ஹனூமத் பஞ்சரத்னம்.MP3
தாகில விஷயேச்சம் ஜாதானந்தாச்ரு புலகமத்யச்சம்
ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்
உலக விஷயங்களனைத்திலும் விருப்பல்லாதவர், ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் ரோமாஞ்தமும் கொண்டு கத்தூய்மையுள்ளவர். ஸீதாபதியான ஸ்ரீராமரின் முதல் தூதனவர், இனியவர், அப்படிப்பட்ட வாதாத்மஜரான ஹனுமனை தியானிக்கிறேன்.
தருணாருண முககமலம் கருணாரசபூர பூரிதாபாங்கம்
ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம்
இளம் சூர்யனையத்து சிவந்த முகமுள்ளவர், கருணைததும்பும் கடைக்கண்கள் கொண்டவர், உயிர்நாடியைத் தூண்டும் பெரும் பெருமையுடையவர். அவர் அஞ்ஜனாதேவியின் அதிர்ஷ்டமான அருமைப்புதல்வர். அவரை வாழ்த்துகிறேன்.
சம்பரவைரிசராதிக மம்புஜதலவிபுலலோசனோதாரம்
கம்புகல மனிலதிஷ்டம் பிம்பஜ்வாலிதோஷ்டமேக மவலம்பே
மன்மதபாணத்தையும் விஞ்சியவர், தாமரை இதழ் போன்று மலர்ச்சிபெற்ற கண்கள் கொண்டவர். சங்கு போன்ற கழுத்தும், கொவ்வைப்பழ மெனத்திகழும் உதடும் கொண்ட வாயு புத்திரரான ஹனுமனை ஆச்ரயிக்கிறேன்.
தூரிக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருத ராமவைபவஸ்பூர்தி:
தாரித தசமுக கீர்தி:புரதோ மம பாது ஹனுமதோ மூர்தி :
ஸீதையின் துன்பத்தை விலக்கியவர், ஸ்ரீராமரின் வைபவத்தை உலகறியச் செய்தவர், ராவணனின் புகழை கிழித்தெறிந்தவர், அப்படிப்பட்ட ஹனுமனின் மூர்த்தி என்னெதிரே பளிச்சிடுகிறது.
வானர நிகராத்யக்ஷம் தானவகுல குமுத ரவிகரஸத்சத்ருக்ஷம்
தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜ மத்ராக்ஷம்
வானரக் கூட்டத்தின் தலைவர், ராக்ஷஸ குலமாகிய அல்லிப் பூக்களுக்கு சூர்ய கிரணம் போன்றவர், எளிய ஜனங்களைக் காக்கும் வ்ரதம் கொண்டவர். வாயு தேவன் செய்த தவத்தின் திறன் போன்றவர்- அந்த ஹனுமனை கணடுகொண்டேன்.
ஏதத் பவனஸுதஸ்யஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
சிரஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராம பக்திபாக்பவதி
இந்த ஹனுமனின் பஞ்சரத்னம் என்ற ஸ்தோத்ரத்தைப் படிப்பவர் இவ்வுலகில் அனைத்து ஸுகபோகங்களையும் அனுபவித்து பின் ஸ்ரீராம பக்திக்கவராக ஆவர்.
ஹனுமத்பஞ்சரத்னம் முற்றுப்பெறுகிறது.
No comments:
Post a Comment