Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Monday, 3 June 2013

இளையராஜா இசையமைத்த--திருவாசகம் - அச்சப்பத்து - ஆனந்தம் உறுதல் - புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்.MP3

அச்சப்பத்து - ஆனந்தம் உறுதல்

 


                                   
                புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்.MP3


(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம் 



புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516 



வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520


வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523


மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525


திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------

12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

 

சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)




 live dharshan -  நேரடி ஒளிபரப்பு 

 http://www.somnath.org/live-darshans.aspx 


மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



 live dharshan - நேரடி ஒளிபரப்பு 

http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm


ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



live dharshan - நேரடி ஒளிபரப்பு   

http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

 
காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




live dharshan - நேரடி ஒளிபரப்பு   


http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx

No comments:

Post a Comment