SHIRDI LIVE DARSHAN

Showing posts with label விவேகானந்தர். Show all posts
Showing posts with label விவேகானந்தர். Show all posts

Monday, 16 April 2012

விவேகானந்தரின் வீர அறிவுரைகள்



நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்த வனாகவே ஆகிவிடுவாய். - கீதை விளக்கத்தில் விவேகானந்தர்

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.

உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.

நீ உன்னைப் பலவீன்ன் என்று ஒரு போதும் சொல்லாதே. எழுந்து நில்.
தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.

சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே. நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும்.

மக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு

நாத்திகனுக்கு தருமசிந்தனை இருக்கலாம். ஆனால் மதகோட்பாடு இருக்க இயலாது. மத்த்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தருமசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.

குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றர்கள் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர்.

செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனை விட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.
நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதை விட அழியாத
ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.

மரணத்தை வென்று, அதறக்குமேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதைனைத் தெரிந்து கொள்ளத்துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.
மிருகத்தை மனிதானாக்குவதும், மனிதனைத் தெய்வம் ஆக்குவதும் மதம்.
இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும் - பயத்தை உண்டு பண்ணுகிற எதையும் நிற்க வேண்டும். அவற்றுடன் போராடவேண்டும். பயந்து ஓடலாகாது.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய சமயங்களில் பரிவு காட்ட வேண்டும்.

மதங்கள் எல்லாமே உண்மையானவைதாம்! ஆனால் ஒரு மத்த்திலிருந்து வேறொரு மத்த்திறகு மக்களை மாறச் செய்வது பொருள்ளற்றது. கிறிஸ்தவர்கள் மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாகவும், முஸ்லீமுகள் சிறந்த முஸ்லீம் ஆகவும் வாழ வேண்டும்,இந்துக்கள் சிறந்த இந்துக்களாகவும் வாழ வேண்டும் . ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டுமே.

கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மதப்பழக்கப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.

தங்கள் மதமே சிறந்து விளங்கவேண்டும் மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்குள் பகைமையை உருவாக்கும்.

பணி செய் அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதை தாழ்வாக எண்ணாதே அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது.

உடல் இன்பமே பெரிதன்று. வறுமையில் வாழ்ந்தாலும், திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கஷ்டத்தில் வாடுவதை விட, பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டு, தன் நலத்தைக் குறைத்து, பிறர் நலத்தை பேண வேண்டும்.

இறைவனே இன்று உலகாமகப் பரந்து விரிந்து நிற்கின்றான். கடவுளை நினைத்து பக்தியோடு பணி செய். அதுவும் ஒழ்க்கத் தோடு பணி செய். ஒழுக்கம் என்பது தன்னலமற்ற சேவை. அதுவே சிறப்பு. அந்த சிறப்பை அடைய மனிதன் முயல வேண்டும்.

நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்ப்ப்படுவோர் எல்லோருமே கடவுள் தான், அவர்களை ஏன் முதலில் பூஜை செய்ய்க்கூடாது?

உடல் வலிமையுடையவன், வலிமை குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும்.
செல்வம் படைத்தவன், செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்ததை விட வேண்டும்.

முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போடு நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவனிடத்தில்  தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோக்ஷமில்லை.

பாவம் என்பது ஒன்று உண்டு என்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.

நாம் இந்த உலகில் பிறந்தது நம்மை வலிமையுடையவர்களாக்கி கொள்ளவே , நான் வேண்டுவதெல்லாம் வலிமை , வலிமை , வலிமை ஒன்றே 

நான் ஒவ்வொருவரின் முன் வைக்கும் முதல் கேள்வி இது தான் , நீ வலிமை உடையவனாக இருக்கிறாயா? நீ வலிமையை உணர்கிறாயா ? என்பது தான் 

நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும்.
இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

எப்போதும் விரிந்த மலர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கையாகும். சுருங்கி விடுவது மரணம் மட்டும் தான் . தன்னை மட்டும் கவனித்துக் கொண்டு, சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது.

எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.

பொதுவாக இளைஞர்கள் ஜோதிடத்தின் பக்கம் செல்வது இல்லை , வலிமை மிக்க இளைஞன் எழுந்து நின்று என் தலை விதியை நானே அமைத்து கொள்வேன் என்கிறான் 

விதி என்பது என்ன ? நீ முன்னர் என்ன செய்தாயோ அதுதான் உனது இன்றைய விதி ,நீ இன்று என்ன செய்கிறாயோ அது உன் நாளைய தலை விதி 
துன்பபடுபவர்களை பார்த்து அது எல்லாம் அவர்கள் தலை விதி , கர்ம வினை என்பதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன் 
அது அவர்கள் கர்மாவானால், அதை போக்குவதுதான் எனது கர்மா 

யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.
குருவுக்குப் பணிந்து நடந்தலும் , பிரம்மச்சரிய ஒழுக்கத்தை நன்கு கடைப்பிடித்தலும் வெற்றிக்கு வழிகளாகும்.

சிங்கங்களே சீறி எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். சுதந்திர ஆன்மாக்கள், அழியாத திருவருளைப் பெற்றவர்கள் உங்களுக்கு இந்த உறக்கம் பொருந்தாது .
போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதே, மிருகத்தைப் போல வாழாதே!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsknKccpsTUhGiXYNOxcW28Njx5vi4Tatf-1e5uQ7pfTju9P_IkaKyGGlKuSVH_iTsSrngiJQjXtWIBulakdhshZ5MYcKa1l_Phkcplu-eZFrpgKHXWOkRyeg0UlPvRTrnZKnjpBCNhfpU/s240/vivek.gif 








இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே!
என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ 
வரம்பில்லவலிமை பெற்றவன், உன்னுடைய உண்மை இயல்போடு 
ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ 
எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது.
 கருத்து இதுதான் - எது வந்தாலும் போராடி முடி. 
தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் 
நமக்கு எதிராக எழுந்து எதிர்த்து நிறகட்டும். குறிக்கோளும் கொள்கையும் 
மாறாமல் முன்னேறிச் செல்.

நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனது  இலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

சகோதரா!  நீ அழுவதேன் சகோதரா? மரணமோ, நோயோ உன்கில்லை. துன்பமோ, துரதிர்ஷ்டமோ உனக்கு கிடையாது. நீ ஏன் அழ 
வேண்டும்? மாற்றமோ, மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ 
ஆனந்தமயமானவன். நீ உனது ஆன்மாவில் நிலைத்திரு. மக்கள் என்ன 
வேண்டுமானாலும் சொல்லட்டும் ,நீ உன் முடிவில் உறுதியாக இரு. பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் காலடியில் பணிந்து கிடக்கும்.

பகுத்தறிவைக் கொண்டவன் பகவானை அடைய வழிகளை நுட்பமாகத் தேடுகிறான். தனது உடம்பால் உழைத்து இறைவனை அடைய நினைப்பவன் சேவாமார்க்கத்தை நாடுகிறான். சமூக சேவையில் இறைபணியைத் தேடுகிறான். மந்திரப் பூர்வமாக நாடுபவன் வீட்டிலும் ஆலயத்திலும் பூஜிக்கிறான்.

கர்மயோகம்: தனது கடமைகளைச் செய்வதாலும் அதற்குரிய செயல்களை ஆற்றுவதாலும் இறை உணர்வைப் பெறுவது.
பக்தியோகம்: தனது அந்தரங்கமான பக்தி உணர்வால், இறைவனை நினைந்து அவரைத் தனக்கே உரியவராக அடைய முற்படுவது.

ராஜயோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்தி இறைவன்பால் தனது சிந்தனையை வழிப்படுத்தி, இறை உணர்வைப் பெறுவது.

ஞானயோகம்: தனது அறிவாற்றலால் பல்வேறு சாஸ்திர நூல்களைப் படித்தும் ஞானபோதனைகளைப் பெற்றும், இறைவனை உணர்ந்து அவரை அடைய முற்படுவது.



இந்தச் சீதையெனும் இலட்சியத்தைப் போன்று வேறில்லை. எது எது பரிசுத்த மனதோ, எது எது புனிதமானதோ பெண்ணினத்திலே பெண்மை என்ப்போற்றப்படுவது எதுவோ, அதற்குப் பெயர்தான் சீதை! குரு ஒருவர் ஒரு பெண்மணியை ஆசீர்வதிக்க வேண்டுமென்றாலும், ஒரு குழந்தையை வாழ்த்த வேண்டுமென்றாலும், சீதையைப் போல் இரு என்ற கூறி ஆசீர்வதிப்பார்.

மனிதனாக வாழ முயற்சி செய். தோல்விகளை ஒரு போதும் பொருட்படுத்தாதே. ஓராயிரம் முறை நீ உனது இலட்சியத்தைக் கைக்கொள். 
ஆயிரம் முறை நீ தோல்வியுற்றாலும் மீண்டும் ஒரு முறை கைக்கொள்ள முயற்சி செய்.

பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் த்த்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.

ஒரு கழுதை மீது நூலகத்தை ஏற்றிவிட்டால் அது பண்டிதன் ஆகிவிடாது. நூல்கள் நிறைய படிப்பதனால் எவனும் பயன்பெற முடியுமா?
நம் நாட்டுப் பொன்னை பித்தளையாகவும், அயல்நாட்டுப் பித்தளையைத் தங்கமாகவும் கருதக்கூடிய வகையில் நம் நாட்டு மக்கள் தங்கள் கல்வி அறிவைப் பெற்றிருக்கிறார்கள். நவீன காலமேற்றிசைக் கல்வி, நம் நாட்டு மக்களை இவ்வாறு செய்திருப்பது மந்திர மாயம் போல் இருக்கிறது.
ஒருவன் நன்மையிலிருந்து அறிவைப் பெறுவது போலவே, தீமையிலிருந்து அறிவைப் பெறுகிறான்.

உண்மையாக எதையும் துறக்கலாம். ஆனால், எதன் பொருட்டும், உண்மையைத் துறக்கலாகாது.

எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும், தவிர்க்க முடியாத தவறுகள் சில ஏற்படவே செய்யும்.

ஒரு காரியம் செய்யும் பொது உண்டாகும் பலனில் ஏற்படும் அக்கறையை விட  அந்த காரியத்தை  செய்யும்  முறைக்கே அதிக அக்கறை கொடுக்க வேண்டும் . நான் கற்று கொண்ட பாடங்களிலே முக்கியமானதும் , பெரியதும் இதுவேயாகும் , இந்த ஒரு பாடத்திலிருந்து நான் பல பாடங்கள் கற்று கொண்டே வருகிறேன் .

பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.

விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.
கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணிப்பது அல்ல , அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.

ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம்தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த முடியும்.

ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின், அவனது பெருஞ்செய்ல்களைப் பார்க்க வேண்டாம். அவன் செய்யும்  சாதாரணக் காரியங்களை கவனித்தாலே அவனுடைய உண்மை தன்மை தெரியும் .

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி, அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, அல்லது யாராக இருந்தாலும் சரி. உன்னைடைய சுகதுக்கங்களை மறந்து நீ வேலை செய். இது ஒன்றே இப்பொழுது நீ கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடமாகும்.

தியானம் செய்யுங்கள் ,உன்னுடைய உண்மை தன்மையை நீ தெரிந்து கொள்ள விரும்பினால் நீ தியானம் செய் ,

மனம் அடங்க மறுக்கிறது , நாம் எங்கே போவது, எல்லோரும் குகைக்கு போய்விடலாமா? அதனால் என்ன பயன்? குகையில் பேய் இருக்குமோ? எல்லாப் பேய்களும் நம்முடைய மனத்திலே தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அது குகையாகிவிடும், அந்த இடமே சொர்கமாக ஆகிவிடும் .

இன்பங்களை அனுபவிக்கும் ஆசையை முற்றிலும் மனத்திலிருந்து நீக்காமல் ஆன்மிக வாழ்வில் எதையுமே அதையமுடியாது.

இன்பங்கள் என்ற உன்னுடைய எல்லா ஆசைகளையும் சமுதாயத்தின் நன்மையை முன்னிட்டு எப்போது உன்னால் தியாகம் செய்ய முடிகிறதோ அப்போது நீ ஒரு புத்தர் ஆகிவிடுகிறாய்.

மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறான். அதில் அவன் பல தவறுகளைச் செய்கிறான். அதனால் துன்பப்படுகிறான், பிறகு இயற்கையை வென்று விடுகிறான் , இயற்க்கை அவனுக்கு அடங்கி விடுகிறது .
வெற்றிப் பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

மனிதன் தானே பணத்தை உண்டு பண்ணுகிறான். பணம் மனிதனை உண்டு பண்ணியதாக எங்கேயாவது எப்போதாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?
பசு எப்போதாவது பொய் பேசி இருக்கிறதா , ஆனாலும் அது ஒரு பசுதான் ,மனிதன் பொய் பேசுகிறான் பிறகு அவனே தெய்வமாகவும் ஆகி விடுகிறான் 
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவனாகிறானோ அந்த அளவுக்குத் தக்கபடி அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும்.

நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.

பெண்ணுக்குரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப் பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும். அத்தகைய அற்புதமான குணங்களை உடைய பெண்களை முன்னேற்ற உங்களால் முடியவில்லை?

நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையாம கல்வி.

நூல்நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்றுவிடாமல் படிக்கும் புத்திசாலியைவிட, ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்து கொண்டாலே போதும், நீ ஒரு நூல் நிலையத்தையே படித்தவனை விட அறிவாளியாக இருப்பாய்.

பூரணத்துவம் பெற்ற மனிதன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெறுவதற்கு எந்தப் பொருளை அதைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.

எல்லா ஒழுக்கத்திற்கும், எல்லா ஆன்மீக உணர்விக்கும் பிரம்மச்சரியமே ஆதாரம்.

ஆன்மிகத்தில் பேரின்பம் கிடைக்காமல் போனால் என்ன , அதற்காக புலன் இன்பதையா நாடி செல்வேன் ? அமுதம் கிடைக்காமல் போனால் சாக்கடை நீரையா அருந்துவேன்  

வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்குத் தேவையே இல்லை.
மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்துநிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.
கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.

சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெய்ர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.

அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

துருப்பிடித்தத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.

வழிபாடுகள் எந்தப் பெயரிலும் இருந்தாலும் சரி. எந்த வித்த்தில் இருந்தாலும் சரி. அவை அனைத்தும் ஒரே கடவுளக்குச் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும்.

உனக்கு எத்தனை மொழிகள் தெரிந்தால் என்ன ? உன் மொழி இலக்கண சுத்தமாக இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ? நீ யாராக இருந்தால் என்ன ? கேள்வி இதுதான் உன்னிடம் கொடுப்பதற்க்கு எதாவது இருகிறதா - அப்படியானால் அதை நீ மற்றவருக்கு கொடு 

தனது குழந்தைகளில் யாரேனும் ஒருவருக்காவது உதவி செய்யும் வாய்ப்பை ஆண்டவன் உனக்குக் கொடுத்தால் அதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய்.

இந்தியாவின் பாமர மக்களாகிய இந்த ஏழை எளியவர்களை நாம் உயர்த்த வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கு உரிய கருத்துக்களை நம்பிக்கையோடும், சிரத்தையோடும், அன்பான சொற்களால் அவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

நோயாளிகளுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய். பசியால் வாடுபவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உள்ளவனுக்கு உன்னால் முடிந்த அளவிற்கு கல்வியறிவைப் புகட்டு. இதுவே உனது கடமையாக்க் கொள்.

எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தல் பலவீன்னாகவே நீ ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுகிறாய்.

மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மத்த்தின் அடிப்படை இலட்சியமாகும்.

இறைவனை ஒவ்வொரு உயிரிலும் காண்பவன் ஆத்திகன்.
எவன் ஒருவனுக்குத் தன்னம்பிக்கை இல்லையோ அவன்தான் நாத்திகன்.

என் மகனே என் வார்த்தைகளின் மீது உனக்கு சிறிதளவேனும் மதிப்பிருந்தால் முதலில் உன் அறை கதவுகளை திறத்து விடு , துன்பத்தில் வாடுபவர்களை பார் , அறியாமையால் வாடுபவர்களை பார் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய் ,

 அவர்களின் துன்பத்தை போக்கு , அறியாமையை போக்கு , அவர்களுக்கு கல்வியறிவு புகட்டு  இக்கருத்துக்களை எல்லாம் அவர்களிடம் பொய் சொல்லு 

விவேகானந்தரின் அறிவுரைகள் 

 - எனும் நூலிலிருந்து சில அறிவுரைகள்  


http://www.barbarapijan.com/bpa/spirituality/Vivekananda_signature.jpg
-- விவேகானந்தர்

Sunday, 11 March 2012

அகத் தூய்மையை அடைய-சுவாமி விவேகானந்தர்


 பக்தி என்பது தூய்மையை அடிப்படையாகக் கொண்டே எழுகிறது. புறத் தூய்மையை எளிதாக மாற்றிவிடலாம். ஆனால் அதைக் காட்டிலும் மேன்மையான அகத் தூய்மையை மாற்ற முடியாது. அகத் தூய்மையே பக்திக்கு ஆதாரமாக அமைகிறது. உண்மை, தயவு, அகிம்சை, அன்பு ஆகிய  குணங்களைக் கொண்டும், பிறரது பொருளை விரும்பாமலும், வீணான எண்ணங்கள் இல்லாமலும், பிறரால் ஏற்படும் இன்னல்களைக் குறித்து வருந்தாமலும் இருந்தால் அகத் தூய்மையை அடையலாம்.

Tuesday, 21 February 2012

சுவாமி விவேகானந்தர் பற்றி தென்கச்சி கோ. சுவாமிநாதன் MP3

சுவாமி விவேகானதர் பற்றி அவரது அவதார நாள் விழாவின் பொது
 ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் திரு . தென்காசி கோ சுவாமிநாதன் அவர்கள் ஆற்றிய உரை




                 MP3 File from
        http://www.4shared.com/mp3/Rgfqo5Hd/Vivekanandar_Patri_Thekachi_Sw.html?

Thanks to   ::http://knowingyourself1.blogspot.in/

Wednesday, 1 February 2012

இளைஞர்களின் லட்சியப் புருஷர் அனுமன் – சுவாமி விவேகானந்தர்


இளைஞர்களின் லட்சியப் புருஷர் அனுமன் – சுவாமி விவேகானந்தர்



மகாவீரராகிய அனுமனை உங்கள் இலட்சிய புருஷராகக்கொள்ள வேண்டும். பகவான் ராமச்சந்திரரின் கட்டளையால் அவர் எப்படிக் கடலையே தாண்டினார் என்பதைப் பார். வாழ்வினைப் பற்றியோ, சாவினைப் பற்றியோ அவர் கவலைப்படவே இல்லை. அவர் முழுக்க முழுக்க புலன்களை வென்றவர். ஆச்சரியப்படத்தக்க அறிவுக் கூர்மை வாய்ந்தவர். நீ இப்போது உன் வாழ்வை அவரைப் போல் மகத்தான சேவை செய்யும் வகையில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலம் மற்ற இலட்சியங்கள் அனைத்தும் படிப்படியாக உன் வாழ்வில் வெளிப்படும். எதிர்த்துப் பேசாமல் குருவின் கட்டளைகளை ஏற்றல், பிரம்மச்சரியத்தைக் கடுமையாகப் பின்பற்றுதல், இந்த இரண்டும்தான் வெற்றிகளின் ரகசியம். அனுமன் ஒரு பக்கம் சேவையின் இலட்சியமாக விளங்குகிறார். மற்றொரு பக்கத்தில் உலகம் முழுவதும் நடுங்கச் செய்கின்ற சிங்கம் போன்ற தைரியத்தின் வடிவமாகவும் விளங்குகிறார்.
ஸ்ரீராமனின் நலனுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்வதில் அவருக்குச் சிறிது கூடத் தயக்கம் கிடையாது. இராமனுக்குச் செவை செய்வது என்பதைத் தவிர பிரம்மா, சிவன் நிலை கிடைப்பதென்றாலும் அது பற்றிச் சிறிது கூட நினைப்பே இல்லாத மனம் கொண்டவராக அவர் இருக்கிறார். அவர் வாழ்வின் இலட்சியம் ஸ்ரீராமனின் கட்டளையை நிறைவேற்றுவது ஒன்றே. அதைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அத்தகைய முழுக்க முழுக்கத் தன்னைத் துறக்கும் பக்திதான் தற்போது வேண்டப்படுவது. ஒவ்வொரு துறையிலும், தவ மனப்பான்மையோடு கூடிய ஆண்மை வாழ்வைக் கொண்டு வர வேண்டும். அத்தகைய இலட்சியங்களைப் பின்பற்றுதலில்தான் இந்த நாட்டின், நாட்டு மக்களின் நன்மை அடங்கி இருக்கிறது. இத்தகைய இலட்சியங்களின் மீது உங்கள் குணங்களை அமைத்துக் காண்பீர்களானால் ஆயிரக் கணக்கானவர்கள் உங்களைப் பின்பற்றுவார்கள்.
ஆனால் அந்த இலட்சியத்திலிருந்து ஓர் அங்குலம் விட்டு விலகாமல் இருக்கும்படி உன்னை நீ பார்த்துக் கொள். எந்தக் காலத்திலும் தைரியத்தை இழக்காதே. சாப்பிடும்போதும், உடுத்தும்போதும், படுக்கும்போதும், பாடும்போதும், விளையாடும் போதும், மகிழ்ச்சியிலும், நோயிலும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத்துடன் கூடிய தைரியத்தை உன்னிடமிருந்து வெளிப்படுத்து. அதன் பிறகுதான் மகாசக்தியான அன்னையின் கருணையைப் பெறுவாய்.

Tuesday, 31 January 2012

நாத்திகன்--சுவாமி விவேகானந்தர்


சுவாமி விவேகானந்தர்—அறிவுரை


உன் மனச்சாட்சிதான் உன்ககு ஆசான். அதைவிடச் சிறந்த ஆசான் உலகில் இல்லை உனக்காக

தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக;

பிராமணவாதம் எதனைக் கொள்ளினும் கொள்ளுக;

உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும்

மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும்

அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்தில் இருந்து அழுக்குரல் வரும் வரையில் ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்
தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் தான் நாத்திகன்

விவேகானந்தர்

Sunday, 29 January 2012

விவேகானந்தரின் பொன்மொழிகள்..

விவேகானந்தரின் பொன்மொழிகள்..


*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
 *அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும்.
நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.
இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது.
வீரர்களாகத் திகழுங்கள்!
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

*ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

*ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.
* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!

*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.

*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்.

*அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.

*ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.

*அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.

*இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.

*தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).

*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

*மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

*சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

*உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.

*நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.

*இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.

* கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

* ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.


* உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.

*மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

* உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.

* உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.

* உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

* சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

*தியானம்
எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!

*ஞானதீபம்
ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

*மனதை அடக்கு எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.