SHIRDI LIVE DARSHAN

Friday, 24 February 2012

விநாயகர் அஷ்டகம் .MP3



விநாயகர் அஷ்டகம் MP3




ஏக தந்தம் மஹாகாயம் தப்தகாஞ்சன ஸன்னிபம்|

லம்போதரம் விஸாலாக்ஷம் வந்தே அஹம் கணநாயகம்.||(1)





மௌஞ்ஜீக் கிருஷ்ணா ஜினதரம் நாகயக்ஞோபவீதினம் |

பாலேந்து விலஸன் மௌலிம் வந்தே அஹம் கணநாயகம் ||--(2)



அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ரூபி: பரிபாலிதம் |

பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநயகம் ||--(3)



சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலாவிபூஷிதம் |

சித்ர ரூபதாம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்||..(4)



கஜவக்த்ரம் ஸுரஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம் |

பாஸாங்குஸதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம். -------(5)





மூஷிகோத்தம மாருஹ்ய தேவாஸுர மஹாஹவே |

யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்...(6)





யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரைஸ்ஸதா |

ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே அஹம் கணநாயகம்.---(7)



ஸர்வ விக்ன கரம் தேவம் ஸர்வ விக்னவிவர்ஜிதம் |

ஸர்வ ஸித்தி ப்ரதா தாரம் வந்தே அஹம் கணநாயகம்.--(8)





கணாஷ்டக மிதம் புண்யம் பக்தி தோ ய: படேந் நர: |

விமுக்தச் ஸர்வபாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி ||..(9) 


--------------------------------------------------------------------------------------------------




பொருள்:


ஒரே தந்தத்தை உடையவரே! பெருத்த சரீரத்தைக் கொண்டவரே! உருக்கிய பொன்னைப் போன்ற நிறமுடையவரே! தொப்பைக் கணபதியே! விசாலமான பார்வையை உடையவரே! பூத கணங்களின் தலைவரான கணபதியை நமஸ்கரிக்கின்றேன்(1)

முஞ்சாப்புல், கிருஷ்ணார்ஜினம் இவற்றை அணிந்தவரே! நாகத்தைப் பூணூலாகத் தரித்திருப்பவரே! தலையிலே பாலச்சந்திரனைச் சூடிக்கொண்டிருப்பவரே! பூத கணங்களின் தலைவரான கணேச மூர்த்தியை வணங்குகின்றேன்...(2)

சக்தியின் மனதை மகிழ்விபவரே! சப்த மாதாக்களாலும் ரட்சிக்கப்பட்டவரே! பக்தர்களிடம் அன்பு கொண்டவரே! மதம் கொண்டவரே! பூத கணங்களின் தலைவரான கணபதியை வணங்குகின்றேன்.--(3)



பலவித ரத்தினங்களாலும், பலவித மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவரே! பல வித ருபத்தைத் தரிப்பவரே! தேவ பூத கணங்களின் தலைவருமான மகா கணபதியை வணங்குகின்றேன்..(4)

யானை முகத்தைக் கொண்டவரே! தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவரே! செவிகளாகின்ற விசிறிகளால் அலங்கரிக்கப் பட்டவரே! பாசம், அங்குசம் இவற்றைத் தரித்திருப்பவரே! பூத கணங்களின் தலைவரான கணபதியை வணங்குகின்றேன்.---(5)



தேவ-அசுரப் போரில் மூஞ்சூரின் மேல் ஏறிப் போர்புரிந்து ஜெயம் பெற்றவரே! சிறந்த பராக்கிரமத்தை உடையவரே! பூத கணங்களின் தலைவரான ஸ்ரீ மகாகணபதியை வணங்குகின்றேன்.--(6)



யட்சர், கின்னரர், கந்தர்வர், சித்தர், வித்யாதரர்களால் சதா பூஜிக்கப்படுபவரே! பெரிய புண்ணியரே! பூதகணங்களின் தலைவரான மகா கணபதியை வணங்குகின்றேன்.--(7)



விக்னேஸ்வரரைத் தூஷிப்பவர்க
ளுக்குத் தடையைச் செய்கின்றவரே! தேவ தேவரே! பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நிவர்த்திப்பவரே! எல்லாப் பாக்கியங்களையும் தருபவரே! பூத கணங்களின் தலைவரான ஸ்ரீ மகா கணபதியை வணங்குகின்றேன்.



இந்தக் கணாஷ்டகம் மகா புண்ணியமானது. பக்தியோடு இதனால் கணேசரைத் தியானிப்பவருக்கு எல்லாக் காரியங்களும் வெற்றியாகும். எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபட்டு முடிவில் கைலாச லோகத்தையும் அடைவர் என்பதில் சந்தேகம் இல்லை..(9)


vinayagar ashtagam ,vinayagar ashtakam,ashtakam, ashtagam , ganapathi ashtagam , ganapathi ashtakam , mp3, ega thantham ,

No comments:

Post a Comment