அர்த்த நாரீச்வர ஸ்தோத்ரம்.MP3
சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய
தங்க நிறங்கொண்ட பகுதி உடலையுடையவளும், கர்பூர வெண்ணிறமான பகுதி சரீரத்தையுடையவரும், கொண்டயிட்ட கேசத்தையுடையவளும், ஜடை தரித்தவரும் ஆகிய சிவைக்கும் சிவனுக்கும் நமஸ்காரம்.
கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய
க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
நம:சிவாயை ச நம:சிவாய
கஸ்தூரி கலந்த குங்குமம் பூசியவளும், மன்மதனை இயங்குபவளுமான பார்வதிக்கு நமஸ்காரம். சிதைப்பொடி பூசியவரும், மன்மதனை வீணாக்கியவருமான சிவனுக்கு நமஸ்காரம்.
ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
நம:சிவாயை ச நம:சிவாய
பார்வதீ தனது கையில் தங்கத் தோல்வளையும், காலில் கங்கணமும், சதங்கையும் அணிந்துள்ளாள் அவை கிலுங்கி ஒசையெழுப்புகின்றன. பரமேச்வரனோ திருவடிகளில் நாககாற்சதங்கையும், தோள்வளையும் அணிந்துள்ளார். அவ்விருவருக்கும் நமஸ்காரம்.
விசால நீலோத்பல லோசனாயை
விகாஸி பங்கேருஹ லோசனாய
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
நம:சிவாயை ச நம:சிவாய
இரட்டைப் படையில் மலர்ந்த கரு நெய்தல் பூ போன்ற கண்களையுடையவள் பார்வதீ. ஒற்றைப்படையில் மலர்ந்த தாமர மலரொத்த கண்களையுடையவர் பாரமேச்வரன். இவ்விருவருக்கும் நமஸ்காரம்.
மந்தார மாலா கலிதாலகாயை
கபால மாலாங்கித கந்தராய
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம:சிவாயை ச நம:சிவாய
மிக நேர்த்தியான பட்டும், மந்தார மாலையும் அணிந்து காட்சி தருகிறாள் பார்வதீ. திகம்பரனாயும், கழுத்தில் கபால மாலையணிந்தும் காட்சி தருகிறார் பரமேச்வரன். மங்கள கரமான இந்த தம்பதியருக்கு நமஸ்காரம்.
அம்போதர ச்யாமல குந்தலாயை
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய
நிரீச்வராயை நிகலேச்வராய
நம:சிவாயை ச நம:சிவாய
அகிலாண்டிசேவரியாக, நீருண்ட மேகமெனக் கரிய குந்தகக் தோகையுடன் பார்வதியும், அகிலாண்டகோடி பிரம்ம நாயகராய, மின்னலொளி போன்ற ஜடையுடன் பரமேச்வரனும் விளங்குகின்றார். அவ்விருவருக்கும் நமஸ்காரம்.
ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய காயை
ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய
ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே
நம:சிவாயை ச நம:சிவாய
உலகப் படைப்பையே நோக்கங்கொண்டு நடனம் புரிகிறாள் உலக மாதா பார்வதீ, உலகத் தந்தையாக, பிறிதொருகாலம், உலக முடிவையாக்கும் தாண்டவம் புரிகிறார் பரமேச்வரன். அவ்விருவருக்கும் நமஸ்காரம்.
ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை
ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய
சிவான்விதாயை ச சிவான்விதாய
நம:சிவாயை ச நம:சிவாய
ஒளிமிக்க வைரங்கள் பதித்த குண்டலத்துடன் மங்களமாய் பார்வதீயும், மிளிரும் நாகபூஷணமணிந்து மங்கள ஸ்வரூபியாய் சிவனும் காட்சி தர நான் அவர்களை நமஸ்கரிக்கிறேன்.
ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் யோ
பக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ
ப்ராப்னோதி ஸெளபாக்ய மனந்தகாலம்
பூயாத் ஸதா தஸ்ய ஸமஸ்த ஸித்தி:
விருப்பங்களை நிறைவேற்றும் இவ் எட்டு ஸ்லோகங்களை பக்தியுடன் படிப்பவர் பூவுலகில் மதிப்பிற்குறியவராய் நீண்ட ஆயுள் பெற்று எல்லா ஸெளபாக்கியங்களையும் பெற்றுய்வர்.
அர்த்த நாரீச்வர ஸ்தோத்ரம் முற்றிற்று.
No comments:
Post a Comment