Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Friday, 30 November 2012

குரு சீடன் உறவு -- தென் கச்சி கோ சுவாமிநாதன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxBLL0J9x4ynq4duwxKNjUyJiObekhwRpQZDEFkB1oVnSNhRD3nYc9dIOlEZcZ00NW79rVA8N31LeKC9M-DEbRACjf7xeq7V8_labzrHJhLMYmVAQO1Fw9nxP8_Ec5fK9xfj8TZ89fhMDJ/s320/ASTRO+DESK-+BUDDHA+GURU+POORNIMA.jpg

ஒரு காலை நேரம் , புத்தர்  ஒரு மரத்தடியிலே உட்கார்ந்திருக்கார் . அவருக்கு எதிரே ஏராளமான சீடர்கள் உபதேசத்தை கேட்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்

வழக்கமாக எப்போதும் புத்தர் வந்தவுடனே பேச ஆரம்பிசிடுவார் , ஆனா இந்த தடவை எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது

வரும்போதே கையிலே ஒரு மலரை எடுத்து கொண்டு வந்தார்  வந்து உட்கார்ந்தார் அவ்வளவுதான் , அதுக்கப்பறம் அவர் எதுவும் பேசவில்லை

கையிலே இருந்த அந்த பூவை பார்த்துகிட்டே அவர் பாட்டுக்கு உட்கார்ந்திருக்கார் , உச்சிவேளை வந்திட்டது ... அப்பவும் பேசலை ! அமைதியா இருக்கார்

அந்த நேரத்துல -  திடீர்ன்னு ஒரு சிரிப்பு சத்தம் . யார் என்று பார்கிறார்

ஒரு சீடன்  , அவன் பேரு மகாகாஷ்யப் .விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான் . அங்கெ இருந்த எல்லோரும் இவன் சிரிக்கறதை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க .

இவனுக்கு திடீர்ன்னு என்ன ஆச்சு ? புத்தி கலங்கிப் போச்சா ? இந்த சீடனும் அதுவரைக்கும் இதுபோல நடந்து கொண்டது கிடையாதாம் . எப்போதும் அமைதியா இருகிறவன் இன்றைக்கு இப்படி சிரிக்கிறான் , அவனை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக இப்படி சிரிக்கிறானா ?

புத்தர் அவனை தலை நிமிர்ந்து பார்கிறார்

" இங்கே வா " ன்னு கூப்பிடுகிறார் .

அவன் கையிலே அந்த மலரைக் கொடுக்கிறார் , பிறகு சொல்கிறார்

" இதோ பாரப்பா ! வார்த்தைகள் மூலமாக நான் எதையெல்லாம் தரமுடியுமோ ... அதையெல்லாம் மற்ற சீடர்களுக்கு கொடுத்து விட்டேன் . வார்த்தைகளால் புலபடுத்த முடியாததை எல்லாம் உனக்கு தருகிறேன் "

இப்படி சொல்லி கையிலே இருந்த மலரை அந்த சீடர் கையிலே கொடுத்தார் .

இதற்க்கு என்ன அர்த்தம் ?

இந்த நிகழ்ச்சி நடந்து 2500 ஆண்டுகளுக்கு மேலே ஆயிட்டது .. இன்னமும் பல ஞானிகளெல்லாம்  அதை பற்றி யோசித்து கொண்டிருகிறார்களாம் !

புத்தர்கிட்ட இருந்து அந்த சீடர் கிட்ட போனது மலர் அல்ல . அந்த மலர் ஒரு வெறும் அடையாளம் மட்டும் தான் . இடம் மாறியது மலர் அல்ல .

புத்தர்  கிட்டே இருந்த இருப்புணர்வு இடம் மாறியிருக்கு அவ்வளவுதான் , ஆனால் புத்தர்  அந்த சீடர் கிட்டேயே போய்விடவில்லை . அவர் அப்படியேதான் இருக்கிறார்

ஒரு விளக்கில் இருந்து இன்னொரு விளக்கை கொளுத்துவதாலே இந்த விளக்கில் உள்ள வெளிச்சம் குறைந்து விடுமா என்ன ? அது மாதிரிதான்
இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைமாற்றம் என்கிறார் ஓஷோ .

மனதிலே இருந்து மனதிற்கு இடம் பெயரும் நிலை மாற்றத்தை வார்த்தைகளால் கொடுக்க முடியாது .

அதை அந்த சீடருக்கு கொடுத்தார் புத்தர் . அந்த சீடர் இரண்டாவது புத்தராக மாறினார் என்பது வரலாறு .


http://www.buddhaphoto.net/cache/Buddha/Gautama-Buddha/the-life-of-gautama-buddha-3/the-life-of-gautama-buddha-28_w600_h397.jpg




ஒரு ஆசிரமம் ,  அங்கே ஒரு குரு இருந்தார் அவரை தேடி ஒருத்தன் வந்தான் ," எனக்கு கற்று கொடுங்கள் ,அதாவது போதியுங்கள் " என்றான் .

" சரி ... இங்கேயே இரு .. கற்றுக் கொடுக்கிறேன் " என்றார் . அவன் அங்கேயே இருந்தான் . ஒரு மணி நேரம் ஆச்சு ... ரெண்டு மணி நேரம் ஆச்சு .. இப்படி நேரம் ஓடிகிட்டே இருக்கு ...

பல பேர் தொடர்ந்து அங்கே வந்துக்கிட்டுருக்காங்க , அப்படி வருகிறவர்கள் எல்லார்கிட்டயும் ஏதோ பேசிக்கிட்டே இருக்கார் .
வருகிறவர்கள் எல்லோரும் தங்கள் பிரச்சனைகளை சொல்கிறார்கள் . அதுக்கு தகுந்த தீர்வை இவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார் .

இவன் பாட்டுக்கு உட்கார்ந்து  இருக்கான்

கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்தான் .

ஒரு கட்டத்துல திடீர்ன்னு எழுந்துரிச்சு நின்னான் .

" கொஞ்சம் என்னையும் பாருங்க ... நான் எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கேன் . எனக்கு கற்று கொடுக்கறேன்னு சொன்னீங்களே ... எதையுமே கற்றுக் கொடுக்கலே ...! அப்படீன்னான்

குரு சிரிச்சிகிட்டே சொன்னார் :

" தம்பி ! நான் இவ்வளவு நேரமா வேற என்ன செஞ்சுகிட்டு இருந்தேன்னு நினைக்கிற ? நிறைய பேர் வந்தாங்க ... என்கிட்ட கேள்விகள் கேட்டாங்க ...அதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன் . அதிலே உனக்கும் போதனை இருக்கு .."

இவன் குழம்பி போனான் .

அவர் சொன்னார் :

" போதனை நான் சொன்ன பதிலில் இல்லை . நான் பதில் சொன்ன விதத்தில் தான் இருந்தது . யார் யாருக்கு எப்படிப் பதில் சொன்னேன் என்பதை நீ கவனித்திருக்க வேண்டும் . சில பேர் என்கிட்டே வந்தாங்க , எதுவுமே கேட்கல .. மௌனமாக என் பக்கத்துல உக்கார்ந்தாங்க ..நானும் மௌனமாக இருந்தேன் .... அதில் உனக்கும் போதனை இருக்கிறது . ஐந்து மணி நேரமாக உனக்கு கற்றுக் கொடுத்து கொண்டிருந்தேன் .

நீ கற்று கொள்ள தவறிவிட்டாயே " அப்படின்னாராம்


குரு என்பவர் எதையும் போதிப்பதில்லை ஏன்னென்றால் அவரே ( குருவே ) ஒரு போதனை தான் .

வழி காட்டுகிறவர்கள் குருவாக முடியாது . வாழ்ந்து காட்டுகிறவர்களே குருவாக முடியும் !




எனக்கு தெரிந்த ஆசிரமம் , ஒரு நாள் போனேன் ...

உள்ளே  குரு முன்னாடி சீடர் பவ்வயமா கை கட்டிகிட்டு நின்னுகிட்டு இருந்தார் ..

ரெண்டு பேரும் ரொம்ப தீவிரமாக விவாதம் செய்துகிட்டு இருந்தாங்க

சீடர் கேக்கறார் , குரு அதை கண்டிப்புடன் மறுக்கிறார்

மறுபடியும்  சீடர் கேக்கறார் ,

 குரு " இல்ல.... இல்ல .... அது சரியில்ல ...அப்படி செய்ய கூடாது .... நல்லா இல்லை ! அப்படின்னார்

சீடர் வெளியே வரும் பொது " ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது " அப்படீன்னு புலம்பிகிட்டே வெளியே வந்தார்

நான் அவரை வழிமறிச்சி  " என்னங்க உங்க குரு அவர் கருத்துல ரொம்ப பிடிவாதமா இருக்கிறாரா ?

"ஆமாங்க "...ன்னார்

" அப்படி... நீங்க ... என்ன கேட்டுடீங்க அவர் கிட்ட ? ......ன்னேன்

" அப்படி ஒண்ணும்  பெருசா கேட்டுடலீங்க ....

இத்தனை வருஷமா நீ குருவா இருந்தியே ... இனிமே நான் உனக்கு குருவா இருக்கிறேனே ! ன்னு கேட்டேன் ... அவ்வளவுதாங்க !... அப்படின்னார்

                                                                                                                                                                                                                       

                                                                                 தென் கச்சி கோ சுவாமிநாதன்


1 comment: