Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Friday, 19 December 2014

சிவ புஜங்கம் .MP3





சிவ புஜங்கம் .MP3

http://www.mediafire.com/listen/69mcnljv0j3h97g/shiva-bhujangam.mp3






 கலத்தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்
சலச்சாருசுண்டம் ஜகத்ராண சௌண்டம்
கன்த்தந்த காண்டம் விபத்பங்க சண்டம்
சிவப்ரேம பிண்டம் பஜே வக்ரதுண்டம்

மதஜலம் பெருகி ஒடுவதால் கூட்டம் கூட்டமாக நாடிவரும் தேனிக்கள் குழுமிய தாடைகளும், அசைந்தாடும் துதிக்கையும், உலகத்தைக் காக்கத் துடிக்கும் வீறும், பளபளக்கும் கொம்புகளும், விபத்துக்களை ஒடுக்குவதில் துடிப்பும், சிவா-சிவன் இவ்விருவரின் அன்புக்கலவையாயும் அமைந்த வக்ரதுண்டரை சேவிக்கிறேன்.

அநாத்யந்த மாத்யம் பரம் த்தவமார்தம்
சிதாகாரமேகம் துரீயம் த்வமேயம்
ஹரிப்ரஹ்மம்ருக்யம் பரப்ரஹ்மரூபம்
மநோவாகதீதம் மஹ:சைவமீடே

முதலும் முடிவுமில்லாதவர், முதன்மையானவர், தத்வப்பொருளானவர், ஞானவடிவானவர், அளவுக்கு எட்டாதவர், துரீயமானவர், ஹரியும் பிரம்மாவும் தேடும் பரப்ரஹ்மமேயானவர், மனம், வாக்கு இவற்றிற்கு அப்பாற்பட்டதுமான சிவஜ்யோதியை துதிக்கிறேன்.

ஸ்வசக்த்யாதிசக்த்யந்த ஸிம்ஹாஸநஸ்தம்
மநோஹாரி ஸ்ர்வாங்க ரத்னோரு பூஷம்
ஜடாஹீந்து கங்காஸ்திசம்யாக மௌலீம்
பராசக்தி மித்ரம் நும்:பஞ்சவர்த்ரம் 

தனது சக்தியில் தொடங்கி ஆதிசக்தியில் முடியும் சிம்மாஸனத்தில் அமர்ந்து, அழகிய உடம்பு முழுதும் ரத்னாங்கிபூண்டவரும், ஜடை ஸர்ப்பம், சந்த்ரன், கங்கை, சம்யாகம் இவற்றை தலையில் கொண்டவரும், பராசக்தி துணைவருமாகிய பஞ்சமுக சிவனை ஸ்தோத்ரம் செய்கிறேன்.

சிவேசாஸ தத்பூருஷாகோர வாமா
திபி:பஞ்சபிர்ஹ்ருந்முகை:ஷட்பிரங்கை
அனௌபம்ய ஷட்த்ரிம்சதம் தத்வவித்யா
மதீதம் பரம் த்வாம் கதம் வேத்தி கோவா

சிவன், ஈசானன், தத்புருஷன், அகோரன், வாமதேவன் ஆகிய ஐந்து முகங்களுடனும், ஆறு அங்கங்களுடனும், இணையில்லாத முப்பத்தாறுதத்வங்களுக்கு அப்பால் உள்ள பரம் பொருளாகிய தங்களை யார் எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

 ப்ரவால ப்ரவாஹ ப்ரபாசோணமர்தம்
மருத்வன் மணி ஸ்ரீமஹ:ச்யாமமர்தம்
குணஸ்யூதமேதத் வபு:சேவ மந்த
ஸ்மராமி ஸ்மராபத்திஸம்பத்தி ஹேதோ

பவழம் போன்று சிவப்பான ஒரு பகுதியும், இந்திர நீலம் போன்று கருநீலமான மற்றொரு பகுதியும், குணம் என்ற ஒரே கயிறு மூலம் இணைக்கப்பட்ட சிவஸ்வரூபத்தை காம விகாரமழிய தியானம் செய்கிறேன்.

ஸ்வஸேவாஸமாயாத தேவாஸுரேந்த்ரா
நமந்மௌலி மந்தாரமாலா பிஷக்தம்
நமஸ்யாமி சம்போ!பதாம்போருஹம் தே
பவாம்போதி போதம் பவானீ விபாவ்யம்

ஹேசம் போ!சம்ஸாரக் கடலைக்கடத்திவிடும் படகு போன்ற தங்களது திருவடித்தாமரையை நமஸ்கரிக்கிறேன் அது, தங்களை ஸேவிக்க வந்த தேவாஸுரர்களின் தலைகளிலுள்ள மந்தாரமலர்கள் படிந்து, பவானீ தேவி காணத்தக்கதாய் மிளிர்கிறது.

ஜகந்நாத!மந்நாத!கௌரீஸநாத
ப்ரபன்னானுகம்பிந் விபந்நார்திஹாரிந
மஹ:ஸ்தோம மூர்த்தே ஸமஸ்தைகபந்தோ
நமஸ்தே நமஸ்தே புனஸ்தே நமோஸ்து 

உலகத்தையும் என்னையும் காத்தருளும் கௌரீமணாளனே!சரணமடைந்தோரை இரக்கமுடன் காப்பவரே!தீதுற்றோர் துன்பம் துடைப்பவரே!ஜ்யோதிருபங்கொண்டவரே!உலகின் ஒரே பந்துவான உமக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

விரூபாக்ஷ!ஸிச்வேச!விச்வாதிதேவ!
த்ரயீமூல சம்போ சிவத்ர்யம்பக த்வம்
ப்ரஸீத!ஸ்மர, த்ராஹி பச்யாவமுக்த்யை
க்ஷமாம் ப்ராப்னுஹி த்ர்யக்ஷ மாம் ரக்ஷ மோதாத் 

விரூபாக்ஷ, விச்வேச்!தேவாதிதேவ!வேதமூலனே!சம்போ, சிவ, திரியம்பக, அருள் பாலிப் பீராக!மறவாமல் காப்பாற்றுவீராக!மோக்ஷமளித்து, என்னை காத்தருள பெருமை கொள்வீராக!

மஹாதேவ!தேவேச!தேவாதிதேவ
ஸ்மராரே!புராரே!யமாரே!ஹரேதி
ப்ருவாண:ஸ்மரிஷ்யாமி பக்த்யா பவந்த
ததோ மே தயாசீல தேவ ப்ரஸீத 

மஹாதேவா!தேவேச!தேவாதிதேவ!ஸ்மராரியே!புராரியே!யமாரியே!ஹரனே என்று பக்தியுடன் உம்மை தியானிக்கிறேன். தயை காட்ட வேண்டுமே!எனக்காக அருள வேண்டுமே!

த்வதந்ய:சரண்ய:ப்ரபன்னஸ்ய நேதி
ப்ரஸீத ஸ்மரந்நேவ ஹந்யாஸ்து தைந்யம் 
நசேத் தே பவேத் பக்தவாத்ஸல்யஹாநி
ததோ மே தயாலோ ஸதா ஸந்நிதேஹி 

சரணமடைந்தவருக்கு தாங்களன்றி வேறு காப்போரில்லை என்று எண்ணி, அருளன்போடு எனது ஏழ்மையைப் போக்கிவிடுங்கள். இல்லையெனில் பக்தனுக்கு அன்பன் என்ற பெயர் தீதுறுமே. அதனால், ஹேதயாபரனே!என்முன்னே தோன்றுவீராக!

அயம் தாநகலஸ்த்வஹம் தாநபாத்ரம்
பவாநேவ தாதா;த்வதந்யம் நயாசே
பவத்பக்திமேவ ஸ்திராம் தேஹி மஹ்யம்
க்ருபாசீல சம்போ!க்ரிதார் தோஸ்மி தம்மாத் 

ஹேக்ருபாலா!சம்போ!இதுவே கொடுப்பதற்கு நல்ல நேரம்;நானே கொடுப்பதை ஏற்கத்தகுந்தவன். தாங்களே கொடுப்பவர். தங்களையன்றி வேறு எவரையும் வேண்டேன். உம்மிடம் ஸ்திரமான பக்தியை எனக்கு வழங்கவேண்டும். அதனால்தான் பெருமிதம் அடைவேன்.

பசும் வேத்ஸி சேந்மாம், தமேவாதிரூட
கலங்கீதி வா மூர்த்னி தத்ஸேதமேவமி
த்விஜிஹ்வ:புவ:ஸோபிதே கண்டபூஷா
த்வதங்கீக்ருதா:சர்வ!ஸர்வே பிதந்யா

என்னை பசு என்று (அலக்ஷ்யமாக) எண்ணுவீராகில் அதன்மீது தானே தாங்கள் பயணிக்கிறீர்கள். களங்கம் உள்ளவன் என்றால், அவனைத்தானே தலையில் தாங்குகிறார்கள். இரண்டு நாக்கன் என்றாலோ, அவனும் தானே தங்கள் கழுத்தில் ஆபரணமாகிறான். இப்படி தாங்கள் ஏற்றதால் அவர்களெல்லாம் புண்யசாலிகள் ஆகவில்லையா?

ந சக்நோமி பரத்ரோஹலேசம்
கதம் ப்ரீயஸே த்வம் ந ஜாநே கிரிச
ததாஹி ப்ரஸந்நோஸி கஸ்யாபி காந்தா
ஸுத் த்ரோஹிணோ வா பித்ருத்ரோஹிணோவா 

சிறிதேனும் பிறருக்கு தீங்கு செய்வதறியேன். ஆனால் த்ரோஹம் செய்தவர் பாலும் தாங்கள் அன்பு கொண்டது எப்படியோ தெரியவில்லை. ஒரிருவர் அப்படித் த்ரோஹம் செய்தும் தங்கள் அன்புக்குப் பாத்திரமாகவில்லையா?

ஸ்துதிம் த்யானமர்ச்சாம் யதாவத்விதாதும்
பஜன்அப்யஜானன் மஹேசாவலம்பே 
த்ரஸந்தம் ஸுதம் த்ராதுமக்ரே ம்ருகண்டோ
யமப்ராண நிர்வாபணம் த்வத்பதாப்ஜம் 

எனக்கு ஸ்தோத்திரம், தியானம், பூஜை ஆகியவற்றை முறையாகச் செய்யத் தெரியாது. ஆனால், மருண்ட ம்ருகண்டு வின்பிள்ளையைக் காக்கவேண்டி யமன் உயிரையே மாய்த்த தங்களது திருவடியை அறியாமலேயே பற்றியுள்ளேன்.

சிரோத்ருஷ்டி - ஹ்ருத்ரோக - சூலப்ரமேஹ-
ஜ்வரார்சோ - ஜரா - யக்ஷ்ம - ஹிக்கா - விஷார்த்தான்
த்வமாத்யோ பிஷக், பேஷஜம் பஸ்ம சம்போ
த்வமுல்லாகயாஸ்மான் வபுர்லாகவாய 

எத்தனையோ கொடிய ரோகங்களைப் போக்கும் முதன்மை மருத்துவராயிற்றே தாங்கள். சம்போ!தங்கள் ப்ரஸாதமான பஸ்மமே மருந்து!எங்களை நோயற்றவராகச் செய்தருள்வீராக!

த்ரித்ரோஸ்மி, அபத்ரோஸ்மி, பக்னோஸ்மி தூயே
விஷண்ணோஸ்மி, ஸந்நோஸ்மி, கின்னோஸ்மி சாஹம்
பவான் ப்ராணிநாம் அந்தராத்மாஸி சம்போ
மமாதிம் நவேத்ஸி ப்ரபோ ரக்ஷ மாம் த்வம் 

நான் ஏழ்மைப்பட்டு சீராக இல்லததால் மனம் உடைந்துள்ளேன். நொந்து கிலேசப்படுகிறேன். தாங்கள் ப்ராணிகளின் அந்தராத்மாவாக இருப்பதால், ஹேசம்போ!என் துன்பம் தெரியவில்லையா?என்னை காப்பாற்றுவீராக!

த்வதக்ஷ்ணோ:கடாக்ஷ:பதேத் த்ர்யக்ஷபதேத் த்ர்யக்ஷ
யத்ர க்ஷணம் க்ஷ்மா ச லக்ஷ்மீ :ஸ்வயமா தம் வ்ருணாதே
கிரீடஸ்புச்சாமரச்சத்ரமாலா-
கலாசீ-கஜ-க்ஷளம-பூஷா-விசேஷை

ஈசனே!நீர்முக்கண்ணராயிற்றே!உமது கடாக்ஷம் யார்மேல் ஒரு நொடியாவது விழுகிறதோ, அவன்பால், பூமி, சொத்து, சுதந்திரம் அரசாட்சி அனைத்தும் தாமே குடிகொள்ள அடையுமே!

பவான்யை பவாயாபி மாத்ரேச பித்ரே
ம்ருடான்யை ம்ருடாயாப்யகக்ன்யை மகக்னே 
சிவாங்க்யை சிவாங்காய குர்ம:சிவாயை
சிவாயாம்பிகாயை நமஸ்த்ர்யம்பகாய 

பவானீ-பவராய், தாய் தந்தையராய், ம்ருடானீ-ம்ருடராய், பாபம் துடைப்பவளாய்-தக்ஷயாகம் குலைத்தவராய், மங்கள வடிவம் கொண்டு சிவா-சிவனாய் விளங்கும் உங்களுக்கு நமஸ்காரம்.

பவத்கௌரவம் மல்லகுத்வம் விதித்வா
ப்ரபோ ரக்ஷ காருண்யத்ருஷ்ட்யாநுகம் மாம்
சிவாத்மானுபாவஸ்துதாவக்ஷமோஹம்
ஸ்வசக்த்யா க்ருதம் மேபராதம் க்ஷமஸ்வ 

தங்களது கௌரவத்தையும் எனது சிறுமையையும், நன்கு அறிந்து கருணைக்கண்ணுடன் என்னைக் காப்பீராக!சிவாத்மானு பூதியுடன் ஸ்தோத்திரம் செய்யமுடியவில்லை. நான் செய்த தவறை தாங்களே பொறுப்பேற்று மன்னிப்பீராக!

யதா கர்ணரந்த்ரம் வ்ரஜேத் கால வாஹ-
த்விஷத் கண்ட - கண்டா கணாத்கார நாத
வ்ருஷாதீச மாருஹ்ய தேவெளபவாஹ்யம்
ததா வத்ஸ மாபைரிதி ப்ரீணயத்வம் 

யம வாஹனமாகிய மஹிஷப்பகைவனின் கழுத்தில் தொங்கும் மணியின் ஒசை என் செவியில் விழுவதற்குள் தங்கள் வாஹனமாகிய விருஷ பத்தின் மீதேரி பயப்படாதே குழந்தாய் என்று சொல்லி மனம் தேற்றுவீராக!

 யதா தாருணாபாஷணா பீஷணா மே
பவிஷ்யந்த்யுபாந்தே க்ருதாந்தஸ்ய தூதா
ததா மன்மனஸ்த்வத்பமா ம்போருஹஸ்தம்
கதம் நிஸ்சலம் ஸ்யாத் நமஸ்தேஸ்து சம்போ 

யமதூதர்கள் கடுஞ்சொற்களைக் கூறிக்கொண்டு என்னருகில் தொங்குவதற்குள், ஹேசம்போ!ஒரு கணம் என் மனம் தங்கள் திருவடித்தாமரையில் பதிந்து அசையாமலிருக்க வேண்டுமே!உமக்கு நமஸ்காரம்.


யதா துர்நிவார வசதோணுஹம் சயாநோ
லுடன், நி:ச்வஸன் நி:ஸ்ருதாவ்யக்த வாணி
ததா ஜஹ்னு கன்யா ஜலாலங்க்ருதம் தே
ஜடா மண்டலம் மன்மனோ மந்திரம்ஸ்யாத் 

ஏதோ தாங்கமுடியாத வலியால் படுத்துப்புறன்டு பெருமூச்சுவாங்க, ஏதோ உளரிக் கொண்டிருப்பேனே, அப் பொழுதாகிலும் கங்கை கொண்ட தங்களது ஜடாமண்டலம், என் மனம் குடிகொள்ளும் இடமாக அமையட்டும்.

 யதா புத்ரமித்ராதயோ மத்ஸகாசே
ருதந்த்யஸ்த ஹா கீத்ருசீயம் தசேதி 
ததா தேவதேவேச கௌரீச சம்போ
புராரே பவந்தம் ஸ்புடம் பாவயேயம் 

என் பெண்டு பிள்ளைகள் என்னருகில் உட்கார்ந்து, இவருக்கு என்ன ஆயிற்று என்று அழுது புலம்புவார்களே, அப்பொழுது, ஹேத்வதேவ!கௌரீபதே, சம்போ என்றும் சிவாம நம:என்றும் விடாமல் கூறுவேனாக!


யதா பச்யதாம் மாமஸெள வேத்திநாஸ்மா
நயம் ச்வாஸ ஏவேதி வாசோ பவேயு
ததா பூதிபூஷம் புஜங்காவநத்தம்
புராரே!பவந்தம் ஸ்புடம் பாவயேயம்

நாம் பார்க்கிறோமே, ஆனால் இவர் நம்மை அடையாளம் கண்டுகொள்ளவில்லையே என்றும் இது நிச்சயம் மூச்சுதான் என்றும் ஏதேதோ பேசுவார்களே அப்பொழுது பஸ்மபூஷிதராய், நாகாபரணம் பூண்டவராய் இருக்கும் தங்களைத் தெளிவாகக் காண்பேனா?

யதா யாதநாதேஹஸந்தேஹ வாஹீ
பவேதாத்ம தேஹே ந மோஹோ மஹான் மேமி
ததா காச-சீதாம்சூ ஸங்காசமீச 
ஸ்மராரே வபுஸ்தே நமஸ்தே ஸ்மராணி 

யாதனாதேஹம் நெருங்கிவிட்டதோ என்ற சந்தேஹம் மேலிட, தற்போதய தேஹத்தில் மயக்கம் மேலிடாத பொழுது, தங்களது தூய வெண்ணிற மேனியை கண்ணாரக்காண்பேனா?

 யதாபாரமச்சாய மஸ்தானமத்பி
ஜனைர்வா விஹீனம் கமிஷ்யாமி மார்கம்
ததா தம் நிருந்தன் க்ருதாந்தஸ்ய மார்கம்
மஹாதேவ!மஹ்யம் மனோஜ்ஞம் ப்ரயச்ச

அக்கரைகாணாத, களையிழந்த, போக்கிடமில்லாத, தண்ணீரும் தன்னைச் சார்ந்த வருமில்லாத அந்தயமனின் வழியை மறித்து, ஹேமஹாதேவ!எனக்கு வேறு நல்வவியை கொடுப்பீராக!
  
யதா ரௌவாதி ஸ்மரன்னேவ பீத்யா
வ்ரஜாம்யத்ர மோஹம் மஹாதேவ கோரம்
ததா மாமஹோ நாத!கஸ்தாரயிஷ்ய-
த்யநாதம் பராதீனமர்த்தேந்து மௌலே 

ஹேமஹாதேவ!ரௌரவம் முதலிய நரகங்களை நினைத்து, பயந்து, நான் மயக்கமுற்று தவிற்கும்போது, துணையில்லாமலும் பிறரையண்டியுமிருக்கிற என்னை, உன்னையன்றி வேறு யார் கைதூக்கிவிடுவார்கள்.

  
யதா ச்வேத பக்ராயதாலங்க்ய சக்தே
க்ருதாந்தாத் பயம் பக்தவாத்ஸல்ய பாவாத் 
ததா பாஹிமாம் பார்வதீவல்லபான்யம்
ந பச்யாமி பாதார மேதாத்ருசம்மே 

எனக்கு மீற முடியாத யம பயம் நேர்ந்த பொழுது, ஹே பார்த்தீ வல்லப!என்னைக் காத்தருள். நீர் பக்தனுக்கு அன்பு காட்டுபவரன்றோ. உம்மைத்தவிர வேறெவரும் என்னைக் காப்பவரில்லை!


இதானீமிதானீம் ம்ருதிர்மே பவித்ரீ
த்யஹோ ஸந்ததம் சிந்தயா பீடிதோஸ்மி 
கதம் நாம மா பூத் ம்ருதௌ பீதிரேஷா
நமஸ்தே கதீனாம் கதே நீலகண்ட

ஹே நீலகண்ட, இதோ இதோ எனக்கு மரணம் வந்துவிட்டது என்று யமபயத்தால் துன்பப்படுகிறோனே இந்த யம பயம் எப்படி தொலையும்!உமக்கு நமஸ்காரம் நீரே எனக்கு கதி!


அமர்யாத மேவாஹ மாபால வ்ருத்தம்
ஹரந்தம் க்ருதாந்தம் ஸமீக்ஷ்யாஸ்தி பீத
ம்ருதௌ தாவகாங்க்ரயப்ஜ திவ்யப்ரஸாதாத்
பவானீபதே நிர்லயோஹம் பவானி 

சிறியவர், பெரியவர் என்று நிலையின்றி, தடையின்றி உயிரைப் பறிக்கும் யமனைக்கண்டு பயந்து நடுங்குகிறானே!ஹே பார்வதீபதே!உமது திருவடிதாமரையருளால் இந்த யம பயத்தினின்று தெளிவேனாக!

ஜராஜன்ம கர்பாதிவாஸாதிது:கா
ன்யஸஹ்யாநி ஜஹ்யாம் ஜகந்நாததேவ
பவந்தம் விநாமே கதிர்நைவ சம்போ 
தயாலோ ந ஜாகர்த்திகிம்வா தயா தே

ஹே ஜகந்நாத!முதுமை, பிறப்பு, இறப்பு முதலிய பொறுக்கவொண்ணாத் துன்பங்களை முற்றிலும் விட்டொழிக்க உம்மைத் தவிர எனக்கு வேறு வழி ஏது?நீர் தயையுள்ள வராயிற்றே!உமக்குக்கூட தயை பிறக்கவில்லையா?

  
சிவாயேதி சப்தோ நம:பூர்வ ஏஷ
ஸ்மரன் முக்திக்ருத் ம்ருத்யுஹா தத்வவாசீமி
மஹேசாந மா கான்மனஸ்தோ வசஸ்த
ஸதா மஹ்யமேதத் ப்ரதானம் ப்ரயச்ச 

நம:என்று தொடங்கி சிவாய என்று முடியும் சொல்லை நினைப்பவருக்கு மோக்ஷமே கிடைக்கும். தத்வர் பொருளை உணர்த்தும் அச்சொல் மரணத்தை நீக்கும். ஹேமஹாதேவ!அச்சொல் என் மனதைவிட்டு வரம் தந்தருள்வாயே!

  
த்வமப்யம்ப!மாம் பச்ய் சீதாம்சூமௌலி-
ப்ரியே!பேஷஜம் த்வம் பவவ்யாதிசாந்தௌ
பஹக்லேச பாஜம் பதாம்போஜபோதே
பவாப்தௌ நிமக்னம் நயஸ்வாத்ய பாரம் 

ஹே சந்த்ரமௌலிப்ரியே!நீயும் என்னை கவனித்துக் கொள். c தானே அம்மா!சம்சாரநோய்க்கு மருந்து. சம்ஸாரக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் என்னை நினது திருவடிப்படகில் ஏற்றி கரைக்கடக்கச் செய்!

  
அனுத்யல்லலாடாக்ஷி வஹ்நிப்ரரோஹை:
அவாமஸ்புரத் சாருவாமேரு சோபை: 
அனங்கப்ரமத் போகிபூஷா விசேஷை:
அசந்த்ரார்த்த சூடை ரலம்தைவதைர் ந:

நெற்றிக்கண்ணில் தீப்பொறி தோன்றாத, இடது பக்கம் அழகிய நங்கை மிளிராத, உடம்பில் பாம்பு அணிகலன்கள் தவழாத, சந்த்ரமௌலியாக இல்லாதபிற தெய்வங்கள் எனக்கு வேண்டாமே!
  
அகண்டே கலங்கா தனங்கே புஜங்காத்
அபாணௌ கபாலா தபாலேநலாக்ஷத் 
அமௌலௌ சசாங்காதவாமே கலத்ராத்
அஹம் தேவ மன்யம் நமன்யே நமன்யே

கழுத்தில் காலகூடமில்லாத, உடம்பில் நாகம் தவழாத, கையில் கபாலமில்லாத, நெற்றியில் தீக்கண்ணில்லாத, மௌலியில் சந்த்ரபிறையில்லாத, இடதுபக்கம் பாகம் பிரியாள் இல்லாத வேறு ஒரு கடவுளை கடவுளாக நான்மனதாலும் நினையேன்.

  
மஹாதேவ!சம்போ கிரீச!த்ரிசூலின்
த்வயீதம் ஸமஸ்தம் விபாதீதி யஸ்மாத் 
சிவாதன்யதா தைவதம் நாபிஜாதே
சிவோஹம், சிவோஹம், சிவோஹம், சிவோஹம் 

மஹாதேவ!சம்போ!கிரீச!த்ரிசூலனே!உம்மிடமே இந்த அகில உலகும் துலங்குகிறது. ஆகையால், சிவனாகிய உன்னைத் தவிற வேறு தெய்வத்தை அறியேன். நானே சிவன், நானே சிவன், நானே சிவன்.

யதோஜாயதேதம் ப்ரபஞ்சம் விசித்ரம்
ஸ்திதிம் யாதி யஸ்மின் யதேகாந்தமந்தே 
ஸகர்மாதிஹீன:ஸ்வயம்ஜ்யோதிராத்மா
சிவோஹம், சிவோஹம், சிவோஹம், சிவோஹம்

இந்த விசித்ர உலகம் எங்கிருந்து தோன்றி, நிலைகொண்டு, பின் எதனில் கடைசியில் ஒடுங்குகிறதோ அதே, கர்மம் முதலியன இல்லாததாகி ஸ்வயம் பிரகாசமான, ஆத்மஸ்வரூபமான சிவனே நான், சிவனே நான், சிவனே நான், சிவனே நான்.

  
கிரீடே நிசேசோ லலாடே ஹதாசோ
புஜே போகிராஜோ கலே காலிமா ச
தநௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்
ந ஜானே ந ஜானே நஜானே ந ஜானே

எவருடைய கிரீடத்தில் சந்திரபிறையும், நெற்றியில், அக்னியும், கைகளில் ஸர்ப்பராஜனும், கழுத்தில் காலகூடக் கறுமையும், உடம்பில் பிரியையும், உறைகிறார்களோ அப்படிப்பட்ட கடவுளை சிவனன்றி அறியேன். அறியேன். அறியேன். அறியேன்.

  
அநேந ஸ்தவேநாதராதம்பிகேசம்
பராம் பக்திமாஸாத்ய யம் யே நமந்திமி
ம்ருதௌ நிர்பயாஸ்தே ஜனாஸ்தம் பஜந்தே
ஹ்ருதம்போஜமத்யே ஸதாஸீநமீசம்

அம்மையருபாகனான அந்த தேவனை பக்தியுடனும், ஆதரவுடனும் எவரெவர் இந்தஸ்தோத்திரத்தைச் சொல்லி நமஸ்கரக்கிறார்களோ அவரவர் மரணபயம் நீங்கி ஹ்ருதயத் தாமரையில் அனவரதம் வாஸம் செய்யும் அவ்ஈசனையடைவர்.

  
பஜங்கப்ரியாகல்ப சம்போ மயைவம்
புஜங்கப்ரயாதேந வ்ருத்தேந த்லுப்தம்
நர:ஸ்தோரமேதத் படித்வோருபக்த்யா
ஸுபுத்ராயுராரோக்ய மைச்வர்யமேதி

புஜங்கப்ரயாத விருத்தத்திலமைந்த இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி நாகாபரணரான சம்புவை சேவிக்கிற அனைவரும் நல்ல புத்ரர்கள், ஆயுள், ஆரோக்யம், ஐச்வர்யம் ஆகிய நற்பயனைப் பெறுவர்.

No comments:

Post a Comment