SHIRDI LIVE DARSHAN

Wednesday, 1 February 2012

பில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் நாமக்கல் -நரசிம்மர்,ஆஞ்சநேயர்



நாமக்கல் – நரசிம்மர்,ஆஞ்சநேயர்


சேலம் டு திருச்சி செல்லும் வழியில் நாமக்கல் மாவட்டம் உள்ளது . நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு மிக அருகிலேயே இந்த திரு கோவில் அமைந்துள்ளது ,

http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/god_view.png


நாமக்கல் நரசிம்மர் கோவிலின் முக்கியமான வரலாறு 

(இந்த கோவிலை இங்கே அமைத்ததுக்கு மிக முக்கிய காரணம் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லி மலை , இம்மலையில் (மலையடிவாரத்தில் ) அந்த காலத்தில்(இன்றும் ) நிறைய மந்திரவாதிகள் இருந்தனர் ,அவர்களின் தீய சக்திகளிடமிருந்து மக்களை காப்பற்றுவதற்காக இங்கு ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்ம சுவாமி சன்னதியை  முன்னோர்கள் ஏற்படுத்தினர் , 

இக்கோவில் பில்லி சூனியம் , ஏவல், பேய் , பிசாசு , செய்வினை , அபிசார துஷ்ட மந்திர பிரயோகம்  போன்ற மாந்திரீக பிரச்சனையால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு சிறந்த பரிகார தலம் ஆகும் ,

"இங்கு நாமகிரி தாயார்  மற்றும் நரசிம்மர்  சன்னதியில் கொடுக்கும் துளசி தீர்த்தமே மிக மிக சக்தி வாய்ந்தது மற்றும் விசேசமானது "

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை அஞ்சநேய சுவாமிக்கு அபிஷேகம் முறையே எண்ணை , பஞ்சாமிர்தம் , பால் , தயிர் , திருமஞ்சனம் , சந்தனம் என்று முடிவாக சொர்ண அபிஷேகம் செய்து அபிஷேகத்தை நிறைவு செய்வார்கள் .

"சொர்ண அபிஷேகம் முடிந்தவுடன் தீர்த்தம் நம் மேல் தெளிப்பார்கள் , அத்தீர்த்தம் மிக மிக விசேஷமானது ".

விசேஷ காலங்களில் நேரம் மாறுபடும் .

இத்தீர்த்தம்  வீட்டில் தெளிக்க தீய சக்திகள் விலகும் 

" சாய் பாபா உபாசகர் (என் குருநாதர் ) சொன்ன தகவல் இது "


"ஷீரடி சாய் பாபா வோட 




அருள்வாக்கு 



முக்காலமும் அறிந்த என் குருநாதர் சாய் பாபா 

உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை 

சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்

saibabatrichy@gmail.com

 ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்


என் குருநாதரை பற்றி அறிந்து 

 

கொள்ள கீழே உள்ள லிங்க் ல் 

 

தொடரவும் 


 

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் 

http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_9026.html


பைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்

 http://copiedpost.blogspot.in/2014/05/blog-post_6.html

 

பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்

http://copiedpost.blogspot.in/2014/10/blog-post.html"

 





நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயார் சன்னதி  :

நடை திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 


ஆஞ்சநேயர் சன்னதி :

நடை திறக்கும் நேரம் காலை 6.30 முதல் மதியம் 1 மணி வரை 


மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
 



ஸ்ரீ நாமக்கல் நரசிம்மர் , நாமகிரி தாயார்  மற்றும் ஆஞ்சநேயர் கோவில் ஸ்தல வரலாறு குறித்த  video தொகுப்பு 


video வை  காண கீழே கிளிக் செய்யவும்  










பிறவி தோஷம் தீர்க்கும் நரசிம்மர் மஹா மந்திரம் 

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்



                                   DOWNLOAD.MP3

இம்மகா மந்திரத்தை mp3 பாடலாக டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும் 

http://www.harekrsna.com/sun/features/06-12/namakkal-nrsimha2.jpg

உக்ர ந்ருஸிம்ஹாய வித்மஹே
 வஜ்ர நகாய தீமஹி
              தந்நோ ந்ருஸிம்ஹ ப்ரசோத்யாத் 

நரசிம்ம காயத்ரி.MP3

DOWNLOAD.MP3


ஓம் வஜ்ர நகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி
தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்

 


நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார். இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும், நரசிம்மரே இங்கு பிரதானம்.
முதலில் கோயிலுக்கு முன்னே ஹனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 15 அடி உயரத்தில் காட்சி தருகிறார். அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நிதி. நரசிம்மர் மிகவும் கம்பீரமாக பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது 




http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g13.jpg


அமர்ந்து உள்ளார். நரசிம்மன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ளார். திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர்.
அடுத்து நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளதை தரிசிக்கலாம். பட்டாடை உடுத்தி நிறைய அணிகலன்கள் தரித்து நெற்றியில் நாமம் கொண்டு அற்புதமாகக் காட்சி தருகிறாள்.
நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரம். அதன் வழியே அனுமாரைக் காணலாம். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரை-அவரது பாதங்களைப் பார்த்து இருப்பதுபோல் அமைந்துள்ளது.

http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/bgod.png

வெளியே வந்து வடக்குப் பக்கம் வந்தால் அரங்கநாதரைத் தரிசிக்கலாம். அரங்கநாதர் கார்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருப்பதைக் காணலாம். காலடியில் சங்கரநாராயணரைக் காணலாம். சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயாரைக் காணலாம்.
கீழே இறங்கி வந்தால் கமலாலயம். அது அனுமனுக்குத் தாகம் தீர்த்தது. அடுத்து மலையேறினால் வரதராஜரைத் தரிசிக்கலாம்.
http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l1.jpgஇரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர-திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில் தவம் புரிய, சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம  நரசிம்மரையும் எடுத்துக் கொண்டு வர, இந்தக் கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரை கையிலிருந்து கீழே வைக்க, தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை. எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை. இங்கே தான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரியவே, அவளுக்கு நரசிம்மர் அருள் புரியவே இங்கே தங்கி விட்டாராம்.
இந்தத் தலத்துக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள். 300 ஆண்டுகளுக்குமுன் மகேந்திரவர்மன் குடைந்து அமைத்தவை. அதியேந்திர விஷ்ணு கிரகம் என்று இத்தலத்தைப் பற்றிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நாமக்கல் நரசிம்மர் வரம் தரும் விஷ்ணு தலமாகக் கருதப்படுகிறார்.



http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l2.jpg






   
 

  கணித மேதை ராமானுஜம் நாமகிரி தாயாரை உபாசனை செய்து உள்ளார் , இவர் கேட்கும் கணக்குக்கு இத்தாயாரே உடனே பதில் தருவதாக பல இடங்களில் வெளிப்படையாகவே கூறி உள்ளார் .

அப்படிப்பட்ட தாயாரை வணங்கி நாமும் அனுகிரகம் பெறுவோம் .

இக்கோவிலில் வருட அர்ச்சனை நடைபெறுகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் நமது பெயரில்  ஸ்ரீ நரசிம்மர் , ஸ்ரீ நாமகிரி தாயார் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் க்கு  நமது பெயரில் அர்ச்சனை செய்து  பிரசாதத்தை நமக்கு தபால் மூலம் வீட்டுக்கு அனுப்புவார்கள் .

இதற்க்கு கட்டணம் வருடம் RS 300/

அதே போல் அன்னதான திட்டமும் நடைபெறுகிறது 

நமது பிறந்த நாள் அன்று 

ஒரு நாள் மட்டும் அன்ன தானம் செய்ய  RS 2,000/ 

வாழ்நாள் முழுவதும் அன்ன தானம் செய்ய RS 20,000/ கட்டணமாக பெற்றுக்கொள்ள படுகிறது  ,

அல்லது  இவ்வாறு நம்மை போல் பிறர் கட்டும் 20,000 ரூபாய் பணத்தையெல்லாம் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் பெயரில் BANK ACCOUNT - இல் கட்டி விடுவார்கள் . அதில் வரும் வட்டி பணத்தை கொண்டு ஸ்ரீ நரசிம்மருக்கும் ,நாமகிரி தாயாருக்கும் , அஞ்சநேயருக்கும் , ஸ்ரீ ரங்கநாதருக்கும் மூன்று வேளையும் அபிஷேகமும் பூஜையும் செய்வார்கள் .

இப்பணியை இந்து சமய அறநிலைய துறை சிறப்பாக செய்து வருகிறது  

இந்து சமய அறநிலைய துறை கட்டு பாட்டில் இத்திருக்கோவில்  வந்த நாள் முதல்  ஸ்ரீ நரசிம்மருக்கும் ,நாமகிரி தாயாருக்கும் , அஞ்சநேயருக்கும் , ஸ்ரீ ரங்கநாதருக்கும் மூன்று வேளையும் அபிஷேகமும் பூஜையும் இவ்வாறே செய்யபட்டு வருகிறது .

பக்தர்கள் ஆஞ்சனேயரிடம் வேண்டுதல் வைத்து வேண்டுதல் நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்கிறார்கள்
ஒரு நாள் மட்டும் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்ய Rs  35,000. இந்த அலங்காரத்தை பலர் ஒன்று கூடி செய்வார்கள் .




 http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g3.jpg
நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் , ஸ்ரீ நரசிம்ம பெருமாள் , நாமகிரி தாயார்,உபாசனை, பரிகாரம் , தீர்வுபில்லி சூனியம் , செய்வினை , மாந்திரீகம் , ஏவல், மந்திரம் , தந்திரம் , யந்திரம் , மை , பேய் , பிசாசு , மாந்திரீக பாதிப்பு , குட்டிச்சாத்தான் , கொல்லி மலை ,ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம் ,ஸ்லோகம் ,சுலோகம் ,ஸ்தோத்திரம் ,ஸ்துதி,நரசிம்மர் ,namakkal ,anjaneyar ,manthra ,sloga ,sthuthi ,mp 3,sri narasimma ,black  removal ,sri  namagiri thayaar ,sri  magalakshmi ,sthothram ,hanuman ,சாலிசா ,chalisha ,temple ,கோவில்,ஆலயம் 

1 comment: