Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Tuesday, 9 April 2013

பவானி புஜங்கம் .mp3

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQesdaqU7SdtXErllpiKevjPL4X3kYNT-X71e974VLU-CIJo-NbPw


பவானி புஜங்கம்.MP3

http://goodfellaztv.com/wp-content/uploads/2012/09/DOWNLOAD-BUTTON.png


 

ஷடாதார பங்கேருஹாந்தர்விராஜத்
ஸுஷ ம்நாந்தராலே திதே ஜோலஸந்தீம்
ஸுதாமண்டலம் த்ராவயந்தீம் பிபந்தீம்
ஸுதாமூர்திமீடே சிதானந்த ரூபாம்

ஆறு ஆதாரங்களாகிய தாமரை மலருக்குள் ஸுஷ§ம்நா நாடியின் நடுவில் வெகுதேஜஸுடன் விளங்குகின்றவளும், சந்திரமண்டலத்தைக் கரைத்து குடிக்கின்றவளும், ஜ்ஞானானந்த ஸ்வரூபிணியாகவும், அம்ருத வடிவாயுமுள்ள என் தம்பிகையை ஸ்தோத்ரம் செய்கிறேன்.

ஜ்வலத்கோடி பாலார்க பாஸாருணாங்கீம்
ஸுலாவண்ய ச்ருங்கார சோபாபிராமாம்
மஹாபத்ம கிஞ்ஜல்க மத்யே விராஜத்
தரிகோணே நிஷண்ணாம் பஜே ஸ்ரீபாவாநீம்

ஜ்வலிக்கும் கோடி பால சூர்யர்கள் ஒளிபோல் செம்மேனியள், நல்ல அழகும், சிருங்காரமும் சேர்ந்திருப்பதால் கவர்ந்திழுக்கும் அழகி, மஹாபத்மத்தின் கிஞ்ஜல்கத்தினிடையே விளங்கும் த்ரிகோணத்தில் அமர்ந்திருக்கும் பவாநீ மாதாவை சேவிக்கிறேன்.

க்வணத்கிங்கிணீ நூபுரோத்பாஸி ரத்ன
ப்ரபாலீட லாக்ஷர்த்ர பாதாப்ஜயுக்மம்
அஜேசாச்யுதாத்யை:ஸுரை:ஸேவ்யமானம்
மஹாதேவி மன்மூர்த்நி தே பாவயா

ஒலிக்கும் தண்டை, சதங்கை முதலியவற்றிலுள்ள இரத்தின கற்களின் ஒளி ஊடுருவிய செம்பஞ்சுக் குழம்பினால் ஈரமான உனது திருவடித் தாமரைகள், பிரம்ம-விஷ்ணு-மகேச்வர்களால் சேவிக்கப்படுவதையும், ஹே மஹா தேவி!என் தலையில் இருப்பதையும் பார்த்து மகிழ்கிறேன்.

ஸுசோணாம்பராபத்த  விராஜத்
மஹாரத்ன காஞ்சீகலாபம் நிதம்பம்
ஸ்புரத்தக்ஷிணாவர்த நாபிம் ச திஸ்ரோ
வல்லீச தே ரோமராஜிம் பஜேஹம்

ஹே தேவி!செம்பட்டு உடுத்தி முடித்தபின் அதன் மேல் ரத்னம் இழைத்த ஒட்டியாணம் அணிந்த இடுப்பு, பளிச்சிடும் வலம்புரி நாபி, மூவளிகள், உரோமவரிசை இவற்றையும் மனதளவில் சேவிக்கிறேன்.

லஸத் வ்ருத்த முத்துங்க மாணிக்ய கும்போ
பமச்ரி ஸ்தன த்வந்த்வ மாம்பாம்புஜாக்ஷி
பஜே துக்தபூர்ணாபிராமம் தவேதம்
மஹாஹாரதீப்தம் ஸதா ப்ரஸ்நுதாஸ்யம்

தாமரையிதழ் கண்ணி தாயே!உனது வட்ட வடிவில் உயரமான மாணிக்ய குடம் போன்று அழகிய இரு ஸ்தனங்களையும் சேவிக்கிறேன். அவை நிரம்பிய பாற்குடமாகவே, எப்பொழுதும் கசிவதாகவே முத்து ஹாரங்கள் தொங்குவதாகவே உள்ளன.

சிரீஷ்ப்ரஸ¨ந உல்லஸத்பாஹ தண்டை:
ஜ்வலத்பாண கோதண்ட பாசாங்கு சைஸ்ச
சலத் கங்கணோதார கேயூர பூஷோ
ஜ்வலத்பி:லஸந்தீம் பஜே ஸ்ரீபவானீம்

ஸ்ரீ பவாநீ மாதாவின் நீண்ட கைகள், வாகைப்பூ சுற்றிய தாயும், அம்பு, வில், பாசம், அங்குசம் இவை ளிர்வதாயும் குலுங்கும் கை வளையல்களும், பெரிய தோளிவாளைகளும் கொண்டு தேவியை மேலும் அழகு படுத்துகின்றன. அத்தகைய பவாநீயை சேவிக்கிறேன்.

சரத்பூர்ண சந்த்ரப்ரபாபூர்ண பிம்பா
தரஸ்மேர வக்த்ராரவிந்தாம் ஸுசாந்தாம்
ஸுரத்னாவளீ ஹார தாடங்க சோபாம்
மஹாஸுப்ரஸன்னாம் பஜே ஸ்ரீபவாநீம்

ஸ்ரீ பவாநீ தேவி, மாணிக்யக் கற்கள் பதித்த ஹாரம் காதோலை இவைகளால் பளபளக்கும் சாந்தமான முகப்பொளிவுடன் இருக்கிறாள். சரத்காலத்து பூர்ண சந்திர ஒளி நிரம்பிய கோவைப்பழ உதட்டின் மேல் தவழும் புன் முறுவல் வேறு அவள் தாமரை முகத்தில் பரவியுள்ளது. அத்தகைய ஸ்ரீபவாநீயை சேவிக்கிறேன்.

ஸுநாஸாபுடம் ஸுந்தரப்ரூலலாடம்
தவெளஷ்டச்ரோயம் தானதக்ஷம் கடாக்ஷம்
லலாடோல்லஸத் கந்தகஸ்தூரி பூஷம்
ஸ்புரத்ஸ்ரீ முகாம்போஜ மீடே ஹமம்ப

ஹே தாயே!நல்ல நாசியும், அழகிய புருவம், நெற்றி இவற்றையுடையதும், உதட்டு அழகை உடையதும், வேண்டியதைத் தரும் கடாக்ஷம், நெற்றியில் சந்தனம், கஸ்தூரி திலகம் இவற்றைக் கொண்டதுமான உனது முகத்தை சேவிக்கிறேன்.

சலத்குந்தலாந்தர் ப்ரமத் ப்ருங்க ப்ருந்தம்
கனஸ்நிக் ததம்ல்ல பூஷோஜ்வலம் தே
ஸ்புரன்மௌலி மாணிக்ய பத்தேந்துரேகா
விலாஸோல்லஸத் திவ்ய மூர்தானமீடே

ஹே தாயே! உனது உச்சிப்பூ வைரத்துடன் இணைத்து கட்டிய சந்திரப்பிறையழகும் சேர்ந்துள்ள தீரிய தலையை சேவிக்கிறேன். அது கனமாயும், மழமழப்பாயுமுள்ள கொண்டையையுடையதாயும், சிதறியாடும் பொடிக் கேசத்தினிடையே மொய்க்கும் வண்டுகளால் அழகாயுமுள்ளது.

இதிஸ்ரீபவாநி ஸ்வரூபம் தவேதம்
ப்ரபஞ்சாத்பரம் சாதிஸ¨க்ஷ்மம் ப்ரஸன்னம்
ஸ்புரத்வம்ப டிம்பஸ்யமே ஹ்ருத்ஸரோஜே
ஸதா வாங்மயம் ஸர்வதே ஜோமயம்ச

ஹே தாயே பவாநி!உலகைக் கடந்த க நுண்ணிய ஆனால் ககத் தெளிவான உனது வடிவம் இந்த சிறியேனுடைய ஹ்ருதயத்தாமரையில் தோன்றட்டும். அந்த வடிவம் எப்பொழுதும் ஸரஸ்வதீமயமாயும், லக்ஷ்மீமயமாயும் இருப்பதுதானே!

கணேசாணி மாத்யாகிலை:சக்திப்ருந்தை:
வ்ருதாம் வை ஸ்புரச்சக்ரராஜோல்லஸந்தீம்
பராம் ராஜராஜேச்வரி, த்ரைபுரி!த்வாம்
சிவாங்கோபரி ஸ்தாம்சிவம் பாவயா

ஹே ராஜராஜேச்வரீ!திருபுரே!சிவமயமான கட்டில் கொண்டு பரசிவையான உன்னை தியானிக்கிறேன். , கணேசர், அணிமாதி சித்திகள், சக்திகள் ஆகியவற்றால் சூழப்பெற்று, சக்ரராஜ ஸ்ரீசக்ரத்தில் விளங்குகிறாய்.

த்வமர்க:த்வந்துஸ்த்வமகபனிஸ்த்வ மாப:
த்வமாகாச பூவாயவஸ்த்வம் மஹத்த்வம்
த்வதந்யோ ந கஸ்சித் ப்ரபஞ்சோஸ்தி ஸர்வம்
த்வமானந்தஸம் வித்ஸ்வரூபாம் பஜேவுஹம்

ஹே தாயே! நீயே சூர்யன், நீயே சந்திரன், நீதான் அக்னி, தண்ணீரும் நீயேதான். நீயே ஆகாயம், பிரதீவி, வாயு ஆகியவற்றையும், ஏன் மஹத்தும் நீதானே:நீயன்றி வேறு ப்ரபஞ்சம்தான் ஏது?ஆனந்த-ஞான-வடிவான உன்னைத்தான் நான் ஸேவிக்கிறேன்.

ச்ரேதீநாமகம்யே ஸுவேதாகமஜ்ஞா
மஹிம்நோ நஜாநந்திபாரம் தவாம்ப
ஸ்துதிம் கர்துச்சா தே த்வம் பவாநி
க்ஷமஸ்வேதமத்ர ப்ரமுக்த:கிலாஹம்

வேதங்கள்கூட நெருங்கவில்லை உன்னை. ஹே பவாநீ!நீயோ வேதங்களையும் ஆகமங்களையும் நன்கு அறிந்துள்ளாய்!உனது அருமை பெருமைகளை தெரிந்து கொண்டவரில்லை. நான் மயங்கிப் போய்தான் உன்னை ஸ்தோத்திரம் செய்ய முற்பட்டேன். இதை c பொருத்தருள் அன்னையே!

குருஸ்த்வம் சிவஸ்த்வம்ச சக்திஸ்த்வமேவ
த்வமேவாஸிமாதா பிதாச த்வமேவ
த்வமேவாஸி வித்யா த்வமேவாஸி பந்து:
கதிர்மே மதிர்தேவி ஸர்வம் த்வமேவ

ஹே தேவி!நீதான் எனக்கு குரு. சிவனும் சக்தியும் நீயே. நீயே எனக்கு தாயும் தந்தையும், நீயே எனது கல்வி. நீயேதான் எனது உறவினரும் கூட. என் மேல்நோக்கிய போக்கும், புத்தியும் எல்லாமும் நீயேதான்!

சரண்யே வரேண்யே ஸுகாருண்ய மூர்த்தே
ஹிரண்யோதராத்யை ரகண்யே ஸுபுண்யே
பவாரண்யபீதேஸ்ச மாம்பாஹி பத்ரே
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே பவாநி

நல்ல புண்யமான, மங்கமான ஹே பவாநி தேவி!நீ இரக்கம் நிரம்பி சிறந்து காப்பவள். ஹிரண்யகர்பர் முதலியோராலும் c நெருங்க முடியாதவள். உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், என்னை ஸம்ஸார பீதியிலிருந்து காப்பாயாக.

இதீமாம் மஹத்ஸ்ரீ பவாநீ புஜங்க
ஸ்துதிம்ய:படேத் பக்தியுக்தஸ்ச தஸ்மை
ஸ்வகீயம் பதம் சாச்வதம் வேதஸாரம்
ச்ரேயம் சாஷ்டஸித்திம் பவாநீ ததாதி

இவ்வாறிந்த பெரிய ஸ்ரீபவாநீ புஜங்க ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிப்பவருக்கு ஸ்ரீ பவாநீதேவி, தனது பதவியையும் முக்தியையும் செல்வத்தையும் அஷ்டமாஸித்திகளையும் தந்து அருள்வாள்.

பவாநீ பவாநீ பவாநீ த்ரிவாரம்
உதாரம்முதா ஸர்வதா யே ஜபந்தி
நசோகோ நமோஹோ நபாபம் நபீதி:
கதாசித் கதம்சித் குதஸ்சித் ஜனாநாம்

எவரெவர், பவாநீ பவாநீ பவாநீ என்று மூன்று முறை மகிழ்ச்சியுடனும் எப்பொழுதும் உரக்கஜபம் செய்கிறார்களோ, அவரனைவருக்கும் துன்பமும், மோஹமும், அச்சமும் எங்கிருந்தும், எவ்வகையிலும், எதன் மூலமும் ஏற்படாது.

No comments:

Post a Comment