Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Thursday, 23 May 2013

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்சரத்னம்.MP3 ஆதிசங்கரர் அருளியது












த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேந்நரஹரிபூஜாம் குரு ஸததம்
ப்ரதிபிம்பாலங்க்ருத த்ருதி குசலோ பிம்பாலங்க்ருதி மாதநுதே ந
சேதோ ப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மனமாகிய வண்டே, உனது எஜமானனாகிய ஜீவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினால், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மபூஜையை விடாது செய். பிரதிபிம்பத்துக்கு அலங்காரம் செய்வதில் ஈடுபடும் திறமைசாலி, முதலில் நிஜ உருவத் தையே அலங்கரிப்பான். சாரமற்ற சம்சாரமெனும் பாலைவனத்தில் ஏன் வீணாக அலைகிறாய்? சாரமுள்ள செயலைச் செய்; அதாவது, நீ லக்ஷ்மீநரசிம்மரின் மாசற்ற பாதாரவிந்தத் தேனை அடைவதையே என்றும் மேற்கொள்.

சுக்தௌ ரஜதப்ரதிபா ஜாதா கடகாத்யர்த்த ஸமர்த்தாசேத்
து:கமயீ தே ஸம்ஸ்ருதிரேஷா நிர்வ்ருதிதாநே நிபுணாஸ்யாத்ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ-மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மன வண்டே! முத்துச்சிப்பியைக் கண்டு ஒருவன் வெள்ளி என்கிறான்; அந்த வெள்ளியால் ஆபரணங்கள் செய்ய முடியுமா? அவ்வாறு பயன்பட்டால் இந்த உனது துக்கமயமான சம்சாரமும் பேரானந்தத்தைத் தருவது சாத்தியமாகலாம். ஆகையால் சாரமற்ற சம்சாரப் பாலைவனத்தில் வீணே அலையாமல் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரின் குறைவற்ற திருவடித் தாமரைகளின் மகரந்தத்தையே பற்று.

ஆக்ருதி ஸாம்யாச்சால்மலிகுஸுமே ஸ்தலநளிநத்வ ப்ரமமகரோ:
கந்தரஸாவிஹ கிமு வித்யேதே விபலம் ப்ராம்யஸி ப்ருசவிரஸே(அ)ஸ்மின் ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மனமான வண்டே! உருவத்தின் ஒப்புமையால், இலவம்பஞ்சு மரத்தின் பூவைப் பார்த்து, தரையிலும் தாமரை மலர்கிறதே என்ற கலங்குகிறாயே! இந்தப் பூவில் வாசனையோ, சிறிதாவது தேனோ உள்ளதா? பயனற்ற,  சிறிதும் சாரமற்ற இல்லறத்தில் அலைகிறாயே! ஏன் சம்சாரப் பாலைவனத்தில் உழல்கிறாய்? ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் சரணாரவிந்தங்களின் தேன்துளிகளையே பெறுவதில் ஆசை கொள்.

ஸ்ரக்சந்தந வநிதாதீந் விஷயாந் ஸுகதாந் மத்வா தத்ர விஹரஸே
கந்தபலீஸத்ருசா நநு தே(அ)மீ போகாநந்தர து:க க்ருதஸ் ஸ்யு: ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந
 

மனம் எனும் வண்டே! பூமாலை, சந்தனக் குழம்பு, வனிதையர் முதலானவற்றை இன்பம் தருவனவாகக் கருதி அவற்றில் ஈடுபடுகிறாயே, அவை தாழம்பூவிற்குச் சமம்; முதலில் இவை இன்பம் தருவதுபோல் தோன்றினாலும், பிறகு முழுவதும் துன்பம் விளைவிக்கும்.  கையால் மனமே! விரசமான சம்சார பாலையில் வீணே உழலாதே; ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் திருவடித்தாமரைகளின் மகரந்தத்தையே முக்கியமாகப் பற்று.

தவ ஹிதமேகம் வசநம் வக்ஷ்யே ச்ருணு ஸுககாமோ யதி ஸததம்
ஸ்வப்நே த்ருஷ்டம் ஸகலம் ஹி ம்ருஷா ஜாக்ரதி ச ஸ்மர தத்வதிதி! ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம்நந


மனமாகிய வண்டே! உனக்கு இதமான ஒன்றைக் கூறுகிறேன். நீ எப்போதும் இன்பம் அடைய விரும்பி னால், நீ விழிப்பு நிலையில் பார்க்கும் எல்லாப் பொருளுமே, கனவில் காணும் பொருளைப் போலவே முழுவதும் பொய் என்பதை நன்கு ணர். மனமே, வீணாக விரசமான சம்சாரப் பாலைவனத்தில் அலைந்து திரியாதே; ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மருடைய மாசற்ற சரணாரவிந்தத் தேனிலேயே பற்று வை.



No comments:

Post a Comment