SHIRDI LIVE DARSHAN

Wednesday, 1 February 2012

சதுரகிரி (சித்தர் மலை)


ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு சிறப்பு ‘சதுரகிரி (சித்தர் மலை)’


சதுரகிரி மலையைப் பற்றிய பதிவு இது. என்னால் அங்கு வரை பயணம் செய்ய முடியவில்லை.  எனது மகன் சரவணன் அடிக்கடி பயணம் செய்து நண்பர்களை அழைத்துச் சென்று (trekking),  அங்கு  எனது தம்பி இராமராஜனுடன் ‘டீசல் ஜெனெரேட்டர்’ மாட்டுவதற்கு என பள்ளியில் படிக்கும் போது, நிறைய ஈடுபாட்டுடன் சென்றிருக்கிறான்.  நான் திருவண்ணாமலை பற்றி எழுதும் போது ஒரு நண்பர் சதுரகிரி பற்றி எழுதும்படி கேட்டார்.  எனது உடல் நிலைமை அனுமதிக்காது என்று அவருக்கு பதில் எழுதினேன்.  அந்த நண்பரின் பிரார்த்தனை என்று நினைக்கிறேன். நேற்று எனது மகன் சரவணன் (29.10.11)  சென்னையிலிருந்து வந்திருந்தான்.  தாணிப்பாறை வரை அழைத்து செல்கிறேன் என்று சொன்னான்.  இது தான் கடவுள் கிருபை போலும். நான் தாணிப்பாறை வரை சென்றதை தனி பதிவாக எழுதுகிறேன்.
எனது மகன் சரவணனின் சதுரகிரி பயண அனுபவங்களையும்புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதற்கண் சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு எங்களது பணிவான வணக்கங்கள். அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுந்தரமகாலிங்கம் மலை கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர் தொலைவு இருக்கும்.  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திறாயிருப்பு இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  அடிக்கடி பேருந்து, மினி பஸ் வசதி இருக்கிறது.  வத்திறாயிருப்பிலிருந்து தாணிப்பாறை செல்ல வேண்டும்.  பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கும்.  தாணிப்பாறையிலிருந்து அடிக்கடி மினி பஸ், ஆட்டோ வசதி இருக்கின்றன.
தாணிப்பாறை
தாணிப்பாறையிலிருந்து சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலைப்பாதை கால்நடையாக செல்ல வேண்டும்.  கிட்டத்தட்ட ஏழு முதல் பத்து கிலோமீட்டர் தூரம் இருக்கலாம்.  மனதிலும் உடலிலும் நல்ல வலு இருக்க வேண்டும். வயதானவர்கள்ரத்த அழுத்தம்இருதய பலவீனம் போன்ற நோயுள்ளவர்கள் தாணிப்பாறையில் இருக்கும் விநாயகரையும், ராஜேஸ்வரி அம்மன் கோவிலையும், கருப்பண சாமி கோவிலையும் தரிசித்து, உங்களது அதிர்ஷ்டம் இருந்தால் அருகிலுள்ள ஆற்றில் தண்ணீர் ஓடினால் அதில் உள்ள சின்ன அருவியில் குளித்து விட்டு அங்கிருந்தே மானசீகமாக சுந்தர மகாலிங்கத்தை தரிசித்து விட்டு சந்தோஷமாக திரும்பி விடலாம். ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
தாணிப்பாறையிலிருந்து கிளம்புவோம்.  கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் ஓரளவு கற்பாறைகள் நிறைந்த பாதை வழியே (ஓரளவு சிரமம் இருக்கும்) வந்தால் ‘செயின் பாறை’ (linked by Chain between two rocks)  என்ற இடம் வரும்.  இரண்டு பாறைகள் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருக்கும்.  சில நேரங்களில்  தண்ணீர் அதிகம் ஓடும்.  அதனால் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு கடக்கலாம்.  அந்த புகைப்படங்களை இணைத்திருக்கிறோம்.
சங்கிலிப் பாறை
சங்கிலிப் பாறையிலிருந்து ஒரு அரை மணி நேரம் நல்ல ஏற்றம் இருக்கும்.  இளைஞர்களே கிட்டத்தட்ட மூன்று நான்கு தடவை இடை தங்கி இளைப்பாறிச் செல்வார்கள்.  மூச்சு வாங்கிப் போகும்.  அடுத்து ஓரளவு நல்ல பாதை இருக்கும்.  ‘ பசுத்தடம் ‘ என்ற இடம் வரும். எனக்கு தெரிந்த வரலாறு.  காமதேனு பசு வழி தெரியாமல் இருந்த ஒரு பக்தருக்கு வழி காட்டியதாகவும், அந்த காமதேனு பசுவின் கால் தடம் என்று சொல்கிறார்கள்.
அடுத்து ஒரு இறக்கம் இருக்கிறது.  அதற்கான புகைப்படம் இருக்கிறது.  அந்த இறக்கம் உப்புத்துறையிலிருந்து (தேனி மாவட்டம்) வரும் பாதை.  அந்தப் பாதை ஆடி அமாவாசைக்கு மட்டும் பயன்படுத்துவார்கள்.  மிகவும் ஏற்றம் என்பதால் அனேகமாக யாரும் உபயோகிப்பதில்லை.  அதனால் இந்த பாதையில் இறங்கி விடாதீர்கள்.  அது நமக்கான பாதை இல்லை.
அடுத்து நாம் நேரே மலை ஏறுவோம்.  அடுத்து வருவது கோரக்கர் குகை.  அடுத்து வருவது நாவல் ஊற்றுஎன்ற ஊற்று இருக்கும்.  குடிநீர் அதில் எடுத்துக் கொள்ளலாம்.  நீர் இனிப்பாக இருக்கும்.  வருடம் முழுவதும் நீர் இருக்கும்.  இங்கு தண்ணீர் வற்றுவதில்லை.
அடுத்து இரட்டை லிங்கம் இருக்கும்.  ஒரு லிங்கத்தில் சிவனும்ஒரு லிங்கத்தில் விஷ்ணுவும் இருப்பதாக நம்பிக்கை. அதன் புகைப்படத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.
இரட்டை லிங்கத்தை தாண்டி ஓரளவு இறக்கம் இருக்கும்.  அங்கு ஒரு கேணியும், சிறு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.  அங்கு நல்ல தெம்பாக இருப்பவர்கள் குளிக்கலாம்.  சற்று சரிவு பாதையில் இறங்க வேண்டும்.  இன்றேல் தண்ணீர் விழும் அழகை பார்த்து விட்டு கிளம்பலாம்.
இரட்டை லிங்கம்
ஓரளவு நாம் பயணத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டோம்.  நல்ல ஏற்றம் இருக்கும்.  வழியில் பாதை நன்கு கற்கள் அடுக்கி, இரு பக்கங்களும் மரங்கள் நமக்கு தோகை பிடித்திருப்பது போன்றுஒரு குகை போன்ற தோற்றமும் இருக்கும்.  நன்கு சில்லென்று இருக்கும்.  நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம்.  எவ்வளவு வெயில் இருந்தாலும் அங்கு மட்டும் ஊட்டியில் இருப்பது போன்று (சென்னை வாசிகளுக்கு Air Condition இல் இருப்பது போல்) இருக்கும்.  இது அங்கு சென்று  அனுபவித்தால் தான் தெரியும்.  இந்த ஏற்றம் முடிந்தவுடன் பிலாவடி கருப்பசாமி கோவில் இருக்கும்.  பலா மரத்தின் அடியில் கருப்பசாமி இருக்கிறார். காலங்கி நாதர் என்ற சித்தர் உலோகங்களை தங்கமாக மாற்றியதாகவும், அந்த தங்கங்களை ஒரு கிணற்றில் வைத்திருப்பதாகவும், அந்த கிணற்றுக்கு கருப்பசாமி தான் காவல் தெய்வம் என்றும் ஒரு நம்பிக்கை.  இங்கு கருப்பசாமியை தரிசனம் செய்து கொள்வோம்.
பிலாவடி கருப்பசாமி கோவில்
பிலாவடி கருப்பசாமி
நாம் கிளம்புவோம்.  கருப்பசாமி கோவிலுக்கு அருகில் உள்ள ஓடையில் குளித்து விட்டு செல்வோம்.  இன்னும் ஒரு பத்து நிமிஷ நேரம் ஏற்றம்.  அடுத்து பெரிய பசுக்கடைஎன்ற ஒரு பெரிய சமதளம் வரும்.  அங்கு தான் ஆடி அமாவாசை சமயங்களில் கடைகள் இருக்கும்.  சமதள முடிவில் ஒரு ‘அடி பம்பு’ (Hand Pump) இருக்கும்.  குடி நீர் அங்கு சேகரித்துக் கொள்ளலாம்.  அருகில் சிவகாசி நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அன்ன தான மண்டபம் இருக்கிறது.
அடுத்து சற்று தூரம் சென்றால் ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரியும்.  இடது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சந்தன மஹாலிங்கம் கோவில் இருக்கும்.  வலது பக்கம் உள்ள பாதையில் சென்றால் சுந்தர மஹாலிங்கம் கோவில் இருக்கும்.
சந்தன மஹாலிங்கம் கோவில்
நாம் படி ஏற ஆரம்பிக்கிறோம்.  முதலில் அமாவாசை அன்ன தான மண்டபம்இருக்கிறது.  இந்த மண்டபம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு A.K.C.கொண்டல் வண்ணன் அவர்களால் சிறப்பாக நிர்வகிக்கப் படுகிறது. அடுத்து பௌர்ணமி அன்ன தான் மண்டபம் சிவகாசி நாடார்களால் நிர்வகிக்கப் படுகிறது.  அடுத்து கோவிலுக்கு வந்து விட்டோம்.  சித்தர் தோரண வாயில் – கோவிலின் முகப்புக்கு வந்து விட்டோம்.  இங்கு பதிணெண் சித்தர்கள் சிலை இருக்கின்றது.  பதினெட்டு சித்தர்களுக்கும் ஒரே இடத்தில் சிலை இருப்பது இங்கு மட்டும் தான் – இது ஒரு தனி சிறப்பு. எதிரே நவக்கிரகங்கள் இருக்கிறார்கள்.  அருகில் சட்ட நாதர் குகை இருக்கிறது.  அதன் அருகில் ஒரு இடத்தில் நீள் வட்டமான அமைப்பில் மூன்று கம்பிகளை வைத்து சமையல் செய்கிறார்கள்.  அதில் இருந்து விழும் சாம்பலை திருநீறாக வழங்குகிறார்கள்.
பௌர்ணமி அன்ன தான் மண்டபம்
பதிணெண் சித்தர்கள் சிலை
நவக்கிரகங்கள்
சந்தன மஹாலிங்கம் கோவிலுக்கு வந்து விட்டோம். இங்கு சுயம்பு லிங்கம் சந்தனக் காப்பிடப் பட்டிருக்கிறார்.  இங்கு சந்தனமும், திருநீறும் பிரசாதமாக வழங்கப் படுகிறது.  சுயம்பு லிங்கத்தை பிரகாரம் சுற்றி வரலாம்.  முன்பு சந்தன மரம் இருந்திருக்கிறது.  இப்போது இல்லை.  பக்கத்தில் ஆகாச கங்கை அருவி இருக்கிறது.  அருவியிலிருந்து வரும் தண்ணீர் தான் இங்கு பூஜைக்கு, சமையலுக்கு, குடிநீருக்கு எல்லாம்.  அருவிக்கு அடுத்தாற் போல் வினாயகர், முருகன், சந்தன மஹா தேவி எல்லாம் இருக்கிறார்கள்.  அனைவரையும் தரிசனம் செய்து கொள்வோம்.  நாம் கிளம்புவோம்.
சந்தன மஹாலிங்கம் கோவில்
ஆகாச கங்கை அருவி
மற்ற விபரங்கள் – இங்கு மலை வாழ் மக்கள் (பளியர்கள்) கிட்டத்தட்ட ஆறு குடும்பங்கள் தங்கியிருக்கிறார்கள்.  மாடு வளர்க்கிறார்கள்.  இவர்களது வாழ்க்கைக்குதேன் எடுத்தல்சாம்பிராணி சேகரித்தல்மூலிகைகள் சேகரித்தல் போன்ற தொழில் செய்கிறார்கள்.  நயம் (original)  சாம்பிராணி அங்கு நம்பி வாங்கலாம்.  இங்கு மின் இணைப்பு கிடையாது. டீசல் ஜெனரேட்டர் வைத்து தான் மின்சாரம் தயாரித்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு நல்ல வருமானம் வருகிறது.  அரசாங்கத்திற்கு நல்ல வருமானம்.  இந்த அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்ய வேண்டும்  இந்த மலை வாழ் மக்களுக்கு நல்ல வசதிகள் செய்ய வேண்டும்.இவர்கள் தான் காட்டை பாதுகாக்கிறார்கள்.
சுந்தர மஹாலிங்கம் கோவில்
சுந்தரனார் என்ற சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம். இவர் சுயம்பு லிங்கம்.  சற்று சாய்வாக இருக்கிறார். இங்கு விபூதி பிரசாதம் வழங்கப் படுகிறது.  இங்கு பூஜை நேரத்தில் சங்கு ஊதப்படுகிறது. லிங்கருக்கு மேலே செப்பு கலயம் இருக்கிறது.நாள் முழுக்க நீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வித்தியாசமான அமைப்பு. இது சற்று பெரிய கோவில்.  பிரகாரம் சுற்றி வரலாம்.
சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா.
மற்ற விபரங்கள்:
இங்கு நடக்க முடியாதவர்களை மலைவாழ் மக்கள் ‘டோலி’ கட்டி தூக்கி வருகிறார்கள்.  சமையலுக்கு வேண்டிய பொருட்கள் தூக்கி வரும் பணிகளையும் மலைவாழ் மக்கள்செய்கிறார்கள்.  அதற்கான கட்டணம் உண்டு.  மற்றும் வழித்துணையாகவும் (Guide) வருகிறார்கள்.  அவர்களை கூலி தானே என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.கௌரவமாக நட்த்துங்கள். அவர்கள் தான் காட்டை அழியாமல் பாதுகாக்கிறார்கள்.  இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவைப் பட்டால் எனது மகன் சரவணனின் Email id கொடுத்திருக்கிறேன்.  தொடர்பு கொள்ளுங்கள்.
Saravanan.Rathnavel@gmail.com
டோலி கட்டி தூக்கி வருகிறார்கள்
பாலிதீன் கொண்டு செல்லாதீர்கள். மது பானம் அங்கு வைத்து அருந்தி அங்கு பாட்டில்களை உடைத்து சுற்றுபுற சூழ்நிலையை கெடுக்காதீர்கள். முடியா விட்டால் அங்கு செல்லாதீர்கள். உங்கள் கடவுளை வீட்டிலிருந்தே கும்பிட்டுக் கொள்ளுங்கள்.
வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு பணிந்து நடக்க வேண்டும்.  அங்கு செடி கொடிகளை பறித்து நாசம் செய்யாதீர்கள்.  அங்கேயே இருப்பது தான் அழகு.


ஷீரடி சாய் பாபா வோட 




அருள்வாக்கு 



முக்காலமும் அறிந்த என் குருநாதர் சாய் பாபா 

உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை 

சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்

saibabatrichy@gmail.com

 ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்


என் குருநாதரை பற்றி அறிந்து 

 

கொள்ள கீழே உள்ள லிங்க் ல் 

 

தொடரவும் 


 

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் 

http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_9026.html


பைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்

 http://copiedpost.blogspot.in/2014/05/blog-post_6.html

 

பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்

http://copiedpost.blogspot.in/2014/10/blog-post.html


ஓம் சாய் ராம்
------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. மிகவும் ஆனந்தமாக எனது குருநாதரின் ஆசியுடன் தங்களின் பதிவுகளை, இன்று (26/06/2012) கிடைத்தருளியதற்கு கோடானுகோடி நமஸ்காரங்கள். சதுரகிரியில் 2007ம் ஆண்டு மாசி மாதம் கிரகணத்துடன் கூடிய முழுமதி நாளில், அவர் அடியேனுக்கு காட்சி கொடுத்ததை பின்வரும் காலங்களில் அவரின் ஆசியுடன் விளக்குகிறேன். தங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் - பல அன்பர்கள் சமீப காலமாக மகாலிங்கத்தை காண்பதற்காக, பல சுமைகளை சுமந்துகொண்டு சதுரகிரி மலையேறுவதை கண்டிருக்கிறேன். அவர்களின் சுமைகளை முடிந்த அளவு குறைப்பதற்காக, அடிவாரமாம் தாணிப்பாறையிலிருந்து சுமார் 2கிமீ தொலைவில் (வத்திராயிருப்பு - தாணிப்பாறை மெயின் ரோட்டில், மகாராஜபுரம் ரோட்டிற்கு எதிரில்), கடந்த 25வருடங்களுக்கும் மேலாக, பிரதோஷம் முதல் பெளர்ணமி நாள் வரை, சந்தான மகாலிங்கத்திற்கு அருகில் இருக்கும் அன்னதான கூடத்தில், அன்னதானம் செய்துவரும், இடுப்பில் மஞ்சள் துண்டை மட்டும் உடுத்தியவருமான, திரு. சிவசங்கு ஐயா அவர்களின் முதியோர் காப்பகத்தில், குளியல் மட்டும் பாத்ரூம் வசதி இலவசமாக செய்துள்ளார். வியாபார நோக்கமில்லாமல், இலவச சேவையானதால், பக்தர்கள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருவதற்கு ஒரு சில நாட்களுக்குமுன் 9443324583/ 9444492998 என்ற எண்ணிற்கு தெரியவடுத்துவது நலம் தரும். சதுரகிரி செல்ல முடியுமா என்று ஏங்குபவர்கள், ஒருமுறை முதியோர் காப்பகத்திற்கு வந்து, அங்கு எழுந்தருளியுள்ள லோபாமுத்திரையுடன் கூடிய குருமுனி மற்றும் மகாபிரத்தியங்கராதேவியை மனதார பிரார்த்தித்து, மலையேற அதிசயத்தை கண்டிப்பாக காண முடியும். நன்றியுடன் - சிவஹரிஹரன்.

    ReplyDelete