SHIRDI LIVE DARSHAN

Sunday, 11 March 2012

பைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்



பைரவர் மூலமந்திரப் பலன்கள்



மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ஜீவநாடித்தொடர் கட்டுரையை எழுதி வந்த தெய்வத்திரு. அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாசன் அவர்களின் முழுமையான ஆசிகளுடன் அகத்தியர் ஜீவநாடியின் வழிகாட்டுதலின்படி எங்களுக்கு இறைத்திருவருளால் கிடைத்த போகர் சித்தரின் மருத்துவ முறைப்படி நலம் தரும் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் தெய்வீக மூலிகை மருந்து வகைகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காக
அனைத்து கர்மாக்களை விலக்கும் பைரவர் ஆசி பெற போகர் அருளிய தீபம் ஏற்றும் தெய்வீக திரவியப்பொடி, 27 நட்சத்திரங்களுக்கும்   உரிய பைரவர் திருநாமம் மற்றும் பைரவர் ஸ்தலங்கள், பைரவ தீபப் பொடியின் செய்முறை, பலன்கள் பின்வருமாறு
வ. எண்நட்சத்திரங்கள்பைரவர்அருள்தரும் தலம்
1.அசுவினிஞானபைரவர்பேரூர்
2.பரணிமகாபைரவர்பெரிச்சியூர்
3.கார்த்திகைஅண்ணாமலை பைரவர்திருவண்ணாமலை
4.ரோகிணிபிரம்ம சிரகண்டீஸ்வரர்திருக்கண்டியூர்
5.மிருகசிரிஷம்க்ஷேத்திரபாலர்க்ஷேத்ரபாலபுரம்
6.திருவாதிரைவடுக பைரவர்வடுகூர்
7.புனர்பூசம்விஜய பைரவர்பழனி
8.பூசம்ஆஸின பைரவர்ஸ்ரீவாஞ்சியம்
9.ஆயில்யம்பாதாள பைரவர்காளஹஸ்தி
10.மகம்நர்த்தன பைரவர்வேலூர்
11.பூரம்பைரவர்பட்டீஸ்வரம்
12.உத்திரம்ஜடாமண்டல பைரவர்சேரன்மகாதேவி
13.அஸ்தம்யோகாசன பைரவர்திருப்பத்தூர்
14.சித்திரைசக்கரபைரவர்தர்மபுரி
15.சுவாதிஜடாமுனி பைரவர்பொற்பனைக்கோட்டை
16.விசாகம்கோட்டை பைரவர்திருமயம்
17.அனுஷம்சொர்ண பைரவர்சிதம்பரம்
18.கேட்டைகதாயுத பைரவர்சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19.மூலம்சட்டைநாதர்சீர்காழி
20.பூராடம்வீரபைரவர்அவிநாசி, ஒழுகமங்கலம்
21.உத்திராடம்முத்தலைவேல் வடுகர்கரூர்
22.அவிட்டம்பலிபீடமூர்த்திசீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23.திருவோணம்மார்த்தாண்ட பைரவர்வயிரவன் பட்டி
24.சதயம்சர்ப்ப பைரவர்சங்கரன்கோவில்
25.பூரட்டாதிஅஷ்டபுஜபைரவர்கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26.உத்திரட்டாதிவெண்கலஓசை பைரவர்சேஞ்ஞலூர்
27.ரேவதிசம்ஹார பைரவர்தாத்தையாங்கார்பேட்டை



மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.
செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.
மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:
பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு…..
ஸ்ரீ ஜெயதுர்கா நெய் ஸ்டோர்
எண். 54, பரிபூரண விநாயகர் கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை – 4. செல் : 98841 15342,



குருநாதர் சாய் பாபா உபாசகர் அருளிய பைரவ பரிகார முறை



பைரவரை வழிபாடும் முறை :
http://farm3.staticflickr.com/2686/4091483857_020dbb879f_z.jpg?zz=1

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 



திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 


இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான  விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய  குரு)


தகவல் :குருநாதர் சாய் பாபா உபாசகர் 

முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் 

இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan


http://copiedpost.blogspot.in/2012/12/live-dharshan.html

ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள்



ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள்


 
ஸ்ரீ இராமபிரானின் பரம பக்தர் ஆஞ்சநேய ஸ்வாமி. எங்கெல்லாம் இராம நாமம் சொல்லப் படுகிறதோ அங்கே இருப்பவர் அவர். அவரது தலைவனை முதலில் துதிப்போம்.

ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்| 
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||
ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம்பீதி நாச'னம் | 
த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ச'ராய ச | 
கண்டிதாகில தைத்யாய ராமாயா 'பந்நிவாரிணே ||
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே | 
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||
அக்ரதஃ ப்ருஷ்டதச்' சைவ பார்ச்'வதச்'ச மஹாபலௌ | 
ஆகர்ணபூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ ||
ஸன்னத்த: கவச: கட்கீ சாப பாணதரோ யுவா | 
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாதுஸலக்ஷ்மண: ||
அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் | 
நச்'யந்தி ஸகலாரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||
ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே | 
வேதாச்'சா'ஸ்த்ராத் பரம்நாஸ்தி நதைவம் கேச'வாத்பரம் ||
ச'ரீரே ஜர்ஜரிபூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே | 
ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||
ஆலோட்ய ஸர்வசா'ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: | 
இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||
காயேந வாசா மநஸா இந்த்ரியைர்வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் | 
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீனம்து யத்பவேத் | 
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ நாராயண நமோஸ்துதே ||
விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச | 
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ||

அகத் தூய்மையை அடைய-சுவாமி விவேகானந்தர்


 பக்தி என்பது தூய்மையை அடிப்படையாகக் கொண்டே எழுகிறது. புறத் தூய்மையை எளிதாக மாற்றிவிடலாம். ஆனால் அதைக் காட்டிலும் மேன்மையான அகத் தூய்மையை மாற்ற முடியாது. அகத் தூய்மையே பக்திக்கு ஆதாரமாக அமைகிறது. உண்மை, தயவு, அகிம்சை, அன்பு ஆகிய  குணங்களைக் கொண்டும், பிறரது பொருளை விரும்பாமலும், வீணான எண்ணங்கள் இல்லாமலும், பிறரால் ஏற்படும் இன்னல்களைக் குறித்து வருந்தாமலும் இருந்தால் அகத் தூய்மையை அடையலாம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்



திருவானைக்காவிலிருந்து ஸ்ரீரங்கம் 2 கி.மீட்டர் தூரத்திலும் திருச்சியில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
காவிரியும் கொள்ளிடமும் மாலையாகவும் அந்த மாலையைச் சூடியதுபோன்று ஸ்ரீரங்கமும் அமைந்துள்ளது!
பழம்பெரும் வைணவத் தலம் எனப் பெருமை பெற்றுத் திகழ்கிறது இந்த ஸ்ரீரங்கம்!
இந்து சமய வரலாற்றில் கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை வைணவம் அரசோச்சிய போது அதன் தலைமை இடமாக இந்த ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. இந்திய நாட்டில் உள்ள மிகப் பெரிய வைணவ ஆலயங்களில் மிகச் சிறந்தது என்றும் மிகப் புனிதம் கொண்டது என்றும் இந்த ஸ்ரீரங்கம் மதிக்கப்படுகிறது.
சிலப்பதிகாரம், நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றில் ஸ்ரீரங்கம் பாடப் பெற்றுள்ளது.
முதன்முதலில் சோழமன்னன் தர்மவர்மன் என்பவரால் இக்கோயில் உருவாக்கப்பட்டது என்றும் அது காலப் போக்கில் நதியால்-அதன் வெள்ளத்தால் மூழ்கப் பெற்றது என்றும் பின்னர் அடுத்து வந்த சோழ மன்னர் ஒருவர் இதனை அகழ்ந்து எடுத்தார் என்றும் கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வாரால் மேலும் விரிவு படுத்தப்பட்டது என்றும் அறிகிறோம்!
சோழ மன்னர்கள் ஏராளமாகச் சாசனங்களை வழங்கியுள்ளனர் என்று 400 கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.
ராஜமகேந்திரச் சோழன் முதல் பிராகாரத்தில் எழுப்பியுள்ள மதில் ராஜ மகேந்திர வீதி என்று வழங்கப்பெறுகிறது!
13ஆம் நூற்றாண்டில் மைசூர் ஹொய்சாள மன்னர்களின் ஆட்சியில் ஸ்ரீரங்கம் வந்த பின்னர் இக்கோயிலின் பெரும் பகுதிகள் கட்டப்பட்டன!
14ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஹொய்சாளர்களை விரட்டினான். விஜய நகர அரசர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோர்களும் 15-16ஆம் நூற்றாண்டில் இக்கோயிலுக்கு ஏராளமான அளவில் திருப்பணி செய்துள்ளனர்!
17ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலி-திப்புசுல்தான் ஆகியோரின் படை எடுப்பிற்கும் இந்த ஸ்ரீரங்கம் இலக்கானது.
18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வசம்  வந்தபோது இக்கோயிலின் விலைமதிப்பற்ற நவரத்தினங்களைக் கவர்ந்து சென்றனர் என்றும் ரஷ்ய ஜார் மன்னன் மகுடத்தை ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் விலையே மதிக்க முடியாத வைரக்கற்கள் அலங்கரித்தன என்றும் வரலாறு கூறுகிறது.
மாறவர்ம குலசேகரபாண்டியன் காலத்தில் போர்த்துக்கீசியப் பயணியான மார்க்கோபோலோ ஸ்ரீரங்கத்திற்கு வந்து கோயிலின் சிறப்பையும் தலத்தின் செழிப்பையும் பெரிதும் வியந்து போற்றினான்!
ஸ்ரீரங்கம் கோயிலின் கொடி மரம் முதன்முதல் சுந்தர பாண்டியனால் நிறுவப்பட்டு-முகலாயர்படை எடுப்பினால் அழிக்கப்பட்டு-மீண்டும் மல்லிகார்ஜுன ராயரால் செம்பினால் செய்யப்பட்டுத் தங்கத்தகடு போர்த்தப்பட்டு உள்ளது!
முகமது பின் துக்ளக் அரசனின் படைகள் ஸ்ரீரங்கம் கோயிலில் புகுந்து கொள்ளையடித்தபோது, அதனைத் தடுக்கும் முயற்சியில் தேவதாசி ஒருத்தி ஈடுபட்டு உயிர் இழந்தாள் என்று அறியமுடிகிறது!
ஜடாவர்ம சுந்தர பாண்டியன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்னாலேயே பலவிதத்திலும் அலங்கரித்துச் சிறப்புகள் செய்தான்!
கோபுரங்கள்-மண்டபங்கள் என்றெல்லாம் நிறுவிய அம்மன்னன் பொன்பீடம், பொன்மகாத்தோரணம், பொன் கருடவாகனம், மரகதமாலை, பொன் கிரீடம், பொன் பட்டாடை, பொன்தேர், பொன் பாத்திரங்கள் இப்படி கார்வண்ண மேனியனுக்கு எல்லாமே பொன் என்னும் அளவிற்கு வாரி வழங்கினான்.
தெப்ப உற்சவம் நடத்த இரண்டு படகுகளைப் பொன்னாலேயே செய்து விட்டான் என்றும் தனது எடை அளவிற்கு இரண்டு ரங்கநாதர் உற்சவர்களைச் செய்து தந்தான் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் என்றும் அறிய முடிகிறது?
பிரிட்டனின் ஏழாம் எட்வர்ட் அரசனானப் பிறகு விளங்கிய வேல்ஸ் இளவரசர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பெரிய பொன் குவளையை அளித்தார் !
இக்கோயில் 7 பிராகாரங்களைக் கொண்டது. 21 கோபுரங்கள் உள்ளன. 7-வது பிராகாரத்தில் உள்ள ராஜகோபுரம் 16-17ஆம் நூற்றாண்டிலேயே மிக மிக உயரமாக எழுப்பிடத் திட்டமிடப்பட்டு அடித்தளம் இடப்பட்டது. ஆனால் பல நூற்றாண்டுகளாகத் தடை பட்டு வந்த இந்த ராஜகோபுரத் திருப்பணி தற்போது ஜீயர் சுவாமிகளால் விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது. 70 மீட்டர் உயரம் உள்ள கோபுரமாக நமது நாட்டின் மிக உயர்ந்த கோபுரமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெருமையடையும்!
இந்தக் கோபுரப் பணி முற்றுப் பெற்றதும் இலங்கை அழியும் என்று புராணத்தில் எழுதியுள்ளதாகச் சில பண்டிதர்கள் கூறுகின்றனர்! அது சரியா என்பது இனி போகப் போகத் தெரியலாம்!
ராமன் ஆராதித்துப் பூஜை செய்து வந்த ரங்கநாதரைப் பரிசாக, ராவணவதம் முடிந்ததும் விபீஷணனுக்கு அளிக்க விமானத்தோடு கூடிய அரங்கநாதனை எடுத்துச் சென்ற விபீஷணன், காவிரியில் நீராட எண்ணி சிறுவன் ஒருவன் கையில் கொடுக்க-அவனோ மூன்று தரம் தான் கூப்பிடுவதற்குள் வரவில்லை எனில் சிலையைக் கீழே வைத்துவிடுவதாகவும் கூற-அதன்படி மூன்று தரம் அழைத்தும் வராததால் கீழே வைத்து விட்டுச் சென்றுவிட்டான். நீராடி முடித்த விபீஷணன் வந்து எவ்வளவு முயற்சித்தும் அரங்கனைத் தரையில் இருந்து எடுக்க முடியவில்லை! இலங்கையை நோக்கியபடி இருக்கும் ரங்கனை விட்டுவிட்டு வெறுங்கையுடன் தன்நாடு ஏகினான் விபீஷணன். அந்த ரங்கனும் அவனது விமானமும் காவிரிக் கரையில் மணலில் புதைந்துவிட- அது பற்றி வேட்டைக்கு வந்த இடத்தில் கிளி ஒன்று மன்னன் தர்மவர்ம சோழனிடம் சொல்ல-அவன் அகழ்ந்து எடுத்தான் ரங்கனை!
ஏழு பிராகாரங்கள் கொண்டது இந்த ஆலயம். அந்த ஏழும், தர்மவர்மா பிராகாரம், ராஜமகேந்திரன் பிராகாரம், குலசேகரன் பிராகாரம், ஆவிநாடன் பிராகாரம், அகளங்கன் பிராகாரம், திருவிக்ரமன் பிராகாரம், மாட மாளிகைப் பிராகாரம் எனப்படுபவை ஆகும்!
இந்தக் கோயிலுக்கு என பெரியதொரு மதிலைக்கட்ட வேண்டும் என்று திருமங்கை மன்னன் எண்ணி இருந்தான். ஆனால் அவனது காதலி குமுதவல்லியோ புலமை பெற்ற பண்டிதர்கள் பாகவதர்களுக்கு தினந்தோறும் த்தியாராதனை என்னும் விருந்துபசரிப்பு செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தைக் கூற-அதன்படி இருவரும் அரங்கனைத் துதித்துப் பாடும் அடியார்கள்-பாகவத, பண்டிதர்களுக்கு தங்களால் ஆன திருப்பணியைச் செய்து வந்தனர். கையில் பொருள் இல்லாதபோது மன்னனே வழிப்பறியும் செய்கிறான். வழிப்பறி செய்து அன்னதான உபசரிப்பு செய்யும் மன்னனிடம் புதுமணத் தம்பதி ஏராளமான பொன் பொருள் நவரத்தின அணிகலன்களுடன் வந்து சிக்கிக் கொள்ளக் கொள்ளையடித்தவைகளை மூட்டையாகக் கட்டியபின் அதனைத் தூக்கமுடியாமல் திணறிக் கொண்டிருந்த வேளையில்-
திரு நாராயணரின் அஷ்ட அட்சர மந்திரம் சொன்னால் பலன் கிட்டும் என்று வழிப்பறிக்கு ஆளானவரே யோசனை சொல்ல-
அப்படி அஷ்ட அட்சர நாராயண மந்திரத்தைச் சொன்னதும் ஞானம் பெற்றான். கொள்ளையடித்த மன்னன், வழிப்பறிக்கு வந்த தம்பதி வேறு யாருமல்ல. ரங்கனும், ரங்கநாயகியும் தான் என்று அறிந்து-ரங்கனின் தலங்கள்தோறும் சென்று அவன் புகழ் பாடிப் பாடித் தேடித் தேடிச் சேர்த்த பொருள்களை எல்லாம் கொண்டு ஸ்ரீரங்கத்தில் பெரியதொரு மதிலைக் கட்டியிருக்கிறார் திருமங்கை மன்னர்.
வடநாட்டில் புஷ்கரம், நைமிசாரண்யம், சாலிக்கிராமம், பத்திரிகாச்ரமம் என்ற தலங்கள் போல தென்னாட்டிலும் தலங்களும் உண்டு. அவை திருப்பதி, வானமாமலை, ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீரங்கம் ஆகும்.
இந்தத் தலத்தில் இருக்கும் 21 கோபுரங்களில் முக்கியமாகக் குறிப்பிடும் கோபுரங்கள் இரண்டு. அவை-வெள்ளைக் கோபுரம், நான்முகன் கோபுரம். இந்த நான்முகன் கோபுர வாசல்  வழியே அதாவது தென்திசை நோக்கியபடி சயனித்து இருக்கும் ரங்கனைத் தரிசிக்க இத்தென்வாயில் வழி செல்ல வேண்டும்! ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளைப் பக்தர்கள் ஒருவழிப்பாதை போல் கால் பக்கமிருந்துதான் வரிசையில் நின்று சேவிக்கிறார்கள். தலைமாட்டுப் பக்கத்தில் ‘துரியோதனன்’ பக்கம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். இந்தத் தலைமாட்டுப் பக்கம் யாரும் வராமல் இருக்க இதற்கான வழி அடைந்தே இருக்கிறது. ரங்க மண்டபம், நாலுகால் மண்டபம், கார்த்திகை மண்டபம் இவற்றைக் கடந்து கருவறை வரவேண்டும். கருவறையின் மேலே உள்ள விமானமே அந்நாளில் விபீஷணன் கொணர்ந்தது. இதற்குப் பொன்னால் கூரை வேய்ந்துள்ளனர்.
இதிலே ரங்கன் சயனித்துத் துயில் கொண்டுள்ளான். ஆதிசேஷன் பதினைந்தடி தூரம் இந்தக் கருவறையில் பரவியிருக்க-அவனது பரவலையே சுகம் தரும் பாயாக எண்ணி ரங்கன் அனந்த சயனம் கொண்டு இருக்கும் காட்சி அரிய காட்சி! அற்புதமான காட்சியும்கூட! கைகள் இரண்டு. வலது கை தலையைத் தாங்கி தலையணையாகவும் இடது கையை நன்கு இடுப்புக்கும் கீழே நீட்டிய படியும் சுதை உருவில் காட்சி அளிக்கிறான்! தனது இனிய துணைவிகள் ஸ்ரீதேவியும் பூதேவியும் இல்லாமல் தன்னந் தனியனாக தான் மட்டும் எழுந்தருளியிருக்கிறான்!
இவனுக்கு-இந்த ரங்கனுக்கு எழுவர் துணைவியர் எனினும் இவனது பட்ட மகிஷி ரங்க நாயகியே! ரங்கநாயகி தனித்து இருக்கிறாள்!
ரங்கனை சேவித்து வெளி வந்தால் வழியில் உள்ளது மண்டபம் ஒன்று.
இந்த மண்டபம் இலக்கியப் பெருமையைப் பறைச் சாற்றும் வகையில் உள்ளது. இந்த மண்டபத்தில் கம்பனின் ராமாயணம் அரங்கேற்றம் நிகழ்ந்த போது ஓர் அதிசயம் நிகழ்ந்ததாம்! மண்டபத்தில் நரசிம்மத்தின் சிற்பம் தத்ரூபமாகத் தோன்றும் அளவில் வடிக்கப்பட்டுள்ளது. கம்பராமாயணம் அரங்கேற்றம் நடந்தபோது சிற்பத்தில்- சிற்பமாக இருந்த நரசிம்ம்ம் தன் தலையை தலைவணங்கும் விதத்திலும் பாராட்டும் விதத்திலும் அசைத்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்து ரங்கநாயகி சந்நிதி. பதிவிரதை படிதாண்டி அறியாள். ஏன் உற்சவ காலங்களில்கூட ரங்கநாயகியைத் தேடிக்கொண்டு ரங்கநாதர் தான் வருவது வழக்கம்.
ஏற்கனவே பட்ட மகிஷி என்று ரங்கநாயகியைக் குறிப்பிடக் காரணம் உண்டு! பட்டமகிஷி என்று குறிப்பிடும்போது இந்த ரங்கநாயகனுக்கு மேலும் சில நாயகிகளும் உண்டு!
உறையூரை ஆண்ட நந்த சோழனின் மகள் கமலவல்லி. பெயரைப் போலவே-பொருத்தமாக தாமரை ஓடையில் தாமரை மலர்களோடு பிறந்த இந்தக் கமலவல்லி ரங்கநாதர்மேல் தீராத காதல் கொண்டதால் இவளையும் மணந்தார். அடுத்து சேரன் குலசேகரன் மகள் சேரகுலவள்ளி ரங்கனையே மணந்தாள். பெரியாவார் மகளான ஸ்ரீஆண்டாளை ரங்கமன்னராக மணந்தார். டில்லி பாதுஷா ஸ்ரீரங்கத்தில் படை எடுத்து வந்து விக்கிரகங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றபோது-அழகு கொஞ்சும் ரங்கனின் விக்கிரகத்தை பாதுஷாவின் புதல்வி தனது அந்தப்புரத்திற்கு எடுத்துச் சென்று கொஞ்சி மகிழ்ந்திருந்த வேளையில் எப்படியோ மகள் உறங்கும் சமயத்தில் ரங்கனின் விக்கிரகத்தை மட்டும் ஸ்ரீரங்க மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எடுத்துக் கொடுத்துவிட்டார். காலையில் கண்விழித்தவள் தன்னருகில் ரங்கனைக் காணாது தவித்து பின்னர் ஸ்ரீரங்கத்திற்கே வந்துவிட்ட அந்தப் பாதுஷாவின் மகளான துலுக்க நாச்சியார் என்பவளை இந்த ரங்கன்  மணந்து கொண்டுவிட்டார். இந்தத் துலுக்கநாச்சியாருக்குத் தனியாகத் சந்நிதியும் உண்டு. வைவேத்தியமாக ரங்கனுக்குப் படைக்கப்பட்ட ரொட்டியும் வெண்ணையும்-இதற்காக மாமனார் டில்லி பாதுஷா கொறநாட்டில் இரண்டு கிராமங்களைச் சீதனமாக மாப்பிள்ளை ரங்கனுக்குக் கொடுத்துவிட்டார்!
இப்படி எல்லாம் செய்தால் பட்டமகிஷி எப்படி ரங்கனைத் தேடி வருவாள்? அதனால் ரங்கநாயகி ரங்கநாதரைத்தேடி வராததிலும் ரங்கநாதர் தானே ரங்கநாயகியைத் தேடிவருவதிலும் அர்த்தமும் நியாயமும் புரிகிறது!
வேணுகோபாலன் சந்நிதி, உள் ஆண்டவர் சந்நிதி, சக்கரத்தாழ்வார், உடையவர் சந்நிதி, தாயார் சந்நிதி, பட்டாபிராமர் கோயில், கோதண்டராமர் சந்நிதி, பரமபதநாதன் சந்நிதி, சீனிவாசன் சந்நிதி ஆகிய தெய்வ சந்நிதிகளும் கண்டு வணங்கத் தக்கவை.
இந்தத் தலத்தின் விருட்சம் புன்னை மரம்!  தீர்த்தம் சந்திர தீர்த்தம்!
இந்தத் தலத்தில் சித்திரை மாதம் முதலாம் செவ்வாய்க் கிழமை தேரோட்டமும்-அடுத்த வெள்ளியன்று தெப்ப உற்சவமும்-சித்திரை மாதக் கடைசியிலிருந்து வைகாசி முதல் நாள்வரை பஞ்சப்பிரகார உற்சவமும், தைப்பூசத்தன்று தாயார் கொள்ளிடம் கரையில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். மாசியில் பூச்சொரியல் விழாவும் நடைபெறும்.
ஸ்ரீரங்கத்து ரங்கநாதனை ஆழ்வார்கள் அனைவருமே போற்றிப் பாடியுள்ளனர்!
இந்த ஆலயத்தில் ரங்கநாதனுக்கு நிவேதனம் செய்ய-தினமும் உருவாக்கப்படும் மண்பாண்டங்களில் மட்டுமே பிரசாதங்கள் செய்யப்படுகின்றன என்றும்-அப்படி பிரசாதம் செய்து முடிக்கப்பட்டதும் அவைகள்-அந்த மண்பாண்டங்கள் அடுத்து உபயோகப்படுத்தப்படுவது இல்லை என்றும் கூறுகிறார்கள்!
யுனெஸ்கோ எனப்படும் ஐ.நா.கல்வி கலாச்சாரப் பண்பாட்டுக்கழகம் இந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற பழம் பெருமை வாய்ந்த கோயிலுக்கு அதன் புகழையும் பெருமையையும் காக்கும் வகையில் பல லட்ச ரூபாய் அளித்து உதவி செய்து வருகிறது.
எங்குச் சுற்றியும் ரங்கனை சேவி என்பதற்கேற்ப ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சேவிப்பவர்க்கு வாழ்வில் க்ஷேமமும் சொர்க்கத்தில் இடமும் நிச்சயம் உண்டு!

ஸ்ரீஆஞ்சநேய சுப்ரபாதம்


ஆஞ்சநேய சுப்ரபாதம்


அமலா கனகவர்ணம் ப்ரஜ்வல பாவ காட்சம் 
சரசஜனி பவத்ரம் ஸர்வதா சுப்ரசன்னம் 
படுதர கணகாத்ரம் குண்டலாலம் க்ருதாம்கம் 
ரணஜய கரவாலம் ராமதூதம் நமாமி ||
அஞ்சனா சுப்ரஜா வீரா பூர்வா சந்த்யா ப்ரபத்ததே | 
உத்திஷ்ட ஹரிசார்தூல கர்த்தவ்யம் தெய்வ மாஹ்நிகம் ||
உத்திஷ்டோ த்திஷ்ட ஹனுமன் உத்திஷ்ட விஜயத்வஜ| 
உத்திஷ்டரவிஜா காந்த த்ரைலோக்யம் மங்களம் குரு ||
ஸ்ரீராமசந்தரா சரணாபுஜ மத்தப்ருங்கா 
ஸ்ரீராம மந்ர ஜபாஸ்ரீலா பவாப்தி போதா 
ஸ்ரீஜானகி ஹிருதய தாப நிவார மூர்த்தே 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
ஸ்ரீராம திவ்ய சரிதாம்ருத ச்வாதுலோலா 
ஸ்ரீராம கிங்கர குணாகர தீணபந்தோ 
ஸ்ரீராம பக்த ஜகதேகா மஹோக்ர சௌர்யா 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
சுக்ரீவ மித்ர கபிஸேகர குண்ய மூர்த்தே 
சுக்ரீவ ராகவ சமாகம திவ்ய கீர்த்தே 
சுக்ரீவ மந்திரிவர சூர குலாக்ரகண்யா 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
பக்தார்தி பஞ்சன தயகர யோகி வந்த்யா 
ஸ்ரீகேஸரி ப்ரியதனுஜ்ய சுவர்ணதேஹி 
ஸ்ரீபாஸ்கராத்மாஜ மனோம்புஜ சந்தரீகா 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
ஸ்ரீ மாருத ப்ரிய தனுஜ மராபலாட்யா 
மைனாக வந்தித பாதாம்புஜ தன்டிதாரின் 
ஸ்ரீஉஷ்த்ர வாஹன சுலட்சனலட்சிதாநிக 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
பஞ்சாந்நன்யா பவ பீதி ஹரஸ்யராமா 
பாதாபஜசேவன பரஸ்ய பராத்பரயா 
ஸ்ரீ அஞ்சனா ப்ரியஸுதஸ்ய சுவிக்ரஹச்யா 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
கந்தர்வாயட்க்ஷா புஜகாதிபாக்ன்னர ஆச்ரசா 
ஆதித்ய விஷ்வ வசுருத்ர மஹர்சி கம்கா(சுரக்க்ஷ சங்கா) 
கங்கீர்தியன்தி தவதிவ்ய சுனாம் பம்திம் 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
ஸ்ரீகௌதமிச்வனா தும்புராநாரதாத்ரி 
மைத்ரேயா வ்யாச ஜனகாதி மஹர்சி சங்கா 
காயன்தி ஹர்ச பரிதாஸ்தவ திவ்ய கீர்திம் 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
பிருங்காவளிச மகரந்த ரசம் பிபேத்வை 
குஜம் த்வதார்த மதுரம் சரனாயுதாஸ்ச 
தேவாலயே கணகபீர சுசன்காகோஷ்ஹ 
நிர்யான்தி வீர ஹனுமான் தவசுப்ரபாதம்
பம்பா சரோவர சுபுன்ய பவித்ர தீர்த்ர 
ஆதாய ஹேமகல சைச்சா மஹர்க்ஷி ஸங்கா 
திஷ்சன்தி த்வத்சரணா மங்கள சேவநார்த்தம் 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்
ஸ்ரீ சூர்ய புத்ரி ப்ரியநாத மனோன்ய மூர்த்தே 
வாதாத்ம ஜாத கபீவீர சுபிங்கலாக்ஷா 
சஞ்சீவராயா ரகுவீர சுபக்தவர்யா 
ஸ்ரீவீரதீர ஹனுமான் தவ சுப்ரபாதம்

கந்த சஷ்டி விரதம்.MP3


மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத  விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம்  மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும்  வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.
கந்த விரத மகிமை
முழு முதற் கடவுளாக கலியுகக்  கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம்
விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும்
அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது.
கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த  சஷ்டியாகும்.
கந்தசஷ்டி விரத அனுட்டானம்
ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு
நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம்  மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும்
உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான  தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத்
தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம்  தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும்  வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை  எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை  அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி  விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும்  கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர்
சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது  சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச்  சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட் பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை  முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும்  நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக்  கிடைத்தது.  கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர்  மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான்  ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும்  கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல்  இதுவாகும்.
கந்தசஷ்டி விரத பயன்கள்
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர்
அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப்
பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர். கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண படனப்படிப்பும் நடைபெறும். விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன்  போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையை  நிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி  உட்கொள்ள வேண்டும்.



கந்தர் காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்துன்பம்போம்;நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம்
 பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
 குமரனடி நெஞ்சே குறி.

கவசம் 
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
அரோகரா! அரோகரா! அரோகரா!
- இந்த கந்த சஷ்டி கவசத்தை  தினமும் சொல்லி வர பிரச்சனைகள் தீருவது உறுதி. இதை சஷ்டி தினத்தன்று 36  முறை சொல்லி வர நாம் வேண்டிய வரம் கிடைக்கும்

பாபா காட்டிய நவ பக்தி





ஒரு முறை பூனாவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர் என்பவர் பாபாவைக் காணவந்தார். அவர் பாபாவின் பாதங்களில் விழுந்து உரிய வழிபாட்டை நிகழ்த்திய பின்பு, “நான் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள் போன்றவற்றை பயின்றும், புராணங்களைக் கேட்டும் இருக்கிறேன். இருப்பினும், எனக்கு மன அமைதி இல்லை. என் கல்வியறிவு அனைத்தும் வீண் என நினைக்கிறேன். எளிய, ஒன்றும் அறியாத பக்தியுள்ளவர்களே என்னை விடச் சிறந்தவர்கள். மனம் அடங்கினாலன்றி எந்த நூலரிவினாலும் பயனில்லை. தாங்கள் என்மீது இறக்கம் கொண்டு என்னை ஆசிர்வதியுங்கள்” என்றார்.



பாபா அவரிடம் ஒரு உருவக் கதையைச் சொன்னார்.
ஒரு வணிகன் இங்கு வந்தபோது, அவன் முன்னாள் ஒரு குதிரை இங்கு ஒன்பது உருண்டைகளாகச் சாணம் இட்டது. வணிகன் தான் ஆர்வத்தினால் மனமார்ந்த அக்கறையுடன் வேட்டியினை விரித்து அந்த ஒன்பது உருண்டைகளையும் அதில் சேகரித்தான். அதன் மூலம் அவன் மன ஒருமைப்பாட்டை அடைந்தான் என்றார் பாபா.
பாடண்கருக்கு இந்த கதையின் உட்பொருள் விளங்கவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, கணேசு தாமோதர் என்கிற தாதா கேள்கரிடம், “பாபா இதன் மூலம் என்ன சொல்கிறார்? என்று கேட்டார்”.
அதற்கு அவர், “பாபா என்ன பொருள் சொல்கிறார்? என்ன பொருள் கொள்கிறார்? என்று எனக்குத் தெரியாது. அவருடைய அகதூண்டுதலால் நான் தெரிந்து கொண்டதைச் சொல்கிறேன். குதிரை கடவுளின் அருள், வெளிப்பட்ட உருண்டைகள் பக்தியின் ரூபங்கள், வகைகள். அதாவது, 1.கேட்டல், 2 .வேண்டுதல், 3.நினைவுறுத்திக் கொள்ளுதல், 4.பாதங்களைத் தஞ்சமடைதல், 5.பூசை, 6.வணங்குதல், 7.சேவை 8.நட்பு, 9.தன்னையே இறைவனுக்கு அளித்தல்.
இவை பக்தியின் ஒன்பது வகையான விதங்கள். இவைகளில் எதுவானாலும் நம்பிக்கையுடன் பின்பற்றட்டால் இறைவன் தன் பக்தன் முன்பு தாமாகவே வெளிபடுவார்.
எல்லாச் சாதனைகளும், அதாவது தவம்,யோகப் பயிற்சி வேத பாராயணம், அவைகளின் வியாக்யானப் பேச்சு ஆகியவையாவும் பக்தியுடன் சேர்ந்திருந்தால் அன்றி முழுவதுமே பயனற்றவையாகும், வேத ஞானம் அல்லது பெரும் ஞானியென்ற புகழ், சம்பிரதாயமான பசனை போன்றவை பயனில்லை. அன்பான பக்தியே தேவையான ஒன்றாகும். வணிகனைப் போன்றோ உங்களைக் கருதிக் கொள்ளுங்கள். ஒன்பது வகை பக்தியை விளைவிப்பதில் அல்லது சேகரிப்பதில் அவன் கொண்டதைப் போன்ற கவலையுடனும் ஆர்வத்துடனும் இருங்கள். அப்போது நீங்கள் நிலையான முடிவையும், மன அமைதியையும் அடைவீர்கள்’ என்று விளக்கம் தந்தார் கணேசு தாமோதர்.
அடுத்த நாள் பாடண்கர் பாபாவை வணங்கச் சென்ற போது, பாபா அவரை ஒன்பது சாண உருண்டைகளைச் சேகரித்தீர்களா? என்று கேட்டார், அதற்க்கு அவர் தான் ஒரு எளியவனாக இருப்பதால் பாபா அவருக்கு முதலில் அருள் செய்ய வேண்டும் என்றும், பின்னர் அவைகளை எளிதாகச் சேர்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு பாபா அவரை ஆசிர்வதித்து, “மன அமைதியையும், நன்மையையும் அடைவாய்” எனக் கூறி ஆருதலளித்தார்.