Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Wednesday, 1 February 2012

தியானம்/தவம் செய்வது எப்படி?


தியானம்/தவம் செய்வது எப்படி?


தவம் பற்றிய கேள்விகள்:
தவம் செய்வது எப்படி? கண்ணை மூடினால் எப்படி மாயை விளையாடும் என்கிறிர்கள். கண்ணை திறந்தால் உண்மை எப்படி விளங்கும் என்கிறிர்கள்?
.
எப்பொழுது கண்ணை மூடுகிறீர்களோ அப்பொழுது இருந்தே கற்பனை தொடங்கி விடும். இதை எப்படி இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் கண்ணை மூடி கொண்டு நம் வீட்டில் இறந்து போன மூதாதையர்களை கூட நம் மனக்காட்சியில் கொண்டு வர முடியும் அதே போல் வள்ளலார் உருவத்தையும் கொண்டு வர முடியும் இதனால் இறந்து போனவர்களும் இறவா நிலை பெற்ற ஞானிகளும் ஒன்றாகி விடுவார்களா? ஆனால் இதையே விழித்திருந்து தவம் செய்யும் போது ஒருகாலும் இறந்து போனவர்கள் வர இயலாது! இப்படி தவம் செய்யும் போது சாகா வரம் பெற்ற ஞானிகள் மட்டுமே காட்சியில் வர முடியும். இதுதான் உண்மை!
.
இதேதான் வள்ளல் பெருமான் சொன்ன திரைகளுக்கும் பொருந்தும் கண்ணை மூடி கொண்டு இந்த நிறத்தில் எனக்கு திரை தெரிகிறது என்று நீங்களே கூட கற்பனை செய்து கொண்டு வந்து விட முடியும். ஆனால் விழித்திருந்து செய்யும் போது ஒருகாலும் உங்கள் முன்னால் கற்பனையாக அது தோன்றாது. அப்படி தோன்றினால் அது கற்பனை அல்ல உண்மை காட்சி. அதாவது ஞான தவத்தில் வரும் அனுபவங்கள்.
.
விழித்திரு! எக்கணமும்!
.
இப்படி விழித்திருந்து தவம் செய்வது என்பது இங்கு கட்டுரை அளவிலே கொடுக்க பட்டிருக்கிறது. தக்க குருவை நாடி உங்கள் மெய்பொருளில் உணர்வை பெற்று கொண்டால் மட்டுமே இந்த தவத்தின் பலன் தெரியும் என்பதையும் இந்த இடத்தில் சொல்ல கடமை பட்டுள்ளோம்.

No comments:

Post a Comment