பூரணங் கண்டோர்இப்
பூமியிலேவரக்
காரணம்
இல்லையடி குதம்பாய்
காரணம்
இல்லையடி.
|
|
|
|
போங்காலம் நீங்கநற் பூரணம்
கண்டோர்க்குச்
சாங்காலம்
இல்லையடி குதம்பாய்
சாங்காலம்
இல்லையடி.
|
|
|
|
செத்துப் பிறக்கின்ற தேவைத்
துதிப்போர்க்கு
முத்திதான்
இல்லையடி குதம்பாய்
முத்திதான்
இல்லையடி.
|
|
|
|
வஸ்து தரிசன மாட்சியாய்க்
கண்டோர்க்குக்
கஸ்திசற்று
இல்லையடி குதம்பாய்
கஸ்திசற்று
இல்லையடி.
|
|
|
|
பற்றற்ற வத்துவைப் பற்றறக்
கண்டோர்க்குக்
குற்றங்கள்
இல்லையடி குதம்பாய்
குற்றங்கள்
இல்லையடி.
|
|
|
|
காட்சியாம் காட்சி கடந்த
பிரமத்தைச்
சூட்சியாய்ப்
பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய்ப்
பார்ப்பாயடி.
|
|
|
|
வெட்டவெளிக்குள்
வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப்
பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப்
பார்ப்பாயடி.
|
|
எங்கு நிறைந்தே இருக்கின்ற
சோதியை
அங்கத்துள்
பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள்
பார்ப்பாயடி.
|
|
|
|
அண்டத்துக் கப்பால் அகன்ற
சுடரினைப்
பிண்டத்துள்
பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள்
பார்ப்பாயடி.
|
|
|
|
ஆவித் துணையாகும் ஆராவ
அமுதத்தைச்
சேவித்துக்
கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக்
கொள்வாயடி.
|
|
|
|
தீண்டா விளக்கினைத் தெய்வக்
கொழுந்தினை
மாண்டாலும்
போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும்
போற்றிடுவாய்.
|
|
|
|
அண்டமும் பிண்டமும் ஆக்கிய
தேவனைத்
தெண்டனிட்டு
ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு
ஏத்தடியே.
|
|
|
|
விந்தை பராபர வத்தின்
இணையடி
சிந்தையில்
கொள்வாயடி குதம்பாய்
சிந்தையில்
கொள்வாயடி.
|
|
|
|
விண்ணொளி யாக விளங்கும்
பிரமமே
கண்ணொளி
ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி
ஆகுமடி.
|
|
|
|
பத்தி சற்றில்லாத பாமர
பாவிக்கு
முத்திசற்று
இல்லையடி குதம்பாய்
முத்திசற்று
இல்லையடி.
|
|
|
|
எல்லாப் பொருளுக்கு மேலான
என்தேவைச்
சொல்லாமற்
சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமற்
சொல்வாயடி.
|
|
|
|
எந்த உயிர்க்கும் இரைதரும்
ஈசனைச்
சந்ததம்
வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம்
வாழ்த்தடியோ.
|
|
காணக்கிடையாத கற்பாந்த
கல்பத்தை
நாணாமல்
ஏத்தடியே குதம்பாய்
நாணமற்
ஏத்தடியே.
|
|
|
|
அணுவாய் பல்அண்டமாய்
ஆனசிற்சோதியைத்
துணிவாய்நீ
போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ
போற்றடியோ.
|
|
|
|
மாணிக்கக் குன்றிற்கு
மாசற்ற சோதிக்குக்
காணிக்கை
நன்மனமே குதம்பாய்
காணிக்கை
நன்மனமே.
|
|
|
|
கடவுள் வல்லபங்கூறல்
தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
மூவரும்
ஆவாரடி குதம்பாய்
மூவரும்
ஆவாரடி.
|
|
|
|
சத்தாகிச் சித்தாகித் தாபர
சங்கமாய்
வித்தாகும்
வத்துவடி குதம்பாய்
வித்தாகும்
வத்துவடி.
|
|
|
|
உருவாகி அருவாகி ஒளியாகி
வெளியாகித்
திருவாகி
நின்றது காண் குதம்பாய்
திருவாகி
நின்றது காண்.
|
|
|
|
நீரும் நெருப்பும்
நெடுங்காற்று வானமும்
பாருமாய்
நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய்
நின்றதைக் காண்.
|
|
|
|
புவனம் எல்லாங் கணப்போதே
அழித்திடச்
சிவனாலே
ஆகுமடி குதம்பாய்
சிவனாலே
ஆகுமடி.
|
|
|
|
அவன் அசையாவிடின் அணுஅசை
யாதுஎன்றல்
புவனத்தில்
உண்மையடி குதம்பாய்
புவனத்தில்
உண்மையடி.
|
|
காரணம் சித்தென்றும்
காரியம் சத்தென்றும்
ஆரணஞ்
சொல்லுமடி குதம்பாய்
ஆரணஞ்
சொல்லுமடி.
|
|
|
|
காரணம் முன்னென்றும்
காரியம் பின்னென்றுந்
தாரணி
சொல்லுமடி குதம்பாய்
தாரணி
சொல்லுமடி.
|
|
|
|
ஆதிசகத்து என்று அநாதி மகத்
தென்று
மேதினி
கூறுமடி குதம்பாய்
மேதினி
கூறுமடி.
|
|
|
|
ஐந்து தொழிற்கும் உரியோன்
அநாதியை
மந்திரம்
போற்றுமடி குதம்பாய்
மந்திரம்
போற்றுமடி.
|
|
|
|
யானை தலையாய் எறும்பு கடை
யாய்ப்பல்
சேனையைத்
தந்தானடி குதம்பாய்
சேனையைத்
தந்தானடி.
|
|
|
|
மண்ணள விட்டாலும் வத்துப்
பெருமைக்கே
எண்ணளவு
வில்லையடி குதம்பாய்
எண்ணளவு
வில்லையடி.
|
|
|
|
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய்
நின்றானடி குதம்பாய்
சோதியாய்
நின்றானடி.
|
|
|
|
சீவனும் புத்தியும்
சித்தமும் தந்தவன்
தேவன்
அவனாமடி குதம்பாய்
தேவன்
அவனாமடி.
|
|
|
|
சத்தம் சுயம்பு சுகுணம்
சம்பூரணம்
சத்தியம்
உள்ளானடி குதம்பாய்
சத்தியம்
உள்ளானடி.
|
|
|
|
எங்கும் வியாபகம் ஈகை
விவேங்கள்
பொங்கமாய்
உள்ளானடி குதம்பாய்
பொங்கமாய்
உள்ளானடி.
|
|
தீர்க்க ஆகாயம் தெரியாத
தன்மைபோல்
பார்க்கப்
படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா
தானடி.
|
|
|
|
ஆத்துமந் தன்னை அரூபமா
எண்ணினாய்
கூத்தன்
அவ்வாறு அல்லவோ குதம்பாய்
கூத்தன்
அவ்வாறு அல்லவோ.
|
|
|
|
அண்டத்தைத் தேவன் அளிக்க
எண் ணும்போதே
அண்டம் உண்
டாயிற்றடி குதம்பாய்
அண்டம் உண்
டாயிற்றடி.
|
|
|
|
வானம் முற்றாக வளர்ந்திடு
சின்னங்கள்
தான் அவர்
செய்தாரடி குதம்பாய்
தான் அவர்
செய்தாரடி.
|
|
|
|
ஒன்றும் இல்லாவெளிக்
குள்ளேபல் லண்டத்தை
நின்றிடச்
செய்தானடி குதம்பாய்
நின்றிடச்
செய்தானடி.
|
|
|
|
கருவி களில்லாமற் காணும்பல்
அண்டங்கள்
உருவுறச்
செய்தானடி குதம்பாய்
உருவுறச்
செய்தானடி.
|
|
|
|
எல்லா உயிர்களும் எந்த
உலகமும்
வல்லானைப்
போற்றுமடி குதம்பாய்
வல்லானைப்
போற்றுமடி.
|
|
|
|
என்றும் அழியாமை எங்கு
நிறைவாகி
நின்றது
பிரமமடி குதம்பாய்
நின்றது
பிரமமடி.
|
|
|
|
கண்டத்தை ஆள்கின்ற காவலர்
போற்சோதி
அண்டத்தை
ஆள்கின்றதே குதம்பாய்
அண்டத்தை
ஆள்கின்றதே.
|
|
|
|
அண்டம் உண் டாகுமுன் ஆக
அநாதியாய்க்
கண்டது
பிரம்மடி குதம்பாய்
கண்டது
பிரம்மடி.
|
|
எந்த உயிர் கட்கும் எந்த
உலகிற்கும்
அந்தமாய்
நின்றானடி குதம்பாய்
அந்தமாய்
நின்றாடின.
|
|
|
|
தணிவான புத்தியால் தாணு
அறியாதோர்
அணுவேனும்
இல்லையடி குதம்பாய்
அணுவேனும்
இல்லையடி.
|
|
|
|
மூன்று தொழிலினை
மூர்த்திசெய் யாவிடில்
தோன்றாது
உலகமடி குதம்பாய்
தோன்றாது
உலகமடி.
|
|
|
|
சீரான தேவன் சிறப்பினைச்
சொல்லவே
யாரலே
யாகுமடி? குதம்பாய்
யாரலே
யாகுமடி?
|
|
|
|
முத்திநிலை பெறும் வழி
எல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய
வல்லார்க்கு
முத்தியடி குதம்பாய்
வல்லார்க்கு
முத்தியடி.
|
|
|
|
பற்றற நின்றானைப் பற்றறப்
பற்றிடக்
கற்றார்க்கு
முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு
முத்தியடி.
|
|
|
|
பந்தத்தை விட்டொளிர்
பந்தத்தைப் பற்றினால்
சந்தத
முத்தியடி குதம்பாய்
சந்தத
முத்தியடி.
|
|
|
|
ஆமைபோல் ஐந்தும் அடக்கித்
திரிகின்ற
ஊமைக்கு
முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு
முத்தியடி.
|
|
|
|
மந்தி மனத்தை வயப்படுத்
திட்டார்க்கு
வந்தெய்தும்
முத்தியடி குதம்பாய்
வந்தெய்தும்
முத்தியடி.
|
|
அந்தக் கரணம் அடங்க
அடக்கினால்
சொந்தம்
பிரமமடி குதம்பாய்
சொந்தம்
பிரமமடி.
|
|
|
|
தாய்குச் சரியான தற்பரம்
சார்ந்திடில்
வாய்க்கும்
பதவியடி குதம்பாய்
வாய்க்கும்
பதவியடி.
|
|
|
|
சுத்த பிரமத்தைத்
தொந்தமென்று ஓட்டினால்
சித்திக்கும்
முத்தியடி குதம்பாய்
சித்திக்கும்
முத்தியடி.
|
|
|
|
கன்றை விடாதுசெல்
கற்றாவைப்போல் வத்தை
ஒன்றினால்
முத்தியடி குதம்பாய்
ஒன்றினால்
முத்தியடி.
|
|
|
|
கைக்கனி போலவே காசறு
பிரமத்தில்
சொக்கினால்
முத்தியடி குதம்பாய்
சொக்கினால்
முத்தியடி.
|
|
|
|
நித்திய வத்துவை நீங்காது
நாடினால்
முத்திதான்
சித்திக்குமே குதம்பாய்
முத்திதான்
சித்திகுமே.
|
|
|
|
தேகத்தைப் பழித்தல்
பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை
ஏதுக்கடி குதம்பாய்
வாசனை
ஏதுக்கடி.
|
|
|
|
துற்கந்த மாய்மலம் சோரும்
உடலுக்கு
நற்கந்த
மேதுக்கடி குதம்பாய்
நற்கந்த
மேதுக்கடி.
|
|
|
|
நீச்சுக் கவுச்சது நீங்கா
மெய்க்கு மஞ்சள்
பூச்சுத்தான்
ஏதுக்கடி குதம்பாய்
பூச்சுத்தான்
ஏதுக்கடி.
|
|
சேலை மினுக்கதும் செம்பொன்
மினுக்கதும்
மேலை
மினுக்காமடி குதம்பாய்
மேலை
மினுக்காமடி.
|
|
|
|
பீவாச முள்ளவள் பீறலு
உடம்புக்குப்
பூவாச
மேதுக்கடி குதம்பாய்
பூவாச
மேதுக்கடி.
|
|
|
|
போராட்டஞ் செய்து புழுத்த
வுடம்பிற்கு
நீராட்டம்
ஏதுக்கடி குதம்பாய்
நீராட்டம்
ஏதுக்கடி.
|
|
|
|
சீயு நிணமுந் திரண்ட
உடம்பினை
ஆயுவ
ஏதுக்கடி குதம்பாய்
ஆயுவ
ஏதுக்கடி.
|
|
|
|
காகம் கழுகு களித்துண்ணும்
மேனிக்கு
வாகனம்
ஏதுக்கடி குதம்பாய்
வாகனம்
ஏதுக்கடி.
|
|
|
|
கோவணத் தோடே கொளுத்தும்
உடலுக்குப்
பூவணை
ஏதுக்கடி குதம்பாய்
பூவணை
ஏதுக்கடி.
|
|
|
|
பரத்தயரைப் பழித்தல்
நெடுவரை போலவே நீண்ட கனதனம்
நடுவாக
வந்ததடி குதம்பாய்
நடுவாக
வந்ததடி.
|
|
|
|
கையால் அழைப்பது போல் உனது
கண்
மையால்
அழைப்பதென்ன குதம்பாய்
மையால்
அழைப்பதென்ன.
|
|
|
|
முதிர்ந்த சுடுகாட்டில்
முல்லையை ஒத்தபல்
உதிர்ந்து
கிடக்குமடி குதம்பாய்
உதிர்ந்து
கிடக்குமடி.
|
|
கழறும் கிளிமொழி காலஞ்
சென்றாலது
குளறி
அழியுமடி குதம்பாய்
குளறி
அழியுமடி.
|
|
|
|
வளர்ந்து முறுக்காய் வயதில்
எழுந்த தனம்
தளர்ந்து
விழுந்திடுமே குதம்பாய்
தளர்ந்து
விழுந்திடுமே.
|
|
|
|
பொருக்கின்றி மேனியில்
பூரித்து எழுந்த தோல்
சுருக்கம்
விழுந்திடுமே குதம்பாய்
சுருக்கம்
விழுந்திடுமே.
|
|
|
|
கொள்ளை யாகக் கொழுத்தே
எழுந்த கண்
நொள்ளைய
தாய்விடுமே குதம்பாய்
நொள்ளைய
தாய்விடுமே.
|
|
|
|
மஞ்சு போலாகி வளர்ந்திடும்
கூந்தலும்
பஞ்சுபோல்
ஆகிடுமே குதம்பாய்
பஞ்சுபோல்
ஆகிடுமே.
|
|
|
|
பொன்னாலே செய்யாடி போன்ற
உன்கன்னங்கள்
பின்னாலே
ஒட்டிவிடும் குதம்பாய்
பின்னாலே
ஒட்டிவிடும்.
|
|
|
|
நல்லாய் உன் அங்கமும் நன்கு
நிமர்ந்தாலும்
வில்லாய்ப்பின்
கூனிவிடும் குதம்பாய்
வில்லாய்ப்பின்
கூனிவிடும்.
|
|
|
|
முந்தி நடக்கின்ற
மொய்ம்பும்சின் னாளையில்
குந்தி
இருக்கச் செய்யும் குதம்பாய்
குந்தி
இருக்கச் செய்யும்.
|
|
|
|
பிறக்கும்போது உற்ற
பெருமையைப் போலவே
இறக்கும்போது
எய்துவிடும் குதம்பாய்
இறக்கும்போது
எய்துவிடும்.
|
|
நலம் நிலைமை
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை
பாபத்துக்கு
ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு
ஏதுவடி.
|
|
|
|
கள்ளங்கட் காமம் கொலைகள்
கபடங்கள்
பள்ளத்திற்
தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்திற்
தள்ளுமடி.
|
|
|
|
பொருளாசை யுள்ளஇப் பூமியில்
உள்ளோருக்கு
இருளாம்
நரகமடி குதம்பாய்
இருளாம்
நரகமடி.
|
|
|
|
கற்புள்ள மாதைக் கலக்க
நினைக்கினும்
வற்புள்ள
பாவமடி குதம்பாய்
வற்புள்ள
பாவமடி.
|
|
|
|
தாழாமல் உத்தமர் தம்மை
இகழ்வது
கீழாம்
நரகமடி குதம்பாய்
கீழாம்
நரகமடி.
|
|
|
|
சுத்த பிரமத்தைத் தோத்திரம்
செய்யார்க்கு
நித்தம்
நரகமடி குதம்பாய்
நித்தம்
நரகமடி.
|
|
|
|
எப்பாரும் போற்றும் இறையை
நினையார்க்குத்
தப்பா நரகமடி
குதம்பாய்
தப்பா
நரகமடி.
|
|
|
|
பாழாகப் பூசைகள் பண்ணும்
மடையர்க்கே
ஏழாம் நரகமடி
குதம்பாய்
ஏழாம்
நரகமடி.
|
|
|
|
காயம் எடுத் தாதி கர்த்தரை
எண்ணார்க்குத்
தீயாம்
நரகமடி குதம்பாய்
தீயாம்
நரகமடி.
|
|
அன்போடு நற்பத்தி ஆதிமேல்
வையார்க்குத்
துன்பாம்
நரகமடி குதம்பாய்
துன்பாம்
நரகமடி?
|
|
|
|
பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தல்
செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
எங்காகும்
நல்வழியே குதம்பாய்
எங்காகும்
நல்வழியே.
|
|
|
|
மாத்திரைக் கோல்கொண்டு
மாரீசஞ் செய்வார்க்குச்
சாத்திரம்
ஏதுக்கடி குதம்பாய்
சாத்திரம்
ஏதுக்கடி?
|
|
|
|
வெண்ணீறு பூசியே வீதியில்
வந்தோர்க்குப்
பெண்ணாசை
ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை
ஏதுக்கடி?
|
|
|
|
ஒப்பிலாத் தேவனை உள்ளத்தில்
வைத்தோர்க்குக்
கப்பறை
ஏதுக்கடி குதம்பாய்
கப்பறை
ஏதுக்கடி?
|
|
|
|
சான்றோர் எனச் சொல்லித்
தத்துவம் தேர்ந்தோர்க்கு
மான்தோல்
ஏதுக்கடி குதம்பாய்
மான்தோல்
ஏதுக்கடி.
|
|
|
|
நாடி மனத்தினை நாதன்பால்
வைத்தோர்க்குத்
தாடிசடை ஏனோ
குதம்பாய்
தாடிசடை ஏனோ?
|
|
|
|
நாதற்கு உறவாகி நற்தவம்
சார்ந்தோர்க்குப்
பாதக்
குறடுமுண்டோ குதம்பாய்
பாதக்
குறடுமுண்டோ?
|
|
|
|
தபநிலை கண்டாதி தன்வழி
பட்டோர்க்குச்
செபமாலை
ஏதுக்கடி குதம்பாய்
செபமாலை
ஏதுக்கடி?
|
|
பங்கொடு பங்கில்லாப்
பாழ்வெளி கண்டோர்க்கு
லங்கோ
டேதுக்கடி குதம்பாய்
லங்கோ
டேதுக்கடி?
|
|
|
|
நிலையாப்பொருள்
தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி
வருவதுண்டோ? குதம்பாய்
நாடி
வருவதுண்டோ?
|
|
|
|
போம்போது தேடும் பொருளில்
அணுவேனும்
சாம்போது
தான்வருமோ? குதம்பாய்
சாம்போது
தான்வருமோ?
|
|
|
|
காசினிமுற்றாயுன் கைவச
மாயினும்
தூசேனும்
பின்வருமோ? குதம்பாய்
தூசேனும்
பின்வருமோ?
|
|
|
|
உற்றார் உறவின ஊரார்
பிறந்தவர்
பெற்றார்துணை
யாவரோ? குதம்பாய்
பெற்றார்துணை
யாவரோ?
|
|
|
|
மெய்ப்பணி கொள்ளாத மேதினி
மாந்தர்க்குப்
பொய்ப்பணி
ஏதுக்கடி? குதம்பாய்
பொய்ப்பணி
ஏதுக்கடி?
|
|
|
|
விண்ணாசை தன்னை விரும்பாத
மக்கட்கு
மண்ணாசை
ஏதுக்கடி? குதம்பாய்
மண்ணாசை
ஏதுக்கடி?
|
|
|
|
சேனைகள் பூந்தேர் திரண்ட
மனுத்திரள்
யானையும்
நில்லாதடி! குதம்பாய்
யானையும்
நில்லாதடி!
|
|
|
|
செங்கோல் செலுத்திய
செல்வமும் ஓர்காலம்
தங்காது
அழியுமடி! குதம்பாய்
தங்காது
அழியுமடி!
|
|
கூடங்கள் மாடங்கள் கோபுர
மாபுரம்
கூடவே
வாராதடி! கும்பாய்
கூடவே
வாராதடி!
|
|
|
|
தன்னோடு செல்பவை
நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
செல்வன
நிச்சயமே குதம்பாய்
செல்வன
நிச்சயமே.
|
|
|
|
செய்தவம் செய்கொலை
செய்தர்மம் தன்னொடும்
எய்த வருவனவே
குதம்பாய்
எய்த
வருவனவே.
|
|
|
|
முத்தி அளித்திடு
மூர்த்தியைப் போற்றிசெய
பத்தியும்
பின்வருமே குதம்பாய்
பத்தியும்
பின்வருமே.
|
|
|
|
ஆசையை ஒழித்தல்
இச்சைப் பிறப்பினை எய்விக்கு என்றது
நிச்சய
மாகுமடி குதம்பாய்
நிச்சய
மாகுமடி.
|
|
|
|
வல்லமை யாகவே வாஞ்சை
ஒழித்திட்டால்
நல்ல
துறவாமடி குதம்பாய்
நல்ல
துறவாமடி.
|
|
|
|
ஆசை அறுத்தோர்க்கே ஆனந்தம்
உண்டென்ற
ஓசையைக்
கேட்டிலையோ குதம்பாய்
ஓசையைக்
கேட்டிலையோ?
|
|
|
|
தேக்கிய ஆசையைச் சீயென்று
ஒறுத்தோரே
பாக்கிய
வான்களடி குதம்பாய்
பாக்கிய
வான்களடி.
|
|
|
|
இன்பங்கள் எய்திட விச்சை
உறாதார்க்குத்
துன்பங்கள்
உண்டாமடி குதம்பாய்
துன்பங்கள்
உண்டாமடி.
|
|
துறவிகள் ஆளாசை துறந்து
விடுவரேல்
பிறவிகள்
இல்லையடி குதம்பாய்
பிறவிகள்
இல்லையடி.
|
|
|
|
தவநிலை கூறல்
கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்
நல்ல விரதமடி
குதம்பாய்
நல்ல
விரதமடி.
|
|
|
|
தவநிலை ஒன்றனைச் சாராத
மாந்தர்கள்
அவநிலை
யாவாரடி குதம்பாய்
அவநிலை
யாவாரடி.
|
|
|
|
தவமதை எந்நாளுஞ் சாதிக்க
வல்லார்க்குச்
சிவமது
கைவசமே குதம்பாய்
சிவமது
கைவசமே.
|
|
|
|
காமனை வென்று கடுந்தவஞ்
செய்வோர்க்கு
ஏமன்
பயப்படுவான் குதம்பாய்
ஏமன்
பயப்படுவான்.
|
|
|
|
யோகந் தான்வேண்டி உறுதிகொள்
யோகிக்கு
மோகந்தான்
இல்லையடி குதம்பாய்
மோகந்தான்
இல்லையடி.
|
|
|
|
காலங்கள் கண்டு கடிந்த
துறவோர்க்குக்
கோலங்கள்
உண்டாமடி குதம்பாய்
கோலங்கள்
உண்டாமடி.
|
|
|
|
ஐம்புலன் வென்றே அனைத்தும்
துறந்தோர்கள்
சம்புவைக்
காண்பாரடி குதம்பாய்
சம்புவைக்
காண்பாரடி.
|
|
|
|
பொய்மை வெறுத்திட்டு மெய்யை
விரும்பினோர்
மெய்யவர்
ஆவாரடி குதம்பாய்
மெய்யவர்
ஆவாரடி.
|
|
யான் என்ன தென்னும்
இருவகைப் பற்றற்றோன்
வானவன்
ஆவானடி குதம்பாய்
வானவன்
ஆவானடி.
|
|
|
|
அகம்புறம் ஆனபற் றற்றமெய்ஞ்
ஞானிக்கு
நகுபிறப்பு
இல்லையடி குதம்பாய்
நகுபிறப்பு
இல்லையடி.
|
|
|
|
பற்றறில் துன்பமும்
பற்றறும் இன்பமும்
முற்றாக
எய்துமடி குதம்பாய்
முற்றாக
எய்துமடி.
|
|
|
|
அறிவு விளக்கம்
பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு
மெய்ஞ்ஞானம்
வேண்டுமடி குதம்பாய்
மெய்ஞ்ஞானம்
வேண்டுமடி.
|
|
|
|
பிறவியை நீக்கிடப்
பேரின்பம் நோக்கிய
அறிவு
பெரிதாமடி குதம்பாய்
அறிவு
பெரிதாமடி.
|
|
|
|
தத்துவமாகவே சத்துப்பொருள்
கண்டால்
தத்துவ
ஞானமடி குதம்பாய்
தத்துவ
ஞானமடி.
|
|
|
|
அண்டத்தைக் கண்டதை
ஆக்கினோன் உண்டென்று
கண்டது
அறிவாமடி குதம்பாய்
கண்டது
அறிவாமடி.
|
|
|
|
முக்குற்றம் நீக்கமுயலும்
மெய்ஞ் ஞானமே
தக்கமெய்ஞ்
ஞானமடி குதம்பாய்
தக்கமெய்ஞ்
ஞானமடி.
|
|
|
|
போதம் இதென்றுமெய்ப்
போதநிலை காணல்
போதமது
ஆகுமடி குதம்பாய்
போதமது
ஆகுமடி.
|
|
சாதி பேத மின்மை
ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
வீண்சாதி
மற்றவெல்லாம் குதம்பாய்
வீண்சாதி
மற்றவெல்லாம்.
|
|
|
|
பார்ப்பார்கள் மேலென்றும்
பறையர்கள் கீழென்றும்
தீர்ப்பாகச்
சொல்வதென்ன? குதம்பாய்
தீர்ப்பாகச்
சொல்வதென்ன?
|
|
|
|
பார்ப்பாரைக் கர்த்தர்
பறையரைப் போலவே
தீர்ப்பாய்ப்
படைத்தாரடி குதம்பாய்
தீர்ப்பாய்ப்
படைத்தாரடி.
|
|
|
|
பற்பல சாதியாய்ப் பாரிற்
பகுத்தது
கற்பனை
ஆகுமடி குதம்பாய்
கற்பனை
ஆகுமடி.
|
|
|
|
சுட்டிடுஞ் சாதிப்பேர்
கட்டுச்சொல் லல்லாமல்
தொட்டிடும்
வத்தல்லவே குதம்பாய்
தொட்டிடும்
வத்தல்லவே.
|
|
|
|
ஆதி பரப்பிரமம் ஆக்கு
மக்காலையில்
சாதிகள்
இல்லையடி குதம்பாய்
சாதிகள்
இல்லையடி.
|
|
|
|
சாதிவேறு என்றே தரம்பிரிப்
போருக்குச்
சோதிவே
றாகுமடி குதம்பாய்
சோதிவே
றாகுமடி.
|
|
|
|
நீதிமானென்றே நெறியாய்
இருப்பானே
சாதிமா
னாவாடி குதம்பாய்
சாதிமா
னாவாடி.
|
|
|
|
சாதி ஒன்றில்லை சமயம்
ஒன்றில்லை என்று
ஓதி உணர்ந்
தறிவாய் குதம்பாய்
ஓதி உணர்ந்
தறிவாய்.
|
|
சமயநிலை கூறல்
தன்புத்தி தெய்வமாய்ச் சாற்றிய சார்வாகம்
புன்புத்தி
ஆகுமடி குதம்பாய்
புன்புத்தி
ஆகுமடி.
|
|
|
|
கல்லினைச் செம்பினைக்
கட்டையைக் கும்பிடல்
புல்லறி
வாகுமடி குதம்பாய்
புல்லறி
வாகுமடி.
|
|
|
|
அண்டத்தைக் கண்டு அநாதியில்
என்பவர்
கொண்ட
கருத்தவமே குதம்பாய்
கொண்ட
கருத்தவமே.
|
|
|
|
பெண்ணின்ப முத்தியாய்ப்
பேசும்பா டாண்மதம்
கண்ணின்மை
ஆகுமடி குதம்பாய்
கண்ணின்மை
ஆகுமடி.
|
|
|
|
சூரியன் தெய்மாய்ச்
சுட்டுஞ் சமயந்தான்
காரியம்
அல்லவடி குதம்பாய்
காரியம்
அல்லவடி.
|
|
|
|
மனம்தெய்வம் என்று
மகிழ்ந்து கொண்டாடிய
இனமதி ஈனமடி
குதம்பாய்
இனமதி ஈனமடி.
|
|
|
|
பற்பல மார்க்கம்
பகர்ந்திடும் வேதங்கள்
கற்பனை
ஆகுமடி குதம்பாய்
கற்பனை
ஆகுமடி.
|
|
|
|
நீண்ட குரங்கை நெடிய
பருந்தினை
வேண்டப்
பயன்வருமோ? குதம்பாய்
வேண்டப்
பயன்வருமோ?
|
|
|
|
மெய்த்தேவன் ஒன்றென்று
வேண்டாத பன்மதம்
பொய்த்தேவைப்
போற்றுமடி குதம்பாய்
பொய்த்தேவைப்
போற்றுமடி.
|
|
மந்திரநிலை கூறல்
நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்தெலாம்
மேற்பற்றிக்
கண்டறி நீ குதம்பாய்
மேற்பற்றிக்
கண்டறி நீ.
|
|
|
|
சட்கோணத்து உள்ளந்தச்
சண்முக அக்கரம்
உட்கோணத்து
உள்ளறி நீ குதம்பாய்
உட்கோணத்து
உள்ளறி நீ.
|
|
|
|
ஐந்தெழுத்து ஐந்தறைக்
கார்ந்திடும் அவ்வாறே
சிந்தையுள்
கண்டறி நீ குதம்பாய்
சிந்தையுள்
கண்டறி நீ.
|
|
|
|
வாதநிலை கூறல்
ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்
வீறான
முப்பாமடி குதம்பாய்
வீறான
முப்பாமடி.
|
|
|
|
விந்தொடு நாதம் விளங்கத்
துலங்கினால்
வந்தது
வாதமடி குதம்பாய்
வந்தது
வாதமடி.
|
|
|
|
அப்பினைக் கொண்டந்த
உப்பினைக் கட்டினால்
முப்பூ
ஆகுமடி குதம்பாய்
முப்பூ
ஆகுமடி.
|
|
|
|
உள்ளக் கருவியே உண்மை வாதம்
அன்றிக்
கொள்ளக்
கிடையாதடி குதம்பாய்
கொள்ளக்
கிடையாதடி.
|
|
|
|
பெண்ணாலே வாதம் பிறப்பதே
அல்லாமல்
மண்ணாலே
இல்லையடி குதம்பாய்
மண்ணாலே
இல்லையடி.
|
|
|
|
ஐந்து சரக்கொடு விந்துநா
தம் சேரில்
வெந்திடும்
லோகமடி குதம்பாய்
வெந்திடும்
லோகமடி.
|
|
வயித்தியங் கூறல்
முப்பிணி தன்னை அறியாத மூடர்கள்
எப்பிணி
தீர்ப்பாரடி குதம்பாய்
எப்பிணி
தீர்ப்பாரடி.
|
|
|
|
எட்டெட்டும் கட்டி
இருக்குமேற் தீயினிற்
விட்டோடும்
நோய்கள் எல்லாம் குதம்பாய்
விட்டோடும்
நோய்கள் எல்லாம்.
|
|
|
|
நாடி ஒருபது நன்காய்
அறிந்திடில்
ஓடிவிடும்
பிணியே குதம்பாய்
ஓடுவிடும்
பிணியே.
|
|
|
|
சத்தவகை தாது தன்னை
அறிந்தவன்
சுத்த
வயித்தியனே குதம்பாய்
சுத்த
வயித்தியனே.
|
|
|
|
வாயு ஒருபத்தும் வாய்த்த
நிலைகண்டோன்
ஆயுள்
அறிவானடி குதம்பாய்
ஆயுள்
அறிவானடி.
|
|
|
|
ஆயுள் வேதப்படி அவிழ்த
முடித்திடில்
மாயும்
வியாதியடி குதம்பாய்
மாயும்
வியாதிபடி.
|
|
|
|
கற்பநிலை கூறல்
பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர்
கற்பாந்தம்
வாழ்வாரடி குதம்பாய்
கற்பாந்தம்
வாழ்வாரடி.
|
|
|
|
வேவாத முப்பூவை வேண்டி உண்
டார்பாரில்
சாவாமல்
வாழ்வாரடி குதம்பாய்
சாவாமல்
வாழ்வாரடி.
|
|
|
|
விந்து விடார்களே வெடிய
சுடலையில்
வெந்து
விடார்களடி குதம்பாய்
வெந்து
விடார்களடி.
|
|
தொல்லைச் சடம்விட்டுச்
சுட்ட சடம்கொண்டோர்
எல்லையில்
வாழ்வாரடி குதம்பாய்
எல்லையில்
வாழ்வாரடி.
|
|
|
|
தோற்பையை நீக்கிநற்
சோதிப்பை கொண்டவர்
மேற்பைநஞ்
சுண்பாரடி குதம்பாய்
மேற்பைநஞ்
சுண்பாரடி.
|
|
|
|
மாற்றினை ஏற்ற வயங்கும்நெடி
யோர்களே
கூற்றினை
வெல்வாரடி குதம்பாய்
கூற்றினை
வெல்வாரடி.
|
|
|
|
தலங்களிவை எனல்
கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு
ஏயும் பலன்
வருமோ? குதம்பாய்
ஏயும் பலன்
வருமோ?
|
|
|
|
சித்தத் தலம்போலத் தெய்வம்
இருக்கின்ற
சுத்தத்
தலங்களுண்டோ? குதம்பாய்
சுத்தத்
தலங்களுண்டோ?
|
|
|
|
மெய்த்தலத்து இல்லாத
மெய்ப்பொருள் ஆனவர்
பொய்த்தலத்
தெய்வத்துண்டோ? குதம்பாய்
பொய்த்தலத்
தெய்வத்துண்டோ?
|
|
|
|
சிற்பர்கள் கட்டுந்
திருக்கோயில் உள்ளாகத்
தற்பரம்
வாழ்வதுண்டோ? குதம்பாய்
தற்பரம்
வாழ்வதுண்டோ?
|
|
|
|
தன்னால் உண்டாம்சிட்டி
தன்னாலே சிட்டித்த
புன்கோயில்
உள்ளவன்யார்? குதம்பாய்
புன்கோயில்
உள்ளவன்யார்?
|
|
|
|
அன்பான பத்தர் அகக்கோயில்
கர்த்தற்கே
இன்பான
கோயிலடி குதம்பாய்
இன்பான
கோயிலடி.
|
|
தேவநிலை அறிதல்
தன்னுள் விளங்கிய சம்புவைக் காணாது
மன்னும்
தலத்தெய்வதென்? குதம்பாய்
மன்னும்
தலத்தெய்வதென்?
|
|
|
|
|
|
இருந்த இடத்தில் இருந்தே
அறியாமல்
வருந்தித்
திரிவதென்னோ? குதம்பாய்
வருந்தித்
திரிவதென்னோ?
|
|
|
|
|
|
காசி ராமேச்சுரம் கால்
நோவச் சென்றாலும்
ஈசனைக்
காணுவையோ? குதம்பாய்
ஈசனைக்
காணுவையோ?
|
|
|
|
|
|
பூவதில் நாளும் பொருந்தித்
திரியினும்
தேவனைக்
காணுவையோ? குதம்பாய்
தேவனைக்
காணுவையோ?
|
|
|
|
|
|
உள்ளங்கால் வெள்ளெலும்பாக
உலாவினும்
வள்ளலைக்
காணுவையோ? குதம்பாய்
வள்ளலைக்
காணுவையோ?
|
|
|
|
|
|
போரினில் ஊசி பொறுக்கத்
துணிதல்போல்
ஆரியன்
தேடுதலே குதம்பாய்
ஆரியன்
தேடுதலே.
|
|
|
|
|
|
சாதனை யாலே தனிப்பதஞ்
சேரார்க்கு
வேதனை
யாகுமடி குதம்பாய்
வேதனை
யாகுமடி.
|
|
|
|
|
|
வேதனை நீங்கி விடாது
தொடர்ந் தோரே
நாதனைக்
காணுவர்காண் குதம்பாய்
நாதனைக்
காணுவர்காண்.
|
|
|
|
|
|
நாடில் வழக்கம் அறிந்து
செறிந்தவர்
நீடொளி
காணுவரே குதம்பாய்
நீடொளி
காணுவரே.
|
|
|
அஞ்ஞானங் கடிதல்
மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு
நாளேது
கோளேதடி குதம்பாய்
நாளேது
கோளேதடி.
|
|
|
|
|
|
தீட்டால் உடம்பு
திறங்கொண்டிருக்கையில்
தீட்டென்று
சொல்வதென்னை? குதம்பாய்
தீட்டென்று
சொல்வதென்னை?
|
|
|
|
|
|
செத்தபின் சாப்பறை
செத்தார்க்குச் சேவித்தால்
சத்தம்
அறிவாரடி குதம்பாய்
சத்தம்
அறிவாரடி.
|
|
|
|
|
|
தந்தைதாய் செய்வினை
சந்ததிக்கு ஆமென்பார்
சிந்தை
தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை
தெளிந்திலரே.
|
|
|
|
|
|
பிள்ளைகள் செய்தன்மம்
பெற்றோர்க்கு உறுமென்றால்
வெள்ளறி
வாகுமடி குதம்பாய்
வெள்ளறி
வாகுமடி.
|
|
|
|
|
|
பந்தவினைக்கு ஈடாடிப்
பாரிற் பிறந்தோர்க்குச்
சொந்தமது
இல்லையடி குதம்பாய்
சொந்தமது
இல்லையடி.
|
|
|
|
|
|
பார்ப்பார் சடங்கு பலனின்று
பாரிலே
தீர்ப்பாக
எண்ணிடுவாய் குதம்பாய்
தீர்ப்பாக
எண்ணிடுவாய்.
|
|
|
|
|
|
அந்தணர்க்கு ஆவை
அளித்தோர்கள் ஆவிக்குச்
சொந்தமோ
முத்தியடி குதம்பாய்
சொந்தமோ
முத்தியடி.
|
|
|
|
|
|
வேதியர் கட்டிய வீணான
வேதத்தைச்
சோதித்துத்
தள்ளடியோ குதம்பாய்
சோதித்துத்
தள்ளடியோ.
|
|
|
|
|
|
|
தன்பாவம் நீக்காத தன்மயர் மற்றவர்
வன்பாவம்
நீக்குவரோ? குதம்பாய்
வன்பாவம்
நீக்குவரோ?
|
|
|
|
|
|
வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு
மீள்வழி
இல்லையடி குதம்பாய்
மீள்வழி
இல்லையடி.
|
|
|
|
|
|
வேதம் புராணம் விளங்கிய சாத்திரம்
போதனை ஆகுமடி
குதம்பாய்
போதனை ஆகுமடி.
|
|
|
|
|
|
யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள்
ஆகாத செய்கையடி
குதம்பாய்
ஆகாத
செய்கையடி.
|
|
|
|
|
|
சாற்றும் சகுணங்கள் சந்தியா வந்தனம்
போற்றும்
அறிவீனமே குதம்பாய்
போற்றும்
அறிவீனமே.
|
|
|
|
|
|
ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல்
ஞானம்இல்
லாமையடி குதம்பாய்
ஞானம்இல்
லாமையடி.
|
|
|
|
|
|
அஞ்சனம் என்றது தறியாமல் ஏய்க்குதல்
வஞ்சனை ஆகுமடி
குதம்பாய்
வஞ்சனை ஆகுமடி.
|
|
|
|
|
|
மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை
தீய தொழி லாமடி
குதம்பாய்
தீய தொழி
லாமடி.
|
|
|
|
|
|
கருவை அழித்துக் கன் மத்தொழில் செய்குதல்
திருவை
அழிக்குமடி குதம்பாய்
திருவை
அழிக்குமடி.
|
|
|
|
|
|
மாரணஞ் செய்துபல் மாந்தரைக் கொல்வது
சூரணம்
ஆக்குமடி குதம்பாய்
சூரணம்
ஆக்குமடி.
|
|
|
பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே
வெய்ய மயக்கமடி
குதம்பாய்
வெய்ய
மயக்கமடி.
|
|
|
|
|
|
மெய்க்குறி கண்டு விளங்க அறியார்க்குப்
பொய்க்குறி
யேதுக்கடி குதம்பாய்
பொய்க்குறி
யேதுக்கடி.
|
|
|
|
|
|
நாயாட்ட மாய் நகைத்துழல் மூடர்க்குப்
பேயாட்ட
மேதுக்கடி குதம்பாய்
பேயாட்ட
மேதுக்கடி.
|
|
|
|
|
|
மந்திர மூலம் வகுத்தறி யாதார்க்குத்
தந்திரம்
ஏதுக்கடி குதம்பாய்
தந்திரம்
ஏதுக்கடி.
|
|
|
|
|
|
வாதமென்றே பொய்யை வாயிற் புடைப்போர்க்குச்
சேதம் மிகவருமே
குதம்பாய்
வேதம்
மிகவருமே.
|
|
|
|
|
|
வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டய
மேதுக்கடி குதம்பாய்
பட்டய
மேதுக்கடி.
|
|
|
|
|
|
மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு
கற்பங்க
ளேதுக்கடி குதம்பாய்
கற்பங்க
ளேதுக்கடி.
|
|
|
|
|
|
காணாமற் கண்டு கருத்தோ டிருப்பார்க்கு
வீணாசை
யேதுக்கடி குதம்பாய்
வீணாசை
யேதுக்கடி.
|
|
|
|
|
|
வஞ்சக மற்று வழிதனைக் கண்டோர்க்கு
சஞ்சல
மேதுக்கடி குதம்பாய்
சஞ்சல
மேதுக்கடி.
|
|
|
|
|
|
ஆதார மான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்ட
மேதுக்கடி குதம்பாய்
வாதாட்ட
மேதுக்கடி.
|
|
|
நித்திரை கெட்டு நினைவோ டிருப்போர்க்கு
முத்திரை
யேதுக்கடி குதம்பாய்
முத்திரை
யேதுக்கடி.
|
|
|
|
|
|
தந்திர மான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திர
மேதுக்கடி குதம்பாய்
மந்திர
மேதுக்கடி.
|
|
|
|
|
|
சத்தியமான தவத்தி லிருப்போர்க்கு
உத்திய
மேதுக்கடி குதம்பாய்
உத்திய
மேதுக்கடி.
|
|
|
|
|
|
நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்க
ளேதுக்கடி குதம்பாய்
வாட்டங்க
ளேதுக்கடி.
|
|
|
|
|
|
முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்கு
சத்தங்க
ளேதுக்கடி குதம்பாய்
சத்தங்க
ளேதுக்கடி.
|
|
|
|
|
|
உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோருக்கு
இச்சிப்பிங்
கேதுக்கடி குதம்பாய்
இச்சிப்பிங்
கேதுக்கடி.
|
|
|
|
|
|
வேகாமல் வெந்து வெளியொளி கண்டோர்க்கு
மோகாந்த
மேதுக்கடி குதம்பாய்
மோகாந்த
மேதுக்கடி.
|
|
|
|
|
|
சாகாமற் றாண்டி தனிவழி போவார்க்கு
ஏகாந்த
மேதுக்கடி குதம்பாய்
ஏகாந்த
மேதுக்கடி.
|
|
|
|
|
|
அந்தரந் தன்னி லசைந்தாடு முத்தர்க்குத்
தந்திர
மேதுக்கடி குதம்பாய்
தந்திர
மேதுக்கடி.
|
|
|
|
|
|
ஆனந்தம் பொங்கி அறிவோ டிருப்போர்க்கு
ஞானந்தா
னேதுக்கடி குதம்பாய்
ஞானந்தா
னேதுக்கடி.
|
|
|
சித்திரக் கூட்டத்தைத் தினந்தினங் காண்போர்க்குப்
பத்திர
மேதுக்கடி குதம்பாய்
பத்திர
மேதுக்கடி.
|
|
|
|
|
|
முக்கோணந் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்
சட்கோண
மேதுக்கடி குதம்பாய்
சட்கோண
மேதுக்கடி.
|
|
|
|
|
|
அட்டதிக் கெல்லால் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை
யேதுக்கடி குதம்பாய்
நட்டணை
யேதுக்கடி.
|
|
|
|
|
|
முத்திபெற் றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்
பத்திய
மேதுக்கடி குதம்பாய்
பத்திய
மேதுக்கடி.
|
|
|
|
|
|
அல்லலை நீக்கி அறிவோ டிருப்பார்க்குப்
பல்லாக்
கேதுக்கடி குதம்பாய்
பல்லாக்
கேதுக்கடி.
|
|
|
|
|
|
அட்டாங்கயோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்க
மேதுக்கடி குதம்பாய்
முட்டாங்க
மேதுக்கடி.
|
|
|
|
|
|
வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தா
னேதுக்கடி குதம்பாய்
யோகந்தா
னேதுக்கடி.
|
|
|
|
|
|
மாத்தானை வென்று மலைமே லிருப்போர்க்குப்
பூத்தான
மேதுக்கடி குதம்பாய்
பூத்தான
மேதுக்கடி.
|
|
|
|
|
|
செத்தாமரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்குக்
கைத்தாள
மேதுக்கடி குதம்பாய்
கைத்தாள
மேதுக்கடி.
|
|
|
|
|
|
கண்டாரை நோக்கிக் கருத்தோ டிருப்போர்க்குக்
கொண்டாட்ட
மேதுக்கடி குதம்பாய்
கொண்டாட்ட
மேதுக்கடி.
|
|
|
காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்க
ளேதுக்கடி குதம்பாய்
கோலங்க
ளேதுக்கடி.
|
|
|
|
|
|
வெண்காய முண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காய
மேதுக்கடி குதம்பாய்
உண்காய
மேதுக்கடி.
|
|
|
|
|
|
மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பா
லேதுக்கடி குதம்பாய்
தேங்காய்ப்பா
லேதுக்கடி.
|
|
|
|
|
|
பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவார்க்கு
முட்டாக்
கேதுக்கடி குதம்பாய்
முட்டாக்
கேதுக்கடி.
|
|
|
|
|
|
தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
தேவார
மேதுக்கடி குதம்பாய்
தேவார
மேதுக்கடி.
|
|
|
|
|
|
தன்னை யறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு
பின்னாசை
யேதுக்கடி குதம்பாய்
பின்னாசை
யேதுக்கடி.
|
|
|
|
|
|
பத்தாவுந் தானும் பதியோ டிருப்போர்க்கு
உத்தார
மேதுக்கடி குதம்பாய்
உத்தார
மேதுக்கடி.
|
|
|