SHIRDI LIVE DARSHAN

Thursday, 2 October 2014

பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்

பைரவரும் , பாபாவும் , என் குருநாதரும்https://copiedpost.blogspot.com/2020/03/youtube-channel.html

நம் குருநாதர் சாய்பாபா உபாசகர் அவர்களின் YOUTUBE CHANNELYOUTUBE CHANNEL NAME :

இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட பெருமைகளையும் விவரிக்கரதுக்காகம்  இதன் மூலமா இதை படிக்கறவங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படவும் எழுதிகிறேன் .

நான் என் குருநாதர் சாய்பாபா உபாசகரிடம் என்னுடைய மாந்திரிக பாதிப்புக்குக்கு தீர்வு கேட்டு தான் முதல் முறையாக அவரை சந்தித்தேன் . அவர்கிட்ட போறதுதுக்கு முன்னாடி கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கற நிலைல தான் இருந்தேன் , என் மூளை சுய நினைவை இழந்து ஒரு குறிப்பிட்ட விசயத்த (எனக்கு ஏற்பட்ட மாந்திரீக பாதிப்பை பற்றி ) எனக்கு தெரிஞ்ச ஒவ்வொருத்தர் கிட்டயா சொல்லிக்கிட்டு இருக்கிற மாதிரி கற்பனை பண்ணிகிட்டே இறுப்பேன், ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு ரெண்டே தடவை தான் நான் ஏன்  இப்படி கற்பனை பண்றேன் , இதனால என்னக்கு என்ன நன்மை ஏற்பட போகுது , இனிமேல் இப்படியெல்லாம் கற்பனை பண்ண கூடாது , அப்படின்னு யோசிப்பேன் , ஆனா அடுத்த நொடியே மறுபடியும் கற்பனை பண்ண ஆரம்பிச்சுருவேன் . அந்த நேரத்துல நான் ரொம்ப தனிமைய விரும்பினேன் .

சின்ன வயசுல இருந்து மாந்திரீக பாதிப்பை உணர்ந்துருக்கேன் , ஆனா குருநாதரை சந்திக்கரதுக்கு முன்னாடிதான்  கடுமையான பாதிப்பை உணர்ந்தேன் 

 தற்செயலா நெட் ல மன அமைதிக்கான மந்திரம் ன்னு பாபா வோட காயத்திரி மந்திரத பார்த்தேன் . அப்போ எனக்கு மந்திரத்தின் மீது தான்  நம்பிக்கையே தவிர கடவுள் மீது அல்ல , அவர சந்திக்கரதுக்கு  ஒரு 10 நாள் முன்னாடி தொடர்ந்து பாபாவோட காயத்திரி மந்திரத்த சொல்லிகிட்டே இருக்க ஆரம்பிச்சேன் , பாபா காயத்திரி மந்திரமும், கற்பனையா ஒருத்தர்கிட்ட மனசுக்குள்ள பேசறதும் தொடர்ந்தது , 

நிறைய பரிகார பூஜை பண்றவங்ககிட்ட கிட்ட தட்ட  ரெண்டு லட்சம் வரைக்கும் பணத்த இழந்துட்டேன் , அதனால  விரக்கிதில பேசாம  நாமே மாந்திரீகம்  கத்துகிட்டு நம்ம பிரச்சனையை தீத்துக்கலாம் ன்னு முட்டாள்தனமான ஒரு  முடிவு எடுத்துட்டேன் ,அதனால மோசமான ரெண்டு பேர் கிட்ட மாட்டிகிட்டேன் .

முதல் ஆள் கிட்ட மாட்டுனப்போ கால பைரவரே நேரடியா வந்து என்னை மீட்டுனார் . 
எங்க மாந்த்ரீகம் சொல்லி கொடுப்பாங்க ன்னு தீவிரமா நெட் ல தேடுனப்போ , ஒரு address  ம் கிடைக்கல , தற்செயலா ஒரு  ஜோதிட மாத இதழ் - ல் குறைஞ்சது 10 இடத்துக்கும் மேல மாந்த்ரீகதொட வகைகளை பத்தியும்  அதை சொல்லி கொடுக்கறதாகவும்  போட்டுஇருந்தாங்க .

 ஆரம்பத்துல 12 வருஷம்  கிராமத்துல குடியிருந்தோம் , அப்போ பக்கத்துக்கு வீட்டுல இருந்த ஒரு குடும்பம் மாந்திரிகம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க , அவங்களுக்கும் , எங்களுக்கும் தினமும் எதாவது சண்டை வந்துகிட்டே இருக்கும் , எங்க வீட்டுக்கு முன்னாடியும் , மொட்டை மாடியிலும் ஏதேதோ கிடக்கும் , எங்க தாத்தா அப்பாவோட அப்பா ஒரு ஜோதிடர் அதனால நாங்க அதை பொருட்படுத்தவே மாட்டோம் , ஆனா அந்த பக்கத்துக்கு வீட்டு பசங்களோட நாங்க சகஜமா பழகுவோம் , அந்த ஆள் அவங்க பையன் மூலமாவே எங்க மேல மாந்திரீகத்தை பிரயோகம் பண்ணான் தெருவுல  நாங்க விளையாடிக்கிட்டு இருந்தப்போ இந்த பொட்டணத்தை வச்சிரு , அப்புறம் நான் வாங்கிக்கிறேன் ன்னு சொல்லிட்டு கொடுத்திட்டு போய்ட்டான் வந்து வாங்கவே இல்லை , நான் அப்படியே பாக்கெட்ல வச்சிட்டு மறந்துட்டேன் , மறுபடியும் கொஞ்ச நாள் கழிச்சு  விளையாடிகிட்டு இருந்தப்போ மறுபடியும் அதேமாதிரி கொண்டு வந்து கொடுத்தான் , வாங்கிட்டேன் , அதே மாதிரி வச்சிரு ன்னு சொல்லிட்டு போனான் , திரும்ப வரவே இல்லை , வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு திடீர்ன்னு சந்தேகம் , அது என்னன்னு பிரிச்சு பார்த்தப்போ அதுல விபூதி ஒரு பொட்டலமும் , குங்குமம் ஒரு பொட்டலமும் இருந்தது , அதை அப்படியே  கிணத்துல தூக்கி போட்டுட்டு அப்படியே வீட்டுக்கு வந்து , எங்க அப்பா அம்மா கிட்ட சொன்னப்போ , அவங்க அதை ஒரு பொருட்டா எடுத்துக்கலை  நானும் பெருசா எடுத்துக்கலை , அப்போ எனக்கு 12 வயசுதான் இருக்கும் , இது  என் வாழ்க்கைல எனக்கு ஏற்பட்ட முதல் மாந்திரீக பாதிப்பு அனுபவம் , அதுவரைக்கும் நான் தான் SCHOOL FIRST STUDENT . அதுக்கு மேல என்னால சரியா படிக்க முடியல , புத்தகத்தை எடுத்தாவே பகல்கனவு ன்னு சொல்லுவாங்களே , அந்த மாதிரிதான் எதாவது கனவு கண்டுகிட்டு இருப்பேன் ,  படிக்கறது எதுவும் நினைவிலே நிக்காது  கிட்டத்தட்ட படிப்பே ஏறலை , school first , class  first , average student இதெல்லாம் போய் கடைசில  எனக்கு  பாஸ் பண்றதே பெரிய விஷயம் ங்கற மாதிரி ஆயிடுச்சு .

( பின்னாடி நான் ஜோதிடம் கத்துகிட்ட பிறகுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது , பிறக்கும் பொது எனக்கு குரு திசை , 12 வயசு வரைக்கும் இருப்பு , அதுக்கப்பறம் சனி திசை - திசை முழுக்க ஆட்டி படைசிருச்சி )

அதாவது கெட்ட நேரம் ஆரம்பிக்கும் பொது கெட்ட விசயமும் சேர்ந்தே ஆரம்பிச்சிருச்சு 
எங்க குடும்பம் கூட்டு குடும்பம், ஒரு பக்கம் சித்தப்பா வீடு , இன்னொரு பக்கம் பெரியப்பா வீடு  அதுக்கப்பறம் சண்டை எங்களுக்குள்ள வர  ஆரம்பிச்சிருச்சி , தினம் தினம் சண்டை நடக்கும் , போதாகுறைக்கு பக்கத்து வீட்டுக்கும் , எங்களுக்கும் சண்டை அதிகமாக வரவும் நாங்க அந்த வீட்டை விட்டு DOWN பக்கம் வீடு கட்டி குடி வந்துட்டோம் ,
புது வீட்டுக்கு வந்ததுக்கப்பறம் எங்க அப்பா காரணமே இல்லாம எங்களை அடிப்பார் , சரியா படிக்கலைன்னா ரொம்பவும் முரட்டுத்தனமா நடந்துக்கவார் , ரொம்ப ஆக்ரோஷமா பேசுவார் , எங்க அம்மாவும் பல சமயங்கள்ல எங்களை  முரட்டுத்தனமா அடிப்பாங்க , அப்போ அவங்களை பார்க்கவே ரொம்ப அக்ரோசமா இருக்கும்.

நான் 10 th  படிக்கும் பொது மறுபடியும் கிராமத்துல இருந்த அந்த பக்கத்துக்கு வீட்டு பையன் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கடைல இருந்து ஆள் அவன் கூட வந்த friend ஐ அனுப்பி கூப்ட்டான் , அவன் கிட்ட எங்க வீட்டுல எங்களை கொடுமை படுத்தறாங்க , எங்கயாவது ஓடி போலம்மான்னு தோணுது , வாழவே புடிக்கலைன்னு complaint பண்ணிக்கிட்டு இருந்தேன் , அவனை வீட்டுக்கு கூட்டி வந்தேன் , அவன் வீட்டுக்குள்ளயே வரலை , எங்க வீட்டுல அவனுக்கு டீ போட்டுகொடுத்து வழி  அனுப்பி வச்சாங்க ,
கொஞ்ச நாள்ல படிப்பு சுத்தமா போய்டுச்சி எண்ணங்கள் எல்லாம் தாறுமாறாக இருந்தது   , பாஸ் பண்ணாதே பெரிய விஷயமா இருந்தது 

எங்க குடும்பத்துல 3 அல்லது 4 வருசத்துக்கு ஒரு முறை சமயபுரம் அல்லது பழனி முருகன் கோவிலுக்கு போவோம் அவ்வளவுதான் , மத்தபடி கோவிலுக்கு போறதில்லை வீட்டுல மட்டும் சாமி கும்புடுவாங்க ,நானும் , என் அண்ணனும்  பரிச்சைக்கு போற நாள்ல  மட்டும் சாமி கும்புடுவோம் , மத்தபடி சாமி ரூமுக்கு கூட போக மாட்டோம் , எங்க அம்மாவோட அம்மா தீவிரமான சிவ பக்தை , அவங்களுக்கு காது கேக்காது , ரொம்ப சத்தமா பேசுனாதான் காது கேக்கும் , அதனால யாரும் சரியா  பேசறதில்லை 6 மாசத்துக்கு ஒரு முறை 2 மாசம் எங்க வீட்டுல இருப்பாங்க ,
காலைல , மதியம் , இரவுன்னு 3 வேலையும் அரை மணி நேரம் சிவனுக்கு பூஜை செய்வாங்க ருத்ராட்ச மாலை எப்பவும் அணிந்திருப்பங்க , பூஜை முடிஞ்சு எங்களுக்கு விபூதி பூசி விடுவாங்க , நாங்க எதுக்கமாட்டோம் , கிண்டல் பண்ணுவோம் , அவங்களுக்கு எழுத படிக்க தெரியாது , மந்திரத்த முணு  முணுத்து கிட்டு இருப்பாங்க , உனக்கு எப்படி மந்திரம் தெரியும் ன்னு கேட்டா , சிவன் தான் சொல்லி கொடுத்தார் ன்னு சொல்லுவாங்க , நிச்சயமா பொய் தான் சொல்லுது முடிவு பண்ணிடுவோம் , காரணம் நாம சக மனிதர்கள் கிட்ட பேசறமாதிரி அவங்க சிவன் கிட்ட பேசுவாங்க, 24 மணி நேரமும் சிவ பெருமான் அவங்க கண்ணுக்கு தெரிவதாக சொல்லுவாங்க , நாங்க எதாவது கிண்டல்  பண்ண அவங்களுக்கு கேக்காது , ஆனா அவங்க  நீ என்னை  கிண்டல் செய்யறதா சிவன் சொல்லிட்டு அங்க சிரிச்சிக்கிட்டு உக்கார்ந்துட்டு இருக்கார் ன்னு சொல்லுவாங்க , அப்பவும்  எதோ பொய் சொல்லுதுன்னு நினைப்போம்.
அவங்க சொன்னதெல்லாம் உண்மை ன்னு குருநாதரை பார்த்த பிறகு தான் நம்பினேன் , அதுக்குள்ளே அவங்க இறந்து 10 வருஷம் ஆயிடுச்சு . இன்னைக்கு நான் சிவனை பைரவர் வடிவத்துல வணங்க அவங்கதான் காரணம் ன்னு  தோணுது.
காரணம்  11 வது படிக்கும் பொது எனக்கு கிட்டத்தட்ட நாத்திக எண்ணம் வந்திருச்சி , ஆனா சிவனையும் , சமயபுரம் மாரியம்மனையும் மட்டும் இல்லைன்னு சொல்ல வையும் வரலை ,மனசும் வரலை , அதுக்காக கொவிலுக்குகெல்லாம் போய் சாமி கும்பிடுற எண்ணம் இல்லை 
எனக்கு உடம்பு வழக்கத்துக்கு மாற எடை போட ஆரம்பிச்சது , தோற்றம் கொஞ்சம் விகரமா ஆனது ,school சரியா போகலை , cut அடிச்சி ஊர் சுத்த ஆரம்பிச்சேன் , ஒரு நாள் எங்க அப்பா class  sir  கிட்ட அடிச்சா தான் அவன் ஒழங்கா படிப்பான் இல்லன்னா ஒழுங்காவே படிக்கமாட்டான் சொல்லிட்டார் , அதனால மத்தவங்களுக்கு விழும் அடியை விட எனக்கு அதிக அடி விழும் , பாடத்தை  என்னால கவனிக்கவே முடியாது , கவனிக்கலாம்னு நினைச்சாலே  முதல் நாள் cut  அடிச்சு பார்த்த சினிமா படம்தான் நினைவு முழுக்க வரும் ,  ( இந்த நிலை எனக்கு இன்னைக்கு வரைக்கும் இருக்கு , எதுலயும் முழுமையா கவனம் செலுத்தவே முடியலை ), ஒரு நாள் class  சார் ஸ்கூல் க்கும் , டியூஷன் க்கும் ஒழுங்கா போகாலைன்னு ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிட்டார் , வீட்டுக்கு போன அப்பா அம்மா வும் சேர்ந்து அடிச்சிட்டாங்க , சரி இங்க இருக்க கூடாதுன்னு வீட்டை விட்டு சென்னை க்கு ஓடி போயிட்டேன் , எப்படியோ 3 நாள்ல கண்டுபுடிச்சி கூட்டிட்டு வந்துட்டாங்க , மறுபடியும் school  வந்து சேர்ந்தப்போ 12 வது படிக்கும் போது என்னை போலவே cut  அடிச்சி சுத்தற பசங்க 20 பேர் ஒண்ணு சேர்ந்தோம் , ஒண்ணா school ஐ cut அடிச்சி சினிமா க்கு போக ஆரம்பிச்சோம் , சிகரெட் குடிக்கற பழக்கம் வந்தது , கொஞ்ச நாள்ல தண்ணி அடிக்கற பழக்கம் வந்தது , கறி சாப்டர பழக்கம் வந்தது ,
என்னோட ஒட்டு மொத்த பழக்கவழக்கம் எல்லாமே மாறி போய்டுச்சி .
11 வது படிக்கும் போதே காலாண்டு பரிட்சைல முதல் முறையா பெயில் ஆகிட்டேன், அது வரைக்கும் 50 % மார்க்கு கம்மியா கூட நான் வாங்கினது இல்லை கடைசி ல 12 வது PUBLIC EXAM ல பெயில் ஆகிட்டேன் . என் friends 20 பேர்ல 3 பேர்தான் பாஸ் , பாதி பேர்  டிப்ளமோ படிச்சாங்க , பாதி பேர் improvement பண்ணாங்க இத்தனைக்கும் நாங்க எல்லாருமே ஒரு காலத்துல school  first , class  first  students . ( எங்க 20 பேர்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு மாதிரியான life , நல்லா சம்பாதிக்கறவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை , ஒருத்தனுக்கு விவாக ரத்து ,கல்யாணம் ஆனவங்களுக்கு சரியான வேலை கிடைக்கலை , கைக்கும் வாய்க்குமான போராட்ட்டம், இன்னவரைக்கும் யாருக்கும் சரியான வாழ்கை அமையலை )
 
என் அண்ணனுக்கும் இதே மாதிரி அனுபவம் அதே கால  கட்டத்துல , அவர் காலேஜ் ல படிச்சிக்கிட்டு இருக்கும் போது அவர் தலை முடி UP NORMAL ஆ கொட்டுமாம்  , சக நண்பர்கள் கிண்டல் செய்தா  கூட பரவாயில்லை , அவர் கிளாஸ் க்கு வர்ற lecturer தான் அதிகமா அவரை கிண்டல் செய்வாங்களாம் , அதனால அவர் கிளாஸ் க்கு போகாம CUT  அடிக்க ஆரம்பிச்சாராம் , அவர் அரியர்  முடிச்சு , டிகிரி complete பண்ணவே ரெண்டு வருஷம் ஆயிடிச்சு , எப்பவும் தலைல cap  போட்டுக்கிட்டு இருப்பார்

என்னை டிப்ளமோ ல சேர்த்து விட்டாங்க , அங்கேயும் ஸ்கூல் ல நடந்த கதையேதான் ,அங்கயும் cut  அடிக்கற பழக்கம் வந்தது , கொஞ்ச நாள் ல DISCONTINUE பண்ணிட்டு , பெயில் ஆனா subject ஐ October ல பாஸ் பண்ணிட்டு , மீதியை மே மாசத்துல  ல improvement பண்ணிக்கலாம் ன்னு வீட்டுல  இருந்து படிச்சிகிட்டு இருந்தேன் , 10 நாள் ல mind என்னமோ மாதிரி இருந்தது , relax ஆ college க்கு போய் நண்பர்களை பார்த்துட்டு நாளைக்கு வரலாம் ன்னு  கிளம்பினேன், குளிக்கும்போது எப்பவும் தலைக்கு ஷாம்பூ போடுவேன் , அன்னைகின்னு சீயக்காய் போட்டு குளிச்சேன் , சீயக்காய் கண்ணுல பட்டு  வலது கண் ரத்த கலர் ல ஆயிடுச்சு, சரியாய் கூட பார்க்க முடியலை , ஒரு கையை அந்த கண்ணை மறைச்சு கிட்டே வண்டி ஓட்டிட்டு friend கூட துணைக்கு  கூட்டிட்டு போறதுக்காக அவன் வீட்டுக்கு போனேன் , அவன் நாளைக்கு போகலாம் ,இன்னைக்கு வேண்டாம் ன்னு தடுத்தான் , நான் அவன் சொல்றத கேக்காம போனேன் , பஸ் ஏறி ஜன்னல் ஓரமா உக்கார்ந்த உடனே பகல் கனவு மாதிரி ஏதேதோ கற்பனை பண்ண ஆரம்பிச்சுட்டேன் , அரைமணி நேரத்துல முருங்கை மரம் ஓடையற மாதிரி ஒரு சத்தம் ,நான் போன பஸ் ,எதிர் ல வந்த லாரி யும் ஒன்னை ஒன்னு உரசிக்கிட்டு போனுச்சி , பஸ்ல என்னை தவிர யாருக்கும் எந்த அடியும் படலை , என் கை மட்டும் அடிபட்டுச்சு , வீட்டுக்கு தகவல் கொடுத்து கோயம்புத்தூர் ஹாஸ்பிட்டல் சேர்க்கறது குள்ள  8 மணி நேரம் ஆயிடுச்சி , அவ்வளவு நேரம் ரத்தம் நிக்காம வந்துகிட்டு இருந்தது என் உடம்பு முழுக்க ரத்தம்,  எப்படி உயிரோட இருந்தேன் ன்னு தெரியல , பிழைச்சு வருவேன்னு நினைச்சு கூட பார்க்கலை ,

வீட்டுக்கு வந்து 3 வருஷம் வீட்டை விட்டே வெளிய போகலை , அதுக்குள்ளே October ல எழுதுன பரிட்சை பாஸ் பண்ணிட்டேன் , எங்க அப்பா correspondence ல BBA DEGREE போட்டுட்டார் , left hand  ல எழுதி எப்போ முடிக்கறதுன்னு அப்படியே விட்டுட்டேன் , வாழ்க்கை முழுசா மாறி  போய்டுச்சி நைட் முழுக்க  டிவி பார்ப்பேன் , பகல் ல  தூங்குவேன் , வெளி உலகத்தோட தொடர்பே இல்லாம போய்டுச்சி , விருப்பதோட ஒரு  சிறை வாழ்கை வாழ்கிற மாதிரி ஆயிடுச்சி ,
என்னை விட மோசமா school ல  படிச்ச ஒரு நண்பனை பார்த்தேன் , அவன் டிகிரி முடிசிட்டாத சொல்லவும் , எனக்கு உள்ளுக்குள்ள இருந்து ஒரு உந்து சக்தி மாதிரி ஒரு உத்வேகத்துல CURRENT YEAR ல  டிகிரி முடிச்சிட்டேன் 

சரி இனி மேலயாவது சகஜ வாழ்க்கைக்கு திரும்புவோம் நினைக்கில 
எங்க வீட்ட ஒட்டி ஒரு வீடு கட்டி ஒரு குடும்பம் புதுசா  குடி வந்தது ,
வந்த நாள் ல இருந்து  இதுக்கு முன்னாடி ஏற்பட்ட துன்பம் எல்லாமே ஒரு பிரச்சனையே இல்லை ங்கற மாதிரி இருந்தது புதுசா வந்த குடும்பம் 

கிராமத்துலயாவது  பக்கத்துக்கு வீட்டு ஆளு தான்  மாந்திரீகம் தெரிஞ்சவன் , அவனோட பையன் கிட்ட  கொடுத்து எங்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்துவான் 

ஆனா இங்க புதுசா வந்த குடும்பத்துல எல்லாருமே கொடுரமான , ஈவு இரக்கமே இல்லாத மாந்திரீகவாதிகள் 

இவங்க பக்கத்துல குடி வந்ததுல இருந்து எங்க குடும்பத்துக்குள்ள ஓயாமல் சண்டை நடக்கும் , எப்பவும் மன நிலை கொந்தளிச்சி கிட்டே இருக்கும் , எதிர்மறையான எண்ணங்கள வராத நாள் எதோ புண்ணியம் செய்த நாள் 

கிட்டதட்ட 7 வருசமா பனி போர் மாதிரி சண்டை
இதுக்கு அப்பறம் தான் மாந்திரீகத்தை , தீய சக்தியை நேரடிய உணர்ந்தேன் அனுபவிச்சேன் ,

correspondence ல MBA படிச்சிகிட்டு இருந்தேன் , நைட் தான்  படிப்பேன் , சரியா 12 மணியில இருந்து 2 மணிக்குள்ள யாரோ கொழுச கட்டி வேகமா வேகமா வீட்டை சுத்தி வர மாதிரி சத்தம் கேக்கும் , அப்படியே பயந்து கிட்டு தூங்கிருவேன் , நைட் தண்ணி குடிக்க போன பின்னாடி யாரோ நிக்கற மாதிரி உணருவேன் , பகல் ல ஒரு சில சமயம் ஜன்னல் வழியா  பார்த்த ஒரு எருமை மாடு நிக்கற மாதிரி தெரியும்  

ஒரு நாள் சாயந்தரம் வீட்டுல யாரும் இல்ல , குளிச்சிட்டு வெளியில சேர்  ல உக்காந்து இருந்தேன் , எதோ சுய நினைவை இழந்து யோசிகிட்டே இருந்தேன் , திடீர்ன்னு ஒரு சிந்தனை , கரண்ட் இல்ல வீடு இருட்டி கிடக்குதே ன்னு சாமி ரூம்ல விளக்கு ஏத்திட்டு ரெண்டு நிமிசத்துல வெளியே வந்து பார்த்தேன் , நான் உக்கார்ந்த இடத்துல தென்னை மரத்துல இருந்து தென்னை மட்டை விழுந்து கிடந்தது , சேர் 2 அடி தள்ளி குப்புற விழுந்து கிடந்தது , நான் விளக்கு ஏத்தும் போது சமயபுரம் மாரியம்மனை நினைச்சு விளக்கு ஏத்தறது வழக்கம் , எங்க அம்மாவுக்கு வருசத்துக்கு ரெண்டு மூணு முறையாவது சாமி வரும் , அப்படி வரும் போதெல்லாம் சமயபுரம் மாரியம்மன் வந்திருப்பதாக சொல்லுவாங்க


ஒரு நாள் ராத்திரி சரியா 2 மணிக்கு இறந்து  போன என் தாத்தா என் முகத்துக்கு முன்னாடி இருக்கற ஜன்னல திறந்து என் பேரை சொல்லி கூப்பிட்ட மாதிரி கனவு கண்டு முழிச்சிகிட்டேன் , ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு சாபிட்டது ஜீரணம் ஆகாம வாந்தி எடுத்தேன் , என் வாழ்நாள் ல அவ்வளோ மோசமா நான் களைப்படைந்ததே இல்லை  , நாலு நாலா சாப்பிடவே இல்லை , நாலாம் நாள் இரவு 12 மணிக்கு மேல உடம்ப என்னென்னவோ செய்தது , உயிர் போற துன்பத்த அனுபவிச்சேன் , கடைசியா 
காலைல 5 மணிக்கு சாமி ரூமுக்கு போய் விளக்கை ஏத்தி சமயபுரம் மாரியம்மன் கிட்ட உயிரோட இருந்தா அடுத்த வாரம் கோவிலுக்கு வந்து மொட்டை போட்டுகிறேன் வேண்டிகிட்டு என்ன நடந்தாலும் சரின்னு போய் படுத்துகிட்டேன் , காலைல 11 மணிக்கு எந்திருச்சேன் , வீட்க்கு முன்னாடி கும்பல் என்னன்னு , என் அண்ணன் கிட்ட கேட்டப்போ , எதுத்த வீட்டுல இருந்த பாட்டி 5 மணிக்கு இறந்து போய்ட்டாங்க ன்னு சொன்னார் , 
வீட்டுல விளக்குயேற்றும் முக்கியத்துவத்தை அப்போ உணர்ந்தேன்

அப்போதிருந்து சமயபுரம் கோவில்ல 4 மாசத்துக்கு ஒரு முறை மொட்டை போட  ஆரம்பிச்சேன் 

கொஞ்ச நாள் ல வாஸ்து சரியில்ல ன்னு வீட்டை இடிச்சி ALTER பண்ணோம் , ஹோமம் செய்து ஒரு வாரதுக்குள்ள வீட்டு  மொட்டை மாடியில ரெண்டு எலுமிச்சை பழம் ரெண்டா அறிஞ்சு கும்குமம் தடவி கிடந்தது , எங்க அப்பவை கூப்பிட்டு காட்டினேன் , இவங்கதான் இந்த வேலையை செய்து இருப்பாங்க ன்னு சொன்னேன் அவர் இது என்ன பன்னபோகுதுன்னு தூக்கி எறிஞ்சிட்டார் , அன்னைக்கு இருந்து சரியா  10 நாளைக்குள்ள எதிர் வீட்டுல இருந்த இன்னொரு  பாட்டி இறந்து போய்ட்டாங்க .

எனக்கு இதுக்கப்பறம் தான் இவ்வளவு நாளா  இவங்க மாந்திரீகம் பண்ணிதான் நம்ம கிட்ட சண்டைக்கு வராங்க ன்னு சந்தேகம் வந்தது , காரணம் அவங்க குடும்பத்துல எல்லாரும் படிச்சிட்டு government ல வேலைல இருக்கறவங்க இழிவா செய்வினை , பில்லிசூனியம் ன்னு இறங்குவாங்க ன்னு  எதிர் பாக்கலை , சரி எங்கயோ யார் கிட்டயோ போய்  செஞ்சிகிட்டு தான் வர்றாங்க ன்னு நினைச்சேன் . எனக்கு நேர போய் சிவன் கோவில் ல போய் எனக்கு இதை பத்தி ஒன்னும் தெரியாது , காப்பாத்துங்க ன்னு வேண்டிகிட்டேன் 


ஒருபக்கம் என் மனநிலை மோசமா ஆயிடுச்சு சிந்திக்கற அறிவை கொஞ்சம் கொஞ்சம் இழந்துகிட்டே வந்தேன் , குடி பழக்கம் அளவுக்கு  அதிகமா ஆயிடுச்சி , நேரடியாவே ஒரு முறை சண்டைக்கு போனப்போ அது கடைசில சாதி சண்டைல வந்து முடிஞ்சது  , சுத்திலும் அவங்க சொந்தகாரவங்க, எல்லாருமே ஊரையே விலைக்கு வாங்கற அளவுக்கு கோடிஸ்வரங்க , எங்க ஊரு பஸ் ஸ்டாப்பே அவங்க அடையாளத்தோட இருக்கும் , இன்னொருத்தன்  MP  யோட CLOSE  ஒரு நெருக்கடி கொடுத்தான் , சரின்னு  நண்பர்கள் கிட்ட கேட்டப்போ , அவங்கள விட்டு வம்பு இழுத்து அடிக்க விடலாம்ன்னா அவங்க குடும்பத்துல யாராவது தவறி போறாங்க , நண்பர்கள் கிட்ட இதற்க்கு தீர்வு கேட்டா  அவங்க குடும்பத்துலயும் இதே மாதிரி ஆகுது , கடைசியா  சீட்டு எழுதி கட்டற கோவில் ல சீட்டு எழுதி கட்டீட்டு , நீ உன் வேலையை பார்த்துட்டு போன்னு ஒருத்தர் சொன்னார் , நானும் 2 கோவில்ல செஞ்சேன் , எல்லாமே அதிகமா போய்கிட்டே இருந்ததே தவிர குறைஞ்ச பாட்டை  காணாம் ,

மாமா ஒருத்தர் எதிர் பார விதமா இறந்ததால , மாமா பையன் அழுதுகிட்டே இருந்தான் அவனை ஆவி கிட்ட பேசற ஒரு அம்மா கிட்ட கூட்டிகிட்டு போனோம் , அவங்க பேசுன ஸ்டைல் அவங்க அப்பா பேசுன மாதிரியே இருந்தது ன்னு சொன்னான் , சாமிகிட்ட ல பேசுவிங்களா ன்னு கேட்டேன் , உனக்கு என்ன வேணும் ன்னு கேட்டாங்க , என் குல தெய்வத்துகிட்ட பேசணும் ன்னு சொன்னேன் , அவங்க பேச பேச என்னோட மரண பயம் அதிகறச்சது ,

அவங்க கேட்ட முதல் கேள்வியே நீ எப்படி உயிரோட  இருக்க ன்னு அதிர்ச்சியா கேட்டாங்க , உன் பக்கத்துக்கு வீட்டுகாரனே ஒரு மந்திரவாதி தாண்டா , நாடு ராத்திரி நிர்வாணமா பூஜை பன்ரண்டா , எனக்கு மரண பீதி அதிகமா ஆயிடுச்சு , கிராமத்துல என் சொந்த ஊர்ல பண்றாங்களே அதை சொல்றீங்களா ன்னு கேட்ட்டப்போ , அதெல்லாம் ஒண்ணுமே இல்லை , இவனுங்க  அவனுங்களை விட ரொம்ப மோசம் , எந்த வம்பு சண்டையும் வசிக்காதே விலகி போய்டு ன்னு சொன்னாங்க , உன் வீட்டுல சுடுகாட்டு சாம்பலை தூவி விட்டுட்டான் , உன் வீடே எனக்கு மயான வீடா கண்ணுக்கு  தெரியுது ன்னு சொன்னங்க , எங்க வீட்டுல எங்க அப்பா அம்மா வை கூட்டிட்டு வரேன் அவங்க கிட்ட இதை சொல்றீங்களா ன்னு  கேட்டேன் .

நீ என்ன சொன்னாலும் உங்க குடும்பத்துல யாரும் உன்னை நம்ப மாட்டங்க உங்க வீட்டுல எங்க எங்க என்னனென்ன பண்ணி வச்சிருக்கான் ன்னு சொல்றேன் , முடிஞ்சா கண்டு புடிச்சி எடுத்த்துக்கோ பாக்கலாம் ன்னாங்க , அவங்களையெல்லாம்  இங்க கூட்டிட்டு வந்தா பெரிய பிரச்னை ஆயிடும் , நீ எதோ கோவிலோ குளத்திலோ பொய் பரிகாரம் பண்ணிக்க அப்படின்னாங்க , நான் திரும்ப திரும்ப கேக்கவும் , கொல்லிமலை அடிவாரத்துல நிறைய மந்திரவாதிங்க இருக்காங்க அங்க போய் யாரையாவது பார்த்துக்கோ ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க , 

அதுக்குள்ளே ஒரு friend ஒரு அம்மாவை சாமீ ன்னு சொல்லி அறிமுகபடுத்தி வச்சான் , அந்த அம்மா கிட்ட10,000 rs பணத்தை செலவு பண்ணி பூஜை செஞ்சேன் , பிரச்னை குறைஞ்ச பாட்டை காணாம் , பரிகாரம் , பூஜை ன்னு 4 பேர்கிட்ட போய் மாட்டிகிட்டேன் , ஒன்றை லட்ச ரூபாய் போய்டுச்சி , பிரச்னை ஏதும் தீர்ந்ததா தெரியலை , சின்ன முன்னேற்றம் கூட தென்படலை , 

சரி இதெல்லாம் வேலைக்கு ஆகாது நாமலே மாந்திரீகம் கத்துக்கிட்டு நம்ம பிரச்சனையை சமாளிக்க வேண்டியதுதான் ன்னு  கீழ்த்தரமான ஒரு முடிவை எடுத்துட்டேன் ,

இந்த நிலையில ஒரு நாள் நண்பர்கள்  கூட கொல்லி மலைக்கு போனேன் அப்போதான் வேதாத்திரி மகரிஷி யோட தியான வகுப்புல தியானத்தை கத்துகிட்டு ஒரு வாரம் ஆகுது , நண்பர்கள் எல்லாம் கீழே நீர்வீழ்ச்சிக்கு போய்ட்டாங்க , நானும் பாதி தூரம் போயிட்டு முடியாம திரும்பி வந்துட்டேன் வந்துட்டு , படிக்கட்டு பக்கத்துல திட்டு மாதிரி இருக்கற தூண் ல அப்படியே படுத்துகிட்டு தியானம் பண்ண ஆரம்பிச்சேன் , அப்போவெல்லாம் கடவுள் மேல பயங்கர  வெறுப்பு வந்திருச்சு , எவ்வொளதான் அலையறது , பணத்தை இழக்கறது , இங்க நிறைய சித்தர்கள் இருக்கறதா என் அண்ணன் அடிக்கடி சொல்லுவர் , பேசாம தியானத்துல சித்தர்கள் கிட்ட உதவி கேட்டு பாக்கலாம் ன்னு நினைவுகள் அத்து போற நிலை தெய்வீக நிலை ன்னு சொன்னங்க , அந்த நிலையில எதோ குருட்டாம் போக்குல இங்க நிறைய்ய சித்தர்கள் இருக்கீங்க , யாரவது ஒருத்தராவது உதவி செய்யுங்களேன் வேண்டிகிட்டேன் , அப்படியே  தூங்கிட்டேன் , ( அப்போ எனக்கு அகத்தியர் பேர் கூட ஒரு  தெரியாது, அதாவது சித்தர்ன்னா  யார் என்னன்னு, அவங்க ஒருத்தர் பேர் கூட தெரியாது )கீழே போன நண்பர்கள் வந்தாங்க , அதுல ஒருத்தன் என்னை எழுப்பிவிட்டு எங்கடா ஒரு செருப்பை காணாம் ன்னு , மீதி இருந்த ஒரு செருப்பையும் என் தலையை சுத்தி இன்னையோட உன்னை புடிச்ச பீடை விலகட்டும் ன்னு தூக்கி எறிஞ்சான் , அவன் ஒரு நாத்திகன் , அந்த அரப்பலிஸ்வரர் சிவன் அவனுடைய குல தெய்வம் ,

ஊருக்கு வந்து அடுத்த 5 வது நாள் ஒரு வெள்ளிகிழமை மதியம் எனக்கு  அது எப்படி அந்த மந்திரவாதிங்க என் உடம்பையும் என் எண்ணங்களையும் , கட்டுபடுத்தலாம் ன்னு பயமும் ,கோபமும் வந்தது, மனோநிலை ரொம்பவும் கொந்தளிப்பா இருந்தது , நெஞ்சு வெடிச்சு போற அளவுக்கு துடிச்சது , நான் பேசாம குளிச்சிட்டு வெளிய கிளம்பினேன் , பஸ் ஸ்டாண்ட் ல இருந்து மோகனூர் போற வழியில முதல் பெட்ரோல் பங்க் ல பெட்ரோல் போடலாம் ன்னு நினச்சுகிட்டு போனேன் , என்னையும் அறியாம 3 பெட்ரோல் பங்கை தாண்டி வந்துட்டேன் , என்னாச்சு நமக்கு , பைத்தியமா ஆயிட்டேனா , என்ன செய்யரோம்னு நினைவு இல்லாம போய்கிட்டு இருக்கேனே ன்னு இன்னும் மனசு கொதிக்க ஆரம்பிச்சது , 

சரி பக்கத்துல சித்தர் மலை இருக்கு அங்க போய் தியானமாவது பண்ணலாம் ன்னு போனேன் , பாதி மலை ஏறுனதும் மூச்சு வாங்க முடியலை , அங்கேயே படிகட்டுல உக்கார்ந்து தியானம் பண்ண ஆரம்பிச்சேன் , சொடக்கு போடற 5 நொடிக்குள்ள மனசு அடங்க ஆரம்பிச்சது , எனக்கே இது அதிசயமா பட்டது , ஒரு 10 நிமிசத்துக்குள்ள  தூரத்துல இருந்து ஒரே ஒரு கண்ணு மட்டும் இறங்கி வர்ற மாதிரி தெளிவா தெரிஞ்சது , அந்த கண்ணையே அப்படியே ஒரு 10 நிமிஷம் பார்த்துகிட்டு இருந்தேன் , எதோ ஒரு சித்தர் தான் காட்சி கொடுத்திருக்கார் ன்னு நினைச்சு அமைதியாயிட்டேன் , சரி மனசு அமைதி ஆயிடுச்சு கிளம்பி போலம்ன்னு நினைச்சப்போ , இவ்வளோ தூரம் வந்துட்டோம் மேல போய் சிவனை வணங்கிட்டு போலாம்ன்னு தோனுச்சு , மேல யாருமே இருக்க மாட்டங்க ன்னு நினச்சு போனா அங்கே 15 பேர் பக்கம் இருந்தாங்க எதோ ஒரு குடும்பம் பூஜை பண்ணுவாங்க போல ன்னு நினைச்சேன் , பூசாரி சிவனுடைய கவசத்தை கழுவிகிட்டு இருந்தார் , ஒருத்தர் அவர் கிட்ட பூஜைக்கு  இன்னும் எவ்வொளோ  நேரம் ஆகும்ன்னு கேட்டார் ஒரு 15 நிமிஷம் ஆகும்ன்னு அவர் பதில் சொன்னார் , சரி அவ்வளோ நேரம் என்ன பண்றதுன்னு ஒரு தூண்ல சாய்ஞ்சு உக்கார்ந்துகிட்டு தியானமாவது  பண்ணலாம் ன்னு உக்கார்ந்து கண்ணை மூடினது தான் தாமதம் , நெத்தியில அந்த ஒரு கண்ணு இப்போ தலை கீழா முக்கண்ணா தெரிஞ்சது எண்ணை யாரோ கட்டி போட்டது போல உணர்ந்தேன் , என்னால கண்ணை திறக்கவே முடியலை , அப்படியே அந்த கண்ணை 10 நிமிஷம் பார்த்துகிட்டே இருந்தேன் , திடீர்ன்னு அந்த கண்ணு மறைஞ்சு அதுக்கு பதிலா ஒரு சூடம் எரியற மாதிரி ஜோதி தெரிஞ்சது , அதையும் பார்த்துகிட்டே இருந்தேன் , திடீர்ன்னு மணி அடிக்கற சத்தம் கேட்டது , பூஜையை ஆரம்பிச்சுட்டாங்க , சாமி கும்படணுமே ன்னு கண்ணை திறந்தேன் , சாமிதான் தரிசனம் கொடுத்து கிட்டு இருக்கார் ங்கற அறிவில்லாம கண்ணை திறந்துட்டேன் 
கண்ணை திறந்தப்போ பூசாரி நந்திக்கு தீப ஆராதனை பண்ணிக்கிட்டு இருந்தார் , சாமி கும்பிட்டு வீட்டுக்கு வந்து என் அண்ணன் கிட்ட விசயத்தை சொன்னப்போ , நீ கொல்லி மலைல யும் சித்தரை வணங்குனதா சொன்ன , இந்த மலைக்கு பேரே சித்தர் மலைதான் , அதனால எதோ ஒரு சித்தர் தான் உனக்கு காட்சி கொடுத்திருப்பார் ன்னு என் அண்ணன் சொன்னார் , சாப்பிட்டுகிட்டு இருந்தவர் இன்னைக்கு எதேச்சையா காலண்டரை பார்த்துட்டு இன்னைக்கு பிரதோஷம் டா அப்படின்னார் , நான் அப்படின்னா என்னானு கேட்டேன் , சிவனுக்கு உகந்த நாள் இன்னைக்கு அப்படின்னு சொன்னார் , அடுத்த நாள் நெட்டு ல பிரதோஷதை பத்தி படிச்சு தெரிஞ்சுகிட்டேன் , எனக்கு ஏன் காட்சி கொடுத்தார் ன்னு தெரியவே இல்லை , அன்னை ல இருந்து நான் கறி சாப்பிடவே இல்லை ( இதுக்கு 3 வருசத்துக்கு முன்னாடி ஒருத்தன் கூட சேர்ந்து மாட்டுக்கறி திங்க ஆரம்பிச்சேன் , இத்தோட அந்த பாவ காரியத்தை விட்டுட்டேன், இப்பவும் எந்த சிவன் கோவிலுக்கு போனாலும் இந்த பாவத்துக்கு நந்தி காதுல மன்னிப்பு கேட்பேன் ), அன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் தரிசனம் கிடைச்சது அதுக்கப்பறம் எவ்வளவோ முறை முயற்சி வெவ்வேற கோவில்கள் கூட தியானம் செஞ்சு பார்த்துட்டேன் தரிசனம் கிடைக்கலை , அப்பறமா தான் உணர்ந்தேன் , தியானத்துல கடவுள் தரிசனம் கிடைக்கறது எல்லாம் சித்தர்களோட அனுமதியோட யும் , ஆசிர்வாதத்தோடயும் , அவங்க உதவியோடயும் தான்  கிடைக்கும் ன்னு உணர்ந்தேன் , நம்ம விருப்பத்துக்கு எல்லாம் நினைச்ச நேரத்துல கிடைக்காது ,  இந்த உண்மையை உணர்ந்த பிறகு கடவுள் தரிசனம் எனக்கு கிடைச்சதுங்கற ஆணவம் எனக்கு போயிடுச்சு
 
இவ்வளோ நடந்தும் என் மாந்த்ரீக பிரச்னை மட்டும் தீரலை எங்க மாந்திரீகம் சொல்லி கொடுப்பாங்க ன்னு நெட் ல தேடுனேன் ஒன்னும் கிடைக்கலை , தற்செயலா ஒரு ஜோதிட மாத இதழ் ல மாந்திரீக பயிற்சி வகுப்பு ன்னு குறைஞ்சது 10 addrass  வது இருந்திருக்கும் , கண்ணுல பட்டது 

சரி இருக்கறதுலேயே நமக்கு பக்கத்துல இருக்கற அட்ட்ராஸ் க்கு போவோம் ன்னு கிளம்பினேன் , பாதி வழியிலேயே வயித்து போக்கு , கடுமையான வயிறு வலி ஏற்பட்டது , கிளம்பி போகலாம் ன்னு தோனுச்சு , ஆனா  அந்த அட்ட்ரசுக்கு போட்டேன் , ( பின்னாடி தான் தெரிந்தது பைரவர் தான் அப்படி  தடுத்திருக்கார் ன்னு , நான் தான் மதிக்காம போயிருந்ததுருக்கேன் )

எதோ மந்திர குடுவை மாதிரி கொடுத்தான் , தலைல மையை தடவினான் , 4 - 5 புத்தகத்து கொடுத்தான் , எதோ CD ஐ கொடுத்தான் , இந்த குடுவையை ஒரு டப்பாவுல போட்டு ரெண்டு மந்திரத சொல்ல சொன்னான் , மந்திரத்தை சொல்றப்போ மட்டும் இந்த குடுவையை எடுத்து வெளியே வச்சிக்க சொன்னான் , மந்திரம் சொல்றதுக்கு முன்னாடி ஒரு ஆக்ரோஷமான சாமி போட்டா வை முன்னாடி வச்சிக்கிட்டு அதை பாத்துகிட்டே சொல்ல சொன்னான் , புத்தகத்த வங்கி பார்த்தப்போ அதுல இருக்கற பல விசயத்த நான் ஏற்கனவே நெட் ல தேடி எடுத்து வச்சிருந்தேன் , அதனால சரி து எதோ டுபாக்கூர் வேலை ன்னு விட்டுட்டேன் , தற்செயலா ஒரு நாள் வீட்டுல யாரும் இல்லாதப்போ அவன் கொடுத்த CD ஐ என்ன இருக்குன்னு போட்டு பார்த்தேன் , எனக்கு பெரிய அதிர்ச்சி , அந்த cd என்னை மாதிரி போய்  மாந்திரீகம் கத்துக்க போறவங்க எல்லாரையும் ஒரு நாள் எதோ ஒரு ஊருக்கு வர வைத்து அந்த புத்தகத்துல இருக்கறதுக்கு விளக்கம் கொடுப்பாங்க அதை வீடியோ ஆ எடுத்து அடுத்து வரவங்க கிட்ட கொடுப்பாங்க , அந்த CD ஐ பார்த்துகிட்டே இருந்தப்போ என் பக்கத்துக்கு வீட்டு மந்திரவாதி அந்த CD ல உக்கார்ந்து குறிப்பு எடுத்துகிட்டு இருந்தான் , உடனே எங்க வீட்டுல இதை காண்பிச்சேன் ,

சரி நாமும் இதை செய்யலாம் ன்னு , ஆனா வீட்டுல செய்ய முடியாதுன்னு வெளியில ரூம் போட்டேன் ,(இப்போ நான் தினமும் விளக்கு போட்டு வரும் பைரவர் சன்னதி வழியா தான் அந்த ரூமுக்கு தினமும் போவேன் ) ஆஞ்சநேயர் கோவில் வாசல்படியில சாமி போட்டா விக்கற கடையில இருக்கறதுலேயே ரொம்பவும் ஆக்ரோஷமான சாமி போட்டா ஒண்ணை வாங்கி வந்து மந்திரம் சொல்லலாம் ன்னு உக்கார்ந்தேன் , என்னால மந்திரமே சொல்ல முடியலை ரொம்ப களைப்பா இருக்கும் அப்படியே அந்த போட்டவை தலைக்கு பக்கத்துல வச்சிக்கிட்டு தூங்கிருவேன் , முழுசா 5 நிமிஷம் கூட மந்திரத சொல்லவி முடியலை எதோ ஒரு சக்தி என்னை தடுக்குது ன்னு நல்லாவே தெறிஞ்சதுநான் வாங்கிகிட்டு வந்த ஆக்ரோஷமான சாமி போட்டா மேல இருக்கற போட்டா

 அப்போ சத்தியமா  கால பைரவர் யாரு என்னான்னே  எனக்கு தெரியாது, அந்த வார்த்தையை நான் கடவுள் படத்துல மட்டும் தான் கேள்வி பட்டிருந்தேன்


சரி இங்க இப்படியே இருந்தா  நேரம் தான் வீணாகும் , பேசாம ஜோதிடம் கத்துக்கலாம் ன்னு நெட் ல தேடுனப்போ www.aanmigakkadal.com  ங்கற வெப்சைட் ல ஜோதிடம் சொல்லி கொடுக்கறதா பொட்டுஇருந்ததை பார்த்து திரு வீரமணி அவர்கள் கிட்ட ஜோதிடம் கத்துக்க ராஜபாளையம் போனேன். 

நான் கடவுள் படத்துக்கு அப்பறம் ரெண்டாவதா அவர் கிட்ட தான் நான் கால பைரவரை பத்தி கேள்வி பட்டேன் , ஒரு மாசம் தங்கி இருந்தேன் , அவர் கிட்ட என் மாந்திரீக பிரச்னையை சொல்லி தீர்வு கேட்டப்போ அவர் திரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களை பத்தி சொல்லி அவருடைய அனுபவங்களை எல்லாம் 2 புத்தகமா தொகுத்து சென்னை ல அவருடைய TRUST ல தர்றாங்க , வேணும்ன்னா நீங்க சென்னைக்கு போய் வாங்கிக்குங்க ன்னு சொல்லி addrass ஐ கொடுத்தார் , அரை குறையா தான் அவர் கிட்ட ஜோதிடம் கத்துகிட்டேன் , பாதியிலே கிளம்ப வேண்டிய சூழ்நிலை .

நான் ஊருக்கு வந்த ஒரு மாசத்துக்குள்ள அவர் என்னை திருவண்ணமலைக்கு குபேர கிரிவலத்துக்கு கூப்பிட்டார் , நான் இந்த குடுவையலா எந்த பிரயோஜனமும் இல்லை ன்னு அந்த குடுவையை காவேரி ஆத்துல விட்டுட்டு அன்னைக்கி நைட்டே திருவண்ணமலைக்கு கிரிவலத்துக்கு கிளம்பிட்டேன் 
( அந்த குடுவையை ஆத்துல விட்டது என் சுயநினைவுக்கு அப்பாற்பட்டு என்னை மீறி நான் செய்த செயல் )

மறுபடியும் ரெண்டு மாசத்துல மாந்திரீகத்தை கத்துகிட்டே ஆகணும் ன்னு வெறி வந்தது , அந்த அளவுக்கு பாதிப்பை அனுபவிச்சேன் 
மறுபடியும்ஒரு ஜோதிட மாத இதழை வாங்கி பார்த்தப்போ பக்கத்துக்கு ஊருல மாந்திரீகம் கத்து தர்றதா போட்டு இருந்தது , அதை பாத்து அந்த ஆள் கிட்ட போனேன் , என் வாழ்க்கையோட மோசமான கெட்ட  நேரம் நான் அங்க போனது 
( இந்த மாந்திரீக பயிற்சி வகுப்பு பத்தி போட்டு இருக்கற புத்தகத்தை வாங்கினது தான் எனக்கு நானே வச்சிக்கிட்ட பில்லி சூனியம் , என் வாழ்கையில் நான் பண்ண மிக பெரிய பாவம், எனக்கு அஷ்டம சனி நடக்கறப்போ தான் மாந்திரீகம் கத்துக்கணும் ன்னு வெறியும் , சூழ்நிலையும் எனக்கு ஏற்பட்டது அதை தேடி போகவும் ஆரம்பிச்சேன் , என் கெட்ட நேரம் வந்தப்போ அது என் கண்ணுல பட்டது, வசமா மாட்டிகிட்டேன் )

ரெண்டாவதா ஒரு ஆள் கிட்ட மாந்திரீகம் கத்துக்க போனேன்

(இந்த கால கட்டத்துல வேலைக்கு போகணும் , சம்பாதிக்கணும் ங்கற எண்ணம் கொஞ்சம் கூட எனக்கு வரவே இல்லை ) தினமும் வேலைக்கு போற மாதிரி அந்த ஆள் கிட்ட மாந்திரீகம் கத்துக்க போயிட்டேன் , போன 10 நாள் வரைக்கும் தான் மனநிலை சரியா இருந்தது , 10 கழிச்சு மன நிலை ரொம்பவும் மோசமா பாதிக்க பட்டது ,சிந்திக்கற நினைவு கொஞ்சம் கொஞ்சமா போய்கிட்டு இருந்தது , வீட்டுல கஷ்டம் ,பாதிப்பு அளவுக்கு மீறி போனது .
ஒரு நாள் நெட் ல மந்திரத்தை பத்தி தேடிகிட்டு இருந்தப்போ 
மனம் அமைதி பெற சாய் பாபா காயத்திரி மந்திரம் 
ஓம் சாய் ராமாய வித்மஹி 
ஆத்ம ராமாய திமஹி 
தன்னோ சாயி ப்ரசோதயாத் 
அப்படின்னு ஒரு மந்திரத்தை பார்த்தேன் , என் மனசு வேற கொந்தளிச்சி கிட்டே இருந்தது , சரி இந்த மந்திரத்தை சொல்லிகிட்டே இருந்தேன் , மத்தவங்க கிட்ட பேசற நேரத்தை தவிர எப்போவும் இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பிச்சேன்
என்னை பொறுத்த வரைக்கும் அப்போ பாபா ங்கறவர் , எதோ வட இந்தியாவுல வாழ்ந்து மறைஞ்ச ஒரு முஸ்லிம் துறவி அவ்வோளோ தான் , அவர் முகம் கூட எனக்கு சரியா தெரியாது , இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பிச்ச ரெண்டு நாள்ல சாய் பாபா வண்டி ஒண்ணு எதிர் ல வந்தது வணங்கிட்டு போனேன் , அப்போ தான் தெளிவா பாபா வை முதல் முறையா நான் பாக்கறேன் , 

நான் மாந்திரீகம் கத்துக்க போன இடத்துல எனக்கு என்ன சொல்லி கொடுத்தான்னா நாம எந்த மந்திரத்தை சொல்ரமோ அந்த தெய்வம் நமக்கு வேலை செய்யும் அப்படி ன்னு சொன்னான் , நானும் பாபா மந்திரத்தை அந்த அடிப்படையில தான் சொல்ல ஆரம்பிச்சேன் ஒரு பக்கம் பைத்தியம் மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கேன் , இன்னொரு பக்கம் வெறி புடிச்ச மாதிரி பாபா வோட காயத்திரி மந்திரத்தை சொல்லி கிட்டு இருக்கேன் எனக்கு கடவுள் மேலயெல்லாம் நம்பிக்கை போய்டுச்சி , மந்திரம் சொன்னா ஒரு பிரார்த்தனை நடக்கும் ங்கற மாதிரி நம்ப ஆரம்பிச்சுட்டேன் ,பாபா காயத்திரி மந்திரத்தை சொன்னா பாபா ங்கற ஒரு வட நாட்டு துறவி எனக்கு மன அமைதியை கொடுப்பார் ன்னு ஒரு நம்பிக்கை , மத்தவங்க கிட்ட நான் பேசற நேரத்தை தவிர மத்த  நேரமெல்லாம் உள்ளுக்குள்ள மந்திரத்தை சொல்லி கிட்டே இருந்தேன் 

(அந்த காயத்திரி மந்திரத்தோட ஹைலைட்டே ஓம் சாய்ராம் ங்கற வார்த்தைல ஆரம்பிக்கறதுதான் , என்னை அறியாம ஓம் சாய்ராம் ன்னு சொல்லிகிட்டே இருந்துருக்கேன் )

மந்திரத்தை சொல்ல ஆரம்பிச்ச ஒரு 10 நாள்ல சென்னை ல ஒரு பேங்க் EXAM எழுத போனப்போ www.aanmigakkadal.com  வீரமணி அவர்கள் கொடுத்த டிரஸ்ட் க்கு போய் பார்த்தேன் , ஒரு வயசான பெரியவர் இருந்தார் , அவர் கிட்ட புத்தகம் வேணும்ன்னு கேட்டேன் , எதுக்காக இந்த புத்தகத்தை கேக்குறீங்க ன்னு கேட்டார் , நான் என் பாதிப்பை சொன்னேன்

நீங்க முதல்ல ஒரு வேலைக்கு போங்க , ஊருக்கு போனதும் உங்க RESUME ஐ எனக்கு அனுப்புங்க , அரசியல்  செல்வாக்கு மூலமா உங்க ஊர்லையே ஒரு வேலைக்கு நான் ஏற்பாடு பண்ணி தர்றேன் ன்னு சொன்னார் .

அப்பறம்  ஒண்ணும் கவலைபடாதிங்க நான் ஒருத்தர் ADDRESS தர்றேன் , அவர் பேரு விஸ்வநாதன் , RETIRED SBI STAFF ,அவர் ஒரு சாய்பாபா உபாசகர் , திருச்சி ல  ஸ்ரீ ரங்கதுல  ( இப்போ அங்கே இல்லை  )இருக்கார் ன்னு அவர் போன் நம்பரை கொடுத்து அவரை போய் பாருங்க 


என்கிட்ட 6 மாசத்துக்கு முன்னாடி எனக்கு நல்லா தெரிஞ்ச ஒரு கணவன் மனைவி வேலை ஏதும் இல்ல , ரொம்பவும் கஷ்டமா இருக்கு , எதாவது நல்ல வழி இருந்தா சொல்லுங்க அப்படின்னு கேட்டு வந்தாங்க , நான் அவங்களை திருச்சி விஸ்வநாதன் சார் கிட்ட அனுப்ச்சேன் , ரொம்ப நாள் ஆச்சு எங்க இருக்காங்க ன்னு தெரியலை ஆனா கண்டிப்பா நல்லா இருப்பாங்க ன்னு நினைக்கிறேன் , நீங்களும் போய் அவரை பாருங்க ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார் , அப்போ அவருக்கு ஒரு போன் வந்தது எடுத்து பேசுனார் ,
"கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு ,இப்பத்தான் உங்களை பத்தி பேசிக்கிட்டு இருந்தேன் நீங்களே போன் பண்றீங்க , ரொம்ப சந்தோசம் , கடவுள் இருக்கார் ,இதெல்லாம் கடவுள் இருக்கறதுக்கான சாட்சி , ஒரு 20 நிமிஷம் சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தார் , பேசி முடிச்சிட்டு என் கிட்ட சொன்னார் " நான் இப்போ சொன்னேனே ஒரு கணவன் மனைவி அவங்க தான் போன் பண்ணாங்க , அவருக்கு ஹைதராபாத் ல ஏர்போர்ட் ல வேலை கிடைசிருக்காம் அந்த பொண்ணுக்கும் அங்கேயே ஒரு IT COMPANY ல வேலை கிடைச்சிருக்காம் , ரெண்டு பேருக்கும் மாசம் ஒரு லட்சத்துக்கும் மேல வருமானம் வருதாம் , பொங்கலுக்கு ஊருக்கு வர்றாங்கலாம் , அதன் உங்களுக்கு என்னனென்ன  புடிக்கும் ன்னு கேக்கறாங்க , இப்போதான் அவங்களை பத்தி பேசினோம் அவங்களே போன் பண்ணி சொல்றாங்க பாருங்க , கேக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு , நீங்க அவசியம் அவரை போய்  பாருங்க ன்னு சொல்லிட்டு ,
சொவர்ண பைரவர் காலன்டர் , ரெண்டு பக்கமும்  நாய் தலை இருக்கற பைரவர் போட்டோ , வைரவ வணக்கம் ங்கற புத்தகம் , இத்தோட அந்த ஆன்மீக ஆராய்ச்சி புத்தகம் இதெல்லாம் இலவசமாவே கொடுத்து , மறக்காம ஊருக்கு போனதும் RESUME ஐ அனுப்பி வைங்க ன்னு சொல்லி வழி  அனுப்பினர் 

(எனக்கு அப்போ கூட பைரவர் யார் என்னன்னு தெரியலை)

கெட்ட நேரத்துலயும் ஒரு நல்ல நேரம் ங்கற மாதிரி நான் அந்த நிலையிலும் கோவிலுக்கு போறதை நிறுத்தவே இல்லை . கடவுள் மேல கொலை வெறியில்தான் கோவிலுக்கே போவேன் . எனக்கு கெட்டது இருந்தா அதுக்கு எதிரான ஒரு நல்ல சக்தி இருந்தே தீரும் ன்னு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது , அதை ஒரு நாள் அடைவோம் ங்கற நம்பிகையும் இருந்தது , அது தான் என்னை தற்கொலைக்கு போக விடாம தடுத்து
 
ஊருக்கு வந்ததும் ஒரு வாரத்துல திருச்சி ல SBI பரீட்சை க்கு போனேன் , பரீட்சை முடிஞ்சு ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு போலாம்ன்னு தோனுச்சு , முதல் தடவையா போனேன் , அப்படியே திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கும் போய் வணக்கிட்டு வந்தேன் .

அடுத்த 3 நாள்ல எங்க அப்பாவுக்கு LOW BP , ரொம்பவும் சீரியஸ் ஆன நிலை , 3 நாலா ஹாஸ்பிட்டல் ல அட்மிட் பண்ணி இருந்தோம் , அப்போதான் என்ன பண்றது ன்னு தெரியாம , திருச்சி ல ஒருத்தர் அட்ரஸை கொடுத்தாங்களே அவர் கேட்டு பாக்கலாம் ன்னு தோனுச்சு ,
போன் பண்ணேன் , 
என் பெயர் , ஊர் பெயர் சொல்லி என்னை அறிமுக படுத்திகிட்டு , சென்னை ல  அந்த பெரியவர் உங்க அட்ரஸை கொடுத்து , அவர் உங்களை காப்பாத்துவார் ன்னு சொல்லி உங்களை பார்க்க சொன்னார் சார் ன்னு சொன்னேன் 


நான் செய்ய ஒண்ணும் இல்லை எல்லாம்  பாபா பாத்துக்குவார் , கிளம்பி வாங்க ன்னு சொன்னார் .


அந்த அட்ரசுக்கு போய் பார்த்தேன் , அது ஒரு apartment , எங்கோ இருந்து பைக் ல ஒருத்தர் வந்தார் 

TRICHY TIRUVANAIKAAVAL
 என்  குருநாதர் சாய்பாபா உபாசகர் விஸ்வநாதன் சார்

நீங்கதான் போன் பண்ணீங்களா , உள்ள வாங்க ன்னு கூப்பிட்டார் , எனக்கு சந்தேகம் , பாக்கறதுக்கு சராசரி மனிதரை போலதானே தெரிகிறார் ,  இவர்கிட்ட நம்மளை பத்தி எதுவும் சொல்ல கூடாது ,இவர் யார் எப்படி ன்னு முதல்ல தெரிஞ்சுக்கணனும் ன்னு  பேசாம அவர் முன்னாடி உக்கார்ந்தேன் , வீட்டை சுத்திலும் சாய் பாபா போட்டா வா இருந்தது , கிட்டத்தட்ட் அவரை ஆழம பாக்கணும் ன்னு நினைச்சிருந்தேன்.

நான் ஏற்கனேவே அருள்வாக்கு வாக்கு சொல்றவங்க , குல தெய்வத்துகிட்ட பேசறவங்க , அவிகிட்ட பேசறவங்கன்னு 10 க்கும்  அதிகமானவங்க கிட்ட அருள் வாக்கு கேட்டு ஓரளவு தெரிஞ்சு வச் சிருந்தேன் அதெலாம் பயத்த கொடுத்தலா தான் தீர்வை தேடி அலைஞ்சேன் ,
ஆனா இவர் ரொம்ப சிம்பிளா , சாதரணமா இருந்தார் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போயி , தண்ணி கொடுத்தார் . வீடு முழுக்க சாய்பாபா படமா மாட்டி இருந்தது , HALL ல ஒரு பெரிய சாய்பாபா சிலை இருந்தது ,என் பேரு என்னன்னு கேட்டார் , நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ன்னு கேட்டார் , சார் நான் BANK EXAM க்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன் ன்னு சொன்னேன் , இதை தாண்டி என்னை பத்தியோ , என் குடும்பத்தை பத்தியோ நான் எதுமே சொல்லலை 


கண்ணாடியை கழட்டிட்டு பாபா சிலையை பார்த்துட்டு என்னை பார்த்து சொல்ல ஆரம்பிச்சார் 


உங்க வீட்டுக்கு பக்கத்துல எதாவது காளி கோவில் இருக்கா ன்னு கேட்டார் , சார்  வீட்டை சுத்திலும் 3 கோவில் இருக்கு சார்  ன்னேன்

வீட்டை ஒட்டி எதாவது கோவில் இருக்கா ன்னு கேட்டார் 

இல்லை சார் வீட்டுக்கு பின்னாடி தான் சார் இருக்கு ன்னு சொன்னேன்

நான் அதை சொல்லை உங்க வீட்டை ஒட்டி வலது பக்கம் ஒரு கோவில் என் கண்ணுக்கு தெரியுதே ன்னு சொன்னார் 

சார் எங்க  வீட்டை ஒட்டி ஒரு வீடு தான் சார் இருக்கு ,

நான் அதை தான் சொல்ல வந்தேன் , அவங்க வீட்டுல ஒரு காளி உருவ சிலையை வச்சிஇருக்காங்க , அந்த பூசாரி ரொம்ப சரி இல்லையே , நிறையா மோசமான வேலையெல்லாம் செய்யறானே ன்னார் 

அவங்க காளி சிலையை வச்சி நிர்வாணமா பூஜை பண்ணிக்கிட்டு  மாந்திரீக வேலையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்க 

எப்படி மாந்திரீகம் பண்றாங்க ன்னும் சொன்னார் , அதையெல்லாம் நேர்ல பார்த்த மாதிரி சொல்லிக்கிட்டு இருந்தார் 

எழுதலாமா வேண்டாமா ன்னு தெரியலை 

அவங்க வீட்டுல 3 குட்டி சாத்தான் இருக்கு அவங்க அதை வச்சு வேலை வாங்குறாங்க , ஒருத்தர் மேல ஏவி விடுவாங்க , இவங்க சொல்ற எந்த  வேலையையும்  அது செய்யும்

அது வரைக்கும் இருந்த எனக்கு இருந்த பயம் ரொம்ப அதிகமா ஆயிடுச்சு 

 ஒருத்தர் வீட்டுல சுடுகாட்டு சாம்பலை தூவி விடுவாங்க , முட்டைக்குள்ள மந்திரம் மூலமா அந்த குட்டி சாத்தானை அடைச்சு அதை ஒருத்தர் வீட்டுல தூக்கி போட்டால் , அது அந்த வீட்டுல இருக்கறவங்களை ஆட்டி படைக்கும் , அப்படி தான் உங்க வீட்டுலயும் பண்றாங்க , 

அதெல்லாம் அவங்களை பாதிக்காதா சார் ன்னு கேட்டப்போ , அவங்க முதல்ல அவங்களுக்கும் , அவங்க வீட்டுக்கும் காப்பு போட்டுக்கிட்டு தான் இந்த வேலையே செய்ய ஆரம்பிப்பாங்க
 இவங்க நல்லா இருக்கங்களே எப்படி சார்  அது ன்னு கேட்டப்போ 

நீங்க தான் அப்படி நினைச்சிகிட்டு இருக்கீங்க , அவங்க உங்களை விட ரொம்ப மோசமா பாதிச்சிருக்காங்க, அவங்ககளுக்கு முறையான தூக்கம் இருக்காது , ஒரு நல்ல விசயத்தை பத்தி யோசிக்க முடியாது , அவங்க வெளி பார்வைக்கு தான் நல்லா இருக்கற மாதிரி தெரியும் , ஆனா கீழ்தரமான  வேலையைத்தான் செஞ்சுகிட்டு இருக்காங்க , அந்த வீட்டுல இருக்கற பொம்பளை பஸ் ல மையை தடவி நகையை திருடிகிட்டு இருக்கா ன்னு சொன்னார் ,

சார் அதுக்கு அவசியமே இல்லை , ஏன்னா அந்த பொம்பளை ஒரு ஸ்கூல் டீச்சர் , கை நிறைய சம்பாதிக்கற பொம்பளை ன்னு சொன்னப்போ 

இல்ல அவங்க வச்சியிருக்கற குட்டி சாத்தான் அந்த வேலையை செய்ய வைக்கும் , மதி மயக்கி ங்கற மூலிகையை வச்சி மை தயாரிச்சி மாந்த்ரீகம் மூலமா பண்றாங்க , அதை ஒருத்தர் மேல தடவினா , அவங்களே நகையை யெல்லாம் கழட்டி கொடுத்திடுவாங்க , ஒருத்தரோட  நினைவை தற்கலிகமாகவும், நிரந்தரமாவும் இழக்க வைக்க அந்த மையல முடியும் ன்னு சொன்னார் , என்னாலேயே நம்ப முடியலை , இதை நான் சொன்ன யாரு நம்ப போறான்னு நினைச்சுகிட்டேன் , ஏன்னா ஒருநாள் எங்க வீட்டு மாடில ஒரு பொருளை பார்த்தேன் , அதுல நடுவுல ஏதோ மை மாதிரி ஒண்ணு இருந்தது , எனக்கு சந்தேகமும் குழப்பமும் வந்தது , அதை அப்படியே தூக்கி போட்டுட்டு மறந்துட்டேன் , இவர் சொல்லவும் எனக்கு அந்த ஞாபகம் தான் வந்தது .
வெளிபடையா நல்லா இருக்கற மாதிரி தான் தெரியும் , ஆனா கீழ்தரமான வாழ்க்கை வாழ்ந்து கிட்டு இருப்பாங்க 

அதெல்லாம் சரி சார் ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது , ஊருலயும் , இங்கயும் அதே போல பக்கத்துக்கு வீட்டுக்காரங்க மாந்திரீகம் தெரிஞ்சு அதை எங்க மேல பிரயோகம் பண்ணும் ன்னு கேட்டேன் , அது உங்க கர்ம வினை.

சார் எங்க அக்கம் பக்கத்துல இருக்கறவங்க எல்லாம் நல்லா இருக்காங்க , நாங்க மட்டும் கஷ்டபடரோமேன்னு கேட்டப்போ , நீங்க தான் அப்படி நினைசுகிட்டு இருக்கீங்க , உங்க அக்கம் பக்கத்துக்கு வீட்டுல உள்ள எல்லாரும் ஏதோ ஒரு விதத்துல ஒவ்வொரு மாதிரியான கஷ்டத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க அதை நீங்க உணரலை , அவ்வோலோதான் , அவங்க கர்ம வினை மோசமா இருக்கு அதனால தான் அப்படி ஒரு குடும்பம் அங்க வந்து சேர்ந்தது , சார் இதுக்கு என்ன பண்றது ன்னு கேட்டேன் , பாபா இருக்கார் , அவர் பாத்துக்குவார் , கிளம்பும் போது சொல்றேன் ன்னு சொல்லிட்டு ,சரி இந்த விஷத்தை பத்தி இத்தோட நிறுத்திக்குவோம் வேற விஷயம் பேசலாம் ன்னு ஆரம்பிச்சார் 

எங்க கர்ம வினை என்ன அவ்வளவு மோசமா இருக்கு ன்னு கேட்டப்போ

இதுக்கு முன்னாடி யாராவது  உங்களுக்கு பெண் சாபம் இருக்கு ன்னு அருள்வாக்கிலையோ அல்லது ஜோதிடத்திலையோ சொல்லியிருக்காங்களா ன்னு கேட்டார் ,
சார் இதுவரைக்கும் அருள் வாக்கு சொன்ன அத்தனை பேரும் அதை தான் சொன்னங்க , ஆனா என்னன்னு தான் யாரும் இதுவரைக்கும் சொல்லலை ன்னு சொன்னேன் 

உங்க குடும்பத்துல 4 தலைமுறைக்கு முன்னாடி ஒரு பெண் கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணிகிட்டாங்க , அந்த பெண் இறந்து ரொம்ப நாள் கழிச்சு தான் அவங்க உடலை கண்டுபுடுச்சாங்க , உயிர் விட்டும் அந்த உயிர் அந்த உடலை அடைய முடியாம , அந்த உடலையும் அழிக்காம வச்சி இருந்ததால ஏற்பட்ட பிரேத சாபமும் , அந்த பெண்  தற்கொலை பண்ணிகரதுக்கு முன்னாடி வயிரெஞ்சு விட்ட சாபமும் சேர்ந்து அவங்க வம்சவளியான உங்களை தாக்குது , அத்தோட உங்க முன்னோர்கள் மாந்திரீகம் மூலமா நிறைய பாவங்களை செய்திருக்காங்க , எல்லாம் சேர்ந்து உங்களை தலை தூக்க முடியாத அளவுக்கு பண்ணிக்கிட்டு இருக்கு 

இதுக்கு எதாவது வழி இருக்கான்னு கேட்டப்போ, ராமேஸ்வரத்துல திருப்புல்லாணி கரையில திலா ஹோமம் பண்ணுவாங்க அங்க போய் ஹோமம் பண்றதுதான் ஒரே வழி , அதையும் உங்க வீட்டுல உள்ள பெரியவங்க தான் பண்ணனும் , அதுக்கு நிறைய தடை வரும் .

அதாவது அகால மரணம் அடைஞ்சவங்க  ஆன்மா ( இயற்கையான மரணம் தவிர்த்து மற்ற எல்லாமே ) இந்த திலா ஹோமம் பண்ணாமல்  மறுபிறவி அடையாது , அதனால அந்த ஆன்மா அவங்களோட வாரிசுகளை அதை செய்ய வக்கிரத்துக்காக நிறைய துன்பத்தை ஏற்படுத்தும் , அவங்க ஜாதகத்துல பிதுர் தோஷத்துக்காண அடையாளத்தோட குழந்தைகள் பிறப்பாங்க , திடீர் விபத்து , சரியான வயதுல வேலையோ , திருமணமோ அமையாது , கணவன் மனைவியை சேர விடாது , மாந்திரீக பாதிப்பு ஏற்படுத்தும் , காரணம் சொல்ல முடியாத வியாதி , உடல் துன்பத்தை அனுபவிப்பாங்க , குடும்பத்துல அமைதியே இருக்காது . அந்த பரிகாரத்தை செய்ய வைப்பதற்க்காக அந்த அகால மரணம் அடைந்த ஆன்மா இந்த வேலையெல்லாம் செய்யும் . இந்த திலா ஹோமத்தை செய்தாலே உங்க துன்பம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்திடும் .

அதுக்கு முன்னாடி வேற பரிகாரம் பண்ணனும் அதையும் அப்பறம் சொல்றேன் 

சரி இந்த விபத்து உங்களுக்கு எப்படி ஏற்பட்டது ன்னு கேட்டார் , 10 வருசத்துக்கு பஸ் ல முன்னாடி காலேஜ் போகும் போது எதிர் ல வந்த டிப்பர் லாரி நான் போன  பஸ்ஸோட உரசிட்டான் , அப்போ பஸ் ல எனக்கு மட்டும் அடி பட்டது ன்னு சொன்னேன் 

உங்களுக்கு அடி படறதுக்கு 10 நிமிசத்துக்கு முன்னாடி நீங்க உக்கார்ந்திருந்த சீட்டுக்கு அடியில ஒரு நாய் அடிபட்டு செத்து போனது உங்களுக்கு தெரியுமா ன்னு கேட்டார் 

(எனக்கு அதிர்ச்சியா தான் இருந்தது , ஏன்னா நான் ட்ரைவர் சீட்டு வரிசையில , கடைசில இருந்து 3 வது சீட்டுல ஜன்னல் ஓரத்துல உக்காந்து இருந்தேன் )

நான் எனக்கு ஏதும் தெரியாது சார் ன்னு சொன்னேன் , 

அந்த நாய் அடிபடலன்னா நீங்க இப்போ உயிரோட இருந்திருக்க மாட்டீங்க ,பைரவர் தான் உங்களுக்காக அந்த நாயை அனுப்பி உயிர் பலியை ஏத்துகிட்டார் , அவருக்கு எப்பவும்  நன்றி சொல்லுங்க ன்னு சொன்னார் 


எனக்கு அப்போ கூட பைரவர் யார் என்னன்னு தெரியலை

  உங்கப்பாவுக்கு இப்ப உடம்பு  எப்புடி இருக்கு ன்னு கேட்டார் ,( அப்பாவுக்கு உடம்பு சரியில்லாது இவருக்கு எப்படி தெரியும் ன்னு ஆச்சரியமா இருந்தது ) இப்போ பரவாயில்லை சார் ன்னு சொன்னேன் ,

நேத்து உங்க அம்மா வழியில ஒரு பெண் இறந்து போனாங்க உங்களுக்கு தெரியுமா ன்னு கேட்டார் , நான் தெரியாதுன்னு சொன்னேன் , அந்த பெண் இறந்து போகலைன்ன இந்நேரம் உங்க அப்பா இருந்திருக்க மாட்டார் ன்னு சொன்னதும் மிரண்டு போய்ட்டேன் 

உங்க அண்ணி கர்பமா  இருக்காங்க இல்லையா அவங்கள பத்திரமா பாத்துக்க சொல்லுங்க உங்க அண்ணன் கிட்ட , ஏன்னா குட்டிச்சாத்தானுக்கு கருவுல இருக்கற உயிர் தான் ரொம்ப புடிச்ச தீனி  ன்னு சொன்னார் 

நான் அவர் கிட்ட என் பேர் மட்டும் தான் சொன்னேன் , அதை தவிர வேற எதையுமே சொல்லலை , ஏன்னா நான் அவரை  உண்மையா இல்ல போலி யா ஆழம் பார்த்துட்டு தான்  என்னை பத்தியும் என் பிரச்சனையை பத்தியும் சொல்லணும் ன்னு நினைச்சேன் , அதுக்கு அவசியமே இல்லை ங்கற மாதிரி அவராவே எல்லா விசயத்தையும் சொல்லிட்டார் ,

அப்பறம் எனக்கு மட்டுமே தெரிஞ்ச என்னை பத்தின விசயமும் , நான் செய்த செயல்களையும் சொன்னார் .

நான் அவர் கிட்ட எதையுமே சொல்ல வேண்டிய அவசியமோ / தேவையோ இல்லாமல் போய்விட்டது (இன்றவரை )
 
அதாவது அவர் கிட்ட நான் சொல்றதுக்கு எதுவுமே இல்லைன்னு ஆயிடுச்சு , அவர் சொல்ற எதையும் என்னால மறுக்கவும் முடியலை , எதையும் மறைக்கவும் முடியலை , நான் மனசுல கேக்க தயங்குன கேள்விக்கு அவர் பதிலும் விளக்கமும் குடுத்து கிட்டு இருந்தார் , எனக்கு தெரிஞ்ச விஷயம் வரைக்கும் அவர் சொன்னது எல்லாமே 100 சதவீதம் உண்மை, அதுல எனக்கு மாற்று கருத்து இல்லை .

இன்னும் நிறைய பூர்விக ரகசியங்களை சொன்னார் அதெல்லாம் ரொம்பவும் பர்சனலான  விஷயம் அதையெல்லாம்  எழுத முடியாது 

திடீர்ன்னு சம்பந்தமே இல்லாம எவ்வளவோ நல்ல சாத்வீகமான தெய்வங்கள் இருக்கையில ஏன் இந்த அளவுக்கு மோசமான ஒரு தெய்வத்தோட உபாசனையை வாங்குறீங்க ன்னு கேட்டார் , எனக்கு ஒண்ணும் புரியலை , 

சார் நீங்க சொல்றது எனக்கு ஒண்ணும் புரியலை சார் ன்னு சொன்னேன் , பின்னால புரியும் ன்னு சொன்னார் 

அதாவது இந்த விசயத்துல இருந்து இன்ன வரைக்கும் என்கிட்ட எதிர் காலத்துல நடக்கறதை மட்டும் தான் சொல்லுவார் , கடந்த கால விசயத்தை பத்தியோ , நிகழ் காலத்தை பத்தியோ கூட பேசறதே இல்லை , எதாவது ரெண்டு வார்த்தை சொல்லுவார் அது என்னோட 6 மாத வாழ்க்கையோட சுருக்கத்தை குறிக்கும் , ( பின்னாடி பாபா சத் சரித்தரத்தை படிக்கும் போது தான் பாபா எதிர்காலத்துல நடக்க இருக்கறதை  இப்படி தான் குறிப்பால சுருக்கமா உணர்த்துவார் ன்னு புரிஞ்சது )

உங்களுக்கு 48 நாள் பூஜை பண்ணனும் , 2000 ரூபா செலவாகும், நாளை ல இருந்து சரியா 49 வது நாள் கழிச்சு வந்து வாங்கிக்குங்க ன்னு சொன்னார் 
என் கிட்ட 500 ரூபாதான் இருக்கு ன்னு சொன்னேன் , பரவாயில்லை மீதியை என் அக்கௌன்ட் ல போட்டிருங்க ன்னு சொல்லி அக்கௌன்ட் நம்பர் கொடுத்தார்எனக்கு அவர் கேட்ட தொகை ரொம்ப கம்மியா தெரிஞ்சது , இருந்தாலும் அவர் மேல எனக்கு தீர்க்கமான நம்பிக்கை ஏற்பட்டது , நான்  என் பிரச்சனைக்கு தீர்வுன்னு 5 வருஷமா தமிழ்நாடு, கேரளான்னு நிறைய பணத்தை இழந்து தேடிக்கிட்டு இருந்தது இவரை தான் மனசுக்கு பட்டது என்ன ஆனாலும் இவரை விட்ரகூடாதுன்னு அப்போவே முடிவு பண்ணிட்டேன் , இவர் மூலமா தான் இந்த துன்பத்துள இருந்து நம்மளை வெளியேற்ற  முடியும்ன்னு அப்போவே முடிவு பண்ணிட்டேன்

( ஏன்னா நான் தீர்வு ன்னு தேடி போனவங்க எல்லாருமே குறைஞ்ச பட்சம் 10 ஆயிரம் ரூபா யாவது என் கிட்ட கேட்டாங்க , அதுவும் கொல்லி மலை அடிவாரத்துல ஒருத்தன் கிட்ட தீர்வை தேடி போனப்போ 3 மாசத்துக்குள்ள அதை பண்றேன் , இதை பண்றேன் 25 வரைக்கும் புடுங்கி கிட்டான் , நானும் அவன் காசு  கேட்டப்போ ல்லாம் விருப்பமே இல்லாம கொடுத்திருக்கேன் , இந்த ஆள் மூலமா எந்த நன்மையும் ஏற்பட போறது இல்லை ன்னு தோனுச்சு , இப்படியே யார் கிட்ட போயும் என் பிரச்சனைக்கு காரணமும் தெரியலை , தீர்வும் தெரியலை , இப்படியே எந்தனை பேருகிட்ட தான் பணத்தை இழக்கறது ன்னு பேசாம நாமலே மாந்த்ரீகம் கத்துக்கிட்டு நாம பிரச்சனைய தீர்த்துக்கலாம் ன்னு தவறான ஒரு முடிவை எடுத்துட்டேன் )

நீங்க இந்த 3 பரிகாரத்தையும் அவசியம் செய்தே ஆகணும் ன்னு சொன்னார் 

1 )  21 சனிகிழமை கால பைரவருக்கு பூசணிக்காய் ல விளக்கு போட்டு வரணும்  , எந்த நேரத்துல வேண்டுமானாலும் போடலாம் , கடைசி சனிகிழமை மட்டும்  பைரவருக்கு தயிர் சாதமும் , வடை மாலையும் நிவேதனமாக படைக்கவும் ( அந்த  21 வது வாரம் முடிஞ்ச அடுத்த வாரத்துல ஒரு நாள் அண்ணிக்கு டெலிவரி டைம் டாக்டர் சொல்லியிருந்தாங்க )

2)  இங்க திருச்சி ல கோர்ட்டு க்கு எதிர்ல இருக்கற ஐயப்பன் கோவில்ல தினமும் கணபதி ஹோமம் செய்வாங்க , அங்க 15 நாளைக்கு ஒரு முறை உங்க அப்பா பேர்ல முதல் நாள் பணம் (75 ரூபாய் ) கட்டி , அடுத்த நாள் காலைலக்குள்ள போய் பிரசாதத்தை வாங்கி வீட்டுல வச்சிருங்க போதும் ( அந்த பிரசாதத்துல அவல் , பொறி , காலைல பண்ண யாகத்துல இருந்து எடுத்த சம்பல் மூலம் செய்த மையை  ஒரு குங்கும டப்பாவுல வச்சி தர்றாங்க , இதே முறையில ஆறகளூர் காலபைரவர் சன்னதி ல தேய்பிறை அஷ்டமி பூஜை முடிஞ்சு அப்போ செய்த யாக சாம்பலை மையாக்கி பக்தர்களுக்கு விநியோகிகிறாங்க , நண்பர் ஒருத்தர் ஒவ்வொரு மாசமும் வாங்கி கொண்டு வந்து கொடுப்பார் )

3) தினமும் இரவு முழுவதும் எறியற மாதிரி விளக்கு ஏற்றவும் .

இந்த 3 விசயத்தையும் செய்துகிட்டே வாங்க ன்னு சொல்லி வழி அனுப்பினார் , எனக்கு மனசு முழுதும் நிறைவா ரொம்ப சந்தோசமா இருந்தது 

எனக்கு தெரிஞ்சு 20 வருஷமா எங்களை பாதிச்சுகிட்டு இருந்த பிரச்சனை என்ன , அதுக்கு காரணம் என்ன , தீர்வும் என்னன்னு சொல்லிட்டார் .

நேரா ஸ்ரீ ரங்கம் போய் ரங்கநாதரை வணங்கிட்டுவீட்டுக்கு வந்து என் அண்ணன் கிட்ட இப்படி ஒருத்தரை சந்திச்சேன் ன்னு விஷயத்தை சொன்னேன் , அவர் கிட்ட நேத்து அம்மாவோட சொந்தகாரங்க யாராவது இறந்து போயிட்டாங்களா ன்னு கேட்டப்போ ,

அட ஆமாண்டா நேத்து  மதியம் 3 மணிக்கு ஒரு போன் வந்தது யாரோ அம்மாவோட பங்காளி குடும்பமாம் , அம்மாவுக்கு தங்கச்சி முறையாம் ஒருத்தர் இறந்து போய்ட்டாங்க ன்னு போன் வந்தது , நீ அப்போ  அசந்து தூங்கிட்டு இருந்தியா அதான் உன்கிட்ட சொல்லலை ன்னு சொன்னார் .

அடுத்த நாள் நெட் ல போய் பைரவர் ன்னா யார் என்னான்னு தகவலை தேட ஆரம்பிச்சேன் பைரவர் போட்டவை எல்லாம் பார்த்தேன் , பைரவரை பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டேன்  , வீட்டுக்கு வந்து பார்த்தப்போ தூக்கி வாரி போட்டது , ஹால் ல நான்  நெட் ல பார்த்த ஒரு பைரவர் போட்டா இருந்தது அது நான் ரூம் போட்டு மந்திரம் சொல்லலாம்ன்னு இருந்தப்போ ஆஞ்சநேயர் கோவில் வாசல்ல வாங்குன ஏதோ ஆக்ரோஷமான முனியோட போட்டோ நினைச்சுகிட்டு இருந்த போட்டோ , குடுவையை மட்டும் ஆத்துல  தூக்கி போட்டுட்டு இந்த போட்டவை ஹால்ல யே வச்சிட்டு மறந்துட்டேன் ,

 எனக்கு அப்போ அவர் பைரவர் தான் உங்களை பஸ் விபத்துல இருந்து காப்பாத்தினார் ன்னு அருள் வாக்கு சொன்னது நினைவுக்கு வந்தது 

எனக்கு பைரவர் மேல மரியாதையும் , பயமும் இருந்தது , காரணம் பைரவரை கும்பிடுகிரவங்க எல்லாம் அகோரி மாதிரி ஆயிடுவாங்க , பிணத்தை திம்பாங்க , அப்போ நானும் அந்த மாதிரியே ஆயிடுவேனா ன்னு பயம் 

நான் வேலை வேட்டிகே போகாததால மாந்திரீகம் சொல்லி தர்ற இடத்துக்கே போயிட்டேன் சும்மா இருக்கறதால வேற எங்க போறதுன்னு தெரியலை 

அங்க மறுபடி போக ஆரம்பிச்ச நாள் ல இருந்து மூளை முன்னாடி இருந்த நிலையை விட மோசமா ஆரம்பிச்சது 

எங்களுக்கு இப்படி மாந்த்ரீகம் பண்றாங்க அதை நான் இப்படி கண்டு பிடிச்சேன்ன்னு எங்க எதிர் வீட்டுல இருக்கறவங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் சொல்லற மாதிரி தொடர்ந்து கற்பனை பண்ணிகிட்டே இருப்பேன் , ஏன் இப்படி கற்பனை பண்றேன்னு ஒருநாளைக்கு அதிக பட்சமா 3 முறை வரைக்கும் யோசிப்பேன் , ஆனா அடுத்த நொடியே மறுபடியும் கற்பனை பண்ண ஆரம்பிச்சுருவேன் , கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனோட ஆரம்ப நிலை அது , ஒருத்தர் என்கிட்டே பேசும் பொது சரியா பேசுவேன் , யாரும் என்கிட்டே பேசாத போது நான் இப்படியே கற்பனை பண்ண ஆரம்பிச்சேன் 

ஒருநாள் மாந்த்ரீக வகுப்புல ஒரு சிவ ராத்திரி அன்னைக்கு எல்லாருக்கும் தீட்சை தர்றேன்னு சொன்னான் அந்த ஆளு , நானும் வீட்டுல frind கல்யாணத்துக்கு வெளியூருக்கு  போறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன் அதுக்கு அடுத்த நாள் திருச்சி ல சார் வர சொன்ன 49 வது நாள் 

அன்னைக்கு மட்டும் நான் தீட்சை வாங்க போகாம இருந்திருந்தா என் வாழ்கையில பேரிழப்பு எனக்கு ஏற்பட்டு இருக்காது , அன்னைக்கு நைட்டு எங்கெங்கோ இருந்து வந்து  நிறைய பேர் தீட்சை வாங்குனாங்க , அதுல பாதி பேர் பாக்க படிச்சி கவுரமான வேலைல இருக்கறவங்க மாதிரி தெரிஞ்சாங்க , அதுல ஒரு வயசான  ஆள் என்னை ரொம்ப பயமுறுத்தி விட்டுட்டான் ,  காளி தன்  கிட்ட பேசுவதாகவும், அந்த ஆள் ரெண்டு பூதத்தை வேலை வாங்கறதாவும் , தன்னோட அனுபவம் எல்லாத்தையும் 2 மணி நேரம் சொல்லிக்கிட்டு இருந்தான் , எனக்கு மரண பீதி உண்டாகிடுச்சு, அவன் சொல்ற பாதிப்புல  பாதிக்கும் மேல நானே அனுபவச்சிறுக்கேன் , ராத்திரி எல்லாருக்கும் தீட்சை கொடுத்தான் அந்த மாந்த்ரீகம் சொல்லி கொடுக்கற ஆளு , எனக்கு மோசமான தெய்வத்தோட தீட்சை அந்த ஆளு கொடுத்தான் ( அது என்னானு சொல்ல விரும்பலை அவ்வோளோ ஆபத்தான விஷயம் நான் சந்தித்த மாந்திரீக பிரச்சனையிலே மோசமான ஆபத்தான விஷயம் அது ) , அப்போதான் சார்  இதைதான் அப்போவே சொன்னாரான்னு எனக்கு தோனுச்சு , பயத்துல நான் பாபா காயத்திரி மந்திரத்தையும் , வேதாத்ரி மகரிஷி யோட அருட்காப்பை யும் சொல்லிகிட்டே இருந்தேன்

அடுத்த நாள் அங்க இருந்து நேரா சார் வீட்டுக்கு கிளம்பி போனேன் , என்னை அவர் அனுமதிக்கலை நான் வெளியூர் ல இருக்கேன் , நீங்க இன்னொரு நாள் வாங்க ன்னு சொன்னார் , சரி இது எதோ தப்பான விஷயம் போல அதுதான் அனுமதிக்கலை ன்னு கைல தேங்காய் எலுமிச்சை வாழை பழம் ன்னு நிறைய கொடுத்து இருந்தான் , அதை அப்படியே வந்து ஊர் ல இருக்கற விநாயகர் கோவில் ல வச்சிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன் அவர் என்னை வர சொன்ன அந்த 49 வது நாள் பௌர்னமி , அடுத்த நாள் பாட்டிமை ( பிரதமை திதி ) ல நான் அவரை பார்க்க போனேன்

நேர அவருடைய பூஜை அறைக்கு கூட்டிட்டு போனார் , வீடு முழுக்க பெரிதும் சின்னதுமா சாய் பாபா போட்டாவா இருந்தது ,
( அவர் இடத்துல நான் இருந்துத்திருந்தேன்னா கண்டிப்பா இன்னொருத்தரை என் பூஜை அறைக்குள்ள அனுமதிச்சியிருக்கவே மாட்டேன் )

1) இது கணபதி எந்திரம் வீட்டுல பூஜை அரையில வச்சிருங்க ,

2) இது பாபா ரட்சை எப்போதும் உடம்புல ஒட்டி இருக்கற மாதிரி           வச்சிருங்க


3) ஒரு மையை கொடுத்து இந்த மையை நெருப்பு குச்சி பின் புறத்துல லைட்டா தொட்டு  எடுத்தா எந்த அளவு வருமோ அதை உங்க உங்க வலது புருவத்தில தடவிக்கிங்க   , எந்த தீய சக்தியும் உங்க உடம்புல இறங்க முடியாது 

4) ஒரு பாலிதீன் கவர் ல மூலிகை பொடியை கொடுத்து இதை  ஒரு பால் ல மஞ்ச தூள் கலப்போம் இல்ல அந்த மாதிரி ஒரு செம்புல தண்ணி எடுத்து இந்த பொடியை கலந்து அதை வீட்டுல எல்லா பக்கமும் மாவிலை மூலமோ , வேப்ப இலை மூலமோ தெளிங்க , வீட்டுக்கு உள்ளேயும் தெளிங்க எந்த தீய சக்தியும் உங்க வீட்டுக்குள்ள நுழைய முடியாது 5) கம்ப்யூட்டர் சாம்பிராணி ல வெண்கடுகு  போட்டு அந்த புகையை வீடு முழுக்க பரவ விடுங்க , ஏன்னா வெண்கடுகு புகை தீய சக்தி கண்கள் ல பட்டால் அதுகளுக்கு கண்ணு தெரியாது சூட்சமமா இருக்கற தீய  சக்திகளால எதையும் பார்க்கவும் முடியாது , யாரவது ஏவி விட்டாலும் அதுங்களுக்கு யாரை பாலோ பண்றது ன்னு தெரியாம குழம்பி போய்டும்

அப்படின்னு கொடுத்துட்டு மறுபடியும் ஹால் க்கு கூட்டிட்டு வந்து பேச ஆரம்பிச்சார் 


அப்போ ஒருத்தர் அங்க வந்தார் , தன்னை ரிடைர்டு போலீஸ் ஏட்டு ன்னு அறிமுக படுத்திகிட்டார் , இப்போ  amway product ஐ விக்கற ன்னு சொன்னார்  என் கிட்ட என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ன்னார் , நான் பேங்க் பரிட்சைக்கி தயாரிகிகிட்டு இருக்கேன், மத்தபடி வேலைன்னு ஒன்னும் இல்லை ன்னு சொன்னேன் அவர் என்னை அவரை போலவே amway க்குள்ள இழுக்கற மாதிரி ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தார் , நான் விருப்பம் இல்லை ன்னு சொல்லிகிட்டே இருந்தேன்
சாரும் அவர் கூட போங்க அது உங்களுக்கு ரொம்ப நல்லது , நீங்க ரெண்டு பேரும் சந்திக்கற இந்த சந்திப்பு தானா நடக்கலை , நானும் அவரை வர சொல்லலை , அவர் வருவாருன்னும் எதிர்பாக்கலை, தானத்தான் வந்திருக்கார் , அவர் கூட போங்க ன்னு  சூசகமா சொன்னார்

சரி இவர் சொன்ன கண்டிப்பா ஏதோ காரணம் இருக்கும் ன்னு அடுத்த ஞாயிறு அவரை போய் பார்க்க போனேன் , அவர் நேர amway மீட்டிங் க்கு கூட்டிட்டு போய்ட்டார் , ஒரு வழியா மீட்டிங்  முடிஞ்சு வெளியே வந்து என்னை பஸ் ஏத்தி விடறதுக்கு முன்னாடி ஒரு டீ கடையில பேச்சு கொடுத்தார் ,

அன்னைக்கு நீங்க போனதுக்கப்பரம் உங்களை பத்தி சார் ரொம்பவும் அக்கறையா சொன்னார் , நீங்க ரொம்ப கஷ்டபடுறீங்க உங்களுக்கு உதவ சொன்னார் , கும்பகோணத்துல ஒருத்தர் ஆஞ்சநேயர் உபாசகர் இருக்காரு , அவர் கிட்ட உங்களை அழைச்சி கிட்டு போறேன் , என் பையனும் அப்படிதான் மாந்திரீகத்தால பாதிக்கப்ப பட்டான் அவனை அவர் கிட்ட கூட்டிட்டு போனேன் அவனை உக்கார வச்சு பூஜை பண்ணார் , இப்போ அவன் நல்ல இருக்கான் , ஒழுங்கா வேலைக்கு போய் சம்பாத்திக்காரன் , நீங்க அடுத்த வாரத்துல ஒரு நாள் வாங்க நான் உங்களை அவர்கிட்ட அழைச்சுட்டு போய் அறிமுக படுத்தி வைக்கிறேன் ன்னு சொன்னார் .

ஒருத்தர் கிட்டயும் ஒழுங்கா பூஜையோ பரிகாரமோ பண்ணாம இருக்கறதால , சரி நம்மள சார் கிட்ட இருந்து பிரிச்சு வேற எங்கோ மாட்டிக்கிவமோ ன்னு அவர் நம்பரை delete பண்ணிட்டேன் , ஆனா சார் தான் மறைமுகமா அனுப்பியிருக்கார் ன்னு அப்போ தெரியலை ( ஒருவேளை போயிருந்தா , என்னோட ஈடு செய்ய முடியாத பேரிழப்பு தடுக்க பட்டிருக்கும் , கர்மவினை அறிவை மறைச்சிருச்சி,  இன்னைக்கு பாபா புகழையும் , பைரவர் புகழையும் பத்தி எழுதி இருக்கற மாதிரி இந்நேரம் ஆஞ்சநேயர் புகழையும் சேர்த்து எழுதிகிட்டு இருப்பேன் )

இவ்வளோ தூரம் சொல்லியும் நாம கேக்கலை ன்னு அவர் நினைச்சுக்க கூடாது ன்னு சார் கிட்ட போய் நேர்லையே சொல்லிவிடலாம் ன்னு அவரை போய் பார்த்தேன் ,

சார் அவர் என்னை amway க்குள்ள இழுக்க பாக்கிறார் எனக்கு விருப்பம் இல்லை சார் ன்னேன் , பரவாயில்லை நான் அதுக்காக உங்களை அவர் கூட போக சொல்லலை 

சார் நான் ஒரு முறை கேரளாவுல ஒரு கோவிலுக்கு  போனப்போ அங்க ஆவி பிடிச்சவங்களை உக்கார வச்சு பூஜை பண்ணாங்க , அங்க என்னால நிக்கவே முடியலை , கை கால் எல்லாம் உதற ஆரம்பிச்சது , கூட வந்த நண்பனை அவசரமா வெளியே போலாம் ன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன் ன்னு சொன்னேன் 
என்னால இங்கயே ஆவியை விரட்ட முடியும் , ஆனா அதனால இப்போ  எந்த பிரயோஜனமும் இல்லை ன்னு சொல்லிட்டார்
 
சார்  நான் ஒரு இடத்துல 4 மாசமா மாந்திரீகம் கத்துக்க போயிட்டு இருக்கேன் ன்னு சொன்னேன் ,

அங்க போய்  நீங்க எதையும் தெரிஞ்சுக்க முடியாது , அந்த ஆளுக்கு பொழுது போகமா உங்களை நல்லா பயன் படுத்திக்கிட்டு இருக்கான் ,  அந்த இடத்தை விட்டு சீக்கரம் எதோ சொல்லி கிளம்புங்க , மறுபடியும் அங்க போகாதீங்க , உங்களுக்கு எதுக்கு இந்த இழிவான வாழ்க்கை ,  அது ஒரு வழி பாதை , அதுல போனவங்க யாரும் திரும்பி வரவே முடியாது ,போய் பிழைக்கற வழியை பாருங்க ன்னார் 

சார்  எனக்கு உங்களை மாதிரி ஆகணும் ன்னு ஆசை சார் , அதனால தான் வழி தெரியாம மாந்திரீகம் கத்துக்க போயிட்டேன் , என் நோக்கம் உங்களை மாதிரியே கடவுள் உதவியோட என் பிரச்னையும் தீர்த்துக்கணும் , என்னை போலவே பாதிக்க பட்டவங்க பிரச்சனையை யும் கடவுள் உதவியோட தீர்க்கணும் அதனால தான் சார் இப்படியெல்லாம் போய் மாட்டிகிட்டேன் ன்னேன் 

சரி 45 நாள் போகட்டும் நானே உங்களுக்கு சொல்லி தர்றேன் , நீங்க முதல்ல உங்க ஊர்ல இருக்காதீங்க வெளியூர் எங்காவது போங்க, வெண்கடுகு புகையை மட்டும் யாராவது விட்டு போட சொல்லுங்க ன்னு சொல்லி அனுப்பி விட்டார் 

நான் மாந்திரீகம் கத்துக்க போன இடத்துல அந்த ஆள் கிட்ட எனக்கு சென்னை ல வேலை கிடைச்சிருக்கு ன்னு போய் சொல்லிட்டு கிளம்பி போயிட்டேன் 


சென்னைல திருவான்மியூர் ல இருக்கற என் friend ரூமுக்கு போயிட்டேன்

சென்னைக்கு வந்து பைரவருக்கு என்னால பூசணிக்காய் ல விளக்கு போட முடியலை , அதனாலை என் அண்ணனையே பூசணி ல விளக்கு போடா சொல்லிட்டேன்
வந்து யோசிச்சு பார்த்தபோ தான் ஒரு உண்மை புலப்பட்டது நான் மாந்த்ரீகம் கத்துக்கலாம் ன்னு ரூம் போட்டபோ என்னையும் அறியாம பைரவர் போட்டாவை வாங்கிட்டு வந்தது , ஆன்மீககடல்.com வீரமணி அவர்கள் கிட்ட ஜோதிடம் கத்துக்க போயி அவர் எனக்கு சென்னை ல ஒரு  அட்ட்ரசை கொடுக்கிறார் , இவர் தீவிரமா பைரவர் புகழை இன்டர் நெட் ல பரப்பரவர் , சென்னை ல இருக்கறவரும் பைரவர் புகழை பரப்புறவர் அவர் குருநாதர் அட்ட்ரசை கொடுக்கிறார் , என் குருநாதர் சாய்பாபா உபாசகரும் பைரவர் புகழை சொல்லி பைரவருக்கு விளக்கை போட சொல்றார் .

அப்போ இந்த வழிபாடு ஏதோ ஒரு விதத்துல பைரவரே நம்ம கிட்ட சொன்னது , ஆக கடவுளே நம்மகிட்ட மறைமுகமா உணர்த்திய விஷயம் , நம்ம கூட இருந்திருக்கார் இதை நாம விட்ரகூடாது ன்னு சனிகிழமை அருள்மிகு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு போய் அங்க இருக்கற பைரவருக்கு விளக்கு போட ஆரம்பிச்சேன் , அந்த பைரவரை எப்போவும் கண்ணாடி திரை போட்டு மூடியே வச்சிருந்தாங்க ( காலைல 9 மணி வரைக்கும் தான் திறந்து இருந்ததை பார்த்திருக்கேன் ), ஏதோ ஒரு சந்தேகம் கேக்க குருநாதருக்கு போன் பண்ணப்போ அவர் எப்பவும் திறந்திருக்கற கடவுளுக்குதான் விளக்கு போடணும் , திரை யிட்டு இருக்கறப்போ விளக்கு போடா கூடாதுன்னு சொன்னார் .

எனக்கும் வேற எங்க போய் பைரவரை தேடறதுன்னு  அங்கேயே தொடர்ந்து விளக்கு  போட்டு வந்தேன் ,

அங்க போரடிக்குது ன்னு சுத்தி பார்த்தப்போ ஈன்ஞ்சம்பாக்கதுல ஒரு பாபா கோவிலை பார்த்தேன் , அடிக்கடி போக ஆரம்பிச்சேன் , ஒரு நாள் மதியம் போனப்போ கும்பல் நிறையா இருந்தது , ஏன்  பக்கத்துல இருந்த ஒருத்தரை கேட்டப்போ இன்னைக்கு வியாழகிழமை , பாபாவுக்கு உகந்த நாள் ன்னு சொன்னார் , அன்னைல இருந்து வியாழகிழமை பாபா வழிபாட்டை தொடர்றேன் 

என்னால ரூம் ல சும்மா இருக்க முடியலை என் friend க்கு IT WEB DEVELOPER வேலை , காலை ல போயிட்டு நைட்டு தான் வருவான் , பேங்க் exam க்கு prepare பண்ணலாம் ன்னு தயார் ஆனேன் , என் கிட்ட குருநாதர் கொடுத்த எந்திரமும் damage ஆயிடுச்சி , 

கொஞ்ச நாள் ல என்ன நினச்சேன் னு தெரியலை HANS ( புகையிலை ) போடற பழக்கத்த விட்டுட்டேன் ஒரு 15 நாள் கழிச்சு பார்த்தப்போ தான் ஒரு விஷயம் தூக்கி வாரி போட்டது , குருநாதர் 45 நாள் போகட்டும் நானே சொல்லி தறேன் ன்னு சொன்ன அந்த 45 வது நாள் ல அந்த பழக்கத்தை விட்டுட்டேன் , ஆன்மிகத்துக்கு அல்லது கடவுளை நெருங்க புகையிலை பெரிய எதிரின்னு அப்போதான் புரிஞ்சுகிட்டேன்
புகையிலை யை விட்டதும் சிகரட்டை வெறி புடிச்ச மாதிரி குடிக்க ஆரம்பிச்சேன் , சரி இதுவும் எதுக்கு ன்னு அந்த பழக்கத்தையும் ஒரு மாசத்துக்குள்ள விட்டுட்டேன், கொஞ்ச நாள் ல தண்ணி அடிக்கற பழக்கத்தையும் அடியோட விட்டுட்டேன் , கோழி கறி மட்டும் சாப்பிட்டு கிட்டு இருந்தேன் , அதையும் சேர்த்து அடியோட விட்டுட்டேன்
பரீட்சை ல இது வரைக்கும் எனக்கு என்னென்ன கேள்விக்கு எந்த மாதிரியான கேள்விக்கு விடை தெரியாது ன்னு நான் விட்டுட்டு வருவேனோ அந்த கேள்விகளை மட்டும் எடுத்து தயார் ஆனேன்


என் நண்பனோட லேப்டாப் ல நெட் இருந்து பேங்க் exam விஷயமா நிறைய விசயங்களை எடுத்தேன் , இதுக்கு முன்னாடி தேடுனப்போ ஒரு விசயமும் சிக்கலை , இப்போ பரிச்சைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே தேடி தேடி கண்டுப்புடிச்சேன் , மிக பெரிய முனேற்றம் என்  படிப்புல , கிட்டதட்ட பரிசை ல ஜெயிச்சுடுவேன் எனக்கே நம்பிக்கை வந்தது , ஒரு நாளைக்கு குறைஞ்சது 10 மணி நேரம் படிப்பேன் .
 20 வருசத்துக்கு  முன்னாடி SCHOOL FIRST STUDENT ஆ இருந்த என்னை திரும்பவும் உணர்ந்தேன்

அதே சமயம் என் அண்ணனும் இங்க ஊர்ல வேலையை விட்டுட்டு GROUP 2 எக்ஸாம் க்கு தயார் ஆனார் , நான் அங்க எந்த அளவுக்கு பண்ணானோ அதை விட கடுமையா படிச்சார்  , அவர் விடாம மோகனூர் ல இருக்கற கால பைரவருக்கு பூசணிக்காய் ல விளக்கு போட்டு வந்தார்

ஏதோ என் வாழ்கையை மீட்டு எடுத்த மாதிரி இருந்தது , எனக்கு ஜோதிடம் தெரியம்ங்கரதால என் நண்பன் அவன் ஜாதகத்தை காண்பிச்சான் , எனக்கு அதிர்ச்சியா இருந்தது , அவன் ஏன் என்னுடைய நெருங்கிய நண்பனா எவ்வோளோ நாள் இடைவெளி விட்டும் இத்தனை வருஷமா நண்பனா இருக்கான் ன்னு தெரிஞ்சது , அவன் 11 வது , 12 வது school படிக்கும் பொது ரெண்டு பேரும் ஒரே பெஞ்சுல பக்கத்துல உக்கார்ந்து இருந்தோம்( என் வாழ்க்கைல மோசமான கால கட்டம் )

நான் மிதுன லக்கினம், கும்ப ராசி  --- அவன் மேச லக்கினம் , மகர ராசி 

எனக்கு 3 க்குரிய சூரியன் 5 ம் இடத்துல நீசம் , அவனுக்கு 5 ம் இடத்துல சூரியன் ஆட்சி


 எனக்கு புதன் லக்கன அதிபதி அவனுக்கு புதன் 6 ம் இடத்துல ஆட்சி உச்சம்

என்னோடுடைய இவன் உட்பட 4 நெருங்கிய நண்பர்கள் மேச லக்கினம் , மகர ராசி அல்லது மகர லக்கினம் , மேச ராசி , 

மத்தவங்களை  விட இவங்க எனக்கு நெருங்கிய நண்பர்களா இருக்காங்க இவங்க எனக்காக என்னவேணாலும் செய்யறாங்க . இது என்ன கான்செப்ட் ன்னு என்  அறிவுக்கு எட்டலை

எங்க ரூம்க்கு ஒருத்தன் எங்களை 2 வயசு சின்ன பையன் ஒருத்தன் வேலை தேடி எங்க ஊருல இருந்து வந்தான் அவன் ஒரு  முஸ்லிம்

ஒரு நாள் நான் ஜோதிட புத்தகத்தை வச்சியிருந்ததை பார்த்து எனக்கெல்லாம் ஜோதிடம் பார்பீங்களா ன்னு கேட்டான் , உயிரல்லாத கட்டடத்துக்கே ஜோதிடம் பாக்கறப்போ உனக்கென்ன , உன் DETAIL ஆ கொடு ன்னு வாங்கி ஜாதகத்தை பார்த்தப்போ எனக்கு உண்மையிலே பேரதிர்ச்சியா இருந்தது இப்படியெல்லாம் நடக்குமான்னு

  
அவன் மிதுன லக்கினம் --  மகர ராசி

அதாவது என்னுடைய லக்கினம் , என் நண்பனுடைய ராசி  3 ம் இடத்துல சூரியன் ஆட்சி , லக்கின அதிபதி புதன் ( இவனுக்கும் ) ஆட்சி உச்சம் , ராசியாதிபதி சனி ஆட்சி உச்சம் .


என்னோட ஜாதகத்துல லக்கினம் (மிதுனம் )- புனர்பூசம் நட்சத்திரம் , ராசி (கும்பம்  )- பூரட்டாதி நட்சத்திரம் , குரு பகவான் 5 ம் இடத்துல - விசாகம் நட்சத்திரம் ன்னு மூணுமே குருவோட நட்சதிரதுல இருக்கு , லக்கினத்தை 9 ம் பார்வையாகவும் , ராசியை 5 ம் பார்வையாகவும் குரு பார்கிறார் , இந்த சிறப்பு ஒன்னை தவிர மீதி எல்லாமே என் ஜாதகத்துல மோசமான அமைப்பு  அதனாலதான் என்னவோ குருவருளால நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் ன்னு தோணுது 
  

இது ஏதோ தெய்வீக வேலைதான் ன்னு தோனுச்சு , மந்திரம் எந்திரம் இதெல்லாம் கெட்ட வேலையத்தான் செய்யும் ன்னு கேள்வி பட்டிருக்கேன் , பாதிப்பை அனுபவிச்சும் இருக்கேன் , முதல் முறையா நல்ல வித முன்னேற்றதை அனுபவிச்சேன் 

எங்க 3 பேருக்கும் ஒரு வளர்ச்சி , நான் கிட்டதட்ட 5 பரிச்சைல 80 % க்கும் மேல சரியா பண்ணிட்டு ரிசல்டுக்காக காத்திருந்தேன் , அந்த முஸ்லிம் பையனுக்கு 10 நாள் ல யே வேலை கிடைச்சிருச்சு , என் நண்பனும் புதுசா ஒரு பிசினஸை ஆரம்பிச்சான் .

21 வது வாரம் விளக்கை போட ஊருக்கே வந்துட்டேன் , கடைசி நாள் தயிர் சாதம் அண்ணனே  தயார் செய்தார் , கடையில இருந்து வடை வாங்கி வந்து அதை மாலை ல கோத்து பைரவருக்கு படைக்க எடுத்துட்டு போனோம் , அங்க அர்ச்சகர் கிட்ட கொடுத்தப்போ அவர் வாங்க மாட்டேன் ன்னு சொல்லிட்டார் , வெளியில இருந்து கொண்டு வர்ற பொருளையெல்லாம் எந்த கோவில்லையும் யாரும் படைக்க மாட்டாங்க ன்னு சொல்லிட்டார் 

அது வரைக்கும் கோவில் ல பூஜையே செய்யாத எங்களுக்கு அதை பத்தி ஒன்னும் தெரியலை , அவர் போனதுக்கப்பறம் வேற ஒரு அர்ச்சகர் வந்து கொடுன்ங்க நான் பாதத்துல வச்சு மட்டும் தர்றேன் ன்னு சொல்லி வச்சி கொடுத்தார் 

நாங்க பைரவரை சுத்தி வந்தப்போ ஒரு நாய் எங்க பின்னாடியே வடையை மோப்பம் பிடிச்சு வந்தது , சரி பைரவர் தான் நினைச்சு அந்த வடையை நாய்க்கு போட்டேன் , அது மோந்து பாத்துட்டு போய்டுச்சு , அது கூடவே இன்னும் சில நாய்ங்களும் வர மீதி வடையை அதுங்களை நோக்கி தூக்கி ஏறிஞ்சேன் , அந்த தயிர் சாதத்தையும் நாய்க்கே வச்சுட்டேன் , கடைசில எதையும் நாய்கள் சாப்பிடலை ( எவ்வோளோ பெரிய பாவத்தை பண்ணிக்கிட்டு இருக்கேன் ன்னு உணராமல் இப்படி ஒரு பாவத்தை செய்துட்டேன் , எது என் புத்தியை மாத்தி இப்படி செய்ய வைத்ததுன்னு எனக்கு புரியலை )

அடுத்த நாள் குருநாதருக்கு போன் பண்ணி என் அண்ணனையும் கூட்டிட்டு வரட்டுமா ன்னு கேட்டேன் , சரி வாங்க ன்னு சொன்னார் 

நாங்க போனோம் போகும் போது கையில பஞ்சாங்கம் வச்சிருந்தார் , எங்களை வரவேற்றார் , எங்களை பார்த்து ஜோதிடத்துல விபரீத ராஜயோகம் ன்னு ஒரு விஷயம் இருக்கு அது வெறும் ஒன்றை நாழிகை தான் இருக்கும் அதாவது முக்கால் மணி நேரம்தான் இருக்கும் அந்த டைம் தான் ஒருத்தனுக்கு திடீர்ன்னு யோகம் அடிக்கும் ன்னு சலிப்பா  சொன்னார் , இதை ஏன் சம்பந்தம் இல்லாம சொல்றார் ன்னு தோனுச்சு,
சம்பிரதாயமா கொஞ்சம் பேசினார் , குழந்தை எப்படி பிறக்கும் , என் தம்பி மாந்த்ரீகம் ன்னு சுத்தி கிட்டு இருக்கான் , அவன் இதை விட்டு வெளிய வர மாட்டானா ன்னு என் அண்ணன் கேட்டார் , ஒன்னும் பிரச்னை இல்லை , கவலை பட வேண்டாம் ன்னு சொன்னார் , அப்போ அவருக்கு ஒரு போன்  வந்தது ,போன் பேசிக்கிட்டே எங்களை பார்த்தார் , என் அண்ணன் தலை பெண்டுலம் கடிகாரம் ஆடுற மாதிரி ஆடுனுச்சு , என் உடம்பு முன்னும் பின்னும் ஆட ஆரம்பிச்சது , அந்த அனுபவம் எனக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்ல ஒருமுறையும் , ஒரு  ஐயப்பன் கோவில்ல ஒரு முறையும் ஏற்பட்டது .

என் கிட்ட உங்களை யாரு இங்க வர சொன்னது , அங்கேயே சென்னை லையே இருக்க வேண்டியது தானே ன்னு கோபமா சொன்னார் , எனக்கு புரியலை நீங்க இனிமே இங்க வர மாட்டிங்க ன்னு எங்க அண்ணனை பார்த்து சொன்னார் , என்னை பார்த்து நீங்க இங்க இருக்காதீங்க மறுபடியும் சென்னைக்கே போய்டுங்க ன்னு சொன்னார்  சொல்லி அனுப்சிட்டார். நீங்க அந்த வீட்டுல இருக்காதீங்க வேற வீட்டுக்கு போங்க ன்னு சொன்னார் , அதுக்கு சாத்தியமே இல்லை சார் ன்னு சொன்னேன் , இல்லை நீங்க கண்டிப்பா போவீங்க , அப்படி போனா ஆஞ்சநேயர் கோவில் ஏரியாவில குடி போங்க , ஏன்னா உங்க ஊர்லையே அந்த எரியவில இருக்கறவங்க தான் கொஞ்சம் நல்லாயிருக்காங்க
 நாமக்கல் நரசிம்மர் கோவிலை பத்தியும் , அதோட ரகசியத்தை பத்தியும் சொன்னார் .இன்னும் கொஞ்சம்  தெய்வ ரகசியங்களை சொல்லி அது உங்களுக்கு பின்னாடி உபயோகப்படும் ன்னு சொன்னார் .

ரெண்டு நாள்ல அண்ணனுக்கு பையன் பிறந்தான், அன்னைக்கு பிரதோஷம் , எனக்கு சிவதரிசனம் கிடைச்ச அடுத்த வருஷம் அதே ஜூன்  மாசத்துல வந்த முதல் பிரதோஷம் .

ககுருநாதர் சொன்ன வார்த்தை தான் என்னை வாட்டியது ,ஊருக்கு வந்து என் அண்ணன் என்னை பஸ் ஏத்தி விட வந்தப்போ குருநாதர் ஏதோ மறைமுகமா சொல்ல வர்றார் , எனக்கு ஏதோ ஆக போகுதுன்னு நினைக்கறேன் எனக்கு என்ன நடந்தாலும் நீ கவலைபடாதே , வீட்டுல எல்லாரையும் பாத்துக்கோ ன்னு சொல்லிகிட்டு இருந்தேன் . ( எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் ல இருந்து என் அண்ணன் தான் எனக்கு நெருங்கிய நண்பன் , முதல் குரு , அப்பா அம்மா , எல்லாமே , எல்லாத்தையும் அவர் கிட்ட மட்டும் தான் பகிர்ந்துக்குவேன் ), 

என் அண்ணன் திட்டி அனுப்பி வச்சார் , சென்னை ல இருந்தப்போ நமக்கு என்ன ஆனாலும் கவலை இல்லை ன்னு சுத்திக்கிட்டு இருந்தேன் , என் அண்ணன் பரீட்சை( GROUP 2) எழுதிட்டு குழந்தை போய் பார்த்துட்டு , அடுத்த நாள் குருநாதருக்கு போன் பண்ணி பரீட்சை நல்லா எழுதியிருக்கரதாவும் , பையன் பிறந்து இருக்கறதாவும் சொல்லி யிருக்கார் , அதுக்கு அவர் நீங்க முதல்ல இங்க கிளம்பி வாங்க நான் உங்களுக்கு ஒரு ரட்சை தர்றேன் ன்னு கூப்பிட்டு கிட்டு இருந்தார் , என் அண்ணன் இன்னைக்கி கொஞ்சம் வேலை இருக்கு ரெண்டு நாள்ல தம்பி வரேன்னு சொன்னான் அவன் கூட வர்றேன் சொன்னார் 


அன்னைக்கு இரவு ஒரு போன் வந்தது அண்ணனுக்கு அடி பட்டு GH ல சேர்த்து இருக்காங்க ன்னு முன்ன பின்ன தெரியாத யாரோ ஒருத்தர் போன் ல சொன்னார் , எங்க அப்பா அம்மா அழற குரல் கேட்டது , உடனே கிளம்பி வாங்க ன்னு சொன்னாங்க , எனக்கு பயம் உடனே சாருக்கு போன் போட்டு கேட்டப்போ நீங்க கிளம்பி வீட்டுக்கு போயிட்டு எனக்கு போன் பண்ணுங்க ன்னு சொன்னார் , பஸ் ஏறதுக்குள்ள அண்ணன் அடி பட்டு அப்போவே இறந்துட்டார் ன்னு சொன்னாங்க , பைத்தியம் புடிச்ச மாதிரி ஆயிருச்சு , என் அண்ணனை அந்த நிலையில பார்க்கவே விரும்பலை தற்கொலை பண்ணிக்க முடிவு பண்ணேன் , இனி வாழ வேண்டிய தேவையை இல்லை , எனக்கு நான் வழிபாட்ட கோவில் ல இருக்கற கடவுள் சிலையை எல்லாம் உடைக்கணும் ங்கற அளவுக்கு வெறி வந்தது,
எப்படி உயிரோட வந்து சேர்ந்தேன் ன்னு தெரியலை , எவ்வோளோவோ துன்பங்களை கடந்து வந்துட்டேன் , உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை ங்கற வரைக்கும் எந்த துன்பமும் என்னை பெருசா பாதிக்கலை , எனக்கு குருநாதர் மேல கோபம் அவருக்கு போன் போட்டு உங்ககளை அப்பா ஸ்தானத்துல நினைச்சு தானே உங்க கிட்ட உதவி கேட்டு வந்தோம் , இப்படி ஆயிடுச்சே சார் ன்னு சொன்னேன் .

எனக்கு உங்களை காப்பத்துனதே பெரிய விஷயமா போய்டுச்சு , அந்த அளவுக்கு நீங்களும் மாட்டிகிட்டு அவரையும் மாட்டிவிட்டுடீங்க ன்னு சொன்னார் .

ரெண்டாவது
குழந்தையா உங்க அண்ணணா ன்னு பார்த்த எனக்கு குழந்தை தான் பெருசா பட்டது 

நீங்க முதல்ல  ஊருக்கு போயிட்டு காலைல எனக்கு போன் பண்ணுங்க , தனியா போகாதீங்க துணைக்கு யாரையாவது கூட்டிட்டு போங்க ன்னு சொல்லிட்டார்

அண்ணனை பாக்கவே முடியலை அன்னைக்கு மதியம் வரைக்கும் பேசிகிட்டு இருந்தார் , இப்போ காணோம் ங்கறதை ஜீரணசிக்கவே முடியலை , எல்லா திறமையும் , தகுதியும் இருந்தும் வாழ்க்கைல துன்பத்தை மட்டுமே அனுபவிச்சவர் .

எனக்கு எல்லாமே அவர்தான் , அவர் இல்லாத வாழ்வை நினைக்க நினைக்க பயமாவே இருந்தது , எதாவது தவறுக்கு தண்டனை கிடைக்கறதா இருந்தா எனக்கு தான் கிடைக்கணும் , அவருக்கு எதுவுமே தெரியாது, அவருக்கு ஏன் தண்டனை கிடைச்சதுன்னு கடவுள் மேல ஆத்திரம்  வந்தது

காலை ல சாருக்கு க்கு போன் போட்டப்போ உங்க அப்பா அம்மா அண்ணி குழந்தை இவங்க ஜாதகத்தை விட உங்க ஜாதகம் தான் ரொம்ப  மோசமா இருந்தது ,

உங்க ஜாதகத்துல 3 மிடத்துல என்ன கிரகம் இருக்கு ன்னு கேட்டார் , எதுவும் இல்லை ன்னேன் , 3 க்குரியவன் எங்க இருக்கான் ன்னு கேட்டார் 5 மிடத்துல நீசம் சார் ன்னேன் , அப்புறம் என்ன பண்ண முடியும் , அதான் உங்களை வெளியூருக்கு அனுப்ப்சேன் , நீங்க முக்கியமான நேரத்துல திரும்பி வந்துட்டீங்க

ஜாதக தோசத்தை கூட  போக்க  முடியும் , நீங்க மாந்திரீகம் போனதை தான் ஒண்ணும் பண்ண முடியலை , உங்களை எதாவது பண்ணத்தான் அவரை காப்பாத்த முடியும் ங்கர மாதிரி நிலைமை ன்னு சொன்னார் , அவர் பேசறதை கேக்கற மன நிலையில நான் இல்லை

கவலை படாதீங்க அண்ணியையும் குழந்தையும் கடவுள் பாத்துக்குவார்  , மறுநாள் கூப்பிடுங்க ன்னு சொல்லி போனை வச்சிட்டார்

அடுத்த நாள் கூப்பிட்டபோ 30 நாள் வரைக்கும் நீங்க இங்க வர கூடாது , 30 நாள் முடிஞ்சு கண்ணடிப்பா இங்க வாங்க அண்ணிக்காகவும் , குழந்தைக்காகவும் வாங்க , நான் பரிகாரம் சம்பந்தமா ஒரு புத்தகம் தர்றேன் அது உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் , ப்ளீஸ் வாங்க ன்னு கூப்பிட்டார்


எங்க அண்ணனுக்கு என்ன ஆச்சு சார் ன்னு கேக்க மட்டுமே தோணுச்சு , இன்னும் ஒரு 5 வருசமாவது இருந்திருந்தார் ன்னா  கொஞ்சுமாவது சந்தோசத்தையும் அனுபவிச்சுட்டு போயிருந்தா கூட மனசு ஏத்துகிட்டு இருக்கும் , பிறந்ததுல இருந்து துன்பத்தை மட்டுமே அனுபவச்சிவர் என் அண்ணன் , ன்னு சொன்னேன் 

எங்க  குடும்பத்துல சின்ன வயசுலேயே என் அண்ணனும் தவறிட்டார் , அப்போ அவர் ஒருத்தர் தான் எங்க குடும்பத்துலலே சம்பாதிக்கறவர் , எங்களுக்குஅண்ணன் இழப்பு , வறுமை இதுல இருந்து மீண்டதே எங்களுக்கு பெரிய விஷயமா இருந்தது உங்க நிலைமை எனக்கு புரியுது , நாம அடுத்த நிலையை பத்தி யோசிக்கணும்  , உங்க அண்ணா வோட கர்மா முடிஞ்சிருச்சு , அவரை யாராலும் காப்பாத்த முடியாத நிலைமை தான் , நீங்க 30 நாள் கழிச்சு இங்க வாங்க  ப்ளீஸ் ன்னு கூப்பிட்டார், என்னால எதையும் ஏத்துக்கவே முடியலை

எனக்கு குருநாதர் மேல கோபம் , மாந்த்ரீக பயம் வேற அதிகமா ஆயிடுச்சு , உடனடியா எதாவது பண்ணனும் அவசரப்பட்டு என் அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்த ஒரு அம்மாவை போய் பார்த்தேன் , அந்த அம்மா கிட்ட தகவல் சொன்னேன் , நான் இப்போ திருச்சி க்கு அந்த பக்கம் புதுகோட்டை யை தாண்டி  இருக்கேன் ன்னு சொன்னது , அந்த அம்மா உடனே ஒரு பூஜை பண்ணனும் ன்னு 30,000 ரூபாய் கேட்டது ரெடி பண்ணி கொடுத்துட்டேன் , ஒரு மந்திரவாதிக்கு சமமான இன்னொரு மந்திரவாதியா தான் அந்த அம்மாவை பார்த்தேனே ஒழிய என் குருநாதரை போல தூய்மையா பார்க்கலை . 

( யாரையும் அவருக்கு சமமா கூட நான் இன்னமும் பார்க்கலை ,எனக்கு அவர் மேல கோபம் தானே தவிர அவர் மீது வச்சிருந்த நம்பிக்கையும் மரியாதையும் குறையல இன்ன வரைக்கும் , இன்னமும் அவர் கிட்ட போன் பேசறப்ப செருப்பை கழட்டிட்டு தான் பேசுவேன் , நான் எந்த இடத்துல இருந்து பேசிகிட்டு இருக்கேன் ங்கறததை அவர் பார்த்துகிட்டு இருக்கார் ன்னு எனக்கு தெரியும் , ரெண்டாவது நான் பேசறது அவர் கிட்ட ங்கரத்தை விட பாபா கிட்ட தான் பேசறேன் ன்னு தெரியும் )

அந்த அம்மா விபூதி பாக்கெட் ஒண்ணை கொடுத்து , இதை தினமும் வச்சிக்கோ , கொஞ்சம்  விபூதியை எடுத்து வாயில போட்டுக்கோ ன்னு சொன்னது 

அந்த அம்மா வை சந்திச்சு திரும்பி வரும் போது எனக்கு HANS (  புகையிலை ) போடணும் ன்னு ஒரு வெறி வந்தது , கொஞ்ச நாள் ல சிகரட்டும் குடிக்க ஆரம்பிச்சேன் , குருநாதர் கொடுத்ததை எல்லாம் எடுத்து கிணத்துல போட்டுட்டேன் 

கொஞ்ச நாள் ல DOWN ல வேற ஒரு வீட்டுக்கு வாடகைக்கு குடி வந்தோம் , குருநாதர் சொன்ன படி ஆஞ்சநேயர் கோவில் பக்கம் வீடு பாக்கலை , அடுத்த 3 மாசத்துக்குள்ள எதேதோ கரணம் சொல்லி மேற்கொண்டு 50,000 ரூபாயை பறிச்சுகிச்சு கடையசியா பார்த்தப்போ நீ சிவனை மட்டும் கும்பிடாதே ன்னு சொன்னது , இப்போ எதிரியை விட இந்த அம்மாவை நினைச்சு பயம் வந்தது , திடீர்ன்னு போன் பண்ணி கோவில் கட்ட போறேன் ,2 லட்சம் வேணும்பணம் கொடு ன்னு 3 நாளைக்கு ஒரு முறை போன் பண்ணி தொந்தரவை கொடுத்தது , இல்லன்னா எதாவது பிரச்சனை வந்தா நான் பொறுப்பில்லை ன்னு சொல்லும் , நீ விபூதியை வாயில போட்டுக்கிரியா இல்லையா ன்னு கேக்கும் , அந்த அம்மா கிட்ட போன் ல பேசரப்பெல்லாம் உடம்பு வெயிட் ஆகற மாதிரி இருக்கும் ,

வாடகைக்கு குடியிருந்த வீட்டுக்கு பக்கத்துல 4 வீடு தள்ளி குடியிருந்தவங்க எங்க கிராமத்துல குடி இருந்தவங்க , ஒரு நாள் அவங்க வீட்டுக்கு ஒரு ஜோசியர் வந்து ஜோசியம் பார்த்துட்டு , பரிகார பூஜை பண்ணி இப்போ அவர் சொன்ன மாதிரி 20 நாளுக்குள்ள  பொண்ணுக்கு மாப்பிள்ளை நிச்சயம் ஆகிடுச்சு , அவரை வர சொல்லி பாக்கலாம் ன்னு பேசிகிட்டு இருந்தாங்க , ஜோதிடத்தை எல்லாம் கடந்துட்டதால எனக்கு அதுல உடன்பாடு இல்லை , ரெண்டாவது மாறினது எல்லாம் போரும் இனிமே பேயும் வேணாம் , சாமியும் வேணாங்கற  முடிவுக்கு வந்துட்டேன் , ஆனா அவரை வர வச்சாங்க , அவர் கை ரேகை யை வச்சு அருள் வாக்கு  சொன்னார் , எல்லா புள்ளி விவரத்தையும் சொன்னார் , அந்த அம்மா கிட்ட எவ்வோளோ பணம் கொடுத்தேன் ன்னு சொன்னார் , அப்போ தான் என் குடும்பத்துக்கே இது தெரிய வந்தது , அப்புறம் கொடுமுடி ஆத்தங்கரை ல பூஜை மாதிரி பண்ணி தலை முழுகிட்டு வந்தோம் 

அதுக்கப்பறம் அந்தம்மா வோட தொடர்பே அது போயிடுச்சு ,அந்த பொம்பளையும் ஒரு கெட்ட வேலையை செய்யற பொம்பளை தான் ன்னு  அப்புறமா தான் உணர முடிஞ்சது.

ஒரு நாள்  நிறைய பரிகாரத்தை பத்தி  எடுத்து வச்சிருக்கோமே ஈமெயில் ல தேட சிரமமா இருக்குன்னு இந்த BLOG ஐ ஆரம்பிச்சு அதுல போட்டுப்போ , குருநாதர் சொன்ன தகவல் எல்லாமே விலை மதிக்க முடியாத தகவல்கள் , நாம இறந்துட்டா இதெல்லாம் யாருக்கும் தெரியாம போயிடுமேன்னு ஆரம்பிச்சது தான் இந்த BLOG .

 30 நாள் கழிச்சு வாங்க நான் ஒரு புத்தகம் தரேன் அது உங்களுக்கு உபயோகமா இருக்கும் ன்னு சொன்னார் அதை 6 மாசம் கழிச்சு ஏன் சொன்னார் ன்னு இந்த BLOG ஐ ஆரம்பிச்ச   ஒரு வாரத்துலையே உணர்ந்தேன் , 

ஒரு நாள் நெட் ல முன் ஜென்மத்தை பத்தி தேடிகிட்டு இருந்தப்போ அகத்தியரோட ஜீவநாடி பத்தி படிச்சேன் 
http://copiedpost.blogspot.sg/2012/02/blog-post_3167.html

அகத்தியர் ஜீவா நாடியை பத்தி படிச்சிகிட்டு இருந்தப்போ தான் , எனக்கு என் குருநாதர் நினைவுக்கு வந்தார் , இப்படி பட்ட ஒருத்தர் கூட தானே நாம் இருந்தோம்  , சாட்சாத் கடவுள் கிட்ட பேசறவர் கூடவே இல்ல நாமும் இருந்தோம் ன்னு மனசு அடிச்சுகிட்டு இருந்தது, போன் பண்ணி பேசவே ரொம்ப தயக்கமா இருந்தது ,

ஜீவ நாடியை பத்தி பதிவு போட்ட சரியா ஒரு வாரத்துல துரையூருக்கு ஒரு நிச்சயதார்த்ததுக்கு போக வேண்டி வந்தது , அதுக்கு பக்கத்துக்கு தெருவுல தான் அகத்தியர் குடில் , எனக்கு அகத்தியரை பார்த்தே ஆகணும் அளவுக்கு அதிகமான ஆர்வம் , என் வாழ்க்கைல முதல் முறையா அகத்தியர் சிலையை பாக்கறேன் , மண்டியிட்டு வணங்கினேன் , எதோ அகத்தியரே கூப்பிட்டு ஆசிர்வாதம் பண்ண மாதிரி உணர்ந்தேன் ,

பையனுக்கு உடம்பு சரியில்ல ன்னு திரும்பவும் சொந்த  வீட்டுக்கு போகலாம் ன்னு சொன்னாங்க , எனக்கு விருப்பம் இல்லை , பழைய படி பயம் வந்திருச்சு , சரி குருநாதரை விட்டாலும் வேற வழியில்லை ன்னு அவருக்கு 10 மாசம் கழிச்சு போன் பண்ணேன் , 

எப்புடி இருக்கீங்க , உண்மையை சொல்லணும் னா நான் உங்களை நினைக்காத நாளே இல்லை ன்னு சொன்னார் , நீங்களா கூப்பிடறப்போ பேசிக்கலாம் ன்னு விட்டுட்டேன் ன்னு சொன்னார் 

பின்னாலதான் உணர்ந்தேன் இந்த அளவுக்கு ஆன்மீக விசயத்தை எழுதற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை , எனக்கு ஒரு சின்ன நல்ல விஷயம் பண்றத்துக்குள்லையே போதும் போதும் ன்னு ஆயிடுது அவ்ளோ கோடி தடை வருது , என்னால எப்புடி இதெல்லாம் எழுத முடிஞ்சது ன்னு காரணம் லேட்டா தான் தெரிஞ்சது குருநாதரோட ஆசிர்வாதம் தான் ன்னு

அந்த வீட்டுக்கு போயும் அதே போராட்டம் , பழையபடி எல்லாம் திரும்ப ஆரம்பிச்சது , சார் உங்களை பார்க்க வரலாமா  ன்னு கேட்டேன் , இல்லை இன்னும் பாபா உங்களுக்கு உத்தரவு தரலை ன்னு சொன்னார் , 

ரெண்டு மாசத்துல  வீட்டுல பெரிய போராட்டம் , பையனுக்கு உடம்பு சரியில்லை , அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை , என் கண்ணு முன்னாடியே எல்லாரும் கஷ்ட படறாங்க , என்னால கையாலகாத நிலைமை , சரி கடைசி முயற்சியா குருநாதர் கிட்ட கேட்போம் , அவர் உதவி செய்யலைன்னா தற்கொலை பண்ணிக்கலாம் ன்னு முடிவு பண்ணி அவருக்கு  போன் பண்ணேன் .

ஒன்னும் கவலைபடாதீங்க கடவுள் இருக்கார் அவர் பாத்துக்குவார் ன்னு சொன்னார் , உங்க வீட்டுக்கு பக்கத்துல எதாவது பைரவர் கோவில் இருக்கா ன்னு கேட்டார் , இருக்கு சார் ன்னு சொன்னேன் , அவருக்கு தினமும் ஒரு விளக்கு போட்டுட்டு வாங்க ன்னு சொன்னார்  , சார் ஏற்கனவே பைரவர் வழிபாட்டை கடைசி நாள் ல தவறா பண்ணிட்டேன் , அண்ணனை இழந்துட்டேன் , பயமா இருக்கு சார் ன்னு சொன்னேன் , உங்களா ல அந்த வழிபாட்டை செய்ய முடியாது ன்னு நல்ல தெரியும் , , அதனால தான் சொல்றேன் , நீங்க தினமும் ஒரு விளக்கு மட்டும் போட்டுட்டு வாங்க போதும் ன்னு சொன்னார் , சார் எவ்வோளோ நாள் நான் விளக்கு போடணும் ன்னு கேட்டேன் , ஒரு  2 மாசம் போடுங்களேன் ன்னு சொன்னார் , என்ன நினைச்சேன்னு தெரியலை சார் நான் உயிரோட இருக்கற வரைக்கும் போடறேன் ன்னு சொன்னேன் , நல்லது , பண்ணுங்க கடவுள் கண்டிப்பா வலி காட்டுவார் நம்பிகையோட பண்ணுங்க ன்னு சொன்னார் 

நான் கேட்ட அந்த நாள் ஒரு பௌர்னமி , அன்னைக்கே வழிபாட்டை ஆரம்பிச்சேன் , ஒரு வாரத்துக்குள்ளவே  HANS (புகையிலை ) போடறப்போ நெஞ்சு வலிக்கற மாதிரி இருந்தது, சரியா அடுத்த 8 வது நாள் ல அந்த பழக்கத்தை நிறுத்திட்டேன் , சிகரட்டை வெறி புடுச்ச மாதிரி குடிக்க ஆரம்பிச்சேன் ,

என் வீட்டுல என்னை தவிர யாரும் பாபா வை கும்பிட மாட்டங்க பாபா சிலை வச்சியிருந்ததுக்கு என் அப்பா ஒரு முறை சண்டைக்கு வந்தார் , நானும் என் நண்பனும் ஒரு OFFICE ரூம் போட்டு ஒரு வருசமா WEBSITE WORK பண்ணிக்கிட்டு இருந்தோம் , அப்போ பக்கத்துக்கு ரூமுக்கு புதுசா ஒருத்தர் வந்தார் , அவரும்  சாய் பாபா பக்தர் , அதே இன்னொ ரூமுக்கு வந்த ஒருத்தரும் பாபா பக்தர் , சுத்திலும் பாபா பக்தர்களாவே இருந்தாங்க , ஒருத்தர் ஷீரடி போயிட்டு வந்தார் அவரே எனக்கு பாபா விபூதி யை வச்சி விட்டார் .ஒரு பாக்கெட் விபூதியையும் , பிரசாதத்தையும் கொடுத்தார் ,சாய் சத் சரித்ரம் புத்தகத்தை அன்பளிப்பா கொடுத்தார் , நான் பணம் கொடுத்தப்போ , பணம் வேண்டாம் நீங்களும் புத்தகத்தை வாங்கி உங்களுக்கு தெரிஞ்ச பாபா பக்தர்களுக்கு கொடுங்க ன்னு சொன்னார் , 

சாய் சத் சரித்திரம்

(இன்னமும் எனக்கு மாசம் ஒரு பாக்கெட் விபூதியை கொடுப்பார் )
அன்னைக்கு நைட்டே படிக்க ஆரம்பிச்சேன் அடுத்த நாள் காலைல அப்பாவுக்கு LOW BP காலைல அம்மா பேரை சொல்லி கூப்பிட்டார் , நான் அரை தூக்கத்துல , அப்பா கூப்பிடுறாங்க ன்னு சொன்னேன் , திடீர்ன்னு எழுந்திருச்சி போய் பார்த்தேன் மயங்கி கிடந்தார் , முகத்துல தண்ணி ,தெளிச்சு விளக்கு பொருத்தி , பாபா வோட விபூதியை நெத்தில வச்சிக்கிட்டு ஓம் சாய் ராம் ன்னு சொல்லிக்கிட்டே வாயில கையவிட்டு  தனிற் விட்டேன் உடனே சுயநினைவுக்கு வந்தார் , உடனே FAMILY டாக்டர் கிட்ட வைத்தியம் பார்த்திட்டு தெருமுனைக்கு வந்தப்போ சாய்பாபா வோட வண்டி யை வச்சிக்கிட்டு ஒரு அம்மா நின்னுகிட்டு இருந்தாங்க , எங்க அண்ணி அவங்களுக்கு 50 ரூபாய் தட்சணை போட்டாங்க , அதுக்குள்ளே அந்த வண்டி கிளம்பிடுச்சு , எங்க அம்மா அந்த வண்டியை கூப்பிட்டு ராத்திரியெல்லாம் என் பையன் பாபா பாபா ன்னு கத்திகிட்டே இருந்தான் கூப்பிட்டு (அவங்களுக்கு தமிழ் தெரியாது போல ) பர்சுல இருந்த பணத்தை அப்படியே போட்டுட்டு பாபா வை வணங்கினாங்க .
அதுல இருந்து எங்க குடும்பத்துல எல்லாரும் பாபா வை வணங்க ஆரம்பிச்சாங்க , முதல் முறையா சத் சரித்ரத்தை படிச்சு முடிச்சபோ தான் பரீட்சை எழுதினேன் .

பைரவருக்கு வடை மலை சாத்தி பூஜை செய்யலாம் ன்னு பூசாரிகிட்ட பணம் கட்டி தேய்பிறை அஷ்டமி பூஜையில கலந்து கிட்டேன் , வடை மாலையை வாங்கினவங்க அப்படியே சாமி ரூம்ல வச்சிட்டாங்க , சரி குருநாதர் சொன்ன ரெண்டு மாசம் முடிஞ்சு போச்சு இப்பவாவது அவரை பொய் பாக்க அனுமதி கிடைக்குமா ன்னு போன் பண்ணேன் , தேவையில்லாம  நீங்களே போய் மாட்டிகிட்டீங்களே ன்னு சொன்னார் எனக்கு பயம் வந்துருச்சு. எனக்கு புரியலை , எனக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் எங்க  ஆஞ்சநேயர் கிட்ட உதவி கேக்கறது வழக்கம் , ஆஞ்சநேயர் கிட்ட குருநாதர் ஏதோ ஆபத்து ங்கற மாதிரி சொல்றார் ன்னு வேண்டிகிட்டு வீட்டுக்கு வந்தப்போ பூஜை அறையில அந்த வடை இருந்தது , சரி இதை தான்குருநாதர் சொல்லியிருக்கணும் ன்னு அத்தனை வடையையும் நைட்டே சாப்பிட்டு காலைல உடம்பை என்னவோ பண்ணிடுச்சு , ஹாஸ்பிட்டல் போற மாதிரி ஆயிடுச்சு 

பைரவருக்கு சாத்துற வடைல இவ்வோளோ பிரச்னை வரும் ன்னு கற்பனை கூட பண்ண முடியலை , ஏன் ன்னு  எனக்கு காரணம் இன்னமும் புரியலை , நெருப்பை தொட்டதுக்கு அப்புறம் சூடுன்னா என்னான்னு புரிஞ்ச மாதிரி  பட்ட அனுபவத்தில இருந்து ரொம்பவும் சக்தி வாய்ந்த ஒரு விஷயம் பைரவருக்கு வடைமாலை சாத்துறது ங்கறது மட்டும் புத்திக்கு புரிஞ்சது , இதை வெற்றிகரமா செய்து முடிச்ச பெரிய அளவில் நல்ல பலன் இருக்கும் ன்னு தோணுது .நண்பன் ஒருத்தன் கிட்ட விசயத்தை சொன்னப்போ நேரா வினயருக்கு போய் ஒரு தேங்காய் உடைச்சு பைரவர் கிட்ட மன்னிப்பு கேட்டு மறுபடியும் விளக்கு போடு ன்னு சொன்னான் ( இவன் குருநாதரை சந்தித்து அவர் சொன்ன பரிகாரங்களை செய்து இன்னைக்கு எங்க ஊர் SARVEYOR ஆ இருக்கான், இவன் 2 வருசமா UPSC EXAM க்கு ட்ரை பண்ணி கிடைக்காம , குரூப்  1 , குரூப் 2  க்கும்  ட்ரை பண்ணி கிடைக்காமல் , VAO எழுதி பாஸ் பண்ணிட்டான் 2 வருஷம் வேலை கிடைக்கலை இழுபறி ல இருந்தது , இந்த நிலைல தான் குருநாதரை சந்தித்து அவர் சொன்ன  பரிகாரத்தை செய்து ஒரு மாசத்துல அவனுக்கு VAO வேலையும் குரூப் 4 ல சர்வேயர் வேலையும் கிடைச்சது , அதுக்கப்பறம் , அவன் வாழ்க்கைல ஒவ்வொரு முக்கியமான விசயத்தையும் அவரை கேட்டு பாபா உத்தரவு கொடுத்த தான் செய்வான் ) ஆஞ்சநேயர் கோவில்ல போய் என்னை மாந்த்ரீக தொல்லையோ , தெய்வ வழிபாட்டு ல உள்ள பிரச்சனையோ இதுல இருந்து விடுவிங்க ன்னு ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைச்சு அன்னைல இருந்து தினமும் விளக்கு போட ஆரம்பிச்சேன் , அங்கிருந்து தாயாரை வணங்கி , நரசிம்மரை வணங்க போனப்போ நரசிம்மருக்கு தயிர் சாதத்தை படைச்சிகிட்டு இருந்தாங்க , வெளிய வந்த உடனேபிரசாதம் கொடுத்தாங்க , அங்கிருந்து நேரா சிவன் கோவிலுக்கு போய் விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு , மறுபடியும் பைரவருக்கு விளக்கு போட்டேன் , பக்தி போய் பயம் மட்டும் தான் இருந்தது , எனக்கு மறுபடியும் குருநாதர் மேல கோபம் இப்படி பைரவர் கிட்டே மறுபடியும் மறுபடியும் மாட்டி விடுறாரே ன்னு ,  சிவன் கோவில்ல ரொம்ப கும்பலா இருந்தது , வெளியே வந்தப்போ ஒரு அம்மா எனக்கு ஒரு டம்ளர் ல பாலை மொண்டு கொடுத்தாங்க ஏன் எதுக்கு ன்னு கேட்டேன் , இன்னைக்கு பிரதோஷம் , இது சிவனுக்கு அபிசேகம் செய்த பால் ன்னு கொடுத்தாங்க ,குடிச்சுட்டு 2 வருஷம் கழிச்சி சிவ லிங்கத்தை பார்த்து வணங்கினேன் ( என் அண்ணன் இறந்தது பிறகு இனி சிவ லிங்கத்தை பார்க்கவே கூடாது ன்னு முடிவு பண்ணியிருந்தேன் , எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் ல இருந்து நான் வணங்கின நம்பின  ஒரே கடவுள் சிவன் )

நான்  இதே டென்சன் ல 10 நாலா இருந்தேன்  பேங்க் பரீட்சை எழுதறதுக்கு முதல் நாள் பாபா வோட மன்றத்துக்கு மனசு சரியில்லை ன்னு போனேன் , அங்க இருந்தவர் பாபா வுக்கு ஆரத்தி காட்டிகிட்டு இருக்கோம் அப்புறம் போங்க ன்னு சொல்லி உக்கார வச்சுட்டார் , எதோ கடமைக்கு பரீட்சை எழுதிட்டு வந்தேன் வரும் போது நண்பர் ஒரு முக்கியமான விஷயம் உடனே வாங்க ன்னு போனில் கூப்பிட்டார் பாபாவோட விபூதியை கொடுக்கத்தான் கூப்பிட்டேன் ன்னு விபூதியை கொடுத்தார்.

ஒரு மாசம் கழிச்சு EXAM பாஸ் ன்னு ரிசல்ட் வந்தது , போன வருசமும் பாஸ் பண்ணினேன் interview போக முடியலை , சரி இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு நண்பனோட வழிகாட்டுதல் ல TNPSC க்கு தயார் ஆனேன் , அதுக்குள்ள interview லெட்டர் வந்தது , குருநாதருக்கு போன் பண்ணி சொன்னேன் , அடுத்து உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் அப்புறம் வேலைதான் ன்னு சொன்னார்,

Interview  க்கு முதல்நாள்  நாமகிரி தாயார் கோவில்ல உருக்கமா வேண்டிகிட்டு இருந்தேன் , அடுத்த நாள் interview அறைக்கு போகறதுக்கு முன்னாடி குருநாதருக்கு போன் பண்ணேன் , எல்லாம் நல்ல படியா நடக்கும் ன்னு ஆசிர்வாதம் பண்ணார் , அங்க 4 பேர் கேள்வி உக்காந்து இருந்தாங்க , அதுல 3 வதா இருந்தவர் நாமகிரி தாயாரை பத்தி கேள்வி கேட்டுட்டு  அவரே தாயாரோட பெருமையை விளக்கி சொல்லிக்கிட்டு இருந்தார் . அங்க இருந்து நேரா கிளம்பி நான் விளக்கு போட்டுக்கிட்டு இருந்த பைரவரை பார்க்க சந்தோசத்தோட வந்தேன், பக்கத்துக்கு வீட்டு மந்திரவாதி எனக்கு கொஞ்சம்  எதிரிகளை உருவாக்கி வச்சிருக்கான், அதுல ஒருத்தன்  நான் விளக்கை பொருத்தி பைரவரை பார்த்தப்போ பக்கத்துல நின்னுகிட்டு இருந்தான் , இவனெல்லாம் நான் மாந்த்ரீகம் கத்துக்க போக ஒரு காரணம் இப்போ இவனை  பைரவர் முன்னாடி பார்த்ததுல இருந்து சந்தோசம் போய் கோபம்தான் வந்தது , 
திரும்பவும் கடவுள் மேல வெறுப்பு .

 எந்தனை நாளைக்கு கடவுளை நம்பி ஏமாந்து போறது , விளக்கு ஆகும் செலவை பேசாம யாருக்காவது உணவளிக்க பயன்படுத்தலாம் ன்னு கோவிலுக்கு பக்கத்துக்கு தெருவுல இருந்த மனநிலை சரியில்லாதவருக்குவிளக்கு வாங்க வச்சிருந்த காசுல சாப்பாடு வாங்கி கொடுக்க ஆரம்பிச்சேன் , பைரவரை பார்த்தே ஒரு வாரம் ஆகிடுச்சு , 

பைரவர் மேல இருந்த ஈடுபாடு அப்படியே ஆஞ்சநேயர் மேல திரும்புச்சு ,நான் செஞ்சுக்கிட்டு இருந்த வேலை மதியதுக்கு மேலதான் ஆரம்பம், அன்னவரைக்கும் ஆஞ்சநேயர் கோவில்ல அவருக்கு நடக்கற அபிஷேகத்துல கலந்துக்க ஆரம்பிச்சேன் , ஒரு வாரத்துல  குருநாதர் பைரவர் தான் எனக்கு எல்லாமே ங்கற மாதிரி சொன்னார்ன்னு யோசிச்சு பார்த்தேன் , எந்த சூழ்நிலையிலும் இந்த வழிபாட்டை விட்டுட கூடாது ன்னு மறுபடியும் , விநாயருக்கு விளக்கு போட்டு , பைரவர் கிட்ட மன்னிப்பு கேட்டு விளக்கு போட ஆரம்பிச்சேன் , ஒரு நாள் அஞ்சநேயர் கோவில் ல இருந்தபோ குருநாதர் கிட்ட சந்தேகம் கேக்க போன் பண்ணினேன் , அப்போ விளக்கம் கொடுத்துட்டு , இப்போ ஆஞ்சநேயர் அபிஷேகத்துல கலந்து கிட்டதை continue பண்ணுங்க ன்னு சொன்னார் , அதுக்கப்பறம் நிறைய கோவில்களில் அபிஷேகத்தை பார்க்கற வாய்ப்பு கிடைச்சது , நான் உள்ள போறதுக்கும் அபிஷேகம் அரம்பிக்கரதுக்கும் சரியா இருக்கும் , அபிஷேகத்தை பார்க்கறது ஏதோ புண்ணியம் ன்னு மட்டும் தோணுச்சு , அதோட பிண்ணனி என்னன்னு தெரியலை 

 3 மாசம் கழிச்சு ரிசல்ட் வந்தது 1/2 மார்க்குல போய்டுச்சு , ரொம்ப வருத்தமா இருந்தது ,குருநாதர் வேற 6 மாசத்துக்கு முன்னாடியே கிடைக்கும் ன்னு சொன்னாரே ன்னு குழப்பமா இருந்தது  சரி இவ்வோளோ தூரம் வந்ததே பெருசு, அடுத்த முறை இன்னும் சரியா பண்ணுவோம் ன்னு விட்டுட்டேன்.

ரெண்டாவது முறையா சத்சரித்ரம் படிச்சு முடிச்ச அடுத்த நாள் எங்க அப்பா அம்மா திடீர்ன்னு திருநள்ளாறு போயிட்டு வரலாம் ன்னு சொன்னாங்க , எனக்கு அந்த கோவிலுக்கு போக பயம் , சரி சாயி சத்சரித்ரம் புத்தகத்தை துணைக்கு எடுத்துகிட்டு கிளம்பினேன் , கார் ல போனோம் , AIR செக் பண்ண வண்டியை நிறுத்தினார் , அந்த கடையோட போஸ்டர் ல பெரிய சைஸ் ல பாபா படம் இருந்தது , கும்பகோணத்துல திருநள்ளாறுக்கும் , ஆலங்குடிக்கும் , இன்னொரு கோவிலுக்கும் ஜங்ஷன் மாதிரி பிரியற இடத்துல வழி மாறி போயிட்டார் ,  சந்தேகம் வந்து , ஒருத்தர் கிட்ட சரியான வழி கேட்டு காரை திருப்பின அதுக்கு நேரா சின்னதா ஒரு பாபா கோவில் இருந்தது ,வண்டி எதோ ரிப்பேர் ஆகி திணறிகிட்டு போற மாதிரி இருந்தது , குளத்துல குளிக்க போனப்போ குளக்கரைல நிறையா சாமி போட்டோ வித்துகிட்டு இருந்தாங்க , முதல்ல பாபா படம்தான்  என் கண்ணுல பட்டது , கோவிலுக்கு போற வழியில செருப்பை கழட்டி விடலாம் ன்னு போன கடையில முழுக்க முழுக்க பாபா வோட பேனர் ஆகவே இருந்தது , உள்ள போய் வழிபட்டு வந்தோம் ,  டிரைவர் வண்டியை ரிப்பேர் பண்ணிட்டு வர்றதா சொல்லி போனார் , நாங்க சீக்கரமாவே வரவும் எங்களையும் அங்க கூட்டிட்டு போயிட்டார் , அந்த மெக்கானிக் shop எதிர் ல ஒரு ரோடு பிரியுது , அங்க பாபா கோவிலுக்கு போகும் வழி 2 KM  ன்னு எழுதி இருந்தது, திருநள்ளாறு க்கு போறப்போ ஒரு வழியிலும் , திரும்பி வரப்போ வேற ஒரு வழியிலும் வந்தோம் , வீட்டுக்கு வந்து தற்செயலா எங்க குடும்ப ஜாதகத்தை எடுத்து பார்த்தப்போ எங்க வீட்டுல எல்லாருக்கும் சனி திசை நடந்துகிட்டு இருந்தது , அதுல என் அண்ணன் பையனுக்கும் , எனக்கும் சனி திசை முடிய ஒரு மாசம் இருந்தது , பார்த்தவுடனே தூக்கி வாரி போட்டது , சாயி சத்சரித்ரத்தோட வலிமையை திரும்பவும் உணர்ந்தேன்.

ஒரு  மாசம் கழிச்சு ஒரு நாள் குருநாதர் க்கு ஒரு சந்தேகம் கேக்க போன் பண்ணப்போ வேலை என்ன ஆச்சு ன்னு கேட்டார் , அரை மார்க்குல போயிடுச்சு சார் ன்னு சொன்னேன் , இல்லையே அடுத்த மாசத்துல உங்களுக்கு பேங்க் வேலை கிடைக்கும் ன்னு பாபா சொல்றாரே ன்னு சொன்னார் , கேக்க சந்தோசமா இருந்தது , ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை , அவர் சொன்ன மாதிரியே ஒரு மாசத்துல என் போனுக்கு வேலை கிடைச்சுருச்சு ன்னு SMS வந்தது , என் அப்பாவை வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பைரவர் கோவிலுக்கு கூட்டிட்டு போய் விளக்கை ஏத்த சொல்லி எனக்கு வேலை கிடைச்சுருச்சு சொல்லிஅவர் கால் ல விழுந்தேன். குருநாதருக்கு போன் பனி சொன்னப்போ வாழ்த்தினர் 

Certificate Verification க்கு வரப்போ சில document கொண்டுவர சொன்னங்க , அப்போ மெடிக்கல் டெஸ்ட் ரிபோர்ட் வாங்கி வர சொன்னாங்க அதுக்கு அலைஞ்சப்போ தான் குருநாதர் இனிமே அடுத்து மெடிக்கல் டெஸ்ட் அப்புறம் வேலை ன்னு 9  மாசத்துக்கு முன்னாடியே சொன்னது நினைவுக்கு வந்தது .

அப்போ வீட்டுல இருந்து போன் வந்தது APPOINTMENT ORDER வந்திருக்கறதா அப்பா சொன்னார் ,எதேச்சையா யோசிச்சு பார்த்தா நான் ஒரு வருசத்துக்கு முன்னாடி குருநாதர் கிட்ட போன் போட்டு புலம்பினப்போ கவலைபடாதீங்க தினமும் பைரவருக்கு ஒரு விளக்கு போட்டுட்டு வாங்க ன்னு சொன்ன அதே நாள் , நான் போன் பண்ணி கேட்ட அதே நேரம் , 

திரும்பி வர வரைக்கும் 9 நாளுக்கு உண்டான விளக்கும் எண்ணெய் யும் கோவில் பூசாரிகிட்ட கொடுத்து எனக்காக விளக்கு ஏத்த சொல்லிட்டு
சென்னை ல ஒரு வாரம் training ன்னு அதே திருவான்மியூர் நண்பனோட ரூமுக்கு போயிட்டேன் , அன்னைக்கு மதியம் ஈஞ்சம்பாக்கதுல இருக்கற பாபா கோவிலுக்கு போய் வணங்கிட்டு வந்தேன் ,( நான் இன்னைக்கு வரைக்கும் போன ஒரே பாபா கோவில் )

TRAINING க்கு காலைல கிளம்பி போகும் போது TURNING ல மருந்தீஸ்வரர் கோவிலை பார்த்தப்போ மனசு அடிச்சிகிச்சு , கோவிலுக்கு போய் பைரவரை வணங்கிட்டு போகலாம் ன்னு போனேன் ( திரும்ப இந்த ஊருக்கு வந்து இந்த கோவிலுக்கு போய் பைரவரை வணங்குவேன் கற்பனை கூட பண்ணலை , என் அண்ணன் இறந்த தகவல் கேட்டப்போ கொலைவெறியோட அந்த கோவிலை வெறிச்சு பார்த்துகிட்டே போனேன் ) உள்ள போனப்போ சிவனுக்கு அபிஷேகம் ஆரம்பம் ஆனது , நான் நுழையவும் அபிஷேகம் ஆரம்பிக்கவும் சரியா இருந்தது காலை ல 7:20 மணிக்கு ஆரம்பம் ஆகும் 7:45 அதிகபட்சம் 8 மணிக்குள்ள முடிஞ்சுடுது , சிவனுக்கு அபிஷேகம் செய்த பாலை தீர்த்தமா கொடுப்பாங்க . இங்க இருக்கறவரைக்கும் இந்த அபிஷேகத்தை பார்த்துட்டு போகலாம் ன்னு முடிவு பண்ணினேன் , 6 வது நாள் சனி கிழமை எந்த ஊருக்கு போஸ்டிங் போட  போடறாங்க ன்னு கொஞ்சம் பதட்டமாவே இருந்தது
அன்னைக்கு சீக்கரமாவே சிவனுக்கு அபிஷேகம் முடிஞ்சிறுச்சி, அங்க இருந்தவங்க எல்லாரும் புலம்பிகிட்டு இருந்தாங்க , எனக்கும் ரொம்பவும் ஏமாற்றமாவே இருந்தது , கொஞ்ச நேரத்துல அந்த கோவில் அர்ச்சகர் பைரவருக்கு அபிஷேகம் ஆரம்பம் ஆக போகுது எல்லாரும் அங்க போங்க ன்னு சொன்னார் , யாருமே இதை எதிர்பாக்கலை , அபிஷேகம் முடிஞ்சு எல்லாரும் போய்ட்டாங்க , எனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இருந்து பைரவரோட ஒவ்வொரு கால் விரல் , கை விரலை பார்த்து பைரவர் காயத்ரி மந்திரத்தை சொல்றது வழக்கம் , அப்படி சொல்லி முடிச்சு பைரவர் முன்னாடி மண்டியிட்டு வணங்கிக் தலையை தூக்கி அவரை பார்த்தப்போ அவர் தலையில இருந்து ஒரே ஒரு வில்வ இலை மேல இருந்து கீழே இறங்கி அவர் பாத்ததுல விழுந்தது , ஏதோ ஆசிர்வாதம் பண்ண மாதிரியே உணர்ந்தேன் ,என்னை அறியாமல் அழுகை வந்தது , பக்கத்து ஊர்லையே போஸ்டிங் வந்தது . ஞாயிற்று கிழமை அன்னைக்கு சிவன் அபிஷேகம் முடிஞ்சு , ஈஞ்சம்பாக்கம் போய் பாபாவையும் வணங்கிட்டு ஊருக்கு கிளம்பலாம் ன்னு friend ரூமை விட்டு வெளியே வந்தேன் , வாசல் ல பாபா வோட வண்டி வந்து நின்னது , வணக்கிட்டு போனேன்

ஊருக்கு வந்து அந்த மன நிலை சரியில்லாதவருக்கு சாப்பாடு வாங்கிட்டு போய் அவரை தேடினேன் , அவரை காணோம் , எங்கே ன்னு விசாரிச்சப்போ அவரை மன நல காப்பகத்துக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க ன்னு சொன்னாங்க , பைரவர் மேல கோபப்பட்டு இப்படி ஒருத்தருக்கு உணவளிக்க வச்சு எனக்கு உண்மையான அன்னதானத்தையும் ,அதோட வலிமையையும் உணர்த்தியிருக்கார் .இதுவும் பைரவரோட லீலைதான் உணர்ந்தேன் .

அடுத்த 15 நாள் ல சம்பளம் , முதல் மாச சம்பளம் அன்னைக்கு சனிகிழமை  தேய்பிறை அஷ்டமி ( அது வரைக்கும் முறையான வேலையோ , முறையான சம்பளமோ எனக்கு இல்லை ), சம்பளம் வாங்கிட்டு நேரா நான் பரீட்சை க்கு முதல் நாள் போன பாபா மன்றத்துக்கு போய் பாபா பாதத்துல சம்பள கவரை அரை மணி நேரம் அப்படியே வச்சிட்டேன் , அன்னைக்கு சாயங்காலம் பைரவர் பூஜை ல அந்த பூசாரிகிட்ட விசயத்தை சொல்லி பைரவர் பாதத்துல வச்சி தர சொன்னேன் , அன்னைக்கு பைரவருக்கு மாலை போட சொல்லியிருந்தேன் வந்து பணம் தரேன்ன்னு சொல்லியிருந்தேன் , பூஜை முடிஞ்சதும் 500 ரூபாய் கொடுத்தேன் , நான் சம்பாரிச்சு செய்த முதல் செலவு அது , முதல் மாச ஞாபகமா இருக்கணும் ன்னு பாபாவோட சிலையை வாங்கி கிட்டு குருநாதருக்கு போன் பண்ணி நன்றியை சொன்னேன் , எனக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க ன்னார் , இது உங்க உழைப்பு நான் என்ன பண்ணினேன் ன்னு ரொம்ப கூலா சொன்னார் , சார் இது என் வாழ்க்கைல முதல் வெற்றி , நானும் என் குடும்பமும் நீங்க இல்லன்னா உயிரோடவே இருந்திருக்க மாட்டோம் ன்னு சொன்னேன் , வாழ்த்தினார்.

எனக்கு மாந்த்ரீகம் , மந்திரம் , பில்லி சூனியம் இதை பத்தியெல்லாம் இப்போ கவலையும் கிடையாது, பயமும் இல்லை , குருநாதர் ( பாபா ) துணைக்கு இருக்கார் , பைரவர் துணைக்கு இருக்கார் ன்னு ஒரு தைரியம் , இவ்வளோ கெட்ட விஷயத்துலயும் நிறைய நன்மைகள் ஏற்பட்டிருக்கு , ஒருவேளை இந்த மாதிரி பாதிப்பு இல்லாதவங்க குருநாதர் சொன்ன இந்த வழிபாட்டை செய்தால் அவங்களுக்கு சீக்கரமாவே பலன் கிடைக்கும் ன்னு தோணுது .


இந்த ப்ளாக் முழுக்க அவரோட ஆசிர்வாதத்துல உருவாக்கப்பட்டது , அவர் சொன்ன பிரதானமா பரிகாரங்களை எழுதி இருக்கேன், இதுநாள் வரைக்கும் அதிக பட்சம் 4 மணி நேரம் தான் மொத்தமாவே அவரை நேர்ல சந்திச்சு இருப்பேன் , ஆனா என் வாழ்கையையே ரொம்ப தூய்மையா மாத்திட்டார் , ஒரு வேளை அவரை நான் பார்க்கவே இல்லன்னா இந்த கட்டுரைல பாதிக்கும் மேல எழுதின விஷயங்கள் நடந்திருக்காது ,நான் இருந்திருக்கவே மாட்டேன் , எனக்கு  பைரவர் யாருன்னும் தெரிஞ்சு இருக்காது , பாபா யாருன்னும் தெரிஞ்சு இருக்காது , தெய்வத்தோட மகிமைகள் எதுவும் தெரிஞ்சு இருக்காது , தீய சக்திகளோட அமானுஷ்யம் மட்டுமே தெரிஞ்சு பயந்துகிட்டு இருந்த எனக்கு கடவுளோட அற்புதங்கள் எதுவும் தெரியாமலே போயிருக்கும் .

சமீபத்துல அவரை சந்திச்சப்போ சிவபெருமான் காட்சி கொடுத்ததை பத்தியும் பைரவரை பத்தியும் , பாபாவை பத்தியும் கேட்டேன் 

சார் நான் ஒரு சாதாரண ஆளு , தீடீர்ன்னு சம்பந்தமே இல்லாம பைரவரும் , பாபாவும் வாழ்க்கைல வந்தாங்க என்ன காரணம் ன்னு தெரிஞ்சுக்கலாமா ன்னு கேட்டேன் 

பைரவர் திடீர்ன்னு வரலை நீங்க பிறந்ததுல இருந்தே கூடவே இருந்திருக்கார் , நீங்க உணரத்தான் இத்தனை வருஷம் ஆயிடுச்சு 

சார் அப்போ மாந்த்ரீகதுல நானா போய் மாட்டிகிட்டது , அது முன்ஜென்ம மோசமான கர்ம வினை , அதான் அதைவிட்டு வெளியே வந்துட்டீங்களே அப்புறம் ஏன் அந்த வார்த்தை பத்தி பேசுறீங்க, அதை பத்தி ஏதும் பேச வேண்டாம் . கடவுளை பத்தி பேசுவோம் , உங்களை பத்தி பேசுவோம்
4 தலைமுறைக்கு முன்னாடி கொலை செய்யப்பட்ட ஆன்மா வுக்கு திலா ஹோமம் பண்றவரைக்கும் இப்படித்தான் இருக்கும் , எதனால இப்படியெல்லாம் நடக்குது ன்னு தெரியாம துன்பத்தை அனுபவிப்போம் , முதல்ல அந்த பரிகாரத்தை பண்ணுங்க ( நிறைய தடை வரும் , அதை மீறி தான் அந்த பரிகாரத்தை பண்ணனும் , அதுக்கப்பறம் ஒன்னும் பிரச்சனையே வராது ,

என்னோட மறுபிறவி பத்தி பேச ஆரம்பிச்சார்

இதுக்கு முன்னாடி உங்களுக்கு 8 பிறவி இருந்தது 8 பிறவியுமே மனித பிறவிகள் தான் அதுல சிவனை தீவிரமா வழிபட்டு வந்தீங்க , அதோட தொடர்ச்சி தான் இந்த பிறவியிலும் சிவனை வழிபட்டு வரீங்க , இன்னும் ரெண்டு பிறவிகள் உங்களுக்கு இருக்கு , 45 வயசுக்கு மேல சக்தி வழிபாடு பண்ணுவீங்க   .  சக்தி வழிபாடு ஆரம்பிச்சா பிறவி தொடர் முடியறதா அர்த்தம் , அடுத்த பிறவியில அந்தணராக பிறந்து இப்போ அரைகுறையா தெரிஞ்ச ஞானத்தை முழுவதுமா தெரிஞ்சு பாதியிலே சந்நியாசம் வாங்கிட்டு போய்டுவீங்க , அதுக்கு அடுத்த பிறவி பரதேசி மாதிரி இருப்பீங்க  கோவில்கள்ல்லாம் பார்த்திருப்பீங்களே அந்த மாதிரி ஒரே இடத்துல இருந்து  முழுமையா பிரம்ம ஞானத்தை அடைஞ்சு பிரம்மாகவே வாழ்ந்து முக்தி அடைவீங்க ன்னு சொன்னார் .

( ஜாதகம் கத்துக்கிட்ட பிறகு என் ஜாதகத்தை பார்த்தப்போ உணர்ந்த விஷயம் என் ஜாதகத்துல லக்னம் , ராசி , குரு  இந்த முன்றுமே குருவோட நட்சத்துரத்துல நிக்குது , 5 மிடதுல குரு நின்னு ராசியையும் , லக்னதையும் பார்க்கிறார் , இந்த அமைப்பு தானோ என்னோவோ தெய்வத்தோட உறவாட வச்சிருக்கு குருவோட தொடர்பை ஏற்படுத்தி வச்சிருக்கு , இந்த அமைப்பு கடவுள் கிட்ட கொண்டு போய் சேர்த்தது, ஆனா  எந்த அமைப்பு தீய சக்தி கிட்ட மாட்டிவிட்டது ன்னு தான் தெரியலை , இந்த ஒரு அமைப்பை தவிர மீதி எல்லாமே மோசமான அமைப்பு தான் ) 
 எனக்கு ஆபீஸ் ல வேலை செஞ்சுகிட்டு இருக்கும் போதே  பாபா பேச ஆரம்பிச்சாங்க , எதிர் ல நிக்கற கஷ்டமரை பத்தி பாபா சொல்ல ஆரம்பிச்டுவார் , அவங்களுக்கு நடக்கற நல்லதை பத்தியும் சொல்ல சொல்லுவார் , கெட்டதை பத்தியும் அவங்களுக்கு விதி இருந்த சொல்ல சொல்லுவார் அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அடிபட்டு சாக போறாங்கன்னு சொல்லுவார் , அது எனக்கு கண்ணு முன்னாடியே தெரியும் , காப்பாத்த படணும் ன்னு விதி இருந்தா பாபா வே அதுக்கு வழியும் காட்டுவார் , இல்லைன்னா வழி சொல்ல மாட்டார் ,
நமக்கு ஒரே சங்கடமாவும்  இருக்கும்.  எனக்கே பல தடவை இதை விட்டுட தோணும் , ஆனா பாபா விட மாட்டேங்கிறார் ஒரு கட்டத்துல என்னால ஆபீஸ் ல உக்காந்து வேலை செய்ய முடியலை , VRS வாங்கிட்டு முழுசா சர்விஸ் ல இறங்கிட்டேன் .

என்னோட தாத்தா ( அம்மாவோட அப்பா ) மிக பெரிய ஞானி, தீர்க்கதரிசி , காவிரி ஆத்துல ஸ்நானம் பண்ணிக்கிட்டு இருக்கும் போது வாயுவை ஸ்தம்பனம் பண்ணி தண்ணிருக்கு ஒரு அடி மேல நிற்பாங்கலாம் , காத்துல நடந்து வருவாங்கலாம் , இங்க இருந்துகிட்டே பிரபஞ்சம் முழுக்க போய் வருவாங்களாம் , ஏனோ  தங்களை வெளி காட்டிக்கமா வாழ்ந்துட்டங்க ன்னு சொன்னார் - கேக்கவே  பிரமிப்பா இருந்தது  (காஞ்சி மஹா பெரியவர் பெருமைகள்  ரகசியங்கள் ங்கற புத்தகத்துல பெரியவர் இதே போல செய்ததா படிச்சா ஞாபகம் வந்தது , அப்படி பட்டவரை தரிசிக்கற கொடுப்பனை இல்லாம போய்டுச்சு )

எங்க அம்மா கிட்ட அம்பாள் பேசுவாங்க , என் கூட பிறந்தவங்க 8 பேர் அதுல எனக்கு மட்டும்தான் இப்படி , மத்தவங்க யார்கிட்டயும் கடவுள் பேசலை , அது எதோ வழிவழியா வரும் போல, எனக்கும் யாரும் எதுவும்  சொல்லி தரலை , ஒரு நாள் தானா பாபா பேச ஆரம்பிச்சார் , அப்புறம் என்னனென்ன பண்ணனும் அவரே வழிகாட்ட ஆரம்பிச்சார் .


(அவர் ஒரு பிராமணர், தினமும் அவர் வீட்டுலயே  கணபதி ஹோமம் பண்றவர், அவர் ஒரு ஹோமியோபதி மருத்துவரும் கூட .)

 என் நண்பன் ஒருத்தனை அவர்கிட்ட அனுப்பினேன் , கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகுது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை , வேலையும் சரியாய் அமையல அதற்காக அவர்கிட்ட அனுப்பினேன் , அவனுக்கு ஜாதகத்துல 5 மிடதுல கேது இருக்கு , அதற்க்கு கீழ்பெரும்பள்ளம் கேது பரிகாரம் ஸ்தலத்துல பரிகாரம் பண்ணனும் அங்க இருக்கற அர்ச்சகர் நெம்பர் தரேன் போய் பரிகாரம்  பண்ணிக்கிட்டு வாங்க , உங்களுக்கு தான்   குறை , உங்க மனைவி உடல் ல எந்த குறையும் இல்ல , அதுக்கு மருந்து சொல்றேன் நாட்டு மருந்து கடைல கிடைக்கும்   குறிப்பிட்ட நாள்வரைக்கும் சாபிட்டுக்கிட்டு வாங்க, அது வரைக்கும் திருச்சி ல இருக்கற உத்தமர் கோவில் ( டோல்கேட் ) இருக்குற பைரவருக்கு தினமும் விளக்கு போட்டுட்டு வாங்க ன்னு சொல்லியிருக்கார்  , இவனுக்கு விரக்தி அதனால ஒரு விஷயத்தை   கூட செய்யல , அந்த மருந்தை பத்தி கேட்டேன் ( இந்த ப்ளாக் ல போடறதுக்கு கேட்டேன் , யாருக்காவது பயன்படுமே ன்னு கேட்டேன் ), அதையும் மறந்துட்டேன் சொன்னான் , கடைசியா அவரை சந்திச்சப்போ அவர்கிட்டேயே  கேட்டேன் , அது தகுதியானவங்களுக்கு , தேவைப்பட்ட நேரத்துக்கு அவங்களுக்கு தானா கிடைக்கும் ன்னு சொல்லிட்டார்) 


எனக்கு குருநாதர்  நிறையவே ஆன்மிக ரகசியங்களை சொல்லி கொடுத்தார் 

 இந்த பிரபஞ்சத்துல பூமி ஒரு சின்ன தூசு , இந்த பூமி ல நான் ஒரு  நிரந்திரம் இல்லாத சின்ன துகள் . அப்படி பட்ட எனக்கு இந்த பிரபஞ்சத்தையே படைச்ச சக்தி பைரவரோட பாதத்தை என்னை பற்றி கொள்ள வச்சாரே . அப்படிப்பட்ட என் குருநாதருக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டிருக்கேன்.


என்னை போலவே நிறைய பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கணும் ன்னு விரும்புறேன்
 
அப்படிப்பட்ட என் குருநாதர் விஸ்வநாதன் சார் அவர்களை சந்திக்க விரும்புறவங்க போன் நெம்பர் மூலம் முன் அனுமதி பெற்று அவரை சந்திக்க விரும்புவோர்
இந்த ஈமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்க . இந்த E-MAIL முகவரி என்னுடையது , இதுக்கும் குருநாதருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

saibabatrichy@gmail.com


நம் குருநாதர் சாய்பாபா உபாசகர் அவர்களின் YOUTUBE CHANNELYOUTUBE CHANNEL NAME :         
souls of astrology
யார் அதிர்ஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ அவர்கள் சாய்பாபாவின்  வழிபாட்டை எய்துகிறார்கள்.தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் சாய்பாபா ஆசிர்வதிக்கிறார்  -ஸ்ரீ  சாய் சத்சரித்திரம்.
ஓம் சாய் ராம்
                               பைரவா சரணம்


ஓம் சாய் ராம்

23 comments:

 1. வணக்கம் அண்ணா

  நலமா

  எல்லாம் அவன் செயல்

  தங்களுடைய செல் எண் கிடைக்குமா...

  நன்றி

  மு. பிரசன்ன குமார்
  prasanna.stmp@gmail.com

  ReplyDelete
 2. Please send me adress my no +60122992014

  ReplyDelete
  Replies
  1. PLEASE MAIL TO THIS EMAIL ID SIR

   I'LL GIVE U GURU'S NUMBER

   I CAN'T REVEAL IN OPEN PLACE

   Delete
 3. நானும் ஒரு சாய் பக்தைதான். உங்கள் பதிவு எனக்கு ஒரு நல்ல வழியை காட்டியுள்ளது. நன்றி.

  ReplyDelete
 4. உங்கள் பதிவு எனக்கு ஒரு நல்ல வழியை காட்டியுள்ளது. நன்றி ஐயா.

  ReplyDelete
 5. ஐயா தங்களை சந்திக்க வேண்டும் ஐயா,

  ReplyDelete
  Replies
  1. please send an email to saibabatrichy@gmail.com

   i will send guru's ph no and address

   omsairam

   Delete
 6. Hello Gee!
  Could you please check your email(saibabatrichy@gmail.com) and please send me your contact numbers and guruji's number as well. I was waiting for reply.

  Thanks in advance!

  SRR

  ReplyDelete
 7. Hello Gee!

  I've sent email request as you said, to saibabatrichy@gmail.com. Could you please check the email and send your's and guruji's contacts and your time to reach over the phone?

  Many thanks in advance!

  Ram

  ReplyDelete
 8. Dear Mr Senthil
  Very very very sorry for the delayed response. With your divenly help, we got Guruji's blessings and guidence. Because of Guruji's blessings only, my family is living now. There is no word to express my feelings.
  Thank you for service.
  Best regards
  Mani Vannan M

  ReplyDelete
  Replies
  1. Dear Anonymous,

   can u pls give us gurujis phone number

   Delete
 9. எனக்கும் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருந்தது.பைரவரை வழிபட்ட பின் கஷ்டங்கள் பறந்து ஓடியது.உங்களோட அனுபவங்கள கஷ்டம் வர்றப்ப அடிக்கடி படிப்பேன். என்னோட கணவர் இதையே எத்தனை தடவ படிப்பே?ன்னு கேட்பார். படிக்கிறப்ப ஒரு தன்னம்பிக்கை வரும்.நான் தமிழ் ஆசிரியருக்கு படித்திருக்கிறேன். எனக்கு வேலை கிடைப்பது கை வரை வரும். வாய்க்கு வராது. 2005லிருந்து 2017 இன்று வரை வேலைக்காக போராடிக்கொண்டிருக்கிறேன்.நான் T.T.C.,D.T.E.,B.LIT.,B.ED.,படித்திருக்கிறேன். 2013லிருந்து பைரவ வழிபாடு செய்கிறேன்.இப்போதும் Interview சென்றுவந்தேன். கிடைக்கும் என்று நம்பியது நழுவுகிறமாறி இருக்கிறது. என்னுடைய கணவர் இது விஷயமாக சென்னை சென்றுள்ளார். ஒரு நிம்மதிக்காக எப்போதும் போல் படித்தேன்.என்னுடைய அனுபவங்களை பகிர்ந்தேன். என் கணவர் வெற்றியுடன் திரும்ப பைரவர் வழிகாட்டுவார் என்று எப்போதும் போல் நம்புகிறேன். ஓம் ஹுரீம் க்ரீம் கால பைரவராய நமஹ. ஓம் சாய்ராம்.என் கணவர் வெற்றியோடு திரும்பினால் 9வியாழக்கிழமை சாய்பாபா கோயிலுக்கு தொடர்ச்சியாக வருவதாக வேண்டியிருக்கிறேன். பைரவ மகிமைகளை பரப்புவோம்.

  ReplyDelete
 10. Wow! I just decided couple of days ago to learn Manthrigam seriously. I decided to contact the advertisement phone #. I was busy with Vinayaga chathurthi and somehow came through your blog when I was looking for a photo of Varahi on the web. I am a Sai Baba devotee too.After reading I feel it is no accident but an incident. Please email Guruji's contact details. Thank you verymuch for sharing.
  Regards,
  KK

  ReplyDelete
  Replies
  1. please send an email to saibabatrichy@gmail.com , i will send my guru's phone number

   Delete
 11. I am jayakumar,Advocate. I am also Sai devotee. I want your guru's number and address.Now I am in very critical condition. My mail is is jayakumar21173@gmail.com.

  ReplyDelete
 12. I am Jayakumar, Advocate from Chennai.I am also the Saibaba Devotee.Now I am in very critical condition.I need your guru's number and address. My mail is is jayakumar21173@gmail.com. I am expecting your reply.

  ReplyDelete
 13. Sir l have many problems in my life. I need your guru number. And also I mailed you please reply as soon as possible sir..

  ReplyDelete
 14. Sir enaku life la handle Panna mudiyadha alavuku problems..Plz send ur Guru number already I have mailed you.plz reply as soon as possible

  ReplyDelete