சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் - MP 3
  
                         ANOTHER 
 1.ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ  
 மஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமாந்யா  
 விதீந்த்ராதிம்ரிக்யா கணேசாபிதா மே  
 விதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்தி  
இளம் பாலகனாக இருப்பினும் மலைபோன்ற இடையூறுகளைப் போக்குபவரும் பெரும் 
யானைமுகத்தவராயினும் சிங்கத்தின் மரியாதைக்குறியவரும் (பரமேச்வரனின் 
மரியாதைக்குறியவர்) , பிரம்மதேவன், இந்திரன் முதலியோரால் தேடித்தேடி 
வழிபடத் தக்கவரும், மங்களஸ்வரூபினியான கணேசப் பெருமான் எனக்கு செல்வம் 
சேர்ப்பிக்கட்டும். 
 2.ந ஜாநாமி சப்தம் ந ஜாநாமி சார்தம்  
 ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம்  
 சிதேகா ஷடாஸ்யா த்யோததே மே  
 முகாந்நி:ஸரந்தே கிரஸ்சாமி சித்ரம் 
  
எனக்கு சப்தமும் தெரியாது அதன் பொருளும் தெரியாது. அதனாலேயே 
செய்யுட்காவியமும் வாசனகாவியமும் அறியேன். ஆனால் ஆறுமுகமான ஞானவடிவம் ஒன்றே
 என் மனதில் நிழலாடுகிறது. வாயினின்று ஏதேதோ விசித்ரமான சொற்கள் 
வெளிப்படுகின்றன. 
 3.மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்  
 மநோஹரிதேஹம் மஹச்சித்தகேஹம்  
 மஹீதேவதேவம் மஹாவேதபாவம்  
 மஹாதேவபாலம் பஜே லோகபாலம்  
மயில்மேல் ஏறி, மஹாவாக்யர்களின் முழுப் பொருளாக அமைந்து, அழகிய வடிவுடன் 
மஹான்களின் மனதில் நித்யவாஸம் செய்யும் மஹாதேவன் மகனை வழிபடுகிறேன். அவர் 
உலகைக் காப்பவர். வேதவிழுப்பொருள் ஸுப்ரம் மண்யராவர். 
 4.யதா ஸந்நிதாநம் கதா மாநவா மே  
 பவாம்போதிபாரம் கதாஸ்தே ததைவ  
 இதி வ்யஞ்ஜயஸிந்துதீரே ய ஆஸ்தே  
 தமீடே பவித்ரம் பராசக்திபுத்ரம்  
எப்பொழுது மனிதர்கள் என் ஸந்நிதானம் வந்து சேர்ந்தார்களோ அப்பொழுதே 
ஸம்ஸாரக்கடலையும் கடந்து விட்டார்கள். என்று காட்டுவார் போல் கடற்கரையில் 
நிலைப் பெற்றிருக்கும் அந்த பராசக்தி புத்ரனைத் துதிக்கிறேன். 
 5.யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா  
 ஸ்ததைவாபத:ஸந்திதௌஸேவதாம் மே  
 இதீவோர்மிபங்க்தீர் ந்ருணாம் தர்சயந்தம்  
 ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்  
ஆர்பரிக்கும் பெருங்கடல் அலைகள் சற்று நேரத்தில் அடங்கிவிடுவது போல என்னை 
ஸேவிக்கும் பக்தர்களின் இன்னல்கள் இடம் தெரியாமல் போய்விடும்... என்று 
குறிப்பிடத்தானோ இவர் இப்படி கடலலைகளைக் காட்டுகின்றார்!அவ்வாறு 
காட்சியளிக்கிற குகப்பெருமானை எப்பொழுதும் ஹ்ருதயக்கமலத்தில் 
த்யானிக்கிறேன். 
 6.கிரௌ மந்நிவாஸே நரா யேsதிரூடா  
 ஸ்ததா பர்வதே ராஜதே தேsதிரூடா:  
 இதீவ ப்ருவந்கந்தசைலாதிரூட:  
 ஸ தேவோ முதே மே ஸதா ஷண்முகோsஸ்து  
நான் வஸிக்கும் மலை மீது எவர் ஏறி வந்தனரோ அவர் அப்போதே மலை போன்று மிக 
உயர்ந்த பதவியில் விளங்குவர் - என்று கூறுவார் போல கந்தமாதன மலையில் 
வீற்றிருக்கும் ஷண்முகப்பெருமான் என்னை மகிழ்விக்கட்டும் . 
 7.மஹாம்போதிதீரே மஹாபாபசோரே  
 முநீந்த்ராநுகூலே ஸுகந்தாக்ய சைலே  
 குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்  
 ஜநார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம் தம்  
பெருங்கடற்கரையில் மஹாபாபங்களைப் போக்கும் முனிவர்க்கு இசைவான கந்தகமான 
மலையில் குகைக்குள் குடிகொண்டு விளங்கும் அனைவரது அல்லல் தீர்க்கும் குஹனை 
சரணடைகிறோம். 
 8.லஸ்த்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காம தோஹே  
 ஸுமஸ்தோமஸஞ்சந்நமாணிக்யமஞ்சே  
 ஸமுத்யத்ஸஹஸ்ரார்கதுல்யப்ரகாசம்  
 ஸதா பாவயே கார்திகேயம் ஸுரேசம்  
மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுகின்ற, மலர் நிரம்பிய தங்கக்கட்டிலில், 
தங்கமயமான விமானத்தின்கீழ் ஆயிரம் சூரியர்கள் போல் ஒளி வீசுகிற 
கார்த்திகேயனை எக்கணமும் த்யானிக்கிறேன். 
 9.ரணத்தம்ஸகே மஞ்ஜுலேsத்யந்தசோணே  
 மநேஹரிலாவண்யபீயூஷபூர்ணே  
 மந:ஷட்பதோ மே பவக்லேசதப்த:  
 ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே  
அன்னப்பறவைகள் கால்மாறிப் போய்விட்டதே என ஒல மிட ஹேதுவானதும் அழகியதும், 
மிகவும் சிறப்பானதும், மனதைக்கவரும் அழகமுதம் நிரம்பப் பெற்றதுமான ஸ்கந்த 
பெருமானே!உனது திருவடிதாமரையில் என் மனதாகிய தேனீ நிலையாக களிப்படையட்டும்.
 
 10.ஸுவர்ணாபதிவ்யாம்பரைர்பாஸமாநாம்  
 க்வணத்கிங்கிணீமேகலாசோபமாநாம்  
 லஸத்தேமபட்டேந வித்யோதமாநாம்  
 கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம்  
தங்கமென பளபளக்கும் திவ்யமான ஆடையும், ஒலிக்கும் சலங்கை மேகலையும், 
தங்கப்பட்டையும் கொண்டு ஜ்வலிக்கும் இடுப்பை, ஸ்கந்தனே!த்யானம் செய்கிறேன்.
 
 11.புலிந்தேசகநேயாகநாபோகதுங்க  
 ஸ்தநாலிங்கநாஸக்தகாச்மீரராகம்  
 நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:  
 ஸ்வபக்தாவநே ஸ்வர்தா ஸாநுராகம்  
ஸ்ரீ வல்லிதேவியின் பருத்து விம்மிய மார்பகத்தில் ஆலிங்கனம் செய்யும்போது 
குங்குமப்பூகலந்த சந்தனப்பூச்சு படிந்த உனது மார்பை வணங்குகின்றேன். தாரகனை
 அழித்த வேலவா!அந்த உன் மார்பு, பக்தர்களின் பாதுகாப்பில் அனவரதமும் அக்கரை
 கொண்டதன்றோ! 
 12.விதௌ க்லுப்தத்ண்டாந்ஸ்வலீலாத்ருதாண்டா-  
 ந்நிரஸ்தேபசுண்டாந்த்விஷத்காலதண்டாந்  
 ஹதேந்த்ராரிஷண்டாஞ்ஜகத்த்ராண சௌண்டாந்  
 ஸதா தே ப்ரசண்டாஞ்ச்ரயே பாஹ தண்டாந்  
ப்ரம்ம தேவனுக்கே தண்டனை கொடுத்தும், எளிதில் அண்டசாரங்களைத் தாங்கியும், 
கஜாஸுரன் துதிக்கையை ஒதுக்கித்தள்ளியும், எதிரிகளை காலதண்டமென 
வெருட்டியும், இந்திரனின் எதிரிகளை அவ்வப்போது அழித்து உலகைக் காக்கத்திறம்
 பெற்றும் விளங்கிய உன் பன்னிரு கைகளை சரணமடைகின்றேன். 
 13.ஸதா சாரதா:ஷண்ம்ருகாங்கா யது ஸ்யு:  
 ஸமுத்யந்த ஏவ ,திதாச்சேத்ஸமந்தாத்  
 ஸதா பூர்ணபிம்பா:கலங்கைச்ச ஹிநா  
 ஸ்ததா த்வந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்  
ஒ ஆறுமுகப் பெருமானே!உனதருளால் ஒருவேளை இளவேனிற்காலத்து சந்திரர்கள் 
அறுவர் நாற்புரமும் தோன்றுபவராகவும், கசடு இல்லாமல் முழு வடிவில் 
இருப்பவராகவும் இருந்தால் உனது முகத்திற்கு அவரை ஒப்புவமையாகக்கூற இயலும். 
 14.ஸ்புரமந்தஹாஸை:ஸஹம்ஸாநி சஞ்சத்  
 தடகாக்ஷவலீப்ருங்கஸங்கோஜ்ஜ்வலாநி.  
 ஸுதாஸ்யந்திபிம்பாதராணீசஸ¨நோ  
 தவாலோகயே ஷண்முகாம் போருஹாணி  
ஒ மஹேசன் மைந்தனே!உன் முகங்கள் ஆறும் ஆறு தாமரைகள் எனக்காண்கிறேன். 
அவற்றில் புன்முறுவல் இருப்பதால் அன்னங்கள் உள்ளன. கடைக்கண்கள் துவள்வதால் 
அழகிய தேனிக்கள் அசைந்தாடுகின்றன. அமிருதமே சிந்தும் சிவந்த உதடுகள் 
இருப்பதால் தேனுக்குப் பஞ்சமில்லயே! 
 15.விச்லேஷ கர்ணாந்ததீர்கேஷ்வஜஸ்ரம்  
 தயாஸ்யந்திஷ த்வாதசஸ்வீக்ஷணேஷ  
 மயீஷத்கடாக்ஷ:ஸக்ருத்பாதிதச்சேத்-  
 பவேத்தே தயாசீல கா நாம :  
ஒ கருணை காட்டும் ஸ்வபாவமுள்ளவனே!உனக்கு பனிரெண்டு கண்கள், அவை காதுவரை 
நீண்டவை, பரந்தவை, கருணைததும்பும் இணத்தவை, என் மீது சிறிய கடாக்ஷம் 
விழக்கூடாதா?அதில் உனக்கு என்ன இழப்பு ஏற்படும்? 
16.ஸுதாங்கோத்பவோ மேஸி ஜீவேதி ஷட்தா  
 ஜபந்மந்த்ரமீசே முதா ஜிக்ரதே யாந்  
 ஜகத்பாரப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:  
 கிரீடோஜ்ஜ்வ்லேப்யோ நமோ மஸ்தகேப்ய:  
என்னில் பிறந்த குழந்தாய்!நீ பல்லாண்டு வாழ்க... என்று ஆறுமுறை மந்திரத்தை
 ஜபித்து பரமேச்வரன் உச்சிமுகர்ந்த அந்த ஆறு தலைகளுக்கு என் நமஸ்காரங்கள். ஒ
 ஜகன்னாத!அவை கிரீடமணிந்து அழகாய் இருப்பவை மட்டுமில்லை. உலகபாரம் 
முழுவதும் தாங்குபவை ஆயிற்றே! 
 17.ஸ்புரத்ரத்நகேயூரஹாராபிராம-  
 ச்சலத்குண்டலஸ்ரீலஸத்கண்டபாக:  
 கடௌ பீதவாஸா:கரே சாருசக்தி:  
 புரஸ்தாந்மமாஸ்தாம் புராரேஸ்தநூஜ:  
'பளிச்'என விளங்கும் ரத்ன கேயூரம், ஹாரம் இவற்றால் அழகியவரும், அசையும் 
குண்டலங்கள் அழகுமிளிர பளபளக்கும் கன்னக்கதுப்புடனும், இடையில் மஞ்சள் 
பட்டும், கையில் அழகிய சக்தி ஆயுதமும் கொண்ட புராரியின் புதல்வன் என் 
முன்னே தோன்றட்டும். 
 18.இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தாந்ப்ரஸார்யா  
 ஹ்வயத்யாதராச்சங்கரே மாதுரங்காத்  
 ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்  
 ஹராச்லிஷ்டகாத்ரம் ப்ஜே பாலமூர்திம்  
குழந்தாய் இங்கே ஒடி வந்துவிடு!என்று கைகளை நீட்டி சங்கரன் பரிவுடன் 
கூப்பிடுகையில், தாயின் மடியிலிருந்து தாவி தந்தையை அடைந்தவுடன், அவர் இருக
 அணைத்துக்கொண்ட பால ஷண்முகனை நான் ஸேவிக்கிறேன். 
 19.குமாரேசஸ¨நோ குஹ ஸ்கந்த ஸேநா  
 பதே சக்திபாணே மயூராதிரூட  
 புலிந்தாத்மஜாகாந்த பக்த்தார்திஹாரிந்  
 ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் த்வம்  
ஒ குமாரரே!ஈசன் மகனே!குஹனே!ஸ்கந்தனே!ஸேனாபதியே!சக்தி 
பாணியே!மயில்வாஹனனே!வள்ளிமணாளனே!பக்தர் துயர் துடைப்பவனே!ப்ரபுவே!தாரகனை 
ஸம்ஹரித்தவனே!என்னை எப்போதும் காப்பாயாக! 
 20.ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸஞ்ஜ்ஞே விசேஷ்டே  
 கபோத்காரிவக்த்ரே பயோத்கம்பிகாத்ரே  
 ப்ரயாணோந்முகே மய்யநாதே ததாநீம்  
 த்ருதம் மே தயாலோ பவாக்ரே குஹ த்வம்  
புரக்கரணங்கள் அடங்கி, உணர்வற்று, செயலற்று கபங்கொண்டும் வாயுடனும், 
பயந்தால் நடுங்கும் உடலுடனும், கவனிப்பாரில்லாமல் நான் மேலுலகம் புறப்படும்
 ஸமயத்தில் என்முன்னே தோன்றுவீராக!ஹே தயாபரனே!குக! 
 21.கருதாந்தஸ்ய தூதேஷ சண்டேஷ கோபா-  
 த்தஹ ச்சிந்த்தி பிந்த்தீதி மாம் தர்ஜயத்ஸு  
 மயூரம் ஸமருஹ்ய மா பைரிதி த்வம்  
 புர:சக்திபாணிர்மமாயஹி சீக்ரம்.  
யமதூதர்கள் கொடியவர்கள்;அவர்கள் கோபத்துடன் இவனைக் கொளுத்து, வெட்டு, 
பிளந்து தள்ளு - என்று அதட்டுகையில் ஆறுமுகனே!நீ மயில்மீதேறி பயப்படாதே 
என்று தேற்றிக்கொண்டு சக்தி ஆயுதத்துடன் சட்டென என் முன்னே வந்துவிடு. 
 22.ப்ரணாம்யாஸக்ருத்பாதயோஸ்தே பதித்வா  
 ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்தயே நேகவாரம்  
 ந வக்தும் க்ஷமோஹம் ததாநீம் க்ருபாப்தே  
 ந கார்யாந்தகாலே மநாகப்யுபேக்ஷ  
ஹே ப்ரபோ!உமது கால்களில் வீழந்து நமஸ்கரித்து கெஞ்சிப் பலமுறை 
பிரார்த்தித்துக் கொள்கிறேன். கிருபா ஸமுத்திரமே!அந்த கடைசீ காலத்தில் நான்
 சொல்ல முடியாமல் போகலாம். ஒரு போதும் என்னை கைவிடலாகாது. 
 23.ஸஹஸ்ராண்டபோக்தா த்வயா சூரநாமா  
 ஹதஸ்தாரக:ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய:  
 மமாந்தர்ஹ்ருதிஸ்தம் மநக்லேசமேகம்  
 ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி  
ஹே ப்ரபோ!பல அண்டபுவனங்களை அனுபவித்து வந்த சூத்ரனையும் தாரகாசுரனையும், 
சிங்கமுக்ஸுரனையும், தாங்கள் வதைக்கவில்லையா?என் ஹ்ருதயத்திலுள்ள மனக்லேச 
மொன்றை ஏன் அழிக்கக்கூடாது?நான் என்ன 
செய்வேன். உன்னையன்றி நான் வேறு யாரிடம் போவேன். 
 24.அஹம் ஸ்வதா து:கபாராவஸந்நோ  
 பவாந்தீநபந்துஸ்த்வதந்யம் ந யாசே  
 பவத்பக்திரோதம் ஸதா க்லுப்தபாதம்  
 மமார்திம் த்ருதம் நாசயோமாஸுத் த்வம்  
ஹே உமையவளின் அருமை மகனே!நான் எப்பொழுதும் துன்பச்சுமை தாங்கமுடியாமல் 
தவிக்கிறேன். நீரோ ஏழை எளியவருக்கு பங்காளன். உன்னையன்றி வேறு எவரையும் 
வேண்டேன். உன்னிடம் பக்திசெலுத்த தடையாய் இருப்பதும் இடையராது தொந்தரவு 
செய்வதுமான என் மனக்லேசத்தை ஒழிப்பாயாக. 
 25.அபஸ்மாரகுஷ்டக்ஷயார்சப்ரமேஹ  
 ஜ்வரோந்மாதகுல்மாதிரோகா மஹாந்த:  
 பிசாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்  
 விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்ரவந்தே  
தாரகனை ஸம்ஹரித்த வீரனே!உனது பன்னீர் இலை விபூதியைக்கண்டு, அபஸ்மாரம், 
குஷ்ட்டம், க்ஷயம், அர்சஸ், ப்ரமேகம், ஜ்வரம், உந்மாதம், குல்மம் முதலிய 
பெரிய வ்யாதிகளும், பிசாசுகளும், ஒரு நொடியில் ஒடிவிடுகின்றவே!என்ன 
ஆச்சர்யம்! 
  
 26.த்ருசி ஸ்கந்தமூர்தி:ச்ருதௌ ஸ்கந்தகீர்தி-  
 ர்முக் மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்  
 கரே தஸ்ய க்ருதயம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்  
 குஹே ஸந்து லீநா மமாசேஷபாவா:  
கண்களில் கந்தனின் உருவமே தோன்றட்டும், காதுகளில் கந்தனின் புகழும் 
முகத்தில் (வாயில்) அவனது புண்யமான சரித்திரமும், கையில் அவனது சேவைச் 
செயலும், உடலில் அவனது ஊழியமும் -- இப்படி என் அனைத்து உணர்வுகளும் 
ஸ்கந்தனைச் சார்ந்தே அமையட்டும். 
 27.முநீநாமுதாஹோ ந்ருணாம் பக்திபாஜா-  
 மபீஷ்டப்ரதா: ஸந்தி ஸர்வத்ர தேவா:  
 ந்ருணாமந்த்யஜாநாமபி ஸ்வார்த்ததாநே  
 குஹாத்தேவமந்யம் ந ஜாநே ந ஜாநே  
எல்லா தேவர்களும், முனிவர்களுக்கோ, பக்தியுள்ள மனிதர்களுக்கோ தான் அவரது 
காமனைகளைப் பூர்த்தி செய்பவராக உள்ளனர். ஆனால் பின்தங்கிய மக்களுக்கும் 
விருப்பம் நிறைவேற்றிவைப்பதில் குஹனைத் தவிர வேறு கடவுளை அறியேன். 
 29.ம்ருகா:பக்ஷிணோ தம்சகா:யே ச துஷ்டா-  
 ஸ்ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே  
 பவச்சக்திதீக்ஷ்ணாக்ரபிந்நா:ஸுதூரே  
 விநச்யந்து தே சூர்ணிதக்ரௌஞ்சசைல  
எனக்கு துன்பம் விளைவிக்கும் துஷ்ட மிருகங்களும், பறவைகளும், ஈ, கொசு 
முதலியவைகளும், தங்களது சக்தி ஆயுதத்தின் கூறிய முனையால் 
சிதறியடிக்கப்படட்டும், அழியட்டும். தாங்கள் க்ரௌஞ்ச மலையை பொடிப் 
பொடியாகச் செய்யவில்லையா? 
 30.ஜநித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராதம்  
 ஸஹேதே ந கிம் தேவஸேநாதிநாத  
 அஹம் சாதிபாலோ பவாந் லோகநாத:  
 க்ஷமஸ்வாப்ராதம் ஸமஸ்தம் மஹேச  
ஹே தேவஸேனையின் தலைவரே!தாயும் தந்தையும் தமது மகன் தவறை பொருத்துக் 
கொள்வதில்லையா?நானோ மிகவும் சிறு பாலகன். தாங்கள் உலகத்தந்தை:ஆகவே எனது 
அனைத்து அபராதங்களையும் மன்னித்து அருளிவீராக. 
 31.நம:கேகித சக்தயே சாபி துப்யம்  
 நமச்சாக துப்யம் நம:குக்குடாய  
 நம:ஸிந்தவே ஸிந்துதேசாய துப்யம்  
 புந:ஸ்கந்தமூர்த்தே நமஸ்தே நமோஸ்துது  
மயிலுக்கும், சக்தி ஆயுதத்திற்கும், ஆட்டுக்கடா, கோழி இவற்றிற்கும் 
நமஸ்காரம், கடலுக்கும் கடலைச்சார்ந்த இடத்திற்கும் எனது நமஸ்காரம் ஸ்கந்த 
பெருமானுக்கு பின்னும் பின்னும் நமஸ்காரம். 
 32.ஜயாநந்தபூமஞ்ஜயாபாரதாம  
 ஞ்ஜயாமோககீர்தே ஜயாநந்தமூர்தே  
 ஜயாநந்தஸித்தோ ஜயாசேஷ பந்தோ  
 ஜய த்வம் ஸதா முக்திதாநேசஸ¨நோ  
ஆனந்தப் பெருக்கே!உனது பக்கம் ஜயிக்கட்டும். ஒளி மிகுந்தவனே!உனக்கு ஜபம் 
பயன்மிக்கப் புகழோனே!உலகனைத்திற்கும் பங்காளனே!உனக்கு ஜயம் உண்டாகட்டும் 
அனந்த மூர்த்தியாய் மோக்ஷம் நல்கும் பரமேச்வரனின் மைந்தனே!உனக்கு ஜயம், 
ஜயம். 
 33.புஜங்காக்ய வ்ருத்தேன க்லுப்தம் ஸத்வம் ய:  
 படேத்பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய  
 ஸ புத்ராந்கலத்ரம் தநம் தீர்க்மாயுர்  
 லபேத்ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நர:ஸ;  
புஜங்கப்ரயாதம் என்ற விருதத்தில் அமைக்கப்பெற்ற இந்த ஸ்தோத்திரத்தை 
எவரெவர் குகனை வணங்கி பக்தியுடன் படிக்கின்றனரோ அவரெல்லாம் மனைவி 
மக்களையும் செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் பெறுவர். கடைசியில் ஸ்கந்தனுடன் ஐக்யத்தையும் அடைவர்.