வர ஜகத்பிதா ஹரிச்ரீசோ, கருடஸ்மய பஞ்ஜன:

  இதை தினமும் 12 முறை கூறவும்.

  கடன் தொல்லையிலிருந்து விடுபட

  ஓம் ருணதர்ய ஹரஸ் ஸூக்ஷ்ம ஸ்தூல ஸ்ர்வ கதப்பு மாந் அபஸ்மார ஹரஸ்மர்த்தர் ச்ருதிர் காதா ஸ்ம்ருதிர் மனு:

  இதை காலை, மாலை 51 முறை கூறவும்.

  தாமதமாகும் திருமணம் விரைவில் நடைபெற

  ஓம் காத்யாயனி மஹாமாயே மஹா யோஹீன் யதீச்வரி நந்தகோப ஸுதம் தேவி பதிம் மே குரு தே நம:

  இதை காலை 12 முறை கூறவும்.

  வீட்டை விட்டு வெளியில் புறப்படும் போது (இதை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் வெற்றியடையும்)

  ஓம் அபராஜித பிங்காக்ஷ நமஸ்தே ராம பூஜித பிரஸ்தானஞ்ச கரிஷ்யாமி ஸித்திர்பவது மேஸதா.

  இதை வெளியில் புறப்படும் போது 3 முறை கூறவும்.

  எல்லா விஷங்களும் நீங்க

  ஓம் ஹ்ரீம் பச்சிம முகே வீர கருடாய பஞ்சமுகி வீர ஹனுமதே மம் மம் மம் மம் மம் ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.

  சகல செல்வங்களும் பெற

  ஓம் ஹ்ரீம் உத்தர முகே ஆதிவராஹாய பஞ்சமுகீ ஹனுமதே லம் லம் லம் லம் லம் ஸகல சம்பத்கராய ஸ்வாஹா.

  பகைவர்களின் பயம் நீங்க

  க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்மயி தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய

  ஹனுமான் துதி

  (பாராயணத்திற்கான கம்பராமாயணப் பாடல்கள்)

  அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்

  சுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி, அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட நந்தலில் லாததூதன் நம்மையும் அளித்துக் காப்பான்

  அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி வெஞ்சினக் கதிர்பின் சென்று முழுமறை யுணர்ந்தாய் போற்றி மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி

  அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன் செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன் வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும் அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

  அன்னகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி

  சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன் வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன் அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்கலை கல்லினைப் பெண்ணாய்ச் செய்தான் கழலிணைப் போற்றுவோமே.

  ஹநுமத் பஞ்ச ரத்னம்

  வீதாகில விஷயேச்சம்
  ஜாதாநந்தாச்ருபுளமத்யச்சம்

  ஸீதாபதிதூதாத்யம்
  வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருதயம்

  தருணாருண முககமலம்
  கருணாரஸபூர பூரிதாபாங்கம்

  ஸஞ்ஜீவந மாசாஸே
  மஞ்ஜுலமஹிமாந மஞ்ஜநயபாக்யம்

  சம்பரவைரிசராதிகம்
  அம்புஜதள விபுலலோசநோதாரம்

  கம்புளமநில நிஷ்டம்
  பிம்பஜ்வலிதோஷ்ட மேகவலம்பே

  தூரீக்ருதஸீ தார்த்தி:
  ப்ரகடீக்ருத ராமவைபவஸ் பூர்த்தி

  தாரித தசமுககீர்த்தி:
  புரதோ மமபாது ஹநுமதோ மூர்த்தி

  வாநரநிகராத்யக்ஷம்
  தாநவகுல குமுத ரவிகர ஸத்ருக்ஷம்

  தீநஜநாவநதீக்ஷம்
  பவநநப: பாகபுஞ்ஜ மத்ராக்ஷம்

  ஏகத் பவநஸுதஸ்ய
  ஸ்தோத்ரம் ய:படதி பஞ்சரத்நாக்யம்

  சிரமிஹ நிகிலாந் போகாந்
  புக்த்வா ஸ்ரீராமபக்திபாக் பகவதி

  ஆதிசங்கரர் அருளிய ஹநுமத் புஜங்க ஸ்தோத்ரம்

  1. ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்சநாங்கம்
  ஜகத்பீதாஸெளர்யம் துஷாராத்ரிதைர்யம்
  த்ருணீபூதஹேதிம் ரணோத்யத் விபூதிம்
  பஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்

  பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.

  2. பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்
  பஜே பாலபாநு ப்ரபாசாருபாஸம்
  பஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்
  பஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்

  பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.

  3. பஜே லக்ஷ்மணப்ராண ரஹாதிதக்ஷம்
  பஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்
  பஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்
  பஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்

  லக்ஷ்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

  4. கராலாட்ட ஹாஸம் க்ஷிதிக்ஷிப்தபாதம் கநக்ராந்தப்பருங்கம் கடிஸ்தோருஜங்கம் வியத்வ்யாப்வகேஸம் புஜாச்லேஷிதாச்சமம் ஜயஸ்ரீ ஸமேதம் பஜே ராமதூதம்

  சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.

  5. சலத்வாலகாத் ப்ரமச்சக்ரவாளம்
  கடோராட்டஹாஸ ப்ரபிந்நாப் ஜஜாண்டம்
  மஹாஸிம்ஹநாதாத் விஸீர்ணத்ரிலோகம்
  பஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்

  ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.

  6. ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே
  ஸரோஷம் ஸமாரோப்யஸிவாவ்ருஷ்டி முக்ராம்
  ககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே
  நடந்தம் மஹாந்தம் ஹநூமந்தமீடே

  போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது !

  7. கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா
  கநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்
  பதாகாதபீ தாப்தி பூதாதிவாஸம்
  ரண÷க்ஷõணிதாக்ஷம்பஜே பிங்காளக்ஷம்

  பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

  8. மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்
  மஹாக்ராஹபீடாம் மஹா தீவ்ரபீடாம்
  ஹரந்தயாஸுதே பாதபத்மாநுரக்கா:
  நமஸ்தே கபிச்ரேஷ்டராமப்ரியாய

  ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

  9. ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:
  ஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே
  த்ரோணசைலஸ்ய ப்ருஷ்டே ப்ரரூடா:
  த்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:

  பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

  10. நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ
  பவாநேவ ஸீதாதி ஸோகாபஹாரீ:
  ஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்
  விலங்க்யோ ருஜங்காஸ்துதோமர்த்ய ஸங்கை:

  பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது  ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி ?

  11. ரமானாக ராம க்ஷமாநாத ராமம்
  அசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்
  வினார்தர்கநாம் ஜீவநாம் தானவானம்
  விடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம

  ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ! இதற்கு என்ன தவம் செய்தனை ?

  12. ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே
  நீரதாரணரூட காட ப்ரதாபி
  பவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்
  குரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ!

  குருவே ஸ்ரீ ஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

  13. மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா
  ந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய
  கதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ
  ப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே

  ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும்  அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

  14. நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்
  நமஸ்தே மஹாவஜ்ரதேஹாய துப்யம்
  நமஸ்தே பராபூதஸூர்யாய துப்யம்
  நமஸ்தே க்ருதாமர்த்யகார்யாய துப்யம்

  சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

  15. நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்
  நமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்
  நமஸ்தே பிங்களாக்ஷõய துப்யம்
  நமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்

  நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

  16. ஹநூமத்புஜங்கப்ரயாதம் ப்ரபாதே ப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய படந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால: நமஸ் ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி

  இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

  ஸ்ரீ ஹனுமத் புஜங்கம் நிறைவுற்றது.

  ஹநுமத் அஷ்டகம்

  1. வைச்சாகமாஸ க்ருஷ்ணாயாம் தசமீ மந்தவாஸரே
  பூர்வபாத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

  2. குருகௌரஸ பூர்ணாய பலாபூப ப்ரியாய ச
  தாநாமாணிக்ய ஹஸ்தாயமங்களம் ஸ்ரீ ஹநூமதே

  3. ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராய ச
  உஷ்ட்ராரூடாய வீராய மங்களம் ஸ்ரீ ஹநூமதே

  4. திவ்யமங்களதேஹாய பீதாம்பரதாரய ச
  தப்தகாஞ்சநவர்ணாய மங்களம் ஸ்ரீ ஹநூமதே

  5. பக்தரக்ஷணஸீலாய ஜாநகீ சோகஹாரிணே
  ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே

  6. பம்பாதீர விஹாராய ஸெளமித்ரி ப்ராணதாயிநே
  ஸ்ருஷ்டிகாரண பூதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

  7. ரம்பாவவிஹாரய ஸுகத் மாதடவாஷிநே
  ஸர்வலோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீஹநூமதே

  8. பஞ்சாநதாய பீமாயகால நேமிஹராயச
  கொளண்டிந்யகோத்ர ஜாதாய மங்களம் ஸ்ரீஹநூமதே

  ஹநுமத் அஷ்டோத்தர சத நாமாவளி

  ஓம் ஆஞ்சநேயா நம
  ஓம் மஹாவீராய நம
  ஓம் ஹநூமதே நம
  ஓம் மாருதாத்மஜாய நம
  ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம
  ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய நம
  ஓம் அசோகவநிகாச்சேத்ர நம
  ஓம் ஸர்வமாயாவி பஞ்ஜநாய நம
  ஓம் ஸர்வபந்தவிமோக்த்ரே நம
  ஓம் ர÷க்ஷõவித்வம்ஸகாரகாய நம

  ஓம் பரவித்யாபரீஹாராய நம
  ஓம் பரஸெளர்யநாஸநாய நம
  ஓம் பரமந்த்ர நிராகர்த்ரே நம
  ஓம் பரயந்த்ரப்ரபேதகாய நம
  ஓம் ஸர்வக்ரஹவிநாஸிநே நம
  ஓம் பீமஸேநஸஹாயக்ருதே நம
  ஓம் ஸர்வலோகசாரிணே நம
  ஓம் மநோஜவாய நம
  ஓம் பாரிஜா தத்ரு மூவஸ்தாய நம

  ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபவதே நம
  ஓம் ஸர்வ தந்த்ரஸ்வரூபிணே நம
  ஓம் ஸர்வமந்த்ராத்மகாய நம
  ஓம் கபீச்வராய நம
  ஓம் மஹாகாயாய நம
  ஓம் ப்ரபவே நம
  ஓம் பலஸித்திகராய நம
  ஓம் ஸர்வவித்யாஸம்பத ப்ரதாயகாய நம
  ஓம் கபிஸேநாநாயகாய நம

  ஓம் பவிஷ்யச்சதுராநநாய நம
  ஓம் குமாரப்ரஹ்மசாரிணே நம
  ஓம் ரத்நகுண்டல தீப்திமதே நம
  ஓம் ஸஞ்சலத் வாலஸந்நத்த நம
  ஓம் லம்பமாநஸிகோஜ்ஜவ லாய நம
  ஓம் கந்த்ர்வவித்யா தத்வஜ்ஞயா நம
  ஓம் மஹாபலபராக்ரமாய நம
  ஓம் காராக்ருஹவி மோக்த்ரே நம
  ஓம் ச்ருங்கலா பந்தமோ சகாய நம
  ஓம் ஸாகரோத்தாரகாய நம

  ஓம் ப்ராஜ்ஞாய நம
  ஓம் ராமதூதாய நம
  ஓம் ப்ரதாபவதே நம
  ஓம் வாநராய நம
  ஓம் கேஸரிஸுதாய நம
  ஓம் ஸீதாஸோக நிவாரணாய நம
  ஓம் அஞ்ஜநாகர்ப ஸம்பூதாய நம
  ஓம் பாலார்க்கஸத்ருஸாந நாய நம
  ஓம் விபீஷணபரிகராய நம
  ஓம் தஸக்ரீவகுலாந்தகாய நம

  ஓம் லக்ஷ்மணப்ராணதாத்தே நம
  ஓம் வஜ்ரகாயாய நம
  ஓம் மஹாத்யுதயே நம
  ஓம் சிரஞ்ஜீவிநே நம
  ஓம் ராமபக்தாய நம
  ஓம் தைத்யகார்ய நம
  ஓம் விகாதகாய நம
  ஓம் அக்ஷஹந்த்ரே நம
  ஓம் காஞ்சநாபாய நம
  ஓம் பஞ்சவக்த்ராய நம

  ஓம் மஹா தபஸே நம
  ஓம் லங்கிணீ பஞ்ஜநாய நம
  ஓம் ஸ்ரீமதே நம
  ஓம் ஸிம்ஹி காப்ராண பஞ்ஜநாய நம
  ஓம் கந்தமாதநசைலஸ் தாய நம
  ஓம் லங்காபுரவிதாஹகாய நம
  ஓம் ஸுக்ரீவஸ்சிவாய நம
  ஓம் பீமாய நம
  ஓம் சூராய நம
  ஓம் தைத்யகுலாந்தகாய நம

  ஓம் ஸுரார்ச்சிதாய நம
  ஓம் மஹாதேஜஸே நம
  ஓம் ராமசூடாமணிப்ரதாய நம
  ஓம் காமரூபிணே நம
  ஓம் பிங்களாக்ஷõய நம
  ஓம் வார்திமை நாசபூஜிதாய நம
  ஓம் கபளீக்ருதமார்த்தாண்ட மண்டலாய நம
  ஓம் விஜிதேந்தரியாய நம
  ஓம் ராமஸுக்ரீவஸந்தாத்ரே நம
  ஓம் மஹாராவணமாதநாய நம

  ஓம் ஸ்படிகாபாய நம
  ஓம் வாகதீஸாய நம
  ஓம் நவவ்யாக்ருதி பண்டிதாய நம
  ஓம் சதுர்பாஹவே நம
  ஓம் தீநபந்தவே நம
  ஓம் மஹாத்மநே நம
  ஓம் பக்தவத்ஸலாய நம
  ஓம் ஸஞ்ஜீவநநகர ஹர்த்ரே நம
  ஓம் ஸுசயே நம
  ஓம் வாக்மிநே நம

  ஓம் த்ருடவரதாய நம
  ஓம் காலநேமிப்ரமத நாய நம
  ஓம் ஹரிமர்கடமாகடாய நம
  ஓம் தாந்தாய நம
  ஓம் ஸாந்தாய நம
  ஓம் ப்ரஸநாத்மநே நம
  ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
  ஓம் யோகிநே நம
  ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
  ஓம் யோகிநே நம
  ஓம் ராமகதாலோலாய நம
  ஓம் ஸீதாந்வேஷண பண்டிதாய நம

  ஓம் வஜ்ரநாய நம
  ஓம் ருத்ரவீகயஸமுத்பவாய நம
  ஓம் இந்திரஜித ப்ரஹிதா மோகப்ரஹ்மா நம
  ஓம் ஸ்த்ரவிநிவாரகாய நம
  ஓம் பார்த் த்வஜாக்ர ஸம்வாஸிநே நம
  ஓம் ஸரபஞ்ஜர பேதகாய நம
  ஓம் தஸபாஹவே நம
  ஓம் லோகபூஜ்யாய நம
  ஓம் ஜாம்பவத் ப்ரீதி வர்த்தநாய நம
  ஓம் ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தராய நம

  ஹநுமத் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்

  1. ஆஞ்ஜநேயோ மஹாவீரோ ஹநூமாந் மாருதா மஜ:
  தத்வஜ்ஞாத ப்ரத: ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயக:

  2. அஸோக வநிகாச் சேத்தா ஸர்வமாயா விபஞ்ஜந:
  ஸர்வபந்த விமோக்தாச ர÷க்ஷõ வித்வம்ஸகாரக:

  3. பரவித்யா பரீஹார: பரஸெளர்ய விநாஸந:
  பரமந்த்ர நிராகர்த்தா பரயந்த்ர ப்ரபேதந:

  4. ஸர்வக்ரஹ விநாசீச பீமஸேந ஸஹாயக்ருத்:
  ஸர்வது:க ஹர:ஸர்வ லோகசாரீ மநோஜவ:

  5. பாரிஜாத த்ருமூலஸ்த: ஸர்வமந்த்ர ஸ்வரூபவாந்
  ஸர்வதந்த்ர ஸ்வரூபிச ஸர்வமந்த்ராத்மகஸ் ததா

  6. கபீச்வரோ மஹாகாய: ஸர்வரோக ஸர:ப்ரபு
  பலஸீத்திகர: ஸர்வ வித்யா ஸம்பத் ப்ரதாயக:

  7. கபிஸேநா நாயகச்ச பவிஷ்யச் சதுராநந
  குமார ப்ரஹ்மசாரீச ரத் நகுண்டல தீபதிமாந்:

  8. ஸஞ்சலத் வால ஸந்நத்த லம்பமாநஸிகோஜ் ஜ்வல:
  கந்தர்வவித்யா தத்வஜ்ஞோ மஹாபல பராக்ரம:

  9. காராக்ருஹ விமோக்தாச ச்ருங்கலா யந்தமோசக:
  ஸாகரோத்தாரக: ப்ராஜ்ஞோ ராமதூத: ப்ரதாபவாந்:

  10. வாநர: கேஸரி ஸுத: ஸீதாஸோகா நிவாரண:
  அஞ்ஜநாகர் பஸம்பூதோ பாலார்க்க ஸத்ருசாநந:

  11. விபீஷண ப்ரியகரோ தசக்ரீவ குலாந்தக:
  லக்ஷ்மண ப்ராண தாதாச வஜ்ரகாயோ மஹாத்யுதி:

  12. சிரஞ்சீவி ராமபக்தோ தைத்யகார்ய விகாதக:
  அக்ஷஹந்தா காஞ்சநாப: பஞ்சவக்ரோ மஹாதபா:

  13. லஞ்கிணீ பஞ்ஜந: ஸ்ரீமாந் ஸிமஹிகா ப்ராண பஞ்ஜந:
  கந்தமாதந சைலஸதோ லங்காபுர விதாஹக:

  14. ஸுக்ரீவ ஸசிவோ பீம: ஸுரோதைத்ய குலாந்தக:
  ஸுரார்ச்சதோ மஹாதேஜா ராமசூடாமணி ப்ரத:

  15. காமரூபி பிங்களா÷க்ஷõ வார்த்தி மைநாகபூஜீத:
  கபலீக்ருத மார்த்தாண்ட மண்டலோவிஜிதேந்த்ரிய:

  16. ராமஸுக்ரீவ ஸந்தாதா மஹாராவண மந்தந:
  ஸ்படி காபோ வாகதீசோ நவவ்யாருதி பண்டித:

  17. சதுர்பாஹுர் தீநபந்துர் மஹாத்மா பக்தவக்ஸல
  ஸஞ்ஜீவந நகாஹர்தா ஸசீர் வாக்மீ த்ருடவ்ரத:

  18. காலநேமி ப்ரமதநோ ஹரிமர்கட மர்கட:
  தாந்த: சாந்த: ப்ரஸந்நாத்மா தஸகண்ட மதாபஹ்ருத்

  19. யோகீராமகதாலோல: ஸீதாத்வேஷண பண்டித
  வஜ்ரதஷ்ட்ரோ வஜ்ரநகோ ருத்ரவீர்ய ஸமுத்பவ:

  20. இந்த்ரஜித் ப்ரஹிதாமோக ப்ரஹ்மாஸ்த்ர விநிவாரக:
  பார்த்த த்வஜாக்ரே ஸம்வாஸீ ச்ரஞ்ஜர பேதக:

  21. தசபாஹுர் லோகபூஜ்யோ ஜாம்பவத் ப்ரீதிவர்த்தந:
  ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தர:

  22. இச்யேவம் ஸ்ரீஹநுமதோ நாம்நா மஷ்டோத்தரம் சதம்
  ய: படேச் ச்ருண்யாநநித்யம் ஸர்வாந் காமா நவாப்நுயாத்

  இதி காளிகாரஹஸ்யே ஹநுமதஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

  ஸ்ரீ ஆஞ்ஜனேய க்ருத ஸ்ரீஸீதாராம ஸ்தோத்ரம்

  1. அயோத்யாபுரநேதாரம் மிதிலாபுர நாயிகாம்
  ராகவாணாம் அலங்காரம் வைதேஹாநாம் அலங்க்ரியாம்

  2. ரகூணாம் குலதீபம் ச நிமீநாம் குலதீபிகாம்
  ஸுர்யவம்ஸஸமுத்பூதம் ஸோமவம்ஸஸமுத்பவாம்

  3. புத்ரம் தஸரதஸ்யாத்யம் புத்ரீம் ஜனகபூபதே:
  வஸிஷ்டா நுமதாசாரம் ஸதாநந்தமதாநுகாம்

  4. கௌஸல்யாகர்ப்பஸம் பூதம் வேதிகர்ப்போதிதாம் ஸ்வயம்
  புண்டரீகவிஸாலாக்ஷம் ஸ்புரதிந்தீவரேக்ஷணாம்

  5. சந்த்ரகாந்தாந நாம்போஜம் சந்த்ரபிம்போமாநநாம்
  மத்தமாதங்ககமநம் மத்தஹம்ஸ வதூகதாம்

  6. சந்தநார்த்ர புஜாமத்யம் குங்குமார்த்ரபுஜஸ்தலீம்
  சாபாலங்க்ருதஹஸ்தாப்ஜம் பத்மாலங்ருதபாணிகாம்

  7. ஸரணாகதகோப்தாரம் ப்ரணிபாதப்ரஸாதிகாம்
  காலமேகநிபம் ராமம் கார்த்தஸ்வரஸமப்ரபாம்

  8. திவ்யஸிம் ஹாஸநாஸீநம் திவ்யஸ்ரக் வஸ்த்ரபூஷணாம்
  அநுக்ஷணம் கடாக்ஷõப்யாம் அந்யோந்யேக்ஷண காங்க்ஷிணௌ

  9. அந்யோந்யஸ்த்ருஸாகாரௌ த்ரைலோக்ய க்ருஹதம்பதீ
  இமௌ யுவாம் ப்ரணம்யாஹம் பஜாம்யத்ய க்ருதார்த்ததாம்

  10. அநேந ஸ்தௌதி ய: ஸ்துத்யம் ராமம் ஸீதாம் ச பக்தித:
  தஸ்ய தௌ தநுதாம் புண்யா: ஸம்பதஸ்ஸகலார்த்ததா:

  11. ஏவம் ஸ்ரீராமசந்த்ரஸ்ய ஜாநக்யாஸ்ச விஸேஷத:
  க்ருதம் ஹநுமதா புண்யம் ஸ்தோத்ரம் ஸத்யோ விமுக்திதம்

  12. ய: படேத் ப்ராதருத்தாய ஸர்வாந் காமந்அவாப் நுயாத்

  ஸ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் ஸம்பூரணம்

  அனுமன் கவசம்
  (ஸ்ரீ ராமர் அருளியது)

  அன்றாடமும் படிப்பதோடு, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரத்தடியில் அமர்ந்து படிப்பது மிகு சிறப்பு.

  ஹனுமான் பூர்வத பாது தக்ஷிணே பவனாத்மஜ:
  ப்ரதீச்யாம் பாது ர÷க்ஷõக்ன: ஸெளம்யாம் ஸாகர தாரனு:
  ஊர்த்வம்மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்து மேஹ்யத:
  லங்கா விதாஹக : பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம்
  ஸுக்ரீ வ ஸ சிவ: பாது மஸ்தகே வாயு நந்தன:
  பாலம் பாது மஹாவீர: ப்ருவோர் மத்யே நிரந்தரம்
  நேத்ரோ சாயாபஹாரீச பாதுமாம் ப்லவகேஸ்வர:
  கபாலௌ கர்ணமூலேது பாதுமே ராமகிங்கர:
  நாஸாயாம் அஞ்சனாஸுனு: பாதுவக்த்ரம் ஹரீஸ்வர
  பாது கண்டஞ்ச னதத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுராய்சித:
  புஜௌ பாது மஹா தேஜா : கரௌது சரணாயுத:
  நாகன் நகாயுத: பாது குöக்ஷள பாது கபீஸ்வர:
  வ÷க்ஷõ முத்ரரபஹாரீச பாது பார்ஸ்வே மஹா புஜ
  ஸீதா ஸோகப்ரஹர்தாச் ஸ்தனௌளி பாது நிரந்தரம்
  லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதுதஸே நிரந்தரம்
  நாபீம் ஸ்ரீ ராமசந்த்ரோ மே கடிம் பாது ஸமீரஜ:
  குஹ்யம் பாது மஹாப்ராச்ஜ: ஸக்தினீச ஸிவப்ரியா:
  ஊரூச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன:
  ஜங்கே பாது கபிஸ்ரேஷ்ட : குல்பம் பாது மகாபல:
  அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப:
  அங்கான்யமித ஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா
  ஸர்வாங்காநி மஹாஸுர: பாது ரோமாணி சாத்மவான்
  ஹனூமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண:
  ஸ ஏவ புருஷஸ்ரேஷ்ட : புக்திம் முக்திஞ்ச விந்ததி:

  ஆஞ்சநேயரின் தமிழ் போற்றி

  ஓம் அனுமனை போற்றி
  ஓம் அஞ்சனை புதல்வனை போற்றி
  ஓம் அறக்காவலனே போற்றி
  ஓம் அவதார புருஷனே போற்றி
  ஓம்  அறிஞனே போற்றி
  ஓம் அடக்க வடிவே போற்றி
  ஓம் அதிகாலைப் பிறந்தவனே போற்றி
  ஓம் அசோகவன மெரித்தவனே போற்றி
  ஓம் அர்ஜுனன் கொடியானவனே போற்றி
  ஓம் அமாவாசையில் பிறந்தவனே போற்றி

  ஓம் ஆனந்த வடிவனே போற்றி
  ஓம் ஆரோக்கியமளிப்பவனே போற்றி
  ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
  ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
  ஓம் இசைஞானியே போற்றி
  ஓம் இறைவடிவே போற்றி
  ஓம் ஒப்பிலானே போற்றி
  ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
  ஓம் கதாயுதனே போற்றி
  ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி

  ஓம் களங்கமிலானே போற்றி
  ஓம் கர்மயோகியே போற்றி
  ஓம் கட்டறுப்பவனே போற்றி
  ஓம் கம்பத்தருள்வோனே போற்றி
  ஓம் கடல் தாவியவனே போற்றி
  ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
  ஓம் கீதாபாஷ்யனே போற்றி
  ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
  ஓம் கூப்பிய கரனே போற்றி
  ஓம் குறுகி நீண்டோனே போற்றி

  ஓம் குணடக்ரிய ராகனே போற்றி
  ஓம் கௌண்டின்ய கோத்ரனே போற்றி
  ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
  ஓம் சலியாவரம் அருள்வோனே போற்றி
  ஓம் சிவபக்தனே போற்றி
  ஓம் சிரஞ்சீவியே போற்றி
  ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
  ஓம் சீதாராம சேவகனே போற்றி
  ஓம் சூரனே போற்றி
  ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

  ஓம் சொல்நயனே போற்றி
  ஓம் சூரிய சீடனே போற்றி
  ஓம் சோர்விலானே போற்றி
  ஓம் சோகநாசகனே போற்றி
  ஓம் தவயோகியே போற்றி
  ஓம் தத்வஞானியே போற்றி
  ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
  ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
  ஓம் தீதழிப்பவனே போற்றி
  ஓம் தீயும் கடானே போற்றி

  ஓம் நரஹரியானந்தர் ஆனவனே போற்றி
  ஓம் நாரத கர்வபங்கனே போற்றி
  ஓம் நொடித்தோர்வாழ்வே போற்றி
  ஓம் பண்டிதனே போற்றி
  ஓம் பஞ்சமுகனே போற்றி
  ஓம் பக்தி வடிவனே போற்றி
  ஓம் பக்தரக்ஷகனே போற்றி
  ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
  ஓம் பக்தராமதாசர் ஆனவனே போற்றி 60

  ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
  ஓம் பயமேயறியானே போற்றி
  ஓம் பகையழிப்பவனே போற்றி
  ஓம் பவழமல்லிப்பிரியனே போற்றி
  ஓம் பிரம்மச்சாரியே போற்றி
  ஓம் பீம சோதரனே போற்றி
  ஓம் புலனை வென்றவனே போற்றி
  ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
  ஓம் புண்ணியனே போற்றி
  ஓம் பொட்டிட மகிழ்வோனே போற்றி

  ஓம் மதிமந்திரியே போற்றி
  ஓம் மனோவேகனே போற்றி
  ஓம் மாவீரனே போற்றி
  ஓம் மாருதியே போற்றி
  ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
  ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
  ஓம் மூலநக்ஷத்ரனே போற்றி
  ஓம் மூப்பிலானே போற்றி
  ஓம் ராமதாஸனே போற்றி
  ஓம் ராமநாம தாஸனே போற்றி

  ஓம் ராமதூதனே போற்றி
  ஓம் ராம சோதரனே போற்றி
  ஓம் ராமநாம ஸ்மரணனே போற்றி
  ஓம் ராமநாமத்திருப்போனே போற்றி
  ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
  ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
  ஓம் ராமாயண நாயகனே போற்றி
  ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
  ஓம் ராகமூல புருஷனே போற்றி
  ஓம் ருத்ர வடிவே போற்றி

  ஓம் லக்ஷ்ய புருஷனே போற்றி
  ஓம் லக்ஷ்மணனைக் காத்தவனே போற்றி
  ஓம் லங்கா தஹனனே போற்றி
  ஓம் லங்கிணியை வென்றவனே போற்றி
  ஓம் வஜ்ரதேகனே போற்றி
  ஓம் வாயுகுமாரனே போற்றி
  ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
  ஓம் வணங்குவோர் வாழ்வே போற்றி
  ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
  ஓம் விளையாடும் வானரனே போற்றி 100

  ஓம் விஸ்வரூபனே போற்றி
  ஓம் வியாசராஜர்க்கு அருளியவனே போற்றி
  ஓம் வைராக்கியனே போற்றி
  ஓம் வைகுண்டம் வெறுத்தவனே போற்றி
  ஓம் வேதக்கடலே போற்றி
  ஓம் வெண்ணையுண்டவனே போற்றி
  ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
  ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

  மாருதி கவசம்

  மார்கழி மூலம் அனுமன் பிறந்தான்
  அனைவர்க் அருள அவனியில் வந்தான்
  அஞ்சனை மாருதம் அளித்த நற்செல்வன்
  அனுமனை போற்றி அவனியில் வாழ்த்த

  வஞ்சனை நீக்கும் அஞ்சனை செல்வன்
  கதாயுதனை காற்றின் மைந்தனை இன்சொல்
  அதேகொண்டு அவனை அனைத்தும் காக்க
  சதா சபிடேகம் சாற்றுவர் உவந்து

  காக்க காக்க அனுமன் காக்க
  நோக்க நோக்க நுணுகி நோக்க
  தீர்க்க தீர்க்க தீவினை எல்லாம்
  சேர்க்க சேர்க்க செம்பொருள் அனைத்தும்

  ஆர்க்கும் பகைவர் அலறிஓடிட
  வேர்க்குள் பகையாய் விழைந்தவர்அழிய
  காக்க காக்க கண்ணுதல் காக்க
  பார்க்குள் அவன்போல் இறைவன் இல்லை

  ஓம்ரீம்ஸ்ரீஜெய ராம் எனும் அனுமன்
  க்ரீம்க்ளீம் ஸ்ரீராம் பக்த அனுமன்
  ஹம்க்ரீம் என்றே கொடியில் ஆர்க்கும்
  ஸ்ரீஜெய ராம பக்த அனுமன்

  காக்க காக்க கவசம் இதனை
  போக்க போக்க பொய்யை தீய்மையை
  தீய்க்க தீய்க்க தீவினை எல்லாம்
  சேயாய் பிறந்து செய்வினை அறிந்து

  சேவை செய்ய வாயு உகந்தான்
  ஆவி அனைய  அஞ்சனை மாதும்
  அதனை உகந்தாள் அவனி உதித்தான்
  மாருதி என்போன் மாருதம் அனையன்

  பாரதில் என்றும் நிலவும் சீரோன்
  பாரதம் போற்றும் பண்பு டையாளன்
  காரணம் அவனே காருண்யம் அவனே
  நாராயணன் ராமன் நடவெனச் சொன்னான்

  ஆதவன் மகிழ்ந்து கல்வியைத் தரவும்
  பூதவம் செய்ததால் பூமியில் வாழ்ந்தும்
  மாதவம் இயற்று சிரஞ்சீவி அவனே
  ஆதவன் குலத்தின் ஆணி அவனே

  ராமனும் கண்ணனும் வாழ்ந்த நற்பூமியில்
  ராமனைத் தன்னுடை நெஞ்சினில் வைத்தான்
  ராகவன் தூதன் ஆதவன் குலத்தைக்
  காத்து நின்றவன் காக்க என்னை

  காக்க காக்க அனுமன் காக்க
  காக்க காக்க கால்கள் இரண்டை
  காக்க காக்க கணுக்கால் முழந்தாள்
  காக்க காக்க கருணையில் காக்க

  தீக்குள் புகையாய் திகழும் பொய்மை
  போக்க போக்க புன்மையைப் போக்க
  குருதி அதனில் ஒருரணம் இன்றி
  மாருதி காக்க மாருதம் போல

  இறுதி இல்லா இறைவன் காக்க
  உறுதி அளிக்கும் உயர்வோன் காக்க
  அஞ்சனை செல்வன் அடியினை காக்க
  வஞ்சனை ஏதும் வாட்டா வண்ணம்

  ஆஞ்ச நேயனே அடிவயிறு காக்க
  துஞ்சம் போதும் துயருறா வண்ணம்
  காக்க அனுமன் கண்ணினை காக்க
  போக்க எந்தப் பொல்லா வினையும்

  நோக்க நோக்க உண்மையை உறுதியை
  தீங்குள் இலங்கை செற்றான் காக்க
  போக்கும் வரத்தும் கபீந்திரன் காக்க
  நோக்க காக்க நுணுகி நோக்க

  பிட்டம் அதனை அனுமன் காக்க
  வட்டக் குதத்தை வாலினால் காக்க
  அட்டமச் சனியால் அடையும் துன்பம்
  அனைத்தும் நீக்கி அனுமன் காக்க

  சிற்றிடை அதனை அஞ்சனை செல்வன்
  சிறப்புடன் காக்க சேர்க்கப் பெருமை
  நற்றவ மிக்கோர் நவையறு நல்லோர்
  நாணங் கயிற்றை அனுமன் காக்க

  நற்குறி தன்னை காற்றின் செல்வன்
  காக்க காக்க காக்கவந் துவந்தே
  மார்பின் மதாணி மதகரி கேள்வன்
  மாருதி காக்க மதிக்க வந்துவந்தே

  ஆர்முன் பின்னென் றதுஒரு கேள்வி
  ஆகா வண்ணம் அனுமன் காக்க
  சீர்வனம் உறும்இறை செல்வன் காக்க
  சீர்த்திகள் அருள்க செந்திரு மாலென

  கூர்நக முடைய குரங்கினத் தலைவன்
  காக்க காக்க கதிர்முடியாலே
  ஆர்க்க ஆர்க்க அனைத்துயர் போர்க்களம்
  வேர்க்க வேர்க்க சூர்ப்பகை வெருள

  தீர்க்க தீர்க்க தினகரன் மாணி
  தீராக் கொடுமை எல்லாம் தீர்க்க
  ஈரல் இரைப்பை இதனைக் காக்க
  ஆவலைத் தூண்டும் அரியவன் நீயே

  ஆமரி அவனின் ஒர் துணை நீதான்
  போயெவர்க் கூறினும் போற்றுதல் அறியார்
  நீயறி இதனை நினைவாய்க்கொண்டே
  நித்தம் நேர்ந்திடில் நிரம்ப சந்தோஷமே.

  மார்பைக் காக்க மாருதி மகிழ்ந்தே
  மற்றுள உறுப்பை மகிமையன் காக்க
  சார்புள உறுப்பை சற்குணன் காக்க
  சற்று மேலான கழுத்தை அனுமன்

  ஆர்வமுடனே அணைத்தொனைக் காக்க
  அருவிழி இரண்டு சூர்ப்பகை காக்க
  அனைத்துப் பெருமை எனக்கு உறினும்
  தருவெனும் அனுமன் என் சிரம் காக்க

  நாசியை வாசியை நல்லவன் காக்க
  பெருமைகொள் அனுமன் பிடரியைக் காக்க
  பேசிடும் நாவைப் பெரியோன் காக்க

  அருவிழி தன்னில் அனுமன் காக்க
  அரஹர சிவசிவ ஸ்ரீஜெய ராமமென
  அனைவரும் துதிக்கும் அனுமனே காக்க
  காக்க காக்க கவலைகள் நீக்க

  ஐயும் கிலியும் சௌவும்  நீக்கி
  அனைத்தும் அழிக்கும் அரியவன் காக்க
  பொய்யும் களவும் போதாறு கென்றே
  புரையா அன்பு மறைமுதல் காக்க

  எய்யும் கணைபோல் இறைவர்க் காமோர்
  இமையே போலும் தூதன் காக்க
  செய்யும் செயலில் செம்மை வல்லான்
  செம்பொருள் காக்க சிறந்திட காக்க

  நவகோள் தோஷம் நீங்க

  சனியின் தந்தை உன்னகுரு நாதன்
  சற்குணன் பருதி அதனால் தொல்லை
  இனியெனக் கில்லை என்றும் காக்க
  இமையாத் தேவர் வியப்பினில் ஆழ

  கனியெனும் எம்மிறை கண்ணுதற் பெருமான்
  உனைவடித் திட்டனர் உத்தமப் பொருளாய்
  பனிமிகும் மார்கழி மூலம் கேது
  பார்புகழ்  வலியவன் காலில் தோன்றினை

  இனியன நல்குவை எத்தோஷ மாயினும்!
  இன்குரு வீட்டினில் பிறந்தவ னன்றோ!
  இராகு செவ்வாயும் உன்னருள் இருப்பின்
  இராவுமத் துன்பம் இதுதான் உண்மை

  புராதனன் புனிதன் இராமன் போற்றும்
  புண்ணிய மூர்த்தி கண்ணியன் அனுமன்
  விராதனை வென்றோன் வேண்டிய நல்கும்
  வினயமே ஆஞ்ச நேயன் என்றறிநீ.

  குராமணம் கொண்ட கூந்தற் கோவியர்
  திரேதாயுகத்தில் இவைனைத் தேர்ந்தான்
  தேர்ந்தவன் தன்னை சேர்ந்தனன் அதனால்
  தீர்த்தனன் பெரும்பகை செழும்புகழ் கொண்டான்

  நேர்ந்தனன் மனத்தில் நினைவில் கனவில்
  ஓர்ந்தனன் அவனை அவனே அனுமன்
  சூரிய சுக்கிர புதபக வானும்

  ஆரியன் உன்சொல் அறியாரோகாண்
  வேரியங் கமலைச் செல்வி ஸ்ரீதேவி
  வேட்டனளே உனைச் சிரஞ்சீவி என்றே

  வருக வருக அனுமன் வருக

  வருக வருக அனுமன் வருக
  வருக வருக அஞ்சனை சிறுவன்
  கெருவம் தீர்க்க வருக அனுமன்
  அருவரு அதுவாய் அனுமன் வருக
  ராமசாமியின் தூதன் வருக
  நாமம் ஆயிரம் சாற்றுவோன் வருக
  காமம் நீக்கிய கடவுள் வருக
  எமப்புணையாம் எம்மிறை வருக
  அருளுரு வாகிய ஐயா வரக
  தெருளினை மாற்றும் தேவா வருக
  உருகவே வைக்கும் ஒருவர் வருக
  மருளற வைக்கும் மாருதி வருக
  விந்தைக் கிறையாம் வித்தே வருக
  முந்தித் தவம்செய் மூதறி முதல்வா
  சிந்தித்து இன்னே சீக்கிரம் வருக
  வந்தித்தோம் உனை வருகவென்று உவந்தே.

  முந்துக முந்துக முந்துக
  முந்துக முந்துக முதல்வன் முந்துக
  செந்தணல் படவழ கெழுதிய ஓவியம்
  முந்துக முந்துக முறையுடன் முந்துக
  இந்தனம் அதநில் இலங்கையை எரித்த
  அந்தண முந்துக அறவோன் முந்துக
  நந்தியின் நாதனும் நாரண தேவனும்
  அந்தியும் பகலும் சிந்தித் திருக்கும்
  சிந்தையன் முந்துக சீரியன் முந்துக
  சீமான் அனுமன் செம்பொருள் முந்துக

  வழிபடும் முறை

  சிலையோடு சித்திரம் கதையொடு ஆரல்
  நிலைவிளக் கதனொடு நேரிய குடும்பம்
  வலையென உன்றனை விரித்திடும் மந்திரம்
  நிலைபெறக் கூறி தகுவன சாத்தி
  வழிபடு போதில் வருவாய் அதனில்
  இழிவுற இலங்கை எரித்தவப் போதில்
  எழிலுறு வுடைய எம்மிறை நீயே
  ஒழித்தனை அன்றோ ஒண்ணை அவுணர்
  அந்தப் போதில் ஆர்த்தநல் நெஞ்சம்
  இந்தப் போதில் இங்குற வேண்டும்
  எந்தப் போதில் எதுவரு மேனும்
  நிந்தனை இன்றிநிகழ்ந்திட வேண்டும்
  கந்தம் துளசி களப கஸ்தூரி
  சொந்தம் சாந்தம் சுந்தரன் தனக்கே
  தந்திடு வெண்ணை தகுவடைமாலை
  நொந்திடா வண்ணம் வெற்றிலை மாலை
  பன்னீர் ஆட்டுக பங்கயன் தனக்கே
  நன்னீர் ஆட்டுக நாயகன் தனக்கே
  உண்ணீர் என்றே ஊட்டுக பல்கனி
  எண்ணீர் இவனே எம்மிறை என்பீர்
  மாருதி உண்டேல் சோருதல் இல்லை
  ஆறுதல் அவனே அவனே இறைவன்
  காரியம் காரணம் ஆனவன் அவனே
  கருதிய நிகழ்த்தும் கண்ணனும் அவனே
  வேரியங்கமலைச் செல்வியம் போற்றும்
  மாருதி தன்னை மனதில் இறுத்துக.

  பயன்

  வஞ்சனை அகலும் வயிரம் வாய்க்கும்
  துஞ்சிடும் போதும் துன்பம் வராது காண்
  அஞ்சுவர் பகைவர் அடலே றணையான்
  நஞ்சுண்டாலும் நம்முயிர் காப்பான்
  மனையின் வஞ்சகம் நீக்குவன், மாற்றுவன்
  புணைபோல் பொய்யா கூட்டைக் களவை
  தினமும் உன் முன்னரே தெரிகுவன் மாருதி
  இனமுடன் வாழ்ந்திடினியன் நல்குவன்
  கோளுறு பாபம் தீர்க்கும் அனுமன்
  பாழ்பிற விதனையே நீக்கும் அனுமன்
  கேளெனவந்து உதவிடும் அனுமன்
  வாழ்வுறச் செய்யும் வடிவுடை இறைவன்
  நாற்பதோ டைந்து நாளே அவனை
  நோற்பவர் பற்பல பெறுவர் இதனை
  நூற்பயன் என்ன நுவலும் துளசி
  நாற்பயன் பெற்றிட நல்குவன் அனுமன்
  அனுமன் எனுமோர் அறமே கவசம்
  அனுமன் எனுமோர் அறிவே கவசம்
  அனுமன் எனுமோர் அணுநேர்த் தியனே
  தினமென் கவசம் திவ்வியம் அருள்வோன்.

  நன்றி: ஸ்ரீ வன்னி விநாயகர் புத்தகம் நிலையம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை. 

  1 comment:

  1. நன்றி....வாழ்த்துகள்

   ReplyDelete