வீட்டில் உள்ள / வீடு அமைப்பில் உள்ள தோஷம் / குறைகள் நீங்க
எளிய பரிகாரம் என் குருநாதர் சாய்பாபா உபாசகர் அருளிய பரிகாரம்
வாஸ்து தோஷம் , முச்சந்தி வீடு , இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும் , எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது , எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ தோஷமோஇருந்து கொண்டே இருக்கும்
இப்படிபட்ட தோஷங்கள் / குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் .
90 நாள் என்பது ஒரு கணக்கு தான்
நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை , பிரச்னை இல்லை அப்படின்னு நாம உணரும் வரை விளக்கு போட வேண்டும்
வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம் .
ஒருவேளை வீட்டுக்கு காம்போண்டு சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைபாங்க அப்படின்னு சங்கடபட்டால் , வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம் , ( விளக்கு எரிந்து முடியும் வரை கவனம் தேவை ).
விளக்கு ஏற்றும் பொது பைரவர் கவசம் / பைரவர் காயத்ரி / பைரவர் ஸ்லோகம் / ஸ்துதி / பைரவர் போற்றி என எதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்
ஓம் ஸ்ரீ காலபைரவாய நமஹ
இவ்வழிபாட்டினைஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி ( வழிபாடு வெற்றி அடைய ) பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று
பிறகு வீட்டுற்கு வந்து விநாயகரை வணக்கி அவருக்கும் ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்
இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள்
தேய்பிறை அஷ்டமி , வாஸ்து நாள் ,பௌர்ணமி
அப்படியும் இல்லையென்றால் உங்கள் குடும்ப உறுபினர்கள் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் வராத நாள் எதுவானாலும் ஆரம்பிக்கலாம்
என் குருநாதர் வாக்கு என்றுமே பொய்க்காது , நிச்சயம் இவ்வழிபாட்டினை செய்பவர் வீட்டில் அணைத்து மங்களமும் உண்டாகும் .
குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்
ஓம் சாய்ராம்
குருநாதர் திருவடி சரணம்
thanks for this parigaram...how many hours the lamp will be on...Morning or evening or any time. pls answer
ReplyDelete