மகரிஷி வேதாத்திரி
பாவம் என்பதற்க்கு தமிழில் பழிச்செயல் என்று பொருள் .
இந்த பழிச்செயல்கள் நமக்குள் எப்படி பதிவாகின்றது என்பதை விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு நமது எண்ணங்களையும் , செயல்களையும் சீரமைத்து கொள்ள வேண்டும்
எண்ணம் , சொல் , செயல் இந்த மூன்றின் வழியிலே நாம் செயலாற்றி வருகிறோம் , வாழ்கிறோம்
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு , அந்த விளைவு தனக்கோ , பிறருக்கோ , தற்காலத்திலோ , எதிர்காலத்திலோ துன்பத்தையோ , வருத்தையோ தருமானால் அதுதான் பாவம் என்று சொல்லபடுகின்றது .
ஒரு செயல் செய்கின்ற பொது நம்மிடம் பதிவாகின்றது , செய்த பிறகு ஏற்பட கூடிய துன்பமும் நம்மிடம் பதிவாகின்றது , அந்த பதிவு பழக்கமாகி அதன் வழியே மீண்டும் செய்ய பிரதிபலிப்பு , செயல் இன்ப துன்ப விளைவுகள் உண்டாகின்றன
ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் என்ற ஒன்று உண்டு , அந்த மனதை அறிய தக்க அறிவுதான் " ஆறாவது அறிவு "
மனம் இல்லை என்று சொல்லவும் முடியாது , இப்படிதான் இருக்கிறது என்று எடுத்து காட்டவோ, விவரிக்கவோ முடியாத ஒரு மறைபொருள் போல உள்ளது
இப்படிப்பட்ட மறைபொருளின் தோற்றம் , இயக்கம் , விளைவுகள் இவையெல்லாம் தெரிந்து நல்ல முறையில் பயன்படுத்த கூடிய ஆற்றல்தான்
ஆறாவது அறிவு
நாம் எல்லோரும் ஒரே நோக்கத்தோடுதான் செயல்படுகிறோம், பழிச்செயல்
பதிவிகளிருந்து விடுபட்டு தூய்மை பெற்று இறைநிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தன பிறந்தோம் , வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம் , இருந்தாலும் தேவை , பழக்கம் , சூழ்நிலையால் ஏற்படும் நிர்பந்தங்களினால் சில சமயம் தெரிந்தோ , தெரியாமலோ தவறு செய்ய வேண்டியதாகிறது, தவறு செய்துவிடுகிறோம் ,இந்த தவறுகள் எல்லாம் நம் உடலிலே பழிச்செயல் பதிவுககளாக பதிந்து மீண்டும் மீண்டும் துன்பங்களையே விளைவிகின்றன .
இந்த பழிச்செயல் பதிவுகள் நம் உடலில் எங்கெங்கே பதிவாகின்றன என்றால்
உடல் , செல்களில் , மூளை செல்களில் , உயிர்துகள்களில் , வித்து செல்களில்,
ஜீவகாந்த களத்தில் , வான் காந்தத்தில் பதிவாகி தனக்கும் , தன் வித்து வழியாக
தோன்றும் வாரிசுகளுக்கும் துன்பங்களை ஏற்படுத்துகின்றன
நமக்குள் ஒவ்வொன்றும் எப்படி பதிவாகின்றது ?
ஒரு யானையை பார்க்கிறோம் , மிக பெரிய உருவம் அது , அந்த உருவம் கண்ணில் வரும் பொது மிக சிறிய அளவில் , சுருங்கிய நிலையில் ஒரு கொசுவினுடைய அளவில் தெரிகிறது , மீண்டும் சுருங்கி சுருங்கி உருவமே அற்ற நிலையில் மூளை செல்கள் வரைக்கும் செல்லும் பொது புள்ளியாக பதிகிறது , புள்ளியாக பதிந்ததை அலையாக மாற்றி உடலிலே உள்ள ஜீவகாந்த ஆற்றலின் திணிவு நிலையான உயிர் துகளில் (மூலதாரத்தில் ) மோதி பதிவாகிறது .
மீண்டும் உயிர்துகளில் இருந்து அதே அலை வீசும் பொது மூளையின் செல்களில் மோதி அலையிலுள்ள சுருங்கும் , விரிவடையும் தன்மையால் எண்ணங்கள் , நினைவுகள் , காட்சிகளாக தோன்றுகிறது
(தொடரும் )
nalla pathivu
ReplyDelete