அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம் .
திருச்சியை அடுத்த துறையூர் இந்திரா நகரில் அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரகுடிலில் செயல்பட்டு வருகிறது.
அகத்தியர் குடிலின் தனி சிறப்பே நாள்தோறும் நடை பெரும் அன்னதானம் தான் , ஒரு கல்யாண மண்டபத்தின் சாப்பாட்டு அறையை விட மிக பெரியது இந்த அன்னதான அறை
நாள்தோறும் காலை , மதியம் , இரவு என 3 வேலைகளுக்கும் அன்ன தானம் நடை பெற்று கொண்டிருக்கிறது
ஒவ்வொரு முறையும் அன்னதானம் முடிந்த வுடன் மீதம் இருக்கும் உணவை சுற்றி உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அகத்தியர் குடிலுக்கு சொந்தமான வாகனத்தில் கொண்டு சென்று அனைவருக்கும் வழங்குகின்றனர்
இந்த அன்ன தானம் மகரிஷி அகத்தியர் பெயராலும் மற்றும் 18 சித்தர்களின் பெயராலும் நடை பெறுகிறது
இக் குடிலின் மற்றொரு சிறப்பு வள்ளலாரின் அருட்பெரும் ஜோதியில் இருந்து தீபம் ஏற்றப்பட்டு இன்றளவும் அணையாமல் பாதுகாத்து வைக்கப்பட்ட வள்ளலாரின் திரு விளக்கு ஆகும்
எப்போது சென்றாலும் அருட்பெரும்ஜோதியை தரிசிக்கலாம்
பக்தர்கள் அருட்பெரும்ஜோதியை தரிசித்த பின்னரே அகத்தியரை தரிசனம் செய்கிறார்கள்
30 ஆண்டுகளாக சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள் இச்சங்கத்தை தலைமையேற்று நடத்துகிறார்.
அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், இலவச குடிநீர், இலவச திருமணங்கள் என்று சேவை புரிகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் நடை பெரும் பவுர்ணமி பூஜை விசேசமானது
அன்று எல்லா மத பிரிவை சேர்ந்தவர்களையும் அகத்தியரை தரிசிக்க வருவார்கள்
பவுர்ணமி தோறும் இங்கு நடக்கும் திருவிளக்கு பூஜையில், விதவைப் பெண்களும் பங்கேற்கலாம் என்பது சிறப்பம்சம்.
இங்கு, காலை, மதியம், இரவு என தினந்தோறும் நித்ய அன்னதானம் நடக்கிறது.
ஒவ்வொரு வியாழகிழமை தோறும் காலை 9.30 மணியளவில் ஞானியார்கள் சிறப்பு பூஜையும் , குரு நாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும்
திருக்குறள் குறித்து தினந்தோறும் ஓங்கார குடில் வரும் பக்தர்களுக்கு விளக்கம் கூறும் ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள், தற்போது உண்மையான ஆன்மிகத்தை பக்தர்களுக்கு போதிக்கும் பொருட்டு சித்தர்களின் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து வருகிறார்.
சித்தர்களின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை அளித்தாலோ அல்லது தற்காலத்துக்கு நன்றாக பொருந்தும் வகையில் உள்ள சித்தர் பாடல்கள் குறித்தோ ரங்கராஜ தேசிக ஸ்வாமிகளிடம் பக்தர்கள் கூறினால், உடனடியாக அப்பாடலை ஆராய்வார். பக்தர்கள் கூறியது சரியாக இருக்கும்பட்சத்தில், ஓங்காரகுடிலில் உள்ள அறிவிப்பு பலகை, அவர்களது பத்திரிக்கைகள் மற்றும் துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வழங்குவதை கடந்த ஐந்தாண்டாக வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மக்கள் முன் செய்த பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறவும், இறைவன் திருவடி அடைய தினமும் காலை, மாலை "ஓம் அகத்தீசயா நம' என நாமஜெயம் செய்ய வேண்டும்.
சுப்ரமணியர், அகத்தியர், நந்தீசர், திருமூலர், கருவூரார், ராமலிங்கர் உள்ளிட்ட ஞானிகள் சித்தர்களை பூஜிக்க வேண்டும்.
தினமும் இயன்ற அளவு அன்னதானம் செய்ய வேண்டும்.
புலால் (அசைவ) உணவை தவிர்க்க வேண்டும்.
இதன்மூலம் மீண்டும் பிறப்பில்லா நிலை எய்து இறைநிலை அடையலாம்
என்று வழி காட்டி கொண்டிருக்கிறார்
மேலும் சித்தர்களின் பாடல்களில் உள்ள பொருளையும் , தான் தவத்தில் அறிந்த ரகசியங்களையும் போதிக்கிறார்
அவற்றை ஒரு நூலாக தொகுத்து "ஞானத்திருவடி " என்னும் பெயரால் மாதா மாதம் வெளியிடாக அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் வழங்குகின்றனர் .
ஞானத்திருவடி நூலின் விலை 10 ரூபாய்
இந்த நூல் விற்பதின் மூலம் வரும் தொகையையும் அன்னதான திட்டதிற்க்கே செலவிடுகின்றனர்
ஓங்கார குடில் ஆசான் சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள்
அவர்கள் பௌர்ணமி அன்று நயன தீட்சை , மந்திர தீட்சை , அன்னதான தீட்சை என 7 தீட்சை அளிக்கிறார்கள் .
அன்னதானத்தில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலை பேசி எண் : 98947 55784 -( நடராஜன் )
ஓங்கார குடில் ஆசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலை பேசி எண் : 98947 55784 -( நடராஜன் )
-----------------------------------------------------------------------------------
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெரும் ஜோதி அகவல்
காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெரும்ஜோதி
காற்றுறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெரும்ஜோதி
அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய்
அனல்உற விளங்கும் அருட்பெரும்ஜோதி
அனல்உறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனல்உற வயங்கும் அருட்பெரும்ஜோதி
புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனை என வயங்கும் அருட்பெரும்ஜோதி
----------------------------------------------------------
ஓம் அகத்தீசாய நம
ஓம் நந்தீசாய நம
ஓம் திருமூல தேவாய நம
ஓம் கருவூர் தேவாய நம
ஓம் பதஞ்சலி தேவாய நம
ஓம் இராமலிங்க தேவாய நம
சகல நன்மைகளை தரக்கூடிய மேற்கண்ட மகா மந்திரங்களை
காலை மாலை 30 நிமிடம் நாமஜெபம் செய்து ஞானிகள் ஆசி பெறுவோம்
-------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment