காகபுஜண்டர் ஜீவநாடி
காகபுஜண்டர் ஜீவநாடி
ஜீவநாடியில் குறிப்பிடத்தகுந்ததாக
விளங்குவது காகபுஜண்டர் ஜீவநாடி. இந்த நாடி மூலம் நாடி பார்த்துப் பலன்கள்
கூறி வருபவர் ரமணி குருஜி. ‘சக்தி அருட்கூடம்’ என்ற பெயரில் இயங்கி வரும்
இவரது ஆசிரமம் சென்னை தாம்பரம் அருகில் உள்ள சேலையூரில், மிகவும் அமைதியான
சூழலில் அமைந்துள்ளது.
நாடி பார்க்கும் முறை
இங்கு மற்ற நாடிகளைப் போல் கட்டணம் எதுவும்
வசூலிப்பதில்லை. விரல் ரேகை எடுக்கப்படுவதில்லை. பெயர் போன்ற விவரங்கள்
கேட்கப்படுவதில்லை. அனைவரையும் உட்கார வைத்துப் பொதுவில் நாடி
படிக்கப்படுகின்றது. பலன்கள் அனைத்தும் ஓலைச்சுவடியிலிருந்து பாடலாகவே
படிக்கப்படுகின்றது. தினமும், மாலை நேரத்தில், ஏழு மணிக்கு மேல், இறை
வழிபாட்டை முடித்து விட்டுப் பலன் கூறத் தொடங்குகிறார் ரமணி குருஜி.
குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ரமணி குருஜி
இரவு ஏழு மணி அளவில் தமது இடத்தில் அமர்கின்றார். பின்னர் சோழிகளை
எடுத்துக் குலுக்கிப் போடுகின்றார். அதில் விழுந்திருக்கும் சோழிகளின்
தன்மைக்கேற்ப ஓலைக்கட்டிலிருந்து குறிப்பிட்ட ஓலையைத்
தேர்ந்தெடுக்கின்றார். பின்னர் சுவடியைப் படிக்க ஆரம்பிக்கின்றார்.
அங்குள்ள ஒலிபெருக்கியில் அவர் அவற்றைப் பாடல்களாகப் பாடுகின்றார். அவை
ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்யப்படுகின்றன. ஒலிபெருக்கியில் அவர்
பாடல்களைப் பாடப் பாடத் தேவையானவர்கள் ஒலிப்பதிவுக் கருவி மூலம் அவற்றைப்
பதிவு செய்து கொள்கின்றனர். ஏனெனில் அவர் பாடலுக்கு விளக்கம் எதுவும்
கூறுவதில்லை. பதிவு செய்து வைத்து கொண்டு பின்னர் சந்தேகம் கேட்டால் ஆலோசனை
வழங்குகிறார். பாடல்கள் அனைத்தும் பழங்கால வடிவில் விருத்தம் போன்று
உள்ளது. நாடி பார்க்க வந்திருக்கும் நபர்களின் பெயர் போன்ற விவரங்கள் மற்ற
நாடிகளைப் போல வெளிப்படையாக வருவதில்லை. ஆனால் தனிநபரின் பெயர்களும்,
வாழ்க்கைச் நிகழ்வுகளும், பாடல் வடிவில், யாருமே எளிதில் கேட்டு உடனே
புரிந்து கொள்ளாத வண்ணம் பாடல்களாக வருகின்றன. குறிப்பாக உணர்த்தப்பெறும்
இவற்றை நன்கு கவனித்துப் பொருள் கொள்ள வேண்டியது தேவையாகின்றது.
நாடி பார்க்க வந்து தம்மிடம் குறைகளைக்
கூறுபவர்களுக்கு ரமணி குருஜி சோழிகளைக் குலுக்கிப் போட்டு பலன்கள் மற்றும்
பரிகாரங்களைக் கூறிவருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன் இருக்கிறார்.
சித்தர்களில் சிறந்த ஒருவராகக்
கருதப்படுபவர் காகபுஜண்டர். இவரது பெருமையினை ‘ஞான வாசிட்டம்’ என்னும் நூல்
மூலம் அறியலாம். பெரிய காகத்தினைப் போன்ற உருவம் கொண்டவராதலால் அவர்
இப்பெயரில் அழைக்கப்படுகிறார் எனக்கூறுகின்றனர்.
ஒருமுறை, ரமணி குருஜி, 1962-ம் ஆண்டில்
கங்கைக்கு நீராடச் சென்றிருக்கிறார். அங்கு ஒரு மகானால் ஆசிர்வதிக்கப்பெற்ற
அவர், அம்மகானிடம் குரு உபதேசம் பெற்றிருக்கிறார். மேலும் அவரிடம் சோதிடக்
கலையையும் பயின்றிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர்
அம்மகான் தம்மிடம் உள்ள ஓலைச்சுவடிகளை ரமணியிடம் தந்து ஆசிர்வதித்து,
மக்கள் சேவை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படியே மக்களுக்குப் பல
வழிகளிலும் இதுகாறும் உதவி வருகிறார் ரமணி. ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல
வெளிநாட்டைச் சேர்ந்த அன்பர்களும் இவரது ஆன்மீகப் பணிக்கு உறுதுணையாக
உள்ளனர்.
காகபுஜண்டருக்கென்று தனியாகக் கோயில்
எழுப்பியுள்ள அவர் ஆண்டு தோறும், பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில்
அதன் அருள் விழாவினைச் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்.
ரமணி இதனை ஒரு சேவையாகத் தான் செய்து
வருகின்றார். யாரிடமும் பணம் எதுவும் அவர் வாங்குவதில்லை. மேலும் அவர்
சுவடியைப் படித்துப் பலன் கூறும் இடம் ஓர் ஆலயம் போல் விளங்குவதால், அங்கு
செல்பவர்கள் மிகவும் சுத்தமாகச் செல்ல வேண்டியது அவசியம்.
ஆலய முகவரி:
Om Sakthi Arutkudam
18 Alamelupuram,
Selaiyur,
E. Tambaram,
Chennai 600 072
மேலும் விவரங்களுக்கு…
http://arulvanam.org/index.html
http://copiedpost.blogspot.ca/2012/12/live-dharshan.html
முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan
http://copiedpost.blogspot.ca/2012/12/live-dharshan.html
No comments:
Post a Comment