வேதஸாரசிவ ஸ்தோத்திரம் .MP3
பசூனாம் பதிம் பாபநாசம் பரேசம்
கஜேந்த்ரஸ்ய க்ருத்திம் வஸாநம் வரேண்டம்!
ஜடாஜூடமத்யே ய்புரத் காங்கவாரிம்
மஹாதேவ மேகம் ஸ்மராமி ஸ்மராரிம் !!
பாபங்களைப் போக்கும் பரமேச்வரன் பசுபதியாய், கஜேந்திரனின் தோலை ஆடையாக அணிந்தும், ஜடையின் நடுவில் கங்கையைத் தாங்கியும் இருக்கிறார். அந்த மஹாதேவன் ஒருவரையே மனதில் ஸ்மரிக்கிறேன்.
மஹேசம் ஸுரேசம் ஸுராராதிநாசம்
விபும் விச்வதாம் விபூத்யங்கபூஷம் !
விரூபாக்ஷமிந்த்வர்க வஹ்நித்ரிநேத்ரம்
ஸதானந்தமீடே ப்ரபும் பஞ்சவக்த்ரம்!!
மஹேச்வரனுக்கும் தேவர்களுக்கு ஈசனும், அஸுரர்களை விரட்டி அடித்தவரும், விபுவாயும், உலகத்திற்கு நாதனும், விபூதியைப் பூசியவரும், சந்திர, சூர்ய, அக்னி ஆகிய முக்கண்களை உடையவரும், எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பவருமான ஐந்து முகத்துடைய பரமேச்வரனை ஸ்தோத்திரம் செய்கிறேன்.
கிரீசம் கணேசம் கலே நீலவர்ணம்
கவேந்த்ராதிரூடம் குணாதீதரூபம் !
பவம் பாஸ்வரம் பஸ்மனா பூஷிதாங்கம்
பவானீ கலத்ரம் பஜே பஞ்ச வக்த்ரம் !!
மலையில் வசிக்கும், கணங்களுக்குத் தலைவனும், நீலகண்டரும், ரிஷபத்தில் ஏறி வருபவரும், குணங்களைக் கண்ட உருவம் கொண்டவரும், விபூதி அணிந்து விளங்குபவரும் பார்வதியை மணந்தவரும், ஆகிய ஐந்து முகங்கள் கொண்ட பரமேச்வரனை ஸேவிக்கிறேன்.
சிவாகாந்த சம்போ சசாங்கார்தமௌலே
மஹேசான சூலின் ஜடாஜூடதாரின் !
த்வமேகோ ஜகத்வ்யாபகோ விச்வரூப:
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ பூர்ணரூப!!
பார்வதீமனாளனும், சந்திரப் பிறைகொண்டவரும், சூலம் ஏந்தியவரும், ஜடாபாரம் தாங்கியவரும் ஆன ஹே சம்போ!நீர் ஒருவரே உலகம் அளாவிய உலகேயானவர். நீர் முழுமையானவர். ஹே!ப்ரபோ அருளவேண்டும்.
பராத்மன மேகம் ஜகத் பீஜமாத்யம்
நிரீஹம் நிராகாரமோங்காரவேத்யம்
யதோ ஜாயதே பால்பதே யேந விச்வம்
தமீசம் பஜே லீயதேயத்ர விச்வம்!!
உலகத்தின் ஒரே முதற்காரணமான பரமாத்மா அவரே:பற்று அற்ற:வடிவம் கொள்ளாத:ஒங்காரப் பொருளாக இருப்பவர் அவரே. உலகம் தோன்றுவதும், இருப்பதும், லயிப்பதும் அவரிடமே, அந்த ஈசனை ஸேவிக்கிறேன்.
நபூமிர்நசாபோ நவஹ்நி:ந வாயு:
நசாகாசமாஸ்தே ந தந்த்ரா ந நித்ரா!
நசோஷ்ணம் ந சீதம் நதேசா நவேஷோ
ந யஸ்யாஸ்தி மூர்தி:த்ரிமூர்திம்தமீடே!!
ப்ருதிவி, அப், தேஜஸ், வாயு, ஆகாசமாகிய ஐந்து பூதங்களும் அவர் அல்ல. சோம்பலோ நித்ரையோ அவரல்ல, சூடு, குளிர், தேசம், வேஷம் என்பவையும் அவரல்ல. அவருக்கு வடிவவே இல்லை. பிரஹ்ம, விஷ்ணு, மஹேச்வரரூபியான அவரை ஸ்தோத்திரம் செய்கிறேன்.
அஜம் சாச்வதம் காரணம் காரணாநாம்
சிவம் கேவலம் பாஸகம் பாஸகாநாம்!
துரீயம் தம:பாரமாத்யந்தஹீணம்
ப்ரபத்யே பரம் பாவனம் த்வைதஹீநம்!!
பிறவியில்லாத எப்பொழுதும் விளங்கும் அவர் மற்றெல்லாகாரணங்களுக்கும் முதற்காரணமாணவர். சிவமே உருவானவர். ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர். அஞ்ஞான இருளுக்கு அப்பாலே ஆதியந்தமில்லாத துரீயமாயுள்ளவர். இரண்டற்ற தூயதான பரம்பொருளாம் அவரை சரணடைகிறேன்.
நமஸ்தே நமஸ்தே விபோ விச்வமூர்தே
நமஸ்தே நமஸ்தே சிதானந்த மூர்தே !
நமஸ்தே நமஸ்தே தபோயோக கம்ய
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீதிஜ்ஞானகம்ய!!
உலகமே உருவான எங்கும் நிறைந்த உமக்கு நமஸ்காரம். ஞானம் ஆனந்தம் என்பனவற்றின் உருவான உமக்கு நமஸ்காரம். தவம் யோகம், வேத உணர்வு இவற்றின் மூலம் அடையத்தக்கவரான உமக்கு நமஸ்காரம்.
ப்ரபோ சூலபாணே விபோ விச்வ நாத
மஹாதேவ சம்போ மஹேச த்ரிநேத்ர !
சிவாகாந்த சாந்த ஸ்மராரே புராரே
த்வதன்யோ வரேண்யோ ந மான்யோ நகண்ய: !!
ப்ரபோ!விச்வநாத!மஹாதேவ, சம்போ!மஹேச!முக்கண்ணா!பார்வதீ மனாள!சாந்தரூப!மன்மதன், த்ரிபுரங்கள் ஆகியவற்றை தொலைத்தவரே!உம்மைத் தவிர சிறப்பு மிக்கவரும், போற்றத்தக்கவரும், எண்ணத்தக்கவரும் வேறு எவருமில்லை.
சம்போ மஹேச கருணாமய சூலபாணே !
கௌரீபதே பதுபதே பசுபதே நாசின் !
காசீபதே கருணாயா ஜகதேதத் ஏக:
த்வம் ஹம்ஸி பாஸி விததாஸி மஹேச்வரோஸி !!
சம்போ. மஹேச்வர:கருணையுருவே. சூலபாணே. கௌரீபதே. பசுபதே, பசுபாசம் நீக்கிய காசீபதே. நீர் ஒருவரே இவ்வுலகைப் படைத்துக் காத்து பிறகு அழித்தும் வருகிறீர். அதனால் நீரே பெருங்கடவுள்.
த்வத்தோ ஜகத்பவதி தேவ பவ ஸ்மராரே !
த்வய்யேவ திஷ்டதி ஜகத் ம்ருட விச்வநாத !
த்வய்யேவ கச்சதிலயம் ஜகதேதத் ஈச
லிங்காத்மகே ஹர சராசர விச்வரூபின் !!
தேவனே!பவனே!மன்மதனே வென்றவனே!உம்மிடமிருந்தே இந்த உலகம் தோன்றியது. ஹேவிச்வநாத!உம்மிடமே நிலை பெறுகிறது இந்த உலகம். பின் உம்மிடமே லயமும் அடைகிறது. சராசரங்களின் வடிவினன் அன்றோ நீர்!
No comments:
Post a Comment