SHIRDI LIVE DARSHAN

Showing posts with label ஷீரடி சாய் பாபா. Show all posts
Showing posts with label ஷீரடி சாய் பாபா. Show all posts

Saturday, 14 March 2020

நம் குருநாதர் சாய்பாபா உபாசகர் அவர்களின் YOUTUBE CHANNEL

நம் குருநாதர் சாய்பாபா உபாசகர் அவர்களின் YOUTUBE CHANNEL



YOUTUBE CHANNEL NAME :









நான் இந்த BLOG ல எழுதியிருக்கிற பரிகாரங்கள் அத்தனையுமே  அவர் சொன்னவைகள் தான் 
அவர் எனக்கு சொல்லற அருள் வாக்கு அத்தனையுமே 100 சதவீதம் துல்லியமா எனக்கு நடக்குது 


நிறைய பரிகாரங்களும்  தெய்வீக ரகசியங்களும் வெளிப்படையா யாருக்கும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார் அதனாலேயே BLOG  ல எழுதறதை கிட்டத்தட்ட நிறுத்திட்டேன் .
தெய்வீக ரகசியங்கள் ன்னா நிறைய இருக்கு  உதாரணத்துக்கு ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்றேன் 

வாசியோகம் ஒரு முறை கத்துத்தந்தார் 
அதை ஒருமுறை கோவில்ல பண்ணிக்கிட்டு இருக்கும் பொது  கிட்டத்தட்ட சமாதிநிலைக்கு போய்ட்டேன், அப்போ உடம்பில ஏற்பட்ட மாற்றங்கள் , பிரபஞ்ச சக்தியோட ஏற்பட்ட  தொடர்பு , உடல்ல இருக்கற வாசல்கள் திறக்கறதை உணர்ந்தப்போ (இதையும் நான் மறைமுகமாக தான்  சொல்லி இருக்கேன் ) உடல் எந்த அளவுக்கு நுணுக்கமான தெய்வீக அமைப்பு ன்னு தெரிஞ்சது  அந்த அனுபங்களை BLOG லயோ வெளியிலயோ  சொல்றதா வேண்டாமா ன்னு குழப்பமா இருக்கு , ஏன்னா அது சித்தர்கள் நிலை ,
 சித்த ரகசியம் ( அந்த அமைப்பு இயல்பாகவே எனக்கு இருக்கறதால சொல்லி கொடுத்ததா சொன்னார் ). நிறைய தெய்வீக அனுபவங்களை இங்க  எழுத முடியவில்லை , அவ்வளவும் பெரிய ரகசியங்களாக இருக்கு 

அவர் சொல்ற பரிகாரங்கள் ரொம்பவும் எளிமையா இருக்கு , ஆனா அதோட பலன் நம்பமுடியாத அளவுக்கு ஆச்சரிய படும் வகையில  நன்மைகளை   தருகிறது , அதனால எதாவது பிரச்சனைக்கு அவர் பரிகாரம் சொன்னாருன்னா அதை பத்தி கொஞ்சமும் யோசிக்காம என்ன சொன்னாரோ இம்மி அளவும் பிசகாம  செஞ்சுருவேன் .
அவரை சந்திச்ச பிறகுதான் என் வாழ்க்கையில் பாசிட்டிவான விஷயங்களே நடக்க ஆரம்பித்தது . ( என் ஜாதகத்துல  குரு புத்தி வந்தப்போ இவரோட தொடர்பு கிடைச்சது , இயற்கையே இவர் தான்  உன் குருன்னு எனக்கு  சொன்ன மாதிரி இருந்தது ).
2011 ல முன்ன பின்ன அறிமுகம் இல்லாத ஒருத்தர் இவரோட போன்  நம்பரும் , அட்ட்ரசும் கொடுத்து இவரை போய் பாருங்க , பாபா உங்களை காப்பாத்துவார் ன்னு சொன்னார் , இந்த பதிவை படிக்கறவங்களுக்கும் அதையே நான் சொல்லிக்க விரும்புறேன்  .
வாய்ப்பு கிடைக்கறவங்க பயன்படுத்திக்  கொள்ளுங்கள் 

ஓம் சாய் ராம்             பைரவா சரணம்