SHIRDI LIVE DARSHAN

Tuesday 27 March 2012

தானத்தின் பலன்கள்



தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எதை எதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-
   
அன்னதானம்:  வறுமையும், கடன்களும் நீங்கும்.
பூமிதானம்:  பிரம்ம லோகத்தையும் ஈசுவர தரிசனத்தையும் அளிக்கும்.
கோதானம்:  ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றை போக்கும். வஸ்திரதானம்:  ஆயுளை விருத்தி செய்யும்.
தீப தானம்:  கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேன் தானம்:  புத்திர பாக்கியம் உண்டாக்கும்.
அரிசி தானம்:  பாவங்களை போக்கும்.
தயிர் தானம்:  இந்திரிய விருத்தி உண்டாக்கும்.
நெய் தானம்:  நோய்களை நிவர்த்தி செய்யும்.
நெல்லிக்கனி தானம்:  ஞானம் உண்டாக்கும்.
பால் தானம்:  துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்:  பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்:  குடும்ப தோஷம் நிவர்த்தி அடையும்.
வெள்ளி தானம்:  மனக்கவலை நீங்கும்.
பழங்கள் தானம்:  புத்தியும் சித்தியும் தரும்.
 
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு.

No comments:

Post a Comment