SHIRDI LIVE DARSHAN

Thursday, 16 February 2012

ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி Transcendental Meditation(TM)


ஆழ்நிலை தியானம் - Transcendental Meditation(TM)
     
தவத்திரு மகரிஷி மகேஷ் யோகி அவர்கள்  உருவாக்கி  உலகிற்கே அறிமுகம் செய்து வைத்தார்  , இப்பொழுது இருக்கும் பல ஆழ்நிலை தியான பயிற்சி நிலையங்கள் , அவருடைய பயிற்சி வகுப்பின் சில பல மாறுதல்களே , மூலம் மகரிஷி ஏற்படுத்தியது தான் .
மகரிஷியின் ஆழ்நிலை பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே உள்ளது 


முகவரி :
           மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகம் ,( மகரிஷி school )
           28, டாக்டர் குருசாமி சாலை 
           சேத்துப்பட்டு 
          சென்னை -31 
          PH -044-26403960, 2641 1862 
          98404 90871 
          www.tm.org      
எந்த மதத்தினரும் , 10 வயதிற்கு மேற்பட்ட யாவரும் கறக்கலாம்    
வெறும் 6 நாள் கொண்ட பயிற்சி வகுப்பு 
ஒவ்வொரு நாளைக்கும் வெறும் 2 மணி நேரம் மட்டுமே வகுப்பு 
(மொத்த வகுப்பும் வெறும் 12  மணி நேரம் மட்டும்தான் )
ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை  மாலை இலவச அறிமுக வகுப்பு நடைபெறும் ,
( சனி கிழமை யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் )

இந்த இலவச அறிமுக வகுப்பில் :


ஆழ்நிலை தியானம் என்றால் என்ன ?

ஆழ்நிலை தியானம் எதற்காக செய்ய வேண்டும் ?

ஆழ்நிலை தியானம் செய்யும் பொது நமது உடலில் என்ன நடக்கிறது ?

ஆழ்நிலை தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு நமக்குள் என்னென்ன மாற்றம் ஏற்படும் ?

எண்ணம் என்பது என்ன ?

மனம் எப்படி செயல் படுகிறது ? 

பாவ பதிவுகள் (கர்ம வினை ) நமக்குள் எப்படி பதிந்து செயல்படுகிறது ? அது எப்படி நம் உடலை விட்டு 
வெளியேறுகிறது ?

ஆழ்மனம் எவ்வாறு செயல்படுகிறது ?

ஆழ்மனதின் தன்மை என்ன ? அதன் ஆற்றல் என்ன ?

மேல் மனதிடமிருந்து ஆழ் மனதிற்கு எப்படி போவது ?

ஆழ்மனம் மூலம் நமக்கு வேண்டியதை அடைவது எப்படி ?

நமது துன்பத்திற்கு காரணம் என்ன ? அதை களைவது எப்படி ?

இறைவன் யார் ? எங்கு , என்னவாக இருக்கிறான் ? நமக்குள் எப்படி செயல்படுகிறான் ?

போன்றவற்றை பற்றி விளக்கம் கொடுப்பார்கள் 

விருப்பமுள்ளவர்கள் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை 850 RS ( போன வருடம் ,இப்பொது என்ன கட்டணம் என்று தெரிய வில்லை ) கட்டணம்  கட்டி சேர்ந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் ,

பயிற்சியில் குரு மகரிஷி மகேஷ் யோகி யின் திருவுருவ படத்தின் முன் ஒவ்வொருவருக்கும் 

தனி தனியாக மந்திர தீட்சை வழங்க படும் 

அந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் எனவும் சொல்லி கொடுப்பார்கள் 

(இந்த ஆழ்நிலை தியானத்தில்    மிகவும் முக்கியமானது இந்த 
உச்சரிப்பு முறை தான், மந்திரமும் ஒரு சின்ன  பீஜ மந்திரம் மட்டும்தான் )
இந்த மந்திரத்தை கற்று கொண்டவர்கள் இதை யாருக்கும் சொல்லி கொடுக்க கூடாது , அது குரு சாபமாக கருதபடும் .
ஞாயிறு, திங்கள் ,செவ்வாய் ,புதன் வரை:

தியானம் எப்படி செய்ய வேண்டும் ? எப்படி செய்ய கூடாது ? எப்பொழுது செய்ய கூடாது ?

என கற்று  கொடுத்து பயிற்சி செய்ய வைப்பார்கள் ,
கடைசி நாள் வியாழ கிழமை யன்று பழைய மாணவர்களுடன் சேர்ந்து கூட்டு தியானம் செய்து பயிற்சியை நிறைவு செய்வார்கள் 
ஒவ்வொரு வாரமும் வியாழ கிழமை மட்டும் கூட்டு தியானம் நடைபெறும் , நாமும் பயிற்சி முடிந்த பிறகு வியாழ கிழமை தோறும் கூட்டு தியானத்தில்  கலந்து கொள்ளலாம் 

தியானத்தின் போது :
தியானத்தின் போது மனம் மிக நுண்ணியதாகி மேல் மனதிலிருந்து ஆழ் மனதிற்கு ஆல்பா அலைக்கு செல்கிறது , விழிப்புடன் கூடிய ஓய்வு/ தூக்க நிலைக்கு மனமும் , உடலும் செல்கிறது 


அந்த அலையில் இதுவரை  மூளையில் உறங்கி கொண்டிருக்கும் கோடிகணக்கான செல்கள் விழிப்படையும் 

குறைந்த நேரத்தில்  தூக்கத்தை விட ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது 
இதயம்  நிமிடத்திற்கு 5 முறை தன்னுடைய இயக்கத்தை இயற்கையாக குறைத்து ஓய்வினை அனுபவிக்கிறது , இதனால் இதய கோளாறுகள் தடுக்கபடுகிறது 

ஆழ்நிலை தியானபயிற்சியின் பலன்கள்:

கர்ம வினை கழியும் 

விரும்பிய நல்ல விளைவுகளை நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்ளலாம் 

மனம் தெளிவடையும்  அமைதியடையும் 

ஆத்ம பலம் அதிகரிக்கும் 

மூளையின் செயல் திறன் /அறிவு திறன் அதிகரிக்கும் 

செய்யும் செயலில் முழு ஆற்றலுடன் செயல்பட முடியும் 

கிரகிக்கும்/ புரிந்து கொள்ளும்  திறன் அதிகரிக்கும் 

ஞாபக சக்தி அதிகரிக்கும் 

ஆக்க பூர்வமான அறிவு மேலோங்கும்  

மனோவியாதி சீராகும் 

பயம் , கவலை , குழப்பம் , மன உளைச்சல் நீங்குகிறது 

ஆளுமை திறன் ஓங்குகிறது 

உடல் அளவில்:

ஆழ்நிலை தியானம் தொடர்ந்து செய்து வருவதனால் புகை பிடித்தல் , போதை பழக்கம் 
படிபடியாக குறைந்து வருகிறது 
தூக்கமின்மை சீராகிறது 
மூளைக்கும் உடலுக்கும் ஆழ்ந்த ஓய்வு கிடைக்கிறது 
களைப்பு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும் 
பதட்டம் , படபடப்பு குறைகிறது 
நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது 
ரத்த அழுத்தம் சீராகிறது 
ஆஸ்துமா , தலைவலி குணமாகிறது 
இதய நோய் , மாரடைப்பு தடுக்கபடுகிறது 
வயிற்று கோளாறு குறைகிறது 
தோலின் எதிப்பு சக்தி கூடுகிறது 

3 மாதம் கழித்து:

ஆழ்நிலை தியானப்பயிற்சி கற்று  முடிந்தவுடன் 3 மாதம் கழித்து உயர் பயிற்சியான ஆழ்நிலை தியான சித்தி பயிற்சி கற்று தரப்படும் 


இப்பயிற்சியின் பலன்கள் :
உடலும் , மனமும் இணைந்து ஆரோக்கியமாக வாழவும் 
நினைத்த நல்ல எண்ணங்கள் உடனே ஈடேறும் 

குடும்பத்தில் எல்லோரிடமும்  அன்பு பாசம் மிகுந்து நல்லுறவுடன் வாழ வழிவகுக்கும் 

 தொழிலோ , வேலையோ இல்லாதிருப்பவருக்கு நிறைவான தொழிலோ , வேலையோ  ஏற்படுத்திக்க உதவும் 

தொழில்லும் சமூக வாழ்விலும்  நல்ல முன்னேற்றம், மரியாதையும்  ஏற்பட உதவும்

அனுபவ பலனோடு ஒப்பிடும் பொது இவையெல்லாம் மிக மிக சொற்பமே .


Transcendental Meditation(TM),ஆழ்நிலை தியானம்,மகரிஷி மகேஷ் யோகி

4 comments:

 1. பயனுள்ள அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. Very Nice. Have any branch in Coimbatore?

  ReplyDelete
  Replies
  1. i don;t know . please contact

   this address (ph number )

   முகவரி :
   மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகம் ,( மகரிஷி school )
   28, டாக்டர் குருசாமி சாலை
   சேத்துப்பட்டு
   சென்னை -31
   PH -044-26403960, 2641 1862
   98404 90871

   Delete