Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Monday, 25 November 2013

வீட்டில் உள்ள / வீடு அமைப்பில் உள்ள தோஷம் / குறைகள் நீங்க எளிய பரிகாரம்

வீட்டில் உள்ள / வீடு அமைப்பில் உள்ள தோஷம் / குறைகள் நீங்க
எளிய பரிகாரம் 

என் குருநாதர் சாய்பாபா உபாசகர் அருளிய பரிகாரம்

வாஸ்து தோஷம் , முச்சந்தி வீடு , இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும் , எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது , எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ  தோஷமோஇருந்து கொண்டே இருக்கும்

இப்படிபட்ட தோஷங்கள் / குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் .

90 நாள் என்பது ஒரு கணக்கு தான்

நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை , பிரச்னை இல்லை அப்படின்னு நாம உணரும் வரை விளக்கு போட வேண்டும்

வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம் .

ஒருவேளை வீட்டுக்கு காம்போண்டு சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைபாங்க அப்படின்னு சங்கடபட்டால் , வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம் , ( விளக்கு எரிந்து முடியும் வரை கவனம் தேவை  ).

விளக்கு ஏற்றும் பொது பைரவர் கவசம் / பைரவர் காயத்ரி / பைரவர் ஸ்லோகம் / ஸ்துதி / பைரவர் போற்றி என எதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்

ஓம் ஸ்ரீ காலபைரவாய நமஹ 

இவ்வழிபாட்டினைஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி ( வழிபாடு வெற்றி அடைய ) பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று
பிறகு வீட்டுற்கு  வந்து விநாயகரை வணக்கி அவருக்கும்  ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்

இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள்

தேய்பிறை அஷ்டமி , வாஸ்து நாள் ,பௌர்ணமி 

அப்படியும் இல்லையென்றால்  உங்கள் குடும்ப உறுபினர்கள் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் வராத நாள் எதுவானாலும் ஆரம்பிக்கலாம்


என் குருநாதர் வாக்கு என்றுமே பொய்க்காது , நிச்சயம் இவ்வழிபாட்டினை செய்பவர் வீட்டில் அணைத்து மங்களமும் உண்டாகும் .


குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com   ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்


ஓம் சாய்ராம்

குருநாதர் திருவடி சரணம்







1 comment:

  1. thanks for this parigaram...how many hours the lamp will be on...Morning or evening or any time. pls answer

    ReplyDelete