SHIRDI LIVE DARSHAN

Wednesday, 4 April 2012

கடன் தொல்லையில் இருந்து விடுபட நரசிம்மர் வழிபாடு


கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய 


வழி-நரசிம்மர் வழிபாடு


ஸ்ரீ ந்ருஸிம்ஹரின் ருண விமோசன ஸ்தோத்திரம் 

கடன் தொல்லையால் அவதிபடுவோர் அந்த கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வாழ்வில் மனநிம்மதி பெறவும்,இந்த சுலோகத்தை காலை மாலை இருவேளையும் பகவான் மீது நம்பிக்கையுடன் கீழே கூறியுள்ள படி செய்து வந்தால் கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.


ஸ்ரீ ந்ருஸிம்ஹரின் ருண விமோசன ஸ்தோத்திரம்


தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

லீமரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஸிம்ஹநாதேந மஹதா திகதந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மாஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

யஇதம் படே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்.
                                          -ஸ்ரீந்ருஸிம்ம புராணம்

காலை மாலை இருவேளையும் நரசிம்ம பகவான் படத்தின் முன் அகல்விளக்கில் நெய்தீபம் ஏற்றி பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்து பின் பாலில் கல்கண்டு சேர்த்து  பகவானுக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை செய்து வரவும்.பலன் நிச்சயம்.

ஸ்ரீ நரசிம்ம பாடல்




ஸ்ரீநரசிம்ம காயத்ரி


ஓம் வஜ்ர நகாய வித்மஹே 


தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி


தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்



ஸ்ரீ நரசிம்ம பாடல்

எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படி கால் தொடங்கி,
வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு
வோணத் திரு விழாவில்
அந்தியம் போதிலரியுரு வாகி
அரியை யழித்தவனை,
பந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத்
தாண்டென்று பாடுதுமே
திருப்பல்லாண்டு 6.
பூதமைத் தொடு வேள் வியைந்து
புலன்களைந்து பொறிகளால்,
ஏதமொன்று மிலாத வண்மையி
னார்கள் வாழ் திருக் கோட்டியூர்,
நாதனை நரசிங்கனை நவின்
றேத்துவார் களுழக்கிய,
பாத தூளி படுதலாலிவ்
வுலகம் பாக்கியம் செய்ததே.
பெரியாழ்வார் திருமொழி 4.4.6.
பள்ளியி லோதி வந்த தன் சிறுவன்
வாயிலோ ராயிர நாமம்.
ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்
கொன்று மோர் பொறுப்பிலனாகி,
பிள்ளையாச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப்
பிளையெயிற் றனல் விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே.
பெரிய திருமொழி 2.3.8.
- துயர வேளையில், ஆபத்துக் காலங்களில், சங்கடமான சந்தர்ப்பங்களில் உடனடியாக தாமதமின்றி நம்பெருமானின் சகாயத்தைப் பெற, ஸ்ரீ நரசிம்ம விசயமாக ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யமான பாசுரங்களை, மேல் சொன்னவைகளை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்!

Saturday, 31 March 2012

எல்லா துன்பங்களும் விலக


எல்லா துன்பங்களும் விலக 
அசேஷ லங்காபதி ஸைத்யஹந்தா 
ஸ்ரீராமஸேவா சரணைகக்ர்த்தா
அசேஷ து:காஹத லோக கோப்தா
த்வஸௌ ஹநுமாம்ஸ்த்வ ஸௌக்யகர்த்தா //
-இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சகல துன்பங்களும் விலகி விடும்.

Thursday, 29 March 2012

கலைவாணி மூலமந்திரம்



ஓம் வாக் தேவ்யைச வித்மஹே காம பீஜாயை
தீமஹி தந்தோ தேவி ப்ரசோதயாத்.
- இந்த மந்திரத்தை 108  முறை சொல்லிய பின் ஒருவருக்கு நோட்டு, பென்சில், பேனா தானமாகத் தருதல் வேண்டும்.

நன்றி:மாலைமலர்  

சரபேஸ்வரர் ஸ்லோகம்- துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட



சரபேஸ்வரர் ஸ்லோகம்



ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய         
ஸ்ரீ சரபாஷ்டகம்  
- இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.



Tuesday, 27 March 2012

தானத்தின் பலன்கள்



தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எதை எதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-
   
அன்னதானம்:  வறுமையும், கடன்களும் நீங்கும்.
பூமிதானம்:  பிரம்ம லோகத்தையும் ஈசுவர தரிசனத்தையும் அளிக்கும்.
கோதானம்:  ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றை போக்கும். வஸ்திரதானம்:  ஆயுளை விருத்தி செய்யும்.
தீப தானம்:  கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேன் தானம்:  புத்திர பாக்கியம் உண்டாக்கும்.
அரிசி தானம்:  பாவங்களை போக்கும்.
தயிர் தானம்:  இந்திரிய விருத்தி உண்டாக்கும்.
நெய் தானம்:  நோய்களை நிவர்த்தி செய்யும்.
நெல்லிக்கனி தானம்:  ஞானம் உண்டாக்கும்.
பால் தானம்:  துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்:  பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்:  குடும்ப தோஷம் நிவர்த்தி அடையும்.
வெள்ளி தானம்:  மனக்கவலை நீங்கும்.
பழங்கள் தானம்:  புத்தியும் சித்தியும் தரும்.
 
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு.

Friday, 16 March 2012

ஸ்ரீ ராம் சாலிசா MP3

 
  ங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் திருவருளைப் பெற பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் மிகவும் எளிமையானது ராம நாமப் பாராயணம்தான் என்றால் மிகையில்லை. விஷ்ணு சகஸ்ரநாமத்தில், பரமசிவன் பார்வதியிடம், "இந்த ஆயிரம் நாமங்களையும் ஜபிக்க முடியாவிட் டாலும் ஒரு மனிதன் ராம நாமத்தைக் கூறினாலே,

 (அதுவும் கீழ்க்கண்ட விஷ்ணு சஹஸ்ர நாம வாசகத்தைப் படித்தாலே) 

விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் படித்த முழுப் பலனும் கிடைக்கும்' என்று கூறுகிறார்.

"ஸ்ரீ ராமராம ராமேதி ரமே ராமே மனோரமே 

சஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம வரானனே'

என்பதே அது.

 1.       ஸ்ரீ ராம் சாலிசா MP3 

   2.      ஸ்ரீ ராம் சாலிசா MP3