Pages

Paghttp://copiedpost.blogspot.in/2012/03/blog-post_20.htmles

Sunday, 29 January 2012

தியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்


தியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்



தியானம்-உடலையும், மனதையும் கட்டுப்படுத்த, வலிமையாக்க ஒரு எளிய கருவி.
இந்தக்கருவியை ஆப்பரேட் பண்ண கத்துக்கறது கொஞ்சம் சிரமம். ஆனா இதோட பயன்கள் ரொம்ப எஃபெக்டிவ்வா இருக்கும்.

எல்லாம் சரி எங்க இருந்து ஆரம்பிக்கிறது.
கொஞ்சம் அடிப்படையா போய் தெரிஞ்சிக்கலாமா?

என்னதான் வானம், பூமி, மலைன்னு குதிச்சாலும் தியானத்துக்கு அடிப்படை நம்ம மனசும். உடலும்தான். மனமும் உடலும் ஒத்து செய்யிற எல்லா செயல்களுமே ஏறக்குறைய தியானம்தான்.

உடல் அடிப்படை 

ஒரு உடலை உருவாக்கி உருவம் தருவது மில்லியன் கணக்கான செல்கள்தான்னு எல்லாருக்குமே தெரியம். கண்டிப்பா, செல் படம் வரைஞ்சு பாகம் குறிக்காம யாரும் பத்தாவது பாஸ் பண்ணமுடியாதுன்ற நிலமை இன்னிக்கு வரைக்கும் தொடருது.

சின்னச் சின்ன மணல் துகள்களைவைத்து கட்டிடம் கட்டுவது போல, அந்த சிறு சிறு செல்களால்தான் இவ்வளவு பெரிய உடல் உருவாக்கப்பட்டுள்ளது. செல்கள் மணல்துகள்களை விட மிகச்சிறியதாய் இருப்பதால் அவற்றை மைக்ராஸ்கோப் மூலம் மட்டும்தான் பார்க்க முடியும்.

 



“ஒவ்வொரு நொடியிலும் நம் உடலில் இலட்சக்கணக்கான செல்கள் இறக்கின்றன. புதிதாய் தோன்றுகின்றன. நம் புறத்தோலில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 30000 முதல் 40000 செல்கள் வரை இறந்து, உதிர்ந்து விழுகின்றன.”



சாதாரணமாக ஒரு செல் உருண்டை வடிவத்தில் இருந்தாலும், அசையும் போது விரல்போல நீண்டும், சில சமயம் தன்னோட உடலை உள் இழுத்தும் இடத்திற்கு இடம் மாறுபடும். ஒரு பக்கம் விரல் போன்ற நீட்சிகளினால் உணவை உள்ளிழுத்தும் மறுபுறம் கழிவுகளை வெளித்தள்ளியவாறும் செயல்படும்.

ஒரு செல் இரண்டாகப் பிரிந்து புதிய செல்லை தோற்றுவிக்கும்போது, முதலில் நடுவிலுள்ள நியூக்ளியஸ் (Nucleus) குரோமோசோம் அமிலங்கள் இரண்டாகப் பிரியும். அப்புறம் நியூக்ளியஸ் பிரியும், இறுதியாக வெளிப்புற சுவர் இரண்டாக பிரிந்து இரண்டு செல்களாக மாறும்.

உலகத்திலுள்ள உயிர்களின் முதல் முன்னோர் அமீபா பத்தி உங்களுக்கு தெரியுமா ? அந்த ஒருசெல் உயிரினம் இருக்கிற ஒரு சொட்டு தண்ணிய மைக்ராஸ்கோப்ல பாத்தா, அது அங்கிட்டும், இங்கிட்டும் நகர்றத பாக்கலாம். அதோட உணவா ஒருசில கிருமிகளை விழுங்கும், அதோட கழிவுப்பகுதியையும் கழிக்கும். அப்புறம் இரண்டா பிரிஞ்சு இரண்டு அமீபாவா மாறிடும் (இனப்பெருக்கம்). அந்த ஒரு சொட்டு தண்ணியோட ஒரு சைடுல கொஞ்சம் ஆசிடு கலந்து பாத்தா அமீபா வேக வேகமா இன்னோரு பக்கம் நீந்தி போறத பாக்கலாம். இந்த நுண்ணியிரிக்கு கூட போஷாக்கு வேணும், ஆக்ஸிஜன் வேணும்னு இதிலிருந்து தெரிஞ்சிக்கலாம்.

ஏறக்குறைய இது மனித செல்லை போலவே செயல்படுது. மனித செல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தா நம்ம உடலை உருவாக்க முடியாது. ஒரு டைப்பான செல்கள் எலும்புகளை உருவாக்குகிறது, இன்னொன்று சதைகளை உருவாக்குகிறது, இன்னுமொன்று இதயம், நுரையீரல், குடல், கண், காது, சருமம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான செல் கூட்டங்கள் இருக்கு.

இந்த செல்கள் தாமாகவே ஒன்று சேர்ந்து உடல் உருவத்தை செய்து முடிக்கிறது.

இவ்வளவு பெரிய இன்டர்நேஷனல் பில்டிங் காண்ட்ராக்டுக்கு பிளான் போட்டது யாரு??

செல்லுக்கு நடுவுல இருக்குற நியூக்ளஸில தான் இந்த பிளானோட மேட்டரே இருக்கு. நியூக்ளஸ்-குள்ள குரோமோசோம்னு ஒன்னு இருக்கு. அதுக்குள்ள ஜீன்ஸ் அப்படின்ற ஒருசில பகுதிகள் இருக்கு. இந்த ஜீன்ஸ்தான் செல்லோட அமைப்பை தீர்மானம் செய்யுது.

உதாரணமா ஒருசில உறுப்பு தரைத்தளம் போல இருக்கு. தோல் ஒரு பரந்த ஏரியா. இதுல ஒன்னுமேல ஒன்னா செல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கு. அடியில் உருண்டைய இருக்கும் செல்கள், மேலே போகப்போக தகடு மாதிரி உருப்பெற்றும், அதுக்கும் மேலே ஈரம் நீங்கிய துகள் மாதிரியும் உருவாகியிருக்கு. நுரையீரலில் உள்ள செல்கள் மிக நுண்ணியமாக காற்று கடந்து செல்லும் அளவிற்கு சன்னமானவை. குடலில் உள்ள செல்கள் கனசதுரமானவை, இதில் நீர்ப்பகுதி அதிகம். ஏரியாக்கு ஏரியா ஜீன்ஸ் தேவைக்கு ஏற்றாப்போல செல்களை உருவாக்குகிறது.
அப்புறம், வெறும் மணலை குமிச்சு வைச்சு பில்டிங் கட்ட முடியுமா?. பேஸ்ட்டு, சிமெண்டு வேணுமில்ல. செல்களை தாங்கி நிக்குற அணுக்கள் கடினமான நரம்பு போல அமைஞ்சிருக்கும். இதுதான் பில்டிங்ல சிமெண்ட் பண்ற வேலய பண்ணுது. எலும்பையும், தசையையும் பிரியாம ஒட்ட வைக்குது. இதை இங்கிலிபீசுல connective tissue அப்படின்னு சொல்வாங்க. ஒரு சில இடத்துல செல்களை சுருங்கியும், விரியவும் வைக்குது (நுரையீரல், தோல்). இதுவும் உடலில் உள்ள முக்கிய அடிப்படை தன்மை. செல் வேலை செய்ய கரண்ட் வேணுமே. அதை உற்பத்தி செய்ய எரிபொருள் (சர்க்கரை) எரிச்சு சாம்பலை (தண்ணீர், கார்பன்-டை-ஆக்சைடு, உப்புகள்) வெளிய தள்ளிடும் (அமீபா போல).

இந்த சிக்கலான ரசாயன மாற்றத்தை ஏ.டி.பின்னு சொல்றோம். இதுதான் ஒவ்வோர் உயிருக்கும் அடிப்படை சக்தியா இருக்கு ATP (Adenosine Tri Phosphate). தேவைக்கு ஏத்தாப்புல ஏ.டி.பி. சிறு சிறு துண்டுகளாவும் பிரிஞ்சு செயல்படுது.

இந்த உலகத்திலுள்ள எல்லா பாலூட்டிகளோட செல்களனைத்தும் ஒரே பரிமாணத்தில்தான் இருக்கின்றன.

அப்புறம் எப்படி ஒன்னு திமிங்கலமாவும், இன்னோன்னு மனிதனாவும் உருவாகியிருக்கு??

இதுக்கு பேருதான் படைப்பு.

அந்த படைப்புக்கு இன்னோரு பேரு டி.என்.ஏ.[DNA]




இவருதான் எல்லா செல்களுக்கும் Top Level Management. ஒவ்வொரு செல்லும் என்ன பண்ணணும். எதை தயாரிக்கணும், எதை ஒதுக்கணும்னு இவருதான் கட்டளை போடுகிறார். DNAவை ஒரு சிற்பிக்கு ஒப்பிடலாம். அதோட வேலையே இந்த பெரிய வாழ்க்கைய டிசைன் பண்றதுதான். ஆனாலும் top level management, அப்படின்றதால அந்த வேலைய அது செய்யாது அதோட அசிஸ்டன்ட் ஆர்.என்.ஏ கிட்ட விட்டுடும். RNA, DNA சுருள்களை அழுத்தி அதுல இருக்கிற டேட்டாவ காப்பி பண்ணிக்கும். அப்புறம் அதோட டாங்குவேஜிக்கு மாத்தி வேல செய்ய ஆரம்பிக்கும். உதாரணமா, 20 டைப்பான அமினோ அமிலங்களை எடுத்து கம்பில மணி கோர்குற மாதிரி கோர்த்து இதய செல்களையும், தசைகளையும் உருவாக்குகிறது. இதேபோல உடலிலுள்ள எல்லா செல்களும் உருவாக்கப்படுது.


குறிப்பிடத்தகுந்த ஒரு விதிவிலக்கு நம்ம மூளைதான். நாம பிறக்கும் போதே நம்ம வாழ்நாள் முழுசுக்கும் தேவையான அளவு மூளைச் செல்களோட பிறக்கிறோம். தேய்ஞ்சு போன, ரிப்பேர் ஆன செல்கள் அனைத்தும் மடிஞ்சு போயிரும். அதுக்கு பதிலா புது செல்கள் உருவாவதில்லை.

ஒரு செல் 600 வகையான என்சைம்களை உருவாக்க கூடிய ஒரு உற்பத்திக்கூடம். ஆர்.என்.ஏ சொல்றமாதிரி கேட்டு எப்போ எது வேணுமோ அதை உருவாக்கி புரதங்களை தொகுக்குது.

உதாரணமா நாம வாயில போடுற ஒரு மீன் துண்டிலுள்ள புரதத்தை எடுத்து, துண்டு துண்டா உடைச்சு, அமினே ஆசிடுகளா மாத்தி, கட்டை விரலுக்கு கொஞ்சமாவும், கிட்னிக்கு கொஞ்சமாகவும் மனித புரதமாக மாற்றி கொடுக்கிறது.

செல்லினுடைய என்சைம்கள் சிக்கலான ஹார்மோனையும், நோய் எதிர்க்கும் சக்தியையும் உடலில் கட்டுகின்றன.

செல்லின் மேல் உறை ஒரு சிக்கலான துணைப்பொருளாக உள்ளது. அது கேட் வாட்ச் மேனா வேலை செஞ்சு எத உள்ள வர அனுமதிப்பது, எதை ஒதுக்குவது என தீர்மானிக்கிறது, சமவிகித உப்பு, சர்க்கரை, நீர் இன்னும் எவ்வளவோ பொருட்களை செல்லில் வைத்திருக்கிறது.

உலகில் எந்த ஒரு வேதியியலாரும் செய்ய முடியாதவற்றை செல்கள் சாதாரணமாக செய்துகொண்டு இருக்கின்றன.

உயிர் முழுவதும் இந்த ஒற்றைச்செல்களை சார்ந்து தான் உள்ளது.

No comments:

Post a Comment