SHIRDI LIVE DARSHAN

Sunday 11 March 2012

தோசம் போக்கும் மூலை அனுமார்




ஆஞ்சநேயருக்கு என்று கொடி மரத்துடன் உருவாக்கப்பட்ட பெரிய புராதன கோவில், தஞ்சையில் உள்ள மூளை அனுமார் கோவில். இங்குள்ள அனுமார் வாலில் நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.அதனால், நவக்கிரக தோச பரிகார தலமாகவும் இக்கோவில் திகழ்கிறது.
அத்துடன், வாயு மைந்தனான அனுமனுக்கு வடமேற்கு மூலையில் (வாயு மூலை) அமைந்த கோவில் இது என்பதால், தோச பரிகார தலமாகவும் இது திகழ்கிறது.
மூலை அனுமாரின் இதயக் கமலத்தில் ராமபிரான் வாசம் செய்வதால், இங்கு அவருக்கு தனிச் சன்னதி கிடையாது.
பகவத்கீதையில் உள்ள 18 அத்தியாயங்களை நினைவுபடுத்தும் விதமாக இக்கோவிலில் 18 தூண்கள் உள்ளன. குடியிருக்கும் வீட்டில் வாசுது குறைபாடு மற்றும் தோசம் உள்ளவர்கள் இக்கோவிலில் தீபம் ஏற்றுவதோடு, மூலை அனுமாருக்கு 18 அமாவாசைகள் தோறும் 18 எலுமிச்சை பழ மாலைகள் சாற்றி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டால் தோசம் நீங்கும் என்கிறார்கள்.
மனை, வீடு அமைய வேண்டும் என்று விரும்புகிறவர்கள், இக்கோவிலுக்கு ஓர் அமாவசை அன்று வந்து வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment