திருநள்ளாறு வருபவர்கள் சனி பகவானை வழிபடுவதுர்க்கு முன்பு அங்குள்ள நளதீர்த்தம் சென்று அந்த குளத்தை வலமாக வலம் வர வேண்டும். பிறகு, குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி, தமயந்தி உருவச் சிலைகளை வழிபட வேண்டும்.
தொடர்ந்து, நல்லெண்ணையை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமகாகவோ அந்த தீர்த்தத்தில் 9 முறை தலை முழுக்காட வேண்டும்.
நீராடி முடித்த பிறகு பிரம்ம தீர்த்தம், சரசுவதி ஆகிய திருக்குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். பிறகு கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு, சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கருவறையை நோக்கி செல்ல வேண்டும். அங்கு அருள் புரியும் இறைவனான தர்பாரண்யேசுவரருக்கு அர்ச்சனை, பூசைகள் செய்த பிறகு தியாகேசர் சன்னதியை தரிசிக்க வேண்டும்.
அதன் பிறகு சனி பகவானை தரிசிக்க வேண்டும், அவரவர் சக்திக்கு ஏற்றபடி சனிபகவானுக்கு அர்ச்சனை, தீப ஆராதனை, அபிசேகம், யாகம், தர்ப்பணம், தானம், நவ நமசுகாரம், நவ பிரதட்சணம் போன்றவற்றை செய்யலாம். காலை, மாலை இரு வேலைகளிலும் சனி பகவானை நவ பிரதட்சணம் செய்வது நல்ல பலன் தரும்.
No comments:
Post a Comment