கால பைரவர் அஷ்டகம் . MP3
தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும்,
அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை
கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும்,
திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால
பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து
கரையேற்றுபவரும், முதல்வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும்
பொருளை அளிப்பவரும் முக்கண்ணரும், காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரைமலர்
போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும்,
காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்
ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..
சூலம், மழு, பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணரும்,
கரிய திருமேனி வாய்ந்தவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும்,
பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமமும் வாய்ந்தவரும், முக்திச் செல்வரும்,
அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும்
கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்
புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய
வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய்
இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு
ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான
காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்
தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மமாயா,
மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும்,
பொன்மயமான சடை கற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில்
தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்
ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ருத்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும், நித்யரும்,
இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும். மறிலியின்
கர்வத்தை அடக்குபவரும், கூரிய அகன்றப் பற்களால் பயமுறச் செய்பவரும்,
காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்
அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ருஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
அட்டகாச ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளக்குபவரும், கண்விழி
நோக்கத்தால் பாபக் குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும்
தண்டனை விதிப்பவரும், அஷ்ட சித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும்
கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை
வழிபடுகின்றேன்
பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..
பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில்
வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும்
நிறைந்தவரும், நீதி வழியில் கைதேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்துக்கு
கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை
வழிபடுகின்றேன்
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்
மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, சாதகத்தையும், பல வகைப்பட்ட
புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம்
ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்கவல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள்
படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப்
பெறுகின்றார்கள்
இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..
--------------------------------------------------------------------------------------------
குருநாதர் சாய் பாபா உபாசகர் அருளிய பரிகார முறை :
பைரவரை வழிபாடும் முறை :
தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்
பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
திறந்திருக்கும்
பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை
இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு
போட கூடாது
64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்
இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு)
தகவல் :குருநாதர் சாய் பாபா உபாசகர் -------------------------------------------------------------------------------------------
சிவபெருமானின் திருக்கோலங் களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று.
பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவ ருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ் டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதி யில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசை யில் காட்சி தருவதும் உண்டு.
சிவபெருமான் வீரச்செயல் களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக் கோலம் என்று புராணம் சொல்லும்.
காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
காலபைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாக வும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.
காலபைரவருக்கு இரண்டு பெயர்கள் உண்டு. "தான்' என்ற கர்வத்தால் பாவம் செய்தவர்களுக்கும் அக்கிர மக்காரர்களுக்கும் தண்டனை வழங்குவதால் "அமர்தகர்' என்றும்; பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்கி அருள்வதால் "பாப பக்ஷணர்' என்றும் அழைக்கப் படுகிறார். காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில்
பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச் சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.
திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும்.
திங்கட்கிழமை ராகு காலத்தில்
பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில்
பைரவ ருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
புதன்கிழமை ராகு காலத்தில்
மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில்
பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில்
சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.
சனிக்கிழமை அன்று ராகு காலத்தில்
பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், யமவாதனை தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan
http://copiedpost.blogspot.in/2012/12/live-dharshan.html
பைரவர் வழிபாடு ,பைரவர் ,பைரவர் மந்திரம் , பைரவ ரகசியம் , அஷ்ட பைரவர்
No comments:
Post a Comment