ஒரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .
பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .
எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .
வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .
ஆசிரியர் அவனை கவனித்தார் .
" என்னப்பா ... இப்படி உக்கார்ந்திருக்கே ... படிப்பில் கவனமில்லையா ...?
" ஐயா ... என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !"
"அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?"
" ஒரு பசுமாடு இருக்கு ! "
என்னப்பா சொல்றே
ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார் .
என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு
ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,
தம்பி ! ஒண்ணு செய்
" நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன் .. நீ என்ன பண்ற ... நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு ... அதுல போய் உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை ... பிறகு வா ...!"
" சரி .. சார் ...! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .
ஆசிரியர் நினைத்து கொண்டார்
" ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் "
ஒரு வாரம் கழிந்தது .
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .
அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .
அவர் அவனிடம்
" என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே ?
அவன் இல்லை என தலை ஆட்டினான் .
அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?
அவன் சொன்னான் " சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது ".
ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .
ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .
நாம யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .
விவேகானந்தர் கூட சொல்லுவர்
" நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் " என்று .
- தென்கச்சி கோ .சுவாமிநாதன்
------------------------------------------------------------------------------------------
( ஸ்ரீ சாயி சத்சரித்ரம் -- அத்தியாயம் 18 -- page no 146 -- திருமதி ராதாபாய் தேச்முக் )
ஸ்ரீ சாயி சத்சரித்ரம் MP 3 chapter_18.mp3 26.9 MB ( 14:51 நிமிஷத்துல இருந்து 29:20 நிமிஷம் வரைக்கும் )
ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரம் - அத்தியாயம் 18 - இல்
பாபாவே தனக்கு ஏற்பட்ட தியான அனுபவத்தையும் , தான் கற்ற தியான முறையை பற்றியும் கூறுகிறார் , மேலும் எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் எனவும் இந்த அத்தியாயத்தின் முடிவில் அவரே விளக்குகிறார் .
அந்த முறையில் பாபாவை தியானிப்பவர்கள் விரைவிலே பாபாவை அடைய முடியும்.
மனம் பாபாவைப் பற்றியே சிந்திக்கட்டும்
மனத்தினுடைய தொழில் எதையாவது சிந்தனை செய்வது, ஆலோசிப்பது, அதைச் செய்யாமல் மனதால் ஒரு கணமும் சும்மா இருக்க முடியாது .
புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப் பற்றியே சிந்திக்கும்;
பாபாவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் மனம் பாபாவைப் பற்றியே சிந்திக்கும். அப்போது பாபா நமக்குள்ளாக தோன்றி விடுவார் .
ஷிர்டி சாயிபாபா கோவில்
ஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு
LIVE TV காலை 4 மணி முதல் இரவு 11.15 வரை நேரடி ஒளிபரப்பு
https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html
Or
http://www.saibabaofindia.com/shirdi_sai_baba_live_online_samadhi_mandir_darshan.htm
( To view the live darshan use "IE" Internet explorer browser or Apple's Safari browser )
................ ஓம் சாய் ராம் ..................
நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் - அருமை...
ReplyDeleteதகவலுக்கு நன்றி...