SHIRDI LIVE DARSHAN

Friday, 30 November 2012

குரு சீடன் உறவு -- தென் கச்சி கோ சுவாமிநாதன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxBLL0J9x4ynq4duwxKNjUyJiObekhwRpQZDEFkB1oVnSNhRD3nYc9dIOlEZcZ00NW79rVA8N31LeKC9M-DEbRACjf7xeq7V8_labzrHJhLMYmVAQO1Fw9nxP8_Ec5fK9xfj8TZ89fhMDJ/s320/ASTRO+DESK-+BUDDHA+GURU+POORNIMA.jpg

ஒரு காலை நேரம் , புத்தர்  ஒரு மரத்தடியிலே உட்கார்ந்திருக்கார் . அவருக்கு எதிரே ஏராளமான சீடர்கள் உபதேசத்தை கேட்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்

வழக்கமாக எப்போதும் புத்தர் வந்தவுடனே பேச ஆரம்பிசிடுவார் , ஆனா இந்த தடவை எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது

வரும்போதே கையிலே ஒரு மலரை எடுத்து கொண்டு வந்தார்  வந்து உட்கார்ந்தார் அவ்வளவுதான் , அதுக்கப்பறம் அவர் எதுவும் பேசவில்லை

கையிலே இருந்த அந்த பூவை பார்த்துகிட்டே அவர் பாட்டுக்கு உட்கார்ந்திருக்கார் , உச்சிவேளை வந்திட்டது ... அப்பவும் பேசலை ! அமைதியா இருக்கார்

அந்த நேரத்துல -  திடீர்ன்னு ஒரு சிரிப்பு சத்தம் . யார் என்று பார்கிறார்

ஒரு சீடன்  , அவன் பேரு மகாகாஷ்யப் .விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான் . அங்கெ இருந்த எல்லோரும் இவன் சிரிக்கறதை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க .

இவனுக்கு திடீர்ன்னு என்ன ஆச்சு ? புத்தி கலங்கிப் போச்சா ? இந்த சீடனும் அதுவரைக்கும் இதுபோல நடந்து கொண்டது கிடையாதாம் . எப்போதும் அமைதியா இருகிறவன் இன்றைக்கு இப்படி சிரிக்கிறான் , அவனை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக இப்படி சிரிக்கிறானா ?

புத்தர் அவனை தலை நிமிர்ந்து பார்கிறார்

" இங்கே வா " ன்னு கூப்பிடுகிறார் .

அவன் கையிலே அந்த மலரைக் கொடுக்கிறார் , பிறகு சொல்கிறார்

" இதோ பாரப்பா ! வார்த்தைகள் மூலமாக நான் எதையெல்லாம் தரமுடியுமோ ... அதையெல்லாம் மற்ற சீடர்களுக்கு கொடுத்து விட்டேன் . வார்த்தைகளால் புலபடுத்த முடியாததை எல்லாம் உனக்கு தருகிறேன் "

இப்படி சொல்லி கையிலே இருந்த மலரை அந்த சீடர் கையிலே கொடுத்தார் .

இதற்க்கு என்ன அர்த்தம் ?

இந்த நிகழ்ச்சி நடந்து 2500 ஆண்டுகளுக்கு மேலே ஆயிட்டது .. இன்னமும் பல ஞானிகளெல்லாம்  அதை பற்றி யோசித்து கொண்டிருகிறார்களாம் !

புத்தர்கிட்ட இருந்து அந்த சீடர் கிட்ட போனது மலர் அல்ல . அந்த மலர் ஒரு வெறும் அடையாளம் மட்டும் தான் . இடம் மாறியது மலர் அல்ல .

புத்தர்  கிட்டே இருந்த இருப்புணர்வு இடம் மாறியிருக்கு அவ்வளவுதான் , ஆனால் புத்தர்  அந்த சீடர் கிட்டேயே போய்விடவில்லை . அவர் அப்படியேதான் இருக்கிறார்

ஒரு விளக்கில் இருந்து இன்னொரு விளக்கை கொளுத்துவதாலே இந்த விளக்கில் உள்ள வெளிச்சம் குறைந்து விடுமா என்ன ? அது மாதிரிதான்
இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைமாற்றம் என்கிறார் ஓஷோ .

மனதிலே இருந்து மனதிற்கு இடம் பெயரும் நிலை மாற்றத்தை வார்த்தைகளால் கொடுக்க முடியாது .

அதை அந்த சீடருக்கு கொடுத்தார் புத்தர் . அந்த சீடர் இரண்டாவது புத்தராக மாறினார் என்பது வரலாறு .


http://www.buddhaphoto.net/cache/Buddha/Gautama-Buddha/the-life-of-gautama-buddha-3/the-life-of-gautama-buddha-28_w600_h397.jpg




ஒரு ஆசிரமம் ,  அங்கே ஒரு குரு இருந்தார் அவரை தேடி ஒருத்தன் வந்தான் ," எனக்கு கற்று கொடுங்கள் ,அதாவது போதியுங்கள் " என்றான் .

" சரி ... இங்கேயே இரு .. கற்றுக் கொடுக்கிறேன் " என்றார் . அவன் அங்கேயே இருந்தான் . ஒரு மணி நேரம் ஆச்சு ... ரெண்டு மணி நேரம் ஆச்சு .. இப்படி நேரம் ஓடிகிட்டே இருக்கு ...

பல பேர் தொடர்ந்து அங்கே வந்துக்கிட்டுருக்காங்க , அப்படி வருகிறவர்கள் எல்லார்கிட்டயும் ஏதோ பேசிக்கிட்டே இருக்கார் .
வருகிறவர்கள் எல்லோரும் தங்கள் பிரச்சனைகளை சொல்கிறார்கள் . அதுக்கு தகுந்த தீர்வை இவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார் .

இவன் பாட்டுக்கு உட்கார்ந்து  இருக்கான்

கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்தான் .

ஒரு கட்டத்துல திடீர்ன்னு எழுந்துரிச்சு நின்னான் .

" கொஞ்சம் என்னையும் பாருங்க ... நான் எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கேன் . எனக்கு கற்று கொடுக்கறேன்னு சொன்னீங்களே ... எதையுமே கற்றுக் கொடுக்கலே ...! அப்படீன்னான்

குரு சிரிச்சிகிட்டே சொன்னார் :

" தம்பி ! நான் இவ்வளவு நேரமா வேற என்ன செஞ்சுகிட்டு இருந்தேன்னு நினைக்கிற ? நிறைய பேர் வந்தாங்க ... என்கிட்ட கேள்விகள் கேட்டாங்க ...அதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன் . அதிலே உனக்கும் போதனை இருக்கு .."

இவன் குழம்பி போனான் .

அவர் சொன்னார் :

" போதனை நான் சொன்ன பதிலில் இல்லை . நான் பதில் சொன்ன விதத்தில் தான் இருந்தது . யார் யாருக்கு எப்படிப் பதில் சொன்னேன் என்பதை நீ கவனித்திருக்க வேண்டும் . சில பேர் என்கிட்டே வந்தாங்க , எதுவுமே கேட்கல .. மௌனமாக என் பக்கத்துல உக்கார்ந்தாங்க ..நானும் மௌனமாக இருந்தேன் .... அதில் உனக்கும் போதனை இருக்கிறது . ஐந்து மணி நேரமாக உனக்கு கற்றுக் கொடுத்து கொண்டிருந்தேன் .

நீ கற்று கொள்ள தவறிவிட்டாயே " அப்படின்னாராம்


குரு என்பவர் எதையும் போதிப்பதில்லை ஏன்னென்றால் அவரே ( குருவே ) ஒரு போதனை தான் .

வழி காட்டுகிறவர்கள் குருவாக முடியாது . வாழ்ந்து காட்டுகிறவர்களே குருவாக முடியும் !




எனக்கு தெரிந்த ஆசிரமம் , ஒரு நாள் போனேன் ...

உள்ளே  குரு முன்னாடி சீடர் பவ்வயமா கை கட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தார் ..

ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமாக விவாதம் செய்துகிட்டு இருந்தாங்க

சீடர் கேக்கறார் , குரு அதை கண்டிப்புடன் மறுக்கிறார்

மறுபடியும்  சீடர் கேக்கறார் ,

 குரு " இல்ல.... இல்ல .... அது சரியில்ல ...அப்படி செய்ய கூடாது .... நல்லா இல்லை ! அப்படின்னார்

சீடர் வெளியே வரும் பொது " ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது " அப்படீன்னு புலம்பிகிட்டே வெளியே வந்தார்

நான் அவரை வழிமறிச்சி  " என்னங்க உங்க குரு அவர் கருத்துல ரொம்ப பிடிவாதமா இருக்கிறாரா ?

"ஆமாங்க "...ன்னார்

" அப்படி... நீங்க ... என்ன கேட்டுடீங்க அவர் கிட்ட ? ......ன்னேன்

" அப்படி ஒண்ணும்  பெருசா கேட்டுடலீங்க ....

இத்தனை வருஷமா நீ குருவா இருந்தியே ... இனிமே நான் உனக்கு குருவா இருக்கிறேனே ! ன்னு கேட்டேன் ... அவ்வளவுதாங்க !... அப்படின்னார்

                                                                                                                                                                                                                       

                                                                                 தென் கச்சி கோ சுவாமிநாதன்


Friday, 23 November 2012

ஓம் அகத்தீசாய நமஹ or ஓம் அகஸ்தியாய நம என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!

ஓம் அகத்தீசாய நமஹ or ஓம் அகஸ்தியாய நம 

 என்று எழுதி அனுப்புவோம்;

அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOuT469-u9goUREs9skg_j5f-CkmqMxzK-J19ECt-FmqGIPE_GT8pHmh6K2FXAxsrINBOsM42s0BB2kN59t74LT-N36HdRNoJRlar9kioEZ0jt33bM01QUoguyLOQXjtCdwQqg_pn06-JB/s320/agasthiyar+nama+jabam.jpg 
கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு  கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!
இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?

எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது? ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.

ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrUSHcNL5pio2mJbbKb2dpQgpwULKI_gUtdO3Mq7ACJMg3nDdMQldPjv-YoaazYUoMrwc5j6A6iCwo3BYyUwqr-vKWWDFpNvIWM4jkaUgB0B4riFt-i31mhrLVK3h66TF6SAYKC29O1ryR/s1600/agathiyar1.jpg

இதுவரை யாரெல்லாம் ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதினார்களோ அவர்களில் பலருக்கு சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஆசி கிடைத்திருக்கிறது.
பலரது அதிகாலைக் கனவில் அகத்தியர் வந்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர்,90 நாட்களுக்கு தினமும் நூற்று எட்டுமுறை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்;91 ஆம் நாளில் அவர் பணிபுரியும் நிறுவனத்தில்,அவரை ஒப்பந்தப்பணியிலிருந்து நிரந்தரப்பணியாளராக நியமனம் செய்துவிட்டனர்;இந்த  நியமனம் அந்த நிறுவனத்தின் விதிகளையும் மீறி நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அந்த கிறிஸ்தவ அன்பருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தந்திருக்கிறது!!

தினமும் நூற்றி எட்டு முறை வீதம் காலையும் மாலையும் எழுதி வந்த ஒருவருக்கு அவ்வாறு எழுதிய 18 வது நாளிலேயே அவருடைய 27 வித கோரிக்கைகளை அகத்தியர் நிறைவேற்றி வைத்துவிட்டார்.

இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;

ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.

15.12.2012 (கார்த்திகை மாதத்தின் 
கடைசி நாள்)

வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது  குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா?

அனுப்ப வேண்டிய முகவரி:
கி.முரளிதரன்,
டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
3,முதல் தளம்,
பாரதி பூங்கா வீதி 2,
சாய்பாபா காலனி,
கோயம்புத்தூர் 11.    

PROPER ADDRESS:=
In English:
Mr.K.MURALIDARAN,
TOTAL OIL INDIA P LTD,
3,First Floor,
Bharathi Park Cross Road-2,
Saibaba Colony,
COIMBATORE-11.
ஓம் அகத்தீசாய நமஹ

                    or

ஓம் அகஸ்தியாய நம 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga7RUdOZBxG4ZnkdR4nd8QiiAEm55Z55_h15nMK2lLLaaTMFgm6u8s0z3q1VDPYEXoEVBOTphFUPcNWigs95cCwJLm_NnUtpi8ovSrE7ev3RGwGIhPgq0XcquQbuM5_xLldHN7aVN8oDU/s1600/agastheesayamnamaha.jpg 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjINg6KihlCkfL2CVUsZPg86R4mM4YHUQJUpfXE8s_ey3mq5448blDNaSOcUV47HlliYB9974YjyJqEIW1UUAWPjqnzJaz56nt4S0KAdtyje5psGK0weYSkNPmI3riVOGUfEQoPYGYWVss/s1600/thiruchitrambalam.jpg 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtE9bmp_eaSqml9JrjV0Ebz4wBpGtbfYtKWx1eOGDtYxxGbMuKU1nmKEHpMTinDu0XRH7Z3cvB8zFx4ES_1FNchGXIipjLEQovWmsUa3-NnLa2DCcsuXFnyF1UxW1hd5MwlsP7wul_Qc8/s1600/ligithaboxex.jpg

Thursday, 22 November 2012

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சதநாமாவளி.MP3




http://www.ranganatha.org/pictures/Ranganatha_new.jpg  http://godstatues.net/gifs/marble-vishnu-aasan.jpg


ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சதநாமாவளி.MP3

ஓம் அச்யுதாய நம:

ஓம் அதீந்தராய நம:

ஓம் அனாதிநிதனாய நம:

ஓம் அளிருத்தாய நம:

ஓம் அம்ருதாய நம:

ஓம் அரவிந்தாய நம:

ஓம் அஸ்வத்தாய நம:

ஓம் ஆதித்யாய நம:


ஓம் ஆதிதேவாய நம:

ஓம் ஆனத்தாய நம:

ஓம் ஈஸ்வராய நம:

ஓம் உபேந்த்ராய நம:

ஓம் ஏகஸ்மை நம:

ஓம் ஓஸ்தேஜோத்யுதிதராய நம:

ஓம் குமுதாய நம:

ஓம் க்ருதஜ்ஞாய நம:


ஓம் க்ருஷ்ணாய நம:

ஓம் கேஸவாய நம:

ஓம் ஷேத்ரஜ்ஞாய நம:

ஓம் கதாதராய நம:


ஓம் கருடத்வஜாய நம:

ஓம் கோபதயே நம:

ஓம் கோவிந்தாய நம:

ஓம் கோவிதாம்பதயே நம:


ஓம் சதுர்ப்புஜாய நம:

ஓம் சதுர்வ்யூஹாய நம:

ஓம் ஜனார்த்தனாய நம:

ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:

ஓம் ஜ்யோதிராதித்யாய நம:

ஓம் ஜயோதிஷே நம:

ஓம் தாராய நம:

ஓம் தமனாய நம:


ஓம் தாமோதராய நம:

ஓம் தீப்தமூர்த்தயே நம:

ஓம் துஸ்வப்ன நாஸனாய நம:

ஓம் தேவகீநந்தனாய நம:

ஓம் தனஞ்ஜயாய நம:

ஓம் நந்தினே நம:

ஓம் நாராயணாய நம:

ஓம் நாரஸிம்ஹவபுஷே நம:


ஓம் பத்மநாபாய நம:

ஓம் பத்மினே நம:

ஓம் பரமேஸ்வராய நம:

ஓம் பவித்ராய நம:

ஓம் ப்ரத்யும்னாய நம:

ஓம் ப்ரணவாய நம:

ஓம் புரந்தராய நம:

ஓம் புருஷாய நம:


ஓம் புண்டரீகாக்ஷய நம:

ஓம் ப்ருஹத்ரூபாய நம:


ஓம் பக்தவத்ஸலாய நம:

ஓம் பகவதே நம:

ஓம் மதுஸூதனாய நம:

ஓம் மஹாதேவாய நம:

ஓம் மஹாமாயாய நம:

ஓம் மாதவாய நம:


ஓம் முக்தானாம் பரமாகதயே நம:

ஓம் முகுந்தாய நம:

ஓம் யக்ஞகுஹ்யாய நம:

ஓம் யஜ்ஞபதயே நம:

ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:

ஓம் யஜ்ஞாய நம:

ஓம் ராமாய நம:

ஓம் லக்ஷ்மீபதே நம:


ஓம் லோகாத்யக்ஷய நம:

ஓம் லோஹிதாக்ஷய நம:

ஓம் வரதாய நம:

ஓம் வர்த்தனாய நம:

ஓம் வராரோஹாய நம:

ஓம் வஸுப்ரதாய நம:

ஓம் வஸுமனஸே நம:

ஓம் வ்யக்திரூபாய நம:


ஓம் வாமனாய நம:

ஓம் வாயுவாஹனாய நம:

ஓம் விக்ரமாய நம:

ஓம் விஷ்ணவே நம:

ஓம் விஷ்வக்ஸேனாய நம:

ஓம் வ்ருஷாதராய நம:

ஓம் வேதவிதே நம:

ஓம் வேதாங்காய நம:


ஓம் வேதாய நம:

ஓம் வைகுண்டாய நம:

ஓம் ஸரணாய நம:

ஓம் ஸாந்நாய நம:

ஓம் ஸார்ங்கதன்வனே நம:

ஓம் ஸாஸ்வதஸ்தாணவே நம:

ஓம் ஸிகண்டனே நம:

ஓம் ஸிவாய நம:


ஓம் ஸ்ரீதராய நம:

ஓம் ஸ்ரீநிவாஸாய நம:

ஓம் ஸ்ரீமதே நம:

ஓம் ஸுபாங்காய நம:

ஓம் ஸ்ருதிஸாகராய நம:

ஓம் ஸங்கர்ஷணாய நம:

ஓம் ஸதாயோகினே நம:

ஓம் ஸர்வதோமுகாய நம:


ஓம் ஸர்வேஸ்வராய நம:

ஓம் ஸஹஸ்ராக்ஷய நம:

ஓம் ஸ்கந்தாய நம:

ஓம் ஸாக்ஷிணே நம:

ஓம் ஸுதர்ஸனாய நம:

ஓம் ஸுரானந்தாய நம:

ஓம் ஸுலபாய நம:

ஓம் ஸூக்ஷ்மாய நம:

ஓம் ஹரயே நம:

ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:

ஓம் ஹிரண்யநாபாய நம:

ஓம் ஹ்ருஷீகேஸாய நம:

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6uNaQRnafUGZ2EH0WSnFnPh1ZbCLFfRwxeYrjsCdbh0AsRsf02mm1TOSdNZ1H3MNl4pHbNzofmi73ABmAp4I3CMsdGiILb-2YS2-eCUFvKh6BuaOOqixqHIuJLEcbPrB_zkNfqi0N_I9X/s1600/vishnu8.jpg


Sunday, 18 November 2012

பைரவர் அஷ்டோத்தர சதநாமாவளி.MP3


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWbHAetPYib5vr4BptmDmZANOkQo0hTcOdBLqJTthZBRsluDARJIKTbbLDY0G7Da7XeDh61sVtKeulkdFuqNoVq5R_U3cQU8JwHhI1IttDoF83MnyKrQOhMSLFc3U94AmJZ75aQgiOykWP/s1600/kala-bhairava-form-shiva.jpg

 
http://cobot.webs.com/Download_button.png 
பைரவர் அஷ்டோத்தர சதநாமாவளி.MP3


ஓம் பைரவாய நம

ஓம் பூத நாதாய நம

ஓம் பூதாத்மனே நம

ஓம் பூதபாவநாய நம

ஓம் ஷேத்திரதாய நம

ஓம் ஷேத்திரபாலாய நம

ஓம் ஷேத்திரக்ஞாய நம

ஓம் க்ஷத்ரியாய நம

ஓம் விராஜே நம

ஓம் ஸ்மசானவாஸிநே நம

ஓம் மாம்ஸாசிநே நம

ஓம் ஸர்ப்பராசஸே நம

ஓம் ஸ்மராந்தக்ருதே நம

ஓம் ரக்தபாய நம

ஓம் பானபாய நம

ஓம் ஸித்தாய நம

ஓம் ஸித்திதாய நம

ஓம் ஸித்தஸேவிதாய நம

ஓம் கங்காளாய நம

ஓம் காலசமனாய நம

ஓம் கலாய நம

ஓம் காஷ்டாய நம

ஓம் தநவே நம

ஓம் கவயே நம

ஓம் த்ரிநேத்ரே நம


ஓம் பஹுநேத்ரே நம


ஓம் பிங்களலோசனாய நம

ஓம் சூலபாணயே நம

ஓம் கட்கபாணயே நம

ஓம் கங்காளிநே நம

ஓம் தூம்ரலோசனாய நம

ஓம் அபீரவே நம

ஓம் பைரவாய நம

ஓம் நாதாய நம

ஓம் பூதபாய நம

ஓம் யோகிநீபதயே நம

ஓம் தநதாய நம

 ஓம் தநஹாரிண நம

ஓம் தநவதே நம

ஓம் ப்ரீதிபாவனாய நம

ஓம் நாகஹாராய நம

ஓம் நாகபாசாய நம

ஓம் வ்யோமகேசாய நம

ஓம் கபாலப்ருதே நம

ஓம் காலாய நம

ஓம் கபாலமாலிநே நம

ஓம் கமநீயாய நம

ஓம் கலாநிதயே நம

ஓம் த்ரிலோசனாய நம

ஓம் ஜ்வலந்நேத்ராய நம

ஓம் த்ரிசிகிநே நம

ஓம் த்ரிலோகபாய நம

ஓம் த்ரிநேத்ர தநயாய நம

ஓம் டிம்பாய நம

ஓம் சாந்தாய நம

ஓம் சாந்தஜனப்ரியாய நம

ஓம் வடுகாய நம

ஓம் வடுவேஷாய நம

ஓம் கட்வாங்க வரதாரகாய நம

ஓம் பூதாத்யக்ஷõய நம

ஓம் பசுபதயே நம

ஓம் பிக்ஷúதாய நம

ஓம் பரிசாரகாய நம

ஓம் தூர்தாய நம

ஓம் திகம்பராய நம

ஓம் சூராய நம

ஓம் ஹரிணாய நம

ஓம் பாண்டுலோசனாய நம

ஓம் ப்ரசாந்தாய நம

ஓம் சாந்திதாய நம

ஓம் ஸித்தாய நம

ஓம் சங்கராய நம

ஓம் ப்ரிய பாந்தவாய நம

ஓம் அஷ்ட மூர்த்தயே நம

ஓம் நிதீசாய நம

ஓம் க்ஞான சுக்ஷúஷே நம

ஓம் தபோமயாய நம

ஓம் அஷ்டாதாராய நம

ஓம் ஷடாதாராய நம

ஓம் ஸர்ப்பயுக்தாய நம

ஓம் சிகீஸகாய நம

ஓம் பூதராய நம

ஓம் பூதராதீசாய நம

ஓம் பூபதயே நம

ஓம் பூதராத்மஜாய நம

ஓம் கங்காலதாரிணே நம

ஓம் முண்டிநே நம

ஓம் நாகயக்ஞோபவீதவதே நம

ஓம் ஜ்ரும்பணோ மோஹந: ஸதம்பீ மாரண: ÷க்ஷõபணாய நம

ஓம் ஸுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நம

ஓம் நைத்யக்னே நம

ஓம் முண்ட பூஷிதாய நம

 ஓம் பலிபுஜே நம

ஓம் பலிபுங் நாதாய நம

ஓம் பாலாய நம

ஓம் பால விக்ரமாய நம

ஓம் ஸர்வபாத் தாரணாய நம

ஓம் துர்க்காய நம

ஓம் துஷ்டபூத நிஷேவிதாய நம

ஓம் காமிநே நம

ஓம் கலாநிதயே நம

ஓம் காந்தாய நம

ஓம் காமிநீ வசக்ருதே நம

ஓம் வசினே நம

ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நம

ஓம் வைத்யாய நம

ஓம் ப்ரபவே நம

ஓம் விஷ்ணவே நம

ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ 

கால பைரவ அஷ்டோத்தர ஸத நாமாவளி ஸம்பூர்ணம்

Saturday, 17 November 2012

பொதிகை மலையில் தலையாய சித்தர் அகத்தியருக்கு நடந்த பூஜை








 
பொதிகை மலை, தலையாய சித்தர்,   அகத்தியர், அகஸ்தியர்

, ஜீவ நாடி ,அகத்தியருக்கு நடந்த பூஜை ,
மந்திரம் , பரிகாரம்

ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்

 http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g3.jpg
நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம்,ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல்

பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்

அவருக்கு செய்பவைகளில் சில ,

 - வடைமாலை சாத்துதல்
- செந்தூரக்காப்பு அணிவித்தல்
- வெண்ணெய் காப்பு சாத்துதல்
- ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeSxH_hibGGYDO1qBTyV2XejSoH16T79EcO-Fq-tFF3Rc2twmRkzYG5jyrH165WXuGsNhGuYtiqrIVp3knMYUgtdAK6s2jpttM-5yibmi3xPbFeKBEZAEM-Iawep4OCHv6UaN1AQDwREw/s640/ANJU+SALEM.jpeg

வடைமாலை
அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு .

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEXwKbyobybHIjHT9g65SuE7Kv-si5bu62rGOg-Ote2QZskrZUJdmna8zfP6YsJUXxqCva2jnC8Lt-FsIchP763dqNMZACncrhXbbunLPKOgriYTSOj-AOvEfTOBS619v8970t4OqwCsQ/s640/ANJU+DARPANA+ALNKM+DPBLR+B.JPG 
வெற்றிலைமாலை


சீதையைத்தேடி தேடி பல இடங்களில் காணாது பின் அசோகவனத்தில் அவரை சந்த்தித்தார், அப்போது சீதை அவருக்கு வெற்றிலைக் கொடி அணிவித்து அவரை வாழ்த்தினார். என்றும் சிரஞ்ஜீவியாய் இருக்கவும் வாழ்த்தினாள். வெற்றிலை வயிறு சம்பந்தமான எல்லா தோஷங்களையும் போக்கும் பண்டைக் காலத்தில் சின்ன குழந்தைக்கும் வெற்றிலை சுரசம் வாயு தொல்லை இல்லாமல் இருக்க கொடுப்பார்கள்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7O5zOvBKq9K0SSTHhvQO_OlX7nANHwuLfugl2RaOrMqjKbgP2C1bGztjqFoVCUVTOdgxmldL4G4qAMDHhPrhFuxDVlh7RqMGnl_cmHkxP2JI-ET9UwRWeBdkoop97iYIX4p4jMXmYd9g/s1600/NAMAKKAL+HANUMAN+FULL+VENNAI.jpg
வெண்ணெய் சாத்துதல்

ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

http://en.academic.ru/pictures/enwiki/50/220px-Hanuman_in_Terra_Cotta.jpg
சிந்தூரக் காப்பு


சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்.”என் அவர் நலமா? என்று.....

அதற்கு அனுமான் “எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றதும்.....

மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்.,இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்..

http://farm8.staticflickr.com/7153/6573500135_d4540a59d0_m.jpg

ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல்


ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல், அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம் ராம் நாமம் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது.

வாலில் பொட்டு வைப்பது


அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக் அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் வாலில் வைத்த நெருப்பினால் தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது, ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை

Thursday, 15 November 2012

முத்திரைகளின் விளக்கம்

 முத்ரா என்ற சொல்லுக்கு இறைவழிபாட்டின்போது விரல்களை குறிப்பிட்ட வகையாக வைத்துக் கொள்ளும் முறை என்ற பொருள் ஸம்ஸக்ருத அகராதிகளில் காணக்கிடைக்கிறது. முத்ரா என்ற சொல் ஒரு காரணப் பெயர். முத் என்ற வினைச் சொல் மகிழ்வூட்டும், மனநிறைவளிக்கும் என்று பொருள்படுவது. த்ரா என்ற பதத்துக்கு விரைந்து வெளியேற்றுதல் என்று பொருள். எனவே, தேவதைகளுக்கு மகிழ்வையும் மன நிறைவையும் அளிப்பதுவும், விரைவாகப் பாவங்களை அகற்றுவதும் ஆன கிரியைக்கு முத்ரா என்பதாகக் காரணப் பெயர் அமைந்துள்ளது.

முத்திரைகளின் பெருமையை விளக்கிக் கூறும் ச்லோகங்கள் இவ்வாறு கூறுகின்றன: எல்லா தேவர்களையும் மகிழ்விப்பதாலும், பாவத் தொடர்பைப் போக்குவதாலும் அவை முத்திரை என்று பெயர் பெறுகின்றன. முத்திரைகள் எல்லாக் காமங்களையும் (இன்பம்) (தர்ம-அர்த்த-காம-மோக்ஷம் என்பதே அறம், பொருள், இன்பம், வீடு என்றாகிறது), அர்த்தங்களையும் (செல்வம்), கூட்டுவிப்பதாகும். தந்த்ரங்களில் கற்பிக்கப்பட்ட முத்திரைகளைக் காட்டுவதால், மந்த்ர தேவதைகள் ப்ரீதி அடைவார்கள். அர்ச்சனை, ஜபம், த்யானம் முதலியவற்றின் போதும், ஸ்நானம், ஆவாஹனம், சங்கப்பரதிஷ்டை , ரக்ஷணம், நைவேத்யம், முதலிய கிரியைகளின்போதும், அந்தந்த (பூஜா) கலபங்களில் கூறப்பட்ட முத்திரைகளை உரிய ஸ்தானங்களில், உரிய லக்ஷணங்களுடன் காண்பிக்க வேண்டும்.

முத்திரைகளைப் பற்றிய சில விளக்கங்களை நம்மில் பலருக்குப் பரிச்சயமான ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண முறையை ஒரு உதாரணமாகக் கொண்டு காண்போம்.

மனனத்தால் (ஜபிப்பதனால்) ஸாதகனைக் (ஜபிப்பவனைக்)  காப்பவை (மநநாத் த்ராயதே ) மந்திரங்கள் பலவகை: ஓர் அக்ஷரம் உள்ளவை பிண்டம்; இரண்டு அக்ஷரம் உள்ளவை கர்த்ரீ; மூன்று முதல் ஒன்பது அக்ஷரங்கள் கொண்டவை பீஜம்; ஒன்பதுக்கு மேல் அக்ஷரங்கள் கொண்டவை மந்த்ரங்கள்.

மந்திரங்கள் அனாதியானவை. இறைவனோடு மூச்சுக் காற்றென ஒன்றியவை. அவற்றை மானஉஷ சக்திகள் உருவாக்கவில்லை. அவை பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ரிஷிகள் மந்திரங்களை முதலில் கண்டறிந்து, அவற்றின் சக்தியை உணர்ந்து, உலக நன்மைக்காக அவற்றை வெளியிட்டவர்கள். ஒரு மந்திரத்தை ஜபிக்கத் தொடங்கும் முன் வலக்கையால் சிரஸ்ஸைத் தொட்டு, அந்த மந்திரத்தைக் கண்டறிந்து சொன்ன முனிவரை நினைவு கூர்ந்து, அவரை வணங்குவதாகப் பாவனை செய்வதுதான் குரு ந்யாஸம். இவ்வாறு சிரஸ்ஸைத் தொடும் செய்கை ஒரு முத்திரை.

மந்திரம் அமைந்துள்ள சொற்கட்டுக்கு (சந்தத்திற்கு) சந்தஸ் என்று பெயர். அதற்கு வணக்கம் செலுத்துவதே சந்தஸ் ந்யாஸம் என்பது, சந்தஸ்ஸை நினைவு கூர்ந்து, உதட்டின் மேல் வலது  கையால் தொடும் முத்திரையே சந்தஸ் ந்யாஸம்

அந்தந்த மந்திரத்துக்கு உரிய தேவதையை இதயத்தில் அமர்த்துவதாகப் பாவித்து இதயத்தைத் தொடுவது தேவதா ந்யாஸம்.

மந்திரம் என்பது, மரம் போன்று பலன் தரும் வரிந்த சக்தி வடிவம். இதன் விதை போல, கருவாக, இதன் சூக்ஷ்ம சக்தி அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள சொல் வடிவமே பீஜம். அந்த பீஜத்தில் அடங்கியுள்ள வீர்யமே சக்தி. சக்தி தேவையின்றி வேறிடத்தில் செல்லாமல், அதனைப் பிணைத்து வைத்திருக்கும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் என்ற மாலா மஹா மந்திரத்துக்கு ஐம் என்பது பீஜம்; ஸெள: என்பது சக்தி; க்லீம் என்பது கீலகம்; (இந்த ஐம் ஸெள: க்லீம் என்ற மூன்று அக்ஷரங்களும் சேர்ந்து ஸ்ரீ பாலா மந்திரம் என்ற தனிப் பெயரும் பெற்றுள்ளன). ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர பாராயணத்துக்கு முன்னால் ந்யாஸம் செய்யும்போது, இந்த அக்ஷரங்களைச் சொல்லி, அங்கங்களைத் தொட்டு, அங்கு அவை நிலைத்திருப்பதாக பாவனை செய்கிறோம். இந்த கிரியைகள் பீஜ ந்யாஸம், சக்தி ந்யாஸம், கீலக ந்யாஸம் எனப்படும். எந்த உறுப்புகளை எவ்வாறு தொடவேண்டும் என்பது அவரவரது குரு போதித்த ஸம்ப்ரதாயத்தைப் பொறுத்தது.

இவ்வாறே விநியோக ந்யாஸம், கர ந்யாஸம், அங்க ந்யாஸம் முதலியனவும் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ளன.

மேற்கூறியவற்றால் (அ) மந்திரங்கள் உச்சரிக்கும்போது, முத்திரைகளுக்கு முக்கிய இடம் உண்டென்பதும், (ஆ) அந்த முத்திரைகளும் குரு பரம்பரைக்கு ஏற்ப பேதங்களாகும் என்பதும் பெறப்படும். அதே வகையில்தான், மந்திரங்களை ப்ரயோகித்து சிவாலய பூஜா கிரியைகள் நடக்கும்போது, பல வகையான முத்திரைகளுக்கு அக்கிரியைகளில் முக்கியத்துவம் தரப்படுகின்றது. அவற்றை சிவாச்சாரியார்கள் பயிற்சி பெறும்போது, குருமுகமாகக் கற்றறிவர். பின்னர் அவர்கள் அவற்றைப் பிழைகளின்றி, ச்ரத்தையுடன் ப்ரயோகிக்கும்போது, கிரியைகளைச் சூழ்ந்து வரும் மந்திரங்களின் பலன்கள் பூரணமாக ஸித்தியாகின்றன. முத்திரைகள் வெறும் அங்க சேஷ்டைகள் அல்ல; அவை பொருள் பொதிந்தவை; கிரியைகளுக்கு பூரணத்துவத்தை அளிப்பவை.

நல்ல செயல்முறைகளுக்குத் தந்த்ரங்கள் என்று பெயர். மந்திரங்களை உபயோகித்து பூஜை செய்யும் விதி முறைகளும் தந்த்ரங்களே. அத்தந்த்ரங்கள் எழுதப்பட்டுள்ள நூல்களையும் தந்த்ரங்கள் என்றே அழைப்பர். ஆகமங்கள் அனைத்தும் அத்தகு தந்த்ர நூல்களே.

வேதங்களில் ஓம் என்ற ப்ரணவமும், ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வெளஷட், வேட், வாத் முதலிய மந்திரங்களும், பூ; புவ; ஸுவ; என்னும் வ்யாஹ்ருதிகளும் முதல் முதலாகக் கூறப்படுகின்றன. பிற்காலத்துத் தந்த்ர சாஸ்திரங்களில் ஹம், ஹாம், ஹும், ஹூம், ஹ்ரீம், ஹ்ராம், ஹ்ரோம், ஸ்ரீம், ஐம், ஏம், க்லீம், பட் முதலிய ஒலிச் சேர்க்கைகள் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் மந்திர சக்தி வாயந்தவை. இவற்றை ஆகம நூல்கள் பீஜாக்ஷரங்கள் என்று பெயரிட்டு திருக்கோவில் கிரியைகளுக்குப் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன. பூஜா மந்திரங்களை முறைப்படி குருவிடமிருந்து கற்றுக் கொள்ளும்போது, பீஜாக்ஷர மந்திரங்களின் ப்ரயோகமும் கற்றுத் தரப்படும்.

யந்த்ரம் என்ற சொல்லுக்கு ஒரு பொருளையோ சக்தியையோ தேக்கி வைத்திருக்கும் கருவி, ஒரு செயல் புரிகையில் அதற்குப்  பயன்படுத்தப்படும் கருவி, சாதாரண அறிவுக்கெட்ட சக்தியைத் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சாதனம் என்றெல்லாம் பொருள் காணப்படுகிறது. எனவே மந்திரங்களின் மூலம் பூஜா விதிகளைக் கூறும் தந்த்ர நூல்கள், யந்த்ரங்களின் விவரங்களையும், அவற்றை உபயோகிக்க வேண்டிய முறைகளையும் கூட வெளியிடுகின்றன. மந்திரங்களை ப்ரயோகித்துப் பலனடைய உதவும் தந்த்ரங்களாம் முத்திரைகமைச் சரியாக உபயோகிப்பதால், அம்மந்திரங்களுக்குரிய தெய்வங்கள் மகிழ்கின்றனர் என்பதும், முத்திரைகள் காட்டும்போது அவை யந்த்ரங்களோடு சம்மபந்தப்பட்டிருந்தால், அந்த யந்திரங்கள் தாங்கியுள்ள, தாங்க வேண்டிய, சக்திக்கான தேவதைகளும் திருப்தி அடைவது உறுதி.

முத்திரைகளுக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. பெரும்பாலான முத்திரைகள் அப்போது ஓதப்பட்டுக்கொண்டிருக்கும் மந்திரச் சொற்களின் பொருளையும், வழிபாட்டு உபாங்கத்தையும் அனுசரித்தே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. நடைபெறும் சிவ பூஜா கிரியைகளை, மந்திரங்களின் வாயிலாக அறிய முடியாதவர்களும்கூட, முத்திரைகளைக் கண்ணுற்று, அவற்றை ஊகித்து உணரலாம்.

சிவாலயங்களில் பயன்படுத்தப்பெறும் பல்வகையான முத்திரைகளில் சில, தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. முத்திரைகளின் சித்திரத்தைக் வைத்துக்கொண்டு, அவற்றில் பயிற்சியற்றோர் தேர்ச்சி பெறலாம் என்ற நோக்கில் அவை இங்கு சேர்க்கப்படவில்லை ! முத்திரைகளை பூஜா விதிகளோடு சேர்த்து, குரு மூலமாகத்தான் கற்றறிய வேண்டும்; அச்சிலேறி வருவதைப் பார்த்துக் கற்றுக் கொண்டு முத்திரைகளை ப்ரயோகிக்க இயலாது; ப்ரயோகித்தாலும் அவை பலன் தராதென்பதோடுகூட, அவ்வழி பெரும் தவறுங்கூட. இந்த புத்தகத்தில் காணப்படும் முத்திரைகளின் படங்களும் விளக்கமும், ஆலய வழிபாட்டிற்குச் செல்வோர், சிவாச்சாரியார் செய்யும் கிரியைகளின் பொருளை, முக்கியத்துவத்தை, உணர்ந்து கொள்ள உதவுவதற்காகவே அச்சேறி வருகின்றன.
 
முத்திரைகளின் விளக்கம்

1. குரு வந்தன முத்திரை : ஸுமுகம் : விரித்து, பக்க வாட்டில் சேர்ந்த இரு கைகளையும் உள்ளங்கைகள் நம் முகத்தைப் பார்க்குமாறு உயர்த்திப் பிடித்தல்.

2. குரு வந்தன முத்திரை : ஸுவ்ருத்தம் : ஸுமுக (1) முத்திரையில் விரல்களை மடக்குதல். கட்டைவிரல்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

3. குரு வந்தன முத்திரை : சதுரச்ரம் : மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் கைகளை விரித்து (இடது கை கீழே) மணிக்கட்டு அருகே சேர்த்தல்.

4. குரு வந்தன முத்திரை : முத்கரம் : கட்டைவிரல்கள் தன்னை நோக்க, இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.

5. குரு வந்தன முத்திரை : யோனி : இரு மோதி விரல்களையும், நடுவிரல்களின் பின்பக்கமாக வளைத்துக் கொண்டுவந்து, ஆட்காட்டி விரல்களால் பிடித்துக் கொள்ளவும்; இடது சுண்டுவிரலை வலது சுண்டுவிரலால் பிடித்துக் கொள்ளவும்; கட்டைவிரல் நுனிகளால் நடுவிரல்களின் நடுப்பகுதியைத் தொடவும்.

6. குரு வந்தன முத்திரை : ம்ருகீ : இரு கைகளின் கட்டை விரல், நடு விரல். மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.

7. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : மத்ஸ்யம் : வலது உள்ளங்கை கீழ் நோக்க, இடது உள்ளங்கை அதனைத் தாங்க, கட்டை விரல்களை மட்டும் மீனின் செதில்களைப் போல் அசைத்துக் காட்டுதல்.

8. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.

9. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : அவகுண்டனம் : கைமுட்டிகளைக் கீழே காட்டி, வலது ஆட்காட்டி விரலால் ப்ரதக்ஷிணமாகவும், இடது ஆட்காட்டி விரலால் அப்ரதக்ஷிணமாகவும் இலக்கைச் சுற்றிக் காண்பித்தல்.

10. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : தேனு - அம்ருதீகரணம் : ஒரு கையின் சுட்டு விரல் மற்றதின் மோதிர விரலைத் தொடவும், ஒன்றின் நடுவிரல் மற்றதின் ஆள்காட்டி விரலைத் தொடவும் செய்வது. (பால் இறங்கி நிற்கும் பசுவின்மடி போல் காணப்படும்.)

11. அர்க்ய ஸ்த்தாபன முத்திரை : காலினீ : இடது கை மேல் நோக்க, வலது கையைக் கவிழ்த்து, விரல்களை வளைத்துப் பிடித்தல். இடது கட்டை விரலும் வலது சுண்டுவிரலும் சேர்ந்து காணும் இடைவெறி மூலம் விசேஷார்க்யத்தப் பார்க்க உதவும் முத்திரை.

12. ஆவாஹனாதி முத்திரை : ஆவாஹனீ : ஸுமுக (1) முத்திரையில் கட்டை விரல்களால் மோதிர விரல்களின் அடிப்பாகத்தை தொட்டு அசைத்தல்.

13. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஸ்தாபனீ (ஸ்தபனீ) : ஆவாஹனீ (12) போலவே கீழ் நோக்கிச் செய்தல்.

14. ஆவாஹனாதி முத்திரை : ஸந்திதாபனீ : கைமுட்டிகளை விரல்களின் நடுப்பகுதியில் சேர்த்து, கட்டை விரல்களை மேல் நோக்கிப் பிடித்தல்.

15. ஆவாஹனாதி முத்திரை : ஸந்நிரோதினீ : கட்டைவிரல்கள் உள்ளே மறைய, மற்ற நான்கு விரல்களின் நகங்கள் ஒன்றுக்கொன்று உரச, முட்டிகளைச் சேர்த்துப் பிடித்தல்.

16. ஆவாஹனாதி முத்திரை : ஸம்முகீகரணீ : விரல்கள் மடங்கிய நிலையில், கைமுட்டிகளை பக்க வாட்டில் சேர்த்து, நிமிர்த்திப் பிடித்தல்.

17. ஆவாஹனாதி முத்திரை : வந்தனீ : கைகூப்பி, விரல்கள் வளையாது, மார்புக்கு நேரே வந்தனம் செய்தல்.

18. ஆவாஹனாதி முத்திரை : தத்வம் : மற்ற விரல்கள் நிமிர்ந்திருக்க, இடது கை மோதிர விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.

19. ஆவாஹனாதி முத்திரை : சின் முத்திரை (அ) ஜ்ஞாந முத்திரை : வலது உள்ளங்கை வெளியே நோக்க, மூன்று விரல்கள் நிமிர்ந்திருக்க, ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டைவிரல் நுனியால் தொடுதல்.

20. ஆவாஹனாதி முத்திரை : ஸம்ஹாரம் (நிர்யாணம்) : இடக்கை கீழ் நோக்க, அதன் மேலே வலக்கையினை மேலே நோக்குமாறு வைத்து விரல்களைப் பிடித்துக்கொண்டு அசைத்துக் காட்டுதல்.

21. நியாஸ முத்திரை : முகம் : நான்கு வலக்கை விரல்களால் உதடுகளைத் தொடுதல்.

22. நியாஸ முத்திரை : கரசம்புடம் : ஸம்புடம் போல், கைகளை எதிர்முகமாகக் குவித்துப் பிடித்தல்.

23. நியாஸ முத்திரை : அஞ்ஜலி (நமஸ்காரம்) : இரண்டு கைகளையும் சேர்த்து, விரல்களை இணைத்து, பெருவிரல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னியுற வைப்பது.

24. நியாஸ முத்திரை : ஹ்ருதயம் : வலக்கையில் நடுவிலுள்ள மூன்று விரல்களால் இதயப் பகுதியைத் தொடுதல்.

25. நியாஸ முத்திரை : சிரஸ்: வலக்கையில் நடு மற்றும் மோதிர விரல் நுனிகளால் தலை உச்சியைத் தொடுதல்.

26. நியாஸ முத்திரை : சிகை : வலக்கை கட்டை விரல் நுனியால் சிகை (குடுமி) இருக்க வேண்டிய இடத்தைத் தொடுதல்.

27. நியாஸ முத்திரை : கவசம் : கைகளை மாற்றி, அனைத்து விரல்களாலும் தோள்களைத் தொடுதல்.

28. நியாஸ முத்திரை : நேத்ரம் : வலக்கையின் நடுவிலுள்ள மூன்று விரல்களால், இரு கண்கள், அவற்றின் நடுப்பகுதி ஆகியவற்றைத் தொடுதல்.

29. நியாஸ முத்திரை : அஸ்த்ரம் : வலது நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களால் இடது உள்ளங்கையில் மும்முறை தட்டுதல்.

30. நியாஸ முத்திரை : ந்யாஸம் : வலது கை கட்டை விரலால் மடங்கிய மூன்று விரல்களைச் சேர்த்தபின், ஆட்காட்டி விரலால் அங்கங்களைத் தொடுவது.

31. நிவேதன முத்திரை : க்ராஸம் : மேல் நோக்கும் இடது கையால், கிண்ணத்தில் அன்னம் இருப்பது போல் பாவனையாகக் காட்டுவது.

32. நிவேதன முத்திரை : ப்ராணன் : வலது கை நடுவிரலையிம் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

33. நிவேதன முத்திரை : அபானன் : வலது கை மோதிர விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதன் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

34. நிவேதன முத்திரை : வ்யானன் : வலது கை சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

35. நிவேதன முத்திரை : உதானன் : வலது கை மோதிர விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கட்டை விரலுடன் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

36. நிவேதன முத்திரை : ஸமானன்; வலது கையின் அனைத்து விரல்களையும் சேர்த்துப் பிடித்து, இடக்கையின் க்ராஸ முத்திரை மீது நிவேதனம் செய்வது போல ஆட்டிக் காண்பித்தல்.

37. கணேச வந்தன முத்திரை : தந்தம் : வலக்கையின் நடுவிரலை மட்டும் மேலே நீட்டி, மற்றவற்றை மடக்கிப்பிடித்தல்.

38. கணேச வந்தன முத்திரை : பாசம் : இரு கை முட்டிகளையும் ஆள்காட்டி விரல்களின் நுனிகள் தொடுமாறு சேர்த்து, கட்டை விரல் நுனிகளும் அவற்றைச் சந்திக்கச் செய்தல்.

39. கணேச வந்தன முத்திரை : அங்குசம் : வலக்கை நடு விரல் நேராக நீட்டப்படும்; ஆள்காட்டி விரல் அதன் நடுப்பகுதி வரை வந்து முன் நோக்கி வளையும்.

40.கணேச வந்தன முத்திரை : விக்னம் : இறுகப்பிடித்த வலக்கை முட்டி கீழ் நோக்க, நடு விரல் மட்டும் நீட்டப்படுவது.

41. கணேச வந்தன முத்திரை : பரசு: உள்ளங்கைகளை ஒன்றை ஒன்று நோக்க, குறுக்கு வாட்டில் சேர்த்து, விரல்களை நீட்டுதல்.

42. கணேச வந்தன முத்திரை : லட்டுகம் : கையிலடங்கிய லட்டு அல்லது கொழுக்கட்டையைக் காண்பிப்பது போன்ற பாவனை.

43. கணேச வந்தன முத்திரை : பீஜாபூரம் : மாதுளம்பழம் போலக் கையைக் குவித்துப் பிடித்தல்.

44. சிவ வந்தன முத்திரை : லிங்கம் : உயர்த்திய வலது கட்டை விரலை முதலில் இடது கட்டை விரலால் பற்றிக் கொண்டு, பிறகு மற்ற இடக்கை விரல்களாலும் சுற்றிப் பிடித்து, இறுதியாக வலது கைவிரல்களால் இடக்கையை இறுகப் பிடித்து, இதயத்தின் அருகே பரிசுத்தமான மனத்துடன் வைத்துக் கொள்வது.

45. சிவ வந்தன முத்திரை : யோனி : மோதிர விரல்களுடன் சேர்த்து நீட்டிய நடு விரல்களின் மேல், கட்டை விரல்களை வைத்தல்.

46. சிவ வந்தன முத்திரை : திரிசூலம் : மடக்கிய வலக்கை சுண்டு விரலைக் கட்டை விரலால் அழுத்திக்கொண்டு, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.

47. சிவ வந்தன முத்திரை : அக்ஷமாலா : வளைந்த வலக்கை ஆள்காட்டி விரல் நுனியைக் கட்டை விரல் நுனி தொட, மற்ற மூன்று விரல்களை நீட்டிக் காண்பித்தல்.

48. சிவ வந்தன முத்திரை : வரம் : கீழ் நோக்கி மலர்ந்து நீண்ட வலது கை.

49. சிவ வந்தன முத்திரை : அபயம் : மேல் நோக்கி மலர்ந்து நீண்ட இடது கை.

50. சிவ வந்தன முத்திரை : ம்ருகீ : இரு கைகளின் கட்டை விரல், நடு விரல், மோதிர விரல்களை மடித்து நுனிகளைச் சேர்த்து , மற்ற விரல்களை நீட்டி, தலைக்கு மேல் பிடித்தல்.

51. சிவ வந்தன முத்திரை : கட்வாங்கம் : கையின் ஐந்த விரல்களையும் மேல் நோக்கிச் சேர்த்து, சற்று வளைத்துப் பிடித்தல்.

52. சிவ வந்தன முத்திரை : கபாலம் : இடது கையில் மண்டை ஓடு இருப்பது போல் பாவனை செய்து, அந்தக் கையை இடது பக்கமாக பிøக்ஷ கேட்பது போல் நீட்டுதல்.

53. சிவ வந்தன முத்திரை : டமருகம் : சற்றே விரிந்த வலக்கை முட்டியை, நடு விரலை மட்டும் சற்றுத் தூக்கிப் பிடித்து, காதிற்கு அருகே உடுக்கு அடிப்பது போல பாவனை செய்தல்.

54. பொதுவான முத்திரை : சாபம் (வில்) : உயர்த்திய வலக்கை நடுவிரல் நுனியை, ஆட்காட்டி விரல் நுனியைத் தொடுமாறு செய்தல்.

55. பொதுவான முத்திரை : சங்கம் : இடது கைக் கட்டை விரலை வலது முட்டியால் பற்றிக்கொண்டு, வலக்கை கட்டை விரலைச் சங்கு ஊதுவதுபோல் பாவனை செய்தல்.

56. பொதுவான முத்திரை : கட்கம் : வலது கட்டைவிரலால் சுண்டு விரலையும் மோதிர விரலையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, மற்ற இரு (ஆள்காட்டி, நடு விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேராமல் நீட்டுதல், (ஆள்காட்டி, நடு) விரல்களைச் சேர்த்து வைத்து நீட்டுவதே கட்க முத்திரை என்றும் சேர்க்காமல் நீட்டுதல் கோவிடாண முத்திரை என்றும் கொள்வதுண்டு)

57. பொதுவான முத்திரை : சர்மம் (கேடயம்) : இடது கையைக் குறுக்காக நீட்டி விரல்களை மடக்குதல்.

58. பொதுவான முத்திரை : முஸலம் : இடது முட்டி மீது வலது முட்டியை வைத்தல்.

59. பொதுவான முத்திரை :  வீணா : விணை வாசிப்பது போல் கைகளால் பாவனை செய்து தலையையும் அசைப்பது.

60. பொதுவான முத்திரை : புஸ்தகம் : கை முஷ்டியைத் தன்னை நோக்கிப் பிடிப்பது.

61. பொதுவான முத்திரை : கும்பம் : வலது இடது கட்டை விரல்கள் பக்க வாட்டில் உரசுமாறு இரு கை முட்டிகளையும் சேர்த்து நீட்டுதல்.

62. பொதுவான முத்திரை : ப்ரார்த்தனா : இரு கை விரல்களையும் விரித்துப் பக்க வாட்டில் தன்னை நோக்கிச் சேர்த்து இதயத்தில் வைத்துக் கொள்ளுதல்

63. பொதுவான முத்திரை : பசுமுத்திரை : சுண்டு விரல்களின் அடிப் பகுதியை கட்டை விரல் நுனிகளால் தொட்டுக்கொண்டு, இருகைகளையும் ஒன்று சேர்த்துக் குவித்து வணங்குவது. இது முத்தேவியருக்கும் மிகவும் உகந்தது.

64. நிரீக்ஷண முத்திரை : கட்டை விரல் மோதிர விரலை வளைத்துப் பிடிக்க மற்ற விரல்களை நீட்டுவது.

65. அப்யுக்ஷண முத்திரை : விரல்களை சேர்த்து நீட்டி, கட்டை விரலை அவற்றுடன் இணைத்து, கவிழ்த்துப் பிடிப்பது. இது சோத்திக முத்திரை, மற்றும் கவிழ்ந்த பதாகை எனவும் வழங்கப்பெறும்.

66. கோவிடான முத்திரை : ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணையாமல் நீட்டி, சுண்டு விரல் மோதிர விரல்களை மடக்கி இவற்றை கட்டை விரல்லால் அழுத்திப் பிடிப்பது.

67. சோடிகா முத்திரை; விரல்களை மடக்கி, ஆள்காட்டி விரலால் கட்டை விரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிப்பது.

68. சாண முத்திரை : நடுவிரல்கள் மூன்றையும் இணைத்து, மற்ற விரல்களை
விலக்கி நீட்டுவது.

69 மஹா முத்திரை : கைவிரல்கள் நீண்டிருப்பது.

70. ப்ரஸன்ன முத்திரை : இரண்டு கைகளையும் கூப்பி, இரண்டு கட்டை விரல்களையும் இணைத்து, அவற்றின் நுணிகள் மோதிர விரலின் அடியில் பொருந்த, உள்ளே மடக்குவது. இதை ஆவாஹன முத்திரை எனவும் கூறுவர்.

71. அதிஷ்டான முத்திரை : இரண்டு கைக் கட்டை விரல்களாலும் உள்ளங்கையைத் தொடுவது.

72. உஷ்ணீக முத்திரை : கட்டை விரல் நுணியை ஆள்காட்டி விரல் நுணியால் தொடுவது.

73. யோக முத்திரை : நடுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது. இதை மோக முத்திரை என்றும் கூறுவர்.

74. ஆக்ர முத்திரை : சுண்டுவிரல் நுணியை பெருவிரல் நுணியால் தொடுவது.

75. கடா முத்திரை : இரண்டு கைகளையும் இணைந்து, நடு விரல்கள் மூன்றினாலும் உள்ளங்கைகளைத் தொடுவது.

76. உஷ முத்திரை : ஒரு கை மோதிர விரலால் மற்றொரு கையில் உள்ளங்கையைத் தொடுவது.

ஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு

http://saibabamandir.info/images/Shirdi_Sai_Baba_pic.gif

ஷீரடி  சாய் பாபா  சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு

LIVE TV காலை  4 மணி முதல் இரவு 11.15 வரை நேரடி ஒளிபரப்பு



ஷீரடி சாய் பாபா சமாதி மந்திர் - நேரடி ஒளிபரப்பு நேரடி தரிசனம் 
shirdi sai baba sansthan manthir live dharsan


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbOCUfv4zCMXOaE_z1Gx5WCfe3QmmpbO1is2wED-7jyVcFEuV-bOyxPdN0l_3C_8Jbd3rfmp8mCTUs8TbmDC6vOJWwb_bNk4LgrlvlKhdVlDCPXEo4_TqXtNpHY4PWy-i0uy5EGepe5t2B/s1600/sai.jpg

https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html

Or

http://www.saibabaofindia.com/shirdi_sai_baba_live_online_samadhi_mandir_darshan.htm


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi80HGrTC13yhO64FjZ25OiF9O8qo4lviHdtryWGGjPv_79nVEuYeGdmzngRSBavnQx3SngrymEKrlqjRw6XpMdzGZghz5iPcdMMb3K89RhsjgrQXLONJwKAEzxC0WLsakBfAVAlsh3GxOj/s1600/golden-throne-shirdi-sai-baba-posters-collection-free.jpg

http://timesofindia.indiatimes.com/photo/8197834.cms 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWWD9P-LtAtO0SM-1qU579_jorCwR3MSIxZWe4KFeuh14wKTrTcuZC-mcu_teQjneZmS94mM_CT-ryGYhDaNqF1mbUD_HwhXTl-Lb1cxHlDjercx_4r5e98Ceq8taCvbbSnSmeq6CKlzQ/s1600/Shasi-Tharoor-and-wife+sunanda+pushkar+at+Shridi+Sai+Baba+Temple.jpg

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSfytQUoPaMNpCSpXmHwZbpyV8kwiOpSEemEKxu_c3towS0s1vpgBabFkLi





http://www.religiousindia.info/wp-content/uploads/2010/05/sai-baba.jpg











http://i43.tinypic.com/2nqtb9k.jpg

http://sim.in.com/48fab26daeaa0fca3b9da37fe6cd0255_ls_lt.jpg

Monday, 12 November 2012

ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்தோத்திரம்.MP3



 http://www.hoparoundindia.com/cityimages/andhra-pradesh/bigimages/Mantrayalam-Brindavan%20of%20Sri%20Raghavendra%20Swami-1.jpg


ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்தோத்திரம்.MP3  



1. ஸ்ரீபூர்ணபோத குருதீர்த்த பயோப்திபாரா
காமாரிமாக்ஷ விஷமாக்ஷ சிர: ஸ்ப்ருசந்தீ
பூர்வோத்ராமித தரங்க ச்ரத் ஸுஹம்ஸா
தேவாளி ஸேவித பராங்க்ரி பயோஜ லக்நா

2. ஜீவேச பேத குணபூர்த்தி ஜகத்ஸுஸத்வ
நீசோச்சபாவ முக நக்ர கணைஸ் ஸமேதா
துர்வாத்ய ஜாபதிகிலைர் குருராகவேந்த்ர
வாசுதேவதா ஸரிதமும் வமலீகரோது

3. ஸ்ரீராகவேந்த்ரஸ் ஸகலப்ரதாதா
ஸ்வபாத கஞ்ஜத்வய பக்திமத்ப்ய:
அகாத்ரி ஸம்பேதந த்ருஷ்டி வஜ்ர:
க்ஷமாஸுரேந்த்ரோவது மாம் ஸதாஸ்யம்

4. ஸ்ரீராகவேந்த்ரோ ஹரிபாத கஞ்ஜ
நிஷேவணால் லப்த ஸமஸ்த ஸம்பத்
தேவஸ்வபாவோ த்விஜ த்ருமோய
மிஷ்டப்ரதோ மே ஸததம் ஸ பூயாத்

5. பவ்ய ஸ்வரூபோ பவது: க தூல
ஸங்காக்நி சர்ய: ஸுகதைர்ய சா லீ
ஸமஸ்த்த துஷ்டக்ரஹ நிக்ரஹோ சோ
துரத்ய யேபப்லவ ஸிந்து ஸேது:

6. நிரஸ்த தோ÷ஷா நிரவத்ய வேஷ:
ப்ரத்யர்த்தி மூகத்வ நிதாநபாஷ :
வித்வத் பரிஜ்ஞேய மஹாவிசே ÷ஷா
வாக்வைகரீ நிர்ஜித பவ்யசே ஷ

7. ஸந்தாந ஸம்பத் பரிசூத்த பக்தி
விஜ்ஞாந வாக்தேஹ ஸுபாட வாதீந்
தத்வா சரீரோத்த ஸமஸ்த தோஷாந்
ஹத்வா ஸ நோஸ்வ்யாத் குருராகவேந்த்ர:

8. யத்பா தோதக ஸஞ்சயஸ் ஸுரநதீமுக்யாபகா ஸாதிதா
(அ)ஸங்க்யாநுத்தம புண்ய ஸங்க விலஸத் ப்ரக்யாத புண்யாவஹ
துஸ்தாபத்ரய நாசநோ புவி மஹாவந்த்யா ஸுபுத்ரப்ரதோ
வ்யங்கஸ்வங்க ஸம்ருத்திதோ க்ரஹமஹா பாபாபஹஸ்தம் ச்ரயே

9. யத்பாதகஞ்ஜ ரஜஸா பரிபூஷிதாங்கா
யத்பாதபத்ம மதுபாயித மாநஸாயே
யத்பாதபத்ம பரிகீர்த்தந ஜீர்ண வாசஸ்
தத்தர்ச நம் துரிதகாநந தாவபூதம்

10. ஸர்வ கந்த்ர ஸ்வதந்த் ரோஸஸெள ஸ்ரீமத்வமத வர்தந:
விஜயீந்த்ர கராப்ஜோத்த ஸுதீந்த்ர வரபுத்ரக:

11. ஸ்ரீராகவேந்த்ரோ யதிராட் குருர் மே ஸ்யாத் பயா பஹ:
ஜ்ஞாநபக்தி ஸூபுத்ராயுர் யச: ஸ்ரீ புண்ய வர்தந:

12. ப்ரதிவாதி ஜயஸ்வாந்த பேதசிந்யாதரோ குரு:
ஸர்வவித்யா ப்ரவீணோந்யோ ராகவேந்த்ராந் ந வித்யதே

13. அபரோக்ஷீக்ருத ஸ்ரீச: ஸமுபேக்ஷித பாவஜ:
அபேக்ஷித ப்ரதாதந்யோ ராகவேந்த்ராந்ந வித்யதே

14. தயா தாக்ஷிண்ய வைராக்ய வாக்பாடவமுகாங்கித:
சா பாநுகரஹச க்தோந்யோ ராகவேந்த்ராந்ந வித்யதே

15. அக்ஞாந விஸ்ம்ருதி ப்ராந்தி ஸம்ச யாபஸ்ம்ருதி க்ஷயா:
தந்த்ரா கம்பவச: கௌண்ட்ய முகா யே சேந்த்ரியோத்பவா:
தோஷஸ்தே நாஸமாயந்தி ராகவேந்த்ர ப்ரஸாதத:

16. ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம: இத்யஷ்டாக்ஷர மந்த்ரத:
ஜபிதாத் பாவிதாந் நித்ய மிஷ்டார்த்தாஸ் ஸ்யுர் ந ஸம்சய

17. ஹந்து ந: காயஜாந் தோஷாநாத்மாத்மீய ஸமுத் பவாந்
ஸர்வாநபி புமர்த்தாம்ச ச ததாது குருராத்மவித்

18. இதி காலத்ரயே நித்யம் ப்ரார்த்தநாம் ய: கரோதி ஸ:
இஹாமுத்ராப்த ஸர்வேஷ்டோ மோததே நாத்ர ஸம்ஸய:

19. அகம்ய மஹிமா லோகே ராகவேந்த்ரோ மஹாயசா
ஸ்ரீமத்வமத துக்தாப்தி சந்த்ரோஸ்வது ஸதாநக:

20. ஸர்வயாத்ரா பலாவா ப்த்யை யதாச க்தி ப்ரதக்ஷிணம்
கரோமி தவ ஸித்தஸ்ய ப்ருந்தாவந கதம் ஜலம்
சிரஸா தாரயாம்யத்ய ஸர்வதீர்த்த பலாப்தயே

21. ஸர்வபீஷ்டார்த்த ஸித்யார்த்தம் நமஸ்காரம் கரோம்யஹம்
தவ ஸங்கீர்த்தநம் வேதசா ரஸ்த்ரார்த்தஜ்ஞாந ஸித்தயே

22. ஸம்ஸாரே க்ஷயஸாகரே ப்ரக்ருதிதோ காதே ஸதா துஸ்தரே
ஸர்வாவத்ய ஜலக்ரஹை ரநுபமை: காமாதி பங்காகுலே

23. நாநாவிப்ரம துர்ப்ர மேஸ்மிதபய ஸ்தோமாதி பேநோத்கடே
து : கோத்க்ருஷ்ட விஷேஸே முத்தர குரோ மாம் மக்நரூபம் ஸதா

24. ராகவேந்த்ர குருஸ்தோத்ரம் ய: படேத் பக்தி பூர்வகம்
தஸ்ய குஷ்டாதிரோ காணாம் நிவ்ருத்திஸ் த்வரயா பவேத்

25. ய: பிபேத் ஜலமேதந ஸ்தோத்ரேணைவாபி மந்த்ரிதம்
தஸ்ய குக்ஷிகதா தோஷா: ஸர்வே நச் யந்தி தத்க்ஷணாத்

26. யத்ப்ருப்தாவந மாஸாத்ய பங்கு: கஞ்ஜோபி வ ஜந:
ஸ்தோத்ரேணாநேந ய : சூர்யாத் ப்ரதக்ஷிண நமஸ்யக்ருதீ

27. ஸ ஜங்காலோ பவேதேவ குருராஜ் ப்ரஸாதத:
ஸோம ஸுர்யோ பராகே சு புஷ்யார்காதி

28. யோநுத்தம மிதம் ஸ்தோத்ர மஷ்டோத்தரச தம் ஜபேத்
பூதப்ரேத பிசா சாதி பீடா தஸ்ய ந ஜாயதே

29. ஏதத்ஸ்தோத்ரம் ஸமுச்சார்ய குரோர் ப்ருந்தாவநாந்திகே
தீ பஸம் யோஜ நாத் ஜ்ஞாநம் புத்ரலாபோ பவேத் த்ருவம்

30. பரவாதிஜயோ திவ்ய ஜ்ஞாந பக்த்யாதி வர்த்தநம்
ஸர்வாபீஷ்ட ப்ரவ்ருத்தி : ஸ்யாத் நாத்ர கார்யா விசாரணா

31. ராஜசோர மஹாவ்யாக்ர ஸர்ப்ப நக்ராதி பீடநம்
ந ஜாய தேஜஸ்ய ஸ்தோத்ரஸ்ய ப்ரபாவாந் நாத்ரஸம்ச ய:

32. யோ பக்த்யா குருராகவேந்த்ர
சரணத்வந்த்வம் ஸம்ரந் ய: படேத்
ஸ்தோத்ரம் திவ்யமிதம் ஸதா
ந ஹி பவேத் தஸ்யாஸுகம் கிஞ்சந
கிம்த்விஷ்டார்த்த ஸம்ருத்தி ரேவ
கமலாநாதப்ரஸாதோ தயா


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTVNNRKeD2yse__or58ia2vKABjMmLt4rX6pOPxBtPNjwnxm-lJW7FP_ELxlvtrxCjQasWDZ34eLKguqVluLE4ZFuf5Wctn5KPfqCjxUTBIwqsjAPKarQINxCfveqGCQy5ZZMC4fh4ab0/s320/images.jpg

Wednesday, 7 November 2012

கைலாச ஸம்ஹிதையில் பஞ்சரத்ன ஸ்தோத்ரம்- அகத்தியர் அருளியது



 கைலாச ஸம்ஹிதையில் பஞ்சரத்ன ஸ்தோத்ரம்- அகத்தியர் அருளியது



மத்தரோக சிரோபரிஸ்தித ந்ருத்ய மானபதாம்புஜம்!
பக்த சிந்நித சித்திதான விசக்ஷணம் கமலேக்ஷணம்!!
புக்தி முக்தி பலப்ரதம் புவி பத்ம ஜாச்யுத பூஜிதம்!
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம ஸர்வ ஸித்தித மீஸ்வரம்!!

அறியாமை வடிவாகிய பூதத்தின்மீது நிருத்தரூபமாக ஒரு பாதக் கமலத்தை வைத்திருப்பவராகவும், அடியார்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவதில் நிபுணராகவும், தாமரை யொத்த கண்களை யுடையவராகவும், போக மோக்ஷங்கள் அளிப்பவராகவும், பூலோகத்தில் பிரம்மன், விஷ்ணு முதலியோர்களால் பூஜிக்கப்பட்டவராகவும், அடியேனுக்கு எல்லா சித்திகளையும் அருளிச் செய்பவராகவும் இருக்கும் தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

வித்ததப்ரிய மர்ச்சிதம் க்ருதக்ருச்ர தீவ்ர தபோவ்ரதை:
முக்திகாமி பிராச்ரிதைர்முஹீர் முனிபிர்த்ருட மானஸை:
முக்திதர் திஜ பாத பங்கஜ ஸக்த மானஸ யோகினாம்
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம சர்வ ஸித்தித மீஸ்வரம்.

குபேரன், தீவிர தபஸ்விகள், மோக்ஷத்தை விரும்புபவர்கள், மேலும் மன உறுதிபெற்ற முனிவர்கள் இவர்களால் பூஜிக்கப்படுபவரும், தன்னையடைந்த யோகிகளுக்கு முக்தியை அளிப்பவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

க்ருத்த தக்ஷ மகாதிபம் வர வீரபத்ர கணேனவை
யக்ஷ ராக்ஷஸ மாத்ய கின்னர தேவ பன்னக வந்திதம்
ரத்னபுக் கணநாத ப்ருத் ப்ரமரார்ச்சிதாங்க்ரி ஸரோருஹம்
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம ஸர்வ ஸித்தித மீஸ்வரம்.

வீரபத்ரர் முதலிய சுணங்களால் தக்ஷனுடை யாகத்தை அழித்தவரும், இயக்கர், அரக்கர், மானுடர், கின்னரர், தேவர்கள், நாகர்கள், சமுத்திரர்கள், விநாயகர் முதலியோர்களால் வணங்கப்படுபவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

நக்த நாத கலாதரம் நகஜா பயோதர மண்டல
லிப்த சந்தன பங்க குங்கும முத்ரிதா மல விக்ரஹம்
சக்தி மந்தமசேவு ஸ்ருஷ்டி விதானகே ஸகலப்ரபும்
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம ஸர்வ ஸித்தித மீஸ்வரம்.

சந்திரப்பிறை சூடியவரும், மலைமகளின் மார்பகத்தில் பூசப்பட்ட சந்தனம், குங்குமம் இவற்றால் அடையாளமிடப்பட்ட நிர்மலமான
சரீரத்தையுடையவரும், சக்தியோடுகூடி ஸ்ருஷ்டியைச் செய்யும் காலத்து சகலராகவும் இருக்கிற தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

ரக்த நிரஜ துல்ய பாத பயோஜ ஸன்மணி நூபுரம்
பத்தனத்ரய பேத பேசல பங்கஜாக்ஷ சிலீமுகம்
ஹேம சைல சராஷனம் ப்ருது சிஞ்சினீக்ருத தஷகம்
தக்ஷிணாமுக மாஸ்ரயே மம ஸர்வ ஸித்தித மீஸ்வரம்.

செந்தாமரையொத்த பாதத்தில் நன்மணிகளாலான சதங்கை யணிபவரும், முப்புரங்களையழித்தவரும், இமயமலையில் கைலாசத்தில் சுகமாக வீற்றிருப்பவரும், ப்ருது என்ற அரசனுக்கு அருள்செய்தவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

ய: படேத்ச தினேதினே ஸ்தவபஞ்சரத்ன முமாபதே!
ப்ராதரேவ மயாக்ருதம் நிகிலாகதூஸ மஹாநலம்!
தஸய புத்ர களத்ர மித்ர தனானி ஸந்து க்ருபா பலாத்
ஹே மகேஸ்வர சங்கராகில விஸ்வநாயக சாஸ்வத!!
ஹே மஹேஸ்வரா! சங்கரா! விஸ்வநாயகா! நிலைபேறானவரே!


இந்த பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் எவர் துதிக்கின்றாரோ அவருக்கு எல்லா பாபங்களும் அழிந்து, புத்திரன், மனைவி, நண்பர், செல்வம் யாவும் உம்முடைய கருணையால் உண்டாகட்டும். (அகத்தியர் அருளியது)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnd1dCvWMxK9rSmSDgp7rr85ltBUBwnRyCDWxTm1VsencTgskGPC4GNOvmrdrKDEJHYOgXPKAUOHId1Zcrbq2zrPB2IpH7G0l7ZrcnvCnSasWS0tRc9xHHKGCYEKXbVOMtghU6f7V6N_i-/s1600/temple_top.jpg

Friday, 2 November 2012

பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு

http://ramgandhiraman.files.wordpress.com/2010/01/bharathiar-11.jpg

பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.

எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உண்ணத நோக்கத்துடன்

உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் வயதில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருடம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. மத்தியம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா'என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள். இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOwUliynB6pN571BSGq1TqpdjCL36Vamcj1dY0rulSkVKFEF7HTdaJn1ayLrbTA5YHAtitadAsHZ70U1HFEI9nMizr5bOaPZXkz-vKSXCoav3QVSBm9Rkmkenwa7PHodGOM8uHYEuvzxk/s1600/bharathiyar.jpg

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.
http://bharathiyar.gratussolutions.com/sites/all/themes/bharathiyar/images/bharathiar1.jpg

"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை. காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
http://senthamil.org/leaders/bharathiar.jpg
புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.

பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

http://senthamil.org/leaders/bharathymuseum.jpgமகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

Thursday, 1 November 2012

ஹநுமத் அஷ்டோத்தர சத நாமாவளி.MP3

http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g3.jpg

ஹநுமத் அஷ்டோத்தர சத நாமாவளி.MP3


ஓம் ஆஞ்சநேயா நம
ஓம் மஹாவீராய நம
ஓம் ஹநூமதே நம
ஓம் மாருதாத்மஜாய நம
ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம
ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய நம
ஓம் அசோகவநிகாச்சேத்ர நம
ஓம் ஸர்வமாயாவி பஞ்ஜநாய நம
ஓம் ஸர்வபந்தவிமோக்த்ரே நம
ஓம் ர÷க்ஷõவித்வம்ஸகாரகாய நம

ஓம் பரவித்யாபரீஹாராய நம
ஓம் பரஸெளர்யநாஸநாய நம
ஓம் பரமந்த்ர நிராகர்த்ரே நம
ஓம் பரயந்த்ரப்ரபேதகாய நம
ஓம் ஸர்வக்ரஹவிநாஸிநே நம
ஓம் பீமஸேநஸஹாயக்ருதே நம
ஓம் ஸர்வலோகசாரிணே நம
ஓம் மநோஜவாய நம
ஓம் பாரிஜா தத்ரு மூவஸ்தாய நம

ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபவதே நம
ஓம் ஸர்வ தந்த்ரஸ்வரூபிணே நம
ஓம் ஸர்வமந்த்ராத்மகாய நம
ஓம் கபீச்வராய நம
ஓம் மஹாகாயாய நம
ஓம் ப்ரபவே நம
ஓம் பலஸித்திகராய நம
ஓம் ஸர்வவித்யாஸம்பத ப்ரதாயகாய நம
ஓம் கபிஸேநாநாயகாய நம

ஓம் பவிஷ்யச்சதுராநநாய நம
ஓம் குமாரப்ரஹ்மசாரிணே நம
ஓம் ரத்நகுண்டல தீப்திமதே நம
ஓம் ஸஞ்சலத் வாலஸந்நத்த நம
ஓம் லம்பமாநஸிகோஜ்ஜவ லாய நம
ஓம் கந்த்ர்வவித்யா தத்வஜ்ஞயா நம
ஓம் மஹாபலபராக்ரமாய நம
ஓம் காராக்ருஹவி மோக்த்ரே நம
ஓம் ச்ருங்கலா பந்தமோ சகாய நம
ஓம் ஸாகரோத்தாரகாய நம

ஓம் ப்ராஜ்ஞாய நம
ஓம் ராமதூதாய நம
ஓம் ப்ரதாபவதே நம
ஓம் வாநராய நம
ஓம் கேஸரிஸுதாய நம
ஓம் ஸீதாஸோக நிவாரணாய நம
ஓம் அஞ்ஜநாகர்ப ஸம்பூதாய நம
ஓம் பாலார்க்கஸத்ருஸாந நாய நம
ஓம் விபீஷணபரிகராய நம
ஓம் தஸக்ரீவகுலாந்தகாய நம

ஓம் லக்ஷ்மணப்ராணதாத்தே நம
ஓம் வஜ்ரகாயாய நம
ஓம் மஹாத்யுதயே நம
ஓம் சிரஞ்ஜீவிநே நம
ஓம் ராமபக்தாய நம
ஓம் தைத்யகார்ய நம
ஓம் விகாதகாய நம
ஓம் அக்ஷஹந்த்ரே நம
ஓம் காஞ்சநாபாய நம
ஓம் பஞ்சவக்த்ராய நம

ஓம் மஹா தபஸே நம
ஓம் லங்கிணீ பஞ்ஜநாய நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் ஸிம்ஹி காப்ராண பஞ்ஜநாய நம
ஓம் கந்தமாதநசைலஸ் தாய நம
ஓம் லங்காபுரவிதாஹகாய நம
ஓம் ஸுக்ரீவஸ்சிவாய நம
ஓம் பீமாய நம
ஓம் சூராய நம
ஓம் தைத்யகுலாந்தகாய நம
ஓம் ஸுரார்ச்சிதாய நம
ஓம் மஹாதேஜஸே நம
ஓம் ராமசூடாமணிப்ரதாய நம
ஓம் காமரூபிணே நம
ஓம் பிங்களாக்ஷõய நம
ஓம் வார்திமை நாசபூஜிதாய நம
ஓம் கபளீக்ருதமார்த்தாண்ட மண்டலாய நம
ஓம் விஜிதேந்தரியாய நம
ஓம் ராமஸுக்ரீவஸந்தாத்ரே நம
ஓம் மஹாராவணமாதநாய நம

ஓம் ஸ்படிகாபாய நம
ஓம் வாகதீஸாய நம
ஓம் நவவ்யாக்ருதி பண்டிதாய நம
ஓம் சதுர்பாஹவே நம
ஓம் தீநபந்தவே நம
ஓம் மஹாத்மநே நம
ஓம் பக்தவத்ஸலாய நம
ஓம் ஸஞ்ஜீவநநகர ஹர்த்ரே நம
ஓம் ஸுசயே நம
ஓம் வாக்மிநே நம

ஓம் த்ருடவரதாய நம
ஓம் காலநேமிப்ரமத நாய நம
ஓம் ஹரிமர்கடமாகடாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் ஸாந்தாய நம
ஓம் ப்ரஸநாத்மநே நம
ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
ஓம் யோகிநே நம
ஓம் தசகண்ட மதா பஹ்ருதே நம
ஓம் யோகிநே நம
ஓம் ராமகதாலோலாய நம
ஓம் ஸீதாந்வேஷண பண்டிதாய நம 

ஓம் வஜ்ரநாய நம
ஓம் ருத்ரவீகயஸமுத்பவாய நம
ஓம் இந்திரஜித ப்ரஹிதா மோகப்ரஹ்மா நம
ஓம் ஸ்த்ரவிநிவாரகாய நம
ஓம் பார்த் த்வஜாக்ர ஸம்வாஸிநே நம
ஓம் ஸரபஞ்ஜர பேதகாய நம
ஓம் தஸபாஹவே நம
ஓம் லோகபூஜ்யாய நம
ஓம் ஜாம்பவத் ப்ரீதி வர்த்தநாய நம
ஓம் ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தராய நம



http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g1.jpg

பேய் பிசாசு, பில்லி, சூனியத்தை விரட்டும் பால ஹனுமான் வழிபாடு

ஏழரை நாட்டு சனி, மனக் குழப்பம் , பீதி மற்றும் காரிய சித்தி பெற வேண்டும் என்பதற்காக பலர் அனுமான் வழிபாடு செய்வார்கள் . ஆனால் பேய் பிசாசு, பில்லி, சூனியம் பிடித்தவர்களும் பால ஹனுமான் வழிபாடு செய்வது உள்ளது என்பது ஆச்சரியம் தரும் செய்தி ஆகும் .
http://www.punjabigraphics.com/images/7/hanuman-ji.jpg



அப்படிப்பட்ட ஒரு ஆலயம் இராஜஸ்தானில் மெஹந்திபூர் அருகில் தௌசா என்ற மாவட்டத்தில் உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள பால அனுமான் , தன்னுடன் பூதங்களின் தலைவரான பிரேத சர்கார் மற்றும் பைரவரை வைத்துக் கொண்டு பேய் பிசாசு, பில்லி , சூனியம் பிடித்தவர்களுக்கு நிவாரணம் தருவதான நம்பிக்கை உள்ளது. இந்த ஆலயத்தை மெஹந்திபூர் பாலாஜி ஆலயம் என அழைக்கின்றனர்.

இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்டது எனவும் , கொடிய வன விலங்குகள் உலாவிய அடந்த காட்டின் நடுவில் இருந்த ஆலயம் எவருக்கும் தெரியாமல் இருந்தது எனவும் , ஆனால் வெகுகாலத்திற்குப் பிறகு தற்பொழுது ஆலயத்தில் உள்ள பண்டிதரின் முந்தைய சந்ததியினர் ஒருவருடைய கனவில் பால " அனுமார்" தோன்றி அந்த ஆலயம் உள்ள இடத்தைக் காட்டி, அதன் மகிமையை எடுத்துக் கூற அவர்கள் அங்கு சென்று ஆலயத்தைக் கண்டு பிடித்து பூஜைகள் செய்யத் துவங்கினர் எனவும் தெரிகின்றது .

அங்குள்ள பைரவர் பால "அனுமானின் சேனைத் தலைவராக " கருதப்படுகின்றார் . பைரவர் சிவபெருமானின் அவதாரம். நான்கு கைகளுடன் இடுப்பில் கைவைத்தவாறு சிவப்பு வண்ண துணி உடுத்தி உள்ளார் என்பதே அவருடைய தோற்றம் . சாதாரணமாகவே பைரவர் உள்ள இடத்தில் பேய் பிசாசுகள் நுழைய முடியாது என்பது உண்டு. ஏன் எனில் அவர் சுடுகாட்டில் வசிப்பவர் . சிவபெருமானின் அவதாரம் . துஷ்ட தேவதைகளை விரட்டி அடிப்பவர் . பைரவர் யார் என்பதும் அவருடைய மகிமைகளையும் இன்னொரு கட்டுரையில் காணலாம் .

பிரேத சர்கார் பற்றிய எந்த குறிப்பும் புராணங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆலயத்தில் மட்டுமே பிரேத சர்கார் என்ற பெயரையே அறிய முடிகின்றது. ஆனால் இறந்து போனவர்களின் பிரேதத்தில் இருந்து வெளியேறிய ஆத்மாக்கள் சில பேய்களாகத் திரிகின்றன, மற்றும் சில ஆத்மாக்கள் உடனடியாக பிறவிகள் எடுக்கின்றன. அவற்றில் தீயவர்கள் பேய் மற்றும் பூதங்களாக மாற அப்படித் திரியும் ஆத்மாக்களுக்கும் ஒரு தலைவர் இருந்திருக்க வேண்டும் என்பது ஒரு நம்பிக்கை. ஆகவே அவரே பிரேதங்களின் தலைவர் எனப் பொருள்படும் பிரேத சர்காராகவும் இருக்க வேண்டும் .
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivBHfsizPnVfPkT5o3lgsnhsmC7Brhdi9UCHHnMgamzRuaipv_HOs3pqcgfB2ZkvsEpg3Pyieps7qF_cfhy7WRjPrzjvnPBIG5sLtj-RZaVpdk0F7w_kahwCauL4M9z_i4XGN7FrTnGTE/s1600/bal+hanuman.JPG
இந்த ஆலயத்தில் உள்ள பால அனுமார் , பைரவர் போன்றவர்களுடன் பிரேத சர்கார் இருந்து கொண்டு தவறு செய்யும் பேய் மற்றும் தீய ஆவிகளுக்குத் தண்டனைத் தருகின்றாராம் . இந்த மூவரில் எவருடைய சக்தி எப்படி வேலை செய்கின்றது எனத் தெரியாவிடிலும் , மூவரையும் சரிசமனாகவே பக்தர்கள் பூஜிக்கின்றனர்.

ஆலயம் இரண்டு கணவாய் போன்ற பகுதியில் உள்ளது. அனுமான் ஒரு பாறையில் விக்ரகமாக காணப்படுகின்றார். அது மலையுடன் ஒட்டி இருந்ததினால் பல மொகலாய மன்னர்கள் அந்த சிலையை உடைத்தெரிய பல முறை முயன்றும் அதன் உருவத்தைக் கூட அவர்களால் சிதைக்க முடியவில்லை,

சிலையையும் கொண்டு செல்ல முடியவில்லை என கூறப்படுகின்றது. அனுமாரின் இடது மார்புப் பகுதியில் இருந்து தொடர்ந்து கசிந்து வந்து கொண்டு இருக்கும் நீர் விழுகின்றதினால் இன்றுவரை பால அனுமானின் காலடியில் உள்ள பாத்திரம் ஈரப்பதமில்லாமல் இருந்தது இல்லையாம் .
http://img.tradeindia.com/fp/1/581/991.jpg
துர்தேவதைகள் , பேய்கள் , பிசாசுகளினால் பிடிக்கப்பட்டுள்ளவர்களை இந்த ஆலயத்திற்கு அழைத்து வருகின்றனர். பொதுவாக வியாதியினால் அவதிப்படுவோர் ஆலயத்தில் நுழைந்ததுமே அந்த தீய ஆவிகள் பலவும் ஓடிவிடுகின்றனவாம் . அதையும் மீறி உடலில் தங்கும் சில தீய ஆவிகள் பிடித்துள்ளவர்கள் உள்ளே வந்தால் பைரவர் சன்னதியின் எதிரில் உள்ள குழிகளில் அவர்கள் தலை கீழாக சற்று நேரம் தொங்கத் தொடங்குகின்றனர் . அதற்குக் காரணம் அந்த தீய ஆவிகளுக்கு பைரவர் தூக்கு தண்டனை தந்து விட்டதின் அர்த்தமாம் . பிறகு சில மணி நேரத்தில் அவர்கள் சரியாகி விடுகின்றனராம் .

சிலருக்கு கோளாறு நிவர்தியாக சில காலம் பிடிக்கின்றது. அப்பொழு தெல்லாம் அந்த தீய ஆவிகளுக்கு பால அனுமார், பைரவர் மற்றும் பிரேத சர்கார் போன்ற மூவரும் கடுமையான தண்டனைகளைத் தருவதினால் , தீய ஆவிகள் பிடித்துள்ளவர்கள் தங்கள் மீது பெரிய கற்களை வைத்துக் கொண்டும் , தலைகீழாக இருந்து கொண்டும் , நடனமாடிக் கொண்டும் இருக்கும் சில காட்சிகளை காணலாம். ஆனால் அங்கு வந்து வியாதி நிவர்தியாகிய பின் திரும்பிச் செல்பவர்கள் மீண்டும் அந்த கொடுமையை அனுபவிப்பதில்லை என்ற தீவிரமான நம்பிக்கை உள்ளது.

எவரையும் அனாவசியமாக கட்டிப் போட்டு சித்திரவதை செய்வதில்லை. பல நேரங்களில் மந்திரங்கள் படிக்கப்பட்டும் , சிலர ; உடம்பில் கற்களை வைத்தும், அபூர்வமாக சிலரை ஆலயத்திற் குள்ளேயே கட்டி வைத்தும் உடலுக்குள் புகுந்துள்ள தீய ஆத்மாக்களை விரட்டுகின்றனராம்

Article from :tamilthamarai.com