SHIRDI LIVE DARSHAN

Sunday, 29 January 2012

நாம் அனுமதிக்காதவரை நம்மை யாரும் பைத்தியம் ஆக்கிவிடமுடியாது

ஒரு இந்திய சன்னியாசியை வெள்ளையர்கள் கடுமையாகக் கேலி செய்தார்கள்..அவரோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை.. அவர்கள் மென்மேலும் கேலி செய்து இந்த சன்னியாசிக்கு கோபத்தை தூண்டவேண்டும் என்று முயன்றார்கள் . சன்னியாசி அசரவே இல்லை. பொறுமை இழந்த வெள்ளையர்கள் உமக்குச் சொரணையே கிடையாதா, உன்னை எவ்வளவு திட்டு திட்டினோம் உன்பாட்டுக்கு இருக்கிறாயே?" என்று கேட்டனர்.

அதற்கு சன்னியாசி தனது கையில் வைத்திருந்த பிச்சைப் பாத்திரத்தை எடுத்து 'இதை வாங்கிக்கொள்ளுங்கள்' என்றார்..

வெள்ளையர்கள் முடியாது என்றனர்.

சிரித்தபடியே சன்னியாசி சொல்லலானார்," நான் கொடுத்தப் பொருளை நீங்கள் வாங்காததினால் அது இன்னமும் என்னிடமே இருக்கிறது..அதுபோல் உங்களது வசவு சொற்களை நானும் வாங்கவில்லை" என்றாராம்.

இந்தக்கதை நாம் அறிந்த ஒன்றுதான்.

"நாம் அனுமதிக்காதவரை நம்மை யாரும் பைத்தியம் ஆக்கிவிடமுடியாது" எனவே, அடுத்தவரின் எதிர்மறை விமர்சனத்திற்காக வீழ்ந்து போகாதீர்கள்.

இதையும் மீறி நாம் மனவுளைச்சலுக்கு உள்ளானால் அருமையான தீர்வு உள்ளது அதுதான் தியானம்

No comments:

Post a Comment