SHIRDI LIVE DARSHAN

Showing posts with label ஜே.கிருஷ்ணமூர்த்தி. Show all posts
Showing posts with label ஜே.கிருஷ்ணமூர்த்தி. Show all posts

Monday, 30 January 2012

தியானம் ஜே.கே. அவர்களின் பார்வையில்


தியானம்
ஜே.கே. அவர்களின் பார்வையில்

திரு. ஜே.கிருஷ்ணமூர்த்தியின்(ஜே.கே)
  ஜே.கே. அவர்கள் தியானம் செய்வதற்கு சொல்லித் தந்த நூதனமான வழிமுறை இதுதான்.
ஒருவன் தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கக்கூடாது. அவன் விழிப்புடன் இருந்து (aware) தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களைக் குறை கூறாமலும், தீர்ப்பு (judgement) எதுவும் சொல்லாமலும், நிந்தனை செய்யாமலும் இருக்க வேண்டும். தன் மனதில் இடம் பெறும் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆழ்ந்து கவனித்து வர வேண்டும்.
இப்படி அவன் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆழ்ந்து கவனித்து வரும்போது, தன் மனதின் ஆழத்தில் மறைந் திருக்கும் பொறாமை, பயம், ஏக்கம், ஆசை போன்றவைகளைக் கண்டுகொள்ள முடியும்.
தன்னைப்பற்றி நன்கு அறிந்து கொண்டவனால்தான் தியானம் செய்வதில் வெற்றி பெற முடியும். தன் மனதில் இருக்கும் அழுக்குகளைக் கண்டுகொள்ளாதவன், எவ்வளவு கடினமாக முயற்சி செய்து தியானம் செய்து வந்தாலும், ஒரு நல்ல பலனையும் பெற முடியாது.
ஒருவர் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கிறார். அந்தப் பாட்டில் உங்கள் மனம் லயித்து விடுகிறது. முழு கவனத்துடன் (total attention) நீங்கள் பாட்டைக் கேட்டு வருகிறீர்கள். அப்போது உங்கள் மனதில் எண்ண ஓட்டம் முற்றிலுமாக நின்று விடுகிறது. அப்போது
மனதில் அமைதி நிலைத்து நிற்கிறது.
நாம் முழுமையாகக் கவனம் செலுத்தும்போது நம்மனதில் எண்ணங்கள் உருவாவதில்லை. அப்படிப்பட்ட சமயங்களில் அமைதி நிறைந்த ஒரு அசைவற்ற மனம் (still mind)
உருவாகிவிடுகிறது. அப்படிப்பட்ட மனம் தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை. கட்டுப்பாட்டின் மூலம் (control) மனதில் எண்ணங்களைத் தடுத்து நிறுத்தி அமைதியை உருவாக்க முடியாது. நாம் செய்து வரும் செய்கையில் முழு கவனம் செலுத்தும்போது மனதில் எண்ணம் உருவாவது நின்று விடுகிறது. இப்படிப்பட்ட
மனநிறையை வளர்த்துக் கொள்ளுவதைத்தான் நாம் தியானம் என்று கூறுகிறோம்.
ஒருவர் தன் குழந்தையைப் பார்க்கும்போது, "என் பையன் சரியாகப் படிப்பதில்லை. நிறைய பொய்களைச் சொல்லி வருகிறான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து வருகிறான்" என்பதைப் போன்று நினைக்க ஆரம்பிக்கிறார்.
இப்போது தந்தையும் அவருடைய மகனும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து தனித்து
நிற்கிறார்கள். இந்த நிலையில் காண்பவனுக்கும் (observer) காண்பதற்கும் (one which is observed) இடையே இடைவெளி ஏற்பட்டு விடுகிறது.
எங்கு பிரிவுகள் இருக்கின்றனவோ, அங்கு சண்டை, மனக்குழப்பம் போன்றவைகள் இருக்கத்தான் செய்யும். எங்கு இடைவெளி இருக்கிறதோ, அங்கு எண்ணச் சூறாவளி
வீசத்தான் செய்யும்.
இதற்கு மாறாக தந்தையும் தனயனும் ஒன்றாகி விடும் போது, அங்கு ஒரு பரவச நிலை உருவாகிவிடும். அந்த நிலையில் எண்ணம் எதுவும் உருவாவதில்லை.
அதாவது காண்பவன் தான் கண்டு வருவதோடு ஒன்றாக இணைந்து விடுகிறான். இப்போது காண்பவன் மறைந்து விடுகிறான். அவனுக்கு கண்டுவருவதுான் தெரிய வருகிறது. இந்த
நிலையில் பிரிவுகள் இல்லை. இடைவெளி எதுவும் இல்லை. இப்போது எண்ணம்
முற்றிலுமாக உருவாகாத நிலை ஏற்பட்டு விடுகிறது.
மனதில் எண்ண ஓட்டங்கள் உருவாவதைத் தடுக்க, எண்ணுபவன் (thinker) எண்ணமாகவும் (thought), கட்டுப்படுத்துவதாகவும் (one which is controlled) ஆராய்ச்சி செய்பவன்
ஆராய்ச்சியாகவும், அனுபவிப்பவன் (experiencer), அனுபவித்து வருவதாகவும் (experience) ஒன்றாகக் கலந்து மாறி நிற்க வேண்டும்.
இந்த நிலையை அடைவதுதான் தியானமாகும்.   

ஜே கிருஷ்ணமூர்த்தி


ஜே கிருஷ்ணமூர்த்தி

Philosopher J. Krishnamurti
அது எனது உயர்நிலைப் பள்ளியின் இறுதி நாளொன்றில் நடந்தது. இலங்கையின் திருக்கோண மலையிலிருந்த ராமக்கிருஷ்ண மிஷன் பாடசாலையில் படிப்புக்குப் புறம்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு ஆசிரியரிடமிருந்து நான், ஜே.கிருஷ்ணமூர்த்தயின் The First and Last Freedom என்ற நூலை இரவல் வாங்கினேன். அதுவரை நான் படித்த அதற்குப் பின்பும் நான் படிக்கவிருந்த ஏராளமான நூலாசிரியாகளிலுள் இந்த நூலாசிரியரல்லாத ஒருவரது வாசகங்கள் எவ்வளவுக்கு என்னைச் சல்லடையிடப் போகின்றன என்று நான் அப்போது சந்தேகிக்கவில்லை.
நூலை எனக்குத் தந்தவர் ஒரு மார்க்ஸீயவாதியெனினும் ராமக்கிருஷ்ண மிஷனின் அடிப்படைகளில் மதிப்புக் கொண்டவர். ஏற்கனவே அவரிடம் மார்க்ஸீயம், கம்யூனிஸம் பற்றி சில பல உபதேசங்களைப் பெற்றிருக்கிறேன். எனது சில பல நண்பர்கள் அவர் மூலம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவட்டார்கள். நான் அவரிடம் ஏற்கனவே கம்யூனிஸ போதம் பெற்றுவிட்டார்கள். நான் அவரிடம் கேட்டேன். 'மனிதனை உந்துகிற உண்மையான வேட்கையைப் பற்றி மார்க்ஸ் என்ன சொல்கிறார்?'
மாக்ஸியத்தை நான் பின்பு கற்றறிந்ததுக்கும் அவர் சொன்ன பதிலுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. ஆனால் இலங்கையிலும் இங்கும் நான் சந்தித்த எத்தனையோ மார்க்ஸிஸ்டுகளிடம் நான் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, பதில் தெரியாமல் விழித்திருக்கிறார்கள். அவர் சொன்ன பதில்: மனிதனை உந்தும் வேட்கை பொருளாதார வேட்கை என்பதுதான் மார்க்ஸின் கோட்பாடு.'
மார்க்ஸிற்கும் எனக்கும் ஒத்துவராது போலிருக்கிறதே என்று நினைத்த நான் இன்னொரு நாள் கேட்டேன்:'மனித லட்சியம் ஆன்ம ஈடெற்றமாக, உண்மையை அறிந்து விடுதலை பெறுவதாக இருக்க வேண்டும் என்பதுபற்றி உங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் கம்யூனிஸ முறைகளுக்கும் இந்த லட்சியத்துக்கும் சம்பந்தமில்லையே!
கம்யூனிறும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தைச் சிருஷ்டிக்கும். இந்த சமூகத்தை சிருஷ்டித்த பிறகு நாம் ஆன்ம ஈடேற்றத்துக்கான முயற்சிகளில் இறங்கத் தடையிராது.'
இதில் நான் சிரித்துவிட்டேன். ஆசிரியரும் சேர்ந்து சிரித்தார். இதற்குப் பின்புதனா அவரிடமிருந்து ஜே கிருஷ்ணமூர்த்தியின் மேற்படி நூல் கிடைத்தது. அத்துடன், நூலைத் திரும்பக் கேட்காமல் என்னிடமே விட்டுவிட்டார். இப்படியும் ஒரு மார்க்ஸிஸ்டு.
ஆனால் வேறு பையன்கள், முக்கிய உதாரணமாக எனது சீனியர் பையன் ஒருவன், 'சோவியத் ரஷ்யாவில் கார் பண்ணுகிறான். ஒரு கார் இந்த லைட்போஸ்டிலிருந்து அந்த லைட்போஸ்ட் வரை அவ்வளவு நீளம்,' என்று பேசும் ரகமான கம்யூனிஸ்டுகளாகி விட்டார்கள். இத்தகையர்களிடம் பள்ளி நாட்களில், அவ்வளவு நீளமான கார் சந்தில் திரும்புவது எப்படி?' என்று கேட்கும் ரகமானவனாக நான் மாறினேன். வளர்ந்த பிறகு எனது எழுத்தியக்கமும் எழுத்துலகத்து கம்யூனிஸ்டுகளின் அபத்தவாதங்களை இதே விதமாக விசாரிக்கும் இயக்கமாக வளர்ந்தது என்பது ஒருபுறமிக்க, அன்று பள்ளி நாட்களில் என்னைச் சுற்றி முளைத்த குட்டிக் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவருமே பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனது குடும்பம் ஏழைக் குடும்பம் என்படு மட்டுமல்ல, ஆழ்ந்த சிக்கல்களும் வன்முறை நிறைந்தவர்களது உபாதைகளும் நிறைந்த சூழலைக் கொண்டிருந்தது. இருப்பினும் இதனூடே எனது தாயாரின் நுட்பமான குணாம்சங்கள் பரிகார அம்சமாக விளங்கி இருக்கின்றன. மார்க்ஸீயக் கோட்பாடுகளில் ஏதும் ஆழமான இருந்திருந்தால் நான்தான் கருவிலே திருவுடைய கம்யூனிஸ்டாகி இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்துக் குட்டிக் கம்யூனிஸ்டுகளையும், தொடர்ந்து எழுத்துலகத்தில் தெரிய வந்த கம்யூனிஸ்டுகளையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய கம்யூனிஸ்டாகி இருக்க வேண்டும். எனது சூழலை பொருளாதாரக் கோட்பாட்டின் மூலம் சந்திப்பதற்கான தண்டால், பஸ்கிகளில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி, கம்யூனிஸ உபாஸனையை நான் அதன் கோட்பாடுகளின் மூலம் மட்டுமின்றி அதனை உபாஸிப்பவர்களை அவதானிப்பதன் மூலமும் கூடத்தான் கணித்திருக்கிறேன். வன்முறைக் குணத்தை மனிதாபிமானம் என்று மாய்மலம் பண்ணுகிறவர்களும், அப்பட்டமான சுயலாப வேட்கைகளை சோஷலிஸ லட்சியம் என்று திருகுதாளம் செய்கிறவர்களும், தரமற்ற எழுத்தை முற்போக்குப் படைப்பு என்று திரித்துக் காட்டுகிறவர்களும் மலிவதற்கு கம்யூனிஸ இயக்கம் இடம் தந்திருக்கிறது. இதன் விளைவாக, இந்த இயக்கத்தின் வழிமுறைகளையே பிரதிபலிக்கிற எதிர் இயக்கங்கள் ஜனித்தன. பொது வாழ்வும் கலாசார வாழ்வும் நீதியுணர்வு செம்மை, தரிசனப் பண்பு ஆகியவை ஏதுமற்ற கீழ்மைக் குணங்களின் பலமாகின.
என்னுடன் சேர்ந்த அன்று தமிழுலகின் கம்யூனிஸ இயக்கங்களில் உள்ள குறைபாடுகளைத் தங்கள் உபாயங்களைத் தாக்கியவர்களது இயக்கங்கள் இன்று அதே குறைபாடுகளைத் தங்கள் உபாயங்களாகக் கொண்டுவிட்டன. இதன் காரணம் ஜீவிதப் போராட்ட நியதிகளுக்கு இவை ஆட்பட்டவைதான். 'உயிரோடு இருப்பதற்காக எதுவும் செய்யலாம்,' என்ற ரகமான மிருக நோக்கம் உள்ளவர்கள் நீதி, செம்மை, தரிசனம், ஆகிய நுண்ணிய மனித நோக்கங்கள் உள்ளவர்களாக தங்களை ஸ்தாபிக்க முயன்றமைதான். இந்நிலையின் விடம்பனம், சமரஸங்களாகவும் ஸ்தாபன வலுவிற்கு முக்கியத்துவம் தருவதன் மூலமும் இன்று வெளிப்பட்டு பவனி வந்து கொண்டிருக்கிறது.
இன்றைய சீரிய தமிழிலக்கிய உலகில் எனது குரலுக்கு மேற்படி விடம்பனத்திலிருந்து மாறுபட்ட ஒரு தொனி இருப்பதை உணர்கிறவர்கள் உள்ளனர். இந்தத் தொனியைக் காப்பாற்றிய எனது அந்தரங்க சக்தி ஜே கிருஷ்ணமூர்த்தியால் போஷிக்கப்பட்டமையை அவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். பிரசுர சாதனங்கள் மூலம் நான் வெளிப்படு முன்பே ஜே கிருஷ்ணமூர்த்தியின் The First and Last Freedom எனக்குக் கிடைத்தமை இதில் முக்கிய விஷயமாகிறது. இருந்தும் நான் எனது கட்டுரைகளில் அவரது பெயரைக் குறிக்பிடாமல் நீண்ட காலங்களாகத் தவிர்த்து வந்திருக்கிறேன். இதன் காரணம் நான் அவரைப் பின்பற்றியவன் அல்ல என்பதுதான். எனக்கு இயற்கையாக இருந்த சில விசேஷ குணங்கள் உண்மையில் காப்பாற்றப்பட வேண்டிய அபூர்வத் தன்மை உள்ளவை என்பதுதான் முதன்மையாக அவரது நூல்களிலிருந்த நான் பெற்ற போஷனை.
இயற்கை அழகில் லயித்தல், எனது சுபாவ சக்திக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற கலையுலகை நாடதல் என்பவை இந்தக் குணங்களாகும். சூழலின் அழுத்தமும் ஆலோசகர்களும் என்னைத் திருத்த முயன்றவர்களும் இந்த எனது போக்குகளை பலவீனப்படுத்தி விடாதபடி அன்று உதவியவர் ஜே கிருஷ்ணமூர்த்திதான். இதற்கும் மேலே போய், பால்ய வயதில் சமூக மரபுகளினது கெடுபிடிகளின் விளைவாகப் பிறக்கக்கூடிய குற்ற உணர்வு என்ற விபரீதமான பின்னணி எதுவும் பிறந்து விடாமலும் அவரது போஷனை காத்திருக்கிறது. 'இது நல்லது, அது கெட்டது' என்ற பிளவுபட்ட ம஧னொபாவத்தின் கொடுங்கோல் என் மனசில் எப்போதுமே வலிமையற்றுத்தான் இயங்கி வந்திருக்கிறது. இதற்கும் ஜே.கிருஷ்ணமூர்த்தியை நான் காரணம் காட்டலாம்.
உண்மையைத் தேடுதல், ஆத்மானுபவத்தை உத்தேசித்தல் அகியவற்றை முக்கியமாக்குகிறபோது, உலகையும் இயற்கையையும் சுபாவசக்திகளையும் இதன் விளைவாகச் செயலூக்கத்தையும் மனம் முக்கியமாகக் கொள்வதில்லை. இவற்றுக்கு முக்கியத்துவம் தராவிட்டால் மனசின் நுட்பமான உணர்வுகள் மழுங்கிவிடும். இந்த ஆபத்து எனக்கு ஏற்படாதவாறு ஜே கிருஷ்ணமூர்த்திதான் காத்திருக்கிறார். ஏனெனில் எழுத்துலகினுள் நுழையும் தறுவாயில் சந்நியாஸம் வாங்கிக் கொள்கிற நோக்கமும் எனக்கு இருந்திருக்கிறது. சந்நியாஸ மதிப்பீடுகள் உணர்வுகளை மழுங்க அடித்துக் கொன்றுவிடுகிற குணத்தைக் கொண்டவை. இது விஷயமாக ஜே கிருஷ்ணமூர்த்தி தீவிரமான கருத்துக்களை வெளியிட்டடிருக்கிறார். உணர்வுகளைக் கொல்கிற மத மரபுகளையும், அனுஷ்டானங்களையும், மதிப்பீடுகளையும் மிகுந்த வலிமையுடன் சாடி நொறுக்கிவிடுகிற சக்தி அவருடைய கருத்துக்களுக்கு உண்டு.
உணர்வின் பரிபூர்ணமான சுதந்திர நிலையிலேயே அது தனது குழந்தைமைக்குத் திரும்ப முடியும். விருப்புமற்று வெறுப்பு மற்ற புத்துணர்வே இந்த குழந்தமை. இந்தப் புத்துணர்வுதான் உள்ளதை உள்ளபடி தரிசிக்க உறுதுணையாகும். உணர்வுக்கு மரபுகள் இடும் தளைகள், உள்ளதை உள்ளபடி தரிசிக்க உதவாதவை. இந்த மரபு பழையதோ, புதியதோ என்பதல்ல பிரச்னை. உள்ளது என்பது இப்போது மனம் கொள்ளும் தாகங்களும் எதிர்ப்புகளும் அனுதாபங்களும்தான். இந்நிலையில் உழன்றபடியே இதைத் தாண்டி உள்ள ஏதோ ஒன்றை லட்சியமாகக் கொள்வதென்பது இப்போது 'உள்ளது' எதுவோ அதனை தரிசிப்பதனின்றும் தப்புவதாகிவிடும். இப்போது உள்ளது தாகம். எவ்வித முன்னபிப்பிராயமும் அற்ற பரிவுடன் மெளனமாக இதைப் பார்த்தால்தான் முக்கியமானது. இந்தப் பார்வையில் நிச்சலன நிலை மட்டும் உண்டு. அதாவது பார்க்கப்பட்டதை விரும்பாலும் வெறுக்காமலும் அது இத்தகையது என்று சிந்திக்காமலும் 'சும்மா' பார்ப்பதே இது. மரபு வசப்பட்ட உள்ளம், அரசியல் ரீதியான உள்ளம் எதுவும் பார்க்கப்பட்ட தாகத்தினை, ஆராயவோ அபிப்பிராயம் சொல்லவோ ஏற்கவோ மறுக்கவோதான் செய்யுமே அன்றி, சும்மா பார்த்திருக்காது. எனவே தாகங்கள் மேலும் சலனங்களாகத் தொடர்கின்றன. மனசின் சலனம் என்பது மரபினாலும் பழக்கத்தினாலும் சூழலினாலும் உருவாக்கப்பட்ட மனக் கட்டமைப்புகளின் விளைவுதான். 'உண்மை' என்ற ஏதோ ஒன்றை லட்சியமாக்குகிறபோதும் கூட பழைய அல்லது புதிய கட்டமைப்பு ஒன்றுக்குத்தான் மனம் வசப்படுகிறது. நேற்று அனுபவித்ததையே மீண்டும் மனம் அசைபோடுகிறபோதுகூட, நாம் நமக்கு நாமே உருவாக்கிய ஒரு மனக் கட்டமைப்புக்கு வசப்படுகிறாம். இந்த அமைப்பைக் கொண்டு இப்போது எழும் மனப் பிரச்னையான தாகம், கோபம் முதலியவற்றைச் சந்திக்கிறோம். இது குழந்தைமையுடன் தன்னைத்தானே பார்ப்பதாகாது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் இந்த அணுகுமறை ஒரு மார்க்கமல்ல. ஏனெனில் 'உண்மை என்பது மார்க்கங்களற்றது,' என்பதே அவரது அடிப்படைச் செய்தி. மேலே சொல்லப்பட்டிருக்பதன் தாத்பர்யம் இதுதான். இதனை அவர் எண்ணற்ற கோணங்களில் இருந்து வெளிப்படுத்தி உள்ளார்.
சரி, இப்படி தனது தாகங்கள் முதலியவற்றை அவதானிப்பதால் என்ன லாபம்?
இந்தக் கேள்வியே தாகங்களை அவற்றின் தளத்தில் ஒரு பிரச்னையாகக் காணாத மனசில்தான் ஜனிக்கும். தாகங்களை பிரச்னைகளாக, அவதானத்துக்குரிய இயற்கை வடிவுகளாகக் காண வேண்டுமானால் மனசிற்கு மென்மையும் வீரியமும் இருந்ததாக வேண்டும. தாகங்களை அவதானிப்பதால் எதோ லாபம் கிடைக்கும் என்று புறப்பட்டால், அந்த லாபத்தைப் பற்றிய தாகமாக மற்றைய தாகங்கள் மாற்றியமைக்கப்படும். தாகம் என்ற மனநிலை இவ்விதமாக தற்காப்படைந்த விடும். அந்த ஏதோ ஒரு லாபத்துக்கான தாகம் என்ற நிலையில் மனசின் சுகதுக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் அமையும். இதுவே உலகைப் பிளவுபடுத்தும் உன்னத லட்சியங்களினது மோதல்களாக வடிவெடுக்கிறது.
இதனால்தான் 'உண்மைக்கு மார்க்கம் இல்லை' என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. ஏனெனில் மார்க்கம் ஒரு லட்சியத்திற்குச் செல்லும் பாதையாகும். லட்சியமாகக் கொள்ளப்படும் எதுவும், மனசினது தாகம் பூணும் வெளிவேஷம்தான். லட்சியத்தை விட்டுவிட்டால் தாகம் தாகமாகவே நிற்கும். 'சிலுவைப் போர்' என்பது லட்சியமாக உருமாற்றப்பட்ட வெறும் போர்தான். இதில் சிலுவை என்ற லட்சியாம்சத்தை அகற்றினால்தான் இது வெறும் போர் என்று புலனாகும். இதே போன்று உலக சரித்திரத்தில் எண்ணற்ற ரணகளங்களாக லட்சியம் நியாயமடைந்துள்ளது. இந்த இயக்கத்தின் சுனை, ஒவ்வொரு தனிமனித உள்ளமுமே என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதனால்தான் தனது தாகங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அவதானிப்பதால் என்ன லாபம் என்ற கேள்வி பாரதூரமான அளவுக்குத் தவறானது. இங்கேதான் குழந்தைமையுடன் எவ்வித லாபநோக்குமற்று தன்னைத்தானே அவதானிப்பது என்பது விரிவடையும். இவ்விதம் தன்னைத் தானே அவதானிப்பதென்பதும், இயற்கையை உலகை, வாழ்வை அவதானிப்பதுவும் ஒரே கதியில் நிகழ்பவை.
ஜே.கிருஷ்ணமூர்த்தி முதன்மையாக இயற்கையை அவதானிக்கும் கலையினையே தமது செய்திக்கு அடித்தளமாக்குகிறார். 'உண்மையைத் தேடி' அவரிடம் போகிறவர்கள் இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை. ஆனால் இயற்கையுடன் கொள்ளும் உறவு, ஒரு வகையில் அந்தரங்கத் தளம் ஒன்றில் ஜே.கிருஷ்ணமூர்த்தியினது விகாஸம் ஒன்றுடனேயே கொள்ளும் உறவாகக் கொள்ளத் தக்கதுதான். அவருடன் எவ்வளவுக்கு ஒருவர் நெருங்கிப் பழகி இருந்தாலும் சரி இயற்கையுடன் பழகாதவராயிருந்தால் அந்த ஒருவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியுடனும் உறவு பூணவில்லை என்றதான் ஆகும்.
நான் ஜே.கிருஷ்ணமூர்த்தியை 1970 - 71 வாக்கில் ஒரு சில நிமிஷங்கள் சென்னையில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவருடன் அதிகம் பழகுவது முக்கியமற்ற சில்லறை விஷயமாகத்தான் எனக்குத் தோன்றி வந்திருக்கிறது. இருந்தும், நான் என்னை அவதானிக்கும் கலையில் ஈடுபட்டமையிலேற்பட்ட வீரிய ஏற்ற இறக்கங்களுக்கேற்ப அவருடன் எனது உறவும் பல்வேறு ரஸ பேதங்களைக் காட்டி வந்திருக்கிறது. 'பிறருக்கும் எனக்கும் இடையே யாரும் வர முடியாது,' என்று அவர் உறுதியாக்க கூறுவதனை நான் இவ்விடத்தில் ஸ்தாபிக்க விரும்புகிறேன். 'உண்மையான ஜே.கிருஷ்ணமூர்த்தி, உலகப்பிரசித்தி பெற்ற ஒரு சரீர வடிவம் அல்ல' என்பதை உணர்வது இதற்கு அவசியம். நமது கவனம் விழாத திசையில் தனது கவனத்தைச் செலுத்துவதன் மூலம் நம்முடனேயே உறவு கொள்ள நாடுகிற ஒரு அபூர்வ சக்தி என்றுதான் அத்தகையவரைக் கொள்ள வேண்டும். இதை உணர்கிறவருக்கும் அவருக்குமிடையில் எவரும் வரமுடியாதுதான்.
(ஜனவரி - மார்ச்சு 1991ல் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கட்டுரை)

எண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி


எண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தின் நாள் குறிப்பு இங்கே …  (அடைப்புக்குறிக்குள் இருப்பது, அடியேனின் கமெண்ட் ..ஹி ஹி)

************************************************************************************************* 
image 
அவர் ஓர் அறிஞர். ப்ல புத்தகங்களை படித்தவர்.. ஏதாவது பேசும்போது, அவற்றில் இருந்து அனாயசமாக மேற்கோள் காட்டுவார். புத்தகம் சொல்வதை தவிர இவருக்கு என்று தனியாக சிந்தனை இருக்கிறதா என நமக்கு தோன்றும்.
           அவருக்கு என்று அல்ல.. உண்மையில் சொந்த சிந்தனை , சுய சிந்தனை என்று ஒன்று கிடையாது. எல்லா சிந்தனையுமே ஏதாவது ஒரு அச்சில் வார்க்க்கப்பட்டதுதான் . ( பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள், கடவுள் இல்லை என நம்புவார்கள்.. ஓர் ஆன்மீக சூழ்  நிலையில் வளர்பவர்கள் , கடவுள் இருக்கிறார் என நம்புவார்கள்.. இரு தரப்புமே தாம் சுய சிந்தனையாளர்கள் என்றுதான் நினைத்துக்க்கொள்வார்கள் )
          நம் சுற்றுப்புறமே நம் சிந்தனையை உருவாக்குகிறது.. எனவே சுதந்திரமான சிந்தனை என்று ஒன்று கிடையாது.. சிந்தனை நமக்கு தெளிவையும் அளிக்காது.

         வந்து இருந்தவர் கற்பதில் ஆர்வம் மிக்கவர் . அறிவுசுமையை சுமந்து கொண்டு இருந்தார். சமஸ்கிருத மொழியில் உற்சாகமாக பேச ஆரம்பித்தார். கேட்பவருக்கு அது புரியுமா இல்லையா என்றெல்லாம் கவலையே படவில்லை..
               தான் பேசியது எதுவும் புரியவில்லை என்பது கொஞ்ச நேரம் கழித்துதான் அவருக்கு தெரிந்தது,, எனக்கு அந்த மொழி தெரியாது என்ற தகவல் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது
        “ உங்கள் சொற்பொழிவை கேட்டு இருக்கிறேன். சம்ஸ்கிருதத்தில் வல்லவனாக இருக்கும் ஒருவர்தான் அப்படி பேச முடியும். அல்லது அதன் மொழி பெயர்ப்பையாவது நீங்கள் படித்து இருக்க் வேண்டும் “
   மத புத்தகங்கள், ஆன்மீகம், மனவியல். தத்துவம் என எதுவும் படித்ததில்லை என்று சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை.
           படிப்புக்கு நாம் இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுப்பது வினோதம்தான். அறிவு ஜீவிகள் என்பவர்கள் ஒரு டேப் ரிக்கார்டர்கள் போல இருக்கிறார்கள்.. என்ன ரிக்கார்ட் ஆனதோ அதை ஒப்பித்தபடி இருக்கின்றனர் ( என்கவுண்டர் விவகாரத்தில், உணர்வு பூர்வ விபரங்கள் எதையும் புரிந்து கொள்ளாமல் , மனித உரிமை , சட்டம், லா பாயிண்ட் என இந்த அறிவு ஜீவீகள் உளறியதை , இங்கே நினைத்து பார்க்கலாம் ) 
இவர்களுக்கு அறிவு முக்கியம்.. அனுபவம் முக்கியமில்லை. ஒரு விஷ்யத்தை பற்றிய அறிவு அந்த விஷ்யததை நேரடியாக உணர்வதை தடுக்கிறது. அறிவு என்பது கற்காத ஒருவனை ஏங்க வைக்கிறது.. கற்றவனுக்கு மரியாதையை தருகிறது .
அறிவு என்பது ஒரு வகை போதை. இது புரிதலக்கு அழைத்து செல்லாது..
படிப்பதன் மூலம் அறிவை வளர்க்கலாம். ஞானத்தை ,புத்தியை அல்ல.
ஞானத்தை வாங்கும் கரன்சியாக அறிவை நினைக்க முடியாது. சிந்தித்தல் என்பது அறிதலை தடுக்கும். நம்பிக்கை , கருத்து , அறிவு போன்றவை ஞானத்துக்கு தடைக்கல் 
( கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என முன்பே ஒரு நம்பிக்கை இருந்தால், உண்மை நிலை என்ன என்பது புரியாது.. ஒரு மனிதன் நல்லவனா , இல்லையா என்பதை திறந்த மனத்துடன் அணுகினால்தான் கண்டுபிடிக்க முடியும் ) 
எண்ணங்களால் நிறைந்த மனம் ஒரு பிரச்சினையை சரியாக கணிக்க முடியாது. சிந்தனை இருக்கும் வரை , அது தன்னை பற்றியேதான் நினைக்கும்.. எனவே புதிய கருத்துக்கள் நுழைய வாய்ப்பில்லை.  ( நான் நாத்திகவாதி, ஆன்மீகவாதி , அந்த இய்க்கத்தை சேர்ந்தவன், இவர் ரசிகன் என்றெல்லாம் சொல்லி கொள்வதில் ஒருவகை ஆறுதல் கிடைக்கும். ஆனால் இது புரிதலை தடுக்கும் )
மனம் தான் நினைப்பதை உணமையாக்கும்… கடவுள் இல்லை என    நினைத்தால் , இல்லை என அதனால் நிருபிக்க முடியும். இருக்கிறார் என நினைத்தால் அதையும் நிரூபிக்க முடியும். பறக்க முடியும் என நினைத்தால் , அதற்கான விமானத்தை கண்டுபிடிக்கமுடியும்… கெட்டதையே நினைத்து கெட்டவனாகவும் முடியும்…
   “ சரி சார்..   ஆனால் கண்ட விஷ்யங்களை பற்றி நினைப்பதை விட , கடவுள் பற்றி நினைப்பது நல்லதுதானே “ 
              நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நாம் . எதை நினைக்கிறோம் என்பது முக்கியம் அல்ல.. அது எப்படி செய்ல்படுகிறது என கவனித்தலே முக்கியம். 
கடவுளை பற்றி நினைக்கலாம் அல்லது கீழ்த்தரமாக எதையாவது நினைக்கலாம். நினைப்புக்கேற்ப விளைவுகள் உண்டு.
ஆனால் இரண்டிலுமே சிந்தனைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. தன்னையே அது முன் நிறுத்துகிறது ஆகவே கடவுளை பற்றி நினைத்தாலும், கீழ்த்தரமாக எதையாவது நினைத்தாலும் அடிப்படையில் இரண்டுமே ஒன்றுதான்.. ( விளைவுகள் வேறு வேறாக இருக்கும் என்பது வேறு விஷ்யம் ) .
இப்படி ஆதிக்கம் செலுத்தும் மனதின் செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சம்பவம் நடக்கிறது . அதை நாம் எப்படி எதிர்கொண்டோம் என்பதுதான் நம் அனுப்வம்.. இந்த அனுபவம் வார்த்தை வடிவில் மாறி மனதில் நினைவாக பதிகிறது . இப்போது நமக்கு கிடைக்கும் அனுபவங்களை வைத்து இந்த நினைவு , மனதில் மாற்றம் அடைந்து பதிகிறது..இந்த அடிப்படையில் செயல்படுவதைத்தான் சிந்தனை என்கிறோம் . (அதாவது நிகழ்காலத்தை , கடந்த காலத்தை வைத்து சந்திக்க முயல்கிறோம் )
“  அவ்வள்வுதானா? ஆழந்த சிந்தனை, புத்தாக்க சிந்தனை , மாற்று சிந்தனை என்றெல்லாம் இல்லையா.. எல்லாமே டேப் ரிக்கார்ட் மாதிரி, மெம்ரி அடிப்படையிலான் செயல்தானா ? “
புனித சிந்தனை, அறிவு ஜீவி சிந்தனை என்றெல்லாம் மனம் தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் , ஆனால் எல்லாவர்ருக்கும் அடிப்படை ஒன்றுதான் . உயர்ந்த விஷ்யத்தை பேசுவதால் உயர்ந்தவன் என்பது இல்லை.. உய்ர்ந்த விஷ்யங்கள் மனதில் பதிந்து இருக்கின்றன என்பதே இதன் பொருள். இதற்கு காரணம் நம் ச்சுழ் நிலை ( என்வே யாரையும் இளக்காரமாக நினைக்க கூடாது )
“ எண்ணங்களுக்கு அப்பால்  நான் எப்படி செல்வது ?:
  தவறான கேள்வி.. எண்ணங்களுக்கு அப்பால் நாம் செல்ல முடியாது, ”நான்” என்பது எண்ணங்களினால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான்..  எண்ணம் இல்லை என்றால் நான் இல்லை.. எனவே எண்ணத்திற்கு அப்பாற்பட்ட நிலைக்கு “ நான் “ செல்ல முடியாது.
எண்ணம் என்பது முடிந்த நிலையில் உண்மை தன்னை வெளிக்காட்டும் . இதை படித்து தெரிந்து கொள்ள முடியாது 
” அப்படி என்றால் உண்மையை எப்படித்தான் கண்டு பிடிப்பது? “
கண்டு பிடிக்க முடியாது.
கண்டு பிடிக்க முயற்சி செய்தால் , நாம் கண்டு பிடிக்க விரும்புவதே, நம் கண் முன் நிற்கும் . அது உண்மையாக இருக்காது, 
எந்த கட்டுபாடும் , முயற்சியும் இன்றி மனம் அடங்கிய நிலையில் உண்மை தன்னை வெளிக்காட்டும்,. எந்த விருப்பு வெறுப்பும் இன்றி இந்த உண்மையை பார்த்த்லே விடுதலைக்கு வழி..
உண்மையே நம்மை விடுவிக்கும்.. முயற்சி அல்ல

அனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே


அனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே


ஒரு விஷயத்தை பற்றிய கருத்து , அந்த விஷயத்தை புதிதாக பார்ப்பதை தடை செய்யும் என்கிறார் ஜெ கிருஷ்ணமூர்த்தி..
க்டவுள் இருக்கிறாரா இல்லையா என்பதில் மட்டுமல்ல , ஒரு மலரின் அழகை ரசிப்பதிலும் கூட , முன்கூட்டியே ஒரு கருத்து இருப்பது தெளிவான பார்வை தடுக்கும் என்கிறார்
************************************************************************************************************
அனுபவம் என்பது வேறு.. அனுபவித்தல் என்பது வேறு. நமது அனுபவங்கள் புதிதாக அனுபவிப்பதை தடை செய்கின்றன. மோசமான அனுபவம் அல்ல்து இனிதான அனுபவம் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. இரண்டுமே இடையூறுதான்.
அனுபவம் என்பது காலத்தின் பிடியில் உள்ளது., அனுபவம் முடிந்து போனது. இறந்த கால்ம். நிகழ்காலத்திற்கேற்ப இது உயிர் பெறுகிறது. வாழ்க்கை என்பது நிகழ்காலத்தில் நிகழ்வது. இது அனுபவம் அல்ல.
அனுபவத்தின் நிழல் நிகழ்காலத்தில் விழுவதால், அனுபவித்தல் என்பது முழுமையாக இல்லாமல் அனுபவம் ஆகிறது.
அனுபவங்களால் ஆனதுதான் மனம். எனவே இது எதையும் அனுபவிக்க முடியாது.  தொடர்ச்சி எதுவும் இல்லாமல் ஒரு விஷ்யத்தை புதிதாக பார்க்கும் தன்மை மனதுக்கு இல்லை. அனுபவம் இல்லாத இடத்தில்தான் அனுபவித்தல் நிகழும்..
மனம் தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றைத்தான கற்பனை செய்து அதைத்தான் பார்க்கும். மனம் செயல்படுபவதை நிறுத்தினால்தான் தெரியாத ஒன்றை பார்க்க முடியும்..
அனுபவத்தின் வெளிப்பாடுதான் சிந்தனை. இது நினைவு சார்ந்தது. சிந்தனை இருக்கும்வரை அனுபவித்தல் இருக்காது.
சரி, அனுபவத்தை எப்படி துறப்பது? இப்படி துறக்க நினைப்பதே , துறக்க முடியாமல் செய்து விடும்.
துறக்கவேண்டும் என்பது ஓர் ஆசைதான். ஆசையற்ற அமைதியான நிலையே அனுபவித்தலுக்கு அவசியம்… ஆனால் மனம் அந்த நிலையை அடைய பேராசை படுகிறது… தான் அனுபவித்ததை அனுபவமாக மாற்றபார்க்கிறது. எனவே அனுபவம் அதை அனுபவித்தவர் என்ற இருமை நிலை தோன்றுகிறது..
ஒன்றை முழுமையாக அனுபவிக்கும்போது அங்கு அனுபவிப்பனோ , அனுபவிக்கபடும் பொருளோ இருக்காது… அனுபவிதல் மட்டுமே நிகழும். நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ண்ம் இருக்காது..சிந்தனை இல்லாமல் மனம் அமைதியாக இருக்கும். ஒரு விண்மீனை பார்த்தால் , அதன் அழகை முழுதும் ரசிப்போம், நான் அதை ரசிக்கிறேன் என்ற எண்ணம் இல்லாத நிலையில் அனுபவம், அனுபவிப்பவன் என்ற இருமை இல்லை.
இந்த நிலையை அடைய எந்த வழிமுறையும் இல்லை. முயற்சி செய்து அடையவும் முடியாது .
காலம் கடந்த அமைதியை , நான் என்ற எண்ணம் மறையும்போதுதான் அடைய முடியும்…

பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்காதீர்கள் – ஜே கிருஷ்ணமூர்த்தி


பிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்காதீர்கள் – ஜே கிருஷ்ணமூர்த்தி

j_krishnamurti-2




நம்ம துன்பங்களுக்கெல்லாம் ஒரு நல்ல பதில் வேண்டும் என்பதில் நமக்கு எவ்வளவு அக்கறை !! தீர்வு வேண்டும் என்ற நமது துடிப்பு , பிரச்சினை என்ன என்பதை அமைதியாக பார்க்கும் தன்மையை பாதிக்கிறது. பிரசினைதான் முக்கியம்.. தீர்வு அல்ல. ஒரு தீர்வை தேடினால் , கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் பிரச்சினை அப்படியேதான் இருக்கும். ஏனென்றால் தீர்வுக்கும் , பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை . பிரச்சினையிலிருந்து தப்பிக்கும் ஒரு யுக்தியாகத்தான் தீர்வு என்பதை தேடுதலை பயன்படுதுகிறோம் . அந்த தீர்வில் அர்த்தம் இருக்காது. எனவே புரிதல் என்பதும் இருக்காது . எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஒன்றுதான். அந்த அடிப்படை காரணம் என்ன என பார்க்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்வது மேலும் கஷ்ட்த்தையும் , சிக்கலையும்தான் ஏற்படுத்தும். 
( குடியின் தீமையை அறிந்து கொள்வதால் மட்டும் குடியில் இருந்து விடுதலை பெற முடியாது. குடியை நிறுத்தபோகிறேன் என்று உறுதி எடுப்பது பெரும்பாலும் தோல்வியில் முடிவது இதனால்தான் ) 
பிரச்சினையை புரிந்து கொள்வது முக்கியமானது என்ற தெளிவு வேண்டும். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுதலையாவதன் முக்கியத்துவம் புரிய வேண்டும். அப்போதுதான் பிரச்சினை எங்கிருந்து தோன்றுகிறது என்பதை பார்க்க முடியும். பிரச்சினைகளிலிருந்து விடுதலை இன்றி அமைதி இல்லை. மகிழ்ச்சிக்கு அமைதியே அடிப்படை. ஆனால் அதுவே முடிவு அல்ல. காற்று இல்லாத போது தண்ணீர் குளம் அமைதியாக இருக்கும். அதே போல பிரச்சினைகள் இல்லாதபோது மனம் அமைதியாக இருக்கும். ஆனால் மனதை முயற்சி செய்து அமைதியாக்க முடியாது . ( தியானம் செய்வது, மந்திரம் சொலவது போன்றவை மூலம் ) .அப்படி செய்தால் அந்த மனம் உயிர் துடிப்போடு இருக்காது. 
மனம் தெளிவாக இருக்கும்போது பிரச்சினையின் அடிப்படையை தெளிவாக பார்க்க முடியும். கவனிப்பு என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த முடிவு கிடைதால் நல்லது, இது கெட்ட்து என்பது போன்ற நம்பிக்கைகள் எதுவும் இல்லாமல் வெறுமனே பார்க்க வேண்டும்.


“ நடக்க முடியாத ஒன்றை சொல்கிறீர்கள். நமது கல்வி என்ன சொல்கிறது. நல்லது கெட்ட்தை பிரித்து பார். ஒப்பிடு .. முரண்படு. தேர்ந்தெடு. தீர்ப்பளி என்பதைத்தான் நாம் கற்றிருகிறோம். எதுவும் தீர்ப்பளிக்காமல் வெறுமனே கவனி என்கிறீர்களே. இதெல்லாம் வேலைக்கு ஆகுமா ? தவறாக கற்றுகொடுத்து விட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதை எப்படி மறப்பது? அதில் இருந்து எப்படி விடுபடுவது? “


வெறுமனே கவனித்தல் , செயலற்ற விழிப்புணர்வு – இவைதான் புரிதலுக்கு அடிப்படை என்பதை உங்களால் உணர முடிந்தால் , இந்த உண்மையே உங்களுக்கு விடுதலை வழங்கும். செயல் அற்ற – ஆனால் விழிப்புணர்வு மிக்க நிலையின் அவசியம் புரியவில்லை என்றால் தான் “ எப்படி “ என்ற கேள்வி பிறக்கிறது. உண்மைதான் விடுதலை தருகிறது. தியான முறைகளோ , வேறு வழிமுறைகளோ அல்ல . அமைதியான கவனிப்புதான் புரிதலை தருகிறது என்ற உண்மையை பார்க்க முடிந்தால், கண்டித்தல் நியாயப்படுதுதல் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். ஓர் ஆபத்தை பார்த்தவுடன் உடனடியாக தப்பிக்க முயல்வோம். ஏன் எதற்கு எப்படி என கேள்வி கேட்பதில்லை. அதே போன்ற தீவிரத்துடன் செயலற்ற விழிப்புணர்வின் அவசியத்தை பார்க்க முடியவில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறீர்கள். 
இந்த அவசியத்தை ஏன் பார்க்க முடியவில்லை ?

” நானும் முயல்கிறேன் , ஆனால் இது போல நான் இதற்கு யோசித்து பார்த்த்தில்லை. நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: என் பிரச்சினைகளில் இருந்து விடுதலை வேண்டும். பெரிய டார்ச்சரா இருக்கு.. எல்லோரையும் போல சந்தோஷமா இருக்க விரும்புறேன் “

தெரிந்தோ தெரியமலோ , செயலற்ற விழிப்புணர்வு என்ற நிலையை தவிர்க்கவே நாம் விரும்புகிறோம். பிரச்சினைகளிடம் இருந்து விடுதலை பெற நம் உள்மனம் விரும்புவதில்லை. பிரச்சினை இல்லாவிட்டால் நமக்கு என்ன அடையாளம் இருக்கிறது ? நம் வீட்டு பிரச்சினை நமக்கு தெரியும் . பிரச்சினை இல்லாத நிலை எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவேதான், என்னதான் கஷ்டமாக இருந்தாலும் தெரிந்த ஒன்றையே கட்டியழ விரும்புகிறோம். 
பிரச்சினை எப்போதும் இருக்கும் ஒன்றுதான். ஆனால் பிரச்சினையின் அடிப்படையை ஆராய தொடங்கினால் அது எதில் போய் முடியும் என்பது தெரியாது. இது மனதிற்கு பயத்திற்கு பயத்தை அளித்து சோர்வடைய செய்கிறது . பிரச்சினைகளே இல்லை என்றால் மனதிற்கு வேலை இல்லாமல் போய் விடும். பிரச்சினைகளால்தான் மனம் வாழ்கிற்து. பிரச்சினை என்பது உலகம் சார்ந்த்தாகவோ, சமையலறை சார்ந்த்தாகவோ, அரசியல் சார்ந்த்தாகவோ, உறவுகள் சார்ந்த்தாகவோ , ஆன்மீகம் அல்லது சித்தாதந்தம் சார்ந்த்தாகவோ இருக்கலாம் ( அட எதுவும் இல்லை என்றால், மெகா சீரியலில் வரும் பிரச்சினைகளை நினைத்து கவலைப்ப்டலாம் ) : எனவே பிரச்சினை என்பது நம்மை குறுகிய வட்ட்த்தில் அடைக்கிறது. உலக பிரச்சினையில் மூழ்கி இருக்கும் மனதிற்கும் ஆன்மீக பிரச்சினையில் ஆழ்ந்து இருக்கும் மனதிற்கும் அடிப்படையில் வித்தியாசம் இல்லை ( டோனி பிளைர் புத்தகதில் சொல்வது பற்றி யோசிப்பதற்கும் , நித்தியானதா நல்லவரா என விவாதிப்பதற்கும் , கடவுள் இல்லை அல்லது இருக்கிறார் என வாதம் செய்வதற்கும் அடிப்ப்டை வித்தியாசம் இல்லை ) .. பிரச்சினைகள் மனதிற்கு ஒரு சுமையாக இருக்கின்றன ( சுகமான சுமைகள் ) “ நான் “ எனது “ போன்றவற்றுக்கு ஊட்டமளிப்பது பிரச்சினைகள்தான். பிரச்சினைகள், சாதனைகள் , தோல்விகள் இல்லாமல் “ நான் “ என்பது இல்லை.. ( நமது வாழ்க்கை என நாம் நினைப்பது நாம் என்ன சாதித்தோம் என்ன பிரச்சினைகலை சந்தித்தோம், என்ன கஷ்டப்பட்டோம் என்பதைத்தானே )


“ நான் என்ற உணர்வு இல்லாமல் எப்படி வாழ்வது ? அனைத்துக்கும் அடிப்படை அதுதானே ? “

செயல் என்பது ஆசை , நினைவுகள் , பயம்,. சந்தோஷம், வலி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும் வரை , செயலின் விளைவு குழப்பமாகவும், முரண்பாடு நிறைந்தும் , பகையுணர்வு நிறைந்தும்தான் இருக்கும். உலகால் குறிப்பிட்ட வகையில் புரோகிராம் செய்ய வைக்கப்பட்டு இருக்கிறோம் ( நான் இந்த மதம் சார்ந்தவன், இந்த நாடு சேர்ந்தவன் என்பது போல ) அதற்கேற்ப நம் செயல் அமைகிறது. ஆகவே நம் செயலில் முழுமை இருக்காது. எனவே முரண்பாடுகள்.இதனால்தான் பிரச்சினைகள். 
நான் என்பதன் வெளிப்பாடுதான் முரண்பாடுகள். வெற்றி தோல்வி, ஆசை பயம் போன்ற முரண்பாடுகள் இன்றி வாழ்வது சாத்தியமான ஒன்றுதான் . ஆனால் அது தியரட்டிக்கலாகத்தான் இருக்கிறது. நேரடியாக அதை அனுபவித்தால்தான் அது உண்மையாக மாறும். 
நான் என்பது எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதை உணர்ந்தால்தான் பேராசையில் இருந்து விடுபட முடியும்.

“ எனது காது கேளாமை என்ற குறை , என் பயங்கள் , அடக்கப்பட்ட உணர்ச்சிகள் இவற்றின் விளைவு என நினைக்கிறீர்களா? உடல் ரீதியாக எந்த குறையும் இல்லை என மருத்துவர்க்ள் சொல்கிறார்கள். காது கேட்கும் திறன் எனக்கு திரும்ப கிடைக்குமா ? ஏதாவது ஒரு வகையில் நான் என் வாழ்வில் அடக்கப்பட்டுத்தான் வருகிறேன். நான் நினைத்த எதுவும் எனக்கு கிடைக்கவில்லை., நினைத்தை செய்யவும் முடியவில்லை “

புரிந்து கொள்ளுதலை விட அடக்கிதல் எளிது. குழந்தை பருவத்தில் இருந்து அடக்கி வைக்கப்பட்டவர்களுக்கு புரிந்து கொள்ளல் கஷ்டமான ஒன்று. அடக்குதல் என்பது பழக்கமாகி விடும் . ஆனால் புரிதல் என்பது அவ்வப்போது நிகழ வேண்டும். அது பழக்கம் ஆகாது. தொடர் கவனிப்பு, விழிப்புனர்வு தேவை. புரிதல் நிகழ வேண்டுமென்றால் நிதானம் , அமைதி , நெகிழ்வுத்தன்மை , சுரணைத்தன்மை ஆகியவை தேவை. செண்டிமெண்ட்டுகெல்லாம் இதில் வேலை இல்லை.
ஒரு பிரச்சினை என்றால் அடக்குதல் என்பதற்கு எந்த வித விழிப்புணர்வும் தேவையில்லை.சுலபமானது ஆனால் முட்டாள்தனமானது ( ஒருவர் மேல் கோபம் என்றால் நான் கோப்ப்படமாட்டேன்,. நான் அமைதியானவன் என திரும்ப திரும்ப சொல்லும் செல்ஃப் ஹிப்னாடிசம் மூலம் கோபத்தை அடக்க முயலுதல் ஓர் உதா. ) இப்படி அடக்குதல் நமக்கு ஓர் மரியாதையை தரும். மேலோட்டமான பாதுகாப்பை தரும் . புரிதல் என்பது விடுவிக்கிறது. அடக்குதல் என்பது ஒரு குறுகிய இட்த்தில் சிக்க செய்கிரது. அதிகாரத்தின் மேல் பயம், பாதுகாப்பின்மை , கருத்தின் மீது பயம் போன்றவை ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதில் பாதுகாப்பு பெற முயல்கிறது ( மாமியாரிடம் பேச பயப்படும் சில பெண்கள் , எதயாவது ஒன்றை படித்து கொண்டே இருப்பார்கள் . படிப்பாளி என்ற முத்திரை அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை தரும். சிலர் ஆன்மீக்வாதி என்ற முத்திரை பெற பார்ப்பார்கள் ) , மனம் சார்ந்த இது உடலிலும் பாதிப்பு ஏற்படுத்தி உடல் சார்ந்த விஷ்யமாகவும் மாறும். இந்த அடைக்கலம் எப்படிப்பட்ட்தாக இருந்தாலும் , அதில் பயம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். பயதில் இருந்துதான் , ஒன்றுக்கு பதில் இன்னொன்றை பயன்படுதுதல், இன்னொன்றில் ஒளிதல் , கட்டுப்பாடு போன்றவை பிறக்கின்றன. இது எல்லாமே அடக்கு முறைதான். இந்த அடக்குமுறைக்கு ஏதோ ஒரு வடிகால் தேவை. இது உடல் ரீதியாக வெளிப்படலாம் .. அல்லது ( ஆன்மீக !! ) மாயத்தோன்றங்களாக வெளிப்படலாம் . இது தனி நபரை பொறுத்த்து..


“ எனக்கு பிடிக்காத விஷயங்களை கேட்க நேரும்போது, காது கேட்க உதவும் கருவியை சரணடைவேன். யதார்த்த்தை விட்டு தப்பித்து எனக்கே உரிய தனி உலகில் வாழ இது உதவுகிறது. ஆண்டுக்கணக்கில் அடக்கி வைக்கப்பட்ட்தில் இருந்து எப்படி விடுதலை ஆவது? இதற்கு பல ஆண்டுகள் ஆகுமே !! ? “

எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதே அர்த்தம் அற்றது. இது காலம் சம்பந்தப்பட்ட்து அல்ல. கடந்த காலத்தை ஆய்தல், பாதிப்பு ஏற்படுதிய சம்பவங்களை அலசுதல் என்பதெல்லாம் தேவையில்லை. அடக்குதல் என்பதை ஓர் உண்மையாக நேருக்கு நேர் பார்ப்பதுதான் முக்கியம். செயலற்ற விழிப்புணர்வு , விருப்பு வெறுப்பு இன்றி கவனித்தல், உண்மைக்கு எடுத்து செல்லும். நேற்று நாளை என்ற சிந்தனை மூலம் உண்மையை காண முடியாது. காலம் என்பதை கடந்தாக வேண்டும். உண்மையை அடைய முடியாது. பார்க்கவும் முடியாது. கொஞ்சம் , கொஞ்சமாக முயற்சிது , தவணை முறையில் உண்மையைஅ அறிய முடியாது. 
உண்மையை அறிய வேண்டும் என்ற துடிப்பே தடைக்கல்லாக அமைந்து விடும். ஆசையில் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்று இல்லை. ஆசை இருக்கும் இட்த்தில் விழிப்புணர்வு இருக்காது. தேடல், விடாமுயற்சி என்றெல்லாம் பெயரிட்டாலும், தேடினால் உண்மை கிடைக்காது. செயல் புரியாமல் வெறுமனே கவனிப்பதுதான் உண்மையை காட்டும். நான் என்பது எண்ணங்களால் ஆனது . எனவே நான் என் எண்ணத்தை ஆராய முடியாது. ஆராயப்படும் விஷயமும் ஆராயும் நபரும் ஒரே பொருளால் ஆனது. இரண்டும் வேறு வேறு அல்ல.. 
உண்மைதான் விடுவிக்கும். முயற்சியோ செயலோ அல்ல

பக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்ததா - விடை அளிக்கும் இலவச புத்தகம்


பக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்ததா - விடை அளிக்கும் இலவச புத்தகம்

இதற்கு மேல் ஒன்றம் இல்லை என்ற அளவுக்கு , இந்த சொற்பொழிவில் ஜே கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளிக்கிறார்...

உங்களையே , புத்தகமாக படியுங்கள் என்ற முந்தய பதிவின் தொடர்ச்சி..இதை பெரும்பாலானோர் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இதை விரிவாக பகிர்ந்துகொள்கிறேன் ( அடைப்பு குறிக்குள் இருப்பது சில இடங்களில் சொந்த சரக்கு... சில இடங்களில் , ஜே கிருஷ்ணமுர்த்தி வேறு சந்தரப்பனகளில் சொன்னதை , அதன் பொருத்தம் கருதி அடைப்பு குறியில் கொடுத்து உள்ளேன் ... இரண்டுக்கும் வித்தியாசம் எளிதாக புரியும் என்பதால், வேறு படுத்தி காட்டவில்லை )
***************************************


உங்களையே நீங்கள் ஒரு புத்தகத்தை போல் படித்து கொண்டு இருகிறீர்கள்... உங்கள் சார்பாக நான் படிக்கவில்லை... இருவரும் சேர்ந்து படிக்கிறோம்....

வாழ்வில் ஒழுங்கின்மை, பிளவுண்டு வாழ்தல், இன்னொருவர் கருத்தை ஏற்று ( ஆன்மீக , அரசியல், பகுத்தறிவு , நாத்திகம், வேறு எதாவது சித்தாந்தம் ) வாழ்தல் என்பது பற்றி " புத்தகத்தின் " சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்..

எதாவது கருத்துடன், அல்லது செயலுடன் அல்லது சக மனிதருடன் நாம் கொள்ளும் தொடர்பைதான் வாழக்கை என அழைக்கிறோம் ( நமது வாழக்கை வரலாறு என்பது என்ன,,,, சக மனிதருடன் நட்பு, சண்டை, ஒரு கருத்தை ஏற்றல் எதிர்த்தல், - எதாவது ஒன்றுடன் இணைந்ததுதான் நம் வாழ்க்கை. தனியாக வாழ்க்கை என்று ஒன்று இல்லை ..தொடர்புதான் வாழ்க்கை .. ) நாம் ஒட்டு மொத்த மனித குலத்துடன் தொடர்பில் இருக்கிறோம்... நாம் செயல்கள், சிந்தனைகள் உலகை பாதிக்கும்...

நீங்கள் தான் உலகம் ... உலகம் என்று தனியாக எதுவும் இல்லை ....உலகம் என்பது நீங்கள்தான்... ஆக, உங்கள் பொறுப்பு மகத்தானது...

பயம் என்பது பற்றி புத்தகம் என்ன சொல்கிறது என பார்க்கிறோம் ..

வேலை பற்றிய பயம், நோயை பற்றிய பயம் என்று பல பயங்களில்தான் மனித இனம் வாழ்ந்து வருகிறது ..இதை தவிர, இனம் தெரியாத, வெளிப்படையாக தெரியாத பயங்களும் உண்டு ( நமக்கு பயமா ? இதை நம்மால் ஏற்க முடியாமல் இருக்கலாம்... அனால், இந்த பயங்களை மறைக்கத்தான், நமது எல்லா நடவடிக்கைகளும் இருக்கின்றன என்பது கூர்ந்து கவனித்தால் தெரியும் )
பயத்தினால் செய்யபடும் வழிபாடு அர்த்தம் அற்றது ..

பயம் என்பதை பற்றி இன்னும் ஆழமாக பார்ப்போம்... பயம் எப்படி ஏற்படுகிறது?

ஒரு பொய் சொல்லிவிட்டோம்... அது கண்டுபிடிக்க பட்டு விடுமோ என பயம்... செய்ய கூடாத ஒன்றை செய்து தொலைத்து விட்டீர்கள்.. அந்த நினைவு ஏற்படுத்தும் பயம்... வேலை பொய் விடுமோ என்ற பயம்... வாழ்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம்.. .. எத்தனை பயங்கள்

சிறு வயதில் ஏறபட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் வந்து விடுமோ என்ற பயம்..இறப்பை நினைத்து பயம்... இதை எல்லாம் கூர்ந்து கவனித்தால், இந்த புத்தகத்தை இன்னும் படித்தால் ஒன்றுதெரிகிறது..

எண்ணங்கள் தான் பயத்தை உருவாக்குகின்றன.. இப்ப நல்லா இருக்கேன்..ஆனா , வயசான பின் என்ன நடக்குமோ என்று ஓர் எண்ணம் உண்டானால் , அதுதான் பயம்.. என் மனைவி என்னை விட்டு பிரிந்து விட்டால்... ? என் பார்வை திறன் பாதிக்கப்பட்டால்... ?எல்லாமே எண்ணங்கள்தான்..

பயத்தின் ஆதாரம் என்ன ? சிந்தனை மற்றும் காலம்... ( நாளை என்ன நடக்கும் என்பதுதான் பயத்தின் ஆதாரம்... நாளை என்ற காலம் தான் பயத்தை உருவாக்குகிறது )
சிந்தனை என்பது காலத்திற்கு உட்பட்டது... ( நேற்றின் அனுபவம், படிப்பு, - நாளை பற்றிய யோசனை.. இதுதான் சிந்தனை... இதில் பக்தி சிந்தனை , பகுத்தறிவு சிந்தனை என்றெல்லாம் சொல்வது அர்த்தம் அற்றது )

நீங்களே , உங்களை கூர்ந்து கவனித்து , இதை எல்லாம் கவனிக்கிரீகள்... வேறு யாரும் சொல்ல தேவை இல்லை...

சரி, பயம் என்பதே இல்லாமல் இருக்க முடியுமா என நீங்கள் , அதாவது புத்தகத்தின் அடுத்த பக்கம் கேட்கிறது... பயத்தை அழிக்க எதாவது வழி முறைகள் , தியானம் இருக்கிறதா என நீங்கள் கேட்க மாட்டீர்கள் ...வழிமுறைகள் என்று வந்து விட்டாலே அது காலத்தின் பிடியில் வந்து விடுகிறது .. ( ஒரு வாகனத்தை இயக்க, ஒரு சிகிச்சை செய்ய , வழிமுறை உதவும்..சிந்தனை, படிப்பு உதவும்... அனால் )ஒன்றை புரிந்து கொள்ள , எந்த வழிமுறைகளும் உதவாது ..

காலமும், சிந்தனையும்தான் பயத்தின் ஆதாரம் என தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது, பயம் உங்களை விட்டு விலகும்...

நீங்கள் கவனிக்க வேண்டியது காலம் என்பதை பற்றிதான்...

காலம் என்பதுக்கும், சிந்தனை என்பதற்கும் என்ன தொடர்பு என்று நீங்களே உங்களை ஒரு புத்தகத்தை பார்ப்பது போல , ஆழமாக கவனியுங்கள்..

சிந்தனை என்பது என்ன? ஏற்கனவே தெரிந்த ஒன்றில் இருந்து, ஏற்கனவே தெரிந்த இன்னொன்றிக்கு மனம் அசைவதைத்தான் , எண்ணம் /சிந்தனை என அழைக்கிறோம் ( இதன் மூலம் புதிதாக ஒன்றும் அறிய முடியாது.. வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் புதிதாக வருகிறது .. அனால் நாம் , பழயவற்றில் வாழ்கிறோம்... இதுவே முரண்பாடுகளுக்கு காரணம் )

நேற்றைய சிந்தனைகளுடன் இன்றைய தினத்தை சந்திக்கிறோம்... இன்றை, ஒரு அனுபவம் ஆக்கி , அதையும் பழைய பொருள ஆக்குகிறோம்... இதுதான் நம் வாழ்வாக இருக்கறது..

நான் குடிக்றேன்... அனால், ஒரு நாள் விட்டு விடுவேன் என நினைகிறேன்.. காலம் என்னை மாற்றி விடும் என நினைக்றேன்... நேற்று ஒரு கஷ்டத்தை அனுபவித்தேன்.. நாளை மீண்டும் அதுவராது என நம்புக்றேன்..

அதாவது, இறந்த காலத்தில் இருந்து , எதிர்காலத்துக்கு செல்ல, நிகழ் காலத்தை பயன்படுத்துவதுதான், மன ரீதியான காலம் என்பதை புரிந்து கொள்கிறோம் ( கடிகாரம் காட்டும் காலம் என்பது வேறு )

அடுத்த கேள்வி கொஞ்சம் கஷ்டமானது... பொறுமையாக பார்ப்போம்..

மன ரீதியான காலம் என்பதை நிறுத்த முடியுமா ? நமது வாழ்வில் காலம் தான் பெரிய விஷயமாக இருக்கிறது.. எனக்கு தெரியாது... வருங்காலத்தில் தெரிந்து கொள்வேன்..

காலம் நம் மன காயங்களை ஆற்றும்,... 

சரி, இப்பை இருப்பதால் என்ன பிரச்னை..

காலம் என்பது நமது தொடர்பு கொள்ளலை பாதிக்கிறது... புரிது கொள்ளும் தன்மையை பாதிக்கிறது...

ஒரு விஷயத்தை ( ஒருவர கஷ்டத்தை ) உடனடியாக புரிந்து கொண்டால்தான் உண்டு... கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்வேன் என்பது அபத்தம் ( இப்ப அனுபவிக்காம எப்ப அனுபவிப்பது,,, சின்ன வயசுல ஜாலிய இருந்துட்டு, வயசானபின் மாறி விடுவேன் என சொன்னால், வாழ்வை பிரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் )

சிந்தனை , காலம் என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வை தராது ( ஒரு பம்ப் வேலை செய்யவில்லை என்றால், அதே போல வேறு பிரச்சினையை சமாளித்த அனுபவம் கை கொடுக்கும்... யோசித்து பம்ப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.. காலம் கை கொடுத்தது,,,, அதாவது நேற்றைய அனுபவம் கை கொடுத்தது )

தொழில் நுட்ப பிரச்சினைகளுக்கு, சிந்தனை மற்றும் காலம் தீர்வு சொல்லலாம்... அனால், உங்கள் மனைவியை புரிந்து கொள்ள சிந்தனை உதவாது,..,, உங்கள் மனைவியுடன் ஏற்படும் பிரசினைக்கு காலம் தீர்வு சொல்லாது...

சிந்தனையை எப்படி நிரிதுவது? மன ரீதியான காலம் என்பதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என யாரிடமாவது கேட்டால், அவர்கல், இதை பற்றி நன்றாக உரை ஆற்ற முடியும்... அனால், அது உங்களுக்கு உதவாது...

காலத்திற்கு இடையேயான சிந்தனை ஓட்டம், நிறுத்தப்பட முடியுமா, என்பதை நீங்களே உங்களை கேட்பதுதான், உண்மையான தியானம்..

நான் சொல்கிறேன்... சிந்தனை ஓட்டத்தை நிறுத்த முடியும்... நிருத்தி இருக்கிறேன்... அனால், இதை நான் சொல்கிறேன்- உங்கள் புத்தகம் சொல்லவில்லை...

நான் சொல்வதை நம்பினால், அது உங்க்களுக்கு உதவாது... நீங்களே உணர வேண்டும் ( யாரையும் பின் பற்றாதீர்கள் என சொல்லும் ஜே கிருஷ்ணமூர்த்தி, தன்னை கூட நம்ப வேண்டாம் என்கிறார் )

எனவே நீங்களே உங்களை கவனியுங்கள்... சிந்தனை, கால ஓட்டம், இதெல்லாம் உங்களை , உங்கள் தொடர்பு கொள்ளும் தன்மையை எப்படி பாதிக்கிறது என பாருங்கள்..

காலம் சார்ந்து செயல்பதும் உங்கள் மனம , மூளை, முற்றில் வேறு விதமாக செயல்பட முடியுமா என பாருங்கள்,,,, 

இதற்க்கு மிக தீவிரமான கவனம் தேவை,,, 

நீங்கள் என்ற புத்தகத்தை மிக உன்னிப்பாக கவனித்து படியுங்கள்.... 

நான் என்ற விஷயத்தை தீர்க்கமாக கவனியுங்கள் 


( வேறு யாரும் உங்களுக்காக படிக்க முடியாது... வேறு யாருடைய புத்தகத்தையும் நீங்கள் படிக்க முடியாது பெரியார் அவர்கள் படித்த புத்தகம் , கடவுள் இல்லை என சொல்லி இருக்க கூடும்... ராமானுஜர் அல்லது ஆழ்வார்கள் , நாயன்மார்கள் படித்த புத்தகம் கடவுள் இருக்கிறர் என சொல்லி இருக்க கூடும்.. 

ஒரு தரப்பு உண்மை சொல்கிறது..ஒரு தரப்பு உண்மை சொல்கிறது என்பது அல்ல... அவரவர்கள் படித்ததை , அவரரவர் உண்மையாக தெரிந்து கொண்டதைத்தான் அவரவர்கள் சொல்கிறார்கள்,,, இதில் தவறில்லை... ஆனால், அது நம் படிப்பு ஆகாது... அவர்கள் சொன்னதை திருப்பி சொல்வது அவர்களுக்கு பெருமை சேர்க்காது ( கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை ) ..

நம் புத்தகத்தை நாம் படிப்போம்.. அது என்ன சொல்கிறது என்ன பார்ப்போம் ... )

உலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும் புத்தகம்


உலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும் புத்தகம் - முற்றிலும் இலவசமாக

மனித முன்னேற்றத்திருக்கு , பலர் பல புத்தகங்களை சிபாரிசு செய்வதுண்டு.... ஜே கிருஷ்ணமுர்த்தி ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்கிறர்... இந்த புத்தகத்தை படித்தால் போதும் என்கிறார்..

இந்த புத்தகம் விற்பனைக்கு அல்ல,,இலவசம் ... அந்த புத்தகம் என்ன ? 

ஜே கிருஷ்ணா மூர்த்தியின் சொற்பொழிவை கொஞ்சம் கேளுங்கள்.. இதை அவளவாக படித்து இருக்க மாட்டீர்கள்... எனவே தான், இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...கவனமாக படிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் 
( அடைப்பு குறிக்குள் இருப்பது, நம்ம சொந்த சரக்கு..)


*******************************************


மனித இனத்தின் ஒட்டு மொத்த சோகங்கள், பிரச்சினைகள், நம்பிக்கைகள், மகிழ்ச்சி, அனுபவங்கள் , ஆண்டாண்டு காலமாக மனித இனத்தின் வாழ்கை அனித்தும் ஒரே ஒரு புத்தகத்தில் அடங்கி இருக்கிறது.... ( இதை படித்தால், அணைத்து தொல்லைகளையும் புரிந்து கொண்டு அதற்கு தீர்வு கண்டு விடலாம் ..இல்லையா ! ? ) இந்த புத்தகம் விற்பனைக்கு அல்ல... யாரும் அச்சிடவும் இல்லை,,, 

"நீங்கள்" தான் நான் குறிப்பிடும் அந்த புத்தகம்...you are that book...

இந்த புத்தகத்தை புரிந்து கொள்ள வேறு நிபுணர் யாரிடமும் செல்லாதீர்கள்... ஏனென்றால், அவர் புத்தகமும் , உங்கள் புத்தகமும் ஒன்றுதான்... ( அவர் அவர் புத்தகத்தை படிக்கட்டும்..நீங்கள் உங்கள் புத்தகத்தை படியுங்கள்) 

இந்த புத்தகத்தை நன்கு , பொறுமையாக படித்து புரிந்து கொண்டால் தான், குற்றங்கள், ஏற்ற தாழ்வுகள், யுத்தங்கள் நிறைந்த இந்த உலகை மாற்றி அமைக்க முடியும்..நாம் எல்லோரும் சேர்ந்துதான் இந்த உலகை உருவாக்கி இருக்கிறோம்... 
நம்மை புரிந்து கொண்டால்தான், உண்மையான மாற்றம் நிகழும் ( சும்மா மற்றவர்களுக்கு அறிவுரை கொடுப்பதால், எதுவும் மாறாது ) 
எனவே இந்த "புத்தகத்தை" நன்றாக கவனியுங்கள் ... ஓடும் மேகத்தை, சூரிய உதயத்தை எப்படி கவனிக்கிறோமோ அப்படி கவனியுங்கள்... மேகத்தை உங்களால் எதுவும் செய்ய முடியாது....சும்மா கவனிப்பீர்கள்... அதே போல், சும்மா கவனியுங்கள்..எதையும் மாற்றவோ, அர்த்தம் கண்டு பிடிக்கவோ முயல வேண்டாம்... இந்த புத்தகம் எல்லாவற்றையும் வெளி படுத்தும்... புத்தகம் என்ன சொல்கிறது என்பதை , உங்கள் மொழியில் மாற்றாமல், அப்படியே கேளுங்கள்... 

பார்ப்பது என்பது ஒரு கலை... இந்த புத்தகத்தை படிக்கும் போது, நான் படிக்கிறேன் என்ற உணர்வு வேண்டாம்... படிப்பவனும், படிக்கப்படும் புத்தகமும் ஒன்றே ..(சும்மா பாருங்கள்.... நான் பார்கிறேன் என்ற உணர்வு இல்லாமல்... பார்ப்பது மட்டும் இருக்கட்டும் )

சரி, உங்கள் சார்பாக நான் இந்த புத்தகத்தை படிக்க போவதில்லை.. எப்படி படிப்பது என உங்களுக்கு தெரிந்தவுடன், எல்லாம் தெளிவடைந்து விடும் ....

புத்தகத்தின் முதல் அத்தியாயம் என்ன சொல்கிறது ?

உங்களை நீங்களே கவைக்கும்போது, நீங்கள் வேறு யாருடைய வாழ்வையோ வாழ்வதை கவைப்பீர்கள் ... ம்ற்றவருடைய போதனைகலைதான் , உங்கள் அறிவு என நினைத்து கொள்கிறீர்கள் .. புத்தர் சொன்னது, இயேசு சொன்னது, (பெரியார் சொன்னது, கீதை சொன்னது, அரசியல் தலைவர்கள் ஆன்மீக தலைவர்கள் சொன்னது) போன்றவை 
.. நம்மிடம் ஒரு ஒழுங்கு இல்லை.... சொல்வது ஒன்று , செய்வது ஒன்று ( அன்பே ஆண்டவன் என்க்றோம்.... அனால் கொலை செய்கிறோம்.... )

இப்படி பிளவு பட்டு நாம் வாழ்வதை உணரும் போது, ஒழுங்கு என்பது இயல்பாக மலரும்... 

அடுத்த அத்தியாயம் என்ன சொல்கிறது..

நான் என்ற உணர்வுடன் செயல்படுவதுதான் சிக்கல்களுக்கு காரணம் ... ( நான் என்ற உணரவே போலியானது... பெற்றோர்கள் சொல்வது, சமுகம் சொல்வது , படிப்பது எல்லாம் சேர்ந்ததுதான், நான் என்ற உணர்வாக மாறுகிறது.... அதாவது, சிந்தனைதான் நான் என்ற உணர்வு... சிந்தனை என்பது ஒரூ போதும் சுயமானதாக இருக்க முடியாது ) 

உடனடியாக நான் என்ற உணரவை அழிக்க, எதாவது வழி இருக்கிறதா என கேட்பது அபத்தம்... என் என்றால், அதவும் கூட நான் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் ( நான் ஒரு தியானம் செஞ்சேன் பாரு..அப்படியே பறந்தது போல இருந்துச்சு என் சொல்வதும் போலி தனம்தான் ) 

நான் ஞான நிலை அடைந்தவன்.... உனக்கு போதிக்கிறேன் என யாரவது வந்தால், அதை ஏற்க வேண்டாம் என புத்தகம் சொல்கிறது.... புத்தகத்தை நீங்களே படியுங்கள்..(உங்கள் புத்தகம் உங்களை தவிர வேறு யாருக்கு புரிய போகிறது? அந்த புத்தகமே நீங்கள்தானே )

( தொடரும் ) 

"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன?"


"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன?"

கடவுளை நம்பியும் பார்த்திட்டோம், திட்டியும் பார்த்துட்டோம், - காசையும் பார்த்துட்டோம், கஷ்டத்தையும் பார்த்துட்டோம்,,ஆனாலும் வாழ்க்கைல ஒன்னு குறையுது... வாழ்க்கைனா என்ன.. வாழ்கையின் நோக்கம் என்ன ? 

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் சில இளைஞர்கள் உரையாடுகிறார்கள்,,, தயவு செய்து கவனமாக படிக்கவும் ( அடைப்பு குறியில் நம்ம விளக்கம் ..பிடிக்கவில்ல்லை என்றால், எடுத்து விடுகிறேன் ) 


******************************************************

" சார்.. சுத்தி வளைக்காம கேட்குறேன். எங்க கேள்வி ரொம்ப எளிமையானது..எளிமையா ஒரு பதில் சொல்லுங்க... மனித வாழ்வின் நோக்கம் என்ன? " ( பிறக்க்றோம்.. சாபிட்றோம்..தூங்குறோம்..லவ் பண்றோம்... சண்டை போடறோம், குழந்தை பெத்துகுறோம் .. .. இயக்கம் ,கட்சி, இதேல சேர்ர்ந்து பாக்குறோம்..கடவுளை நம்புறோம்... கடவுளை நம்ப மறுக்குறோம்..அனாலும் என்ன ..கடைசியில் ஒரு நாள் சாகுறோம்

என்ன வாழ்கை இது? வாழ்வின் நோக்க்கம்தான் என்ன ?) 

இதை ஏன் கேட்குறீங்க? யாரவது இதுதான் வாழ்வின் நோக்கம் னு சொன்னால் அதை அப்படியே எத்துக்க்டு, அதுக்கு தகுந்த மாதிரி வாழ்வை அமைச்சுக்கலாம்.. அப்படிதானே ? "

" இதை ஏன் கேட்குரோம்னா , நாங்க ரொம்ப குழம்பி பொய் இருக்கோம்... யாரவது ஒருவர் கிட்ட இடஹி பத்தி பேசணும்னு தோனுச்சு... சில பேரு எல்லாம் தெரிஞ்ச மாதிரியும், எங்களுக்கு ஒன்னும் தெரியாத மாதிர்யும் , அறிவுரை குடுக்றாங்க,,, இதெல்லாம் வேளைக்கு ஆகாது.. சாதரணமா பேசும் ஒருத்தர் கிட்ட பேசணும் னு தோனுச்சு... அதான் உங்க கிட்ட கேட்குறோம்.. "

" அர்த்தமுள்ள வாழ்வு வாழ ஆசை படறோம்..அதே சமயம் , எதாவது கட்சி, இயக்கம், ஆன்மிகம் , கடவுள் இதெல்லாம் ஒரே மாதிரித்தான் இருக்கு... இங்கே வந்த்டோம்.. நீங்க என்ன சொல்ல போறீங்க ?"

சரி.. யாரவது ஒருவர் இதுதான் வாழ்வின் நோக்கம் னு , உங்களுக்கு பிடிக்ற மாதிரி சொல்லிட்டா எதுக்கேவீங்களா ?

" ஆமா .. அது உண்மை னு தோணுச்சுனா , எதுக்குவோம் "

அப்படியா?

"ஆனா, வந்து... இதை புரிஞ்சுக்ற தகுதி எங்களுக்கு இருக்கணு தெரியல" 

அதுதான் விஷயம்... எல்லோரும் குழப்பத்துல இருக்றதா சொன்னீங்க... மனசு குழப்பமா இருந்தா, அதை வைச்சு , இது போன்ற பெரிய விஷயங்களை புரிந்து கொள்ள முடியுமா 

" ஏன் முடியாது.. ஆமா.. நாங்க குழம்பி போய் இருக்கோம்... மறுக்கல..ஆனா, குழம்பி போனவன் ஒன்னும் கத்துக்க முடியாதுனு சொன்னா, நாங்க என்னதான் பண்றது... "

என்னதான் முயன்றாலும், குழபத்தோட ஒரு கேள்வியை அணுகினால், விடையும் குழபமாகத்தானே கிடைக்கும் ?

" என்ன தான் சார் சொல்ல வர்றீங்க ? "

எந்த முடிவையும் வற்புறுத்த, நாம இப்ப பேசல.. ஒன்னு ஒன்ன , நிதானமா விவாதிப்போம்... மனசு குழப்பமா , தெளிவில்லாம இருந்தா, அதை வச்சு தெளிவா சிந்திக்க முடியுமா ? இதை முதலில் கண்டு பிடிப்போம்... 

" உண்மைதான் சார்.. தெளிவில்லாத மனதின் சிந்தனையும் தெளிவு இல்லாமல்தான் இருக்கும்''

தெளிவிலல்ல்லாத ஒரு மனம் ஒரு குருவை தேடினால், கிடைக்கும குரு அதற்கேற்பத்தானே இருப்பார் ( மனதில் ஆயிரம் ஆசைகளை வைத்து கொண்டு தேடினால், நித்யானந்தா, ஓஷோ , பிரேமானந்த போன்றவர்கள்தானே கிடைப்பார்கள் !! ) .. தலைவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் ( ஒரு முட்டாள் தலைவனை தேர்ந்தெடுத்தால், அந்த முடிவு முட்டாள்தனமாகத்தான் இருக்கும் )

" இதை ஒத்துகொள்ள கஷ்டமா இருக்கு "

உண்மைதான்,என்ன, நாம் எல்லோரும் நம்மை புத்திசாலிகள், உலக பிரச்சினையை தீர்க்க நம்ம கிட்ட தேர்வு இருக்கு... நாம் நல்லாத்தான் இருக்கோம்..உலகம் தான், என்ன செய்யனும்னு தெரியாம இருக்கு னு நினைக்றோம்.. நம்ம கிட்ட என்ன தவறு இருக்குனு யாரும் பார்ப்பது இல்ல 

" எத்தனையோ பேரு பேசி கேட்டு இருக்கேன்... நீங்க சொல்றதுதான் கரக்ட் னு தோணுது "

தெளிவு இல்லாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள் 

" என்ன சார், இப்படி சொல்லீடீங்க..பல கருத்துக்களை கேட்டு, அதில் சிறந்ததை தேர்ந்து எடுத்தால்தானே தெளிவு பிறக்கும் "

உங்கள்ளுக்கு தெளிவு இருந்துசுனா , இப்படி தேர்ந்தெடுக்க மாட்டீர்கள் 

" ஆஹ.. உங்க பாயிண்ட் புரியுது .. சார் என்ன சொல்றார்னா, நீ ஒரு பொண்ண உண்மையில் லவ் செஞ்சா, எந்த குழப்பமும் இல்லாம அவளை கல்யாணம் செஞ்சுக்குவ... தேர்ந்தெடுப்பு என்ற கேள்வியே இல்லை.. நீதான் தெளிவா இருக்கியே... காதல் என்பது இல்லைனாத்தான், யாரை கல்யாணம் பண்ணலாம், நம்ம கடஹ்ல் தப்ப அப்படீன்னு ஆயிரம் கேள்வி... ஒரு வகைல, தெளிவுக்கு இன்னொரு பெயர் காதல்.. என்ன்ன நான் சொல்றது? "

" காதல் னு நீங்க எதை சொல்றீங்க னு தெரியல.. அதை பத்தி இப்ப பேச வேண்டாம்.. நீங்க இங்கே வரும்போது, வாழ்கையின் நோக்கம் என்ன அப்படீன்னு ஒரு விஷயத்தை ஷாப்பிங் செய்ய வந்தீங்க .. இல்லியா... இதே போல பலர் கிட்ட கேட்டு இருப்பீங்க,,, அந்த பதில்கள் உங்களுக்கு திருப்தி தரல.. ஒரு கடைல பொருள் பிடிக்கலேன்னா அடுத்த கடிக்கு போற மாதிரி, இன்னொரு கருத்தை வாங்க வந்து இருக்கீன் ங்க.. உங்களுக்கு குழப்பம்.. அதுனாலதான், எதாவது ஒன்னை உறுதியா பிடிச்சுக்க விரும்புறீங்க.. 
( சிலர் ஆன்மிக வாதிகளை பிடிக்கலாம். சிலர் கட்சிகளை, எதாவது தொழிலை, வலை பதிவை கூட பிடித்து கொண்டு இதுதான் வாழ்வின் லட்சியம் என சொல்லலாம் ) 

" உங்க பாயிண்ட் புரியுது சார் "

பொறுமையா இன்னும் பாப்போம்.. நம்ம மனம் குழப்பமா இருக்கு,,, சின்னத்தனமா சிந்திகுது..அற்பமா இருக்கு..இல்லையா 

" அப்படி சொல்ல முடியாது... மனதின் ஒரு பகுதி மிருகமா இருந்தாலும், இன்னொரு பகுதி நல்ல தன்மைகள் நிரம்பி இருக்கு... மிருகம் என்ற கெட்ட பகுதியை நாம் வெல்ல முடியும் "

அப்படித்தான் நம்புறோம்.. ஆன்மானு ஒன்னு இருக்கு... நன்மை தீமைகள் அதை பாதிக்காது.... வெளி மனம், உள்மனம் என்றெல்லாம் இருக்கு அப்படீல்லாம் நினைக்றோம்.. இப்படி சொல்லி கொடுத்து இருக்காங்க... இது எல்லாமே முட்டாள் மனதின் சிந்தனைகள்தான் ..

" அப்ப நாங்க என்னதான் செய்யனும் "

அவசர படாதீங்க... இதுதான் செய்யணும் னு எந்த அவசியமும் இல்லாமல் கூட இருக்கலாம்... எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொண்டால், உங்கள் நடவடிக்கையே வேறு மாதிரி இருக்க கூடும் 

" வாழ்வை சரியாக புரிந்து கொண்ட்டல், என்ன செய்யனனும்னு அதுவே சொல்லி தரும் னு சொல்றீங்க... சரி,,, வாழ்க்கைனா என்ன ?"

அழகு, துன்பம் குழப்பம், , மரம், அதோ அங்கு பறக்கும் பறவை, சுட்டு எரிக்கும் சூரியன், குளிர்மிகு நிலவு என எல்லாமே வாழ்க்கைதான்,,, ஒரு தெளிவற்ற மனம் வாழ்வை எப்படி அனுகிகிறது என்பதுதான் முக்கியம்,, வாழ்வை பற்றிய விள்ளக்ன்கள் அல்ல..

" வாழ்வில் நாம் சந்திக்கும் குழப்பங்கள் துயரங்கள் எல்லாம் மனதின் பிரதிபலிப்பு என புரியுது.. வாழ்வு என்பதில் இருந்து விலகி நின்று பார்த்தல் தான் தெளிவு பிறக்கும் னு தோணுது... எப்படி விலகி நின்று பார்ப்பது "

உண்மையை சொல்லனும்னா, நீங்க வாழ்கை என்பதை விட்டு விலகி தான் இருக்கீங்க,,, குப்பன் அப்படீங்கற நீங்க மாறாத, சிறப்பான ஒன்று போலவும், மற்ற எல்லாம் திருந்த வேண்டும் மாற வேண்டும் எபது போலவும் நினைகிறீங்க... மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் ஒரு சாட்சியாக, பார்வையாளனாக உங்களை நினைத்து கொள்கிறீகள்... (நீங்கள் வேறு - மற்ற எல்லாம் வேறு )..இப்படி தனியாக இருக்கும் நீங்கள், முழுமையை எப்படி புரிந்து கொள்வீர்கல் ?

" என்னை பத்தியே எனக்கு புரியல..உலகத்தை பத்தி புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்..ஹ்ம்ம் "

ஒரு முட்டாள் கண்டுபிக்கும் கடவ்ளும் முட்டாளாகத்தான் இருக்க முடியும் ... மனதை செம்மை படுத்தாமல், கடவுள் இரிகிரார இல்லையா.. உண்மைன என்ன , நல்ல அரசாங்கம்ன என்ன . இப்படியெல்லாம் கேட்டுகிட்டு இருக்கோம் 

" ஆமா சார்.. கேட்க கஷ்டாமா இருந்தாலும், உண்மையை உணர முடியுது.. என்னதான் செய்றது "

கொஞ்சம் கொஞ்சமா மாறலாம்னு நினைக்காம, இப்பவே - இந்த கணமே எல்லாத்தையும் தூக்கி எறிங்க... மனம் என்கிற குப்பை தொட்டில சேர்த்து வைத்து இருக்ற அணைத்து குப்பைகளையும் காலி செய்யுங்க... இதுவரை நீங்க அறிந்து வைத்துள்ள எல்லாம், புதிதாக அறிவதை தடை செய்கிறது 

" சரி ..எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டா எனக்கு என்ன கிடைக்கும் "

நல்லா கேட்டீங்க போங்க... எதாச்சும் கிடைத்தால்தான் , துறப்பேன் என சொல்வது உண்மையில் துரத்தல் அல்ல... அது ஒரு வியாபாரம்தான்.. எல்லாவற்றையும் விட்டு விட்டால் என்ன கிடைக்கும் என ஒரு முட்டாள் மனது யோசித்தால், முட்டாள்தனமான விடைகள் தான் கிடைக்கும் ...( கடவுள் தெரிவார், பேரமைதி கிடைக்கும், ஆன்மிக ஆற்றல் கிடைக்கும் )....
அறிவு என்பதே கற்பிதம்தான்,,,, பழமைதான்... அறிந்ததில் இருந்து விடுதலை ஆனால்தான், இதுவரை அறியாததை காண முடியும் 

" யோசிக்காம அப்படி கேட்டுட்டேன்... எங்களக்கு பிடிச்ச மாதிரி பேசி, எங்களை சாமாதான படுத்தும் வகையில் மேலோட்டமா பேசல.. நன்றி .... சார், நீங்க சொன்னதின் உண்மையை அறிவு பூர்வமா இல்லாம , இதய பூரவமா உணர முடியுது... உண்மையை உணர்ந்து விட்டால், அதற்கு பிறகு என்ன செய்வது என்ற கேள்வி இல்லை..என்ன செய்வது என்பதை அந்த உணர்வே தீர்மானிக்கும்... அந்த உணர்வுதான் முக்கியம்... சார், உங்களை பார்க்க இன்னொரு முறை வரலாமா ? "