SHIRDI LIVE DARSHAN

Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Thursday, 26 July 2012

காகபுஜண்டர் ஜீவநாடி-ரமணி குருஜி

காகபுஜண்டர் ஜீவநாடி

காகபுஜண்டர் ஜீவநாடி

ஸ்ரீ காகபுஜண்டர் - ஸ்ரீ பஹூளா தேவி
ஜீவநாடியில் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குவது காகபுஜண்டர் ஜீவநாடி. இந்த நாடி மூலம் நாடி பார்த்துப் பலன்கள் கூறி வருபவர் ரமணி குருஜி. ‘சக்தி அருட்கூடம்’ என்ற பெயரில் இயங்கி வரும் இவரது ஆசிரமம் சென்னை தாம்பரம் அருகில் உள்ள சேலையூரில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
நாடி பார்க்கும் முறை
இங்கு மற்ற நாடிகளைப் போல் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. விரல் ரேகை எடுக்கப்படுவதில்லை. பெயர் போன்ற விவரங்கள் கேட்கப்படுவதில்லை. அனைவரையும் உட்கார வைத்துப் பொதுவில் நாடி படிக்கப்படுகின்றது. பலன்கள் அனைத்தும் ஓலைச்சுவடியிலிருந்து பாடலாகவே படிக்கப்படுகின்றது. தினமும், மாலை நேரத்தில், ஏழு மணிக்கு மேல், இறை வழிபாட்டை முடித்து விட்டுப் பலன் கூறத் தொடங்குகிறார் ரமணி குருஜி.

ஸ்ரீ ரமணி குருஜி
குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ரமணி குருஜி இரவு ஏழு மணி அளவில் தமது இடத்தில் அமர்கின்றார். பின்னர் சோழிகளை எடுத்துக் குலுக்கிப் போடுகின்றார். அதில் விழுந்திருக்கும் சோழிகளின் தன்மைக்கேற்ப ஓலைக்கட்டிலிருந்து குறிப்பிட்ட ஓலையைத் தேர்ந்தெடுக்கின்றார். பின்னர் சுவடியைப் படிக்க ஆரம்பிக்கின்றார். அங்குள்ள ஒலிபெருக்கியில் அவர் அவற்றைப் பாடல்களாகப் பாடுகின்றார். அவை ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்யப்படுகின்றன. ஒலிபெருக்கியில் அவர் பாடல்களைப் பாடப் பாடத் தேவையானவர்கள் ஒலிப்பதிவுக் கருவி மூலம் அவற்றைப் பதிவு செய்து கொள்கின்றனர். ஏனெனில் அவர் பாடலுக்கு விளக்கம் எதுவும் கூறுவதில்லை. பதிவு செய்து வைத்து கொண்டு பின்னர் சந்தேகம் கேட்டால் ஆலோசனை வழங்குகிறார். பாடல்கள் அனைத்தும் பழங்கால வடிவில் விருத்தம் போன்று உள்ளது. நாடி பார்க்க வந்திருக்கும் நபர்களின் பெயர் போன்ற விவரங்கள் மற்ற நாடிகளைப் போல வெளிப்படையாக வருவதில்லை. ஆனால் தனிநபரின் பெயர்களும், வாழ்க்கைச் நிகழ்வுகளும், பாடல் வடிவில், யாருமே எளிதில் கேட்டு உடனே புரிந்து கொள்ளாத வண்ணம் பாடல்களாக வருகின்றன. குறிப்பாக உணர்த்தப்பெறும் இவற்றை நன்கு கவனித்துப் பொருள் கொள்ள வேண்டியது தேவையாகின்றது.
நாடி பார்க்க வந்து தம்மிடம் குறைகளைக் கூறுபவர்களுக்கு ரமணி குருஜி சோழிகளைக் குலுக்கிப் போட்டு பலன்கள் மற்றும் பரிகாரங்களைக் கூறிவருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன் இருக்கிறார்.
சித்தர்களில் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர் காகபுஜண்டர். இவரது பெருமையினை ‘ஞான வாசிட்டம்’ என்னும் நூல் மூலம் அறியலாம். பெரிய காகத்தினைப் போன்ற உருவம் கொண்டவராதலால் அவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார் எனக்கூறுகின்றனர்.

ஸ்ரீ புஜண்ட மஹர்ஷி
ஒருமுறை, ரமணி குருஜி, 1962-ம் ஆண்டில் கங்கைக்கு நீராடச் சென்றிருக்கிறார். அங்கு ஒரு மகானால் ஆசிர்வதிக்கப்பெற்ற அவர், அம்மகானிடம் குரு உபதேசம் பெற்றிருக்கிறார். மேலும் அவரிடம் சோதிடக் கலையையும் பயின்றிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பின்னர் அம்மகான் தம்மிடம் உள்ள ஓலைச்சுவடிகளை ரமணியிடம் தந்து ஆசிர்வதித்து, மக்கள் சேவை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படியே மக்களுக்குப் பல வழிகளிலும் இதுகாறும் உதவி வருகிறார் ரமணி. ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல வெளிநாட்டைச் சேர்ந்த அன்பர்களும் இவரது ஆன்மீகப் பணிக்கு உறுதுணையாக உள்ளனர்.
காகபுஜண்டருக்கென்று தனியாகக் கோயில் எழுப்பியுள்ள அவர் ஆண்டு தோறும், பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அதன் அருள் விழாவினைச் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்.
ரமணி இதனை ஒரு சேவையாகத் தான் செய்து வருகின்றார். யாரிடமும் பணம் எதுவும் அவர் வாங்குவதில்லை. மேலும் அவர் சுவடியைப் படித்துப் பலன் கூறும் இடம் ஓர் ஆலயம் போல் விளங்குவதால், அங்கு செல்பவர்கள் மிகவும் சுத்தமாகச் செல்ல வேண்டியது அவசியம்.
ஆலய முகவரி:
Om Sakthi Arutkudam
18 Alamelupuram,
Selaiyur,
E. Tambaram,
Chennai 600 072
மேலும் விவரங்களுக்கு…
http://arulvanam.org/index.html

முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan

http://copiedpost.blogspot.ca/2012/12/live-dharshan.html

Tuesday, 14 February 2012

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய நட்சத்திர பரிகார ஸ்தலங்கள்

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய  

நட்சத்திர பரிகார ஸ்தலங்கள் 

வருடத்திற்கு  ஒரு முறையாவது நமது  பிறந்த நட்சதிரதன்று நம்  நட்சதிரதுக்குரிய ஸ்தலத்திற்கு  சென்று வழிபட்டால்  வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும் .

(என்னுடைய அனுபவத்தில் இது உண்மை )

மேஷ ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனிஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
 தகவல் உதவி (http://www.pariharam.com)

ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/)

மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/)

கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் குச்சனூர் மதுரை
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனிஸ்வரர் ,திருபரங்குன்றம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
 தகவல் உதவி (http://www.pariharam.com/)

சிம்ம ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/)

கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியாம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை 
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/)

துலா ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை 

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர் 
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/)

விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர் 

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/

தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/)

மகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – கொடுமுடி , கரூர்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/)

கும்ப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – கொடுமுடி , கரூர்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா – திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் – காஞ்சிபுரம்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/)

மீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார ஸ்தலங்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் –காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி – திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் – ஓமாம்புலியூர்
நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்றால் வாழ்வில் ஒரு முறையாவது மேற்கண்ட கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும்.
தகவல் உதவி (http://www.pariharam.com/) 

முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan

http://copiedpost.blogspot.in/2012/12/live-dharshan.html

Wednesday, 1 February 2012

சனிபகவான் அருள் பெற உதவும் பரிகாரங்கள்

சனிபகவான் அருள் பெற உதவும் பரிகாரங்கள்

சனி பகவானின் அருளை எளிதில் பெற கீழ்க்கண்ட விரதமுறைகளை பின்பற்றலாம்…
  • ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காலத்திற்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம். அல்லது, ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு வேலை உணவோடு விரதம் இருந்து சனிபாகவனை வழிபடலாம்.
  • சிறிது என்னை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும் போது, அதை தலைக்கு அடியில் வைத்து படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் என்று இந்த பரிகார முறையை பின்பற்றலாம்.
  • ஒரு முழு தேங்காயை சனி பகவான் சன்னதியில் சனிக்கிழமைகளில் இரண்டு பகுதியாக்கி அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.
  • சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிசேகம் செய்து, கரும்பு அல்லது எள் சாதம், வடை மாலை செய்து வழிபட்டு, அனைத்தையும் ஏழைகளுக்கு விநியோகம் செய்யலாம்.
  • சனிபகவானுக்கு நவக்கிரக சாத்தி ஓமங்கள் செய்து வழிபடலாம்.
  • எள்ளை சுத்தம் செய்து வறுத்து வெல்லம், ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வெங்கடேச பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.
  • அவரவர் பிறந்த சென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபாகவனின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது நன்மையான பலன்களை தரும்.
  • சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, சனி பகவானுக்கு ஒரு சிறு துணியில் எள் முடிந்து, அதை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி கருங்குவளை மலரால் சனி பகவானை அர்சிப்பதோடு, எள் சாதம் நெய்வேத்தியம் செய்வதும் நல்லது. தொடர்ந்து, சனி கவசம் அல்லது காயத்திரி செபம் செய்யலாம். நெய்வேத்தியம் செய்யும் எள் சாதத்தில் சிறிது காக்கைக்கு வைத்து விட்டு, பின் அனைவருக்கும் அளித்து சாப்பிடலாம்.