SHIRDI LIVE DARSHAN

Showing posts with label சிவ ஸ்தோத்திரம். Show all posts
Showing posts with label சிவ ஸ்தோத்திரம். Show all posts

Tuesday, 17 February 2015

வேதஸாரசிவ ஸ்தோத்திரம் .MP3





                         வேதஸாரசிவ ஸ்தோத்திரம் .MP3


http://www.mediafire.com/listen/wddau8iauidxug3/Vedasaara_SHIVA_STOTRAM.mp3
 
பசூனாம் பதிம் பாபநாசம் பரேசம்
கஜேந்த்ரஸ்ய க்ருத்திம் வஸாநம் வரேண்டம்!
ஜடாஜூடமத்யே ய்புரத் காங்கவாரிம்
மஹாதேவ மேகம் ஸ்மராமி ஸ்மராரிம் !!

பாபங்களைப் போக்கும் பரமேச்வரன் பசுபதியாய், கஜேந்திரனின் தோலை ஆடையாக அணிந்தும், ஜடையின் நடுவில் கங்கையைத் தாங்கியும் இருக்கிறார். அந்த மஹாதேவன் ஒருவரையே மனதில் ஸ்மரிக்கிறேன்.

மஹேசம் ஸுரேசம் ஸுராராதிநாசம்
விபும் விச்வதாம் விபூத்யங்கபூஷம் !
விரூபாக்ஷமிந்த்வர்க வஹ்நித்ரிநேத்ரம்
ஸதானந்தமீடே ப்ரபும் பஞ்சவக்த்ரம்!!

மஹேச்வரனுக்கும் தேவர்களுக்கு ஈசனும், அஸுரர்களை விரட்டி அடித்தவரும், விபுவாயும், உலகத்திற்கு நாதனும், விபூதியைப் பூசியவரும், சந்திர, சூர்ய, அக்னி ஆகிய முக்கண்களை உடையவரும், எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பவருமான ஐந்து முகத்துடைய பரமேச்வரனை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

கிரீசம் கணேசம் கலே நீலவர்ணம்
கவேந்த்ராதிரூடம் குணாதீதரூபம் !
பவம் பாஸ்வரம் பஸ்மனா பூஷிதாங்கம்
பவானீ கலத்ரம் பஜே பஞ்ச வக்த்ரம் !!

மலையில் வசிக்கும், கணங்களுக்குத் தலைவனும், நீலகண்டரும், ரிஷபத்தில் ஏறி வருபவரும், குணங்களைக் கண்ட உருவம் கொண்டவரும், விபூதி அணிந்து விளங்குபவரும் பார்வதியை மணந்தவரும், ஆகிய ஐந்து முகங்கள் கொண்ட பரமேச்வரனை ஸேவிக்கிறேன்.

சிவாகாந்த சம்போ சசாங்கார்தமௌலே
மஹேசான சூலின் ஜடாஜூடதாரின் !
த்வமேகோ ஜகத்வ்யாபகோ விச்வரூப:
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ பூர்ணரூப!!

பார்வதீமனாளனும், சந்திரப் பிறைகொண்டவரும், சூலம் ஏந்தியவரும், ஜடாபாரம் தாங்கியவரும் ஆன ஹே சம்போ!நீர் ஒருவரே உலகம் அளாவிய உலகேயானவர். நீர் முழுமையானவர். ஹே!ப்ரபோ அருளவேண்டும்.

பராத்மன மேகம் ஜகத் பீஜமாத்யம்
நிரீஹம் நிராகாரமோங்காரவேத்யம்
யதோ ஜாயதே பால்பதே யேந விச்வம்
தமீசம் பஜே லீயதேயத்ர விச்வம்!!

உலகத்தின் ஒரே முதற்காரணமான பரமாத்மா அவரே:பற்று அற்ற:வடிவம் கொள்ளாத:ஒங்காரப் பொருளாக இருப்பவர் அவரே. உலகம் தோன்றுவதும், இருப்பதும், லயிப்பதும் அவரிடமே, அந்த ஈசனை ஸேவிக்கிறேன்.

நபூமிர்நசாபோ நவஹ்நி:ந வாயு:
நசாகாசமாஸ்தே ந தந்த்ரா ந நித்ரா!
நசோஷ்ணம் ந சீதம் நதேசா நவேஷோ
ந யஸ்யாஸ்தி மூர்தி:த்ரிமூர்திம்தமீடே!!

ப்ருதிவி, அப், தேஜஸ், வாயு, ஆகாசமாகிய ஐந்து பூதங்களும் அவர் அல்ல. சோம்பலோ நித்ரையோ அவரல்ல, சூடு, குளிர், தேசம், வேஷம் என்பவையும் அவரல்ல. அவருக்கு வடிவவே இல்லை. பிரஹ்ம, விஷ்ணு, மஹேச்வரரூபியான அவரை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

அஜம் சாச்வதம் காரணம் காரணாநாம்
சிவம் கேவலம் பாஸகம் பாஸகாநாம்!
துரீயம் தம:பாரமாத்யந்தஹீணம்
ப்ரபத்யே பரம் பாவனம் த்வைதஹீநம்!!

பிறவியில்லாத எப்பொழுதும் விளங்கும் அவர் மற்றெல்லாகாரணங்களுக்கும் முதற்காரணமாணவர். சிவமே உருவானவர். ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர். அஞ்ஞான இருளுக்கு அப்பாலே ஆதியந்தமில்லாத துரீயமாயுள்ளவர். இரண்டற்ற தூயதான பரம்பொருளாம் அவரை சரணடைகிறேன்.

நமஸ்தே நமஸ்தே விபோ விச்வமூர்தே
நமஸ்தே நமஸ்தே சிதானந்த மூர்தே !
நமஸ்தே நமஸ்தே தபோயோக கம்ய
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீதிஜ்ஞானகம்ய!!

உலகமே உருவான எங்கும் நிறைந்த உமக்கு நமஸ்காரம். ஞானம் ஆனந்தம் என்பனவற்றின் உருவான உமக்கு நமஸ்காரம். தவம் யோகம், வேத உணர்வு இவற்றின் மூலம் அடையத்தக்கவரான உமக்கு நமஸ்காரம்.

ப்ரபோ சூலபாணே விபோ விச்வ நாத
மஹாதேவ சம்போ மஹேச த்ரிநேத்ர !
சிவாகாந்த சாந்த ஸ்மராரே புராரே
த்வதன்யோ வரேண்யோ ந மான்யோ நகண்ய: !!

ப்ரபோ!விச்வநாத!மஹாதேவ, சம்போ!மஹேச!முக்கண்ணா!பார்வதீ மனாள!சாந்தரூப!மன்மதன், த்ரிபுரங்கள் ஆகியவற்றை தொலைத்தவரே!உம்மைத் தவிர சிறப்பு மிக்கவரும், போற்றத்தக்கவரும், எண்ணத்தக்கவரும் வேறு எவருமில்லை.

 சம்போ மஹேச கருணாமய சூலபாணே !
கௌரீபதே பதுபதே பசுபதே நாசின் !
காசீபதே கருணாயா ஜகதேதத் ஏக:
த்வம் ஹம்ஸி பாஸி விததாஸி மஹேச்வரோஸி !!

சம்போ. மஹேச்வர:கருணையுருவே. சூலபாணே. கௌரீபதே. பசுபதே, பசுபாசம் நீக்கிய காசீபதே. நீர் ஒருவரே இவ்வுலகைப் படைத்துக் காத்து பிறகு அழித்தும் வருகிறீர். அதனால் நீரே பெருங்கடவுள்.

த்வத்தோ ஜகத்பவதி தேவ பவ ஸ்மராரே !
த்வய்யேவ திஷ்டதி ஜகத் ம்ருட விச்வநாத !
த்வய்யேவ கச்சதிலயம் ஜகதேதத் ஈச
லிங்காத்மகே ஹர சராசர விச்வரூபின் !!

தேவனே!பவனே!மன்மதனே வென்றவனே!உம்மிடமிருந்தே இந்த உலகம் தோன்றியது. ஹேவிச்வநாத!உம்மிடமே நிலை பெறுகிறது இந்த உலகம். பின் உம்மிடமே லயமும் அடைகிறது. சராசரங்களின் வடிவினன் அன்றோ நீர்!



 

Saturday, 12 July 2014

சிவநாமாவளி அஷ்டகம் .mp3




சிவநாமாவளி அஷ்டகம்.MP3 

http://www.mediafire.com/listen/xafj66xvyqvwjmv/sivanaamavali_ashtagam.mp3
 

ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ
பூதேச பீதபயஸ தன மாமநாதம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ

ஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரே!மன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே. மகேசனே. சம்போ. பூதங்களின் தலைவரே. பயந்தவர் பயம் களைபவரே. ஸம்ஸாரம் என்ற துன்பக்காட்டிலிருந்து அநாதனான என்னைக் காத்தருளும்.


ஹேபார்வதீஹ்ருதயவல்லப சந்த்ரமௌலே
 பூதாதிப ப்ரமதநாத கிரீச சாப
ஹேவாமதேவ பவ ருத்ர நிநாகபாணே
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ
 
ஹே பார்வதீகாந்த!ச்ந்த்ரமௌலே!வாமதேவ!பிரமதநாதனே!மேருவை
வில்லாகக் கொண்டவரே. பவனே. ருத்ரனே. பிநாகத்தை வில்லாகக் கொண்டவரே. ஸமமஸாரமாகிய து:கப்பிடியிலிருந்து என்னைக் காப்பாயாக.

ஹேநீலககண்டவ்ருஷபத்வஜ பஞ்சவர்த்ர
லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ
ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாயதே மாம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ
 
ஹே நீலகண்டனே. காளைக்கொடியோனே. ஐந்துமுகங்கள் கொண்டவனே. உலகக் கடவுளே. ஆதிசேஷனை வளையாகக் கொண்டவனே. ப்ரமதத்தலைவனே. சர்வனே. ஜடாபாரம் தாங்கியவனே. பசுபதியே. கிரிஜாபதியே. என்னை உலகியல் து:க்கத்திலிருந்து காத்தருள்வாயாக!

ஹே விச்வநாத சிவ சங்கர தேவ தேவ
கங்காதர ப்ரமதநாயக நந்திகேச
பாணேச்வராந்தரியோ ஹரலோக நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ

ஹே விசிவநாத, சிவ. சங்கர. தேவ தேவ. கங்காதர. பிரமத நாயக. நந்திக்கு ஈசனே. பாணாஸுரன், அந்தகாஸுரன் ஆகியோரை அழித்தவரே. ஹரனே உலக நாதனே என்னை ஸம்ஸாரதுக்கத்திலிருந்து காத்தருள்வீராக!

வாராணஸீபுரபதே மணிகர்ணிகேச
விரேச தக்ஷமககால விபோ கணேச
ஸர்வஜ்ஞ ஸர்வஹ்ருதயைகநிவாஸ நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ

வாராணஸீ நகரத்தின் நாயகநே!மணிகர்ணிகைத் தலைவனே. வீரர்களின் தலைவனே. தக்ஷயாகத்தை குலைத்தவனே. விபோ. ப்ரமத கணங்களின் தலைவனே. எல்லாம் அறிந்தவனே. எல்லோர் ஹ்ருதயத்திலும் குடி கொண்டவனே. நாதனே என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருளவேணுமே.

ஸ்ரீமன்மஹேச க்ருபாமய ஹேதயாலோ
ஹேவ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத
பஸ்மாங்கராக ந்ருகபாலகலாபமால
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ

ஸ்ரீ மஹாதோவ, கருணையே உருவானவரே. ஆகாயத்தைக் கேசமாகக் கொண்டவரே. நீலகண்டரே, கணங்களுக்கு நாதரே. விபூதி பூசியவரே. மண்டையோடு மாலையணிந்தவரே. என்னை ஸம்ஸாரத் துன்பத்திலிருந்து காக்க வேண்டும்.

கைலாஸசைல விநிவாஸ வ்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ
நாராயணப்ரிய மதாபஹ சக்திநாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ

கைலாயமலையில் வாழும் ஹே சிவபிரானே. யமனை வென்றவனே. முக்கண் உடையானே. மூவுலகிலும் வாழ்பவனே. விஷ்ணுவின் அன்பனே. செருக்கு களைபவனே. சக்தியின் நாதனே. என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருள வேண்டுமே!

விச்வேச விச்வபவநாசக விச்வரூப
விச்வாத்மக த்ரிபுவனைக குணாதிகேச
ஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ

ஹே உலக நாயகனே. உலகில் பிறப்பதை நீக்குபவனே உலகே உருவானவனே. மூவுலகிலும் குணம்மிக்கவரில் மேலானவனே ஹேவிச்வநாத. கருணையுருவானவனே. எளியோருக்குப் பங்காளனே. என்னை உலகியல் துன்பத்திலிருந்து காத்தருள வேண்டுமே!

கௌரீவிலாஸபவனாய மஹோச்வராய
பஞ்சாநநாய சரணாகத கல்பகாய
சர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
தாரித்ர்யது:கதஹநாய நம:சிவாய

பார்வதியின் கேளிக்கையிடமேயான மஹேச்வரனுக்கு சிவனுக்கு நமஸ்காரம். அவர் ஐந்து முகமுடையவர், சரணம் என்று வந்தவருக்கு கல்பகமரம் போன்றவர். அகில உலகுக்கும் தலைவர். அவர். ஏழ்மை, துன்பங்களைக் களைபவரும் அவரே.

KNESARAAJAN



sivanaamavali ashtagam kk

Wednesday, 23 October 2013

சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்.MP3



சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்.MP3



ரத்னை: கல்பித மாஸனம் ஹி மஜலை:
ஸ்நானம் ச திவ்யாம்பரம்
நானாரத்ன விபூஷிதம் ம்ருகமதா
மோதாம்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வ பத்ராசிதம்
புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பஸுபதே
ஹ்ருத் கல்பிதம் க்ருஹ்யதாம்

ஸெளவர்ணே நவரத்ன கண்டரசிதே
பாத்ரே க்ருதாம் பாயஸசம்
பாக்ஷ?யம் பஞ்சவிதம் பயோததியுதம்
ரம்பாபலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம்
கற்பூர கண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம்
பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

சத்ரம் சாமரயோர் யுகம்வ்யஜனகம்
சாதர் ஸகம் நிர்மலம்
வீணாபேரி ம்ருதங்க காஹல கலா
கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதீ: ஸ்துதிர்பஹுவிதா
ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸம்கல்பேன ஸமர்பிதம் தவவிபோ
பூஜாம் க்ருஹாண ப்ரபோ

ஆத்மா த்வம்கிரிஜாமதி: ஸஹசரா
ப்ராணா: ஸரீரம் க்ருஹாம்
பூஜாதே விஷயோப போக ரசனா
நித்ரா ஸமா திஸ் திதி:
ஸம்சார: பதயோ: ப்ரதக்ஷ?ணவிதி:
ஸ்தோத்ராணி ஸர்வாகிரோ
யத்யத் கர்ம கரோமி தத்ததகிலம்
ஸம்போ த வாராதனம்

கர சரண க்ருதம் வாக்காய ஜம் கர்மஜம்வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வா பராதம்
விஹித மவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜயஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ


இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி ஷேமம்  ஏற்படும். புத்திர தோஷம் இருந்தால் விலகும்.
ஸ்ரீ சிவாபசாரமும் நீங்கி சகல
ஷேமங்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரம் படித்தலே பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.





VI

SIVA MANASA STOTHRAM,MP3,DOWNLOAD,DEVOTIONAL SONGS


K.NESARAAJAN,

Thursday, 5 September 2013

தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்.MP3




தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்.MP3
                                                       





விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய

கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய

பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்

இதிஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய
தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்

ஓம் நமசிவாய

இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு, சொர்க்க அனுபவத்தை அடைவார்கள்.

K.NESARAAJAN ,  Daridraya dahana stotram
என வசிஷ்டர் அருளிய தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.